Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் குறும்படம் 'நதி' கனடாவில் விருது பெற்றது

Featured Replies

நேற்று(20.10.07) இரவு கனடாவில் சுயாதீன திரைப்படக் கழகம் நடத்திய 6வது சர்வதேச (தமிழ்) குறுந் திரைப்பட விழாவில் பிரான்சில் தயாரான 'நதி' என்ற குறுந்திரைப்படம் - சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டதோடு, அதன் பிரதான நடிகரான கமல்(மன்மதராசா) சிறந்த நடிகராகவும் விருது பெற்றார். விருதுகளை அறிவித்த TVI பி. விக்னேஸ்வரன் இத்திரைப்படத்தை வெகுவாகப் பாராட்டினார். அருமையான படம் என்பதே எனது கருத்தும். சிறந்த நடிப்பு.

வாழ்த்துக்கள்

http://kipian.appaal-tamil.com/index.php?o...=74&catid=7

Edited by Ponniyinselvan

  • தொடங்கியவர்

நேற்று(20.10.07) இரவு கனடாவில் சுயாதீன திரைப்படக் கழகம் நடத்திய 6வது சர்வதேச (தமிழ்) குறுந் திரைப்பட விழாவில் பிரான்சில் தயாரான 'நதி' என்ற குறுந்திரைப்படம் - சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டதோடு, அதன் பிரதான நடிகரான கமல்(மன்மதராசா) சிறந்த நடிகராகவும் விருது பெற்றார்.

எங்கள் கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தால் குறைந்தா போய்விடுவீர்கள்?

:lol:

பாராட்டுகளும்

வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.............

எங்கள் கலைஞர்கள்.... இது போல் முழுநீளத்திரைப்படம் எடுத்து சர்வதேச விருது வாங்கவும் வாழ்த்துகள்..

  • தொடங்கியவர்

எங்கள் கலைஞர்கள்.... இது போல் முழுநீளத்திரைப்படம் எடுத்து சர்வதேச விருது வாங்கவும் வாழ்த்துகள்..

நன்றி அஜீவன், விகடகவி..

:lol:

  • தொடங்கியவர்

'நதி' குறும்படத்தோடு சம்பந்தப்பட்டவர்களின் கருத்து அறிய ஆவலாயுள்ளேன். தகவல் கிடைத்ததா?

:icon_mrgreen:

கனடாவில் சுயாதீன திரைப்பட நிருவனம் நடாத்திய 6வது சர்வதேச குறும்பட விழாவில்,சிங்கப்பூர்,மலேசியா , லண்டன், இலங்கை,இந்தியா,டென்மார்க், கனடா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து 150 படங்கள் பங்கு கொண்டது.

இதில் பாரீஸிலிருந்து பாஸ்கரின் (மன்மதராசா) இயக்கத்தில் உருவான "நதி" குறுந்திரைப்படம் " 5 " விருதுகளை வென்றது . அங்கு நடைபெற்ற குறுந்திரைப்பட விழாவில் இந்த குறும்படமே 5 விருதுகளைப் பெற்றது.

சிறந்த படம்,

சிறந்த நடிகர்,

சிறந்த இயக்குனர் ,

சிறந்த எழுத்தாளர்,

சிறந்த கமெராமென் ,ஆகிய விருதுகளை வென்றது "நதி"குறுந்திரைப்படம் .

இந்த " நதி* திரைப்படத்தின் கதை பலரின் வாழ்வில் ஒன்றிப்போனதாக பலர் கண்ணீர் விட்டு வாழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

இக்குறுந்திரைப்படத்தில், சிறந்த படம், சிறந்த நடிகர்,சிறந்த இயக்குனர் ,சிறந்த எழுத்தாளர் என்று "நான்கு"விருதுகளை பாஸ்கர் (மன்மதராசா )பெற்றார்.சிறந்த கமெராமென் என்ற விருதை லண்டனில் வசிக்கும் ஈஸ்வர் பெற்றார். மேலும் பாரீஸில் நதி" திரைப்படத்தில் பங்கு கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறுகிறோம்.

யாழ் கள உறவுகளாகிய நீங்கள் இந்த குறுந்திரைப்படத்தைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ? இக்குறும்படத்தைப் பற்றிய உங்களுடைய பார்வை பற்றி அனைவரின் கருத்துக்களையும் தயங்காமல் முன்வையுங்கள்.

விபரம்: தயா (கனடா). :icon_mrgreen:

Edited by அனிதா

விபரம்: தயா (கனடா). :unsure:

நன்றி அனிதா..முழு விபரங்களையும் தந்ததிற்கு.. நானும் கண்ணீர் விட்டவர்களில் ஒருவன். மிகவும் யதார்த்தமான நடிப்பு.. முக்கிய பாத்திரம் மாத்திரமல்ல..அவரை அழைப்பித்து பின்பு அதைக்காட்டியே துன்புறுத்தும் உறவினாராக நடித்தவரும் சிறப்பாக நடித்தார். புலம் பெயர்ந்து வந்து கையறு நிலைக்கு ஆளாகும் இளைஞனின் சோகம் என்னை மிகவும் பாதித்தது. சம்பந்தப்பட்டோருக்கு என் வாழ்த்துக்கள்.

:icon_mrgreen:

Edited by Ponniyinselvan

அனி,

இந்தப் படத்த நீங்கள் பார்த்தனீங்களா? ஒன்லைனில் இதைப் பார்க்கக்கூடியதாய் இருந்தால் அந்த லிங்க இஞ்ச தாங்கோ, பார்த்துவிட்டு படம் எப்படி இருக்கின்றது என்று சொல்கின்றேன்..

புலம்பெயர்ந்த தழிமர்களின் இவ் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

இப் படத்தை எங்கு பார்க்கலாம் / வாங்கலாம் ?

படம் பற்றியோ கலைஞர்கள் பற்றியோ குறுந்திரைப்பட விழா பற்றியோ எதுவும் விபரமாகக் குறிப்பிடப் படாததால்தான் முன்பே கருத்து எழுதவில்லை.

விபரங்களுக்கு நன்றி அனிதா.

நதி குறும்படம் பற்றி நண்பர் டிசே'இன் பதிவில் எழுதப்பட்டுள்ள குறிப்பு:

இந்தப்படங்களையெல்லாம் விட நம்பிக்கை அதிகம் தந்த படம் என்றால் 'நதி' என்ற பிரான்சில் எடுக்கப்பட்ட 15 நிமிடப்படத்தைத்தான் சொல்லவேண்டும். ஒரு அகதியின் துயரை மிகத்தத்ரூபமாய் எளிமையான காட்சிகளால் சித்தரிக்கின்றது. தனது உறவினரின் பணத்தில்(கடனில்) கள்ளமாய் பிரான்சிற்கு வந்து, எந்த வேலையும் செய்யமுடியாது -வேலைசெய்யும் அனுமதிப்பத்திரம் (work permitt) இல்லாதிருக்கும்- இளைஞனே இங்கே முக்கிய பாத்திரமாகின்றான். இந்த நெருக்கடியோடு ஊரிலிருந்து அம்மாவின் நோயிற்கு இன்னபிறவிற்கென பணம் அனுப்பச் சொல்லும் உறவுகள்... தங்கியிருக்க்கும் வீட்டுக்காரரும் தனக்கான அல்லல்களோடு இவனை உளவியல்ரீதியில் திட்டிக்கொண்டிருக்கின்றார். ஒருமாதிரி இன்னொருவரின் வேலை அனுமதிப்பத்திரம் பெற்று கள்ளமாய் இவ்விளைஞன் வேலை செய்ய வெளிக்கிடும்போது, அந்த தொடர்மாடிக்கட்டடத்தில் இரு இளைஞர் குழுக்கள் கைகலப்பில் ஈடுபடுகின்றனர். இதையறிந்து பொலிஸ் அங்கே வர, அவ்விரு குழுக்களும் தப்பிவிட இந்த இளைஞன் இடைநடுவில் மாட்டிவிடுகின்றான். பொலிஸார், இவனைக் கைதுசெய்து அடையாள அட்டைகளைக் கேட்கும்போது, இவன் கள்ளமாய் வந்து பிரான்சில் நிற்பது தெரிகின்றது. மேலும் அவனிடமிருக்கும் வேலை செய்யும் பத்திரமும் இன்னொருவனுடையதாக இருப்பதும் ஆபத்தாக முடிந்துவிடுகின்றது. அவ்விளைஞன் தான் உடனேயே நாடுகடத்தப்படுவதன் அவலத்தை நினைத்து அரற்றத்தொடங்குவதோடு படம் முடிகின்றது. எத்தனையோ நாடுகளின் ஆபத்தான எல்லைகளைக் கடந்து, ஏஜென்சிகளுக்கு இலட்சக்கணக்கில் பணாம் கொடுத்து வந்தவர்களுக்கே இத்துயரத்தின் ஆழம் புரியும். 'உன்னிடம் இருப்பதும் சிறிலங்கா பாஸ்போர்ட்'தானே என்று கேட்பவர்கள், இவ்விளைஞர்களைப் போல சொகுசாய் அமெரிக்கா போன்ற இடங்களுக்கு பறப்பவர்களாகவோ.... முக்கிய அரசியல் பிரமுகர்களோடு சொகுசாய் விமானத்தில் உட்கார்ந்துகொண்டு 'தாம் பேசும் அரசியலோடு' உலகம் சுற்றத்த்தொடங்கி தாம் பேசி முடிக்கும் அரசியலோடு உலகமும் சுற்றுவதை நிறுத்திச் சுருண்டு படுத்துவிடுகின்றது என்று நினைப்பவர்களாய் மட்டுமே இருக்கமுடியும். இக்குறும்படத்தில் நடித்திருந்த நடிகர்கள் மிக இயல்பாய் நடித்திருந்தார்கள். உரையாடல்கள், ஒளிப்பதிவு எல்லாம் கதையின் களத்தோடு நேர்த்தியாய் பொருந்திக்கொள்கின்றது.

வேறு சில புலம்பெயர் தமிழர்களின் படங்கள் பற்றியும் எழுதியுள்ளார். முழுமையான கட்டுரையை இங்கு சென்று வாசியுங்கள்:

http://djthamilan.blogspot.com/2007/10/blog-post_25.html

2005 ஆம் ஆண்டு பிரான்சில் நல்லூர்ஸ்தான் நடத்திய குறும்படப் போட்டியில் சிறந்த இரண்டாமிட விருதினை இக்குறும்படம் பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய மேலதிக விபரம்:

பரிஸில் உள்ள நல்லூர் ஸ்தான் 03-04-2005 ல் நடாத்திய குறும்பட போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போட்டியில் ஏழு குறும்படங்கள் கலந்துகொண்டன.

01. நீ நான் எல்லோரும் - நெறியாளர்:: ரூபன்

02. மறுமுகம் - நெறியாளர்:: வினாகாண்டி

03. நதி - நெறியாளர்:: பாஸ்கரன்

04. விடுதலை - நெறியாளர்:: டிசூபன், சதா பிரணவன்

05. எதுமட்டும் - நெறியாளர்:: I.V.ஜனா

06. வடலி - நெறியாளர்:: முத்தமிழ்ச் செல்வன்

07. கேள்விக்குறி ? - நெறியாளர்::ஹரிபிரசாத்

இவற்றில் சிறந்த முதலாமிட விருதினையும், சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதினையும் "எதுமட்டும்" குறும்படம் பெற்றுக்கொணடது. இது பிரான்சில் வதியும் இலங்கைத் தமிழ்க் குடும்பத்திற்கும் ஆபிரிக்க தேசமொன்றின் இளைஞனுக்கும் இடையேயான உறவைப்பற்றிப் பேசுகின்றது.

சிறந்த இரண்டாமிட விருதினையும், சிறந்த நெறியாளர், சிறந்த நடிகர் ஆகியவற்றிற்கான விருதினையும் "நதி" என்னும் குறும்படம் பெற்றுக்கொண்டது. இது பிரான்சில் அகதியாக வந்து சேரும் இளைஞன் ஒருவனின் புகலிடத்தின் வாழ்வியல் நெருக்கடி பற்றி பேசுகின்றது.

சிறந்து மூன்றாமிட விருதினை "விடுதலை" என்னும் குறும்படம் பெற்றுக்கொண்டது.

பெருமளவிலான பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்த இக்குறும்பட போட்டி நிகழ்வு புலம்பெயர் கலை-இலக்கிய செயற்பாட்டின் ஓர் அங்கமாய் புலம்பெயர் சினிமா வளர்வதற்கான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

நன்றி: அப்பால் தமிழ்

இணைப்பு: http://www.appaal-tamil.com/index.php?opti...5&Itemid=63

"நதி" குறும்படத்தின் இயக்குனர், நடிகர், எழுத்தாளர் பாஸ்கரன், கனடாவில் கிடைத்த விருதுகளுடன்

nathi1.jpg

"நதி" குறும்படத்திலிருந்து சில காட்சிகள்

Nathi.jpg

Nathi5.jpg

nathi10.jpg

nathi11.jpg

Edited by இளைஞன்

அனி,

இந்தப் படத்த நீங்கள் பார்த்தனீங்களா? ஒன்லைனில் இதைப் பார்க்கக்கூடியதாய் இருந்தால் அந்த லிங்க இஞ்ச தாங்கோ, பார்த்துவிட்டு படம் எப்படி இருக்கின்றது என்று சொல்கின்றேன்..

கலைஞன் , நான் என்னும் இந்த குறுந்திரைப்படத்தைப் பார்க்கவில்லை... இந்த விழாவில் பங்கு கொண்ட நண்பர் ஒருவர் சொன்ன தகவல்களை இங்கு இணைத்துள்ளேன் . இந்த படம் ஐரோப்பாவிலும் கனடா போன்ற நாடுகளிலும், அனைத்து தமிழ்கடைகளிலும் வாங்கலாமாம். Swiss ramiy record a DVD வெளிவந்துள்ளது.எல்லா இடங்களிலும் வாங்கலாமாம்.என்னும் சில நாட்களில் Youtube லயும் போடப்படுமாம். :unsure:

அனி,

நான் மறந்து போனன், இப்ப இளைஞன் இணைத்த தகவல்களையும், படங்களையும் பார்த்தபோது தான் தெரிந்தது இந்தப் படத்தை நான் நினைக்கிறன் சுமார் ஒரு வருசத்துக்கு முன் இருக்கும் எண்டு கனடாவில தமிழ் விசன் ரீவீஐ தொலைக்காட்சியில் போட்டவர்கள் பார்த்தனான். இப்ப படத்தின் கதை அவ்வளவு நினைவில் இல்லை. ஆனால், அப்போது பார்த்தபோது படம் நன்றாக இருந்தது. போலிஸ் பிடிக்கின்ற காட்சி, அதற்கு நடித்தவர்களையும் நினைவில் இருக்கின்றது. மன்மதன் இதில மிகவும் ஒரு அப்பாவியாக நடித்து இருந்தார் எண்டு நினைக்கிறன்.

இத் குறுந் திரைப்பட விழா பிரான்ஸில் நடந்த போது

நான் அவ் விழாவில் பங்கேற்று இருந்தேன்.

எனது கருத்தில் அன்றைய விழாவில்

இத் திரைப்படமே சிறந்த குறுந் திரைப்படமாக தேர்வாகி இருக்க வேண்டும்.

இது குறித்த விசனத்தை

அங்கு இருந்த நடுவர்களுக்கு தெரிவித்தேன்.

நேற்று விலாசம் குறும்படத்தில் நடித்த மோகன்

அனிதா வழி தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு

பேசி இத் திரைப்படத்தின் கதையை கூறி

நினைவுபடுத்தியதும்

நான் இத் தேர்வு குறித்து மகிழ்ந்து அவரோடு பேசினேன்.

nathi11.jpg

இளைஞன் இது தொடர்பான படங்களை இணைத்து இருந்ததும்

அதை மீட்ட கிடைத்ததில் எனக்குள் அளவிலா மகிழ்ச்சி!

நன்றி!

உண்மையில் இத் திரைப்பட கலைஞர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

அனைவருக்கும் வாழ்த்துகள்!

தேர்வுக்குழுவுக்கும் நன்றிகள்!

திறமைசாலிகளை எவராலும் எப்போதும் மறைக்க முடியாது

என்பதை மறக்கலாகாது.

எனவே தொடர்ந்து படையுங்கள்!

சோர்ந்து விடாதீர்கள்!

warm_wishes_14.jpg

அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்

குறும்படத்தை இணைக்க முடிந்தால் யாராவது இணைத்து விடுங்கள்

எம்மவர் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும் சந்தோசமாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது. நான் என்னும் நதி குறும்படத்தை பார்க்கவில்லை. இணைப்பிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் ஒவ்வொருவரினதும் கருத்துக்களை வாசித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். அஜீவன், டிசேதமிழனின் கருத்துக்கள் மிகவும் சரியானது. கலைஞர் பாஸ்கர் யாழ்களத்திற்கு வந்து தன் அனுபவங்களை எங்களோடு பங்கிட்டுக்கொள்ளலாம். நன்றி

பொன்னியின் செல்வன் எழுதியதை பார்த்துவிட்டு .... பாஸ்கரன்(மன்மதன்) அவர்கள் எனக்கு இதை அனுப்பியிருந்தார்.அதை இங்கு இணைக்கின்றேன்.

வணக்கம், எமக்கு வாழ்த்து கூறிய அனைத்து யாழ் உறவுகளுக்கு நன்றிகளைக் கூறுகின்றேன். மேலும் எனது " நதி" குறுந்திரைப்படம் இவ்வளவு ஒரு பெரும் வெற்றிபெரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,எதிர் பார்த்து கனடா film festival க்கும் அனுப்பவில்லை. சரி அனுப்பி பார்ப்போம் வெற்றி பெற்றால் சந்தோசம்,இல்லையெனில் அடுத்த முயற்சியில் ஈடுபடுவோம் என்றிருந்தேன். " 150 படங்கள்" பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொண்ட இக்குறும்பட போட்டியில் எம் "நதி" 5 விருதுகளைப் பெற்றது. நதி குறும்படத்தில் பங்கு பற்றிய கலைஞர்கள் அனைவருமே ஆழப்பெரிய சந்தோசம் அடைந்தோம். மேலும் நல்லூர்ஸ்தான் எனும் விளையாட்டுக்கழகம் நடத்திய குறும் திரைப்பட விழாவில், எம் கலைஞர்கள் படைப்பிலும் ,உருவாக்கத்திலும் வந்த வெவ்வேறு அர்த்தம் உள்ள பதிவுகளாக அமைந்தது.அந்த குறும் திரைப்பட போட்டியில் எனது படமும் ஒன்று !

அனுபவத்திலிருந்து:

நல்லூர்ஸ்தான் உறுப்பினரான குணா என்பரே " நதி " என்ற குறுந்திரைப்படம் உருவாக்காரணமாயிருந்தவர். அவர் என்னை la chappel என்ற இடத்தில் கண்டு

"எல்லாரும் குறும்படம் எடுக்கின்றார்கள் நீரும் எடுக்கலாமே" என்று கேட்ட பொழுது எனக்கு ஆச்சிரியம். நான் கேட்டேன்.

" என்ன அண்ணா நான் ஒரு சாதாரண கலைஞன் , நான் எப்படி குறும்படம் எல்லாம் எடுப்பது ? நான் வேணும் என்றால் என்னால் முடிந்த உதவியாக வேறு படம் எடுக்கும் கலைஞர்களுக்கு நடிப்பில் என்னால் முடிந்ததை செய்கிறேன் " என்றேன் .

அதற்கு அவர் சொன்னார் "இஞ்ச பாரும் பாஸ்கி எல்லாரும் தெரிஞ்சு கொண்டு வாரதில்லை. நீர் நல்லா செய்வீர் ,செய்யும் என்று தட்டிக்கொடுத்தார் எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல்.

சரி செய்யலாமோ என்று யோசித்த பின்னர் கதை தேடினேன்,கற்பனை பண்ணினேன். அதில் ஒரு கதை அமைந்தது.அப்போது என்னுடைய நண்பரான ராஜீயிடம் அந்த கதையைக் கூறினேன்.அவர் கதையைக் கேட்ட பின்னர் சொன்னார்

" இல்லை பாஸ்கி கதை சரியில்லை வேற மாதிரி யோசிச்சு செய்யும்" என்று சொன்னார்.

நானும் நண்பனும் ஒரு கடைக்கு சென்று cafe குடித்துக் கொண்டு இருக்கும் போது எனது நண்பனின் ஒரு நண்பன் நாட்டுக்குநாடு கடத்தப்பட்டு உள்ளான் விசாப்பிரச்சனை என்று சொன்னதும் அதைக்கேட்டு சரி ஒரு விசாப்பிரச்சனையை பற்றி எடுத்தால் இப்போதய சூழ்நிலை நடைமுறையில் நடந்து கொண்டு இருக்கும் பிரச்சனை, சோ அதை எடுத்தால் சரி ஆகும் என்று யோசித்து (திரைக்கதை &கதை)உருவாக்கினேன். பின்பு எனது நண்பன் ராஜீயிடம் கதையை போய் சொன்னேன் .அப்பொழுது அவர் சொன்னார்.

" கதை அருமை இதை இப்படி சொன்னமாதிரி படமாக செய் நிச்சயம் வெற்றி" என்றும் சொன்னார்.

சரி அவர் சொல்வதைக் கேட்டு நானும் முடிவு பண்ணினேன். அப்ப ஒரு காலணி தேவைப்பட்டது.பரீஸில் HLM என்று குறிப்பிடுவார்கள். எனக்கு மாமாவா நடித்த "இந்திரன்" அவர்களைக் கேட்டேன்.அவர் உடனே சரி என்று சொன்னார்.அவர் மகனையும் கேட்டேன்.அவரும் சரி என்று சொன்னார்.அவரின் வீட்டை நினைத்துப்பார்த்தேன்.இந்த வீடு எனது கதைக்கு சரியாக அமையும் என்று தோன்றியது. அவரிடம் வீட்டைக் கேட்டேன்.அவரும் HLM இடத்தில் இருப்பவர்கள் மூலமாக பிரச்சனை வரும் என்று தெரிந்தும் எனக்கு படம் எடுப்பதற்காக மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் சம்மதித்தார்.

அடுத்ததாக விடியோ, ரிரின் ல் நான் படலைக்கு படலை நடித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு நண்பனாக கிடைத்தவர் ஈஸ்வர். தற்போது லண்டனில் வசிக்கின்றார் . கெமரா பற்றி இந்தியாவில் முறைப்படி படித்தவர் ஈஸ்வர்.அவரை நான் கேட்டபோது அவரும் சம்மதித்தார்.அதேபோல் எனது நண்பர்கள் அனைவருமே நடிப்பதற்கு சம்மதித்தார்கள் . அதோட எனது நெருங்கிய நண்பனான சங்கர் editing செய்தார், பல சிரமங்களில் நடுவில் editing பண்ண முடியாத நிலையிலும் கடைசியாக ஒரு internet cafe கடைக்கு சிடியில் கொண்டு போய் editing செய்து தந்தார்.அவருக்கும் இக்குறும்படத்தில் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றிகளைக் கூறுகின்றேன். ,மேலும் நதியில் இசை அமைத்த "இன்பன்" எனது நண்பர் அவரும் எந்த ஒரு கஸ்டத்தையும் பாராமல், வேலை வேலை என்று பலர் இருக்கும் நடுவில் அவர் தன்னுடைய வேலையும் பாராமல் எனக்கு music செய்து கொடுத்தார் அவருக்கும் எனது நன்றிகள்.

அடுத்தது படலைக்குப் படலை இயக்குனர் "சுதன்ராஜ் எனது குரு" அவரால் தான் இந்த நடிப்பு துறையில் ஈடுபட்டேன்.அவருக்கு இப்படி ஒரு குறும்படம் எடுப்பதாக சொன்னபோது மனதில் சந்தோசத்துடன் வாழ்த்தினார்..பின்பு கவனமாக கவனித்து நுனுக்கமாக எடுக்க வேண்டும் என்று கூறினார்.அவரிடமே இந்தகதையைக் கூறி பாடல் வரிகள் கேட்டேன்.மறுக்காமல் எழுதிக் குடுத்தார் அவருக்கும் எனது நன்றிகள்.

அதோடு படலைக்கு படலையின் நடித்த எனது அத்தான் அவர்தான் "சாரங்கன்" இந்த கலைக்குள் நான் உள்ளே செல்வதற்கு காரணமானவர் இவர் எனது "பெஸ்ட் பிரண்ட் "ஒரு இசை அமைப்பாளர், நடிகர்,பாடல் ஆசிரியர், ஒரு மிருதங்க வித்துவான்,இவரைப்பற்றி பலருக்கும் தெரிந்ததே. மேலும் அவர் பல சிரமங்களில் நடுவில் எங்களுக்கு பாடல் பதிவு செய்ய முடியாமல் இருக்கும் சூழ் நிலையிலும் எங்களுக்கு கை குடுத்து உதவியவர்,அவருக்கும் நன்றிகள் மேலும் அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகள்.

நண்பர்களே , எல்லாருமே திறமை சாலிகள்.அவர்களுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமைகளை வெளி கொண்டு வரவேண்டும்.எல்லாரும் சேர்ந்து எம் கலைஞர்களை வளர்போம். எம் கலைஞர்களை நாங்கள் வாழ்தாவிடில் யார் வாழ்த்துவார்.எம்மவரை நாங்களே தட்டி கொடுப்போம். இதில் யாழ் கள உறவான பொன்னியில்செல்வன் குறிப்பிட்டது போல்"எம் கலைஞரை நாங்கள் வாழ்த்துவதில் குறைந்துவிட மாட்டோம் " என்று சொன்னது போல வாழ்த்துவது மட்டும் இல்லாமல் செயல்களிலும் திறைமையாக வெளிக் கொண்டு வந்து எம் கலைஞர்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

ஒரு போராளியும் ,ஒரு கலைஞனும் மனப்பக்கும் கொண்டவர் என்று குறிப்பிடுவார்கள். அதே போன்று எல்லாருமே எம் கலைகளை வெல்ல எமக்கு என்று ஒரு சினிமாவை உருவாக்க வேண்டும். கே. பாலச்சந்திரன், ஏ.சி.தாசீசியஸ் மாஸ்ரர், பரா, இப்படி பல பேர் முன்னோடியாக இருக்கின்றார்கள் எம் கலைகளுக்கு அவர்கள் எமக்கு தந்த பாதை.மறந்துவிடாமல் நாங்களும் கொண்டு செல்வோம்.எல்லாரும் துணிய வேண்டும்.

மற்றும் நான் யாழ் இணையத்தை எப்பொழுதும் பார்பதுண்டு.யாழ் இணைய உறுப்பினர்கள் எங்கு என்ன நடந்தாலும் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் தங்களுக்கு தெரிஞ்சால் உடனே யாழில் இணைப்பார்கள்.உங்கள் பணியை நீங்கள் சரியாக செய்கிறீர்கள் .எனது மனமார்ந்த நன்றிகள்.பல நிகழ்வுகள் இங்கு நடந்ததாம் என்று யாழ் இணையத்தில் படைப்புக்களத்தில் தான் பார்த்து தெரிஞ்சு கொள்ளும் சூழ் நிலையை உருவாக்கி இருக்கின்றீர்கள். நன்றிகள் நன்றிகள்.எம் கலைஞர்களின் வாழ்த்து செய்தியும் இங்கு தானே பார்க்க கூடியதாக இருக்கின்றது .எல்லாருக்கும் எனதுவாழ்த்துக்கள் யாழ் இணைய உறவுகளுக்கும் , நிர்வாகிகளுக்கும் எனது நன்றிள்.!

Edited by அனிதா

  • தொடங்கியவர்

பொன்னியின் செல்வன் எழுதியதை பார்த்துவிட்டு .... பாஸ்கரன்(மன்மதன்) அவர்கள் எனக்கு இதை அனுப்பியிருந்தார்.அதை இங்கு இணைக்கின்றேன்.

வணக்கம், எமக்கு வாழ்த்து கூறிய அனைத்து யாழ் உறவுகளுக்கு நன்றிகளைக் கூறுகின்றேன். மேலும் எனது " நதி" குறுந்திரைப்படம் இவ்வளவு ஒரு பெரும் வெற்றிபெரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,எதிர் பார்த்து கனடா film festival க்கும் அனுப்பவில்லை. சரி அனுப்பி பார்ப்போம் வெற்றி பெற்றால் சந்தோசம்,இல்லையெனில் அடுத்த முயற்சியில் ஈடுபடுவோம் என்றிருந்தேன். " 150 படங்கள்" பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொண்ட இக்குறும்பட போட்டியில் எம் "நதி" 5 விருதுகளைப் பெற்றது. நதி குறும்படத்தில் பங்கு பற்றிய கலைஞர்கள் அனைவருமே ஆழப்பெரிய சந்தோசம் அடைந்தோம். மேலும் நல்லூர்ஸ்தான் எனும் விளையாட்டுக்கழகம் நடத்திய குறும் திரைப்பட விழாவில், எம் கலைஞர்கள் படைப்பிலும் ,உருவாக்கத்திலும் வந்த வெவ்வேறு அர்த்தம் உள்ள பதிவுகளாக அமைந்தது.அந்த குறும் திரைப்பட போட்டியில் எனது படமும் ஒன்று !

அனுபவத்திலிருந்து:

நல்லூர்ஸ்தான் உறுப்பினரான குணா என்பரே " நதி " என்ற குறுந்திரைப்படம் உருவாக்காரணமாயிருந்தவர். அவர் என்னை la chappel என்ற இடத்தில் கண்டு

"எல்லாரும் குறும்படம் எடுக்கின்றார்கள் நீரும் எடுக்கலாமே" என்று கேட்ட பொழுது எனக்கு ஆச்சிரியம். நான் கேட்டேன்.

" என்ன அண்ணா நான் ஒரு சாதாரண கலைஞன் , நான் எப்படி குறும்படம் எல்லாம் எடுப்பது ? நான் வேணும் என்றால் என்னால் முடிந்த உதவியாக வேறு படம் எடுக்கும் கலைஞர்களுக்கு நடிப்பில் என்னால் முடிந்ததை செய்கிறேன் " என்றேன் .

அதற்கு அவர் சொன்னார் "இஞ்ச பாரும் பாஸ்கி எல்லாரும் தெரிஞ்சு கொண்டு வாரதில்லை. நீர் நல்லா செய்வீர் ,செய்யும் என்று தட்டிக்கொடுத்தார் எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல்.

சரி செய்யலாமோ என்று யோசித்த பின்னர் கதை தேடினேன்,கற்பனை பண்ணினேன். அதில் ஒரு கதை அமைந்தது.அப்போது என்னுடைய நண்பரான ராஜீயிடம் அந்த கதையைக் கூறினேன்.அவர் கதையைக் கேட்ட பின்னர் சொன்னார்

" இல்லை பாஸ்கி கதை சரியில்லை வேற மாதிரி யோசிச்சு செய்யும்" என்று சொன்னார்.

நானும் நண்பனும் ஒரு கடைக்கு சென்று cafe குடித்துக் கொண்டு இருக்கும் போது எனது நண்பனின் ஒரு நண்பன் நாட்டுக்குநாடு கடத்தப்பட்டு உள்ளான் விசாப்பிரச்சனை என்று சொன்னதும் அதைக்கேட்டு சரி ஒரு விசாப்பிரச்சனையை பற்றி எடுத்தால் இப்போதய சூழ்நிலை நடைமுறையில் நடந்து கொண்டு இருக்கும் பிரச்சனை, சோ அதை எடுத்தால் சரி ஆகும் என்று யோசித்து (திரைக்கதை &கதை)உருவாக்கினேன். பின்பு எனது நண்பன் ராஜீயிடம் கதையை போய் சொன்னேன் .அப்பொழுது அவர் சொன்னார்.

" கதை அருமை இதை இப்படி சொன்னமாதிரி படமாக செய் நிச்சயம் வெற்றி" என்றும் சொன்னார்.

சரி அவர் சொல்வதைக் கேட்டு நானும் முடிவு பண்ணினேன். அப்ப ஒரு காலணி தேவைப்பட்டது.பரீஸில் HLM என்று குறிப்பிடுவார்கள். எனக்கு மாமாவா நடித்த "இந்திரன்" அவர்களைக் கேட்டேன்.அவர் உடனே சரி என்று சொன்னார்.அவர் மகனையும் கேட்டேன்.அவரும் சரி என்று சொன்னார்.அவரின் வீட்டை நினைத்துப்பார்த்தேன்.இந்த வீடு எனது கதைக்கு சரியாக அமையும் என்று தோன்றியது. அவரிடம் வீட்டைக் கேட்டேன்.அவரும் HLM இடத்தில் இருப்பவர்கள் மூலமாக பிரச்சனை வரும் என்று தெரிந்தும் எனக்கு படம் எடுப்பதற்காக மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் சம்மதித்தார்.

அடுத்ததாக விடியோ, ரிரின் ல் நான் படலைக்கு படலை நடித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு நண்பனாக கிடைத்தவர் ஈஸ்வர். தற்போது லண்டனில் வசிக்கின்றார் . கெமரா பற்றி இந்தியாவில் முறைப்படி படித்தவர் ஈஸ்வர்.அவரை நான் கேட்டபோது அவரும் சம்மதித்தார்.அதேபோல் எனது நண்பர்கள் அனைவருமே நடிப்பதற்கு சம்மதித்தார்கள் . அதோட எனது நெருங்கிய நண்பனான சங்கர் editing செய்தார், பல சிரமங்களில் நடுவில் editing பண்ண முடியாத நிலையிலும் கடைசியாக ஒரு internet cafe கடைக்கு சிடியில் கொண்டு போய் editing செய்து தந்தார்.அவருக்கும் இக்குறும்படத்தில் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றிகளைக் கூறுகின்றேன். ,மேலும் நதியில் இசை அமைத்த "இன்பன்" எனது நண்பர் அவரும் எந்த ஒரு கஸ்டத்தையும் பாராமல், வேலை வேலை என்று பலர் இருக்கும் நடுவில் அவர் தன்னுடைய வேலையும் பாராமல் எனக்கு music செய்து கொடுத்தார் அவருக்கும் எனது நன்றிகள்.

அடுத்தது படலைக்குப் படலை இயக்குனர் "சுதன்ராஜ் எனது குரு" அவரால் தான் இந்த நடிப்பு துறையில் ஈடுபட்டேன்.அவருக்கு இப்படி ஒரு குறும்படம் எடுப்பதாக சொன்னபோது மனதில் சந்தோசத்துடன் வாழ்த்தினார்..பின்பு கவனமாக கவனித்து நுனுக்கமாக எடுக்க வேண்டும் என்று கூறினார்.அவரிடமே இந்தகதையைக் கூறி பாடல் வரிகள் கேட்டேன்.மறுக்காமல் எழுதிக் குடுத்தார் அவருக்கும் எனது நன்றிகள்.

அதோடு படலைக்கு படலையின் நடித்த எனது அத்தான் அவர்தான் "சாரங்கள்" இந்த கலைக்குள் நாள் உள்ளே செல்வதற்கு காரணமானவர் இவர் எனது "பெஸ்ட் பிரண்ட் "ஒரு இசை அமைப்பாளர், நடிகர்,பாடல் ஆசிரியர், ஒரு மிருதங்க வித்துவான்,இவரைப்பற்றி பலருக்கும் தெரிந்ததே. மேலும் அவர் பல சிரமங்களில் நடுவில் எங்களுக்கு பாடல் பதிவு செய்ய முடியாமல் இருக்கும் சூழ் நிலையிலும் எங்களுக்கு கை குடுத்து உதவியவர்,அவருக்கும் நன்றிகள் மேலும் அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகள்.

நண்பர்களே , எல்லாருமே திறமை சாலிகள்.அவர்களுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமைகளை வெளி கொண்டு வரவேண்டும்.எல்லாரும் சேர்ந்து எம் கலைஞர்களை வளர்போம். எம் கலைஞர்களை நாங்கள் வாழ்தாவிடில் யார் வாழ்த்துவார்.எம்மவரை நாங்களே தட்டி கொடுப்போம். இதில் யாழ் கள உறவான பொன்னியில்செல்வன் குறிப்பிட்டது போல்"எம் கலைஞரை நாங்கள் வாழ்த்துவதில் குறைந்துவிட மாட்டோம் " என்று சொன்னது போல வாழ்த்துவது மட்டும் இல்லாமல் செயல்களிலும் திறைமையாக வெளிக் கொண்டு வந்து எம் கலைஞர்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

ஒரு போராளியும் ,ஒரு கலைஞனும் மனப்பக்கும் கொண்டவர் என்று குறிப்பிடுவார்கள். அதே போன்று எல்லாருமே எம் கலைகளை வெல்ல எமக்கு என்று ஒரு சினிமாவை உருவாக்க வேண்டும். K.balachandrar canada, daThis master london, Para Paris, இப்படி பல பேர் முன்னோடியாக இருக்கின்றார்கள் எம் கலைகளுக்கு அவர்கள் எமக்கு தந்த பாதை.மறந்துவிடாமல் நாங்களும் கொண்டு செல்வோம்.எல்லாரும் துணிய வேண்டும்.

மற்றும் நான் யாழ் இணையத்தை எப்பொழுதும் பார்பதுண்டு.யாழ் இணைய உறுப்பினர்கள் எங்கு என்ன நடந்தாலும் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் தங்களுக்கு தெரிஞ்சால் உடனே யாழில் இணைப்பார்கள்.உங்கள் பணியை நீங்கள் சரியாக செய்கிறீர்கள் .எனது மனமார்ந்த நன்றிகள்.பல நிகழ்வுகள் இங்கு நடந்ததாம் என்று யாழ் இணையத்தில் படைப்புக்களத்தில் தான் பார்த்து தெரிஞ்சு கொள்ளும் சூழ் நிலையை உருவாக்கி இருக்கின்றீர்கள். நன்றிகள் நன்றிகள்.எம் கலைஞர்களின் வாழ்த்து செய்தியும் இங்கு தானே பார்க்க கூடியதாக இருக்கின்றது .எல்லாருக்கும் எனதுவாழ்த்துக்கள் யாழ் இணைய உறவுகளுக்கும் , நிர்வாகிகளுக்கும் எனது நன்றிள்.!

சிறந்த கலைஞனுக்குரிய பண்புடனும், அடக்கத்துடனும் 'நதி' குறுந்திரைப்படம் சம்பந்தமான தனது அனுபவங்களை எங்களோடு பங்கிட்டுக்கொண்டமைக்காக 'நதி' பாஸ்கருக்கும், அவரது கருத்தை யாழ் களத்தில் இணைத்தமைக்காக அனிதாவுக்கும் எங்கள் நன்றிகள். பாஸ்கர் நீங்கள் தொடர்ந்து கலைத்துறையில் சாதனை புரிய, சிகரங்களைத்தொட மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

:)

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

5 சர்வதேச விருதுகளை வென்ற 'நதி' குறுத்திரைப்படம்!

வியாழன், 1 நவம்பர் 2007( 15:32 ஈஸ்T )

webulagam.com

5 சர்வதேச விருதுகளை வென்ற 'நதி' குறுத்திரைப்படம்!

‌பிரா‌ன்‌சி‌ல் வாழு‌ம் இல‌‌ங்கையை சே‌ர்‌ந்த பா‌ஸ்கர‌ன் எ‌ன்ற த‌மிழ‌ர் இயக்கிய நதி என்ற குறுந்திரைப்படம் 5 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

சுயாதீன திரைப்பட நிறுவனம் நடத்திய 6வது சர்வதேச குறும்பட விருது வழங்கும் விழா கனடாவில் நடைபெற்றது.

இவ்விழாவில், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை, இந்தியா, டென்மார்க், கனடா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து சுமார் 150 படங்கள் பங்கேற்றன.

இதில் பாரீஸைச் சேர்ந்த பாஸ்கர் இயக்கிய 'நதி' என்ற தமிழ் குறுந்திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த எழுத்தாளர், சிறந்த ஒளிப்பதிவாளர் என 5 விருதுகளை வென்றுள்ளது. இந்த விழாவில் அதிகபட்சமாக 5 விருதுகளை வென்ற படம் இது ஒன்றே என்பது குறிப்பிடத்தக்கது.

நதி குறுந்திரைப்படத்திற்கான சிறந்த படம், நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என 4 விருதுகளையும் பாஸ்கர் பெற்றார். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை லண்டனில் வசிக்கும் ஈஸ்வர் என்பவர் பெற்றார்.

நதி திரைப்பட கலைஞர்கள் அனைவரையும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.

5 சர்வதேச விருதுகளை வென்ற 'நதி' குறுத்திரைப்படம்!

எமது கலைஞர்கட்டு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது கலைஞர்கட்கு வாழ்த்துக்கள். அவர்களது படைப்புக்கள் மேன்மேலும் வளரட்டும் :lol:

கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.