Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்; வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசு – சீமான் கண்டனம்

seeman050621_2-7e1-780x470.jpg

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், ஆத்திரத்தையும் ஏற்படுத்திய நிலையில், அந்த வேதனை செய்தி மறைவதற்குள் மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி சிறுமிக்கு தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் எனும் செய்தி இதயத்தை நொறுங்கச் செய்கிறது.

நாள்தோறும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத்தவறி, சட்டம் ஒழுங்கை முற்றுமுழுதாக சீரழித்துள்ள தி.மு.க. அரசின் நிர்வாகத் திறனற்ற அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் கொடுமைகள் வார்த்தைகளால் சொல்லிமாளக்கூடியதல்ல.

அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி கலைஞர் பேருந்து நிலையம் வரையில் பெண்கள் எங்குமே பாதுகாப்பாகச் செல்ல முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் கொடுஞ்சூழல் நிலவுகிறது.கடந்த 23.12.24 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை, 01.02.25 அன்று சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உதவி கேட்டு வந்த 13 வயது சிறுமிக்கு மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் பாலியல் தொல்லை, 14.01.25 அன்று மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, 18.01.25 அன்று கரூரில் பள்ளி மாணவிக்கு காவலர் பாலியல் தொல்லை, 21.01.25 அன்று திருப்பூரில் அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை, 24.01.25 அன்று திண்டுக்கல் நத்தம் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை, 18.01.25 அன்று தென்காசி வீராணத்தில் காவலர்களால் இளம்பெண் பாலியல் துன்புறுத்தல், 25.01.25 அன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் மகிழுந்தில் பயணித்த பெண்களை வீடுவரை விரட்டி சென்ற கொடுமை, 03.02.25 சேலம் தலைவாசலில் பள்ளி மாணவிக்கு முதியவர் பாலியல் தொல்லை, 05.02.25 கிருஷ்ணகிரி பர்கூர் அருகே பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, 05.02.25 அன்று கள்ளக்குறிச்சியில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தூண்டுதலில் பெண் கிராம நிர்வாக அலுவலர் முகத்தில் சாணியை வீசி கீழே தள்ளி கொடுந்தாக்குதல், 05.02.25 அன்று கலைஞர் பேருந்து நிலையத்தில் நின்ற 19 வயது பெண் பாலியல் துன்புறுத்தல், 05.02.25 அன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 8 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, 06.02.25 அன்று வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை, 06.02.25 அன்று மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி 4-ம் வகுப்பு சிறுமிக்கு ஆசிரியர், தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் தொல்லை, 06.02.25 அன்று சேலம் அரசு பள்ளி மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை, 18.11.24 அன்று திருவள்ளூர் பள்ளிப்பட்டு அருகே 3-ம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை, 21.11.24 அன்று நாகர்கோவிலில் பள்ளி மாணவிக்கு அரசு பேருந்தில் நடத்துநர் பாலியல் தொல்லை, 07.12.24 அன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை, 21.12.24 அன்று சங்கரன்கோவிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, 26.12.24 அன்று ராஜபாளையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை என தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெருங்கொடுமையாகும். கடந்த 31.12.22 அன்று சென்னை, விருகம்பாக்கத்தில் கனிமொழி பங்கேற்ற தி.மு.க. நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இருந்த பெண் காவலர் ஒருவருக்கு தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்தது முதல் நேற்று முன்தினம் (05.02.25) தமிழ்நாடு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் கல்பனா நாயக் அவர்களே தம்மை கொல்ல சதி நடப்பதாக புகார் கூறியது வரை பெண் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற மிக மோசமான சூழல் தமிழ்நாட்டில் உள்ள நிலையில் தி.மு.க. ஆட்சியில் சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? வீட்டை விட்டு வெளியில் சென்ற பெண் குழந்தைகள் மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா? என்று பெற்றோர் ஒவ்வொரு நாளும் பரிதவிக்கும் கொடுமையான நிலைக்கு தமிழ்நாட்டு மக்களைத் தள்ளிவிட்டுள்ளது தி.மு.க. அரசு. பெண்களுக்கு எதிரான இத்தனை கொடுமைகளையும் தடுக்கத் தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசு, பெண் சுதந்திரம், பெண்கள் பாதுகாப்பில் முதலிடம் என்றெல்லாம் பேசுவதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்றே இல்லாமலாக்கி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலமாக மாற்றி இருப்பதுதான் தி.மு.க. அரசின் நான்கு ஆண்டு காலச் சாதனையா? இதுதான் உலகம் வியக்கும் திராவிட மாடல் ஆட்சியா? பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் வேளையில் காவல்துறையை தனது நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்படும் பள்ளிக் குழந்தைகள் பற்றி துளியும் கவலையின்றி, திருநெல்வேலியில் அல்வாவை ரசித்து ருசித்து சாப்பிட்டுகொண்டிருக்கிறார் என்பதுதான் வேதனையின் உச்சம்.

இனியும் இத்தகைய மெத்தனப்போக்கு தொடர்ந்தால் பெண்களும், குழந்தைகளும், பெற்றோரும் அல்லற்பட்டு ஆற்றாது சிந்தும் வேதனைக் கண்ணீரின் வெப்பத்தில் தி.மு.க. ஆட்சி அழிவது உறுதி! ஆகவே, போச்சம்பள்ளி, மணப்பாரப்பட்டி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெற்ற மகள்போல போற்றிப் பாதுகாக்க வேண்டிய பிஞ்சு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிச் சிதைக்கும் கொடூரர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மிகக்கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்ற கொடுமைகள் இனியும் தொடராவண்ணம் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாத்திட சட்டத்தை கடுமையாக்கிவிட வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
 

https://akkinikkunchu.com/?p=311356

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் தன்னை செழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் விலங்குகளிடம் உள்ள ஒழுக்கமாவது இருக்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

இதே போல் விஜி அண்ணிக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என பலர்  எப்போதும் குரல் எழுப்பினார்கள்.

ஆனால் செழுமை ஓவர்டோஸ் ஆகி தம்பிகள் அப்படி சொன்னவர் அனைவரையும் போட்டு பிராண்டி விட்டார்கள்.

அதே போல் தலைவரின் ஆளுயர நாதக பேனரின் முன் ஒரு பள்ளி சிறுமியை பாலியல் கொடுமை செய்த நா த க தம்பி எந்த கட்சி நடவடிக்கக்கும் ஆளாகாமல் செழுமையாக வாழ்கிறார் என்பதும் உண்மையே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

Tamil Nadu: Couple caught having sex inside Naam Thamizhar Katchi party office

Tamil Nadu: Couple caught having sex inside Naam Thamizhar Katchi party office

While all the contesting parties are leaving no stones unturned to woo the voters at RK Nagar by-poll with tall promises and colourful booths, Naam Thamizhar Katchi finds itself in thick soup.

A video has surfaced, in which a couple, allegedly supporting Naam Thamizhar is seen to have used the party's office to have sex. The couple filmed themselves while getting intimate in front of a poster carrying the party leader and the late LTTE Chief Prabhakaran's picture.

In the video, the woman is seen asking the man to stop, who then forces her to comply to his wishes.

The issue has caused huge embarrassment to the party but the party supporters have immediately called the video doctored, and a deliberate attempt to defeat the party at RK Nagar election.

The party has fielded Kalaikottudhayam, as its candidate under 'twin candles' symbol.
 

https://www.indiatoday.in/amp/india/story/tamil-nadu-couple-sex-naam-thamizhar-katchi-rk-nagar-by-poll-968181-2017-03-28
 

டிஸ்கி

தேவையில்லை.

ஆனால் இந்த வீடியோ ஆதாரத்தை கண்டவர்களுக்கு தெரியும் அதில் உள்ளவர் ஒரு சிறுமி என்பதும், அவர் தன்னை விடுவித்து கொள்ள போராடினார் என்பதும். 

வீடியோ மறைவாக எடுக்கப்படுவதும்   தெளிவாக தெரியும்.

 

4 minutes ago, goshan_che said:

In the video, the woman is seen asking the man to stop, who then forces her to comply to his wishes.

👆👇

இதெல்லாம் ஒரு பொழப்பு.

6 hours ago, இசைக்கலைஞன் said:

குறைந்தபட்சம் விலங்குகளிடம் உள்ள ஒழுக்கமாவது இருக்கவேண்டும்!

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

Tamil Nadu: Couple caught having sex inside Naam Thamizhar Katchi party office

Tamil Nadu: Couple caught having sex inside Naam Thamizhar Katchi party office

A video has surfaced, in which a couple, allegedly supporting Naam Thamizhar is seen to have used the party's office to have sex. The couple filmed themselves while getting intimate in front of a poster carrying the party leader and the late LTTE Chief Prabhakaran's picture.

👆👇

இதென்ன கொடுமை இந்த சைமனின் சின்ன சங்கிகள் அரசியல் பித்தலாட்டங்கள் செய்துவிட்டுதான் புலிகள் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் இம்மாதிரியான பெருங்கொடுமைகளை பிராபாகரன் படம் முன்னரே எடுத்துள்ளனர்.

இது தான் இவர்கள் இயக்கத்திற்கு கொடுக்கும் மரியாதையும் அதன் மாண்பை காப்பாற்றும் ரட்சணமும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

Tamil Nadu: Couple caught having sex inside Naam Thamizhar Katchi party office

 
 The couple filmed themselves while getting intimate in front of a poster
 
the party supporters have immediately called the video doctored, and a deliberate attempt to defeat the party at RK Nagar election.


 

goshan_che

வீடியோ மறைவாக எடுக்கப்படுவதும்   தெளிவாக தெரியும்.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

 

அந்த வீடியோவை நீங்கள் பார்தீர்களா?

நான் பார்த்தேன்.

தமிழ் நாட்டி உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு என்ன நடந்தது, ஏன் இது விசாரணையாகவில்லை என கேட்டறிந்தேன்.

இதன் அடிப்படையில்தான் இந்த கருத்து அமைந்தது.

அந்த வீடியோ இப்போதும் டிவிட்டரில் இருக்கலாம் தேடிப்பாருங்கள். 

வீடியோ எடுக்கப்படும் கோணம், அந்த சிறுமி அந்த நாதக காமுகனுக்கு எதிராக போராடுவது அது நிச்சயமாக சிறுமிக்கு தெரிந்து எடுக்கப்ப்ட்ட வீடியோ இல்லை என்பதை உணர்த்தும்.

உங்களிடம் ஒரு கேள்வி….

இதுவரைகாலமும் மெளனவிரதம் இருந்த உங்களுக்கு இந்த செய்தியில் அந்த பகுதியை மேற்கோள் காட்டி முட்டு கொடுக்க மெளனவிரத்தை உடைக்கவேண்டி வந்ததே.

அதை கவனித்த நீங்கள் கீழ்கண்ட மேற்கோளை கவனிக்கவில்லையா?

அல்லது நா த க உறுப்பினர் என்பதால் ஒரு சிறுமியை விருப்பம் இல்லாமல் பாலியல் தொந்தரவு செய்தாலும் அது உங்களுக்கு ஏற்புடையதா?

உங்களுக்கு லைக் போட்ட யாழில் இப்போ அதிகம் எழுதாத மற்றொருவரும் கேள்விக்கு பதில் கூறலாம்.

10 hours ago, goshan_che said:

In the video, the woman is seen asking the man to stop, who then forces her to comply to his wishes.

 

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.