Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மாதிரித்தான்.

இலங்கையில் அரச செலவில் அல்லது மக்கள் வரிப்பணத்தில் நல்லா படிச்ச என்னைப் போன்றவர்களை (அடப்பாவி நீயுமா என உங்கள் Mind Voice சொல்வது கேட்குது 😆 ) தங்கள் நாட்டுக்கு கவர்ந்து இழுத்து இறங்கியவுடனேயே நிரந்தரவதிவுடமை கொடுப்பது போலத்தான் இதுவும்.

நாங்களும் படிச்ச பிறகு, உந்த நாடு சரிவராது என்று இலங்கையை விட்டு கிளம்பி போனது போலத்தான் காளியம்மா மற்றும் மிச்ச ஆட்களும்.

என் தம்பிமாரின் திறமைக்கு நாட்டையே எழுதிக் கொடுக்கலாம். (அதனால் தானோ என்னவோ நம்மிடம் நாடே இல்லை)

  • Replies 68
  • Views 3.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    நடந்து கொண்டிருக்கும் விடயங்களை ஒவ்வொருவரும் அவரவர் பார்வையிலேயே ஊகித்துக் கொள்கின்றனர். என் பார்வை அவர்களுக்கு எதிர்காலம் கிடையாது என்று சொல்கின்றது ஏனென்றால் அதுவே தான் எனக்கு பிடித்த தெரிவு. நீங்கள

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    ஏன் இவர்களே பெரிய ஆளுமைகள் தானே தனி கட்சி தொடங்கி தமிழ் தேசியத்தை அப்படியே தூக்கி நிறுத்தியிருக்கலாமே. பெயின்டு கண்ட்ரக்டர் இப்ப கழகத்திற்கு நாதகவில் இருந்து உருவி கமிஷன் பார்ப்பது போல் தனது சொந்த கட்

  • Maruthankerny
    Maruthankerny

    பஸ்ஸே காலி ஆனாலும் ஓட்டுநர் இடத்தில இருந்து சீமான் எழுந்தால் வீழ்ச்சிதான். தமிழ் தேசிய அரசியலை பொறுத்தவரை தேர்தல் வெற்றி இரண்டாம் பாகம்தான். முதலாம் பாகம் மண்ணில் நிற்பதுதான். அதை சீமான் அடிக்கடி பேசு

  • கருத்துக்கள உறவுகள்

6 hours ago, goshan_che said:

நீங்கள் வெளியில் பிரபலமான இருவரை பற்றி மட்டுமே கதைக்கிறீர்கள். இன்னும் பெருந்தொகையானோர், மாவட்ட செயளாலர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எல்லாமும் கூட கட்சியை விட்டு விலகியுள்ளனர்.

உண்மையில் இது தான் நாதகவை அழிக்கப் போகின்றது. எந்த பதவியிலும் இல்லாத, சாதாரண இளைஞர்களை இழப்பது.

அதிமுகவின் வாக்கு வங்கி 20 வீதங்கள் ஆகிவிட்டது என்ற அறிக்கை, இது பொய்யாகக் கூட இருக்கலாம், இதையே சொல்லுகின்றது. சாதாரண தொண்டர்கள் கட்சியின் மேல் நம்பிக்கை இழப்பது எந்தக் கட்சியையும் மூழ்கடிக்கும்.

'எங்கேயய்யா எங்களின் ஆட்கள்...........' என்பது போல ராமதாஸ் சமீபத்தில் ஒரு பாமக செயலாளர்கள் கூட்டத்தில் கேட்டிருந்தார். அவர்கள் போய் விட்டார்கள்........................

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரசோதரன் said:

'எங்கேயய்யா எங்களின் ஆட்கள்...........' என்பது போல ராமதாஸ் சமீபத்தில் ஒரு பாமக செயலாளர்கள் கூட்டத்தில் கேட்டிருந்தார். அவர்கள் போய் விட்டார்கள்........................

ஆனால் நேற்று முந்தினம் கும்பகோண மண்டல மாநாட்டுக்கு ஏகபட்ட சனமாம் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

ஆனால் நேற்று முந்தினம் கும்பகோண மண்டல மாநாட்டுக்கு ஏகபட்ட சனமாம் என்கிறார்கள்.

செய்திகளில் காட்டினார்கள். நல்ல கூட்டம்.............. 'இது வெறும் டிரெய்லர், மே 11 இல் இருக்குது மெயின் பிக்சர்........' என்று அன்புமணி பேசினார்.

ஒரே அதிமுக ஆதரவுப் பேச்சாகவும் இருந்தது. கூட்டணிகள் மெதுவாக துலங்க ஆரம்பிக்கின்றன.......

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

செய்திகளில் காட்டினார்கள். நல்ல கூட்டம்.............. 'இது வெறும் டிரெய்லர், மே 11 இல் இருக்குது மெயின் பிக்சர்........' என்று அன்புமணி பேசினார்.

ஒரே அதிமுக ஆதரவுப் பேச்சாகவும் இருந்தது. கூட்டணிகள் மெதுவாக துலங்க ஆரம்பிக்கின்றன.......

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

பிரசாந்த் கிஷோர் சென்னை வந்து நேரே விஜை வீட்டுக்கு போனாராம். அங்கே ஆதவ், ஆனந்த், ஆரோக்கியசாமி (3ஆக்கள்😀) மந்திராலோசனைக்கு பின் நாளை 2ம் ஆண்டு நிறைவு விழாவில் கிஷோர் மேடை ஏறுகிறராம்.

முன்பெல்லாம் கிஷோர் திமுக மேடையில் ஏறவில்லை.

அதிமுக+தவெக+பாமக+தேமுதிக கூடினால் திமுக+ ஐ அசைத்துப்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஏன் இவர்களே பெரிய ஆளுமைகள் தானே தனி கட்சி தொடங்கி தமிழ் தேசியத்தை அப்படியே தூக்கி நிறுத்தியிருக்கலாமே. பெயின்டு கண்ட்ரக்டர் இப்ப கழகத்திற்கு நாதகவில் இருந்து உருவி கமிஷன் பார்ப்பது போல் தனது சொந்த கட்சிக்கு தரமான தலைகளை உருவி தமிழ் தேசியத்தை நிலை நாட்டி திராவிடத்திற்கு தர்ம அடி கொடுத்திருக்கலாம். அதற்கு பசை வேணும். இங்கே ஒரு தூய எண்ணமும் இல்லை, தமிழ் தேசிய சிந்தனையும் இல்லை. நாதக மேடையில் காட்டுக்கத்து கத்தி ஊடக வெளிச்சம் பெற்று தன்னை வெளிக்காட்டிக் கொண்டால் டீல் பேசி நல்ல கொழுத்த அமெளண்டை வாங்கிக்கொண்டு செட்டில் ஆக வேண்டியதுதான். தமிழ் தேசியம் என்பது இப்போது அது வேற வாய் இது நாற வாய் என்பதிலே தான் வந்து நிக்கிறது. தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் இதுதான் தற்போதைய தமிழ் தேசியம்.

கொடுமையிலும் விட‌ கொடுமை என்ன‌ என்றால் , மாவீர‌ர்க‌ள் மீது உறுதி மொழி ப‌ல‌ வாட்டி எடுத்து விட்டு , எம் இன‌த்தை போராத்தை அழிக்க‌ துணை போன‌ திமுக்கா காங்கிர‌ஸ் கூட‌ நின்று ராஜிவ் காந்தி போல் த‌ற்குறிக‌ள் குரைக்கும் போது என‌க்கு தோனுவ‌து , ப‌ண‌த்துக்காக‌ ராஜிவ் காந்தி க‌ருணாநிதி குடும்ப‌த்தின் ம‌ல‌** கூட‌ ம‌ன‌ப்பான்.....................

இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் என்ன‌ நினைக்குங்க‌ள் அங்கு நிக்கும் போது ஒரு பேச்சு இங்கு வ‌ந்த‌தும் இன்னொரு பேச்சு................வெற்றிக்கும‌ர‌ன் ப‌க்கா பிராடு அவ‌ர் செய்த‌ குள‌று ப‌டிக‌ள் அதிக‌ம் சீமான் அவ‌ரை எப்ப‌வோ நீக்கி இருக்க‌னும் ஆனால் சில‌ வ‌ருட‌ம் க‌ழிச்சு தான் நீக்கினார்

த‌மிழ் தேசிய‌ அமைப்பு என்று புது அமைப்பை தொட‌ங்கி ந‌ட‌த்த‌ முடியாம‌ , அப்ப‌டியே அதை மேல் முருக‌னிட‌ம் ஒப்ப‌டைத்து விட்டு அங்கு திமுக்காவின் ஆத‌ர‌வோடு கூவ‌ல் ச‌த்த‌ம் அதிக‌மாய் கேக்குது

என‌க்கு இருக்கும் ம‌ன‌ வேத‌னை மாவீர‌ர்க‌ள்மீது உறுதி மொழி எடுத்து விட்டு இதுக‌ள் செய்யும் குள‌றுப‌டிக‌ளை பார்க்க‌ தூக்கி போட்டு மிதிக்க‌னும் போல் தோன்றும்......................

அர‌சிய‌ல் த‌மிழ் நாட்டில் வியாபார‌மாய் வ‌ந்து விட்ட‌து போல் உண‌ர்வு...................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

உண்மையில் இது தான் நாதகவை அழிக்கப் போகின்றது. எந்த பதவியிலும் இல்லாத, சாதாரண இளைஞர்களை இழப்பது.

உங்கள் உண்மையான நாம் தமிழர் வளர்ச்சி பற்றிய கவலையில் 😅 நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

உங்கள் உண்மையான நாம் தமிழர் வளர்ச்சி பற்றிய கவலையில் 😅 நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்

நல்ல பகிடி, விசுகு ஐயா....................

கமலின் மநீம அழிந்தது பற்றி ஒரு எள்ளளவு கவலை வருகின்றது தான்................ அது அழியும் என்றே தெரிந்திருந்தாலும்.....................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

நல்ல பகிடி, விசுகு ஐயா....................

கமலின் மநீம அழிந்தது பற்றி ஒரு எள்ளளவு கவலை வருகின்றது தான்................ அது அழியும் என்றே தெரிந்திருந்தாலும்.....................

கமல் பற்றி ஒரு போதும் நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. (இது ரஜினி ரசிகன் என்பதால் அல்ல)

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

கமல் பற்றி ஒரு போதும் நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. (இது ரஜினி ரசிகன் என்பதால் அல்ல)

கமலுக்கு தனக்கு எவை தெரியாது என்றே தெரியாது................🤣.

நேற்று இங்கு Warren Buffett அவருடைய நிறுவன பங்குதாரர்களுக்கு வருட அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கடைசியில் இப்படி ஒன்றைச் சொல்லியிருந்தார்: என்னிடம் நல்ல விளையாட்டுத் திறமைகள் இல்லை. நல்ல குரல் எனக்கில்லை. மருத்துவம் சுத்தமாகத் தெரியாது. இப்படி எந்த விதமான தனித் திறமைகளும் என்னிடம் கிடையாது. அதனால் தான் இந்தப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டேன்..........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

அதெப்படி

நாம் தமிழர் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு இவ்வளவு டிமாண்ட்??

வளர்ப்பு நல்லதாக இருக்கும்

திறமை வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கும்

நாம் தமிழர் கட்சி உடைக்க வேண்டிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது

அன்றைய திராவிட கழகத்திலிருந்து பல அறிவாற்றல் கொண்டவர்கள் வெளியேறினார்கள்.வைகோ வெளியேறினார். நெடுஞ்செழியன் வெளியேறினார்.எம்ஜிஆர் வெளியேறினார். அவர்கள் வெளியேறினாலும் அக்கட்சியை யாராலும் அசைக்க முடியவில்லை.

திமுக எப்படி வலுவான கொள்கையோ....

அது போல் நாம் தமிழர் கட்சியும் வலுவான கோள்கையுடைய கட்சி. ஒரு காளியம்மாள் விலகினால் ஆயிரம் காளியம்மாக்கள் உருவாகுவர்.

ஆறு மாதத்திற்கு முதலே பிசுபிசுத்து போன காளியம்மாள் அண்மைய நாட்கள் வரைக்கும் கட்சி தாவல் சம்பந்தமாக யார் யாரோடெல்லாம் பேரம் பேசினாரோ யாருக்குத்தெரியும்.

கட்சியின் போக்கு பிடிக்கவில்லை என்றால் மாதக்கணக்கான தாமதம் ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைக்கும் காளியம்மா செய்த ஒரே "தீய செயல்" 😎 "சீமான் பிரபாகரனை 10 நிமிடங்கள் சந்தித்தார்" என்று உள் தகவலை பொதுவெளியில் போட்டுடைத்தது மட்டும் தான்!

யாரிடமாவது அந்தக் கணத்தில் சீமான் முகபாவனையைச் சிறைப்பிடித்த விம்பங்கள் இருந்தால் இங்கே தயவு செய்து இணைத்து விடுங்கள், திரிக்கு சம்பந்தம் இருப்பதால்!

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக யார் வெளியே போனாலும் சீமான் நாக்கை சுழட்டுவார்.

ஊழல் என்பார். கட்டுப்பாடு இல்லை என்பார். ஆனால் இந்த முறை ரொம்பவே அடக்கி வாசிக்கிறார்.

ஆரம்பத்தில் முதலாவது செய்தியாளர் சந்திப்பில் இருந்த “போனால் போகட்டும் போடா” வில் இருந்த வீரியம் கூட இன்று இல்லை.

தங்கச்சி எந்த கழகத்தில் இணையபோகிறார் என்பது தெரியும், தங்கச்சிக்கு வாழ்த்துகளை நான் கூறிவிட்டேன் என கிழக்கு சீமை விஜயகுமார் ரோலினை எடுத்து கொண்டார் 😂.

காரணங்கள் பல:

  1. காளியம்மாள் மீது எந்த குற்றசாட்டையும் வைக்க முடியவில்லை / அல்லது அதைவிட பெரிய சீமானை பற்றிய ஆதாரம் காளியம்மாள் வசமிருக்க கூடும்.

  2. தனது விலகலை காளியம்மாள் கையாண்ட விதம். சீமான் மீது எந்த தாக்குதலும் செய்யவில்லை. உடனடியாக வேறு கட்சிக்கு போகவும் இல்லை. சிலமாத காலமாக கட்சியில் இருந்து தான் ஒதுக்கபடுவதை ஏனைய தம்பிகளுக்கு நடைமுறையில் காட்டினார். இடையில் அவர் போட்ட googley யில் யாழ்கள தம்பிகள் இருவர் கூட இனி காளியம்மாள் போக மாட்டார் என நம்பி, என்னை அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டி, பின் மூக்கறுந்து போய் நின்றனர்.

    இதன் பின் அழைப்பிதழ் மூலம் ஒரு திடீர் மீடியா கவனத்தை ஏற்படுத்தி, பின்னர் 3 நாளின் பின் வாய்மூல அறிக்கை விட்டு அதன் பின் விலகலை அறிவித்து…கிட்டதட்ட 10 நாட்கள் மீடியா வெளிச்சம் தன் மீது படும்படி செய்துள்ளார். ஓடி கொண்டிருக்கும் 24/7 தமிழக மீடியாவில் இது சாதாரண விடயம் அல்ல. விஜையின் மாநாட்டு கதை கூட 3 நாளில் அடங்கி விட்டது.

    விரைவில் கழகம் ஒன்றில் இணையும் போதும் - அது ஒரு பேசு பொருளாகும், ஒரு நிகழ்வில் முக்கிய நிகழ்வாக நடக்கும் என்றே நினைக்கிறேன். இப்படி வழமையாக சீமானின் home turf ஆக இருக்கும் மீடியா வெளியில், சீமானை தாக்காமலே காளியம்மாள் இறங்கி அடிக்கிறார். வழமையாக இங்கே front foot இல் ஆடும் சீமான் வேறு வழியின்றி back foot இல் ஆடுகிறார்.

  3. காளியம்மாளுக்கு கட்சியில் இருக்கும் மவுசு - இதை பலர் குறை மதிப்பீடு செய்கிறார்கள். ஆனால் நாதகவின் “குலதெய்வம்” என சீமானே கூறியவர் அவர். உண்மையான கட்சியின் அதிகார மையம், சீமான், பாக்கியராசன் என இருந்தாலும் - தம்பிகளை பொறுத்தவரை அறிவிக்கபடாத இரெண்டாம் தலைமையாக இவரே தோன்றினார். கட்சி சாராத மக்கள் மத்தியிலும் சீமானுக்கு அடுத்த அறியப்பட்ட ஒருவர் இவர் மட்டுமே. மீதம் எல்லாம் தம்பிகள் தம்வட்டத்துக்குள் மாறி மாறி முதுகு சொறிந்து கொள்ளும் யூடியூப்பர்கள்தான். காளியம்மாள் விலகல் பல தம்பிகளை சோர்வாக்கியுள்ளது. அவர் தாக்காமல், சீமான் தாக்கினால் - இந்த சோர்வு காளியம்மாள் மீதான பரிவாக காலம் எடுக்காது.

  4. பெண் - இன்று வரைக்கும் தமிழ் நாட்டு அரசியலில் ஒரு பெண், ஒரு ஆணை இட்டு, கண்ணை பொதுவெளியில் கசக்கிய பின், அந்த ஆண் அரசியலில் சோபிப்பது கடினம். இதில் சீமானுக்கு ஏலவே ஒரு பெரிய கத்தி கழுத்துக்கு மேலாக தொங்குகிறது.

  5. தலித் - அதிக விளக்கம் தேவையில்லை.

இப்படியான காரணங்களால் காளியம்மாளை ஏனையோர் போல் பட்டம், பரிசம் கட்டி அனுப்பி வைக்க அண்ணால் முடியவில்லை.

கொப்பளிக்கும் வன்மத்தை மறைத்தபடி “சமாளிக்கிறார்”. ஆனால் எவ்வளவு காலம் இப்படி அவரால் வாயை அடக்க முடியும் என்பது கேள்வி குறியே. போதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சீமானின் முதல் எதிரி அவர் வாய் என்பது தெரிந்ததே.

இதுவரை கச்சிதமாக காய் நகர்திய காளியம்மாள் - திமுகவுக்கு போய் அனைத்தையும் சைவரால் பெருக்க கூடாது.

செய்யமாட்டார் என்றே நினைக்கிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ஙெறுப்பு அரசியலை மட்டுமே மக்களிடம் விதைத்து மக்களிடையே இனவெறியை தூண்டும் சீமான் கட்சி அழிந்து போவதே தமிழர்களுக்கு நல்லது. இனவெறியை தூண்டி மனித நாகரீகமற்ற காட்டு மிராண்டிகளாக, தனது அடியாட்களாக தம்பிகளை வளர்பபதும், அதை வைத்து தனது அயோக்கிய தரகு அரசியலை நடத்தி பணவேட்டையீடுவதே சீமானின் நோக்கம். தமிழ் தேசியம் என்பது தமிழ் நாட்டு மக்களுன் உரிமை சார்ந்தது. தமிழ

நாட்டு மக்களின் உரிமைகளை மறுக்கும் இந்திய அரசாங்கத்தை எதிர்தது நடத்தப்பட வேண்டியது.

தமிழ் நாட்டு மக்களின் உரிமை அரசியலை கட்டமைத்து, அதற்கு ஆதரவாக இந்திய அரசை எதிர்தது எந்த போராட்டத்தையும் சீமானின் நாய் தமிழர் கட்சி நடத்தவில்லை. கட்சி உருவானதில் இருந்து தமிழ் நாட்டு மக்கள் உரிமைக்காக இந்திய அரசை எதிர்தது எந்த பாரிய போராட்டங்களும் நடத்தவில்லை. இந்திய மத்திய அரசு என்றால் பம்முவதும், உள்ளூர் கூட்டங்களிலும் பத்திரிகையாளரிடம் போதையில் குரைப்பதுமே சீமானின் தரங்கெட்ட அரசியல்.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

காளியம்மாளுக்கான சீமானின் பதில்

https://www.facebook.com/share/r/1A41qL6VTT/

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

காளியம்மாளுக்கான சீமானின் பதில்

https://www.facebook.com/share/r/1A41qL6VTT/

கொஞ்சம் செவி மடுத்த போது "ஒழுக்கம்.." பற்றி ஏதோ போதனைகள் நடப்பது போலப் புரிந்தது? "சட்டத்தின் ஓட்டைகளூடாகப் புகுந்து தப்புவது" ஒழுக்கம் என்பதற்குள் அடங்காது போல😂?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

கொஞ்சம் செவி மடுத்த போது "ஒழுக்கம்.." பற்றி ஏதோ போதனைகள் நடப்பது போலப் புரிந்தது? "சட்டத்தின் ஓட்டைகளூடாகப் புகுந்து தப்புவது" ஒழுக்கம் என்பதற்குள் அடங்காது போல😂?

நீங்கள் தூய்மை வாதம் பார்க்கிறீர்கள்

நாம் தமிழர் கட்சியினரின் சில ஒழுங்கு நடவடிக்கைகள் சார்ந்து மட்டும் நல் அபிப்பிராயம் கொள்பவன் நான். உதாரணமாக அவர்கள் விழாக்கள் மற்றும் கட்சியின் கூட்டங்களின் பின்னர் செய்து செல்லும் துப்பரவு மற்றும் ஒழுங்கு.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

நீங்கள் தூய்மை வாதம் பார்க்கிறீர்கள்

நாம் தமிழர் கட்சியினரின் சில ஒழுங்கு நடவடிக்கைகள் சார்ந்து மட்டும் நல் அபிப்பிராயம் கொள்பவன் நான். உதாரணமாக அவர்கள் விழாக்கள் மற்றும் கட்சியின் கூட்டங்களின் பின்னர் செய்து செல்லும் துப்பரவு மற்றும் ஒழுங்கு.

சூழல் சுத்தம் மிக நல்ல விடயம், வரவேற்கத் தக்கது, தொடர வேண்டும்.

ஆனால் பெரிய விடயங்களில் ஒழுக்கமில்லாமல் சிறிய விடயங்களில் கவனம் செலுத்துவதால் பயன்கள் இல்லை. உதாரணமாக, தன் தம்பிகளுக்கு மரியாதையாகப் பேசவும், எழுதவும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்கம் வலியுறுத்தப் படுமா? இல்லை. ஏனெனில் கட்சியின் மூலதனமே அந்த றௌடியிசம் தான்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

சூழல் சுத்தம் மிக நல்ல விடயம், வரவேற்கத் தக்கது, தொடர வேண்டும்.

ஆனால் பெரிய விடயங்களில் ஒழுக்கமில்லாமல் சிறிய விடயங்களில் கவனம் செலுத்துவதால் பயன்கள் இல்லை. உதாரணமாக, தன் தம்பிகளுக்கு மரியாதையாகப் பேசவும், எழுதவும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்கம் வலியுறுத்தப் படுமா? இல்லை. ஏனெனில் கட்சியின் மூலதனமே அந்த றௌடியிசம் தான்!

சில அடிப்படை விஷயங்களில் இன்னும் முன்னேற வேண்டும். ஆனால் ஆட்சியில் இருந்த இருக்கும் கட்சியினரை சமாளிப்பது கடினமான பாதை தான்.

ஆனாலும் இளையவர்களுக்கு முன் நிலை, ஆண் பெண் வேட்பாளர் சமன்பாடு, பணம் கொடுக்காத வாக்குகள்(இதுவரை) என்பன நல்ல விடயம் தொடரவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.