Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Maithri-Ranil-Mahinda-Anura-1.jpg?resize

ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவு விபரங்கள் வெளியாகின!

முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர்  இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில்  மஹிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டு முதல்   2014 வரை – 3,572 மில்லியன் ரூபாயினையும் மைத்திரிபால சிறிசேன – 2015 ஆம் ஆண்டு முதல் 2019 வரை 384 மில்லியன் ரூபாயினையும், கோட்டாபய ராஜபக்ச – 2020 ஆம் ஆண்டு முதல்  2022 வரை 126 மில்லியன் ரூபாயினையும், ரணில் விக்ரமசிங்க – 2023 ஆம் ஆண்டு  முதல் 2024 ஆம் ஆண்டுக்கு இடையில் 533 மில்லியன் ரூபாயினையும், அநுர குமார திசாநாயக்க  கடந்த செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி 2025 வரை 1.8 மில்லியன் ரூபாயினையும் செலவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் கடந்த 2013 ஆம் ஆண்டில் அதிக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது  1,144 மில்லியன் ரூபாய் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Athavan News
No image preview

ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவ...

முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர்  இது தொடர்பான தகவல்களை வெளியி...
  • கருத்துக்கள உறவுகள்

மிதிபலகையில் தொங்கிச் சென்றாலும் குறைந்த செலவில் வெளிநாடு செல்ல முடியாது : ஜனாதிபதி அநுர எவ்வாறு 18 இலட்சம் ரூபா செலவில் 3 நாடுகளுக்கு சென்றார் - திலித் ஜயவீர

27 FEB, 2025 | 09:03 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 18 இலட்சம் ரூபா செலவில் மூன்று நாடுகளுக்கு எவ்வாறு சென்றார் என்பது புரியவில்லை. மிதிபலகையில் தொங்கிக்கொண்டு போனாலும் அவ்வாறு குறைந்த செலவில் வெளிநாட்டு பயணத்தை செய்ய முடியாது என சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இந்த வரவு செலவுத் திட்டம் எந்த திசையை நோக்கி இந்த நாட்டை கொண்டு போகின்றது என்று புரியவில்லை. எவ்வாறு இந்த வரவு செலவுத் திட்டம் முன்னிலையானது என்றும் புரியவில்லை. இந்த அரசாங்கம் சோஷலிச அரசாங்கம் என்று கிராமங்களில் உள்ளவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். 

கிராமங்களில் உள்ளவர்களை எவ்வவாறு மேலே கொண்டு வரப் போகின்றோம் என்றோ அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலோ குறிப்பிடப்படவில்லை. அவர்கள் முன்னேற்றமடைய வேண்டும். இளைஞர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும். இந்த வரவு செலவுத் திட்டத்தில் அந்த கனவுகளுக்கு உயிர் கிடைக்குமா? உள்ள கனவுகளையும் கலைக்கும் வகையிலேயே வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு சர்வதேச நாணய நிதியம் கழுத்தை நெரித்தாலும் அதற்கு இடமளிக்காது அப்பாவிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். இந்நிலையில் இந்த அரசாங்கம் பழைய அரசியலையே செய்கின்றது. இவர்களின் அரசியலுக்குள் மறைந்துள்ள அரசியலை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயன்படுத்தி கொண்டு செல்லப்படும் பயணத்தில் இந்த நாட்டை முன்னால் கொண்டு செல்ல முடியாது.

மக்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்த அரசாங்கத்துக்கு பெரும் பொறுப்புகள் உள்ளன. எதிர்பார்ப்புகளுடன் உள்ள மக்களை மகிழ்விக்கும் பொறுப்பு உள்ளது. அவர்களின் சம்பளம், வருமை நிலையில் உள்ளவர்கள், சுற்றுலாத்துறை ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் பாரிய மாற்றங்களை எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. உங்களின் அரசியல் இருப்புக்காக மட்டும் செயற்படுகின்றீர்கள். அரசியல் கலாச்சாரத்தை மாற்றுகின்றோம் என்று கூறி செலவுகளை குறைப்பதால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது நிதியை உருவாக்க வேண்டும். அதற்காக மனித மற்றும் பௌதீக வளங்களை பயன்படுத்த வேண்டும். அதற்காக மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

செலவுகள் மற்றும் வீணடிப்புகளை குறைப்பதால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்துவிட முடியாது. ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் அவரின் உரையில் ஜனாதிபதி 1.8 மில்லியன் ரூபாவில் மூன்று நாடுகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள. எப்படி அவர் சென்றார் என்று தெரியவில்லை. 

மிதிபலகையில் தொங்கிக்கொண்டு போனாலும் அந்த தொகையில் எவ்வாறு மூன்று நாடுகளுக்கு சென்றிருக்க முடியும் என்று புரியவில்லை. அவர் எப்படி குறைந்த செலவில் மூன்று நாடுகளுக்கு சென்றார் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன் என்றார். 

https://www.virakesari.lk/article/207865

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

மிதிபலகையில் தொங்கிச் சென்றாலும் குறைந்த செலவில் வெளிநாடு செல்ல முடியாது : ஜனாதிபதி அநுர எவ்வாறு 18 இலட்சம் ரூபா செலவில் 3 நாடுகளுக்கு சென்றார் - திலித் ஜயவீர

மன்னிக்கவும் ..எதிர்கட்சி என்ற காரணத்தினால் இவர் எமது தோழர் அனுரா மீது இப்படியான கேலி செய்வதை வன்மையாக கண்டிக்கின்றோம் ...

வஇமானத்தை ஒட்டி சென்றது நமது தோழர் தான் என்ற தகவல் தெரியாமல் புலம்புகின்றார் .

முப்படை தளபதி அவர்...ஆகவே பாதுகாப்பு வீரர்கள் தேவையில்லை

விமானம் அரசு உடமை நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திக்கு ஓட்டி செல்ல சகல உரிமையும் உண்டு(இராவணன் புஸ்பக விமானத்தை அவனே செலுத்தி சென்று சீதையை சிறிலங்காவுக்கு கடத்தி வந்தவன் ..ஆகவே இராவண பலகேயாவின் வாரிசு நம்ம தோழர்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

481043970_1049205887244383_8863597199744

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அநுரவின் வெளிநாட்டுப்பயண செலவுக்குறைப்பை கேள்விக்குள்ளாக்குபவர்கள் மஹிந்தவின் செலவினத்தை பேசுவதில்லை - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Published By: VISHNU

01 MAR, 2025 | 02:38 AM

image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்காக ஜனாதிபதி செயலகம் விமானச்சீட்டு உட்பட இதர தேவைகளுக்காக 12 இலட்சத்து 20 ஆயிரம்  ரூபாவை செலவு செய்தது. சீனா, துபாய் ஆகிய நாடுகளுக்காக 5 இலட்சத்து 8,8571 ரூபா செலவிப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்குமான விமான பயணச்சீட்டுக்கான செலவுகளை அந்நாடுகளே பொறுப்பெற்றன.

ஜனாதிபதியின் செலவு குறைப்பே கேள்விக்குள்ளாக்குபவர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் 3,572 மில்லியன் ரூபாவை கேள்விக்குள்ளாக்கவில்லை  என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணம் பற்றி தற்போது பேசப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இறுதி  பதவி காலத்தின் போது வெளிநாட்டு பயணங்களுக்காக 3,572 மில்லியன் ரூபா, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நான்காண்டு பதவி காலத்தின் போது வெளிநாட்டு பயணங்களுக்காக 384 மில்லியன் ரூபா, முன்னாள் ஜனாதிபதி  கோட்டபய ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்காக  126 மில்லியன் ரூபா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 533 மில்லியன்  ரூபா  என்ற அடிப்படையில் ஜனாதிபதி செயலகம் செலவழித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக இதுவரையில் 1.8 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி எவ்வாறு குறைந்த விலையில்  மூன்று நாடுகளுக்கு சென்றார், விமானத்தில் தொங்கிக் கொண்டு சென்றாரா என்று ஒருசிலர் கேள்விக்கேட்கிறார்கள்.

ஆனால் 3,572 மில்லியன் ரூபாய் செலவழித்த மஹிந்த ராஜபக்ஷ பற்றி எவரும் கேள்வியெழுப்பவில்லை. ஏனெனில் அனைவரும் நண்பர்களே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு முதலாவதாக அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்தார். விமான பயணச்சீட்டு உட்பட இதர செலவுகளுக்காக ஜனாதிபதி செயலகம் மொத்தமாக 12 இலட்சத்து  20 ஆயிரம் ரூபாவை செலவழித்துள்ளது.

அதேபோல் ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு சென்றார். விமானபயணச் சீட்டுக்கான செலவை சீன அரசாங்கமே பொறுப்பேற்றிருந்தது. ஜனாதிபதி செயலகம் 3 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாவை செலவழித்தது. அதேபோல் இந்த மாதம் துபாய்க்கு சென்றிருந்தார்.

அதற்கான விமான பயணச்சீட்டுக்கான செலவை துபாய் அரசாங்கம் ஏற்றிருந்தது. ஜனாதிபதி செயலகம்  2 இலட்சத்து 97,791 ரூபாவையே செலவு செய்தது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களை போன்று குடும்ப உறுப்பினர்களுடனும், பரிவாரங்களுடனும் வெளிநாட்டுக்கு செல்லவில்லை. இவ்வாறான  விஜயத்தின் போது நாள் கொடுப்பனவு என்றதொரு தொகை கிடைக்கப்பெறும். சீன விஜயத்தின்போது கிடைக்கப்பெற்ற 2,055 டொலரையும், துபாய் விஜயத்தின் போது கிடைக்கப்பெற்ற 960 டொலரையும் ஜனாதிபதி செயலகத்துக்கு ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு  கிடைக்கப்பெற்ற நாள் கொடுப்பனவு டொலரை ஜனாதிபதி செயலகத்துக்கு ஒப்படைத்தாரா என்பதை தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் ஆராய வேண்டும். மக்களின் வரிப்பணத்தை மோசடி செய்து, அட்டைப்பூச்சிகளை போன்று வாழ்ந்தவர்கள் ஜனாதிபதியின் செலவு குறைப்புக்களை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். இவர்களின் அரசியல் கலாசாரம்  அவ்வாறானதே என்றார்.

https://www.virakesari.lk/article/207962

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, ஏராளன் said:

images?q=tbn:ANd9GcRRlzSmpG0YjrOyJiW7-IC

அது வேறை வாய்... இது நாறல் வாய்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

481485714_1050524903779148_5304937598010

480930240_1050523140445991_8233511786170

482024685_1050524373779201_7635995186557

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.