Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மர்வின் சில்வா கைது

March 6, 2025 9:08 am

பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மர்வின் சில்வா கைது

களனிப் பகுதியில் காணி ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்து பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் பேரிலேயே முன்னாள் அமைச்சர் மர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

https://oruvan.com/marvin-silva-arrested-on-charges-of-money-laundering/

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-66.jpg?resize=750%2C375&ssl=

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நேற்றிரவு (5) சிஐடி அதிகாரிகள் குழுவினால் பரத்தரமுல்ல, பெலவத்தை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

களனி பிரதேசத்தில் காணி ஒன்று தொடர்பில் பொய்யான ஆவணங்களை தயாரித்து பணத்தை அபகரித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1424181

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவருக்கு விளக்கமறியல்

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மூவரும் இன்று வியாழக்கிழமை (06) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (05) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவருக்கு விளக்கமறியல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மேர்வினுடன் கைதுசெய்யப்பட்ட மேலும் ஆறு பேர்

களனி பிரதேச சபைக்குச் சொந்தமான 0.2137 ஹெக்டேயர் நிலத்திற்கு போலி ஆவணங்களைத் தயாரித்து ரூ. 75 மில்லியன் மோசடி செய்ததற்காக மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தெரிவித்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் டி சில்வா, பத்தரமுல்லையில் உள்ள பெலவத்தை பகுதியில் வைத்து புதன்கிழமை (05) இரவு கைது செய்யப்பட்டார்.

இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

https://thinakkural.lk/article/315765

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-66.jpg?resize=750%2C375&ssl=

மேர்வின் சில்வாவிற்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை மார்ச் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் இன்று (06) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை களனிப் பகுதியில் ஒரு காணி தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா நேற்றிரவு  கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1424337

  • கருத்துக்கள உறவுகள்

mervin_silva_mr.jpg?ssl=1 Mervin-Silva.jpg

PSX_20220818_115950.jpg?fit=1070%2C601&s

8918d6cc1ff760c684c73a5270048bc8b0574e88 2141062643_6d1a2c71f7_o.jpg

மேர்வின் சில்வா... மகிந்தவின் காலடியில் குந்தி இருந்தது, ரூபாவாகினி தொலைக்காட்சி நிலையத்திற்குள் சென்று குழப்பம் விளைவிக்க முற்பட்ட போது, அங்கிருந்தவர்களால் அடி கொடுத்து அனுப்பப் பட்டது, நீர்கொழும்பில் ஒரு அரச ஊழியரை மரத்தில் கட்டி வைத்து அடித்தது என்று... ஒரு தாதாவாக இருந்த ரௌடி. இவர்களை ஈவு இரக்கம் பார்க்காமல் அதி உச்ச தண்டனை கொடுத்து சிறையில் அடைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

482238596_1055310276633944_2523712107179

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-52.jpg?resize=750%2C375&ssl=

மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

போலி ஆவணங்களை தயாரித்து அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு விற்றதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சரும், மேலும் இருவரும் இன்று (03) காலை மஹர நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், வழக்கு விசாரணையின் போது, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படாமல் இருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உட்பட மூன்று நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நீதிமன்றத்தை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சிஐடியின் கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் ஏப்ரல் 09, 2025 அன்று திகதி நிர்ணயித்துள்ளது.

https://athavannews.com/2025/1427289

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.