Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌திய‌ம் பார்க்கும் போது கொல்க‌ட்டாவில் தான் பின‌ல் என்று போட்டு இருந்த‌வை இப்ப‌ நீக்கி விட்டின‌ம்........................................

முன்பு மும்பாயில் நடக்க இருந்ததாக நீங்கள் சொன்னதற்காகதான் மேலே எழுதினேன். முன்பு கொல்கத்தாவில்தான் நடக்க இருந்தது

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

கிரிக் இன்போவில் ஜ‌பிஎல் செய்திய‌ போடுவ‌தும் உட‌ன‌ நீக்குவ‌துமாய் இருக்கு....................இறுதி போட்டி ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல் அதில் இப்ப‌ இல்லை.....................அடிக்க‌டி மாற்றுகின‌ம்..................

Playoff போட்டிகள் எங்கு நடைபெறும் என்று பின்னர்தான் அறிவிப்பினம். சென்னைக்கு வந்தாலும் வரும். ஏனென்றால், இப்போ ஒரு போட்டிகளும் அங்கு நடக்கப் போவதில்லை. ஆகவே சென்னைக்குக் கொண்டுவாறது பொருத்தமாக இருக்கும். இது எனது ஊகம்தான்.

நான் இப்போ cricbuzz தளத்தையும் பார்க்கிறது. இப்போ எல்லாம் Cricinfo அடிக்கடி வேலை செய்யாமல் இறுகிப் போய் நிற்கும். கடுப்பாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கந்தப்பு said:

முன்பு மும்பாயில் நடக்க இருந்ததாக நீங்கள் சொன்னதற்காகதான் மேலே எழுதினேன். முன்பு கொல்கத்தாவில்தான் நடக்க இருந்தது

ஒரு ஜ‌பிஎல் தொட‌ரை இர‌ண்டு மாத‌த்துக்கு இழுத்த‌டிப்ப‌து உண்மையில் வெறுப்பு அடைய‌ செய்யும்

ஒரு நாளுக்கு இர‌ண்டு விளையாட்டு வைச்சாலே சீக்கிர‌ம் முடிந்துடும்........................பார்த்த‌ விள‌ம்ப‌ர‌த்தை ம‌க்க‌ள் எவ‌ள‌வு த‌ர‌ம் பார்க்க‌ போகின‌ம்

இங்லாந் நாட்டில் 8மைச்சை ஒரு நாளில் வைப்பின‌ம்....................இங்லாந்தில் கிரிக்கேட்டே 6மாத‌ம் தான் ந‌ட‌த்த‌ முடியும் , இந்த‌ மாத‌ க‌ட‌சியில் இருந்து அதிக‌ விளையாட்டுக்க‌ளை தொட‌ர்ந்து ந‌ட‌த்துவின‌ம்........................இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் முன்ன‌னி வெளி நாட்டு வீர‌ர்க‌ள் ஒரு சில‌ர் ஒவ்வொரு கில‌ப்புக்கும் விளையாடுவின‌ம்....................உண்மையை சொல்ல‌ப் போனால் ஜ‌பிஎல்லை விட‌ இங்லாந் உள்ளூர் 100ப‌ந்து விளையாட்டும்

20 ஓவ‌ர் விளையாட்டும் என‌க்கு அதிக‌ம் பிடிக்கும்..................100ப‌ந்து விளையாட்டு முத‌ல் ம‌க‌ளிருக்கு பிற‌க்கு ஆண்க‌ளுக்கு அதே மைதான‌த்தில் ந‌ட‌க்கும் ....................இங்லாந்தின் முன்ன‌னி விளையாட்டு ஊட‌க‌ம் ஸ்கை ஸ்போஸ் ச‌ண‌ல் நேர‌டி ஒளிப‌ர‌ப்பு செய்வின‌ம்

விளையாட்டை பார்க்க‌ ஜாலியா இருக்கும்🙏🥰......................

7 minutes ago, செம்பாட்டான் said:

Playoff போட்டிகள் எங்கு நடைபெறும் என்று பின்னர்தான் அறிவிப்பினம். சென்னைக்கு வந்தாலும் வரும். ஏனென்றால், இப்போ ஒரு போட்டிகளும் அங்கு நடக்கப் போவதில்லை. ஆகவே சென்னைக்குக் கொண்டுவாறது பொருத்தமாக இருக்கும். இது எனது ஊகம்தான்.

நான் இப்போ cricbuzz தளத்தையும் பார்க்கிறது. இப்போ எல்லாம் Cricinfo அடிக்கடி வேலை செய்யாமல் இறுகிப் போய் நிற்கும். கடுப்பாய் இருக்கும்.

நான் cricinfoவை த‌விற‌ வேறு ஒன்றும் பார்ப்ப‌து கிடையாது

இது தானே அவ‌ர்க‌ளின் உண்மையான‌ இணைய‌த் தள‌ம்................ கிரிக்கேட் செய்திக‌ள் முந்தி இதுக்கு தான் முத‌ல் வ‌ரும்......................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

ஒரு ஜ‌பிஎல் தொட‌ரை இர‌ண்டு மாத‌த்துக்கு இழுத்த‌டிப்ப‌து உண்மையில் வெறுப்பு அடைய‌ செய்யும்

ஒரு நாளுக்கு இர‌ண்டு விளையாட்டு வைச்சாலே சீக்கிர‌ம் முடிந்துடும்........................பார்த்த‌ விள‌ம்ப‌ர‌த்தை ம‌க்க‌ள் எவ‌ள‌வு த‌ர‌ம் பார்க்க‌ போகின‌ம்

இங்லாந் நாட்டில் 8மைச்சை ஒரு நாளில் வைப்பின‌ம்....................இங்லாந்தில் கிரிக்கேட்டே 6மாத‌ம் தான் ந‌ட‌த்த‌ முடியும் , இந்த‌ மாத‌ க‌ட‌சியில் இருந்து அதிக‌ விளையாட்டுக்க‌ளை தொட‌ர்ந்து ந‌ட‌த்துவின‌ம்........................இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் முன்ன‌னி வெளி நாட்டு வீர‌ர்க‌ள் ஒரு சில‌ர் ஒவ்வொரு கில‌ப்புக்கும் விளையாடுவின‌ம்....................உண்மையை சொல்ல‌ப் போனால் ஜ‌பிஎல்லை விட‌ இங்லாந் உள்ளூர் 100ப‌ந்து விளையாட்டும்

20 ஓவ‌ர் விளையாட்டும் என‌க்கு அதிக‌ம் பிடிக்கும்..................100ப‌ந்து விளையாட்டு முத‌ல் ம‌க‌ளிருக்கு பிற‌க்கு ஆண்க‌ளுக்கு அதே மைதான‌த்தில் ந‌ட‌க்கும் ....................இங்லாந்தின் முன்ன‌னி விளையாட்டு ஊட‌க‌ம் ஸ்கை ஸ்போஸ் ச‌ண‌ல் நேர‌டி ஒளிப‌ர‌ப்பு செய்வின‌ம்

விளையாட்டை பார்க்க‌ ஜாலியா இருக்கும்🙏🥰......................

நான் cricinfoவை த‌விற‌ வேறு ஒன்றும் பார்ப்ப‌து கிடையாது

இது தானே அவ‌ர்க‌ளின் உண்மையான‌ இணைய‌த் தள‌ம்................ கிரிக்கேட் செய்திக‌ள் முந்தி இதுக்கு தான் முத‌ல் வ‌ரும்......................

Cricinfo ஒரு தனியாரின் தளம். இதுக்கும் BCCI க்கும் ஒரு தொடர்புமில்லை. Samit Bal என்பவர்தான் அதன் தலைமை ஆசிரியர். முன்னர் விஸ்டன் வைத்திருந்தது. இப்போ ESPN வைத்திருக்கு. என்ன, கூட இந்திய துதிபாடும் ஒரு தளம்.

எனக்கு இங்கிலாந்தின் County Championship தான் கூடப் பிடிக்கும். டெஸ்ட் போட்டிகளின் ரசிகன் நான்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, வீரப் பையன்26 said:

ஒரு ஜ‌பிஎல் தொட‌ரை இர‌ண்டு மாத‌த்துக்கு இழுத்த‌டிப்ப‌து உண்மையில் வெறுப்பு அடைய‌ செய்யும்

ஒரு நாளுக்கு இர‌ண்டு விளையாட்டு வைச்சாலே சீக்கிர‌ம் முடிந்துடும்........................பார்த்த‌ விள‌ம்ப‌ர‌த்தை ம‌க்க‌ள் எவ‌ள‌வு த‌ர‌ம் பார்க்க‌ போகின‌ம்

நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யும் இந்தியா நிறுவனங்களின் வருமானத்திலும் போட்டிகள் நடக்கும் நேரம் தங்கி இருக்கிறது. சன் , விஜய் தொலைக்காட்சிகள் மக்கள் அதிகம் பார்க்கும் நாடகங்களை அவர்களின் Prime time இல் ஒளிபரப்பு செய்வார்கள். TRP rating அடைப்படையில் அதிகளவு பார்ப்பதினால் விளம்பரதாரர்களிடம் அதிக பணத்தை வசூல் செய்வார்கள்.இதே போல ஞாயிறுகிழமைகளில் பெரும்பாலோருக்கு வேலை இல்லாத நாட்கள். அதிக மக்கள் தொலைக்காட்சியில் இந்தியாவில் ஐபிஎல் பார்ப்பார்கள். இதனால் ஞாயிற்றுக்கிழமையில் 2 போட்டிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, செம்பாட்டான் said:

Cricinfo ஒரு தனியாரின் தளம். இதுக்கும் BCCI க்கும் ஒரு தொடர்புமில்லை. Samit Bal என்பவர்தான் அதன் தலைமை ஆசிரியர். முன்னர் விஸ்டன் வைத்திருந்தது. இப்போ ESPN வைத்திருக்கு. என்ன, கூட இந்திய துதிபாடும் ஒரு தளம்.

எனக்கு இங்கிலாந்தின் County Championship தான் கூடப் பிடிக்கும். டெஸ்ட் போட்டிகளின் ரசிகன் நான்.

1999 உல‌க‌ கோப்பையின் போது அதிக‌ ம‌க்க‌ள் பார்வையிட்ட‌ முத‌ல் கிரிக்கேட் இணைய‌த்த‌ள‌ம் Cricinfo

ப‌ல‌ அமெரிக்கா விளையாட்டு த‌ள‌த்தையும் முத‌ல் ESPN என்று போட்டு தான் இணைய‌த்தின் பெய‌ரை போடின‌ம்.................இப்ப‌ Championship போட்டிக‌ள் இடை விடாம‌ ந‌ட‌க்குது பார்த்து ர‌சிக்க‌ வேண்டிய‌து தானே......................என‌க்கும் டெஸ்ட் விளையாட்டுக்கும் ஆகாது

மேல் ஓட்ட‌மாய் ஸ்கோர‌ பார்ப‌தோடு ச‌ரி......................

20ஓவ‌ர் கிரிக்கேட்டை இங்லாந் நாட்ட‌வ‌ர்க‌ள் 2004ம் ஆண்டு அறிமுக‌ம் செய்து வைத்து இருக்காட்டி இப்ப‌வும் கிரிக்கேட் சிறு வ‌ட்ட‌த்துக்கை தான் இருந்து இருக்கும் ....................10ஓவ‌ர் விளையாட்டை தான் ப‌ல‌ ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள் விளையாடுகின‌ம்............................20ஓவ‌ர் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் கிரிக்கேட்டை ப‌ல‌ நாடுக‌ள் விளையாட‌ முன் வ‌ந்த‌வை

அப்கானிஸ்தான்

ஓமான்

நேபால்

கொங் கொங்

எம‌ரேட்

அமெரிக்கா

ந‌ம்பீயா

க‌ன‌டா

சிங்க‌ப்பூர்

உக‌ன்டா

பாபுவா நீயு கினுநியா

போன்ற‌ நாடுக‌ள் 20வ‌ருட‌த்துக்கு முத‌ல் கிரிக்கேட்டை பெரிசா எட்டியும் பார்க்காத‌ நாடுக‌ள்

இப்ப‌ கிரிக்கேட்டில் இந்த‌ நாடுக‌ளுக்குள் க‌டும் போட்டி உல‌க‌ கோப்பைக்கு த‌குதி பெற‌ ந‌ட‌க்கும் போட்டிக‌ளில்........................

  • கருத்துக்கள உறவுகள்

T20 போட்டிகளை முதலில் உருவாக்கினது மறைந்த முன்னால் நியுசிலாந்து தலைவர் மார்டின் குரோ. அவர்தான் இங்கிலாந்து வாரியத்துடன் சேர்ந்து விளையாட்டு முறைமையை உருவாக்கினார். முதலில் இது கேளிக்கையாட்டம் என்ற வகையில்தான் ஆடப்பட்டது. முதலாவது சர்வதேசப் போட்டி அவஸ்திரேலியாவுக்கும் நியுசிலாந்திற்கும் இடையே நடைபெற்றது. வீரர்கள் எல்லாம் 80 ஆண்டு உடைகளுடன் ஒரு முசுப்பாத்தியான போட்டியாகத்தான் ஆடினார்கள். நியுசிலாந்து வீரர்கள் இப்படித்தான் வந்தார்கள். தலையில விக் வைத்து...

Screenshot-20250512-184048-Chrome.jpg

இந்தியாவிற்கு இதில் பெரிதாக ஆர்வமில்லை. பெருந்தலைகள் எல்லாம் பெரிதாக ஆடவிரும்பவில்லை. முதலாவது உலகக் கிண்ணத்துக்கு, 2007ல், பெருந்தலைகள் ஒருவரும் போகவில்லை. தோனி தலைமையில் இளவீரர்களைக் கொண்ட அணியே சென்றது (ரோகித் எல்லாம் அப்போ வளர்ந்துவரும் இளம் வீரர்). இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றதிலிருந்து T20யின் எழுச்சி ஆரம்பித்தது. IPL பிறந்தது. மிச்சமெல்லாம்தான் இப்போ நீங்கள் பார்ப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, செம்பாட்டான் said:

இந்த‌ப் போட்டி 2006க‌ளில் ந‌ட‌ந்த‌து என‌க்கு இப்ப‌வும் நினைவு இருக்கு......................நியுசிலாந் வீர‌ர் ஆலோச‌னை சொன்னாலும் அதை ந‌டைமுறை ப‌டுத்தின‌து இங்லாந் தான்.................முத்தையா முர‌ளித‌ர‌ன் 2004 Lancshire கில‌ப்புக்கு விளையாடின‌வ‌ர்...................

இந்தியாவுக்கு என்ன‌ தான் உருப்ப‌டியாய் தெரியும்

அவுஸ்ரேலியா முன்னாள் க‌ப்ட‌ன் 2004ம் ஆண்டு கன‌டா கூட‌ ஒரு போட்டி விளையாடின‌வை , அவுஸ்ரேலியா வென்ற‌ பிற‌க்கு ரிக்கி பொயின்டிங் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டியில் க‌ன‌டா போன்ர‌ நாடுக‌ளுட‌ன் கிரிக்கேட் விளையாடுவ‌து வெக்க‌க் கேடு என்று வார்த்தைய‌ விட்ட‌வ‌ர்........................

  • கருத்துக்கள உறவுகள்

495576338_556310687544918_65107251439973

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, செம்பாட்டான் said:

T20 போட்டிகளை முதலில் உருவாக்கினது மறைந்த முன்னால் நியுசிலாந்து தலைவர் மார்டின் குரோ. அவர்தான் இங்கிலாந்து வாரியத்துடன் சேர்ந்து விளையாட்டு முறைமையை உருவாக்கினார். முதலில் இது கேளிக்கையாட்டம் என்ற வகையில்தான் ஆடப்பட்டது. முதலாவது சர்வதேசப் போட்டி அவஸ்திரேலியாவுக்கும் நியுசிலாந்திற்கும் இடையே நடைபெற்றது. வீரர்கள் எல்லாம் 80 ஆண்டு உடைகளுடன் ஒரு முசுப்பாத்தியான போட்டியாகத்தான் ஆடினார்கள். நியுசிலாந்து வீரர்கள் இப்படித்தான் வந்தார்கள். தலையில விக் வைத்து...

Screenshot-20250512-184048-Chrome.jpg

இந்தியாவிற்கு இதில் பெரிதாக ஆர்வமில்லை. பெருந்தலைகள் எல்லாம் பெரிதாக ஆடவிரும்பவில்லை. முதலாவது உலகக் கிண்ணத்துக்கு, 2007ல், பெருந்தலைகள் ஒருவரும் போகவில்லை. தோனி தலைமையில் இளவீரர்களைக் கொண்ட அணியே சென்றது (ரோகித் எல்லாம் அப்போ வளர்ந்துவரும் இளம் வீரர்). இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றதிலிருந்து T20யின் எழுச்சி ஆரம்பித்தது. IPL பிறந்தது. மிச்சமெல்லாம்தான் இப்போ நீங்கள் பார்ப்பது.

கென்னியா அணி 2003 உல‌க‌ கோப்பையில் இந்தியா கூட‌ சிமி பின‌லில் விளையாடின‌து

இப்ப‌ இந்த‌ அணி கிரிக்கேட்டில் கீழ் ம‌ட்ட‌த்துக்கு போன‌துக்கு யார் கார‌ண‌ம் தெரியுமா...................இவ‌ர்க‌ள் க‌ட‌சியா 2011ம் ஆண்டு உல‌க‌ கோப்பைக்கு பிற‌க்கு ச‌ர்வ‌தே உல‌க‌ கோப்பை போட்டிக‌ளில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை

த‌குதி சுற்று போட்டிக‌ளில் நேற்று வ‌ந்த‌ அணிக‌ளிட‌ம் தோக்கின‌ம்

அப்கானிஸ்தான் அணியின் வ‌ள‌ர்ச்சி , கென்னியாவின் வீழ்ச்சி கிரிக்கேட்டில்...............................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான இடம் சென்னை என்று சொல்லிப்போட்டு ஒரு மட்சும் அங்கே வைக்கவில்லை!!😕

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

இப்ப‌ இந்த‌ அணி கிரிக்கேட்டில் கீழ் ம‌ட்ட‌த்துக்கு போன‌துக்கு யார் கார‌ண‌ம் தெரியுமா...................இவ‌ர்க‌ள் க‌ட‌சியா 2011ம் ஆண்டு உல‌க‌ கோப்பைக்கு பிற‌க்கு ச‌ர்வ‌தே உல‌க‌ கோப்பை போட்டிக‌ளில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை

நீங்கள் என்ன பதில் வைத்திருக்கீர்கள் என்டு ஊகிக்க முடியுது.

அவர்கள் தலைவர் ஒடும்பெ, போட்டிகளை விட்டுக் கொடுக்கும் ஊழளில் சிக்கிய பிறகு, அங்கு எல்லாமே மாறிவிட்டது. அவர்களிடம் பணமே இல்லை. ICC கொடுத்த பணத்தையும் அரசியல்வாதிகள் எடுத்தால், எப்படி சம்பளம் கொடுப்பது. எப்படி வீரர்களை உருவாக்குவது. அப்போது விளையாடிய நிறையப் பேர், போட்டியில் உள்ள ஆர்வத்தினால்தான் அணியிலேயே இருந்தார்கள். விளையாடிப் போட்டு, சந்தையில தக்காளி விற்கப் போய்விடுவார்கள். சுழல் பந்து வீச்சாளர் ஒபுயா அப்படித்தான் இருந்தார்.

மூன்றாம் உலக நாடுகளில் உள்ள எல்லா பிரச்சினைகளும் அங்கும் உண்டு. அந்த நாட்டில் எல்லா அணி விளையாட்டுகளிலும் ஊழல். உதைபந்து, கரப்பந்து, கிரிக்கட்..... இப்பிடியே அடுக்கிக் கொண்டு போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, செம்பாட்டான் said:

2013ம் ஆண்டு இந்திய‌ வீர‌ர்க‌ள் கூட‌ ஜ‌பிஎல் சூதாட்ட‌த்தில் பிடி ப‌ட்ட‌வை...............

கென்னிய‌ அணி ப‌ல‌ பெரிய‌ அணிக‌ளை வென்று ப‌ல‌மான‌ அணியா இருந்த‌து 2003 அந்த‌ கால‌ப் ப‌குதியில்

இடையில் என்ன‌ ஆன‌து என்று என‌க்கு ச‌த்திய‌மாய் தெரியாது

நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி என்று ப‌டுது..................கென்னியா அணிய‌ மீண்டும் ப‌ல‌மான‌ அணியா உருவாக்க‌ கென்னியா கிரிக்கேட் வாரியம் எடுத்த‌ முய‌ற்ச்சி தோல்வியில் முடிந்த‌து ......................உக‌ன்டா அணி இடையில் வ‌ந்த‌ அணி ஆபிரிக்காவில் தென் ஆபிரிக்காவை த‌விர்த்து ம‌ற்ற‌ அணிக‌ளை உக‌ன்டா வென்று இருக்கு....................கென்னியா அணி இப்போது ம‌ற்ற‌ சின்ன‌ அணிக‌ளிட‌ம் தோல்வி அடையின‌ம்☹️................................

  • கருத்துக்கள உறவுகள்

ச‌னிக் கிழ‌மை மீண்டும் தொட‌ங்குது ஜ‌பிஎல்

ஞாயிற்றுக் கிழ‌மை 2விளையாட்டு ந‌ட‌த்துகின‌ம்...........................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான இடம் சென்னை என்று சொல்லிப்போட்டு ஒரு மட்சும் அங்கே வைக்கவில்லை!!😕

இந்திய‌ர்க‌ள் என்றால் உருட்டு பிர‌ட்டு தான்..................இது என்ன‌ புதுசா.......................பாக்கிஸ்தான் இந்தியாவின் போர் விமான‌ங்க‌ளை ஏவுக‌னை மூல‌ம் வீழ்த்தி விட்டான்....................இந்தியா ஊட‌க‌ங்க‌ள் பாக்கிஸ்தானுக்கு ந‌ல்ல‌ அடி அகோர‌ அடி , இப்ப‌டி சொல்லியே ஏழை எளிய‌ இந்திய‌ ம‌க்க‌ளை ஆளும் அர‌சு ஏமாற்றுது ந‌ண்பா......................

  • கருத்துக்கள உறவுகள்

496005687_122220463220082698_37744109999

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

496005687_122220463220082698_37744109999

இதுக்கு இன்னும் 4மாத‌ம் இருக்கு த‌லைவ‌ரே.....................

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, suvy said:

496005687_122220463220082698_37744109999

எந்த‌ போட்டி என்றாலும் 15வீர‌ர்க‌ளை தெரிவு செய்ய‌னும்

இதில் வெறும் 11வீர‌ர்க‌ள் ம‌ட்டுமே , இதில் இருப்ப‌வ‌ர்க‌ள் சில‌ர் நீக்க‌ப் ப‌ட‌லாம் இன்னுன் 4வீர‌ர்க‌ள் இணைக்க‌ப் ப‌ட‌னும்.........................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

496005687_122220463220082698_37744109999

யாரோ ஒருவரின் வேலை. இதில் வைபாவ் சூரியவன்ஷி வயது மிகவும் குறைவு. அவர் இந்தியா அணியில் இடம் பிடிக்க சில காலங்கள் தேவை

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வீரப் பையன்26 said:

கென்னியா அணி 2003 உல‌க‌ கோப்பையில் இந்தியா கூட‌ சிமி பின‌லில் விளையாடின‌து

கென்யா இலங்கை, வங்காளதேசம், சிம்பாவே , கனடா போன்ற நாடுகளை மட்டுமே வென்றது. கென்யா அரை இறுதி போட்டிக்கு சென்றதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நியூசிலாந்து அணி கென்யாவில் நடந்த கென்யாவுக்கு எதிரான போட்டியினை பாதுகாப்பு காரணமாக புறக்கணித்து விளையாடாத காரணம். நியூசிலாந்து விளையாடாததினால் கென்யா 4 புள்ளிகள் பெற்றது. அத்துடன் இங்கிலாந்து சிம்பாவேயில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி சிம்பாவேக்கு எதிரான போட்டியை முகாம்பே அரசின் இனவெறி காரணமாக புறக்கணித்தது. இதனால் சிம்பாவே 4 புள்ளிகள் பெற்று சூப்பர் 6 க்கு தெரிவானது . இப்போட்டியில் இங்கிலாந்து கலந்து வெற்றி பெற்றால் இங்கிலாந்து சூப்பர் 6 க்கு சென்றிருக்கும். சூப்பர் 6 இல் இங்கிலாந்தினை கென்யா வென்று இருக்குமா என்பது கேள்விக்குறி. இலங்கை சூப்பர் 6 இற்கு செல்ல நல்ல ஓட்ட விகிதம் தேவை என்பதினால் தான் ( இலங்கை இருந்த குழுவில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியா தீவு போன்ற பலமான நாடுகளும் கனடா, வங்காளதேசம், கென்யா ஆகியவையும் இருந்தன) கனடா, வங்கதேசம் , கென்யா போன்ற நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் ஓட்டவீதத்தினை அதிகரிக்கலாம் என முடிவெடுத்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்றால் பந்து வீச்சினை முதலில் எடுத்து எதிரணியை குறைந்த ஓட்டத்தில் ஆட்டமிழக்க செய்து குறைந்த ஓவர்களில் வெற்றி பெற்றால் ஒட்டவிகிதத்தினை கூட்டலாம் என இலங்கை அணி முடிவெடுத்தது. 3 போட்டிகளிலும் இலங்கை அணியே நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது. வங்கதேசம் 124 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை 21.1 ஓவர்களில் வெற்றி பெற்றது. கனடா 36 ஓட்டங்களுக்கு வெற்றி பெற்றது. 4.4 ஓவர்களில் இலங்கை வெற்றி பெற்றது . கென்யாவுக்கு எதிரான போட்டியில் இரண்டாவதாக துடுப்பாடும் அணி வெல்வது கடினம் என வர்ணனையாளர்கள் சொல்லி இருந்தும் இலங்கை முதலில் பந்து வீச்சினை தெரிவு செய்தது. சூப்பர் 6 இற்கு இலங்கை, நியூசிலாந்து, கென்யா இக்குழுவில் இருந்து தெரிவானது. இலங்கை 4 புள்ளிகளுடனும், கென்யா 8 புள்ளிகளுடனும் நியூசிலாந்து புள்ளிகளுடன் தெரிவானது. (ஏற்கனவே ஆரம்ப சுற்றில் கென்யா, இலங்கை, நியூசிலாந்துக்கு இடையிலான போட்டிகளின் புள்ளிகள் சூப்பர் 6 இல் சேர்க்கப்பட்டது. இந்நாடுகளுக்கு கிடையில் சூப்பர் 6 இல் போட்டிகள் நடைபெறவில்லை).சூப்பர் 6 இல் சிம்பாவே அணியை மட்டுமே வென்று அரை இறுதிக்கு தெரிவானது கென்யா

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கந்தப்பு said:

யாரோ ஒருவரின் வேலை. இதில் வைபாவ் சூரியவன்ஷி வயது மிகவும் குறைவு. அவர் இந்தியா அணியில் இடம் பிடிக்க சில காலங்கள் தேவை

யூடுப்பிலும் முக‌ நூலிலும் இப்ப‌டி ப‌ர‌ப்ப‌ சில‌ கூட்ட‌ம் இருக்கு

சுவி ஜ‌யாவும் உண்மையென‌ ந‌ம்பி இணைத்து விட்டார்...................இல‌ங்கை வீர‌ர் ப‌த்திரான‌ அவ‌ரும் ஆசிய‌ கோப்பையில் விளையாடுவார் என்று இப்ப‌டி ப‌ட‌ம் செய்து வெளியிட‌த் தொட‌ங்கிட்டின‌ம்

சென்னை ப‌த்திரான‌வை அடுத்த‌ சீச‌னில் க‌ல‌ட்டி விடுவ‌து சென்னைக்கு ந‌ல்ல‌ம்..................சென்னையின் சில‌ தோல்விக்கு இவ‌ரும் கார‌ன‌ம் , சென்னை க‌டசியா ப‌ஞ்சாப் கூட‌ விளையாடின‌ போது இவ‌ரின் ப‌ந்துக்கு ந‌ல்ல‌ அடி.........................

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

யூடுப்பிலும் முக‌ நூலிலும் இப்ப‌டி ப‌ர‌ப்ப‌ சில‌ கூட்ட‌ம் இருக்கு

சுவி ஜ‌யாவும் உண்மையென‌ ந‌ம்பி இணைத்து விட்டார்...................இல‌ங்கை வீர‌ர் ப‌த்திரான‌ அவ‌ரும் ஆசிய‌ கோப்பையில் விளையாடுவார் என்று இப்ப‌டி ப‌ட‌ம் செய்து வெளியிட‌த் தொட‌ங்கிட்டின‌ம்

நானும் உண்மையென நினைக்கவில்லை . ........ இங்கு எத்தனைபேர் இது பொய் என்று கண்டுபிடிக்கினம் என்பதை கண்டுபிடிக்கப் பதிந்தேன் ......... நீங்களும் கந்தப்புவும் வெரி ஸ்மார்ட் ........ பாராட்டுக்கள் ........ ! 😂

happy-smile.gif

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நானும் உண்மையென நினைக்கவில்லை . ........ இங்கு எத்தனைபேர் இது பொய் என்று கண்டுபிடிக்கினம் என்பதை கண்டுபிடிக்கப் பதிந்தேன் ......... நீங்களும் கந்தப்புவும் வெரி ஸ்மார்ட் ........ பாராட்டுக்கள் ........ ! 😂

happy-smile.gif

த‌லைவ‌ரே நீங்க‌ள் க‌ட்டி அனைப்ப‌து என்னைய்யா அல்ல‌து க‌ந்த‌ப்பு அண்ணாவையா லொள்😁..........................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

சென்னை ப‌த்திரான‌வை அடுத்த‌ சீச‌னில் க‌ல‌ட்டி விடுவ‌து சென்னைக்கு ந‌ல்ல‌ம்..................சென்னையின் சில‌ தோல்விக்கு இவ‌ரும் கார‌ன‌ம் , சென்னை க‌டசியா ப‌ஞ்சாப் கூட‌ விளையாடின‌ போது இவ‌ரின் ப‌ந்துக்கு ந‌ல்ல‌ அடி.........................

CSK பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் கூறுகையில், “தனது பந்துவீச்சை எதிரிகள் தற்போது நன்கு புரிந்து கொண்டிருப்பதால், மாதீஷ பதிரானா தன்னுடைய யுத்தவழிகளை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் கூறினார். முக்கியமான ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் பதிரானாவை மிகவும் நுட்பமாக எதிர்கொண்டு விளையாடுகிறார்கள் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். அதன் விளைவாக, தனது செயல்திறனை மேம்படுத்தும் வகையில் தந்திர மாற்றங்கள் தேவைப்படுகின்றன என அவர் பரிந்துரை செய்தார். பதிரானாவின் அண்மைய பந்துவீச்சு முறைமாற்றங்களும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என சைமன்ஸ் குறிப்பிடினார். இருப்பினும், அவர் மேம்படும் திறன் இருக்கின்றது என்பதில் நம்பிக்கை வைத்திருப்பதாக” அவர் தெரிவித்தார்.

கடைசிப் போட்டியில் பத்திரானா ஒரு வைட் போல் ஒன்றும் வழங்க வில்லை. அதற்கு முதல் நடந்த பங்களூருக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுக்கள் எடுத்திருந்தார். இனி வரும் 2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினால் பத்திரானவை நீக்கமட்டார்கள் என நினைக்கிறேன். எனெனில் 2026 ஐபிஎல்லுக் மினி ஏலம் தான் நடத்துவார்கள். சென்னை ஒரு சிலரை மட்டுமே அணியில் இருந்து நீக்குவார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நானும் உண்மையென நினைக்கவில்லை . ........ இங்கு எத்தனைபேர் இது பொய் என்று கண்டுபிடிக்கினம் என்பதை கண்டுபிடிக்கப் பதிந்தேன் ......... நீங்களும் கந்தப்புவும் வெரி ஸ்மார்ட் ........ பாராட்டுக்கள் ........ ! 😂

happy-smile.gif

சுவியா கொக்கா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.