Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

நாளைக்கு இர‌ண்டு போட்டி👍...........................

போட்டி விபரங்கள் காலையில்தான் பதியமுடியும்!

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இதென்ன இந்த ஐ பி எல்லை இன்னும் வச்சு ஜவ்வு மாரி இழுத்துகொண்டு நிக்கிறியள்🤣.

அங்கால ஒரு இரெண்டு நிமிச போட்டி தொடங்கீட்டு…. ஓடுங்கோ…ஓடுங்கோ🤣

அதேதான். முடிக்கிறாங்கள் இல்லையே. இரண்டு இரண்டு போட்டியா வைத்தா ஒரு கிழமையிலேயே முடிச்சிருக்கலாம். அவங்கள் அதை மாற்றுவதாகவே இல்லை. இரண்டு போட்டி வைத்தாலும் வருமானத்தில் ஒரு குறைவும் வராது. வேற என்ன காரணம் என்று புரியவில்லை.

அங்கால திறந்த கடை எப்பிடி ஓடுது. வந்து பாக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, செம்பாட்டான் said:

அதேதான். முடிக்கிறாங்கள் இல்லையே. இரண்டு இரண்டு போட்டியா வைத்தா ஒரு கிழமையிலேயே முடிச்சிருக்கலாம். அவங்கள் அதை மாற்றுவதாகவே இல்லை. இரண்டு போட்டி வைத்தாலும் வருமானத்தில் ஒரு குறைவும் வராது. வேற என்ன காரணம் என்று புரியவில்லை.

அங்கால திறந்த கடை எப்பிடி ஓடுது. வந்து பாக்கிறன்.

பணம் மற்றும் வாணிக விருப்பங்கள்:
ஐபிஎல் (IPL) தொடரின் நீளத்தை நிர்ணயிக்க வணிக விருப்பங்களும் காரணமாக உள்ளன; இதில் ஸ்பான்ஸர்கள் மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் அடங்கும், அவை அதிக வருமானத்தை பெற்று கொள்ள நீண்ட கால போட்டித் தொடரை முன்னுரிமை அளிக்கக்கூடும்.

Money and Commercial Interests:

The IPL's length is also driven by commercial interests, including sponsorships and television rights, which can prioritize longer tournaments for increased revenue

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கந்தப்பு said:

நானும் அதையேதான் நினைத்தேன். கனநாளைக்கு அவர்களைப்பத்தி கதைக்க வேணுமாம். நம்மளப் பத்தி யார் யோசிக்கிறா. என்ன கவலை என்றால் நாடுகளுக்கு இடையிலான போட்டிகள் குறைந்து கொண்டே போகுது. உலகக் கிண்ணம் தான் பிரதானமாக விளையாடப் போகினம்.

அதிக அணிகளைக் கொண்டு வாறது என்றால், இந்த முறையை மாத்தித்தான் ஆகவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

நானும் அதையேதான் நினைத்தேன். கனநாளைக்கு அவர்களைப்பத்தி கதைக்க வேணுமாம். நம்மளப் பத்தி யார் யோசிக்கிறா. என்ன கவலை என்றால் நாடுகளுக்கு இடையிலான போட்டிகள் குறைந்து கொண்டே போகுது. உலகக் கிண்ணம் தான் பிரதானமாக விளையாடப் போகினம்.

அதிக அணிகளைக் கொண்டு வாறது என்றால், இந்த முறையை மாத்தித்தான் ஆகவேணும்.

இவ்வருடம் முதலில் 84 போட்டிகள் வைக்கத்தான் முடிவெடுத்தார்கள். 84 போட்டிகள் வைத்தால் இன்னும் 8,9 நாட்கள் விளையாட வேண்டும். அப்படியானால் உலக டெஸ்ட் இறுதி போட்டியில் விளையாடவுள்ள இந்தியா வீரர்களுக்கு தேவையான ஓய்வு நேரங்கள் காணாது. இதனால் 74 போட்டிகளுடன் நடத்த முடிவெடுத்திருந்தார்கள் என சில மாதங்களுக்கு முன்பு ஒரு இணையத்தில் நான் வாசித்தேன். அப்போது இந்தியா 2023 -2025 உலக கோப்பை டெஸ்ட் தொடரில் முதலாம் இடத்தில் இருந்தது. ஆனால் அவர்களே எதிர்பார்க்காத நிலையில் நியூசிலாந்து அணியிடம் சொந்த மண்ணில் 3-0 என படுதோல்வியை அடைந்தது இந்தியா. அவுஸ்திரேலியாவிடமும் தோல்வி அடைந்து இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இந்தியா. 2028 இல் 94 போட்டிகள் என்று சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

நானும் அந்த 94 போட்டிகள் பற்றி முன்னரே பதிந்திருந்தேன். அப்போது இரண்டு போட்டிகள் நடத்தியே ஆகவேண்டும், குறைந்தது கிழமைக்கு மூன்று நாள் என்டாலும்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, செம்பாட்டான் said:

நானும் அந்த 94 போட்டிகள் பற்றி முன்னரே பதிந்திருந்தேன். அப்போது இரண்டு போட்டிகள் நடத்தியே ஆகவேண்டும், குறைந்தது கிழமைக்கு மூன்று நாள் என்டாலும்.

இன்னும் நாட்களை கூட்டபோகினமாம். அடுத்த இருவருடங்கள் 78 நாட்களாம்.

Hindustan Times
No image preview

Longer IPL to corner quarter of cricket’s calendar

IPL will expand to 78 days by 2027, starting March 14, 2025, with all players from major cricketing nations expected to be available.
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இன்றைய போட்டியில் நாம் தெரிவு செய்த அணி விபரம் தெரிவிக்காமையால் எந்த அணியிற்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் குழப்பம் நிலவுகிறது.🤣

  • கருத்துக்கள உறவுகள்

ZvYLGE.gif

கிரிக்கட் வர வர திருவிழா ரொக்கட் டான்ஸ் மாதிரி ஆகிக் கொண்டிருக்கு . ......... ! 😂

459bb78f15cb3dcc902b4558a30d0d45.gif

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ....... ! 😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஞாயிறு 18 மே GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

59) ஞாயிறு 18 மே 10:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

RR எதிர் PBKS

21 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் இரண்டு பேர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • பிரபா

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

பஞ்சாப் கிங்ஸ்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? monkey_1f412.gif

backhand-index-pointing-down_1f447.png

60) ஞாயிறு 18 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்

DC எதிர் GT

06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 15 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் இரட்டையர்கள் ஜோடி "முடிவில்லை" எனவும் கணித்துள்ளனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

  • வாத்தியார்

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • கந்தப்பு

  • நுணாவிலான்

  • அகஸ்தியன்

குஜராத் டைட்டன்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • பிரபா

  • செம்பாட்டான்

  • வாதவூரான்

  • ஏராளன்

  • ரசோதரன்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

"முடிவில்லை"

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? raccoon_1f99d.webp

  • கருத்துக்கள உறவுகள்

சாம்சன் கேப்டனாவும் டிராவிட் கோச்சாகவும் இருக்குமட்டும் ராஜஸ்தான் ஒருகாலமும் வெல்லமுடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

6 hours ago, கிருபன் said:

பஞ்சாப் கிங்ஸ்

  • நந்தன்

  • புலவர்

"முடிவில்லை"

  • நந்தன்

  • புலவர்

இதென்ன விளையாட்டு. இருவரும் மிக உறுதியாக நிற்கினம்.

8 hours ago, vasee said:

கிருபன் இன்றைய போட்டியில் நாம் தெரிவு செய்த அணி விபரம் தெரிவிக்காமையால் எந்த அணியிற்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் குழப்பம் நிலவுகிறது.🤣

எல்லாத்தையும் விட்டுட்டு போகவேண்டியதுதான். நாம தெரிவு செய்தா, அது கஷ்டப்பட்டு தோற்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, செம்பாட்டான் said:

இதென்ன விளையாட்டு. இருவரும் மிக உறுதியாக நிற்கினம்.

இரட்டையர்கள் ஜோடி முதல் போட்டியில் புள்ளிகளை எடுத்துவிட்டார்கள்!

ஆனால் இரண்டாவது போட்டியில் புள்ளிகள் எடுக்க வாய்ப்பில்லை!

vaipu-illa-raja-seeman.gif

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

இரட்டையர்கள் ஜோடி முதல் போட்டியில் புள்ளிகளை எடுத்துவிட்டார்கள்!

ஆனால் இரண்டாவது போட்டியில் புள்ளிகள் எடுக்க வாய்ப்பில்லை!

vaipu-illa-raja-seeman.gif

அவை உறுதியா நிக்கிறபடியா, நடந்திடுமோ என்ற யோசினைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

குஜராத் சிறப்பாக ஆடிக்கொண்டு இருக்கினம். அடுத்த கட்டத்துக்குப் போக டெல்லியின் நிலைமை கவலைக்கிடம் போல.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆறெல்லாம் சும்மா பறக்குது. இவங்கள் இரண்டு பேருமே முடிச்சுடுவாங்கள் போல. இவர்கள் இருவருக்கும், யார் அந்த செந்நிறத் தொப்பியை எடுக்கிறது என்ற போட்டி வேற.

சுப்மான்

சுதர்சன்

போட்டுத் தாக்குங்கடா. தரமான குடுவை.

  • கருத்துக்கள உறவுகள்

என்னே ஒரு விளையாட்டு. ஒரு வித தடுமாற்றமும் இல்லாத தரமான துரத்தல். சுதர்சா நீ ஒரு வீரன்டா. இத்தொடரில் 600 ஓட்டங்களைக் கடந்தான் பையன்.

இப்பிடி முன்னரும் நடந்திருக்கா. ஒரு விக்கட்டும் இழக்காமல் 200 ஓட்டங்களைத் துரத்தி அடிப்பது சாதாரண விடயமில்லை.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

குஜராத் ஏன் புள்ளிப் பட்டியலில் மேல என்பதற்குச் சாட்சி இதுதான்.

Screenshot-20250518-104454-Chrome.jpg

பட்லர் ஓட்டப்பட்டியலில் ஆறாவதாக. இதுக்கு மேல் என்ன வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

சாம்சன் கேப்டனாவும் டிராவிட் கோச்சாகவும் இருக்குமட்டும் ராஜஸ்தான் ஒருகாலமும் வெல்லமுடியாது!

Shimron Hetmyer ராஜ‌ஸ்தானின் ப‌ல‌ தோல்விக்கும் இவ‌ரும் கார‌ண‌ம்...............13 விளையாட்டில் இவ‌ர் அடிச்ச‌ ர‌ன்ஸ் எத்த‌னை.....................

இவ‌ரை இப்ப‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் காண‌ முடிவ‌துதில்லை.........................

  • கருத்துக்கள உறவுகள்

495130351_1265887284898985_2428979517110

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று அணிகள் playoff க்குத் தெரிவாகி விட்டினம். மும்பையும் டெல்லியும் நான்காவது இடத்துக்குப் போட்டி போடினம். அவர்கள் இருவரும் அடுத்த போட்டியில் விளையாடினம். அதில் தெரியும் யார் போறது என்று.

நான் தெரிவு செய்த மூன்று அணிகள் playoffக்குப் போகினம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

495130351_1265887284898985_2428979517110

என்ன சுவி. ப்ரீத்தின்ர படத்தக் காணேல. இன்றைக்கு அவ வந்த விதம் பார்த்து சமுகவலைத்தளம் முழுக்க பத்தி எரியுது.

ஏன் அவ உங்களுக்குப் படம் அனுப்பேலோயோ. 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, செம்பாட்டான் said:

என்ன சுவி. ப்ரீத்தின்ர படத்தக் காணேல. இன்றைக்கு அவ வந்த விதம் பார்த்து சமுகவலைத்தளம் முழுக்க பத்தி எரியுது.

ஏன் அவ உங்களுக்குப் படம் அனுப்பேலோயோ. 😁

எனக்கு அனுப்பினா!

Jaipur: Preity Zinta Cheers for Punjab Kings during the IPL Match #Gallery

Jaipur: Punjab Kings co-owner Preity Zinta watches the Indian Premier League (IPL) match against Rajasthan Royals at Sawai Mansingh Stadium in Jaipur on Sunday, May 18, 2025. (Photo: IANS/Ravishankar Vyas)

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, செம்பாட்டான் said:

என்ன சுவி. ப்ரீத்தின்ர படத்தக் காணேல. இன்றைக்கு அவ வந்த விதம் பார்த்து சமுகவலைத்தளம் முழுக்க பத்தி எரியுது.

ஏன் அவ உங்களுக்குப் படம் அனுப்பேலோயோ. 😁

தல சில விடயங்கல நோராக பார்க்க மாட்டார். கண் கூசுவதால், என்னை பொறுப்பாக விட்டுள்ளார்.

3 minutes ago, கிருபன் said:

எனக்கு அனுப்பினா!

Jaipur: Preity Zinta Cheers for Punjab Kings during the IPL Match #Gallery

Jaipur: Punjab Kings co-owner Preity Zinta watches the Indian Premier League (IPL) match against Rajasthan Royals at Sawai Mansingh Stadium in Jaipur on Sunday, May 18, 2025. (Photo: IANS/Ravishankar Vyas)

எத வேணா வாயில வருது🫢

என்ன தல. நீங்களுமா/உங்களுக்குமா. சுவிக்கு இப்பிடி ஒரு போட்டியா

2 minutes ago, நந்தன் said:

தல சில விடயங்கல நோராக பார்க்க மாட்டார். கண் கூசுவதால், என்னை பொறுப்பாக விட்டுள்ளார்.

அட.... நீங்களும் வரிசையில வாறீங்களா. ப்ரித்தீன்னா சும்மாவா. எங்க பார்ப்போம் உங்கள் படங்களை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.