Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் - வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN 24 MAR, 2025 | 01:15 PM

image

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகம் பார்க்கக்கூடிய விதத்தில் ஈரான் தனது திட்டத்தை கைவிடவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அணுவாயுதங்களை உருவாக்கவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து ஈரான் விலகுவதற்கான தருணம் இது, அவர்கள் அணு ஆயுத திட்டங்களை தொடர்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய எந்த தாக்குதலிற்கும் ஈரானே காரணம் என கருதப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஈரானின் அணுவாயுத திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள வோல்ட்ஸ் டிரம்பின் கருத்துக்களை எதிரொலித்துள்ளதுடன் ஈரான் கைவிடவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுவாயுத திட்டத்தினை அமெரிக்கா முற்றா செயல் இழக்க செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது இரகசிய ஆதரவு குழுக்கள் மூலம் ஏற்படுத்துகின்ற  உயிரிழப்புகளையும் அழிவுகளையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் ஈரானிடம் அணுவாயுதங்கள் இருந்தால், மத்திய கிழக்கு முழுவதும் அணுவாயுத மோதலில் சிக்குப்படும், இது எங்களின் தேசிய பாதுகாப்பினை பொறுத்தவரை முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/210052

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் வாய்சவாடவல் சரிவராது.

டிரம்ப் மற்றும் அவரை சேர்ந்தவர்கல் நினைத்தது ருசியாவை வைத்து சீன, ஈரானை அமத்தலாம் என்று.

அனால் , டிரம்ப் இப்பொது உணர்கிறார், ரஷ்யா அப்படியான இணக்கப்பாட்டுக்கு வராது என்றும், அத்துடன் ஈரன், சீனவை வைத்து அமெரிக்காவை பணியவைக்கும் முயதர்சிகள்.

அனால், இது வெளிப்படை, இதை இங்கு இரு திரியில் சொல்லி இருந்தேன், அதாவது அமெரிக்காவின் ஒப்பிட்டளவிலான மேலாண்மை குறைந்து வரும் போக்கை ருசியா, சீன குழப்பாது.

அமெரிக்காவின் நடத்தையால் மட்டும் அல்ல, மேற்கு தவிர்ந்த உலகின் போக்கு இதுவாக இருக்கிறது.

ஏனெனில் , முன்பு சோற்றில் இருந்து ஆயுதம் வரை தெரிவு என்றால் மேற்கு, எனவே மேற்கின் குறிப்பறிந்து நடந்தன மற்ற நாடுகள்.

இப்பொது தெரிவு இருக்கிறது, இதை மற்ற நாடுகள் வேண்டி நிற்கின்றன.

ஓர் முக்கிய காரணம், மேற்கின் பொருளாதார தடை, இப்பொது எதிர்பார்த்த விளைவை செய்வது குறைந்து வருகிறது.

முன்பு, தொழிநுட்பம் , உற்பத்தி , பணம், வளம், வழங்கல் இதனால் உணவாவு வழங்கல் மீது முழு பிடியை மேற்கு வைத்து இருந்தது, இப்பொது இவற்றில் பலவற்றில் பிடி இல்லை, பணம் மீதும் முழுப்பிடி இல்லை.

மற்ற நாடுகள் இந்த போக்கு வேண்டும், வளர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன., ஒரு பகுதியை வைத்து மற்றவர்களுடன் பேரம், மற்றும் அந்ததந்த நாடுகளின் ஒப்பிட்டளவிலான இறைமை போன்றவற்றை இந்த போக்கு அதிகரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனக்கு ஆபத்து என வரும் போது அமெரிக்கா ஈரான் மீது மாற்று நடவடிக்கைகள் எடுக்கின்றது. யாரும் ,எந்த நாடுகளும் எதிர்க்கவில்லை. யேமன் மீது தாக்குதலை நடத்துகின்றது. இங்கே அத்துமீறிய அஜாரகம் என யாரும் எந்த நாடும் பொங்கி எழவில்லை.

அமெரிக்கா தன் நலம் கருதி உலகம் முழுவதும் செய்வதைத்தான் ரஷ்யா உக்ரேனில் தன் நலம் கருதி செய்தின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

தனக்கு ஆபத்து என வரும் போது அமெரிக்கா ஈரான் மீது மாற்று

இது பொதுவான பதிவு. அமெரிக்கா சொல்லுவது பொய்.

இல்லை, உண்மையில் ஈரானுக்கு அதன் இருப்புக்கு மிகவும் பாரிய அச்சுறுத்தல்.

பக்கத்தில் பாகிஸ்தான், அயலில் இஸ்ரேல், சற்று தூர அயலில் கிந்தியா,

இதை விட, அமெரிக்கா, மேற்கின் அணுஆயுத நீர்மூழ்கிகள்

இதை விட மேற்கு சதாமை கொண்டு இரசாயன மாறும் உயிரியியல் ஆயுதங்களை பிரயோகித்தது.

அதன் முதல், 1953 இல் ஈரான் எண்ணெய்யை தேசியமயப்படுத்தியதை அடுத்து, அங்கு தேர்தல் மூலம் வந்த அரசை கவிழ்த்து, அவர்களுக்கு மசியக்கூடிய தோற்றம் கொண்டிருந்த ஷாவை (மகன்) கொண்டு வந்தது.

அனால், இறுதியாக ஷாவும் அப்படியான முடிவுக்கு வந்து இருந்தார், opec உதயமானது.

எந்த தன்மை அரசாங்கம் ஈரானில் இருந்தாலும், அணுஆயுதம் வைத்துக்கருக்க வேண்டியது, இரான் அரசு அதன் மக்களுக்கு செய்யும் அடிப்படை பாதுகாப்பு சேவை.

அமெரிக்கா சொல்ல்வது,அணுஆயும் மட்டும் அல்ல. முழு அணுத்துறையை ஈரான் கைவிட்டு எல்லாவற்றையும் தாமிடம் ஒப்படைக்க வேண்டும் , மேலும் மரபுவழி ஏவுகணைகளை ஆராய்வு, உடற்பதி செய்வதை நிறுத்தி, அவற்றையும் ஒப்படைக்க வேண்டும்.

எந்த அரசாவது இதை செய்யுமா?

ருசியா, சீன போட்ட முதல் முட்டு, அணுஆயுத விடயத்தில் மற்ற விடயங்கள் உள்ளடக்கப்படாது என்பது.

எனவே, டிரம்ப் / அமெரிக்கா இப்போது சண்டைக்கு போகவேண்டிய நிலை.

(எம்மில் சிலரின் அச்சறுத்தல் பார்வை, மேற்கிடம் கிட்டத்தட்ட ஸ்டாக்கோம் சின்ரோம் ஏற்படுத்ப்பட்ட பார்வை, அதாவது மேற்றகில் உள்ள எமது இருப்பால், மேற்கு சொல்லுவதை அனுதாபத்துடன் பார்ப்பது. அது தவறில்லை. ஆனல், அதே நிலை ஈரான் அரசு, மக்களுக்கும் இருக்க கூடாது என்ற மேற்கின் வாதத்துடன் ஒத்து போவது)

ஈரானுக்கு மேற்கு செய்தது, ஈரானின் முக்கிய வரலாற்று திருப்பங்கள் இந்த வீடியோ இல் இருக்கிறது.

(இவை ஒரு நூலில் இல்லை, ஆங்காங்கே வேறு வேறு நூல்களில் இருக்கிறது, இது ஒரு தொகுப்பு)

உண்மையில் இந்த விடீயோக்கள் நூல்களிலும் பார்க்க சரியான புரிதலை ஏற்படுத்துவது, ஏனெனில், பல்வேறு பட்ட பார்வைகளை கொண்டுவருவது. இதில் பார்த்தால் ஷாவுக்கும், முல்லாக்கல்லுக்கும் அவ்வளவு வேறுபாடு இல்லை.

இப்படியாக நவீன வரலாறு கொண்ட நாடு அதன் பாதுகாப்புக்கு அம்மணமாக நிற்கவேண்டும் என்பதே மேற்கு , அமெரிக்கா சொல்வது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பி-2 போர் விமானங்களை டியாகோகார்சியாவிற்கு அனுப்பியது அமெரிக்கா? ஈரானிற்கான செய்தியா?

10 APR, 2025 | 12:48 PM

image

அமெரிக்கா டியாகோகார்சியாவில் உள்ள தனது தளத்திற்கு பி-2 அதிநவீன போர்விமானங்களை அனுப்பியுள்ளமை தனக்கான செய்தியா என்பதை ஈரானே தீர்மானிக்கவேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா டியாகோகார்சியாவில் உள்ள தனது தளத்திற்கு ஆறு பி-2 போர்விமானங்களை மார்ச்மாதம் அனுப்பியுள்ளது என அமெரிக்க அதிகாரிகள் ரொய்ட்டருக்கு அனுப்பியுள்ளனர்.

யேமன் மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஈரானிற்கு எதிரான அமெரிக்காவின் அழுத்தங்களிற்கு மத்தியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

b2_1.jpeg

அமெரிக்க விமானப்படையிடம் 20 பி-2 போர்விமானங்களே உள்ளன அவற்றை அமெரிக்கா மிகவும் முக்கியமான தாக்குதல்களிற்கு மாத்திரம் பயன்படுத்துகின்றது.

அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ள  இந்த விமானங்கள் அதிசக்தி வாய்ந்த குண்டுகளையும் அணுவாயுதங்களையும் கொண்டுசெல்லும் திறன்வாய்ந்தவை, மத்திய கிழக்கில் செயற்படுவதற்கு உகந்தவை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈரானிற்கு செய்தியை தெரிவிப்பதற்காகவா  இந்த விமானங்கள் டியாகோகார்சியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு ஈரானே அதனை தீர்மானிக்கட்டும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது மிகப்பெரிய சொத்து, இது அனைவருக்கும் ஒரு செய்தியை தெரிவிக்கின்றது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி டிரம்ப் தெளிவாக உள்ளார், ஈரானிடம் அணுக்குண்டு இருக்ககூடாது, அதனை அமைதிவழிமுறை மூலம் தீர்ப்பதற்கு ஜனாதிபதி முயல்கின்றார் என நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/211698

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.