Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருத்த உருவம்

காவிப்பற்கள் தெரிய சிரிப்பு..

எண்ணெய் பூசிய உடல்போல்

வழுவழுப்பான தேகம்

கையில் இருக்கும்

உருண்டைத்தடியில்

உருட்டப்பட்ட ..இனிப்பு சுருள்

அதற்கு ரெயின் கோட்டு

வெள்ளை நிற பொலித்தீன்

மடித்துக் கட்டிய சாரமும்

அழுக்குத் துணியால்

முண்டாசும் கட்டி

மூக்குத் துடைக்கவும்

முட்டாசு அழுக்கை துடைக்கவும்

துணித்துண்டு ஒன்று

இதுதான் ..அந்தக்கால

இனிப்பு வண்டி...

பம்பக் ..பம்பக் என்று

கத்திக் கொண்டே வரு ம்

அந்த வண்டி மனிதன்

ஐந்துசதம்

பத்து சதத்துடன்

முட்டிமோதும் எம்மை

ஆசை வார்த்தை கூறி

இனிப்புச் சுருளை

இழுத்து நீட்டி

மடக்கி..நீட்ட

இனிதாய் மகிழும்..எம்மனம்

இப்படி...

இந்த பம்பாய் மிட்டாசு

தின்று மகிழ்ந்த

அந்த இனிய நாட்களை

ஊரில் நின்றபோது

கற்பனையில்தான்

காணமுடிந்தது....

எனினும்

அது அழகான இனிமையான

கற்பனைதான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

மஇத்துக் கட்டிய சாரமும்

அழுக்குத் துணியால்

முண்டாசும் கட்டி

மூக்குத் துடைக்கவும்

முட்டாசு அழுக்கை துடைக்கவும்

துணித்துண்டு ஒன்று

அப்போ நல்லூர் திருவிழா நேரங்களில் நிறைய பம்பாய் மிட்டாசு விற்பவர்களை காண முடியும். அந்த இனிப்பின் சிகப்பு நிறத்திற்கும், பளபளப்பிற்கும் அதனை வாங்கி சாப்பிட ஆசை இருந்த போதும், அந்தத் தடியில் கட்டி இருந்த ஊத்தைத் துணி, அந்த ஆசையை குழி தோண்டிப் புதைத்து விட்டது. 🤮

நிறைவேறாத ஆசைகளில் இதுவும் ஒன்று. 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

நானும் தேடித்திரிந்து களைத்து விட்டேன்...அந்த துணியை யார் அந்தநேரம் பார்த்தது...கவனம் முடுக்க சிவத்த இனிபிலேயே

  • கருத்துக்கள உறவுகள்

இதனை தும்பு முடடாஸ் (தும்பி முடடாஸ்) எனவும் அழைப்பதுண்டு .

இங்கு கனடாவில் cotton candy எனும் பெயரில் சிறு பாக்கட்டில் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜவ்வு மிட்டாய் என்றும் சொல்வார்கள் . ......... அவருடைய துணி அழுக்கு என்ன அழுக்கு ........ மண் விளையாடின கையில மணிக்கூடு செய்து கட்டி விடுவார் ..... அது எல்லாம் தெரியாது , பொடியலுடன் சேர்ந்து அதை ஆளுக்கொரு துண்டாய் பிச்சு பிச்சு சாப்பிடுறதிலதான் முழுக் கவனமும் இருக்கும் . ........! 😇

  • கருத்துக்கள உறவுகள்

IMG-1809.jpg

தும்பு மிட்டாய் விற்பவர்கள் அத்தோடு தோசை வடிவில் இருக்கும் அப்பளம் என்று சொல்லுவோம் அதையும் கொண்டு திரிவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

இதனை தும்பு முடடாஸ் (தும்பி முடடாஸ்) எனவும் அழைப்பதுண்டு .

இங்கு கனடாவில் cotton candy எனும் பெயரில் சிறு பாக்கட்டில் வருகிறது.

1 hour ago, ஈழப்பிரியன் said:

தும்பு மிட்டாய் விற்பவர்கள் அத்தோடு தோசை வடிவில் இருக்கும் அப்பளம் என்று சொல்லுவோம் அதையும் கொண்டு திரிவார்கள்.

images?q=tbn:ANd9GcQMjQZdzt62Fb9XbesZPTS images?q=tbn:ANd9GcRQ7v7M6SQOc_AuiD5jgEY images?q=tbn:ANd9GcR4aTOSUpgEHccKFH4p_yM

அல்வாயன் குறிப்பிடுவது பம்பாய் மிட்டாசு அல்லது ஜவ்வு மிட்டாய்.

அது ஒரு தடியில் சுற்றப்பட்டு ஈரப்பதமாக... கடினமான பாணி போல் இருக்கும்.

images?q=tbn:ANd9GcQ3u_AHLEjdDdl2ygj_hyE images?q=tbn:ANd9GcTjd_t4PXpWaeGzUxjZIaP images?q=tbn:ANd9GcSYyc3XCoxBYoCgTc4_U9y

நிலாமதி அக்காவும், ஈழப்பிரியனும் குறிப்பிடுவது... தும்பு மிட்டாஸ்.

தும்பு போல் இருக்கும் இனிப்பு. இரண்டுக்கும் மூலப் பொருள் ஒன்று என நினைக்கின்றேன். ஆனால்... செய்முறை வித்தியாசமாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

IMG-1809.jpg

தும்பு மிட்டாய் விற்பவர்கள் அத்தோடு தோசை வடிவில் இருக்கும் அப்பளம் என்று சொல்லுவோம் அதையும் கொண்டு திரிவார்கள்.

அந்த தட்டுக்குப் பெயர் காவோலைஅப்பம்...சரசரவென்று உடைந்துவிடும்

7 minutes ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcQMjQZdzt62Fb9XbesZPTS images?q=tbn:ANd9GcRQ7v7M6SQOc_AuiD5jgEY images?q=tbn:ANd9GcR4aTOSUpgEHccKFH4p_yM

அல்வாயன் குறிப்பிடுவது பம்பாய் மிட்டாசு அல்லது ஜவ்வு மிட்டாய்.

அது ஒரு தடியில் சுற்றப்பட்டு ஈரப்பதமாக... கடினமான பாணி போல் இருக்கும்.

images?q=tbn:ANd9GcQ3u_AHLEjdDdl2ygj_hyE images?q=tbn:ANd9GcTjd_t4PXpWaeGzUxjZIaP images?q=tbn:ANd9GcSYyc3XCoxBYoCgTc4_U9y

நிலாமதி அக்காவும், ஈழப்பிரியனும் குறிப்பிடுவது... தும்பு மிட்டாஸ்.

தும்பு போல் இருக்கும் இனிப்பு. இரண்டுக்கும் மூலப் பொருள் ஒன்று என நினைக்கின்றேன். ஆனால்... செய்முறை வித்தியாசமாக இருக்கலாம்.

சரியான படங்கள் சிறியர்...நன்றி...தும்பு மிட்டாசும் ..காவோலயப்பமும் .. ஒருஆள்தான் இரண்டி கண்ணாடி பூட்டப்பட்ட தகரப் பெட்டியில் கொண்டுவருவார்..கையிலை ஒரு ஒரு சின்னமணி கிணு கிணுத்தபடி வருவார்...இவருக்கு மணி கிணி கிடைய்யது ..வெத்திலை வாயால் பம் பம்பக் என்று கத்தியபடி வருவார்.. அந்த வெத்திலைச்சாறே..நம்ம இனிப்புக்கு கலர் கூட்டும்.. சும்மா சொல்லக்கூடாது அதன் சுவையே தனி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அந்த தட்டுக்குப் பெயர் காவோலைஅப்பம்...சரசரவென்று உடைந்துவிடும்

இதுவும் சுவை தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.