Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

திரைப்படம் எடுக்க நல்ல கதை கிடைச்சிருக்கு.....🤣

இவங்கள் சண்டை பிடிக்கிற மாதிரி தெரியவில்லை.

இரண்டு பேரும் பயந்திட்டாங்களோ.... 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

இவங்கள் சண்டை பிடிக்கிற மாதிரி தெரியவில்லை.

இரண்டு பேரும் பயந்திட்டாங்களோ.... 🤣

சீனா இருக்கும் வரைக்கும் பாக்கிஸ்தானும் பயப்பிடாது.சிறிலங்காவும் பயப்பிடாது. ஈரானும் பயப்பிடாது. 😎

  • கருத்துக்கள உறவுகள்


மோடி ராஜ்யம் Modi Rajyam

Santhanakrishnan Renga Ramanujam  

495432996_3750601165083650_8800742675924· 

இந்தியாவும், பாகிஸ்தானும் சிலமணி நேர இடைவெளியில் சுதந்திரம் அடைந்திருந்தாலும் ஏறக்குறைய 78 ஆண்டுகள் ஆகியும் பாகிஸ்தானோடு இந்தியாவை இன்றைய நிலையில் ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதார வளர்ச்சி, கல்வி, மருத்து விஞ்ஞானம், விண்வெளி ஆராய்ச்சி, தொழில் நுட்பம், தொழில் உற்பத்தி திறன், பாதுகாப்பு தளவாடங்களின் வளர்ச்சி, விவசாயம் போன்றவற்றில் அபரித வளர்ச்சியடைந்து பாகிஸ்தான் இந்தியாவை எட்டிப்பிடிக்க முடியாத அளவிற்கு அபரித வளர்ச்சியை அடைந்துள்ளது.

பாகிஸ்தான் எந்த வழியிலும் முன்னேற்றமடைய வில்லை . காரணம் ஆட்சியாளர்கள் ஜனநாயக முறைப்படி நாட்டை ஆளத்தகுதியற்றவர்கள். ‘ருசி கண்ட பூனை’ என்பதைப் போல ராணுவம் ஆட்சியை எப்படியாவது தன் வசம் வைத்துக் கொள்வதில் குறியாக உள்ளது. என்னதான் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தாலும் ராணுவத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தக்க சமயம் வரும்போது கவிழ்த்து விடுவார்கள். ராணுவமும் அவ்வப்போது இந்தியாவிடம் உரசலை ஏற்படுத்தியும், எட்டாக் கனியான காஷ்மீரை மையமாக வைத்து காஷ்மீர் பாகிஸ்தானுக்குச் சொந்தம் என அவ்வப்போது பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி மக்கள் தங்கள் வாழ்வாதார பிரச்சனைகளை எழுப்பக் கூடாது என்பதற்காக அவ்வப்போது இந்தியா மீது போரை வலுக்கட்டாயமாக திணித்து முடிவில் மரண அடி வாங்கிக் கொண்டு தெரு நாய் போல ஊளையிடும். இப்படித்தான் 1971 வங்கதேசத்தை ( அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) இழந்தது. இன்றைய பங்களாதேஷ் உருவானதற்கு முழுக்க முழுக்க இந்தியாவின் உதவியால்தான். பாகிஸ்தான் எப்போதுமே இருப்பதை விட்டு விட்டு பறப்பதை எட்டிப்பிடிக்க நினைக்கும். மோதி ஆட்சிக்கு வந்த பின் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ( Art 370) விலக்கிக் கொண்டபின் அங்கு முறையான தேர்தல் நடைபெற்று ஆட்சி நடைபெற்று வருவதால் காஷ்மீரும் பாகிஸ்தானுக்கு இலவு காத்த கிளி போலாகி விட்டது. பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் காஷ்மீர் ஓரு closed chapter ஆகி விட்டது. முதலில் ஐ.நா , பின்னர் உலக நாடுகள் எல்லாமே சேர்ந்து கொண்டு காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் எழுப்பக் கூடாதெனவும், Kashmir is integrated part of India என செருப்பால் அடித்தது போல கூறி விட்டதால் இப்போது மக்களுக்கும் ஆட்சியாளர்கள் மீது வெறுப்பு ஏற்பட ஆரம்பித்து விட்டது. அவர்கள் கவனத்தை திசை திருப்பவே எல்லை தாண்டி தீவிரவாதிகளை அனுப்பி காஷ்மீரில் அவ்வப்போது வாலை ஆட்டுகிறது..தற்போது வாலை மட்டுமல்லாமல் உடலையே வெட்ட வேண்டிய தருணம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

494525618_699141575935776_55911075120995

தல வந்திட்டான்யா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.