Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Photo-2.jpg?resize=720%2C375&ssl=1

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் விபத்து - 13 பேர் உயிரிழப்பு, 30 பயணிகள் காயம்.

விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் விபத்தில் இறந்த எட்டு பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

அதன்படி பேருந்து சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2025/1431577

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

495595308_1135960305213493_6923283363966

495859215_1135960295213494_7993518088206

497010331_1135960325213491_3166540225050

496531889_1135960261880164_7981653898118

இறம்பொடை விபத்து 11 பேர் பலி, 34 பேர் படுகாயம்!

கொத்மலை இறம்பொடை கெரன்டி எல்ல பகுதியில் கதிர்காமம்-குருநாகல்-நுவரெலியா அரச போக்குவரத்து பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பாதையிலிருந்து விலகி பாரிய பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vaanam.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

496924615_1526915571599237_8950216471297

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு.

- போக்குவரத்து பிரதி அமைச்சர்.-

Muthusamy Navaraja

  • தமிழ் சிறி changed the title to ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Photo-2.jpg?resize=720%2C375&ssl=1

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை தற்போது 21 ஆக அதிகரித்துள்ளது.

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று இன்று (11) காலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதேவேளை, குறித்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்து வர இரண்டு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், இரத்மலானை விமானப்படை தளத்தில் இந்த இரண்டு ஹெலிகொப்டர்களையும் விமானப்படை தயார் நிலையில் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நடவடிக்க இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு பெல் 412 ரக ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1431652

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/watch?v=2695816150608014 👈

👆 விபத்துக்குள்ளான பேரூந்தின் நிலைமை. 😮

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

494694354_992440093097483_85600279006234

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

496768249_659209113658482_55963943899322

யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட காரியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை சரிந்து வீழ்ந்தது.

######################

மன்னிக்கவும்: இந்தப் பதிவு இங்கு தவறுதலாக பதியப் பட்டு விட்டது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

👉 https://www.facebook.com/watch?v=2695816150608014 👈

👆 விபத்துக்குள்ளான பேரூந்தின் நிலைமை. 😮

காயப்பட்ட 35 பேரின் நிலையும் கவலைக்கிடமாக இருக்குமென பேருந்தின் நிலையை பார்த்த போது புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பேருந்து விபத்து, 21 பேர் பலி: உயிர் பிழைத்தவர் விவரிப்பது என்ன?

இலங்கை பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கை நுவரெலியா - இறம்பொடை பகுதியில் பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்து இன்று (மே 11) அதிகாலை இடம்பெற்றதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா ஊடாக குருநாகல் நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றே இவ்வாறு பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா ஊடாக குருநாகல் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து, இறம்பொடை பகுதியில் இன்று அதிகாலை 4.30 அளவில் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற தருணத்தில் நான்கு பேர் உயிரிழந்திருந்ததுடன், 35 பேர் வரை காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்திருந்தது.

இலங்கை பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

பட மூலாதாரம்,KRISHANTHAN

விபத்து இடம்பெற்ற தருணத்தில் பிரதேசவாசிகள், காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல உதவி வழங்கியிருந்தனர்.

உயிரிழந்தோரின் சடலங்கள் கொத்மலை பிரதேச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து இடம்பெறும் தருணத்தில் பேருந்தில் 50திற்கும் அதிகமானோர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெறும் தருணத்தில் பேருந்தில் பயணித்த பயணியொருவர் ஊடகங்களுக்கு தனது அனுபவங்களை வெளிப்படுத்தியிருந்தார்.

''பேருந்து சற்று வேகமாக வந்தது. திடீரென பிரேக் அடிப்பட்டதை உணர்ந்தேன். பேருந்து இடது பக்கம் நோக்கில் வழுக்கி சென்றது. அதன்பின்னர் பள்ளத்தில் வீழ்ந்ததை உணர்ந்தேன். நான் வெளியில் வர ஒரு நிமிடம் அளவில் சென்றது. என்னால் அந்த சந்தர்ப்பத்தில் காப்பாற்ற முடிந்தவர்களை நான் காப்பாற்றினேன். நான் ராணுவத்தில் வேலை செய்கின்றேன்.'' என விபத்தை எதிர்கொண்ட ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து; 21 பேர் பலி

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை போலீஸார் ஆரம்பித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேகர மற்றும் சபாநாயகர் ஜனத் விக்ரமரத்ன ஆகியோர் ஆராய்வதற்காக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

விபத்து தொடர்பில் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

''விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமா அல்லது வீதியின் பிரச்னையா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. எம்மால் முடிந்தளவு ஏற்பாடுகளை செய்துள்ளோம். மருத்துவமனைகளுக்கு கதைத்துள்ளோம். நுவரெலியா மருத்துவமனையில் 14 பேர் இருக்கின்றார்கள். அந்த 14 பேரின் நிலை கவலைக்கிடமாக இல்லை. கொத்மலை மருத்துவமனைக்கு 13 சடலங்கள் கொண்டு செல்லப்பட்டன. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன' என போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதியின் அறிவிப்பு

இலங்கையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து; 21 பேர் பலி

பட மூலாதாரம்,KRISHANTHAN

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபா வரை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இறந்தவரின் உறவினர்களுக்கு இந்தப் பணத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.

மேலும், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் காப்புறுதி நிதியம் மூலம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இறம்பொடை விபத்து குறித்து அறிய கிடைத்தவுடன் தான் அதிர்ச்சியடைந்ததாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதற்கு அரசாங்கம் தற்போது மும்முரமாக செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இவ்வாறான விபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும், இதற்காக 'கிளீன் ஶ்ரீலங்கா' திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இன்று காலை நடந்த இந்த கொடூரமான வீதி விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி , காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சகல தொடர்புடைய மருத்துவமனைகளையும் தயார்படுத்தவும், இது தொடர்பாக தேவையான அனைத்து எதிர்கால நடவடிக்கைகளையும் எடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கும் சுகாதாரத் துறைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgqx244p2vo

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1747018375454.jpg?resize=720%2C37

கொத்மலை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்!

நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பஸ்விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்

இதன் போது அங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தினை விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார் இதேவேளை அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார்.

சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இது போன்ற வாகன விபத்துக்களினால் ஒவ்வொரு வருடமும் உயிர்ழப்புகள் ஏற்படுகின்றமை பாரிய பிரச்சினையாக மாரியுள்ளது என்பது எமக்கு தெரியும் இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

பின் தங்கிய பிரதேசமாக இருந்தாலும் வைத்திய சேவையினை வழங்குகின்றமை தொடர்பில் அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும் இதேவேளை மீட்பு பிரிவினருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். முடியுமான அளவு மனிதாபிமானத்தோடு செயற்பாட்டு உதவிகளை வழங்கிய நல்லுலங்களுக்கும் நன்றி.

நாட்டில் உள்ள நல்ல விபரங்களையும் பாதுகாக்க வேண்டும் எதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது அனைத்தையும் விட்டு விட்டு அனைவரும் ஒன்று சேர்கிறார்கள் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிறைவேற்ற கூடிய அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதாக அவர் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1431657

  • கருத்துக்கள உறவுகள்

பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளில் பார்வையிட்டார் பிரதமர்

Published By: DIGITAL DESK 3

12 MAY, 2025 | 11:52 AM

image

கொத்மலை, ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) பஸ் ஒன்று சுமார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நிலைமைகளை நேரில் கண்டறிய மே 11 ஆம் திகதி பிற்பகல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்தார்.

அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சை பெறும் அனைத்து நோயாளிகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்கத் தேவையான வசதிகள் குறித்து பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.

இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர்,

இது மிகவும் துன்பகரமான நிகழ்வு. இது போன்ற விடயங்களைத் தாங்கிகொள்வது மிகவும் கடினமானதாகும். சிறுவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை இழந்திருப்பது வேதனையானது. எமது நாட்டில் தினமும் ஏராளமான போக்குவரத்து விபத்துகள் நடக்கின்றன. இவற்றைத் தடுக்க எமது போக்குவரத்து அமைச்சர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நேரத்தில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளித்துவருகின்ற எமது வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு நான் குறிப்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதுபோன்று தங்கள் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நோயாளிகளை வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்த அனைவரையும், அந்த மனிதாபிமானப் பணியை முன்னெடுத்த அனைவரையும் நான் நினைவுகூர விரும்புகிறேன். இதுதான் எமது நாட்டின் தனித்துவம். இந்த மனித பண்புகளை நாம் பாதுகாக்க வேண்டும். இந்த நேரத்தில், அரசாங்கம் முடியுமான அனைத்தையும் செய்வதை உறுதி செய்வதற்காக நாங்கள் தலையிடுகிறோம் என்று நான் கூற விரும்புகிறேன்.

இந்த நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.

WhatsApp_Image_2025-05-12_at_10.31.27_AM

WhatsApp_Image_2025-05-12_at_10.31.27_AM

WhatsApp_Image_2025-05-12_at_10.31.26_AM

WhatsApp_Image_2025-05-12_at_10.31.25_AM

WhatsApp_Image_2025-05-12_at_10.31.25_AM

https://www.virakesari.lk/article/214507

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய்!

Published By: DIGITAL DESK 3

12 MAY, 2025 | 12:39 PM

image

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தனது ஒன்பது மாத குழந்தையுடன் பஸ்ஸின் இடிபாடுகளுக்கள் சிக்கியிருந்த தாய் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் காப்பாற்றியுள்ளார்.

குழந்தையை காப்பாற்றிய  45 வயதுடைய தாய் பின்னர்  உயிரிழந்துள்ள துயரம் சம்பவம் பதிவாகியுள்ளது. 

கடுமையான காங்களுடன் பஸ்ஸிற்குள் சிக்கியிருந்த குறித்த தாய் மற்றும் அவரது குழந்தை பாதுகாப்பு பிரிவினர் கடும் பிரயத்தனத்துக்கு பின்னர் மீட்டுள்ளனர்.

இதனை அடுத்து தாயும் குழந்தையும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 45 வயதுடைய தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும்,  9 மாதங்களேயான குழந்தை காப்பாற்றப்பட்டதுடன் குறித்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மே மாதம் 11 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அன்னையர் தினம் கொண்டப்பட்ட வேளையில் இந்த துயரச் சம்பவத்தின் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சமூக ஊடகங்களில் பேசுப்பொருளாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

497491120_10236446784448036_921256925751

495577900_1314316016719327_6148352922570

Gqqd5CYXQAAaIRs.jpg

Gqqd46faAAA_WTN.jpg

Gqqd5CKX0AA80S9.jpg

https://www.virakesari.lk/article/214514

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image_9b8e42e9cf.gif?resize=600%2C375&ss

தன்னுயிரை தியாகம் செய்த தாயின் இறுதி கிரியை இன்று!

தன்னுயிரை தியாகம் செய்து, தன்னுடைய பிள்ளையின் உயிரை காப்பாற்றிய அந்த தாயின் இறுதி கிரியை, இன்று (13) செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்லா பகுதியில் 11.05.2025 அன்று அதிகாலை 4.30க்கு விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர், 45 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில், தனது 9 மாதங்களேயான மகளை, காப்பாற்றுவதற்கு பெரும் பாடுபட்ட தாயின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அந்த தாய், சேயுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அந்த தாய் உயிரிழந்தார். அவருடைய 9 மாதங்களேயான குழந்தை, பேராதனை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில், அந்த தாய், தந்தை மற்றும் 9 மாதங்களேயான குழந்தையுடன், தங்களுடைய ஏனைய நான்கு பிள்ளைகளும் சிக்கியுள்ளனர். காயமடைந்த நான்கு பிள்ளைகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொஸ்லாந்தை மீறியபெத்த எஸ் கே டிவிசைனைச் சேர்ந்த இவர்கள், கண்டியிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சம்பவத்தில் மரணமடைந்த, திரு,திருமதி காசிநாதன், தனலட்சுமி ஆகிய இருவரின் பூதவுடல்களும், கொஸ்லாந்தை மீறியபெத்த எஸ் கே டிவிசைன் பொது மயானத்தில், செவ்வாய்க்கிழமை (13) மாலை 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

https://athavannews.com/2025/1431731

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

caf7c1e1-9017-47f2-80a4-d868a59ee294.jpg

கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்.

அண்மையில் பேருந்து விபத்து இடம்பெற்ற நுவரெலியா கொத்மலை, கெரண்டியெல்ல பகுதிக்கு அருகில் மற்றுமொரு  விபத்துச்  சம்பவமொன்று  இன்று(14) இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா – கொழும்பு பிரதான வீதியினூடாகப் பயணித்த வான் ஒன்றே கொத்மலை- கெரண்டியெல்ல  பகுதியில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1-1.jpg?resize=449%2C600&ssl=1

caf7c1e1-9017-47f2-80a4-d868a59ee294-1.j

குறித்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ள நிலையில்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தின் போது  குறித்த வேனில்  7 சிறுவர்கள் உட்பட 18 பேர்   பயணித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 11 ஆம் திகதி கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1431843

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

497397693_1138438424965681_5675356965197

496925152_1138438544965669_9129602555087

496923554_1138438401632350_4217821414418

498323181_1138440314965492_9454949221867

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.