Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - பாகிஸ்தான், சீனா, ரஃபேல், ஜே-10சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சீனாவின் ஜே-10சி போர் விமானம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அன்ஷுல் சிங்

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 14 மே 2025, 05:15 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் உச்சத்தில் இருந்த போது, சீன பாதுகாப்பு நிறுவனங்களின் பங்குகள் அந்நாட்டின் பங்குச் சந்தையில் ஏற்றத்தைக் கண்டன .

குறிப்பாக, பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை வழங்கும் நிறுவனங்களின் பங்குகளில் ஏற்றம் காணப்பட்டது. இவற்றில் ஒன்று ஜே-10சி போர் விமானங்களை தயாரிக்கும் அவிக் செங்டு விமான கார்ப்பரேஷன் ஆகும்.

சீனாவின் ஷென்சென் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனத்தின் பங்குகள், கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு மே 7ஆம் தேதியன்று மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டன.

"இந்தியாவின் ரஃபேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்த ஜே-10சி போர் விமானத்தைப் பயன்படுத்தினோம்" என்று பாகிஸ்தான் கூறியிருந்ததும் இந்த பங்கு அதிகரிப்புக்கு ஒரு காரணம்.

மே 7-ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் இந்த கூற்றை முன்வைத்தார். பாகிஸ்தானின் இந்த கூற்றுக்கு இதுவரை எந்தவொரு தெளிவான பதிலையும் அளிக்காத இந்தியா, ரஃபேல் போர் விமானத்தை இழந்ததாக ஏற்கவும் இல்லை.

End of அதிகம் படிக்கப்பட்டது

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரிடம் பாகிஸ்தானின் கூற்று குறித்து கேட்ட போது, அது குறித்து தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார்.

சீனா இதை மறுத்திருக்கலாம். ஆனால் மோதலின் போது மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களுக்கு எதிராக அதன் ஆயுதங்கள் எவ்வாறு செயல்பட்டன என்பதை சீனா உன்னிப்பாக கவனித்திருக்கும்.

"உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மிக நவீன சீன ஆயுதங்களில் பெரும்பாலானவை இன்னும் போர்ச் சூழலில் களப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. பாகிஸ்தான் தனது பெரும்பாலான ஆயுதங்களை சீனாவிடமிருந்து வாங்கி வருகிறது, எனவே அவற்றை களப் பரிசோதனை செய்வது அவர்களின் ஏற்றுமதி திறனை அதிகரிப்பதற்கான வாய்ப்பாகும்" என்று ப்ளூம்பெர்க் புலனாய்வின் பாதுகாப்பு ஆய்வாளர் எரிக் ஜு கூறினார்.

ஆயுதங்களுக்காக சீனாவை நம்பியிருக்கும் பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான், சீனா, ரஃபேல், ஜே-10சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சீனாவின் விங் லூங் II ட்ரோன்

கடந்த நான்கு தசாப்தங்களாக சீனா எந்தவொரு பெரிய போரிலும் பங்கேற்கவில்லை. ஆனால் அதிபர் ஜின்பிங்கின் தலைமையின் கீழ், சீனா தனது ராணுவத்தை வலுப்படுத்துவதிலும், அதிநவீன ஆயுதங்களை உருவாக்குவதிலும் எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது.

இந்த ஆயுதங்களை பாகிஸ்தானுக்கும் சீனா வழங்கியுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-24), பாகிஸ்தான் இறக்குமதி செய்த ஆயுதங்களில் 81% சீனாவைச் சேர்ந்தவை.

2015-19 முதல் 2020-24 வரை பாகிஸ்தான் ஆயுத இறக்குமதியை 61 சதவீதம் அதிகரித்துள்ளது.

சீனாவிடமிருந்து பாகிஸ்தான் பெறும் ஆயுதங்களில் நவீன போர் விமானங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும். பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் சில ஆயுதங்களில் சீனாவுக்கும் பங்கு உள்ளது. இவை சீன நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன அல்லது சீன தொழில்நுட்பம் அவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவைப் பற்றி நாம் பேசினால், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதி செய்யும் நாடு. இருப்பினும், 2015-19 மற்றும் 2020-24 க்கு இடையில் அதன் இறக்குமதி 9.3 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்திய ஆயுத இறக்குமதியில் மிகப்பெரிய பங்கு (36 சதவீதம்) ரஷ்யாவிலிருந்து வந்தது, இது 2015-19 (55 சதவீதம்) மற்றும் 2010-14 (72 சதவீதம்) ஐ விட மிகக் குறைந்த பங்காகும். இந்தியாவுக்கான பிரெஞ்சு ஆயுத ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு (28 சதவீதம்) மிகப்பெரிய பங்கைப் பெற்றுள்ளது.

"ஆசியா மற்றும் ஓசியானியா 2020-24-ம் ஆண்டு காலத்தில் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி பிராந்தியமாக இருந்தது, 1990 களின் முற்பகுதியில் இருந்து எப்போதும் இதே நிலை தான் உள்ளது" என்று SIPRI மூத்த ஆய்வாளர் சைமன் வெஸ்மேன் கூறுகிறார். "பெரும்பாலான கொள்முதல் சீனா தொடர்பான அச்சுறுத்தல் உணர்வுகளால் செய்யப்படுகிறது." என்றார் அவர்.

பாகிஸ்தானிடம் உள்ள சீன ஆயுதங்கள்

இந்தியா - பாகிஸ்தான், சீனா, ரஃபேல், ஜே-10சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

1965 இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு, அமெரிக்க ஆயுதத் தடைகள் பாகிஸ்தானை சீனாவை நோக்கித் தள்ளிய போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடங்கியது. சீனா போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகளை வழங்கி நீண்டகால உறவுக்கு அடித்தளம் அமைத்தது.

பனிப்போருக்குப் பின்னர் இந்த உறவு ஆழமடைந்தது, அமெரிக்காவிற்கு பதிலாக சீனா பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கும் முதன்மை நாடாக மாறியது.

இரு நாடுகளும் 1963 ஆம் ஆண்டின் சீன-பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது எல்லை தகராறுகளைத் தீர்த்தது. 1966 -ல் ராணுவ ஒத்துழைப்பு தொடங்கியது. பாகிஸ்தானிடம் இப்போது ஏராளமான சீன ஆயுதங்கள் உள்ளன.

போர் விமானங்கள்: சீனாவின் ஜே -10 சி மற்றும் ஜேஎஃப் -17 தண்டர் போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. ஜே -10 சி சீன நிறுவனமான செங்டு ஏர்கிராஃப்ட் கார்பரேஷனால் தயாரிக்கப்படுகிறது, ஜேஎஃப் -17 தண்டர் சீனா மற்றும் பாகிஸ்தானால் கூட்டாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான், சீனா, ரஃபேல், ஜே-10சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சீனாவின் ஜேஎஃப் -17 தண்டர் போர் விமானங்கள்

ஏவுகணை: திங்களன்று, இந்திய இராணுவம் தனது செய்தியாளர் சந்திப்பில் பி.எல் -15 ஏவுகணையின் எச்சங்களைக் காட்டியது . அது இலக்கை நெருங்கும் முன்பே சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராணுவம் கூறியது. பிஎல்-15 என்பது பாகிஸ்தானால் பயன்படுத்தப்படும் சீன ஏவுகணை ஆகும். சீனாவின் ஏவியேஷன் இண்டஸ்ட்ரி கார்பரேஷன் (AVIC) உருவாக்கிய PL-15 என்பது நீண்ட தூர ரேடார் வழிகாட்டுதலில் இயங்கும் ஏவுகணை ஆகும்.

டிரோன்கள்: பாதுகாப்புத் துறையில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய, சீனா மற்றும் துருக்கியிடமிருந்து நவீன ட்ரோன்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது . இவற்றில் சீனாவின் CH-4 மற்றும் விங் லூங் II ட்ரோன்கள், துருக்கியின் Bayraktar TB2 மற்றும் Akinci டிரோன்கள் அடங்கும்.

வான் பாதுகாப்பு அமைப்பு: பாகிஸ்தானில் சீனாவால் தயாரிக்கப்பட்ட HQ-9, HQ-16 மற்றும் FN-16 போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. இவற்றில், HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பானது 2021 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் ஆயுதங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது ரஷ்யாவின் எஸ்-300 க்கு இணையானதாக கருதப்படுகிறது.

இது தவிர, ஹேங்கோர் வகுப்பின் 8 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க பாகிஸ்தான் 2015 இல் சீனாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது . இது தவிர, இருநாடுகளும் கூட்டாக அல்-காலித் டாங்கியையும் உருவாக்கியுள்ளனர்.

பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடி கூறுகையில், "சீனா-பாகிஸ்தான் உறவு பல தசாப்தங்கள் பழமையானது, காலப்போக்கில் வலுவடைந்து வருகிறது. பாகிஸ்தானை தனது இரட்டை சகோதரர் என்று சீனா பலமுறை வர்ணித்துள்ளது. சமீபத்திய போரில், சீனாவின் பி.எல் -15 ஏவுகணையை பாகிஸ்தான் பயன்படுத்தியது. பாதுகாப்புத் துறையைத் தவிர, சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டம் மற்றும் குவாதர் துறைமுகத்திற்கும் பாகிஸ்தான் மிகவும் முக்கியமானது." என்கிறார் அவர்.

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் சீனா

1947 -ல் சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்னைக்காக 3 போர்களை நடத்தியுள்ளன. பனிப்போர் காலத்தில், சோவியத் யூனியன் இந்தியாவை ஆதரித்தது, அமெரிக்காவும் சீனாவும் பாகிஸ்தானுடன் நின்றன.

பாரம்பரிய அணிசேராக் கொள்கை இருந்த போதிலும், இந்தியா அமெரிக்காவுக்கு நெருக்கமாக இருப்பதாக தெரிகிறது. ஆசியாவில் சீனா தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சிக்கும் சூழலில் இந்தியா தனது பக்கத்தில் இருப்பது நல்லது என்று அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட பிற நட்பு நாடுகளிடமிருந்து இந்தியா ஆயுதங்களை வாங்குவதை அதிகரித்துள்ளது, ரஷ்யாவை சார்ந்திருப்பதைக் குறைத்துள்ளது.

பேராசிரியர் ஹர்ஷ் வி.பந்த் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் துணைத் தலைவராக உள்ளார். இந்த மோதலை அமெரிக்க-சீன அதிகார சமநிலையின் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

பேராசிரியர் ஹர்ஷ் வி.பந்த், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்த மோதலை அமெரிக்க-சீன அதிகார சமநிலை என்ற பார்வையின் மூலமும் பகுப்பாய்வு செய்ய முடியும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு மூலோபாய பங்காளியாக மட்டுமல்லாமல், ஒரு முக்கியமான வர்த்தக பங்காளியாகவும் அமெரிக்கா இந்தியாவைப் பார்க்கிறது. இந்த பின்னணியில் சண்டை நிறுத்தத்திற்கான அமெரிக்க முயற்சிகள் பார்க்கப்பட வேண்டும். இந்தியா தனது ஆற்றல், வளங்கள் மற்றும் நேரத்தை பாகிஸ்தானுக்காக வீணடிப்பதை அமெரிக்கா விரும்பாது" என்கிறார்.

"சீனா பாகிஸ்தானை ஆதரிப்பதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் சீன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. ஆது மட்டுமல்லாமல், சீனா தனது அறிக்கைகள் மூலம் பாகிஸ்தானை ஆதரித்தது."

பாகிஸ்தானின் ஆயுதங்களில் பெரும்பாலானவை சீனாவிடம் இருந்து வாங்கப்படுகின்றன/ இந்தியா அதன் ஆயுதங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து வாங்குகிறது. எனவே, ராகுல் பேடி இந்த மோதலை மறைமுகமாக சீனாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான மோதலாகப் பார்க்கிறார்.

"பாகிஸ்தான் போரில் ஈடுபட்டிருந்தாலும், மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களுக்கு எதிராக சீனாவின் ஆயுதங்களை சோதிக்க வேண்டிய நேரம் இது. போரின் போது பி.எல் -15 ஏவுகணை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இது தவிர, சீனாவின் போர் விமானங்களும் பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேலுடன் மோதிக் கொள்ள வேண்டியிருந்தது." என்று சுட்டிக்காட்டுகிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவத் தாக்குதல்களுக்கு சீனா வருத்தம் தெரிவித்ததுடன், அமைதி மற்றும் ராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க அழைப்பு விடுத்துள்ளது. சமீபத்திய மோதல்களுக்கு முன்பு, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் ஒரு தொலைபேசி அழைப்பில் பாகிஸ்தானுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார். சீனாவை பாகிஸ்தானின் "உறுதியான நண்பர்" என்று அவர் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgeg92l92wno

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

குறிப்பாக, பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை வழங்கும் நிறுவனங்களின் பங்குகளில் ஏற்றம் காணப்பட்டது. இவற்றில் ஒன்று ஜே-10சி போர் விமானங்களை தயாரிக்கும் அவிக் செங்டு விமான கார்ப்பரேஷன் ஆகும்.

சீனாவின் ஷென்சென் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனத்தின் பங்குகள், கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு மே 7ஆம் தேதியன்று மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டன.

@vasee இதைத் தான் குறிப்பிட்டிருந்தேன்.🤞

இப்போது பங்களாதேசும் இந்தரக விமானங்களை கொள்வனவு செய்கிறதாம்.

இரண்டு கரையாலும் அடித்தால் பெரியண்ணன் என்னாவார்?

  • கருத்துக்கள உறவுகள்

The Dassault Rafale fighter jet costs around $124.95 million on average,

The J-10C, a Chinese multi-role fighter jet, is estimated to cost between $40 million and $50 million per unit.

சீன 3 விமானங்கள்= பிரான்ஸ் 1 விமானம்.

Indonesia’s costly bet on French Rafale jets under scrutiny after India-Pakistan aerial clash

US$8.1 billion deal for 42 Rafale jets triggers alarm, but Pakistan’s claims may offer grounds for ‘evaluation’ of their use in Indonesia’s defence strategy.

Indonesia’s high-stakes bet on French-made Rafale jets is facing scrutiny after Pakistan claimed to have shot down three of the same aircraft used by India, raising questions in Jakarta about the cost, capability and strategic logic behind the US$8.1 billion deal.

The controversy erupted on May 7, when the Pakistan Army announced it had downed five Indian warplanes – including three Rafales – during an aerial clash, using its Chinese-made J-10C fighters equipped with advanced PL-15 air-to-air missiles.

While New Delhi has not verified the claims, Indian Air Force Air Marshal AK Bharti told reporters on Sunday that “losses are a part of combat”, without offering further details.

South China Morning Post
No image preview

Indonesia’s bet on French Rafale jets under scrutiny afte...

US$8.1 billion deal for 42 Rafale jets triggers alarm, but Pakistan’s claims may offer grounds for ‘evaluation’ of their use in Indonesia’s defence strategy.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனா தன்ரை வித்தைய பாக்கிஸ்தானிலை வைச்சு அமெரிக்காவுக்கு காட்டியிருக்கு.😎

அடி வாங்கின கிந்தியா பாவம் கதி கலங்கிப்போய் ஊடகத்தில மட்டும் தன்ர தைரியத்த காட்டிக்கொண்டிருக்கு 🤪

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2025 at 05:13, ஈழப்பிரியன் said:

@vasee இதைத் தான் குறிப்பிட்டிருந்தேன்.🤞

இப்போது பங்களாதேசும் இந்தரக விமானங்களை கொள்வனவு செய்கிறதாம்.

இரண்டு கரையாலும் அடித்தால் பெரியண்ணன் என்னாவார்?

இந்த நிறுவனத்தினையே நானும் குறிப்பிட்டிருந்தேன் வெவ்வேறு சந்தைகளில் வெவ்வேறு பங்கு விலை காணப்படுகிறது என கருதுகிறேன்.

இந்த இரக விமானம் அதியுயர் திறன் வாய்ந்த விமானம் அல்ல என கருதுகிறேன், முதன் முதலாக இலங்கை விமானப்படை ஜெட் விமானமாக சீனாவின் J7 விமானத்தினை கொள்வனவு செய்திருந்தது, கிபிரை விட மிக வேகமாக பயணிக்கும் இந்த விமானம் குண்டு வீசும் போது அதன் வேகத்தினை குறைத்து வீசும், அப்போது இந்த விமானம் (J7), Mig 21 விமானத்திற்கு இணையானது என கூறினார்கள், ஆனால் இலங்கை விமானப்படை இந்த இரக விமானத்தினை பின்னர் பாவிக்கவில்லை அதற்கு பதிலாக கிfபிரையே இலங்கை விமானப்படை பாவித்தது.

பாகிஸ்தான் தனிய இந்த J10 விமானத்தினை கொள்வனவு செய்யவில்லை அதனுடன் இணைந்து ராடரினையும் கொள்வனவு செய்துள்ளது.

ரபேலின் ஆரம்ப ராடர் லொக் எச்சரிக்கை மற்றும் ஏவுகணை எச்சரிக்கை ரபேலிற்கு கிடைக்காமல் போனதிற்கு காரணமாக இந்த இரக விமானங்களை தரையில் இருந்த சீன ராடர்கள் இனங்கண்டு அதன் இலக்கினை (டார்கெட் கோடினேசனை) J10 வழங்கியவுடன் அதன் செயல்பாடு முடிவடைந்து விட்டது அதன் பின்னர் விமானம் இலக்கிற்கு ஏவுகனையினை செலுத்தியவுடன் அதன் செயற்பாடு முடிவடைய அதன் பின்னர் அந்த ஏவுகணை சாப் ஏவாக்ஸ் விமானம் வழிநடாத்தியமையால் ரபேலினால் இறுதிவரை அதன் பாதுகாப்பு பொறிமுறை (Spectrum Dome) அதனை அடையாளம் காணமுடியாமல் போய்விட்டதாக கூறுகிறார்கள்.

இது ஒரு ஒருங்கிணைந்த தொடர்பாடல் தாக்குதல் முறை (integrated network).

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2025 at 21:39, குமாரசாமி said:

சீனா தன்ரை வித்தைய பாக்கிஸ்தானிலை வைச்சு அமெரிக்காவுக்கு காட்டியிருக்கு.😎

அடி வாங்கின கிந்தியா பாவம் கதி கலங்கிப்போய் ஊடகத்தில மட்டும் தன்ர தைரியத்த காட்டிக்கொண்டிருக்கு 🤪

பீஜேப்பி அர‌சுக்கு ஆத‌ர‌வான‌வ‌ர்க‌ள் தான் பொய்க‌ளை அதிக‌ம் அவுட்டு விடுகின‌ம் யூடுப்பில் சில‌ ஊட‌க‌ங்க‌ளில்..................கூமுட்டைக‌ள் அதிக‌ம் வாழும் நாடு எது என்று உங்க‌ளுக்கு ந‌ங்கு தெரியும் என்று நினைக்கிறேன்....................

1995ம் ஆண்டு புத்தூரில் வைச்சு சிங்க‌ள‌ விமான‌த்தை எம்ம‌வ‌ர்க‌ள் சுட்டு வீழ்த்தினார்க‌ள்......................பிற‌க்கு ம‌க்க‌ள் அந்த‌ இட‌த்துக்கு போய் பார்க்க‌ இற‌ந்த‌ ஆமின்ட‌ உட‌ல்க‌ளும் விமான‌த்தின் பாக‌ங்க‌ள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த‌து

எம்ம‌வ‌ர்க‌ள் ப‌ல‌ சாத‌னைக்கு சொந்த‌க் கார‌ர்க‌ள்.....................போராட்ட‌ம் தொட‌ங்கின‌ கால‌ம் வ‌ரை எம்ம‌வ‌ர்க‌ளிட‌ம் ஏவுக‌னை இல்லை , கைதுப்பாக்கியால் ஒரு விமான‌த்தை சுட்டு வீழ்த்துவ‌து லேசு ப‌ட்ட‌ விடைய‌ம் இல்லை....................

1995ம் ஆண்டு ஏப்பிர‌ல் 29திக‌தி வீழ்த்தின‌வை

என்ர‌ அம்மா இற‌ந்து ஒரு நாள் க‌ழித்து ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்.............................

இப்ப‌த்த‌ தொழில்நுட்ப‌ம் 1995க‌ளில் இருந்து இருக்க‌னும் எம்ம‌வ‌ர்க‌ள் ப‌ல‌தை க‌ண்டு பிடித்து போராட்ட‌த்துக்கு கூடுத‌ல் ப‌ல‌ம் சேர்த்து இருப்பின‌ம்....................

இந்தியா எங்க‌ட‌ க‌ண் முன் அழியாட்டியும் எங்க‌ட‌ அடுத்த‌ ச‌ந்த‌தி இந்தியா அழிவ‌தை க‌ண்ணால் பாப்பின‌ம்......................

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி சீனாவிடம் இருந்து J35 வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தது பின்னர் அதனை கை விட்டுவிட்டது எனகருதுகிறேன், ஆனால் நேட்டோ ஆயுதங்களில் சவுதி ஆர்வம் கொண்டுள்ளது என கருதுகிறேன் (அண்மையில் அமெரிக்காவிடம் இருந்து 142 ப் இல்லியன் பெறுமதியான ஆயுதங்கள் கொள்வனவு செய்ய முடிவெடுத்துள்ளது.

J35 அமெரிக்க F35 நிகரானது என கூறப்படுகிறது.

1 minute ago, வீரப் பையன்26 said:

இந்த நிகழ்வில் விமான எதிர்ப்பு ஏவுகணையினை பாவித்ததாகவே கேள்விப்பட்டேன், கைத்துப்பாக்கியால் விமானத்தினை சுட்டு வீழ்த்தவில்லை என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, vasee said:

இல்லை அண்ணா த‌லைவ‌ரின் மெய்பாதுகாவ‌ல‌ர் தான் அந்த‌ விமான‌த்தை சுட்டு வீழ்த்தின‌து.................என்ர‌ ஒட்ட விட்ட‌ மாமா விமான‌ம் வீழ்ந்த‌ இட‌த்தை போய் பார்த்த‌வ‌ர் விமான‌த்தின் இஞ்சினின் உள்ளுக்குள் இருக்கும் வ‌ட்ட‌ இரும்பை எடுத்து வ‌ந்து காட்டின‌வ‌ர்...................

விமான‌ ஏவுக‌னை மூல‌ம் தொட‌ர்ந்து வீழ்த்தினால் சிங்க‌ள‌வ‌ன் த‌மிழ‌ர்க‌ளின் நில‌ப்ப‌ர‌ப்பில் குண்டு போட‌ ப‌ய‌ப்பிடுவான்........................இந்த‌ விமான‌ம் வீழ்த்தி ஒரு சில‌ மாத‌ம் க‌ழித்து நவாலி தேவால‌ய‌ம் மீது இர‌ண்டு ஜெட் விமான‌த்தால் குண்டு போட்டு நூற்றுக்கு மேல் ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ள் சிறுமிக‌ள் முதிய‌வ‌ர்க‌ள் என்று ப‌ல‌ர் கொல்ல‌ ப‌ட்ட‌ன‌ர்.....................2006க‌ளில் இருந்து 2009வ‌ரை வ‌ன்னி எங்கும் எவ‌ள‌வு குண்டுக‌ளை வானால் வ‌ந்து போட்ட‌வ‌ங்க‌ள்..................எம்ம‌வ‌ர்க‌ளிட‌ம் ஏவுக‌னைக‌ள் இருந்து இருந்தா ப‌ல‌ விமான‌ங்க‌ளை சுட்டு வீழ்த்தி இருப்பின‌ம்.................புத்துரில் சுட்டு வீழ்த்த‌ ப‌ட்ட‌ விமான‌ம் ஏவுக‌னையால் இல்லை அண்ணா................கூக்கில்ல‌ அடிச்சு பாருங்கோ...............1995 . 04 . 29 புத்தூரில் சுட்டு வீழ்த்த‌ ப‌ட்ட‌ சிங்க‌ள‌ விமான‌ம்

அந்த‌ விமான‌ம் போர் விமான‌ம் கிடையாது ஆமிக‌ளை கொழும்பில் இருந்து பலாலிக்கு ஏற்றி சென்ற‌ விமான‌ம் , மொத்த‌மாய் அந்த‌ விமான‌த்தில் ப‌ய‌னித்த‌ 13மூன்று சிங்க‌ள‌ இரானுவ‌ம் ப‌லி...................

நான் நினைக்கிறேன் க‌டாபி அண்ணா தான் அந்த‌ விமான‌த்தை சுட்டு வீழ்த்தின‌து......................இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌க்கும் போது நான் ஆக‌ சின்ன‌ப் பெடிய‌ன்......................இதை இப்ப‌வும் நினைவு வைச்சு இருக்க‌ கார‌ண‌ம் , என‌து அம்மா இற‌ந்து அடுத்த‌ நாள் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்....................

என‌க்கு தெரிஞ்சு எங்க‌ட‌ போராட்ட‌த்தில் சுட்டு வீழ்த்த‌ப் ப‌ட்ட‌ முத‌லும் க‌ட‌சியுமான‌ விமான‌ம் இது தான்

க‌ரும்புலி தாக்குத‌ல்க‌ளில் ஒரே நேர‌த்தில் அதிக‌ வீமான‌ம் தீக்கிரை ஆக்க‌ப் ப‌ட்ட‌து என்றால் அது 2001ம் ஆண்டு க‌ட்டுநாய‌க்கா ம‌ற்றும் ப‌ண்டார‌நாய‌க்கா விமான‌த் த‌ள‌ தாக்குத‌லில் ந‌ட‌ந்த‌ தாக்குத‌லில்.......................

க‌ரும்புலிக‌ளின் தியாக‌ம் பெரிய‌து🙏...........................

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

சவூதி சீனாவிடம் இருந்து J35 வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தது பின்னர் அதனை கை விட்டுவிட்டது எனகருதுகிறேன், ஆனால் நேட்டோ ஆயுதங்களில் சவுதி ஆர்வம் கொண்டுள்ளது என கருதுகிறேன் (அண்மையில் அமெரிக்காவிடம் இருந்து 142 ப் இல்லியன் பெறுமதியான ஆயுதங்கள் கொள்வனவு செய்ய முடிவெடுத்துள்ளது.

J35 அமெரிக்க F35 நிகரானது என கூறப்படுகிறது.

இந்த நிகழ்வில் விமான எதிர்ப்பு ஏவுகணையினை பாவித்ததாகவே கேள்விப்பட்டேன், கைத்துப்பாக்கியால் விமானத்தினை சுட்டு வீழ்த்தவில்லை என கருதுகிறேன்.

இதில் இர‌ண்டு விக்கி பீடியா ப‌க்க‌ம் இருக்கு அண்ணா அதில் ஏக்கே போன்ர‌ துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த‌ ப‌ட்ட‌தாய் எழுதி இருக்கின‌ம்

இன்னொன்றில் ஏவுக‌னை பாவித்த‌தாக‌ எழுதி இருக்கின‌ம்

இற‌ந்த‌ ஆமிக‌ளின் புள்ளி விப‌ர‌மும் அதில் அதிக‌மாக‌ போட்டு இருக்கு....................

நான் நினைத்தேன் 29.04.1995 என்று , ஆனால் விமான‌ம் அம்மா இற‌ந்த‌ அன்று தான் சுட்டு வீழ்த்தி இருக்கின‌ம் 28.04.1995

த‌மிழில் இந்த‌ விமான‌ம் சுட்டு வீழ்த்த‌ ப‌ட்ட‌ த‌க‌வ‌லை தேடினேன் சிறு ப‌திவு கூட‌ கிடைக்க‌ வில்லை..........................

Edited by வீரப் பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வீரப் பையன்26 said:

கைதுப்பாக்கியால் ஒரு விமான‌த்தை சுட்டு வீழ்த்துவ‌து லேசு ப‌ட்ட‌ விடைய‌ம் இல்லை....................

பையா கைத்துப்பாக்கியால் விமானத்தை சுட்டு விழுத்த முடியாது. அதனுடைய ஆகக்கூடிய சுடும் தூரம் 50யார் தான்.

விமான எதிர்ப்புத் துப்பாக்கி அல்லது ஏவுகணை மூலமாக வீழ்த்தப்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா தயாரிப்பான SAM ( 9K38 Igla) ஏவுகணையால் கடாபி அவர்களினால் 28-04-1995 மற்றும் 29-04-1995 ஆகிய நாட்களில் இரண்டு  அவரோ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனவாகும்.

1024px-9K38_Igla_launch_tubes.jpg

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

பையா கைத்துப்பாக்கியால் விமானத்தை சுட்டு விழுத்த முடியாது. அதனுடைய ஆகக்கூடிய சுடும் தூரம் 50யார் தான்.

விமான எதிர்ப்புத் துப்பாக்கி அல்லது ஏவுகணை மூலமாக வீழ்த்தப்பட்டிருக்கலாம்.

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி அண்ணா👍

சின்ன‌னில் நான் த‌வ‌றாக‌ விள‌ங்கி விட்டேன்.................................

4 minutes ago, zuma said:

ரஷ்யா தயாரிப்பான SAM ( 9K38 Igla) ஏவுகணையால் கடாபி அவர்களினால் 28-04-1995 மற்றும் 28-04-1995 ஆகிய நாட்களில் இரண்டு  அவரோ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படடன.

1024px-9K38_Igla_launch_tubes.jpg

நான் மேல‌ க‌டாபி அண்ணா தான் சுட்டு வீழ்த்தினார் என்றத‌ ச‌ரியாக‌ தான் எழுதி இருக்கிறேன்....................

இந்த‌ ஏவுக‌னைக‌ளால் ஏன் ஜெட் ம‌ற்றும் கிபிர்க‌ளை சுட்டு வீழ்த்த‌ ப‌ட‌ வில்லை , ஜெட் கிபிர் விமான‌த்தின் வேக‌ம் அதிக‌மா.................

ஜெட் விமான‌ம் வ‌ருது என்றால் இர‌ச்ச‌ல் ச‌த்த‌ம் அதிக‌மாய் இருக்கும்🙉🙉🙉🙉🙉🙉..............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி அண்ணா👍

சின்ன‌னில் நான் த‌வ‌றாக‌ விள‌ங்கி விட்டேன்.................................

நானும் சிறுவனாக இருக்கும்போது ஒரு சில பெரியவர்களின் புளுகு கதையை வியந்து கேட்டிருக்கிறேன்!

முன்னேறிப் பாய்தலுக்கு எதிர்ச்சமரான புலிப்பாய்ச்சலின்போது காட்டில் ஆக்களையே சந்திக்காமல் உள்ள மூர்க்கமான சண்டை அணி ஒன்றை வைத்து தான் புலிப்பாய்ச்சல் செய்து உடனடி வெற்றி கிடைத்ததாக கொக்குவிலில் இடம்பெயர்ந்து இருக்கையில் ஒரு அண்ணை அள்ளிவிட்டார்!

அங்கிருக்கையில் தவறுதலாக சக்கை பேரோசையுடன் வெடித்து அந்த பகுதியே அதிர்ந்ததை நேரில் உணர்ந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

நான் மேல‌ க‌டாபி அண்ணா தான் சுட்டு வீழ்த்தினார் என்றத‌ ச‌ரியாக‌ தான் எழுதி இருக்கிறேன்....................

யாரால், எங்கே, என்ன நேரத்தில், என்ன விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதனை இயக்கம் துல்லியமாக ஆவணப்படுத்தியுள்ளார்கள். போருக்கு பின்னர் அவைகள் இரத்தமலனையில் உள்ள இலங்கை விமானப்படை அருங்கடசியக்கத்தில் கட்சிப்படுத்தியுள்ளார்கள், இலங்கை சென்ற போது நான் அங்கே சென்றுஇருந்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

யாரால், எங்கே, என்ன நேரத்தில், என்ன விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதனை இயக்கம் துல்லியமாக ஆவணப்படுத்தியுள்ளார்கள். போருக்கு பின்னர் அவைகள் இரத்தமலனையில் உள்ள இலங்கை விமானப்படை அருங்கடசியக்கத்தில் கட்சிப்படுத்தியுள்ளார்கள், இலங்கை சென்ற போது நான் அங்கே சென்றுஇருந்தேன்.

1998 இல் அடுத்தடுத்து இரண்டு பயணிகள் விமானம் தவறுதலாக சுட்டுவீழ்த்தப்பட்ட பின் இயக்கத்தினால் விமானங்களை சுட்டு விழுத்தக் கூடிய ஏவுகணைகளை வாங்க முடியாதிருந்ததாக சாத்திரி அண்ணை எழுதி இருந்ததாக நினைவுள்ளது.

Edited by ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

நானும் சிறுவனாக இருக்கும்போது ஒரு சில பெரியவர்களின் புளுகு கதையை வியந்து கேட்டிருக்கிறேன்!

முன்னேறிப் பாய்தலுக்கு எதிர்ச்சமரான புலிப்பாய்ச்சலின்போது காட்டில் ஆக்களையே சந்திக்காமல் உள்ள மூர்க்கமான சண்டை அணி ஒன்றை வைத்து தான் புலிப்பாய்ச்சல் செய்து உடனடி வெற்றி கிடைத்ததாக கொக்குவிலில் இடம்பெயர்ந்து இருக்கையில் ஒரு அண்ணை அள்ளிவிட்டார்!

அங்கிருக்கையில் தவறுதலாக சக்கை பேரோசையுடன் வெடித்து அந்த பகுதியே அதிர்ந்ததை நேரில் உணர்ந்தேன்.

என்ர‌ ஒன்ட‌ விட்ட‌ மாமாவும் எங்க‌ட‌ ஊர் அண்ணா மார்க‌ளும் தான் என‌க்கு சின்ன‌லில் இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ப‌ற்றி சொன்ன‌வை...........................

இது பொய்யோ உண்மையோ என்று தெரியாது அண்ணா , சுட்டு வீழ்த்த‌ ம‌ட்ட‌ விமான‌த்தில் இற‌ந்த‌ ஆமியின் கையில் த‌ங்க‌ மோதிர‌ம் இருந்த‌தாம் அதை அந்த‌ ஊர் ம‌க்க‌ளில் யாரோ ஆமின்ட‌ கைய‌ வெட்டி கொண்டு போன‌வையாம் 😁, இது ப‌ற்றி கேள்வி ப‌ட்டு இருக்கிறிங்க‌ளா அல்ல‌து இதுவும் புளுக்கு த‌க‌வ‌லா இருக்குமோ😁..............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

நானும் சிறுவனாக இருக்கும்போது ஒரு சில பெரியவர்களின் புளுகு கதையை வியந்து கேட்டிருக்கிறேன்!

முன்னேறிப் பாய்தலுக்கு எதிர்ச்சமரான புலிப்பாய்ச்சலின்போது காட்டில் ஆக்களையே சந்திக்காமல் உள்ள மூர்க்கமான சண்டை அணி ஒன்றை வைத்து தான் புலிப்பாய்ச்சல் செய்து உடனடி வெற்றி கிடைத்ததாக கொக்குவிலில் இடம்பெயர்ந்து இருக்கையில் ஒரு அண்ணை அள்ளிவிட்டார்!

அங்கிருக்கையில் தவறுதலாக சக்கை பேரோசையுடன் வெடித்து அந்த பகுதியே அதிர்ந்ததை நேரில் உணர்ந்தேன்.

இன்னொரு புளுகு க‌தை அண்ணா , அது என்ன‌ என்றால் பாலியில் நின்ற‌ ஆமி முன்னேறி கொண்டு வ‌ர‌ , த‌ங்க‌ட‌ பெடிய‌ங்க‌ள் மேல‌த்தால் அடிக்க‌ மேல‌ ச‌த்த‌த்தை கேட்டு ஆமி கார‌ன் மீண்டும் ப‌லாலிக்கு போய் விட்டார்க‌ளாம் , இதை கையில் ஆயுத‌த்தோடு நிக்கும் போராளிக‌ள் கேட்டு இருக்க‌னும் இந்த‌ க‌தையை விழுந்து விழுந்து சிரித்து இருப்பின‌ம் 😁.......................

சின்ன‌ வ‌ய‌து தானே பெரிய‌வ‌ர்க‌ள் சொல்லுவ‌தை எல்லாம் உண்மை என்று ந‌ம்பி விடுவோம்😁.........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

இதில் இர‌ண்டு விக்கி பீடியா ப‌க்க‌ம் இருக்கு அண்ணா அதில் ஏக்கே போன்ர‌ துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த‌ ப‌ட்ட‌தாய் எழுதி இருக்கின‌ம்

இன்னொன்றில் ஏவுக‌னை பாவித்த‌தாக‌ எழுதி இருக்கின‌ம்

இற‌ந்த‌ ஆமிக‌ளின் புள்ளி விப‌ர‌மும் அதில் அதிக‌மாக‌ போட்டு இருக்கு....................

நான் நினைத்தேன் 29.04.1995 என்று , ஆனால் விமான‌ம் அம்மா இற‌ந்த‌ அன்று தான் சுட்டு வீழ்த்தி இருக்கின‌ம் 28.04.1995

த‌மிழில் இந்த‌ விமான‌ம் சுட்டு வீழ்த்த‌ ப‌ட்ட‌ த‌க‌வ‌லை தேடினேன் சிறு ப‌திவு கூட‌ கிடைக்க‌ வில்லை..........................

இரன்டு இராணுவ போக்குவரத்து விமானம் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டது, மிக குறுகிய கால இடைவேளையில் பலாலி முகாமிற்கு அருகாமையில்.

எனக்கும் பலவிடயங்களில் பல தவறான புரிதல்கள் இன்றும் உண்டு, இது ஒரு பெரிய விடயமல்ல, சில நேரஙகளில் தவறான விடயம் என தெரிந்தாலும் அதனை திருத்த முடியாமல் இருக்கின்ற நிலைக்குத்தான் வருத்தப்படவேண்டும், தவறாக புரிந்து கொண்டவற்றிற்காக வருத்தப்பட தேவையில்லை.

அதற்காக தன்னம்பிக்கையினை கைவிடக்கூடாது (எனது பார்வையில் ஒரு சிறப்பான மனிதராக உள்ள வெகு சிலரில் நீங்களும் ஒருவர்).

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, vasee said:

என‌க்கு இந்த‌ விமான‌ தாக்குத‌ல் ப‌ற்றி பெரிசா தெரிந்து இருக்காது.................நான் பெரிதும் நேசித்த‌ அம்மா நான் சிறுவ‌னாய் இருக்கும் போது இற‌ந்து விட்டா அந்த‌ அன்று தான் இந்த‌ விமான‌மும் வீழ்த்த‌ப் ப‌ட்டு இருக்கு அதாவ‌து 28.04.1995...............நான் நினைத்தேன் இந்த‌ விமான‌ம் வீழ்த்த‌ப் ப‌ட்ட‌து 29.04.1995 என்று...................

க‌ள‌ நில‌வ‌ர‌ம் நீங்க‌ள் சொன்ன‌து போல் ஏவுக‌னை மூல‌ம் வீழ்த்த‌ப் ப‌ட்டு இருக்கு..........................

நான் சொன்ன‌ த‌வ‌றான‌ விள‌க்க‌த்துக்கு ம‌ன்னிக்க‌வும்🙏....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.