Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாகவே யாழ்பாண தமிழர்களை பொறுத்தளவில் குடாநாடு தாண்டி அதற்கு அப்பால் சென்றால் எல்லோரும் வேற்றினம் தான். பேச்சு நடையில் சற்று வேறுபட்டு இருந்தாலே போதும் அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் அந்நியர்களாகவே பார்ப்பது எமது கலாச்சாரம்.

அமைச்சர் சந்திரசேகரனை அவரது அரசியல் கொள்கைகளுக்காக எதிர்க்கும் தமிழ் தேசியவாதிகளை விட விட அவரின் மலையக தமிழ் மொழிநடையை கிண்டல் செய்பவர்களே அதிகம் டக்லஸை கூட இந்தளவுக்கு கிண்டல் செய்யவில்லை. சந்திரசேகரனை அவரின் மொழிநடையை மிகவும் கீழ்தரமாக கிண்டல் செய்கிறார்கள். இந்த யாழ் குறுகிய தேசியவாதிகள்.

நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள் சந்திரசேகரம் கப்பலில் வந்தவர் என்று வேற கேலி.

அதற்குள் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி வேணுமாம் இவர்களுக்கு. 😂😂😂

  • Replies 59
  • Views 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வேடனை விடுதலை செய்யுங்கள் * "நான் பாணன் அல்ல பறையன் அல்ல புலையன் அல்ல நீ தம்புரானுமல்ல. ஆயிலும் நீ ஒரு மயிருமல்ல!" வேடனின் தாயார் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதி. தந்தையார் விளிம்புநிலை மனிதன்

  • ஏராளன்
    ஏராளன்

    🙏என்னை நிராகரித்தவர்களுக்கும், என்னுடன் நின்றவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள். நான் தொடருவேன்...?

  • நிழலி
    நிழலி

    லண்டன் தமிழ் கடையொன்றில் இப்படியான ஒரு உரையாடல் ( 'தாய் யாழ்ப்பாணத்தில் எவ்விடம்' ) இடம்பெற்றதாக ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டு இருக்கின்றது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30/5/2025 at 16:17, island said:

வேடன் யாழ்ப்பாண தமிழன் என்று என்று எல்லோரும. பெருமை பேசுறாங்க. ஆனால் வேடனோ நான் (யாழ்) பாணன் அல்ல என்று பாடியுள்ளார். 😂

பாணர்

பண்டைக்காலந்தொட்டு இசைக்கலையில் ஈடுபட்ட மரபினராக பாணர் விளங்கியுள்ளனர் என்பதை சங்க இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகின்றது. இவர்களின் குலப்பெருமையினையும் பழமையினையும் ‘பாணன் பறையன் கடம்பன் துடிய’ என்ற புறநானூற்று அடிகள் புலப்படுத்துவதைக் காணலாம். மேலும், துடி அடிப்பவன் துடியன் என்றும், பறை கொட்டுபவன் பறையன் என்றும் குறிப்பிடப் பெற்றது போல பண் இசைப்பவன் பாணன் என்று அழைக்கப் பெற்றான் என்பதை அறிய முடிகின்றது. பாணர்களில் ஆடவரை சென்னியர், வயிரியர், செயிரியர், மதங்கர், இன்னிசைகாரர், பாணரென்ப (வாழ்வியற் களஞ்சியம், தொகுதி.12, ப.329) என்கிறது பிங்கல நிகண்டு. பாணருள் இசைப்பாணரும், யாழ்ப்பாணரும், மண்டைப்பாணரும் (வாழ்வியற் களஞ்சியம், தொகுதி.12, ப.329) இருந்தனர் என்பதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இவர்களில் இசைப்பாணர் பாடற்பாணர், அம்பணவர், அகவர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணர் யாழிசைத்துப் பாடுபவராவர். அவர்கள் வாசித்த யாழில் பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் ஆகியவை சிறப்பாகக் கூறப்படுகின்றன. இந்நால்வகை யாழுள் பேரியாழ் வாசித்த பாணர் பெரும்பாணர் என்றும், செங்கோட்டியாழ் என்ற சீறியாழ் வாசித்த பாணர் சிறுபாணர் என்றும் அழைக்கப்பட்டனர். யாழ்ப் பாணர் யாழேயன்றிக் குழலையும் இசைக்கருவியாகக் கொண்டு தம் கலைத் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது. இதனை, “குழலினும் யாழினும் குரல்முத லேமும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறன் மரபிற் பெரும்பாண் இருக்கை” (சிலப்.35௩7) என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.

https://www.muthukamalam.com/essay/literature/p239.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://www.youtube.com/watch?v=qpWHNA2loyA

https://youtu.be/qpWHNA2loyA?si=M8fjH0gC2N0POK1t

திராவிடத்தின் கையை பிடித்து களைத்து போயிருக்கும் எமக்கு கேரள கை நமக்கு கொடுக்குமா பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா ராப் பாடகர் வேடன் தன்னை தலித்தாக அடையாளம் செய்து கொண்ட போதும், எங்கேயும் சாதியை பெருமையாக வெளிப்படுத்தியது இல்லை. அப்படி இருக்கும் போது அவர் புகழ் பெற்ற பிறகு, அவரை சாதியாக கொண்டாட செய்வது நாகரிகம் அல்ல. சாதிய, மத, இன,நிற பாகுப்பாடிற்கு எதிராக அவர் பாடும் பாடல்கள் கேரளா இளைய தலைமுறையை கொண்டாட வைக்கிறது. வாழ்த்துக்கள் வேடன்.

கந்தமங்கலம் மா.அறிவழகன்.விசிக மயிலாடுதுறை மாவட்டம் ·

500309830_1472654767049575_6719027360375

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://youtube.com/shorts/EnpLFLqwmyk?si=6dz02Rm_7V1AzLRM

வேடன் வேட்டையாட வந்தவன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

வேடன் இவன் புலி

  • கருத்துக்கள உறவுகள்

யாருடா

நீ...

யாருடா

நீ...

புயலப் போல

கெளம்பி வந்தாய்

யாருடா

நீ...

 

வேடனா நீ...

வேடனா நீ...

 

அநீதிகளை

அதர்மங்களை

வேட்டையாட வந்த

வேடனா நீ...

 

அநீதிகளை

வேட்டையாட

வந்த வேடனா...

 

அதர்மங்களை

தட்டிக் கேட்க

வந்த வேடனா...

 

 

யாருடா

நீ...

யாருடா

நீ...

புயலப் போல

கெளம்பி வந்தாய்

யாருடா

நீ...

 

வேடனா நீ...

வேடனா நீ...

 

அநீதிகளை

அதர்மங்களை

வேட்டையாட வந்த

வேடனா நீ...

 

 

கொட்ட கொட்ட

குனிஞ்ச கூட்டம்

எழுந்து நிற்குதே...

 

உன் பாடல் கேட்டு

எழுந்து நிற்குதே...

 

தட்டிக் கேட்கும்

உணர்வுகளோ

எட்டி பாக்குதே...

 

உன் பாடல் கேட்டு

எட்டி பாக்குதே...

 

 

யாருடா

நீ...

யாருடா

நீ...

புயலப் போல

கெளம்பி வந்தாய்

யாருடா

நீ...

 

வேடனா நீ...

வேடனா நீ...

 

அநீதிகளை

அதர்மங்களை

வேட்டையாட வந்த

வேடனா நீ...

 

 

அடக்கப்பட்ட

ஒடுக்கப்பட்ட

மக்களின் குரல் நீ...

 

ஆதிக் குடியின்

வழியில் வந்த

எளியோர் மொழி நீ...

 

 

யாருடா

நீ...

யாருடா

நீ...

புயலப் போல

கெளம்பி வந்தாய்

யாருடா

நீ...

 

வேடனா நீ...

வேடனா நீ...

 

அநீதிகளை

அதர்மங்களை

வேட்டையாட வந்த

வேடனா நீ...

 

வீழ்ச்சியுற்ற

இனத்திற்கு நீ

எழுச்சியூட்ட வந்தாய்...

 

நீ சொல்லிசையால்

சூடு சொரணை

கொப்பளிக்க செய்தாய்...

 

நீ

சாதி மத

பேதங்களை

வேட்டையாடும் வீரனா...

 

நீ

சமத்துவத்தின்

பாதைகளை

சமைக்க வந்த தீரனா...

 

 

 

யாருடா

நீ...

யாருடா

நீ...

புயலப் போல

கெளம்பி வந்தாய்

யாருடா

நீ...

 

வேடனா நீ...

வேடனா நீ...

 

அநீதிகளை

அதர்மங்களை

வேட்டையாட வந்த

வேடனா நீ...

 

 

உந்தன் பாடல்

மானுடத்தின்

விடுதலை குரலே...

 

உன் பாடல் வழியே

விழிப்புக் கொள்ளும்

மக்கள் திரளே...

 

சுரண்டலுக்கு

எதிராய் நீ

சூளுரைக்கிறாய்...

 

சூழ்ச்சி எல்லாம்

வீழ்ச்சியுற

பாடல் சமைக்கிறாய்...

 

 

யாருடா

நீ...

யாருடா

நீ...

புயலப் போல

கெளம்பி வந்தாய்

யாருடா

நீ...

 

வேடனா நீ...

வேடனா நீ...

 

அநீதிகளை

அதர்மங்களை

வேட்டையாட வந்த

வேடனா நீ...

 

_ ஏ. இரமணிகாந்தன்

திரைப்படப் பாடலாசிரியர்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

பாலக்காடு கோட்டை மைதானம் அதிர்ந்தது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.