Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுப்மன் கில் கேப்டன்: இந்திய அணியில் கோலி இடத்தை நிரப்பப் போவது யார்?

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில், சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சுப்மன் கில்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 24 மே 2025

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் என நமக்கு மிகப்பரிட்சயமான கிரிக்கெட் வீரர்கள் இனி இந்திய டெஸ்ட் அணியில் இல்லை. இவர்களுக்கு பதிலாக பல இளம் தலைமுறை வீரர்களுக்கான கதவு இந்திய அணியில் திறந்துள்ளது.

ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள பட்டோடி டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான புதிய கேப்டன் பெயரும் பிசிசிஐ தேர்வுக் கூட்டத்தில் இன்று (மே24) அறிவிக்கப்பட்டது

இதன்படி, சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார், துணைக் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் வரிசையில் சுப்மன் கில் 5வது இடத்தில் உள்ளார். இவருக்கு முன்னதாக மன்சூர் அலிகான் பட்டோடி, சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், ரவி சாஸ்திரி ஆகியோர் இளம் வயதில் இந்திய அணியை தலைமை தாங்கியுள்ளனர்.

பிரிட்டனில் டெஸ்ட் விளையாடுவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு. அதேநேரம் சவாலானதும் கூட. சிறந்த பேட்டர், பந்துவீச்சாளரின் திறமை பிரிட்டன் மண்ணில் அங்கீகரிக்கப்படும், மதிக்கப்படும், உலகரங்கில் உயர்த்தப்படுவார்.

இங்கிலாந்து தொடரிலிருந்துதான் கங்குலி, திராவிட் போன்ற ஜாம்பவான்கள் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. ஆதலால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஒரு வீரர் முத்திரை பதித்துவிட்டால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை உலகளவில் கவனிக்கப்படும்.

வாய்ப்பும், சவாலும் ஒன்றாகக் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து கில் தலைமையில் இந்திய அணியின் டெஸ்ட் சகாப்தம் தொடங்குகிறது. அது மட்டுமல்லாமல் 2025-27ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றுப் போட்டியும் இதிலிருந்து தொடங்குகிறது.

ரோஹித் சர்மா, கோலி, அஸ்வின், ஷமி ஆகிய சீனியர் வீரர்கள் இல்லாத சூழலில், பல புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கதவுகள் இந்திய அணியில் திறக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தமிழக வீரர் சாய் சுதர்சன், அர்ஷ்தீப் சிங், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் முதல்முறையாக வாய்ப்புப் பெற்றுள்ளனர். அபிமன்யு ஈஸ்வரன் பலமுறை இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டதில்லை, இந்த முறையும் அதே நிலையா என்பது தொடரில் தெரிந்துவிடும்.

நீண்டஇடைவெளிக்குப்பின் கருண் நாயர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் டெஸ்ட் அணிக்குள் மீண்டும் திரும்பியுள்ளனர்.

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஸ்பெசலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவகையில் குல்தீப் யாதவுடன் சேர்ந்து சுழற்பந்துவீச ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,குஜராத் அணியில் சாய் சுதர்சனின் பங்களிப்பு அவருக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது

18 ஆண்டுகளுக்கு முந்தைய வெற்றி

பிரிட்டனில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்கில் ஜூன் 20ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 2ம் தேதி எச்ஜ்பாஸ்டனிலும், 3வது டெஸ்ட் போட்டி ஜூலை 10 ம்தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், ஜூலை 23ம் தேதி ஓல்ட் டிராபோர்டில் 4வது டெஸ்ட் போட்டியும், 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்திலும் நடக்கிறது.

கடைசியாக பட்டோடி டிராபி டெஸ்ட் தொடரை 2007ம் ஆண்டு ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணி 1-0 என்று வென்றது. அதன்பின், கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அணி பிரிட்டன் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இளம் கேப்டன் கில் தலைமையிலான அணி சாதிக்குமா என்பது எதிர்பார்ப்புதான்.

இந்திய அணி குறித்த பார்வை

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர்

பட்டோடி டிராபி டெஸ்ட் தொடருக்காக 18 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் இன்று (மே24) அறிவித்தனர்.

அந்த வகையில் கேப்டனாக சுப்மன் கில், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்கால இந்திய அணியை கட்டமைக்கும் பொருட்டு 30 வயதுக்குள் இருக்கும் வீரர்களுக்கே அதிகமான முன்னுரிமை தரப்பட்டுள்ளது. ரவீந்திர ஜடேஜா, கருண் நாயர், பும்ரா மட்டுமே 30 வயதைக் கடந்தவர்கள், மற்ற வகையில் இளம் வீரர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பேட்டிங் வரிசையில் கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், கருண்நாயர், துருவ் ஜூரெல் ஆகியோர் உள்ளனர். இதில் தொடக்க வீரருக்கு சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் உள்ளனர்.

கோலியின் இடத்தில் யார்?

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விராட் கோலியின் இடத்தில் கேஎல் ராகுல் விளையாட வாய்ப்பு

டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் இடத்தை நிரப்ப சாய் சுதர்சன் பயன்படுத்தப்படலாம் என்றாலும், சுப்மன் கில்லுடன் ஆட்டத்தை சாய் சுதர்சன் தொடங்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு இருந்தால், விராட் கோலியின் 4வது இடத்தில் கருண் நாயர் அல்லது கே.எல்.ராகுல் களமிறங்கலாம்.

ரிஷப் பண்டுக்கு மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல், கே.எல்.ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆல்ரவுண்டர்கள்

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர், நிதிஷ் குமார் ரெட்டியும், சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

5 வேகப்பந்து வீச்சாளர்கள்

பிரிட்டன் மைதானங்கள் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், நன்கு ஸ்விங் ஆகும், இந்திய அணி டெஸ்ட் ஆடும்போது அங்கு குளிர்காலம் இருக்கும் என்பதால் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பதால் வேகப்பந்துவீச்சுக்கு முன்னுரிமை அளி்க்கப்பட்டுள்ளது.

பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் ஆகியோரும், ஸ்பெசலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முகமது ஷமி காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை, தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அளவு உடல்நிலை தகுதியாக இல்லை என்பதால், அவர் பெயர் பரிசீலனையில் இல்லை. பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்த சர்ஃபராஸ் கான், ஹர்ஷித் ராணா, தேவ்தத்படிக்கல், தனுஷ் கோட்டியான் ஆகியோர் பெயரும் பரிசீலிக்கப்படவில்லை.

இந்திய அணி விவரம்

சுப்மன் கில்(கேப்டன்) ரிஷப் பண்ட்(துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, சாய் சுர்சன், அபமன்யு ஈஸ்வரன், கருண் நாயகர், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அர்ஷ்தீப் சிங்.

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழக வீரர் இருவருக்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சனின் அற்புதமான ஆட்டம் அவருக்கான இடத்தை டெஸ்ட் அணியில் உறுதி செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் மிஸ்டர் கன்சிஸ்டென்சி எனப் பெயரெடுத்த சுதர்சன் இங்கிலாந்து தொடரில் எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல வாஷிங்டன் சுந்தரும் தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அபிமன்யு ஈஸ்வரனின் இவரின் தந்தை தமிழர், தாய் பஞ்சாபி என்றாலும், அவர் மேற்கு வங்க அணிக்காக ஆடுகிறார்.

கில்லுக்கு புதிய அனுபவம்

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில், இந்திய ஒருநாள் அணி அல்லது டெஸ்ட் அணியை இதற்கு முன் வழிநடத்தியது இல்லை.

ஆனால் 2024ம் ஆண்டு ஜிம்பாப்பே சென்ற இந்திய T20 அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக இருந்து வழி நடத்தியிருக்கிறார்.

2020-21 ம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடரில்தான் டெஸ்ட் போட்டியில் சுப்மன் அறிமுகமாகினார். இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கில் 5 சதங்கள், 7 அரைசதங்கள் உள்பட 1,893 ரன்கள் சேர்த்து 35 சராசரி வைத்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் கில் 42 சராசரியும், வெளிநாடுகளில் 27 சராசரியும் வைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் இதுவரை 2021-24 வரை 10 போட்டிகளில் ஆடி 592 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் பிரிட்டன் மண்ணில் 3 டெஸ்ட் போட்டியில் ஆடிய கில் 88 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். சொந்த மண்ணில் அதிகமான ரன்கள் குவித்த கில், வெளிநாடுகளில் பெரிதாக இதுவரை ரன்கள் குவித்ததில்லை.

8 ஆண்டுகளுக்குப்பின் கருண் நாயர்

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல் , கருண் நாயர்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

கருண் நாயர் கடைசியாக 2017ம் ஆண்டு மார்ச் 25 முதல் 28ம் தேதிவரை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக பங்கேற்றார். அதன்பின் 8 ஆண்டுகளுக்குப்பின் கருண் நாயர் இப்போது மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை 6 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கருண் நாயர் முச்சதம்(303) அடித்ததுதான் சிறந்த பேட்டிங்காக பார்க்கப்படுகிறது.

அதைத் தவிர்த்து உள்நாட்டுப் போட்டிகளில் முதல்தரப் போட்டிகளிலும், லிஸ்ட் ஏ போட்டிகளிலும் 100 ஆட்டங்களுக்கு மேல் ஆடிய அனுபவ வீரர் என்பதாலும், பிரிட்டனில் கவுண்டி போட்டிகளில் ஆடிய அனுபவம் இருப்பதாலும் சமீபத்திய உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியதாலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸ்ரேயாஸ், ஷமி ஏன் இல்லை

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்ரேயாஸ், ஷமி பெயர் ஏன் பரிசீலிக்கப்படவில்லை என்பதற்கு தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில் "கணுக்கால் காயத்திலிருந்து உடல்நலன் தேறி ஷமி இப்போதுதான் வந்துள்ளார். ஐபிஎல் ஆடியபின் மீண்டும் லேசாக வலிவரத் தொடங்கியுள்ளது. அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தில் அவரால் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடும் நிலையில் உடல்நிலை இல்லை எனத் தெரியவந்தது. இதனால் அவருக்கு கூடுதலாக ஓய்வு அளிக்கப்பட்டது.

ஸ்ரேயாஸ் அய்யர் சிறந்த வீரர். ஒருநாள், டி20 போட்டிக்கான சிறந்த வீரர். உள்நாட்டுப் போட்டிகளிலும் சிறப்பாக ஸ்ரேயாஸ் ஆடியுள்ளார். இப்போதுள்ள நிலையில் டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸுக்கு இடமில்லை" எனத் தெரிவித்தார்.

வேகப்பந்துவீச்சு வலிமையாக இருக்கிறதா?

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வேகப்பந்துவீச்சாளர்கள் தேர்வு குறித்து அகர்கர் கூறுகையில் " வேகப்பந்துவீச்சுக்கு முன்னுரிமை அளித்து வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். பும்ராவால் 5போட்டிகளிலும் பங்கேற்க முடியாது, அவரின் வேலைப்பளுவை கவனத்தில் வைத்திருக்கிறோம். அர்ஷ்தீப் சிங் புதிய பந்தில் நன்கு ஸ்விங் செய்யக்கூடியவர், அதிலும் பிரிட்டன் மண்ணில் அவரால் சிறப்பாக பந்துவீச முடியும். கவுண்டி அணியிலும் அர்ஷ்தீப் ஆடியுள்ளார்.

நிதிஷ், ஷர்துல் இருவரும் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள். சில நேரத்தில் கடைசிவரை பேட்டர்கள் தேவை எனும் பட்சத்தில் இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். வேகப்பந்துவீச்சில் வெரைட்டி தேவை என்பதை கருதி வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

சுப்மன் கில் எழுச்சி எப்படி?

சுப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய அணி கேப்டன், சாய் சுதர்சன், விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விராட் கோலியுடன் சுப்மன் கில்

சுப்மன் கில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தேர்வுக் குழுத்தலைவர் அகர்கர் பேசுகையில் " ரோஹித் சர்மாவுக்குப்பின் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்க பல வாய்ப்புகளை கடந்த ஓர் ஆண்டாக பரிசீலித்தோம், அலசினோம். வீரர்களிடமிருந்தும் ஓய்வறையில் இருந்து கருத்துக்களைக் கேட்டோம். அதில் சுப்மன் கில் குறித்து நல்லவிதமான கருத்துக்கள் வந்தன. இளம் வீரர், தொடர்ந்து தன்னை வளர்த்து வருகிறார். கடந்த ஆண்டைப் போல் கில் இப்போது இல்லை, அடுத்த ஆண்டு இதைவிட சிறந்தவராக இருப்பார் என நம்புகிறோம்.

ஏதோ ஒரு சில டூருக்காக மட்டும் கேப்டன்களை தேர்வு செய்யக்கூடாது. கடந்த ஆண்டிலிருந்து கில் ஆட்டம் வளர்ந்து வருகிறது. நிச்சயமாக சிறந்த கேப்டனாக கில் வருவார். இங்கிலாந்து தொடரில் ஒவ்வொருவரின் திறமையும் பரிசோதிக்கப்படும். ஆஸ்திரேலியத் தொடரில் கில் சிறப்பாக செயல்பட்டார். ரோஹித், கோலி இல்லாத நிலையில் இளம் வீரர்கள் கொண்ட அணிக்கு நிச்சயமாக சவாலாக இந்தத் தொடர் அமையும். பேட்டிங்கைப் பொருத்தவரை கவலை இல்லை, அனுபவம்தான் அடுத்தடுத்து வளர்த்தெடுக்கும்.

ரிஷப் பண்ட் கடந்த 2 ஆண்டுகளில் சிறந்த பேட்டராக உருவெடுத்துள்ளார். சுப்மன் கில்லுக்கு நிச்சயமாக ரிஷப் பண்ட் துணையாக இருப்பார். இரு இளம் வீரர்களுமே அணியை முன்னோக்கி அழைத்துச் செல்வார்கள் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd7gy40l3pdo

  • Replies 101
  • Views 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nunavilan
    nunavilan

    மிக குறுகிய காலத்தில் டெஸ்ட் போட்டியின் தலைவராக கில் வந்தது நம்ப முடியவில்லை. டெஸ்ட் போட்டியில் மிக்க அனுபவம் உள்ளவர்களையே பல நாட்டு குழுக்கள் உள்வாங்குகின்றன. இந்தியா ரி 20 போட்டிக்கு தெரிவு ச

  • vasee
    vasee

    இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் டூக் பந்து பாவிக்கின்றது இது குக்கபாரா பிங்க் பந்தினை விட அதிக விசம் கொண்டது, இந்தியணியிற்கு பந்தும் ஆடுகளமும் உயிர்ப்புடன் இருந்தால் தலைவலியாக இருக்கும் இந்த மாதிரியா

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    இந்தியாவின் தொட‌க்க‌ம் மிக‌ அருமை த‌மிழ‌க‌ வீர‌ர் அவ‌ரின் முத‌ல் டெஸ்ட் போட்டியில் ர‌ன்ஸ் எதுவும் அடிக்காம‌ அவுட் ஆகி விட்டார்..................................

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந்திட‌ம் தோல்வி அடைந்து நாடு திரும்புவின‌ம்..............இங்லாந்தை சொந்த‌ ம‌ண்ணில் வெல்ல‌ அவுஸ்ரேலியா அணியால் ம‌ட்டும் தான் முடியும்..........................ப‌டு தோல்வி அடையாம‌ சில‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிக்க‌லாம் , இங்லாந்தில் ம‌ழை பெய்யும் சில‌ போட்டிக‌ளில் ம‌ழை யால் விளையாட்டு த‌டைப் ப‌ட்டால் ச‌ம‌ நிலையில் முடிக்க‌லாம்😁👍........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவர் கில்; அறிமுகமாகிறார் தமிழக வீரர் சாய் சுதர்சன்

Published By: DIGITAL DESK 2

26 MAY, 2025 | 01:40 PM

image

(நெவில் அன்தனி)

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளதுடன் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இந்தியாவின் புதிய சகாப்தம் ஆரம்பமாகவுள்ளது.

ரவிச்சந்திரன் அஷ்வின், முன்னாள் தலைவர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராத் கோஹ்லி ஆகிய மூவரும் ஓய்வுபெற்றதை அடுத்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முழுநேர தலைவராக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

2605_india_s_new_captain_gill_and_vice_c

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

'இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டதை மிகப் பெரிய கௌரவமாகவம் பாக்கியமாகவும் கருதுகிறேன். ஆடுகளத்தில் சிறந்த ஆற்றல்கள், ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றுக்கு முன்னுதாரணமாக இருந்து அணியை வழிநடத்துவேன்' என ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக ஜூன் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் தனது தலைமைப் பதவியை 25 வயதான ஷுப்மான் கில் தொடங்கவுள்ளார்.

வலதுகை துடுப்பாட்ட வீரரான ஷுப்மான் கில், இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்களுடன் 1893 ஓட்டங்களை மொத்தமாக பெற்று 35.05 என்ற சராசரியைக் கொண்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் உதவித் தலைவராக ரிஷாப் பான்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியை இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருடன் இந்தியா ஆரம்பிக்கவுள்ளது.

சாய் சுதர்சன் அறிமுக வீரர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முன்னிட்டு அஜித் அகார்கரின் தலைமையிலான தெரிவுக் குழுவினர் பெயரிட்டுள்ள 18 வீரர்களைக் கொண்ட இந்திய குழாத்தில் சென்னையைப் பிறப்பிடகமாகக் கொண்ட தமிழக துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சன் அறிமுக வீரராக இடம்பெறுகிறார்.

2605_sai_sudharsan.png

சாய் சுதர்சன் 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

29 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்சன் 7 சதங்கள் உட்பட 1957 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அவரது அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கை 213 ஓட்டங்களாகும்.

அவர் பெரும்பாலும் யஷஸ்வி ஜய்ஸ்வாலுடன் ஆரம்ப வீரராக களம் இறங்குவார் எனவும் விராத் கோஹ்லியின் 4ஆம் இலக்கத்தை வழமையான ஆரம்ப வீரர்களில் ஒருவரான கே.எல். ராகுல் நிரப்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கில் மற்றும் ரிஷாப் பான்ட் ஆகியோருடன் சிரேஷ்ட வீரர்களான கே.எல். ராகுல், ஜஸ்ப்ரிட் பும்ரா, ரவிந்த்ர ஜடேஜா, மொஹமத் சிராஜ் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

கடந்த ஓரிரு வருடங்களாக இந்திய அணியில் இடம்பெற்றுவந்த த்ருவ் ஜுரெல், ஆகாஷ் தீப் ஆகியோருக்கும் இந்திய குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குழாம்: ஷுப்மான் கில் (தலைவர்), ரிஷாப் பான்ட் (உதவித் தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிட்டிஷ் குமார் ரெட்டி, ரவிந்த்ர ஜடேஜா, த்ருவ் ஜுரெல், வொஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமத் சிராஜ், ப்ராசித் கிரிஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

https://www.virakesari.lk/article/215714

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் வீர‌ர்க‌ள் டெஸ்ட் விளையாட்டை அதிர‌டியாக‌ விளையாடுகின‌ம்......................இந்தியா அணியில் தெரிவான‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் நிதான‌மாக‌ நின்று விளையாட‌ மாட்டின‌ம்..........................ஜ‌பிஎல்ல‌ விளையாடின‌ வீர‌ர்க‌ளை தான் டெஸ்ட் போட்டிக்கும் தெரிவு செய்து இருக்கின‌ம்......................இங்லாந் தொட‌ரை வெல்லும்👍.......................................

  • கருத்துக்கள உறவுகள்

மிக குறுகிய காலத்தில் டெஸ்ட் போட்டியின் தலைவராக கில் வந்தது நம்ப முடியவில்லை. டெஸ்ட் போட்டியில் மிக்க அனுபவம் உள்ளவர்களையே பல நாட்டு குழுக்கள் உள்வாங்குகின்றன. இந்தியா ரி 20 போட்டிக்கு தெரிவு செய்த வீரர்கள் போல் தெரிவு செய்துள்ளது ஆச்சரியமளிக்கிறது.

இந்தியா ஒரு பரீட்சாத்தமாக பார்க்கிறதா எனவும் எண்ண தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து இந்துஸ்தானை வைட்வோஷ் செய்யும்!😂

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து ஒரு ஆச்சரியமான குழுவாக (டெச்ட்) ல் தெரியவில்லை. இந்தியா ஒரு சவாலான போட்டியையே கொடுக்கும். இங்கிலாந்து ஒரு சராசரியான குழு. ஒரு வேளை போட்டி மைதானங்கள் சில சவாலை கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா புதிய வீரர்களோடு இறங்குகிறது.

கேப்டன் உட்பட அனைவருக்கும் தம்மை டீமில் நிலை நிறுத்த சாதித்து காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

இது இந்தியாவுக்கு பாரிய அனுகூலமாக இருக்கும்.

அதேபோல் இந்த வசந்த காலம் வரலாற்றில் இல்லாத வரட்சியான வசந்த காலம். இதுவும் இந்திய ஸ்பின்னர்களுக்கு வசதியாக இருக்கும்.

இங்கிலாந்தில் சொகைப், லீ இருவரும் இந்த அனுகூலத்தை எந்தளவு சாதமகா பயன்படுத்துவார்கள் என்பதும் சந்தேகமே.

இங்கிலாந்து டங் , க்ரோலி போன்ற கவுண்டி தரத்துக்கு மேல் எழும்பி சர்வதேச தரத்தில் ஆட முடியாத இருவரை உள்வாங்கி உள்ளனர்.

அண்மைய சிம்பாப்வே போட்டியை கண்டு களித்தேன். பென் ஸ்டோக்ஸ் அற்புதமாக பந்து வீசினார்.

1981 Botham Ashes, 2005 Flintoff Ashes போல இந்த தொடரில் ஸ்டோக்ஸ் தனி ஆளாக பிரகாசிப்பார் என நினைக்கிறேன்.

சிம்பாவ்வேயில் பென்னட் எனும் ஒரு 21 வயது பையன் விளையாடுகிறார். அருமையான மட்டை அடி. ஆனால் பவுண்சருக்கு தடுமாறுவது போல படுகிறது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் டூக் பந்து பாவிக்கின்றது இது குக்கபாரா பிங்க் பந்தினை விட அதிக விசம் கொண்டது, இந்தியணியிற்கு பந்தும் ஆடுகளமும் உயிர்ப்புடன் இருந்தால் தலைவலியாக இருக்கும் இந்த மாதிரியான சூழ்நிலையில் ராகுல் போன்ற ஆட்டக்காரர்கள் சிறப்பான தேர்வு சாய் சுதர்சனும் நல்ல தெரிவாக இருக்கும் என கருதுகிறேன், நமது கில் கூட இந்த சூழலுக்கு மிகவும் சிரமப்படுவார் (பிச்சை வேண்டாம் நாயை பிடி).

ஏற்கனவே பாகிஸ்தானுடனான போரில் ஏற்பட்ட தோல்விக்கு பாவம் எனது இந்திய நண்பர்கள் கடும் ஆற்றாமையில் இல்லாத பொல்லாதது எல்லாம் சொல்லி பைத்தியகாரர் போல் அலைகிறார்கள், இந்த தோல்வியினை (விளையாட்டில் கூட தோற்க விரும்பாத) எப்படி எதிர்கொள்ளப்போகிறார்களோ?

கடவுள்தான் ஏதாவது அதிசயம் நிகழ்த்தி இந்தியணி வெல்ல வைத்து என்னை காப்பாற்ற வேண்டும்.☹️

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷுப்மான் கில்லை விராட் கோலியுடன் ஒப்பிடுவது நியாயமா? - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காத்திருக்கும் சவால்கள்

டைகர் பட்டோடி, சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், ரவி சாஸ்திரி, இளைய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டைகர் பட்டோடி, சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோருக்குப் பிறகு ஐந்தாவது இளைய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் (வலது) இருப்பார்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஷார்தா உக்ரா

  • பதவி, மூத்த விளையாட்டு பத்திரிகையாளர், பிபிசிக்காக

  • 58 நிமிடங்களுக்கு முன்னர்

இன்றைய விளையாட்டு சூழலில், கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில்லை விராட் கோலியுடன் ஒப்பிடுவது சரியானதாக தெரியவில்லை.

இருப்பினும், 2014ஆம் ஆண்டில் திடீரென மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பிறகு உடனடியாக விராட் கோலிக்கு வழங்கப்பட்ட டெஸ்ட் அணியின் தலைமைப் பதவியுடன் தற்போதைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், சிலபல வித்தியாசங்கள் இருப்பதை உணரமுடியும்.

2014ஆம் ஆண்டில் விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது, அவர் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,855 ரன்கள் எடுத்திருந்தார். ஆறு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்கள் எடுத்திருந்த கோலியின் சராசரி ரன்ரேட் 39.46 ஆக இருந்தது, அப்போது அவருக்கு வயது 26 மட்டுமே.

ஜூன் 20ஆம் தேதி ஹெடிங்லியில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக களம் இறங்கும்போது ஷுப்மான் கில்லின் வயது 25 ஆண்டு 285 நாட்களுமாக இருக்கும். கேப்டன்சியைப் பொறுத்தவரை, டைகர் பட்டோடி, சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ் மற்றும் ரவி சாஸ்திரி (ஒரே ஒரு டெஸ்டுக்கு மட்டுமே தலைமை தாங்கியவர்) ஆகியோருக்குப் பிறகு ஐந்தாவது இளைய வீரராக ஷுப்மான் கில் இருப்பார்.

ஷுப்மான் கில் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,893 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில், அவர் ஐந்து சதங்களையும் ஏழு அரை சதங்களையும் அடித்து சராசரி ரன்ரேட் 35.05 வைத்திருக்கிறார்.

2011ஆம் ஆண்டுக்குப் பிறகு, விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினார் என்றாலும், டெஸ்ட் கேப்டன் என்ற பதவிதான் கோலியை கிரிக்கெட் ஜாம்பவான் ஆக்குவதில் முக்கிய பங்கு வகித்தது என்றால் அது மிகையாகாது.

RCB vs PBKS, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோலி தன்னை மிகவும் வெற்றிகரமான கேப்டனாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். விராட் கோலியின் இந்த அபரிமிதமான எழுச்சியை கில் நேரில் கண்டிருக்கிறார்.

அதாவது, சிறந்த இந்திய கேப்டனாக மாற விரும்பினால், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தேவைப்படும் கடினமான அம்சங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஷுப்மான் கில் நன்கு அறிவார்.

கில் இளைஞராக இருப்பதால் சாதிக்க போதுமான நேரம் அவருக்கு இருக்கிறது. 2014ஆம் ஆண்டில் கோஹ்லி கேப்டனாக பொறுப்பேற்றபோது இளம்வயது என்ற அம்சம் அவருக்கு சாதகமாக இருந்தது.

தற்போது, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு மட்டுமே கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், ஆனால் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர், "ஒன்று அல்லது இரண்டு சுற்றுப்பயணங்களுக்கான கேப்டனைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் முதலீட்டை நாங்கள் செய்ய விரும்புகிறோம்" என்று கூறியிருந்தார்.

இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துடன், இரண்டு வருட கால உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளும் தொடங்கிவிடும்.

ஒரு வகையில் பார்க்கப்போனால், கில் தாக்குப்பிடிப்பாரா இல்லையா என்பதைப் பார்க்க அதிரடியாக களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்.

கேப்டன்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. கோலியின் ஆக்ரோஷம், மற்றும் ரோஹித் சர்மாவின் நிதானமான அணுகுமுறையுடன் ஒப்பிடும் ோது, கில்லின் ஆளுமை பிறரிடம் இருந்து மாறுபட்டதாக இருக்கலாம். கோலி மற்றும் ரோஹித் இருவரின் சில குணங்களும் கில்லிடம் உள்ளன என்பதும் உண்மையே.

ரோஹித் போன்ற அமைதியான நடத்தையுடனும், கோஹ்லி போன்ற சுய விழிப்புணர்வுடனும் செயல்படுகிறார் ஷுப்மான் கில்.

ஐபிஎல், குஜராத் டைட்டன்ஸ் அணி, கேப்டன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த இரண்டு சீசன்களாக ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கில் இருந்து வருகிறார்

ஐபிஎல் கேப்டன் கில்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குப் பின் தற்போதைய சூழ்நிலையில், கில்லின் பேட்டிங் திறனைத் தவிர, தேர்வாளர்கள் அவரிடம் கண்ட மிக முக்கியமான விஷயம் அவரது ஆளுமையில் உள்ள 'நிலைத்தன்மை' ஆகும்.

இருபது ஓவர் கிரிக்கெட்டில் அடைந்த வெற்றியை டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றியுடன் ஒப்பிடுவது சரியல்ல என்றாலும், டி20 போட்டியில் ஒவ்வொரு பந்துக்கும் கேப்டன் எதிர்வினையாற்ற வேண்டும். இது நிச்சயமாக அழுத்தத்தின் கீழ் செயல்பட வேண்டிய ஒரு கேப்டனின் செயல்திறனைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது.

ஷுப்மான் கில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இரண்டாவது ஐபிஎல் சீசனில் களம் இறங்கியிருந்தார்.

ஆனால் கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் போலல்லாமல், கில்லின் பேட்டிங்கில் எந்த எதிர்மறையான தாக்கத்தையும் அவரது கேப்டன் என்ற பொறுப்பு ஏற்படுத்தவில்லை.

இந்த ஆண்டு, கில் தனது ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் மீதான தனது கட்டுப்பாட்டைப் பேணியது மட்டுமல்லாமல், வெற்றி தோல்வி என எந்தவொரு சூழ்நிலையிலும், நிதானமாகவும் புரிந்துணர்வுடனும் செயல்பட்டார்.

ஆனால், ஷுப்மான் கில்லுக்கு உண்மையான சோதனை கிரிக்கெட்டின் கடினமான வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் தொடங்க உள்ளது.

ஐபிஎல்லில் வெற்றிகரமான வீரராக இருந்தபோதிலும், பச்சை குத்தாமல், தாடி இல்லாமல் ஷுப்மான் கில் பளிச் என்ற தோற்றத்துடன், அந்த கால கிரிக்கெட் வீரரைப் போலவே இருக்கிறார்.

ஊடகங்கள் மற்றும் கேமராவின் முன் இல்லாமல் மைதானத்தில் செயல்படுவது தான் அவருடைய உண்மையான வேலை. கடந்த பார்டர்-கவாஸ்கர் தொடரில், கில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் மட்டுமே விளையாடினார். ரோஹித் சர்மா சிட்னி டெஸ்டில் (கடைசி டெஸ்ட்) பங்கேற்காமல் இருக்க முடிவு செய்தபோது, கில் மீண்டும் களம் இறங்கினார்.

கடந்த டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கில் சீக்கிரமே ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில், மதிய உணவுக்கு சற்று முன்பு கில்லை தனது சுழலில் சிக்க வைத்து நாதன் லியோன் ஆட்டமிழக்கச் செய்தார். இரண்டாவது இன்னிங்ஸில், நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் பியூ வெப்ஸ்டரின் பந்தில் கில் ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு நான்கே மாதங்களில் ஷுப்மான் கில்லை டெஸ்ட் கேப்டனாக மாற்றுவது என்பது ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டின் திசையையும் மாற்றும் ஒரு முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அணியின் கவலை

முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே, கில் "முதலில் ஒரு பேட்ஸ்மேனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். காயம்பட்டபோதிலும், அவர் இப்போது ஒரு கேப்டனாக குறைந்தது பத்து இன்னிங்ஸ்களாவது விளையாட வேண்டும்.

இங்கிலாந்தில் விளையாடும்போது கில்லின் செயல்திறன் மோசமாக இருக்கிறது. அங்கு ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், 14.66 சராசரியுடன் 88 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இங்கிலாந்தில், கே.எல். ராகுல் 18 இன்னிங்ஸ்களில் 34.11 சராசரியுடன் 614 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும். அதே நேரத்தில், துணை கேப்டன் ரிஷப் பந்த் 15 இன்னிங்ஸ்களில் 34.06 சராசரியுடன் 511 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் பந்த் இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்களை அடித்துள்ளார்.

இந்த இருவரையும் தவிர, அணியில் உள்ள வேறு எந்த பேட்ஸ்மேனுக்கும் இங்கிலாந்தில் டெஸ்ட் அனுபவமோ வெற்றியோ இல்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு இயல்பாகவே கவலை ஏற்படுத்தும் அம்சமாக உள்ளது.

கோலி,  ஷுப்மான் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2014ஆம் ஆண்டு கோலி பதவியேற்றபோது அவர் கிரிக்கெட்டின் ஒரேயொரு வடிவத்திற்கு மட்டுமே கேப்டனாக இருந்ததைப் போலவே ஷுப்மான் கில்லும் தற்போது டெஸ்ட் கிரிகெட்டிற்கு மட்டுமே கேப்டனாக உள்ளார்

கில்லுக்கு சாதகமாக உள்ள காரணிகள் யாவை?

தற்போது ஷுப்மானுக்கும் இந்தியாவுக்கும் இரண்டு நல்ல விஷயங்கள் நடக்க உள்ளன. வெளிப்புற கோரிக்கைகள் மற்றும் அழுத்தங்களின் காரணமாக பேட்ஸ்மேன்கள் தங்கள் நிலையை விட்டு முன்னேறி ஆட்டத்தில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டம் வரும். இந்த ஊக்குவிப்புக் கட்டத்தில் ஷுப்மான் இருக்கிறார். விராட் கோஹ்லிக்கும் இதேபோன்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, 2014ஆம் ஆண்டு கோலியைப் போலவே, கில்லும் ஒரே ஒரு வடிவத்திற்கு மட்டுமே கேப்டனாக உள்ளார்.

இரண்டாவது விஷயம் என்னவென்றால், வேகப்பந்து வீச்சாளர்களான ஜிம்மி ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் ஓய்வுக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு, மாற்றத்தின் கட்டத்தில் இருக்கிறது.

கேப்டனாக களம் இறங்கும் ஷுப்மான் கில்லின் ஆரம்பத் தொடரில், அவருக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீருடனான ஒருங்கிணைப்பு மிக முக்கியமான விஷயம் ஆகும்.

ரோஹித் மற்றும் கம்பீர் இடையிலான ஒருங்கிணைப்புக்காக அபிஷேக் நாயர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது நாயர் போய்விட்டார், அவர் இல்லாத நிலையில் கம்பீருடன் ஒத்துப்போக கில் தனது சொந்த வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

பயிற்சியாளர் கவுதம் கம்பீர்,  கில்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, பயிற்சியாளர் கவுதம் கம்பீருடனான கில்லின் ஒருங்கிணைப்பு முக்கியத்துவம் பெறுகிறது

வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் கம்பீரின் மேலாண்மை மற்றும் முடிவெடுக்கும் பாணியைக் கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பு கில்லுக்குக் கிடைத்தது.

தோல்விகளுக்குப் பிறகு, கிரிக்கெட்டில் மாற்றத்திற்கான கட்டம் தொடர்கிறது என்பதையும் ஷுப்மான் கில் அறிந்திருப்பார்.

முதலில் கேப்டன் வெளியேறினார், பின்னர் பயிற்சியாளர் வெளியேறினார்... இந்தியா தனது கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது.

இந்தத் தோல்விகளுக்குப் பிறகு, கேப்டன் வெளியேறிவிட்டார், இப்போது வாள் பயிற்சியாளர் கம்பீரின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஷுப்மான் கில் கேப்டன்சியில் தன்னை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgq35dlwwqno

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முச்சதம் அடித்தும் ஒதுக்கப்பட்ட கருண் நாயர் – இங்கிலாந்து வழியாக இந்திய அணிக்கு வந்தது எப்படி?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, கருண் நாயர், கிரிக்கெட், இங்கிலாந்து, கவுன்டி கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2016இல், டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 303 ரன்கள் எடுத்து, முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கருண்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மொஹ்சின் கமல்

  • பதவி, பிபிசிக்காக

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

"நீங்கள் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடப் போவதில்லை என்று நினைத்தால், எங்கள் கிளப்பில் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் விளையாடக்கூடிய ஒரு வெளிநாட்டு வீரராக, எங்களுடனான நீண்டகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட சம்மதிப்பீர்களா?"

நார்தாம்ப்டன்ஷையர் கவுன்டி கிரிக்கெட் கிளப்பின் அப்போதைய தலைமை பயிற்சியாளராக இருந்த ஜான் சாட்லர், 2023இல் கருண் நாயரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்.

நாயரின் பதில் உறுதியாக இருந்தது, "நான் இந்தியாவுக்காக விளையாட விரும்புகிறேன், மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட என்னால் முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறேன். அந்தக் கனவு நனவாகும் வரை, வேறு எதையும் நான் கருத்தில் கொள்ளப்போவதில்லை."

இப்போது அவருக்கு 33 வயதாகிறது. 2017இல் இந்தியாவுக்காக கடைசியாக விளையாடிய பிறகு, வெள்ளிக்கிழமை (ஜூன் 20) லீட்ஸில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த மாத இறுதியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு பயிற்சிப் போட்டிகளில் ஒன்றில், இரட்டை சதம் அடித்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட மீண்டும் வந்துவிட்டேன் என்பதை அவர் பதிவு செய்தார்.

'ஒரு புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர்'

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, கருண் நாயர், கிரிக்கெட், இங்கிலாந்து, கவுன்டி கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கருண் நாயர்

2016ஆம் ஆண்டு தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 303 ரன்கள் எடுத்து, முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கருண்.

ஆனால் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிறகு, இந்திய அணியில் தனக்கான இடத்தை அவர் இழந்தார்.

காலப்போக்கில், சர்வதேச கிரிக்கெட் குறித்த அவரது கனவுகள் மங்கத் தொடங்கின. 2022ஆம் ஆண்டில், அவர் கர்நாடகாவின் ரஞ்சி டிராபி அணியிலிருந்து கூட நீக்கப்பட்டார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக மோசமான தருணமாக இருக்கலாம்.

"உள்நாட்டு சீசன் முழுவதையும் தவறவிட்ட பிறகு, அவர் மிகவும் வருத்தப்பட்டார். அவர் என்னிடம் வந்து, 'நான் என்ன செய்வது? மீண்டும் விளையாட என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்று கூறினார்" என்று கருணின் நீண்டகால பயிற்சியாளரான விஜயகுமார் மதியல்கர் நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "அவர் ஒரு புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர், அதனால் அவரது மனநிலையைப் பற்றி நான் அவரிடம் தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர் மிகவும் ஃபிட்டாகவும் இருக்கிறார், அதனால் அவரது உடல்திறன் குறித்து சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எனவே அவர் செய்ய வேண்டிய ஒரே விஷயம் அவரது திறன்களை மேம்படுத்துவதுதான்" என்றார்.

தனது அதிர்ஷ்டத்தை மாற்றத் தீர்மானித்தார் கருண். பெங்களூருவில் உள்ள தனது வீட்டிலிருந்து மதியல்கரின் அகாடமிக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, 2 மணிநேரம் பயணம் செய்து செல்வதை வழக்கமாக்கிக்கொண்டார். விஜயகுமார் மதியல்கர், 16 வயதுக்குட்பட்ட பிரிவில் கருண் ஆடிய காலத்தில் இருந்தே அவருக்கு பரிச்சயமானவர்.

"முழுமையாக திருப்தி அடையும் வரை, அவர் ஒருபோதும் வலைப் பயிற்சியில் இருந்து வெளியே வரமாட்டார். ஒவ்வொரு அமர்விலும் சுமார் 600 பந்துகளை எதிர்கொள்வார். அனைத்து ஷாட்களையும் பயிற்சி செய்வார். அவர் மிகவும் கடினமாக உழைத்தார். மணிக்கணக்கில் இடைவிடாமல் பேட்டிங் செய்வதே அவரது விருப்பமாக இருந்தது." என்கிறார் மதியல்கர்.

"அவர் தனது அணுகுமுறையில் ஒருபோதும் அலட்சியமாக இருந்ததில்லை. வலைப் பயிற்சியில் ஒரு பந்தை கூட சாதாரணமாக எதிர்கொண்டதில்லை. அவர் தனது உடற்தகுதி மற்றும் பிற திறன்களை மேம்படுத்துவதிலும் அயராது உழைத்தார்." என்று கூறுகிறார் மதியல்கர்.

கவுன்டி கிரிக்கெட் அனுபவம்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, கருண் நாயர், கிரிக்கெட், இங்கிலாந்து, கவுன்டி கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கருண் நாயர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நார்தாம்ப்டன்ஷையருக்காக விளையாடினார்.

பல மாதங்களாகப் போராடிய பிறகு, கருண் மீண்டும் களத்தில் இறங்க ஆர்வமாக இருந்தார். ஆனால் இந்தியாவில் விளையாட அவருக்கான கிரிக்கெட் போட்டிகள் இல்லை. எனவே அவர் இங்கிலாந்தில் உள்ள நார்தாம்ப்டன்ஷையருக்காக, ஒரு வெளிநாட்டு வீரராக விளையாட முடிவு செய்தார். அந்த முடிவு முக்கியமானது என்பது பின்னர் உறுதியானது.

"தங்கள் திறமையை நிரூபிக்க வெளிநாட்டு வீரர்கள் இங்கு வருகிறார்கள். நாங்கள் வழக்கமாக அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தைப் பெறுகிறோம்," என்று நார்தாம்ப்டன்ஷையரில் கருணுடன் பணியாற்றிய சாட்லர் கூறுகிறார்.

"கருண் இந்தியாவுக்காக டெஸ்ட்டில் முச்சதம் அடித்திருந்தார், ஆனால் அதன் பின்னர் சிறிது காலமாக விளையாடவில்லை. எனவே அவர் மீண்டும் விளையாட வேண்டுமென்ற உத்வேகத்தில் இருந்தார். ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்." என்கிறார் சாட்லர்.

அமைதியான சுபாவத்திற்கு பெயர் போன கருண் நாயர், நார்தாம்ப்டன்ஷயர் தனக்கு அளித்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

"அவர் எவ்வளவு அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தார் என்பதுதான் தனித்துவமான விஷயம்," என்று சாட்லர் நினைவு கூர்ந்தார்.

"எட்ஜ்பாஸ்டனில் அவரது முதல் ஆட்டத்தில், ஆடுகளம் பசுமையாக இருந்தது. பந்துவீச்சுக்கு சாதகமான ஒரு ஆடுகளமாக இருந்தது. எங்கள் பேட்ஸ்மேன்களில் சிலர் அங்கு பேட்டிங் செய்வதை கடினமாக உணர்ந்தனர், விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. கருண் உள்ளே வந்தார், அவர் மிகவும் அமைதியாக விளையாடினார். தொடக்கூடாத பந்துகளை அவர் விட்டுவிட்டார்.

பின்னர், அதிரடியாக ஆட வேண்டிய வேண்டிய நேரம் வந்தபோது, அவர் சிறப்பாக ஆடினார். எனவே அவரது ஆட்டம் ஒரு அற்புதமான வரிசையில் காணப்பட்டது." என சாட்லர் கூறுகிறார்.

வலது கை பேட்ஸ்மேனான கருண் நாயர், மூன்று போட்டிகளில் 249 ரன்கள் எடுத்தார். இதில் சர்ரேக்கு எதிரான 150 ரன்கள் உள்பட, அவரது சிறப்பான ஆட்டங்கள் காரணமாக மீண்டும் அவரை நார்தாம்ப்டன்ஷையர் கவுன்டி கிரிக்கெட் கிளப் ஒப்பந்தம் செய்தது.

2024 ஆம் ஆண்டில், மீண்டும் களமிறங்கிய அவர், ஏழு போட்டிகளில் 487 ரன்கள் எடுத்தார், அதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். ஆனால் அவர் எடுத்த ரன்கள் மட்டும் தனித்து நிற்கவில்லை.

"அவரது அணுகுமுறை அற்புதமானது. அவர் மிகவும் கடினமாக உழைத்தார், மிகச்சிறந்த தொழில்முறை வீரராக இருந்தார். ஒவ்வொரு பயிற்சி அமர்வுக்கும் அவர் இருந்தார். களத்தில் பேட்டிங் செய்யும்போது, மிகவும் கவனமாக ஆடினார். ஒருபோதும் தனது விக்கெட்டை விட்டுக்கொடுக்கவில்லை," என்று யார்க்ஷயரில் இப்போது உதவி பயிற்சியாளராக இருக்கும் சாட்லர் கூறுகிறார்.

கருண் நாயர் இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட்டிலும் ரன்கள் குவித்திருந்தாலும், நார்தாம்ப்டன்ஷையர் அணியுடனான அவரது அனுபவமே அவரை மீண்டும் தேசிய அளவில் உறுதியாக நிலைநிறுத்த உதவியது.

"கவுன்டி கிரிக்கெட் என்பது இடைவிடாமல் விளையாடப்படுகிறது, ஆட்டத்திற்கு ஆட்டம், அதிக ஓய்வு இருக்காது. யதார்த்தத்தில் நீங்கள் மாறுபட்ட பிட்ச்களில் விளையாடுகிறீர்கள். சில நேரங்களில் பிட்ச் தட்டையாக இருக்கலாம், சில நேரங்களில் பந்து வேறுமாதிரியாக திரும்பலாம், சில நேரங்களில் அது பசுமையாக இருக்கலாம்." என்கிறார் சாட்லர்.

"அவர் எங்களுக்காக இரண்டு முறை விளையாடியதால், பல்வேறு சூழ்நிலைகளில் விளையாடவும், தனது திறமைகளை சோதிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்று நான் நம்புகிறேன். அது அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது." என்று சாட்லர் கூறுகிறார்.

கருண் நாயர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதில் கவுன்டி கிரிக்கெட் வகித்த பங்கை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூட ஒப்புக்கொண்டார்.

"கருணின் அனுபவம் இந்திய அணிக்கு நல்லது. அவர் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடியவர், அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவரது அனுபவம் கைகொடுக்கும்," என்று ஜூன் 5 அன்று மும்பையில் நடந்த இந்திய சுற்றுப்பயணத்திற்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது கம்பீர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் கேன்டர்பரியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 204 ரன்கள் எடுத்ததன் மூலம், ஹெடிங்லியில் நடைபெறும் முதல் டெஸ்டில் இந்தியாவின் மிடில் ஆர்டரில் கருண் நாயர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு விஷயத்தைக் குறித்து, கருணின் பயிற்சியாளர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

"கருண் அங்கு விளையாடுவதில் அதிக அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அவர் முதல் போட்டியில் நிச்சயமாக விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு சதம் அடிப்பார்." என்று மதியல்கர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c056gz66mgqo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

18 ஆண்டு ஏக்கத்தை தீர்க்குமா இந்திய இளம் படை? அணியில் யாருக்கு வாய்ப்பு அதிகம்?

Ind vs Eng, இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி, சுப்மான் கில், டெண்டுல்கர்-ஆன்டர்ஸன் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சூழலுக்கு ஏற்றார்போல் பந்துவீச்சு, பேட்டிங் வியூகத்தை மாற்றி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பதால், இது சுப்மன் கில்லுக்கு முற்றிலும் புதிய அனுபவமாகவே இருக்கும்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் (5 போட்டிகள்) இன்று பிரிட்டனின் ஹெடிங்லியில் லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் சகாப்தத்தை தொடங்குகிறது. 25 வயது ஆகிய சுப்மான் கில் 21-ம் நூற்றாண்டு இந்திய அணியின் இளம் கேப்டனாக உருவெடுத்துள்ளார்.

18 ஆண்டுகள் வறட்சி

2007- ஆம் ஆண்டு ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றபின் 18 ஆண்டுகளாக பிரிட்டன் மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாமல் இருக்கிறது. ஆதலால், இந்த முறை இளம் கேப்டன் சுப்மன் கில் மீதும், இளம் வீரர்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணியில் அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகியோர் டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் முற்றிலும் இளமையான அதே நேரத்தில் அனுபவம் குறைந்த வீரர்களுடன் இந்திய அணி டெஸ்ட் தொடரை அணுகுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Ind vs Eng, இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி, சுப்மான் கில், டெண்டுல்கர்-ஆன்டர்ஸன் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை இன்று பிரிட்டனில் நடைபெறுகிறது

டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று

அது மட்டுமல்லாமல் 2025-27-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று இந்த டெஸ்ட் தொடரிலிருந்து தொடங்குவதால் இந்திய அணி வெற்றியுடன் டெஸ்ட் தொடரை முடிக்கவும் தீர்மானமாக இருக்கிறது.

கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இந்திய அணி 3-வது இடத்தையும், இங்கிலாந்து அணி, 22 போட்டிகளில் 11 வெற்றிகளுடன் 5-வது இடத்தையும் பிடித்தன. இந்திய அணி கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்றும், பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இழந்தது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு டெஸ்ட் தொடர் தோல்விகள் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக மாறின.

23 ஆண்டுகளுக்குப்பின்

முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் கடைசியாக இந்திய அணி 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின் 23 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய அணியால் டெஸ்ட் வெற்றியைப் பெற முடியவில்லை. கடைசியாக 2021-ஆம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்களில் இந்திய அணி தோற்றது.

ஆதலால், இந்திய அணி இந்த மைதானத்தில் முதல் டெஸ்டில் வெற்றிபெற்றால்கூட கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகள் கழித்து கிடைத்த வெற்றியாகவே வரலாற்றில் பொறிக்கப்படும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது.

Ind vs Eng, இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி, சுப்மான் கில், டெண்டுல்கர்-ஆன்டர்ஸன் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்திய கிரிக்கெட் அணி (கோப்புப் படம்)

கில் தலைமைக்கு பரிசோதனை

சுப்மன் கில் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி இதற்கு முன் ஜிம்பாப்பேவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது. ஆனால் டெஸ்ட் தொடருக்கு முதல்முறையாக கில் தலைமை ஏற்றுள்ளார்.

உள்நாட்டுப் போட்டிகளில் 5 முதல் தரப்போட்டிகளில் கில் கேப்டன்ஷிப் செய்துள்ளார், ரஞ்சிக் கோப்பையில் ஒரு முறை கேப்டன்ஷிப் செய்துள்ளார்.

ஒருநாள்போட்டி, டி20 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்வதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது டெஸ்ட் கேப்டன்ஷிப். சூழலுக்கு ஏற்றார்போல் பந்துவீச்சு, பேட்டிங் வியூகத்தை மாற்றி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பதால், இது சுப்மன் கில்லுக்கு முற்றிலும் புதிய அனுபவமாகவே இருக்கும்.

ஐபிஎல் டி20 தொடரில் சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன்ஷிப் செய்து ப்ளே ஆஃப் சுற்றுவரை கொண்டு சென்றார்.

சுப்மன் கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி "குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கில் கேப்டன்ஷி செய்யும்போது பார்த்தேன், என்னை அவர் ஈர்த்துவிட்டார். அவரின் அமைதி, வியூகம் அமைக்கும் முதிர்ச்சி, முடிவெடுக்கும் திறன் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது," எனத் தெரிவித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்த சாய் சுதர்சன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருப்பது கில்லுக்கு கூடுதல் பலத்தையும், எளிமையாக பணியைச் செய்யவும் வழிவகுக்கும்.

இவர்கள் தவிர ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், துணைக் கேப்டன் ரிஷப் பண்ட், கருண் நாயர் ஆகியோரும் டெஸ்ட் தொடரில் முத்திரை பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்துவீச்சில் பும்ரா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஹர்சித் ராணா ஆகியோரும், சுழற்பந்துவீச்சுக்கு ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோரும் உள்ளனர்.

இங்கிலாந்து அணி ப்ளேயிங் லெவனை அறிவித்துவிட்ட நிலையில் இந்திய அணியில் இன்னும் ப்ளேயிங் லெவன் அறிவிக்கப்படவில்லை.

ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், சுப்மான் கில், ரிஷப் பந்த், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் அல்லது வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் அல்லது பிரசித் கிருஷ்ணா - இவர்கள் உத்தேச ப்ளேயிங் லெவனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ind vs Eng, இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி, சுப்மான் கில், டெண்டுல்கர்-ஆன்டர்ஸன் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐபிஎல் டி20 தொடரில் சுப்மான் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன்ஷிப் செய்து ப்ளே ஆஃப் சுற்றுவரை கொண்டு சென்றார் சுப்மான் கில்

ப்ளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் அருமையான தொடக்கத்தை அளித்த கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 3வது வீரராக கருண் நாயர், அன்கேப்டு வீரர் சாய் சுதர்சன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய கருண் நாயர் 8 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேசமயம், ஐபிஎல் தொடரில் கலக்கலாக ஆடிய சுதர்சன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், 3வது இடம் யாருக்கு என்பது குழப்பமாக இருக்கிறது.

விராட் கோலி களமிறங்கும் 4-வது இடத்தில் கேப்டன் சுப்மன் கில் களமிறங்குவார் என துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார் என்பதால் அந்த இடம் நிரப்பப்பட்டுவிட்டது. 3-வது இடம் கருண் நாயருக்கு வழங்கப்பட்டால், அடுத்ததாக ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் சாய் சுதர்சனா அல்லது ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியா என்ற கேள்வி எழுகிறது.

பந்துவீச்சிலும் 5வது பந்துவீச்சாளராக வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்வதா அல்லது நிதிஷ் ரெட்டியை தேர்வு செய்வதா என்ற கேள்வியும் எழுகிறது.

பிரிட்டன் மண்ணில் பந்தை நன்கு ஸ்விங் செய்யக்கூடியதில் நிதிஷ் ரெட்டியை விட ஷர்துல் தாக்கூர் சிறப்பாக செயல்படுவார்.

பேட்டிங்கிலும் ஓரளவு நன்றாக செயல்படுவார் என்பதால் 8-வது வீரராக ஷர்துல் தாக்கூர் வரவும் வாய்ப்புள்ளது.

சுழற்பந்துவீச்சு வரிசையில் ஜடேஜா தவிர்த்து பேட்டிங்கில் வலுசேர்க்க வேண்டுமென்றால் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம், இல்லாவிட்டால் குல்தீப் யாதவ் களமிறங்கக்கூடும். வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் தவிர்த்து பிரசித் கிருஷ்ணா, ராணா ஆகியோரில் ஒருவர் களமிறங்கலாம்.

பிரிட்டன் பருவநிலைக்கு ஏற்றார்போல் ராணாவை விட பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஸ்விங், பவுன்ஸர் இருக்கும் என்பதால், இருவரில் ஒருவர் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. இதில் இந்திய அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தேவை என்பதால், அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.

Ind vs Eng, இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி, சுப்மான் கில், டெண்டுல்கர்-ஆன்டர்ஸன் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வலைப்பயிற்சியில் கருண்நாயர்

இவர்கள் இல்லை

இந்திய அணி கடைசியாக 2021-ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் இருந்த விராட் கோலி, அஸ்வின், ரோஹித் சர்மா, புஜாரா, ஷமி, ரஹானே, அக்ஸர் படேல், இசாந்த் சர்மா, சூர்யகுமார், விஹாரி, பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் இந்த அணியில் இல்லை.

2022-ஆம் ஆண்டு 5வது டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டன்ஷியில் இந்திய அணி ஆடியது. இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. ஆனால், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் சதம் விளாசினர்.

98 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிம்மசொப்னாக திகழ்ந்தனர். ஆனால், இங்கிலாந்து அணி 378 ரன்களைத் துரத்தியதில் ரூட், பேர்ஸ்டோவின் சதம் வெற்றியைத் தேடித்தந்தது.

மெக்கலம் பயிற்சியில் இங்கிலாந்து

பிரன்டென் மெக்கலம் பயிற்சியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியிலும் ஆக்ரோஷமான 'பாஸ்பால்' ஆட்டத்தை விளையாடுகிறது.

இங்கிலாந்து அணி, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் தொடரை அணுகுகிறது. சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடிய பந்துவீச்சாளர், பேட்டர், சிறந்த பீல்டர் என்பதால், இந்தத் தொடர் சவாலாகவே இந்திய அணிக்கு இருக்கும். துணைக் கேப்டனாக ஓலே போப் நியமிக்கப்பட்டுள்ளார்.

பேட்டிங்கில் ஜேக் கிராளே, பென் டக்கெட், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், ஜேம் ஸ்மித், போப், ஸ்டோக்ஸ் என வலுவான வரிசை இருக்கிறது. இதில் ஜோ ரூட்டுக்கு மட்டுமே இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது.

பந்துவீச்சில் காயம் காரணமாக 6 மாதங்கள் ஓய்வில் இருந்த கிறிஸ் வோக்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார், அவர் தவிர்த்து பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் ஆகிய வேகப்பந்துவீச்சாளரும், ஷோயிப் பஷீர் சுழற்பந்துவீச்சாளரும் உள்ளார்.

இங்கிலாந்து அணியின் நடுவரிசை பேட்டிங் வலுவாக இருக்கிறது. ஹேரி ப்ரூக், ஸ்டோக்ஸ், ரூட் ஆகியோர் ஆட்டத்தை எந்தநேரத்திலும் திருப்பக்கூடியவர்கள் என்பதால், இந்திய அணி நடுவரிசை விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இதில் ஹேரி ப்ரூக், ஜேம் ஸ்மித், கார்ஸ், டங் ஆகிய 4 வீரர்கள் முதல்முறையாக இந்திய அணிக்கு எதிராக களமிறங்குகிறார்கள். இவர்களின் பேட்டிங், பந்துவீச்சு குறித்து இந்திய வீரர்களுக்கும் தெரியாது, பும்ரா, சிராஜ் உள்ளிட்ட இந்திய பந்துவீச்சு குறித்தும் இவர்களுக்கும் தெரியாது என்பதும் சவாலாக இருக்கும்.

டாப் ஆர்டர் பேட்டர்கள் வலுவான அடித்தளம் அமைத்துவிட்டால் நடுவரிசை பேட்டர்கள் ஆட்டத்தை கையில் எடுத்துவிடுவார்கள், இதற்கு வாய்ப்பளிக்காமல் இந்திய பந்துவீச்சாளர்கள் செயல்பட வேண்டும்.

இங்கிலாந்து ப்ளேயிங் லெவன்

ஜேக் கிராளே, பென் டக்கெட், ஓலே போப், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேம் ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்க், ஷோயிப் பஷீர்.

Ind vs Eng, இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி, சுப்மான் கில், டெண்டுல்கர்-ஆன்டர்ஸன் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடிய பந்துவீச்சாளர், பேட்டர், சிறந்த பீல்டர் என்பதால், இந்தத் தொடர் சவாலாகவே இந்திய அணிக்கு இருக்கும்.

ஆடுகளம் எப்படி?

ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது. பிரிட்டனில் தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால் வெயில் நன்றாக இருக்கும் என்பதால், தொடக்கத்தில் மட்டுமே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும், அதன்பின் ஓரளவுக்கு பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும்.

ஆடுகள தலைமை வடிவமைப்பாளர் ராபின்ஸன் அளித்த பேட்டியில் "வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தை பேட்டர்கள், பந்துவீச்சாளர்களுக்கு சமமாக இருக்கும் வகையில் மாற்றியிருக்கிறோம். புற்களை அதிகமாக விட்டு வைக்காமல் குறைத்துவிட்டோம். ஆதலால், ஸ்விங், பவுன்ஸ் இருக்கும், பேட்டிங்கும் நன்றாக இருக்கும்.

முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்க்கலாம். முதல் 3 நாட்கள் வெயில் இருக்கும் என்பதால் முதல் இன்னிங்ஸில் பேட்டர்களுக்கு நன்றாக இருக்கும், ஆனால் கடைசி இரு நாட்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதால், குளிர்ந்த சூழல், காற்றின் வேகம், ஆடுகளத்தின் தன்மை ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும்" எனத் தெரிவித்தார்.

Ind vs Eng, இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி, சுப்மான் கில், டெண்டுல்கர்-ஆன்டர்ஸன் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது (கோப்புப்படம்)

இதுவரை இங்கிலாந்து-இந்தியா

இந்திய அணி கடைசியாக 18 ஆண்டுகளுக்கு முன் 2007-ம் ஆண்டு திராவிட் தலைமையில் டெஸ்ட் தொடரை பிரிட்டன் மண்ணில் வென்றது. அதேபோல ஹெடிங்லி மைதானத்தில் கடைசியாக 2002ல் வென்றது, 23 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய அணி வெல்லவில்லை. முதல் போட்டியில் வெற்றியும், டெஸ்ட் தொடர் வெற்றியும் இந்திய அணிக்கு வரலாறாக இருக்கும்.

இரு அணிகளும் கடந்த 1932ம் ஆண்டிலிருந்து 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 51 வெற்றிகளும், இந்திய அணி 35 வெற்றிகளும் பெற்றுள்ளன, 50 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கடைசியாக 2024ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியா வந்த போது 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்து சென்றது.

இந்திய அணியும் கடைசியாக 2021ம் ஆண்டு இங்கிலாந்து பயணம் செய்து 2-2 என டெஸ்ட் தொடரை சமன் செய்தது. தொடக்கத்தில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்து டெஸ்ட் தொடரை வெல்லும் சூழலில் இருந்தது, ஆனால், கொரோனா தொற்று காரணமாக 2022 ஜூலை மாதம் டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வென்று தொடரை சமன் செய்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g8mmr7ln4o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TEA

1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England

Day 1 - Session 2: England chose to field.

India FlagIndia (51 ov) 215/2

Current RR: 4.21  • Min. Ov. Rem: 38

 • Last 10 ov (RR): 43/0 (4.30)

England FlagEngland

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தொட‌க்க‌ம் மிக‌ அருமை

த‌மிழ‌க‌ வீர‌ர் அவ‌ரின் முத‌ல் டெஸ்ட் போட்டியில் ர‌ன்ஸ் எதுவும் அடிக்காம‌ அவுட் ஆகி விட்டார்..................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கில், ஜெய்ஸ்வால் அபார சதம்: இந்திய இளம் படை இங்கிலாந்து மண்ணில் முதல் நாளே புதிய சாதனை

Ind Vs Eng, டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை, டெஸ்ட், முதல்நாள் ஆட்டம், சுப்மன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சதம் அடித்த கேப்டன் சுப்மன் கில்லும், ஜெய்ஸ்வாலும்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோரின் அபார சதம், ரிஷப் பந்தின் அரைசதம் ஆகியவற்றால் இளம் இந்திய அணி டெஸ்ட் சகாப்தத்தை மிரட்டலாகத் தொடங்கியுள்ளது.

ஹெடிங்லியில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருக்கிறது.

ஜெய்ஸ்வால் (101) ரன்களில் ஆட்டமிழக்கவே, கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும், துணை கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். முதல் விக்கெட்டுக்கு கேஎல்.ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி 91 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்ததே நடுவரிசை வீரர்கள் அழுத்தமின்றி பேட் செய்ய முடிந்தது.

தமிழக வீரர் சாய் சுதர்சன் 4 பந்துகளை சந்தித்த நிலையில் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

வலுவான தொடக்கம்

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கவே, இந்தியா சார்பில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் களமிறங்கினர். இங்கிலாந்து வீரர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்திய அணியின் பேட்டிங் அவர்களை திணறடிக்கும் வகையில் அமைந்திருந்தது. ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி அற்புதமாக இங்கிலாந்து பந்துவீச்சைச் சமாளித்து ஆடினர்.

குறிப்பாக ஜெய்ஸ்வால் பெரிய ஷாட்களுக்கு முயற்சிக்கவில்லை. நல்ல பந்துகளுக்கு மதிப்பளித்து லீவ் செய்து, ஆப் சைடிலேயே தனது பெரும்பகுதி ஷாட்களில் ரன்களைச் சேர்த்தார். ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கில் நிதானமும், பொறுமையும் நன்கு தெரிந்தது. 15 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. ராகுல் 42 ரன்கள் சேர்த்த நிலையில் கார்ஸ் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Ind Vs Eng, டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை, டெஸ்ட், முதல்நாள் ஆட்டம், சுப்மன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ராகுல் 42 ரன்கள் சேர்த்தநிலையில் கார்ஸ் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்

சுதர்சன் டக் அவுட்

ராகுல், ஜெய்ஸ்வால் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துப் பிரிந்தனர். அடுத்து அறிமுக ஆட்டத்தில் களமிறங்கிய சாய் சுதர்சன், 4 பந்துகளில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார்.

சுதர்சன் களமிறங்கிய போது லெக் திசையில் ஸ்லிப் வைத்து ஸ்டோக்ஸ் பந்து வீசினார். லெக் சைடில் விலக்கி வீசப்பட்ட 2வது பந்தில் சுதர்சன் தட்டவே பந்து கால்காப்பில் பட்டு கேட்சானது, இங்கிலாந்து வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்யவே அவுட் வழங்கவில்லை.

இந்த சம்பவத்திலேயே சுதர்சன் தன்னை சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டும், ஆனால், 4வது பந்தும் அதே போன்று ஸ்டோக்ஸ் வீச, தேவையற்ற ஷாட்டை சுதர்சன் ஆடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் செஷனில் இந்திய அணி 100 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

Ind Vs Eng, டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை, டெஸ்ட், முதல்நாள் ஆட்டம், சுப்மன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,4 பந்துகளில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறிய சாய் சுதர்சன்

கில், ஜெய்ஸ்வால் வலுவான கூட்டணி

3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கேப்டன் கில் ஜோடி சேர்ந்தனர். ஜெய்ஸ்வால் ஏற்கெனவே நன்கு செட்டில் ஆகி இருந்தார். ஜெய்ஸ்வால் 96 பந்துகளில் அரைசதம் அடித்தார், கில் 56பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் அரைசதத்தை வேகமாக எட்டினார்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கார்க், வோக்ஸ், டங், ஸ்டோக்ஸ் ஆகியோர் மாறிமாறிப் பந்துவீசியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

சுழற்பந்துவீச்சாளர் ஷோயிப் பஷீர் பந்துவீச்சில் கில், ஜெய்ஸ்வால் இருவரும் ரன் எடுக்கும் வேகத்தை குறைத்தார்களே தவிர தடுமாறவில்லை. இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்து சென்றது. ஜெய்ஸ்வால் 144 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடக்கமாகும்.

ஜெய்ஸ்வால் தனது சதத்தில் பெரும்பாலான ரன்களை ஆப் சைடிலேயே அடித்திருந்தார். வழக்காக லெக்திசையில் சிறப்பாக பேட் செய்யக்கூடிய ஜெய்ஸ்வால் பந்துவீச்சுக்கு ஏற்ப பேட்டிங்கை மாற்றி தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

பிற்பகல் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்து 2வது செஷனில் வலுவாக காலூன்றியிருந்தது.

தேநீர் இடைவேளைக்குப்பின் ஜெய்ஸ்வால் விக்கெட்டை இந்திய அணி இழந்தது. ஜெய்ஸ்வால் சதம் அடித்து 101 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 129 ரன்கள் சேர்த்தனர்.

Ind Vs Eng, டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை, டெஸ்ட், முதல்நாள் ஆட்டம், சுப்மன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால், கேப்டன் கில் ஜோடி நேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ரிஷப் பந்த் அதிரடி தொடக்கம்

4வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் களமிறங்கி கில்லுடன் சேர்ந்தார். கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய ரிஷப் பந்த், தான் சந்தித்த 2வது பந்திலேயே கவர் திசையில் பவுண்டரி அடித்தார். இதைப் பார்த்த பந்துவீச்சாளர் ஸ்டோக்ஸ் சிரித்துக்கொண்டே ரிஷப் பந்தை கடந்து சென்றார்.

ரிஷப் பந்த், கில் இருவரும் 3வது செஷனில் ஆதிக்கம் செய்து ரன்களை வேகமாகச் சேர்த்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு இருவருக்கும் பெரிதாக எந்த சிரமத்தையும் அளிக்கவில்லை. தேநீர் இடைவேளைக்குப்பின் இந்திய அணி 300 ரன்களை எட்டியது.

சுப்மன் கில் வேகமாக அரைசதம் அடித்திருந்த நிலையில் 140 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். ரிஷப் பந்த் 90 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் முயற்சி எந்த பலனையும் அளிக்கவில்லை. ரிஷப் பந்த் நிதானமாக பேட் செய்தாலும் அவ்வப்போது தனது பெரிய ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை அடித்து ரன்களைச் சேர்த்தார்.

ரிஷப் பந்த் பொதுவாக கடினமான ஆடுகளங்களில் சிறப்பாக பேட் செய்து ரன்களைச் சேர்க்கக் கூடியவர். ஹெடிங்லி ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்ட ரிஷப் பந்த் அதற்கு ஏற்றார்போல் தனது ஆட்டத்தை மாற்றி நிதானமாக பேட் செய்தார்.

2வது புதிய பந்து 80-வது ஓவரில்தான் எடுக்கப்பட்டது. புதிய பந்து எடுத்தபின் விக்கெட் வீழ்த்தலாம் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இருந்தனர். ஆனால், ஏற்கெனவே செட்டில் ஆன பேட்டர்கள் கில், ரிஷப் பந்த் இருவரும் பந்துகளை நன்கு எதிர்கொண்டு ஆடியதால், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. 4வது விக்கெட்டுக்கு கில், ரிஷப் பந்த் இருவரும் 138 ரன்கள் சேர்த்துள்ளனர்.

Ind Vs Eng, டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை, டெஸ்ட், முதல்நாள் ஆட்டம், சுப்மன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சுப்மன் கில் வேகமாக அரைசதம் அடித்த நிலையில் 140 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார்

இங்கிலாந்தில் இந்திய இளம் படை முதல் நாளே புதிய சாதனை

சீனியர் பேட்டர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர் இல்லாத நிலையில் இளம் இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் என்ன செய்யப் போகிறது, அதிலும் ஸ்விங்கிற்கும், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எவ்வாறு சமாளித்து ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பிற்கும், கேள்விக்கும் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி பதில் அளித்துவிட்டனர்.

ஹெடிங்லி மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2022-ம் ஆண்டில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்ததுதான் இந்திய அணியின் அதிகபட்சமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு அணிகள் முதல் நாள் ஆட்டத்தில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

Ind Vs Eng, டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை, டெஸ்ட், முதல்நாள் ஆட்டம், சுப்மன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹெடிங்லி மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

89 ஆண்டுகளுக்குப்பின் ஜெய்ஸ்வால் புதிய சாதனை

ஜெய்ஸ்வால் கடந்த 18 மாதங்களுக்கு முன் இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்திருந்தார், இப்போது மீண்டும் அந்த அணிக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் சதம் அடித்து ஜெய்ஸ்வால் தன்னை நிரூபித்துள்ளார். வெளிநாடுகளில் ஜெய்ஸ்வால் அடித்த 3வது சதம் இதுவாகும்.

2023-ல் ரோஸோவில் 171 ரன்கள், 2024-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் 161 ரன்கள், லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக 101 ரன்கள் என 3 சதங்களை ஜெய்ஸ்வால் வெளிநாட்டு மண்ணில் அடித்துள்ளார்.

இதுவரை எந்த பேட்டரும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் அறிமுக ஆட்டத்தில் 3 சதங்களை அடித்தது இல்லை.

96 பந்துகளில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், அடுத்த 48 பந்துகளில் விரைவாக 50 ரன்கள் சேர்த்து 144 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். இதில் 17 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும்.

23 வயதில், ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்துள்ளார். இதற்கு முன் சயத் 1936ம் ஆண்டு ஓல்டு ட்ராபோர்ட் மைதானத்தில் 21 வயதில் 112 ரன்கள் சேர்த்த முஸ்தாக் அலிதான் குறைந்த வயதில் இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த பேட்டர் ஆவார்.

Ind Vs Eng, டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை, டெஸ்ட், முதல்நாள் ஆட்டம், சுப்மன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,96 பந்துகளில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், அடுத்த 48 பந்துகளில் விரைவாக 50 ரன்கள் சேர்த்து 144 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார்.

கில்லின் 'தில்' பதில்

கடந்த முறை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படாத நிலையில் தனக்கு கிடைத்த கேப்டன் வாய்ப்பிலும், ஆட்டத்திலும் கில் சாதித்து பதில் அளித்துவிட்டார்.

சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டபின், கேப்டன் பொறுப்பு சுமையுடன் அவரின் பேட்டிங் எவ்வாறு இருக்கப் போகிறது என்ற கேள்விக்கும், எதிர்பார்ப்புக்கும் சரியான பதில் அளித்துள்ளார்.

கேப்டன் பொறுப்பு ஏற்றவுடன் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த 4வது இந்திய வீரர் என்ற பெயரை சுப்மன் கில் பெற்றார். இதற்கு முன் விஜய் ஹசாரே(1951, இங்கிலாந்து), சுனில் கவாஸ்கர்(1976, நியூசிலாந்து) திலீப் வெங்சர்க்கர்(வெஸ்ட் இண்டீஸ், 1987), விராட் கோலி(2014, இங்கிலாந்து) ஆகியோர் கேப்டன் பொறுப்பேற்றவுடன் முதல் ஆட்டத்தில் சதம் விளாசியிருந்தனர்.

சுப்மன் கில் களத்துக்கு வந்ததில் இருந்து டெஸ்ட் போட்டியைப் போன்று நிதானமாக ஆடவில்லை. மாறாக வேகமாக ரன்களைச் சேர்த்து, 56 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்த 50 ரன்களைச் சேர்க்க 84 பந்துகளை எடுத்துக்கொண்டு 140 பந்துகளில் தனது 6-வது டெஸ்ட் சதத்தை அடித்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சு சொதப்பல்

இங்கிலாந்து அணியில் ஆண்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட் இல்லாத குறை நன்றாகவே வெளிப்பட்டது. கார்ஸ், டங், வோக்ஸ், ஸ்டோக்ஸ் பந்துவீச்சு எந்த விதத்திலும் இந்திய பேட்டர்களுக்கு சிரமத்தை அளிக்கவில்லை.

விதிவிலக்காக இருந்தது சுழற்பந்துவீச்சாளர் ஷோயிப் பஷீர் பந்துவீச்சு மட்டும்தான். இங்கிலாந்து மண்ணில் நன்கு பந்தை திருப்பும் பஷீர், இந்திய பேட்டர்களை சற்று யோசித்து ஆடவைத்தது.

வேகப்பந்துவீச்சில் கார்ஸ் பந்துவீச்சு மட்டுமே பரவாயில்லை ரகம். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பெரும்பாலும் "லைன் அன்ட் லென்த்தில்" சரிவர பந்துவீசாததே முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பெரிய ஸ்கோர் சேர்க்க காரணமாக இருந்தது.

முதல் நாள் ஆட்டத்தின் பின், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தங்களின் பந்துவீச்சில் எத்தனை பந்துகளை "ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்" வீசியிருக்கிறோம் என ஆய்வு செய்தால் அவர்களின் தவறு தெரிந்துவிடும்.

காயத்திலிருந்து மீண்டுவந்த கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் வேகம் இருக்கிறது, 145 கி.மீ வேகத்தில் பந்துவீசினாலும் சரியான லைன் அன்ட் லென்த் இல்லை என்பதால் அவரது பந்துவீச்சு பேட்டர்களுக்கு பெரிதாக சிரமத்தை தரவில்லை.

ஹெடிங்லி ஆடுகளம் பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ள நிலையில், அதைப் புரிந்து கொண்டு இங்கிலாந்து அணி அதற்கேற்ப பந்துவீசவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்விங், காற்றின் வேகத்துக்கு ஏற்ப பந்தை திருப்பும் பாணி, துல்லியமான யார்கர்கள் என எதுவுமே இல்லை.

முதல் நாளில் செய்த தவறுகளை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆய்வு செய்து திருத்தி விட்டு 2வது நாளான இன்று ஆட்டத்தை எதிர்கொண்டால் மட்டுமே அந்த அணியால் சமாளிக்க முடியும். இல்லாவிட்டால், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் பிரமாண்ட ஸ்கோராக மாறிவிடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c14elmx1yyyo

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்க‌ மிடில் வீர‌ர்க‌ள் சுத‌ப்பி விட்டின‌ம்..................ஜ‌டேயா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவிக்க‌லாம் ,

வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு வாய்ப்பு கொடுக்க‌லாம்.................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோனி சாதனையை தகர்த்த ரிஷப் பந்த்: புதிய கேப்டன் கில் பவுலர்களை கையாளும் உத்தி பற்றி எழும் கேள்விகள்

Ind Vs Eng, Test Series, ரிஷப் பந்த், சுப்மான் கில், டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை, விளையாட்டுச் செய்திகள், டெஸ்ட் மேட்ச்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சதம் அடித்த இந்திய வீரர் ரிஷப் பந்த்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஹெடிங்லியில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம், வாய்ப்புகளையும் எதிரணி செய்யும் தவறுகளையும் சரியாக பயன்படுத்தியவர்களுக்கு உரிய நாளாக அமைந்தது. அந்த வகையில் நேற்றைய நாள் இங்கிலாந்தின் நாளாகவே இருந்தது.

இந்திய அணியில் ரிஷப் பந்தின் 7-வது டெஸ்ட் சதத்தைத் தவிர பெரிதாக இந்திய வீரர்கள் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 3 விக்கெட் இழப்புக்கு வரை 430 ரன்கள் என்று வலுவாக இருந்த இந்திய அணி, எப்படியும் 600 ரன்களை எட்டும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், அடுத்த 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும் மளமளவென இழந்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணியும் தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்திருப்பது நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும். ரிஷப் பந்த் சதம் அடித்ததன் மூலம் எட்டியு புதிய மைல்கற்கள் என்ன?

கேப்டன் கில் - ரிஷப் பந்த் ஜோடி சிறப்பான ஆட்டம்

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது. கில் 127 ரன்களுடனும், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ரிஷப் பந்த் வேகமாக ரன்களைச் சேர்க்கவே, கில் நிதானமாக ஆடினார். ரிஷப் பந்த் வழக்கத்தைவிட பவுண்டரிகளை அடித்து சதத்தை நெருங்கினார். 99 ரன்களில் இருந்த ரிஷப் பந்த் பஷீர் பந்தில் சிக்ஸர் அடித்து, டெஸ்ட் அரங்கில் 7-வது சதத்தை நிறைவு செய்தார்.

சதம் அடித்தவுடன் ரிஷப் பந்த் தனது ஹெல்மெட்டை கழற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, தனது வழக்கமான "சம்மர்சால்ட்" பல்டி அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இந்த பார்ட்னர்ஷிப் 200 ரன்களைக் கடந்தது. சுப்மான் கில் 150 ரன்களை எட்டும் நிலையில், விக்கெட்டை இழந்தார். பஷீர் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முற்பட்டபோது, ஸ்குயர் லெக் திசையில் டங்கிடம் கேட்ச் கொடுத்து 147 ரன்களில் கில் விக்கெட்டை இழந்தார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 209 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

இதன் மூலம் கேப்டனாக அறிமுக ஆட்டத்திலேயே அதிக ரன்கள் சேர்த்த 2வது வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். முதலிடத்தில் விஜய் ஹசாரே 160 ரன்களில் முதலிடத்தில் உள்ளார்.

Ind Vs Eng, Test Series, ரிஷப் பந்த், சுப்மான் கில், டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை, விளையாட்டுச் செய்திகள், டெஸ்ட் மேட்ச்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கில் 127 ரன்களுடனும், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்

திருப்புமுனை கேட்ச்

அடுத்து வந்த கருண் நாயர், ரிஷப் பந்துடன் சேர்ந்தார். 8 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணிக்காக களமிறங்கியதால் கருண் நாயர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை கவர் திசையில் தூக்கி அடித்தார் கருண் நாயர். நிச்சயமாக கருண் நாயர் அடித்த ஷாட்டில் கேட்ச் பிடிப்பது கடினமானது.

ஆனால், பீல்டிங்கில் இருந்த ஒலி போப் அந்தரத்தில் தாவிச் சென்று அற்புதமான கேட்ச் பிடித்து கருண் நாயர் விக்கெட்டைவீழ்த்தினார். மிகுந்த ஆசைகளுடன் களமிறங்கிய கருண் நாயர் இந்த கேட்சை நிச்சமயாக எதிர்பார்த்திருக்கமாட்டார். மிகுந்த ஏமாற்றத்துடன் கருண் நாயர் டக்அவுட்டில் வெளியேறினார். ஆட்டத்தில் கருண் நாயர் விக்கெட்தான் திருப்புமுனையாக அமைந்து, இங்கிலாந்தின் கரங்களுக்கு ஆட்டம் மாறியது.

Ind Vs Eng, Test Series, ரிஷப் பந்த், சுப்மான் கில், டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை, விளையாட்டுச் செய்திகள், டெஸ்ட் மேட்ச்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கருண் நாயர் ஆட்டமிழந்து வெளியேறிய காட்சி

ரிஷப் பந்தும் சிக்ஸரும்

அடுத்து ஜடேஜா களமிறங்கினார். ரிஷப் பந்த் சதம் அடித்தபின் பவுண்டரி, சிக்ஸர் என அடித்து வேகமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கி, 150 ரன்களுக்கு நெருங்கினார். ஆனால், டங்க் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ரிஷப் பந்த் 134 ரன்களில் ஆட்டமிழந்தார், இவர் கணக்கில் 6 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும்.

கேப்டன் சுப்மான் கில் (147), ரிஷப் பந்த் (134) ஜோடி 209 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தபின் நடுவரிசை பேட்டர்கள், கடைசிவரிசை பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இந்திய அணி அதிர்ச்சிகரமாக இழந்து முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Ind Vs Eng, Test Series, ரிஷப் பந்த், சுப்மான் கில், டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை, விளையாட்டுச் செய்திகள், டெஸ்ட் மேட்ச்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்த காட்சி

இங்கிலாந்து வலுவான தொடக்கம்

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியது. அப்போது லேசான மேக மூட்டம், குளிர்ந்த காற்று வீசியதை பயன்படுத்திய பும்ரா தனது ஸ்விங் பந்துவீச்சில் புதிய பந்தில் கிராளி விக்கெட்டை எளிதாக வீழ்த்தினார். ஆனால், 2வது விக்கெட்டுக்கு டக்கெட், போப் இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவைத் தடுத்து பேட் செய்தனர்.

பென் டக்கெட் 15 ரன்களில் இருந்தபோது ஸ்லிப்பில் அடித்த ஷாட்டை ரவீந்திர ஜடேஜா கேட்ச் பிடிக்கத் தவறினார், போப் 10 ரன்களில் இருந்தபோது பேட்டில் தெறித்த பந்தை கேட்ச் பிடிக்க ஜெய்ஸ்வால் தவறி இரு வாய்ப்புகளை வீணடித்தனர். இந்த இரு வாய்ப்புகளையும் இங்கிலாந்து பேட்டர்கள் பயன்படுத்தி நங்கூரமிட்டனர்.

சிறப்பாக ஆடிய டக்கெட் 68 பந்துகளில் அரைசதம் அடித்து 19-வது அரைசதத்தை நிறைவு செய்தார். 2-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து டக்கெட் 62 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் போல்டாகினார். போப் 64 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்துவந்த ஜோ ரூட், போப்புடன் சேர்ந்தார். இருவரையும் பிரிக்க பல பந்துவீச்சாளர்களை கேப்டன் கில் பயன்படு்த்தினார்.

Ind Vs Eng, Test Series, ரிஷப் பந்த், சுப்மான் கில், டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை, விளையாட்டுச் செய்திகள், டெஸ்ட் மேட்ச்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2வது விக்கெட்டுக்கு டக்கெட், போப் இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவைத் தடுத்து பேட் செய்தனர்

பும்ராவை விரக்தி அடையச் செய்த நோபால்

நிதானமாக ஆடி வந்த ஜோ ரூட் 28 ரன்கள் சேர்த்திருந்தபோது, பும்ரா பந்துவீச்சில் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து ஹேரி புரூக் களமிறங்கி, போப்புடன் சேர்ந்தார். 125 பந்துகளில் போப் சதத்தை நிறைவு செய்தார்.

கடைசி நேர ஓவர்களில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதி பும்ரா தனது முழு முயற்சியையும் செலுத்தினார். 2வது நாளின் கடைசி ஓவரை பும்ரா வீசியபோது, ஹேரி ப்ரூக் அடித்த ஷாட்டை கருண் நாயர் கேட்ச் பிடித்தார். ஆனால், அது நோபாலாக அறிவிக்கப்படவே பும்ரா விரக்தி அடைந்தார். பும்ரா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 நோபால்களை வீசினார்.

இந்திய அணித் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் பும்ரா மட்டுமே வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா, சிராஜ், ஜடேஜா 10 ஓவர்களுக்கு மேல் வீசியும் ஒருவிக்கெட்டையும் இந்த ஆடுகளத்தில் வீழ்த்த முடியவில்லை. 3வது நாளில் ஆடுகளம் இந்திய பந்துவீச்சாளர்களை இன்னும் சோதிக்கப் போகிறது.

Ind Vs Eng, Test Series, ரிஷப் பந்த், சுப்மான் கில், டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை, விளையாட்டுச் செய்திகள், டெஸ்ட் மேட்ச்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,125 பந்துகளில் போப் சதத்தை நிறைவு செய்தார்.

கில் கேப்டன்சி மீது எழும் கேள்வி

ஷர்துல் தாக்கூரை 40 ஓவர்களுக்கு மேல் பயன்படுத்தியும் எந்த பயனும் இல்லை. பந்து நன்றாக தேய்ந்துவிட்டநிலையில் ஷர்துல் தாக்கூரால் எந்த தாக்கத்தையும் பந்துவீச்சில் ஏற்படுத்த முடியவில்லை. புதிய பந்தாக இருக்கும்போதே பிரசித் கிருஷ்ணா, பும்ரா, சிராஜ், ஷர்துல் என 4 பேருக்கும் சமமான வாய்ப்புக் கிடைத்திருந்தால் இன்னும் கூடுதலாக விக்கெட்டை வீழ்த்தியிருக்கலாம்.

ஆனால், கேப்டன் கில் 3 பந்துவீச்சாளர்களையே பிரதானமாகப் பயன்படுத்தினார். சுழற்பந்தவீச்சாளர் ஜடேஜாவுக்கு நேற்று 9 ஓவர்கள் மட்டுமே வழங்கினார். இதுவே கோலி, ரோஹித் சர்மாவாக இருந்திருந்தால், சுழற்பந்துவீச்சுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கியிருப்பார்கள்.

ஆடுகளம் தனது தன்மையை இழந்து தூசி படிந்து வருவதால், இந்த நேரத்தில் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதுதான் சிறந்தது. ஆனால், கில் ஏன் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளி்க்கிறார் எனத் தெரியவில்லை.

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த விக்கெட் கீப்பர்களில் தோனியின் 6வது சதத்தை முறியடித்து, ரிஷப் பந்த் புதிய சாதனை நிகழ்த்தினார். இதன் மூலம் இந்திய விக்கெட் கீப்பர்களில் டெஸ்ட் அரங்கில் அதிக சதங்களை அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் ரிஷப் பந்த்.

பிரிட்டன் மண்ணில் ரிஷப் பந்த் அடித்த 3வது சதம் இதுவாகும். எந்த அணியின் விக்கெட் கீப்பரும் இங்கிலாந்து மண்ணில் 3 சதங்களை விளாசியது இல்லை. ரிஷப் பந்த் தவிர்த்து ஜிம்பாப்பே விக்கெட் கீப்பர் ஆன்டி பிளவர் இந்தியாவில் 3 சதங்களையும், இங்கிலாந்தின் லெஸ் ஆம்ஸ் மே.இ.தீவுகளிலும் 3 சதங்களை விளாசியுள்ளனர்.

பிரிட்டன் மண்ணில் வெளிநாட்டு அணியின் விக்கெட் கீப்பர் ஒருவர் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்ததில் ரிஷப் பந்த்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளார். வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையும் ரிஷப் பந்த்துக்கு கிடைத்துள்ளது, முதலிடத்தில் ஹர்திக் பாண்டியா இலங்கையில் 7 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.

ரிஷப் பந்த் சேர்த்த 134 ரன்கள் தான் ஹெடிங்லி மைதானத்தில் விக்கெட் கீப்பர் சேர்த்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன், இலங்கைக்கு எதிராக பேர்ஸ்டோ 140 ரன்கள் சேர்த்துள்ளார்.

2018ம் ஆண்டுக்குப்பின் ஒரு இன்னிங்ஸில் 3 இந்திய பேட்டர்கள் சதம் அடிப்பது இதுதான். இதுவரை 5 முறை இதுபோல் 3 பேட்டர்கள் சதம் அடித்துள்ளனர். கடைசியாக 2002ம் ஆண்டில் இதே ஹெடிங்லி மைதானத்தில் திராவிட், கங்குலி, சச்சின் சதம் அடித்த நிலையில் ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்குப்பின் ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பந்த் சதம் அடித்துள்ளனர்.

Ind Vs Eng, Test Series, ரிஷப் பந்த், சுப்மான் கில், டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை, விளையாட்டுச் செய்திகள், டெஸ்ட் மேட்ச்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிக்ஸர் அடித்து சதம்

3 முறை ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டியில் சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்துள்ளார். 2018ல் ஓவல் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் அடில் ரஷீத் பந்தில் சிக்ஸர் அடித்தும், 2021ல் ஆமதபாத்தில் ஜோ ரூட் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தும், இப்போது பஷீர் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தும் ரிஷப் பந்த் சதத்தை நிறைவு செய்துள்ளார்.

சச்சின் 6 முறையும், ரோஹித் சர்மா 3 முறையும் சிக்ஸர் அடித்து சதம் நிறைவு செய்துள்ளனர். 2002ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் அரங்கில் ரிஷப் பந்த்தைப் போல் டெஸ்ட் அரங்கில் எந்த விக்கெட் கீப்பரும், பேட்டரும் சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடுகளம் எப்படி?

ஆடுகளத்தில் பெரிதாக பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வேகப்பந்துவீச்சாளர்கள் உயிரைக் கொடுத்து பந்துவீசினாலும் ஸ்விங் ஆவதற்கு மறுக்கிறது, அதனால்தான் ஒன்றரை நாட்களில் இந்திய அணியால் 470 ரன்கள் சேர்க்க முடிந்தது, இங்கிலாந்து அணியும் விரைவாக 200 ரன்களை எட்ட முடிந்தது.

2வது நாளிலேயே ஆடுகளம் இவ்வாறு பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காமல் இருந்தால், அடுத்துவரும் நாட்களில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் காத்திருக்கிறது என்றே கூற வேண்டும். கடைசி இரு நாட்களில் ஆடுகளம் வறண்டால் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். அப்படி நடக்கும் பட்சத்தில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தில் தாக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c939gqrl03go

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DRINKS

1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England

India FlagIndia

(15 ov) 471 & 64/1

England FlagEngland

465

Day 3 - Session 3: India lead by 70 runs.

Current RR: 4.26

 • Min. Ov. Rem: 23

 • Last 10 ov (RR): 44/0 (4.40)

  • கருத்துக்கள உறவுகள்

முத‌ல் மைச் ச‌ம‌ நிலையில் முடிய‌ வாய்பில்லை...............இந்தியா வீர‌ர்க‌ள் எல்லாரும் இன்றையான் நாள் விளையாட்டில் அவுட் ஆகி விடுவின‌ம் , இங்லாந் இர‌ண்டாவ‌து இனிங்சில் சில‌து வெல்ல‌க் கூடும் தோல்வியும் அடைய‌லாம் , இந்தியா வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சை பொருத்து

ஜ‌ந்தாம் நாள் பிச் மாறுப‌டும் , அது ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு சாத‌க‌மாய் அமையும்..................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

LUNCH

1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England

India FlagIndia

(48 ov) 471 & 153/3

England FlagEngland

465

Day 4 - Session 1: India lead by 159 runs.

Current RR: 3.18

 • Min. Ov. Rem: 66

 • Last 10 ov (RR): 28/0 (2.80)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TEA

1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England

India FlagIndia

(75 ov) 471 & 298/4

England FlagEngland

465

Day 4 - Session 2: India lead by 304 runs.

Current RR: 3.97

 • Min. Ov. Rem: 38

 • Last 10 ov (RR): 45/1 (4.50)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DRINKS

1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England

India FlagIndia

(90.2 ov) 471 & 349/8

England FlagEngland

465

Day 4 - Session 3: India lead by 355 runs.

Current RR: 3.86

 • Min. Ov. Rem: 22.4

 • Last 10 ov (RR): 35/4 (3.50)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

INNINGS BREAK

1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England

India FlagIndia

(96 ov) 471 & 364

England FlagEngland

465

Day 4 - Session 3: India lead by 370 runs.

Current RR: 3.79

 • Min. Ov. Rem: 17

 • Last 10 ov (RR): 29/4 (2.90)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பின்ன‌னி வீர‌ர்க‌ளின் விளையாட்டு ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது அண்ணா...................இர‌ண்டு இனிங்சையும் பாருங்கோ எல்லாரும் 000 0000 இப்ப‌டி அவுட் ஆகி இருக்கின‌ம் , நாளை இங்லாந் கார‌ங்க‌ள் வெல்ல‌க் கூடும் ம‌ழை வ‌ந்தால் விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்................இந்தியா 4வேக‌ப‌ந்து வீச்சோட‌ வ‌ந்து வும்ராவை த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் பெரிசா சாதிக்க‌ வில்லை.................ஒரே ஒரு சுழ‌ல் ப‌ந்து அது ஜ‌டேயா ம‌ட்டும் , ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌வ‌ரை டெஸ்ட் போட்டிக்கு தெரிவாகி இருக்கிறார்

வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர விளையாட‌ விட்டு இருந்தால் ர‌ன்ஸ் ஆவ‌து அடிச்சு இருப்பார்...............................

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய - இங்கிலாந்து டெஸ்ட் : வெற்றி யார் வசம்?

Sports24 June 2025

1750740355_6124706_hirunews.jpg

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. 

இந்தநிலையில் நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவின் போது இங்கிலாந்து அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இங்கிலாந்து அணிக்கு இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 350 ஓட்டங்கள் பெற வேண்டியுள்ளது. 

முன்னதாக இந்திய அணி முதலாவது இன்னிங்ஸில் 471 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணி 465 ஓட்டங்களையும் பெற்றன. 

இதனையடுத்து இந்திய அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 364 ஓட்டங்களைப் பெற்றது. 

இதில் கே.எல் ராஹூல் 137 ஓட்டங்களையும், ரிசப்ட் பண்ட் 118 ஓட்டங்களையும் பெற்றனர்.

https://hirunews.lk/tm/sports/408134/india-vs-england-test-who-will-win

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.