Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

28 May 2025, 10:52 AM

  Anna University student sexual assault case

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் வழக்கில் இன்று (மே 28) சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனது ஆண் நண்பருடன் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இரவு, இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த ஒருவர் இருவரையும் மிரட்டி, அந்த ஆண் நண்பரை விரட்டிவிட்டு அம்மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி 100 க்கு போன் செய்து புகார் தெரிவிக்க, இந்த தகவல் கோட்டூர்புரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. 

Anna-University-case.jpg

இதையடுத்து கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபர் யார் என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரனை கடந்த டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்தனர். 

இந்த நிலையில், ஞானசேகரன் மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட போது தொலைபேசியில் ‘சார்’ என்று ஒருவரை அழைத்து பேசியதாகவும் தகவல் வெளியானது. 

இதனால் யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

குறிப்பாக ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்று கூறி அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தினர். 

இந்த நிலையில் சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின் ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல. திமுக அனுதாபி தான் என்று விளக்கமளித்திருந்தார். 

இந்த சூழலில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. 

கடந்த ஜனவரி 5ஆம் தேதி ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதோடு ஞானசேகரன் மீது திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து ஞானசேகருக்கு எதிராக 100 பக்க குற்ற பத்திரிக்கையை கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சைதாப்பேட்டை 9ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து கடந்த மார்ச் 7ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. 

இந்த சூழலில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது என்றும் ஆதாரம் இல்லாமல் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

அதாவது பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடுதல், ஆதாரங்களை அழித்தல், கல்லூரி மாணவியை மிரட்டி நிர்வாணப்படுத்துதல், புகைப்படம் எடுத்து வெளியிடுதல் போன்ற பாலியல் குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு சாட்சி விசாரணை தொடங்கியது. இதில் மொத்தம் 29 பேர் சாட்சியம் அளித்தனர். ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசு சார்பில் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மே 20 முதல் 23 வரை இறுதி வாதங்கள் நடைபெற்றன. 

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, “ஞானசேகரனுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் வலுவாக உள்ளது. குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். 

அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, “ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி அவர் குற்றவாளி” என அறிவித்தார். சிறப்பு விசாரணை குழு அறிக்கையை ஏற்று இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி தண்டனை விவரத்தை ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஏற்கனவே சென்னை பெருநகர முதலாவது கூடுதல் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இட மாறுதல் செய்யப்பட்டார். தற்போது இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கி இருக்கும் நிலையில் புதிய பொறுப்பை அவர் ஏற்க உள்ளார். 

ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

https://minnambalam.com/anna-university-student-sexual-assault-case-verdict/#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-308.jpg?resize=750%2C375&ssl

அண்ணா பல்கலை பாலியல் வன்புணர்வு வழக்கு; ஜூன் 2 ஆம் தண்டனை விவரம்!

தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று சென்னை மகிளா (மகளிர்) நீதிமன்றம் இன்று (29) அறிவித்தது.

அதன்படி, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சென்னை நீதிமன்றம் தனது உத்தரவில் இன்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து, ஒதுக்குப்புறமான பகுதியில் ஒரு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது ஆண் நண்பரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் சம்பவத்தை வீடியோ எடுத்து இருவரையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவர் சென்னை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்.

ஞானசேகரன் கைது செய்யப்பட்ட உடனேயே, அவர் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) நிர்வாகிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன.

இது ஒரு அரசியல் சர்ச்சைக்கு வழிவகுத்தது.

ஆரம்பத்தில் திமுக இவருடனான எந்தத் தொடர்பையும் மறுத்தாலும், எதிர்க்கட்சிகள் அவர் கட்சியில் ஒரு பதவியில் இருப்பதாகக் கூறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், ஆதாரங்களையும் வெளியிட்டன.

ஞானசேகரன் திமுக மாணவர் பிரிவு நிர்வாகி என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் திமுக தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார்.

தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இந்தக் கூற்றுக்களை மறுத்து, ஞானசேகரன் கட்சி நிர்வாகி அல்ல என்று கூறினார்.

முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலினும் சட்டமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் திமுக உறுப்பினர் இல்லை என்றாலும், அவர் உண்மையில் ஒரு ஆதரவாளர் என்று தெளிவுபடுத்தினார்.

ஞானசேகரன் முன்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார், அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும், சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறி இருந்தார்.

அதேநேரம், தமிழ்நாடு காவல்துறை எதிர் மனு தாக்கல் செய்தது, இரு தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டன.

சென்னை மேல் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது.

பின்னர் SIT மகிளா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

தனது தாயாரின் உடல்நிலை மோசமடைந்ததைக் காரணம் காட்டி, தண்டனையில் கருணை காட்ட வேண்டும் என்று அவர் இப்போது கோரியுள்ளார்.

ஜூன் 2 ஆம் திகதி நீதிமன்றம் தண்டனை தொடர்பான விவரங்களை அறிவிக்கும்.

https://athavannews.com/2025/1433539

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா பல்கலை வளாக பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தீர்ப்பு

28 மே 2025, 05:18 GMT

புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் மீது சாட்டப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக அறிவித்த நீதிபதி எம். ராஜலட்சுமி, ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார். தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

காவல் துறை தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ஞானசேகரன் மீது குற்றம் சுமத்தப்பட்ட 11 பிரிவுகளிலும் அரசுத் தரப்பு வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஞானசேகரன் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொண்டார், தனது குடும்பம் தன்னை நம்பியுள்ளது என்று தெரிவித்தார். இதற்கு அரசுத் தரப்பில் கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டுமெனக் கோரப்பட்டது," என்றார்.

தீர்ப்பை வரவேற்ற அதிமுக, பாஜக

இந்தத் தீர்ப்பை வரவேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "மக்கள் மன்றத்தில் இந்த வழக்கு குறித்து, ஸ்டாலின் மாடல் அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்? விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது? ஞானசேகரன் வீட்டுப் படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவுக்கு நெருக்கமாக இருந்த ஸ்டாலின் அரசின் அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்? SIT-ல் பணியாற்றிய டிஎஸ்பி ராகவேந்திரா ரவி ராஜினாமா செய்தது ஏன்? உயர் அதிகாரிகள் அழுத்தம் என்று வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, "சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நடத்திய திமுக நிர்வாகி ஞானசேகரன், குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி, நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

வழக்கின் பின்னணி என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் இன்று (மே 28) தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் டிசம்பர் 23ஆம் தேதியன்று இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் அந்த மாணவி புகார் அளித்தார். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து காவல்தறையினர் விசாரணை நடத்தினர்.

அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை மாணவி அடையாளம் காட்டினார். இதையடுத்து டிசம்பர் 25ஆம் தேதியன்று 37 வயதான ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கோட்டூர்புரத்தில் உள்ள நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் என காவல்துறை தெரிவித்தது.

இந்தச் சம்பவத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் கண்டனம் தெரிவித்தன.

வெளியான முதல் தகவல் அறிக்கை

Play video, "அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு : குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என தீர்ப்பு", கால அளவு 5,26

05:26

p0ldw6ly.jpg.webp

காணொளிக் குறிப்பு,

இதற்கிடையில் டிசம்பர் 26ஆம் தேதியன்று காலையில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது.

மாணவிக்கு நடந்த அசம்பாவிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி, அவரது பெயர், அலைபேசி எண், படிக்கும் பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன.

சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரது தனிப்பட்ட விவரங்கள் தவிர்த்து, எந்தெந்தப் பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை ஒளிபரப்பின.

பாதிப்பிற்கு உள்ளான மாணவி, தன்னைத் துன்புறுத்திய நபர் செல்போனில் யாருடனோ பேசியதாகவும் அவரை 'சார்' என அழைத்ததாகவும் தனது புகாரில் கூறியிருந்தார். இதை வைத்து எதிர்க்கட்சிகள் "யார் அந்த சார்?" எனக் கேள்வியெழுப்பின.

''எஃப்.ஐ.ஆர் வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம், அது வெளியானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது" என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். இது தொடர்பான அவருடைய செய்தியாளர் சந்திப்பே சர்ச்சைக்கு உள்ளானது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன்

அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தீர்ப்பு

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி அ.தி.மு.க. வழக்கறிஞர் வரலட்சுமி, பா.ஜ.க. வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்குப் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை நகர காவல் ஆணையர் கடந்த ஜனவரி 5ஆம் தேதி உத்தரவிட்டார்.

வழக்கின் புலனாய்வு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று சைதாப்பேட்டை ஒன்பதாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்குப் பிறகு இந்த வழக்கு மார்ச் 7ஆம் தேதியன்று சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஞானசேகரனுக்கு என வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாத நிலையில், சட்டப் பணிகள் குழுவின் சார்பில் அவருக்காக இரு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதற்குப் பிறகு, தனக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதியன்று தள்ளுபடி செய்தது. அன்றைய தினமே அவர் மீதான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுதல், ஆதாரங்களை அழித்தல், சட்டவிரோதமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், புகைப்படம் எடுத்து வெளியிடுதல் உள்ளிட்ட பல குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தீர்ப்பு

ஏப்ரல் 23ஆம் தேதியன்று மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பாக சாட்சிகளின் விசாரணை தொடங்கியது. தினந்தோறும் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் காவல்துறை தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதற்குப் பிறகு மே 20ஆம் தேதி முதல் மே 23ஆம் தேதிவரை இரு தரப்பிலும் தங்கள் இறுதி வாதங்களை முன்வைத்தனர். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கபட்டு இருப்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய ஒரு பாலியல் குற்ற வழக்கில் ஆறு மாதங்களுக்குள் புலனாய்வும் நீதிமன்ற விசாரணையும் முடிவடைந்து தீர்ப்பு வந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிராக மேலும் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2kqp20vq80o

  • கருத்துக்கள உறவுகள்

6 மாதத்தில் தீர்ப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த "சார்" ரை பாதுகாக்க வேண்டும் என்றால் துரித கதியில் வழக்கை முடித்து இவரையும் ஒரு 6-7 மாதம் ஏசி ரூமில் வைத்து எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

அந்த "சார்" ரை பாதுகாக்க வேண்டும் என்றால் துரித கதியில் வழக்கை முடித்து இவரையும் ஒரு 6-7 மாதம்

12 hours ago, goshan_che said:

6 மாதத்தில் தீர்ப்பு!

ஏசி ரூமில் வைத்து எடுக்க வேண்டும்.

நீதிமன்றே வழக்கை கையிலெடுத்தபடியாலேயே துரிதகதியில் முடிந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நீதிமன்றே வழக்கை கையிலெடுத்தபடியாலேயே துரிதகதியில் முடிந்துள்ளது.

அப்போ அந்த சாரை காப்பாற்ற நீதிமன்றம் வழக்கை விரைந்து முடித்துள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

அந்த சார் ஆளுனர் ரவி என்றும்…

அவரை காப்பாற்ற திமுக, பிஜேபி, நீதிதுறை கூட்டு நாடகம் ஆடுவதாகவும் கூட சொல்லப்படுகிறது.

ஆளுனரின் வேந்தர் நியமன பறிப்பு, ரவியின் அண்மைய மெளனம் யோசிக்க வைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பிகு

அந்த சார் ஆளுனர் ரவி என்றும்…

அவரை காப்பாற்ற திமுக, பிஜேபி, நீதிதுறை கூட்டு நாடகம் ஆடுவதாகவும் கூட சொல்லப்படுகிறது.

ஆளுனரின் வேந்தர் நியமன பறிப்பு, ரவியின் அண்மைய மெளனம் யோசிக்க வைக்கிறது.

அந்த சார், யார் என்பதில் இரண்டு விதமான சந்தேகங்கள் இணையத்தில் பேசப் பட்டது. ஒரு சாரர்… அந்த சார், உதயநிதி என்கிறார்கள். உதயநிதி உத்தமன் இல்லை என்றபடியால்….இதுவும் ஏற்கக் கூடியதே. 😂

தமிழகத்திற்கு வரும் ஆளுநர்கள் எல்லோரும்… பொம்பிளை கள்வர் போல் உள்ளது. ஆளுநர் ரவிக்கு முன்பு இருந்த பன்வாரிலால் புரோகித் என்ற 75 வயது மதிக்கத் தக்க ஆளுநர் ஒருமுறை கள ஆய்விற்குப் போகும் போது, கிடுகு மறைப்பில் ஒரு பெண் குளித்துக் கொண்டு இருந்த போது… ஓலைக் கிடுகை விலக்கிப் பார்த்தாரம். 😁

அதற்கு முன்பு இருந்த சென்னா ரெட்டி என்ற ஆளுநர், ஜெயலலிதா அம்மையாரையே தவறான நோக்கத்தில் கூப்பிட்டார் என்று… அம்மையாரே கூறி உள்ளார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

அந்த சார், யார் என்பதில் இரண்டு விதமான சந்தேகங்கள் இணையத்தில் பேசப் பட்டது. ஒரு சாரர்… அந்த சார், உதயநிதி என்கிறார்கள். உதயநிதி உத்தமன் இல்லை என்றபடியால்….இதுவும் ஏற்கக் கூடியதே. 😂

தமிழகத்திற்கு வரும் ஆளுநர்கள் எல்லோரும்… பொம்பிளை கள்வர் போல் உள்ளது. ஆளுநர் ரவிக்கு முன்பு இருந்த பன்வாரிலால் புரோகித் என்ற 75 வயது மதிக்கத் தக்க ஆளுநர் ஒருமுறை கள ஆய்விற்குப் போகும் போது, கிடுகு மறைப்பில் ஒரு பெண் குளித்துக் கொண்டு இருந்த போது… ஓலைக் கிடுகை விலக்கிப் பார்த்தாரம். 😁

அதற்கு முன்பு இருந்த சென்னா ரெட்டி என்ற ஆளுநர், ஜெயலலிதா அம்மையாரையே தவறான நோக்கத்தில் கூப்பிட்டார் என்று… அம்மையாரே கூறி உள்ளார். 🤣

ஓம் உதய்நிதிதான் அந்த சார் என்றும் ஒரு சந்தேகம் ஓடுகிறது.

அதே போல் சும்மா பொலிசை மிரட்ட போனில் “சார்” என யாரிடமோ பேசுவது போல் குற்றவாளி பாவனை செய்ததாக மாநில அரசின் கீழ் உள்ள பொலிஸ், மத்திய அரசின் கீழ் உள்ள நீதி துறை எல்லாரும் சாதிக்கிறார்கள்.

யார் அந்த சார்?

மாநில, மத்திய அரசுகள் சேர்ந்து அமுக்க நினைப்பதால் அவர் ஆளுனராக இருக்கவே வாய்புள்ளதாக நான் நினைக்கிறேன்.

ஆனல் உதய் ஆகவும் இருக்கலாம்.

12 minutes ago, தமிழ் சிறி said:

அதற்கு முன்பு இருந்த சென்னா ரெட்டி என்ற ஆளுநர், ஜெயலலிதா அம்மையாரையே தவறான நோக்கத்தில் கூப்பிட்டார் என்று… அம்மையாரே கூறி உள்ளார். 🤣

காதலன் படத்தில் வரும் கார்கர்லால் சத்யணாராயணா எனும் வில்லன் கரெக்டர் - சென்னா ரெட்டியை அவமானபடுத்த ஜெ சொல்லு உருவாக்கப்பட்டதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசேகரனுக்கு ஆயுள் சிறை: அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்

அண்ணா பல்கலைக்கழகம், பாலியல் துன்புறுத்தல் வழக்கு, தண்டனை, ஞானசேகரன்

படக்குறிப்பு, ஞானசேகரன்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஞானசேகரன் குறைந்தது 30 ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றும் அதற்குப் பிறகே, அவரது விடுதலை குறித்து பரிசீலிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என கடந்த மே 28ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் மீது சாட்டப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக அறிவித்த நீதிபதி எம். ராஜலட்சுமி, தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி, தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன.

எந்தெந்த பிரிவுகளின் கீழ் தண்டனை?

அண்ணா பல்கலைக்கழகம், பாலியல் துன்புறுத்தல் வழக்கு, தண்டனை, ஞானசேகரன்

ஞானசேகரன் மீது பிஎன்எஸ் சட்டத்தின் சட்டப்பிரிவுகள் 329 (விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்), (சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்), 87 (வலுக்கட்டாயமாக கடத்தி சென்று ஆசைக்கு இணங்க வைத்தல்), 127(2) - (உடலில் காயத்தை ஏற்படுத்துதல்), 75(1)(2)(3) ( பாலியல் வன்கொடுமை செய்தல்), 76 (கடுமையாக தாக்குதல்) 64(1) (பாலியல் ரீதியாக துன்புறுத்துதல்), 351(3) (கொலை மிரட்டல் விடுத்தல்) 238(B) (பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66(இ) (தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல்), தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் பிரிவு 4 என மொத்தம் 11 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் தண்டனை விவரங்கள் தனித்தனியாக அறிவிக்கப்பட்டன.

அதில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 64-1ன் கீழ் பாலியல் துன்புறுத்தல் பிரிவின் அடிப்படையில் ஞானசேகரனுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

329 (விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்) என்ற பிரிவின் கீழ் 3 மாதங்களும் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் (126 (2)) என்ற குற்றத்திற்கு ஒரு மாதமும் உடலில் காயத்தை ஏற்படுத்துதல் (127(2)) என்ற குற்றத்திற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமைக்கு (75(1)(2)(3)) மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் கடுமையாக தாக்குதல் (பிரிவு 76) என்ற குற்றத்திற்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல் விடுத்தல் (351(3)) என்ற குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் பாலியல் குற்றம் தொடர்பான ஆதாரங்களை அழித்தல் (238(B)) குற்றச்சாட்டில் 3 ஆண்டு சிறையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

தீர்ப்பு பற்றி வழக்கறிஞர்கள் கருத்து

தண்டனை விவரங்கள் வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, இது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்று குறிப்பிட்டார். "குற்றவாளிக்கு 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி. இந்தக் குற்றச்சாட்டிற்கு இதுதான் அதிகபட்ச தண்டனை. அது வழங்கப்பட்டுள்ளது. எந்தச் சலுகையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதான் முக்கியமானது. இந்த வழக்கில் யாருமே பிறழ் சாட்சியாகவில்லை. பெண்கள் தங்களுக்கு குற்றமிழைக்கப்பட்டால் துணிந்து புகார் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

ஞானசேகரன் தரப்பின் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பிஎன்எஸ் 64/1 பிரிவின் கீழ் 30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது அடிப்படை உரிமைக்கு எதிரானது. இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். தண்டனையின் முழுவிவரம் கிடைத்த பிறகு மேல் முறையீடு செய்வோம்" எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் வேறு யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா?

இந்த வழக்கில் வேறு சிலரும் சம்பந்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், இதில் வேறு யாரும் சம்பந்தப்படவில்லையென தடயவியல் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். "இன்னொரு நபர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா என சில விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இது குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். குற்றம்சாட்டப்பட்டவரின் தொலைபேசிதான் இந்த வழக்கில் முக்கியமான தடயவியல் சாட்சியம். அந்த போன் தடவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அந்த போனில் என்னென்ன விஷயங்கள் இருந்தன, அவருடைய சமூகப் பழக்க வழக்கங்கள் என்னென்ன, சமூக வலைதளங்கள் எதிலெல்லாம் அவர் இருக்கிறார் என்று ஆராயப்பட்டது. சம்பவம் நடந்த 23ஆம் தேதி அந்த போனில் என்னவெல்லாம் நடந்தது என்றும் ஆராயப்பட்டது. சம்பவ நேரத்தில் அந்த போன் 'ஃப்ளைட் மோடில்' (தொடர்புகொள்ள முடியாத நிலையில்) இருந்தது என்பதை தடய அறிவியல் ஆய்வகம் நீதிமன்றத்தில் பதிவுசெய்தது.

இதனை தடயவியல் நிபுணர் நீதிமன்றத்தில் வாய்மொழி சாட்சியமாகவும் அளித்தார். அந்த போனில் ஏர்டெல் சிம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஏர்டெல்லின் நோடல் அதிகாரி நீதிமன்றத்திற்கு வந்து, மே 23ஆம் தேதி மாலை 6.29 மணிக்குத்தான் அந்த போனுக்கு முதல் அழைப்பு வந்தது என்றும் அதற்குப் பிறகு 8.52வரை எந்த அழைப்பும் வரவில்லையென்றும் சாட்சியமளித்தார். 8.52க்கு பிறகுதான் அவருக்கு 'மிஸ்ட் கால்கள்' குறித்த குறுஞ்செய்தி வந்தது.

பிஎன்எஸ்சின் 358வது பிரிவின்படி, இன்னொரு குற்றவாளி இருப்பதாக நீதிமன்றம் கருதினால், அந்த நபரையும் இணைத்து நீதிமன்றமே விசாரணை நடத்தலாம். ஒரே ஒருவர்தான் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால்தான், இவருக்கு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. குற்றவாளி அந்தப் பெண்ணை அச்சுறுத்துவதற்காகவும் தானும் பல்கலைக்கழக ஊழியர் எனக் காட்டுவதற்காகவும்தான் போனில் பேசுவதைப் போல நடித்தார்" என அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி விளக்கம் அளித்தார்.

வழக்கை அவசரஅவசரமாக முடித்த திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

X பதிவை கடந்து செல்ல

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

ஆனால், அ.தி.மு.க. இந்த விவகாரத்தில் இன்னும் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக இன்றும் தெரிவித்துள்ளது. தண்டனை விவரங்கள் வெளியான பிறகு இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு? #SIRஐ_காப்பாற்றியது_யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அனைத்து பதில்களும் கிடைக்கத்தான் போகின்றன. ஸ்டாலின் சாரே நினைத்தாலும்,அந்த SIRஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, "இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான். இதுபோன்று பொய் புரளிகளை வைத்து அரசியல் செய்வதையே முழுநேர தொழிலாகச் செய்து கொண்டிருக்கும் பழனிசாமி இன்று போல் உண்மைகளால் தொடர்ந்து அவமானப்படப் போவது உறுதி" எனக் கூறியிருக்கிறார்.

வழக்கின் பின்னணி என்ன?

அண்ணா பல்கலைக்கழகம், பாலியல் துன்புறுத்தல் வழக்கு, தண்டனை, ஞானசேகரன்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் இன்று (மே 28) தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் டிசம்பர் 23ஆம் தேதியன்று இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் அந்த மாணவி புகார் அளித்தார். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து காவல்தறையினர் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை மாணவி அடையாளம் காட்டினார். இதையடுத்து டிசம்பர் 25ஆம் தேதியன்று 37 வயதான ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கோட்டூர்புரத்தில் உள்ள நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் என காவல்துறை தெரிவித்தது.

அண்ணா பல்கலைக்கழகம், பாலியல் துன்புறுத்தல் வழக்கு, தண்டனை, ஞானசேகரன்

படக்குறிப்பு,அண்ணா பல்கலைக்கழகம்

இதற்கிடையில் டிசம்பர் 26ஆம் தேதியன்று காலையில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி அ.தி.மு.க. வழக்கறிஞர் வரலட்சுமி, பா.ஜ.க. வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்குப் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை நகர காவல் ஆணையர் கடந்த ஜனவரி 5ஆம் தேதி உத்தரவிட்டார்.

வழக்கின் புலனாய்வு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று சைதாப்பேட்டை ஒன்பதாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்குப் பிறகு இந்த வழக்கு மார்ச் 7ஆம் தேதியன்று சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஏப்ரல் 23ஆம் தேதியன்று மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பாக சாட்சிகளின் விசாரணை தொடங்கியது. தினந்தோறும் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் காவல்துறை தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மே 28ஆம் தேதி இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g277408geo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.