Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதத்துக்கு எதிராக கனேடிய அரசு எடுக்கும் நடவடிக்கையை 'இனப்படுகொலை' என்பீர்களா? - கனேடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் விஜயதாஸ ராஜபக்ஷ கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30 MAY, 2025 | 09:22 AM

image

(நா.தனுஜா)

பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், கனடாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தோற்றம் பெறுமாயின், அதன் விளைவாக ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்பில் கனேடிய அரசு நடவடிக்கை எடுக்குமாயின், அதனையும் 'இனப்படுகொலை' என்று வகைப்படுத்துவீர்களா? என கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து விஜயதாஸ ராஜபக்ஷவினால் ஹரி ஆனந்தசங்கரிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த அரசாங்கத்தில் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகப் பதவி வகித்த நான், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டேன்.

இலங்கையில் சுபீட்சத்தையும், புரிந்துணர்வையும் கட்டியெழுப்பும் நோக்குடனேயே உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

முதலாவதாக கனடாவின் அரசியலில் உச்சத்தை எட்டியிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்தினைக் கூறுகின்றேன்.

இலங்கையில் சகல சமூகங்களினதும் மதிப்பைப்பெற்ற தமிழ் அரசியல்வாதியான வீ.ஆனந்தசங்கரியின் மகனான உங்களது அமைச்சு நியமனம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

உங்களது தந்தையின் சார்பில் 2002 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜரான நான், தமிழர் ஐக்கிய விடுதலைக்கூட்டணியின் தலைவராக அவர் பதவி வகிப்பதை வெற்றிகரமாக நியாயப்படுத்தி வென்றேன்.

அதேபோன்று 2004 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, அவர் தப்பி வந்து எனது வீட்டில் தஞ்சம் புகுந்தார்.

அவருக்குப் பாதுகாப்பு அளித் நான், அவரை அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் அழைத்துச்சென்றேன்.

எனது வேண்டுகோளின்படி அவர் உங்களது தந்தைக்கு அரச பாதுகாப்பு வழங்கியதுடன், அது சுமார் இரு தசாப்தங்கள் வரை தொடர்ந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையகாலங்களில் வெளியிடப்பட்டுள்ள சில கருத்துக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒரு முன்னுதாரணமாகக் காண்பிக்கும் வகையிலான செயற்பாடுகள் தொடர்பில் நான் மிகுந்த அதிருப்தி அடைகின்றேன்.

தமிழீழ விடுதலைப்புலிகளால் சுமார் 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், அவர்களில் சுமார் 27,000 க்கும் மேற்பட்டோர் இராணுவத்தினராவர்.

அதுமாத்திரமன்றி முக்கிய தமிழ் அரசியல் தலைவர்கள், சமூகத்தலைவர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர்.

பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், கனடாவில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தோற்றம் பெறுமாயின், உயிரிழப்புக்கள் தொடர்பில் கனேடிய அரசு நடவடிக்கை எடுக்குமாயின், அதனையும் 'இனப்படுகொலை' என்று வகைப்படுத்துவீர்களா? இல்லை எனில், இலங்கை மீது அதனை ஒத்தவகையில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தீவிர கரிசனைக்குரியதாகும்.

தற்போது இலங்கைக்கு தூரநோக்கு சிந்தனையும், கருணையும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில வெளிநாட்டுத்தரப்புக்களின் சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகள் உள்நாட்டு நிலைவரத்தை மேலும் மோசமாக்குகின்றன.

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் ஆகியோர் இந்தத் துருவமயமாக்கலுக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர்.

அதற்குக் காரணம் தமிழ் சமூகத்தின் மீதான அக்கறை அல்ல. மாறாக அரசியல் ரீதியான நோக்கங்களும், தேர்தல் அடைவுகளுமே அதற்குக் காரணமாகும் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/216047

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு கியூபெக் மக்க@ பிரிந்து போக நினைத்த போது கனேடிய அரசு சர்வஜன வாக்கேடுப்பு ஒன்றை அம்மக்களிடம் நடாத்தி ஜனநாயகத்தை நிலைநிறுத்தியது. உங்களால் வடக்கு கிழக்கில் அப்படி ஒன்றை நடாத்த துணிவுள்ளதா?

மக்களை சிறிய பரப்புக்குள் வர செய்து அவர்கள் மேல் குண்டு போட்டி கொன்றதை சிங்களத்தில் எப்படி கூறுவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதமேதுமில்லாமல் தங்கள் வாழ்வை கொண்டுசென்ற மக்களை இனவழிப்பு செய்து, தப்பியவர்களை கப்பலில் ஏற்றி விரட்டியதை மனிதாபிமானம் என்பீர்களா? தங்கள் இனம் அழிக்கப்படுவதை தடுக்க ஆயுதம் ஏந்தியதை பயங்கரவாதம் என்பீர்களா? தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? தனியார் காணியில் விகாரைகள் எழுவதை தடுத்தீர்களா? இனவாதம் கக்கியவர்களை தண்டித்தீர்களா? தங்கள் சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டவர்களை சொந்த இடங்களில் குடியேற்றினீர்களா? காணாமல் ஆக்கியவர்களை உறவுகளிடம் ஒப்படைத்தீர்களா? போர்குற்றவாளிகளை காப்பாற்றி அவர்களாலேயே கட்சியிலிருந்து விரட்டப்பட்டவர். கடிதம் எழுத்துவதாலேயோ, கண்டனம் தெரிவிப்பதாலேயோ நாட்டில் சுபீட்ஷத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த முடியாது. அப்படி நீங்கள் நினைத்தால்; உங்கள் அறம் பற்றியபுரிதலில் ஏதோ தவறு இருக்கிறது. உங்களுக்கு அறத்தை கற்பித்தவர்கள் தவறாக போதித்து வழி நடத்தியுள்ளார்கள்.

3 hours ago, ஏராளன் said:

உங்களது தந்தையின் சார்பில் 2002 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜரான நான், தமிழர் ஐக்கிய விடுதலைக்கூட்டணியின் தலைவராக அவர் பதவி வகிப்பதை வெற்றிகரமாக நியாயப்படுத்தி வென்றேன்.

காசுக்கு வழக்கு பேசுவதற்கும், மக்கள் மேல் தொடுக்கும் போருக்கும் என்ன சம்பந்தம்? இதுதான் உங்களது புரிதலும் குற்றம் சாட்டுதலும். நீங்கள் அவருக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கலாம் அதன் பின் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டாரா என்பதே கேள்வி.

3 hours ago, ஏராளன் said:

எனது வேண்டுகோளின்படி அவர் உங்களது தந்தைக்கு அரச பாதுகாப்பு வழங்கியதுடன், அது சுமார் இரு தசாப்தங்கள் வரை தொடர்ந்தது.

ஆமா, தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு சிங்களம் பாதுகாப்பு வழங்க கடமைப்பட்டிருக்கிறது. காரணம் அவர்கள் உங்கள் முகவர்களாகவே செயற்பட்டிருக்கிறார்கள். அதையே காலங்காலமாக செய்து வருகிறீர்கள், அதில் எந்த சந்தேகமுமில்லை எங்களுக்கு.

3 hours ago, ஏராளன் said:

புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில வெளிநாட்டுத்தரப்புக்களின் சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகள் உள்நாட்டு நிலைவரத்தை மேலும் மோசமாக்குகின்றன.

சட்டத்தை, அதிகாரத்தை எல்லோருக்கும் சமமாக பயன்படுத்தும் கனடாவில் பிரிவினைவாதம் தலைதூக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் அதை செய்யாமல் விட்டு, மற்றைய இனத்தின் சுதந்திரத்தை, வாழ்விடத்தை அபகரித்ததனாலேயே பிரச்சனை தோன்றியது. பிரச்சனையின் தோற்றுவாயே சிங்களம், பௌத்தம் என்கிற வெறியே. அதை ஏற்றுக்கொண்டு தீர்வுகாணாதவரை நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள்.

மற்றைய இனத்தின் பாரம்பரியம், உரிமையை ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அவர்களை சீண்டிக்கொண்டிருந்தால் சமாதானம் ஏற்படாது. உண்மை நீதி என்றால் என்னவென்று தெரியாமல் தவிக்கும் உங்களுக்கு நீதியமைச்சர் பதவி ஒரு கேடு.

3 hours ago, ஏராளன் said:

அதற்குக் காரணம் தமிழ் சமூகத்தின் மீதான அக்கறை அல்ல. மாறாக அரசியல் ரீதியான நோக்கங்களும், தேர்தல் அடைவுகளுமே அதற்குக் காரணமாகும்

சரியாக சொன்னீர்கள். நீங்கள் நாட்டில் வன்முறைகளை தூண்டுவதும், இனங்களை பிரித்தாழுவதும், இனமத முறுகலை ஏற்படுத்துவதும் நாட்டை அழிப்பதும் உங்கள் அரசியல் தேர்தல் ஆதாயங்களுக்காகவே! 

   

   

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அண்மையில் யூரியூப் வழங்கும் பரிந்துரை காணொளிகளில் கரி ஆனந்தசங்கரி பற்றிய ஒரு காணொளி காண்பித்தது.

குளோபல் மெயில் எனும் கனேடிய ஊடகம் கரி மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தும் செய்திகளை வெளிவிட்டு வருகின்றது.

கரி அவர்களின் தொலைபேசி இலக்கம் விடுதலை புலிகள் சம்மந்தப்பட்ட கனேடிய அமைப்பு ஒன்றின் ஆவணத்தில் உள்ளதாகவும், கரி அவர்கள் கனேடிய மக்கள் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு தகுதி அற்றவர் எனும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும், அழுத்தங்களையும் எதிர்கொண்டு கரி அவர்கள் எப்படி தனது அமைச்சர் பதவியை தொடர்ந்து தக்கவைப்பார் என்பது தெரியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.