Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிப்பதற்கான விதிகளில் மாற்றம் - ஐசிசி புதிய விதிகள் என்ன?

ஐசிசி விதிகளில் மாற்றம், இந்தியா, பிசிசிஐ, கேட்சி விதிகளில் மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 17 ஜூன் 2025, 03:51 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்

சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வப்போது புதிய விதிகளையும், ஏற்கெனவே இருக்கும் விதிகளையும் காலத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாற்றி, இன்னும் உயிர்ப்புடன் கிரிக்கெட்டை வைத்திருக்கிறது.

ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த வேண்டி விதிகளில் மாற்றம் செய்வது, புதிய விதிகளைப் புகுத்துவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரிக்கெட் விளையாட்டின் அம்சங்களை மறுஆய்வு செய்து, விமர்சனங்களுக்கு ஏற்ப விதிகளில் மாற்றத்தையும், புதிய விதிகளையும் ஐசிசி அவ்வப்போது அறிவிக்கும். இது உலகக் கோப்பைத் தொடக்கம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முக்கியத் தொடர்களுக்கு முன்பாக ஐசிசி அறிவிக்கும். அந்த வகையில், ஏற்கெனவே இருக்கும் இரு விதிகளில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்து ஒப்புதல் அளித்துள்ளது.

ஐசிசி அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஜூன் 17ம் தேதி (இன்று) நடைமுறைக்கு வருகிறது. ஒருநாள் போட்டிகளில் ஜூலை 2ம் தேதியும், டி20 போட்டிகளில் ஜூலை 10ம் தேதியும் சர்வதேச அளவில் நடைமுறைக்கு வருகிறது.

இந்த புதிய விதிகள் என்ன? அவை யாருக்கு சாதகமாக அமையும்?

ஐசிசி கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்ன?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியிலும், அனைத்து சர்வதேச போட்டிகளிலும் கன்கசனில் (தலையில் அடிபடும் வீரர்) வெளியேறும் வீரருக்குப் பதிலாக மாற்று வீரரைச் சேர்க்கும் விதியிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது.

ஐசிசி விதிகளில் மாற்றம், இந்தியா, பிசிசிஐ, கேட்சி விதிகளில் மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்துள்ளது.

ஒருநாள் போட்டியில் இரு பந்துகளை பயன்படுத்துவதில் மாற்றம்

தற்போது ஒருநாள் போட்டிகளில் பந்துவீசும் அணி 50 ஓவர்கள் வீசுவதற்கு இரு பந்துகளைப் பயன்படுத்துகிறது. ஒரு முனையிலிருந்து வீசுவதற்கு ஒரு புதிய பந்தும், மறுமுனையில் இருந்து வீசும்போது ஒரு புதிய பந்தும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, தலா 25 ஓவர்களுக்கு ஒரு புதிய பந்து, பந்துவீசும் அணியால் பயன்படுத்தப்படுகிறது.

இந்த விதியில் ஐசிசி மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி, இன்னிங்ஸ் தொடக்கம் முதல் 34 ஓவர்களுக்குள் இரு புதிய பந்துகளையும் பந்துவீசும் அணி பயன்படுத்த வேண்டும். அதாவது 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும், அடுத்த 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும் பயன்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட இரு பந்துகளில் இருந்து ஏதாவது ஒரு பந்தையே கடைசி 15 ஓவர்களுக்கு பயன்படுத்த வேண்டும். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சமநிலையைக் கொண்டுவரும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டால் என்னாகும்?

மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாகவோ அல்லது அதற்கும் குறைவாக குறைக்கப்பட்டால், பந்துவீசும் அணி ஒரு புதிய பந்து மட்டுமே பயன்படுத்தி பந்துவீச வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. வழக்கமாக 2 பந்துகள் பயன்படுத்தும் விதி இதற்குப் பொருந்தாது.

ஐசிசி கன்கசன் விதியில் கொண்டுவந்துள்ள மாற்றம் என்ன?

கன்கசன் (தலையில் அடிபடும் வீரர்) முறையில் ஒரு பேட்டர் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், அல்லது விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக எந்த மாற்று வீரரைக் கொண்டுவருவது குறித்து ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, போட்டி தொடங்கும் முன்பே இரு அணிகளும் கன்கசனுக்கான மாற்று வீரர் குறித்த பட்டியலை போட்டி நடுவரிடம் வழங்க வேண்டும். அந்த 5 வீரர்களில் ஒரு விக்கெட் கீப்பர், ஒரு பேட்டர், ஒரு வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர், ஒரு ஆல்ரவுண்டர் இருக்குமாறு வீரர்கள் பெயரை வழங்க வேண்டும்.

கன்கசனில் எந்த மாதிரியான வீரர் வெளியேறுகிறாரோ, அதற்கு ஏற்றபடியே மாற்று வீரரை களமிறக்க வேண்டும். ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கு தலையில் அடிபட்டு கன்கசனில் வெளியேறும் நிலையில், அவருக்குப் பதிலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர்தான் வர வேண்டும். ஒரு பேட்டர் தலையில் அடிபட்டு கன்கசனில் சென்றால் அவருக்குப் பதிலாக பேட்டர்தான் வர வேண்டும் என்று ஐசிசி கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஐசிசி விதிகளில் மாற்றம், இந்தியா, பிசிசிஐ, கேட்சி விதிகளில் மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது

கன்கசன் விதியில் திருத்தம் செய்ய என்ன காரணம்?

கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி செய்த செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுதான் காரணம். கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தனர்.

அவரும் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார். கன்கசன் மாற்று வீரருக்கு பேட்டிங் ஆல்ரவுண்டருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சேர்க்க போட்டி நடுவர் ஒப்புதல் அளித்தது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து, கன்கசனில் மாற்று வீரராகக் களமிறங்குவோருக்கு குறிப்பிட்ட ரோலில் களமிறங்க வேண்டும் என்ற விதியை ஐசிசி கொண்டுவர திட்டமிட்டது.

அதாவது, பந்துவீச்சாளர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம், விக்கெட் கீப்பர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக மாற்றுவீரராக விக்கெட் கீப்பரை விளையாட அனுமதிக்கலாம் என்று விதிகளைக் கொண்டுவந்துள்ளது.

பவுண்டரி எல்லையில் கேட்ச் விதிகளில் மாற்றம் என்ன?

ஐசிசி விதிகளில் மாற்றம், இந்தியா, பிசிசிஐ, கேட்சி விதிகளில் மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்கும் "பன்னி ஹாப்" (bunny hop) முறைக்கு, அதாவது பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்தால் அதை வானில் தூக்கிப் போட்டோ அல்லது தட்டிவிட்டோ பீல்டர் பவுண்டரி எல்லைக்குள் வந்து கேட்ச் பிடிக்கும் முறைக்கு எம்சிசி (மெர்ல்போர்ன் கிரிக்கெட் கிளப்) தடை விதித்துள்ளது.

ஆட்டத்தில் முக்கியத் திருப்புமுனையாக சில கேட்சுகள் அமையக்கூடும். அதில் பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்து அல்லது கேட்ச் பிடிக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து ஒரு பீல்டர் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும்போது பந்தை வானில் தூக்கி வீசியோ அல்லது மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசியோ கேட்ச் பிடிக்கிறார்கள். இந்த கேட்சில் பல்வேறு சந்தேகங்களும், பீல்டிங்கில் இருக்கும் நேர்மைத் தன்மையும் கேள்விக்குள்ளாகிறது. இதையடுத்து, முற்றிலுமாக பன்னிஹாப் கேட்சுக்கு எம்சிசி தடை விதித்துள்ளது.

இதன்படி, ஒரு பீல்டர் பவுண்டரிக்கு வெளியே செல்லும் பந்தை கேட்ச் பிடிக்க பந்தை ஒருமுறை மட்டுமே தட்டி பிடிக்க வேண்டும், பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும் பந்தை பிடிக்க முற்பட்டு, வானில் பலமுறை தட்டிவிட்டு மீண்டும் பவுண்டரி எல்லைக்குள் பீல்டர் வந்து பிடிக்கும் முறை இனி செல்லாது. அவ்வாறு 2வது முறையாக பந்தை கையால் தட்டிவிட்டு பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது.

பந்தை தட்டிவிட்டு கேட்ச் பிடிக்கும் முன்பாக, பீல்டர் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும், பந்தை பிடித்த பின்பும் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். பந்தை தொட்ட பின் பீல்டர் பவுண்டரி எல்லைக்கு அப்பால் சென்றாலோ அல்லது பவுண்டரி எல்லையைக் கடந்து பந்தை பலமுறை அந்தரத்தில் தட்டிவிட்டு பவுண்டரி எல்லைக்குள் வந்தபின் பீல்டர் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது. அது சிக்ஸராக அல்லது பவுண்டரியாக கருதப்படும்.

ஐசிசி விதிகளில் மாற்றம், இந்தியா, பிசிசிஐ, கேட்சி விதிகளில் மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐபிஎல் ஆட்டம் ஒன்றில் சிஎஸ்கே வீரர் பிரேவிஸ் அபாரமாக கேட்ச் பிடித்த காட்சி

மாற்றம் கொண்டுவர என்ன காரணம்?

ஆஸ்திரேலியாவில் 2023 சீசன் பிக்பாஷ் லீக் டி20 போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்ஸர் இடையிலான போட்டியில் பிடிக்கப்பட்ட கேட்ச்-தான் விதியில் திருத்தம் செய்ய காரணமாக அமைந்தது. சிட்னி சிக்ஸர் அணி வீரர் ஜோர்டான் சில்க் லாங் ஆன்திசையில் அடித்த ஷாட்டை பிரிஸ்பேன் வீரர் நீசர் கேட்ச் பிடித்தார்.

நீசர் கேட்ச் பிடித்தபோது, பவுண்டரி எல்லைக்கு வெளியே அந்தரத்தில் பறந்துகேட்ச் பிடித்தார், கேட்ச் பிடித்த அடுத்த நொடியே பந்தை வானில் தூக்கி வீசி பவுண்டரி எல்லைக்குள் நீசர் வந்து, மீண்டும் அந்தரத்தில் குதித்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார். நீசர் கேட்ச் பிடித்தபோது அவரின் இரு கால்களும் பவுண்டரிக்கு வெளியே அந்தரத்தில் இருந்ததே தவிர தரையில் படவில்லை, கேட்ச் பிடித்த பிறகு அவர் தனது காலை பவுண்டரி எல்லைக்குள் வைத்தார் என்பதால் இது கேட்சாக அறிவிக்கப்பட்டது. இந்த முறையில் நீசர் கேட்ச் பிடித்தது பெரிய சர்ச்சையானது, பன்னி ஹாப் முறையில் பிடிக்கும் கேட்சுக்கு தடை விதிக்க கோரிக்கை எழுந்த நிலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

ரிலே கேட்சில் வந்துள்ள மாற்றம் என்ன?

பழைய விதியின்படி, ஒரு பீல்டர் கேட்ச் பிடித்த தருணத்தில் அவர் பந்துடன் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்ல முயலும்போது, பந்தை மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசும்போது அந்த பீல்டரும் பவுண்டரி எல்லைக்குள் இருந்தவாறே அந்த பந்தை பிடித்தால் அது கேட்சாக கருதப்படும்

ஆனால், புதிய விதியின்படி முதல் பீல்டர் அல்லது பந்தை இரண்டாவதாக பிடிக்கும் சகவீரர் பந்தை கேட்ச் பிடித்து முடிக்கும்போது கண்டிப்பாக பீல்டிங் எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். ஒருவேளை பந்தை கேட்ச் பிடிப்பதற்கு முன்பே, கேட்ச் பிடிக்கும் வீரர் பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று கேட்ச் பிடித்து, அதை தூக்கி வீசி மற்றொரு வீரருக்கு வீசி எறிந்து அவரும் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது, அது பவுண்டரி அல்லது சிக்ஸராகவே கருதப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c20rlz01j8ko

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2025 at 12:00, ஏராளன் said:

இந்த விதியில் ஐசிசி மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி, இன்னிங்ஸ் தொடக்கம் முதல் 34 ஓவர்களுக்குள் இரு புதிய பந்துகளையும் பந்துவீசும் அணி பயன்படுத்த வேண்டும். அதாவது 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும், அடுத்த 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும் பயன்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட இரு பந்துகளில் இருந்து ஏதாவது ஒரு பந்தையே கடைசி 15 ஓவர்களுக்கு பயன்படுத்த வேண்டும். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சமநிலையைக் கொண்டுவரும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது

மோசமான விதி மாற்றம். ஏற்கனவே அடிவாங்கி நொந்து நூடில்ஸ்சாகி இருக்கும் பந்து வீச்சாளரின் கையை இது மேலும் கட்டுகிறது.

On 17/6/2025 at 12:00, ஏராளன் said:

அந்த 5 வீரர்களில் ஒரு விக்கெட் கீப்பர், ஒரு பேட்டர், ஒரு வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர், ஒரு ஆல்ரவுண்டர் இருக்குமாறு வீரர்கள் பெயரை வழங்க வேண்டும்.

இதென்ன மொக்குத்தனமாக இருக்கிறது ?

ஒரு touring squad இல் 4 வேகபந்து வீச்சாளர், ஒரு சுழல் பந்து வீச்சாளர் மட்டுமே இருந்து, அவர்கள் அனைவரும் விளையாடும் XI இல் இருந்தால் யாரை இந்த மீதி 5 க்கு நியமிப்பது?

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2025 at 12:00, ஏராளன் said:

கன்கசனில் எந்த மாதிரியான வீரர் வெளியேறுகிறாரோ, அதற்கு ஏற்றபடியே மாற்று வீரரை களமிறக்க வேண்டும். ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கு தலையில் அடிபட்டு கன்கசனில் வெளியேறும் நிலையில், அவருக்குப் பதிலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர்தான் வர வேண்டும். ஒரு பேட்டர் தலையில் அடிபட்டு கன்கசனில் சென்றால் அவருக்குப் பதிலாக பேட்டர்தான் வர வேண்டும் என்று ஐசிசி கட்டுப்பாடு விதித்துள்ளது.

🤣 இதில் ஒருவர் பேட்டரா அல்லது ஆரவுண்டரா என தீர்மானிப்பது எப்படி?

சச்சின் கூட முக்கிய போட்டிகளில் விக்கெட் எடுத்துள்ளார். கங்குலி வெளியேறினால் சச்சினை போடலாம். டிராவிட் வெளியேறினால்?

இதை விட உள்ளே எவரும் வரலாம் ஆனால் வருபவர் 7வதாகத்தான் களம் இறங்க வேண்டும், வெளியேறியவர் போட்ட வகை பந்து வீச்சையே செய்யவேண்டும் என கொண்டு வந்திருக்கலாம்.

உதாரணமாக மொயின் அலிக்கு பதில் ஸ்டோக்ஸ் இறங்கினால். ஸ்டோக்ஸ் 7 டவுண் பேட்டிங், ஓவ் ஸ்பின் மட்டுமே செய்ய முடியும்.

On 17/6/2025 at 12:00, ஏராளன் said:

பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்கும் "பன்னி ஹாப்" (bunny hop) முறைக்கு, அதாவது பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்தால் அதை வானில் தூக்கிப் போட்டோ அல்லது தட்டிவிட்டோ பீல்டர் பவுண்டரி எல்லைக்குள் வந்து கேட்ச் பிடிக்கும் முறைக்கு எம்சிசி (மெர்ல்போர்ன் கிரிக்கெட் கிளப்) தடை விதித்துள்ளது.

மிக அற்புதமான கேட்சுகள் இப்படி எடுக்கப்பட்டுள்ளது.

இதுவும் தேவையில்லாத ஆணி, பேட்ஸ்மேனுக்கு சாதகமானது.

On 17/6/2025 at 12:00, ஏராளன் said:

ஆனால், புதிய விதியின்படி முதல் பீல்டர் அல்லது பந்தை இரண்டாவதாக பிடிக்கும் சகவீரர் பந்தை கேட்ச் பிடித்து முடிக்கும்போது கண்டிப்பாக பீல்டிங் எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். ஒருவேளை பந்தை கேட்ச் பிடிப்பதற்கு முன்பே, கேட்ச் பிடிக்கும் வீரர் பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று கேட்ச் பிடித்து, அதை தூக்கி வீசி மற்றொரு வீரருக்கு வீசி எறிந்து அவரும் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது, அது பவுண்டரி அல்லது சிக்ஸராகவே கருதப்படும்.

இதுவும் அதுவே.

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்போல் வீரர்கள் போடும் கிளவுஸ் போல கிரிக்கட் வீரர்களுக்கும் போட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

பேஸ்போல் வீரர்கள் போடும் கிளவுஸ் போல கிரிக்கட் வீரர்களுக்கும் போட வேண்டும்.

பேஸ்போலுக்கான வேகத்துடன் கிறிக்கட் பந்தின் வேகம் குறைவு என்பது எனது ஊகம். அதனால் பேஸ்போலில் கையுறை பாவிக்கப்படுகிறது. இருந்தும் கிறிக்கட்டுக்கான மரப்பந்து நோகாமல் இருக்கும் என சொல்வதற்கில்லை. யாராவது பாரதூரமாக காயப்பட்டால் கிறிக்கட்டில் கையுறை பாவிக்க வேண்டி வரலாம்.

பாதுகாப்பு என வரும் போது முற்பாதுகாப்பு முக்கியம் என்பதை நான் மறுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

அனேகமான வீரர்களின் கைகள் சேதமடைகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

அனேகமான வீரர்களின் கைகள் சேதமடைகின்றன.

நிச்சயமாக அண்ணா. நான் பார்த்திருக்கிறேன்.

பொப் வில்லிசின் பந்துக்கு தலைக்கவசம் இல்லாமல் ஆடும் விவியனையும் பார்த்திருக்கிறேன். வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மேற்படி கிறிக்கட் சம்மேளம் கடந்த போட்டியில் நடந்தவைகளுக்கு தீர்வை காண முயல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2025 at 19:05, goshan_che said:

மோசமான விதி மாற்றம். ஏற்கனவே அடிவாங்கி நொந்து நூடில்ஸ்சாகி இருக்கும் பந்து வீச்சாளரின் கையை இது மேலும் கட்டுகிறது.

இதென்ன மொக்குத்தனமாக இருக்கிறது ?

ஒரு touring squad இல் 4 வேகபந்து வீச்சாளர், ஒரு சுழல் பந்து வீச்சாளர் மட்டுமே இருந்து, அவர்கள் அனைவரும் விளையாடும் XI இல் இருந்தால் யாரை இந்த மீதி 5 க்கு நியமிப்பது?

இந்த‌ விதிமுறைய‌ போன‌ வ‌ருட‌ம் அமுல் ப‌டுத்தி இருந்தா

இந்தியா பின‌லில் தோத்து இருக்கும்

மில்ல‌ர் அடிச்ச‌ ப‌ந்து சூரிய‌குமார் ஜ‌டாவ் எப்ப‌டி பிடித்த‌வ‌ர் என்று நீங்க‌ளும் பார்த்து இருப்பிங்க‌ள்

உண்மை தான் இது ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு பெரிய‌ தொல்லையா அமையும்...................ம‌ட்டை வீர‌ர்க‌ளுக்கு இது சாத‌க‌மாய் அமையும்............................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2025 at 01:13, nunavilan said:

பேஸ்போலுக்கான வேகத்துடன் கிறிக்கட் பந்தின் வேகம் குறைவு என்பது எனது ஊகம். அதனால் பேஸ்போலில் கையுறை பாவிக்கப்படுகிறது. இருந்தும் கிறிக்கட்டுக்கான மரப்பந்து நோகாமல் இருக்கும் என சொல்வதற்கில்லை. யாராவது பாரதூரமாக காயப்பட்டால் கிறிக்கட்டில் கையுறை பாவிக்க வேண்டி வரலாம்.

பாதுகாப்பு என வரும் போது முற்பாதுகாப்பு முக்கியம் என்பதை நான் மறுக்கவில்லை.

பேஸ்போலின் ப‌ந்து சின்ன‌ன் அண்ணா

நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி என‌ ப‌டுது , பேஸ்போலின் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் வேக‌மாக‌ எறிவின‌ம்.................பேஸ்பேல் ப‌ந்தை எப்ப‌டியும் பிடிக்க‌லாம்

அத‌ற்க்கு விதிமுறைக‌ள் ஒன்றும் இல்லை , ம‌க்க‌ள் பார்வையிடும் இட‌த்தில் கூட‌ பாய்ந்து பிடிப்பின‌ம்

உல‌க‌ அள‌வில் பேஸ்போலுக்கு பெரிய‌ வ‌ர‌வேற்ப்பு இல்லை , ஆனால் அமெரிக்காவில் இந்த‌ விளையாட்டை பெரிய‌ தொட‌ரா ந‌ட‌த்துவின‌ம் , இப்ப‌ கூட‌ ந‌ட‌ந்து கொண்டு தான் இருக்கு விளையாட்டு👍.....................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

5_-_Baseball_vs_Cricket-100.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vaasi said:

5_-_Baseball_vs_Cricket-100.jpg

அவ‌ங்க‌ள் ப‌ந்தை கையில் வைத்து இருக்கும் போது பார்க்க‌ சின்ன‌தாக‌ தெரிந்த‌து........................என‌க்கு பேஸ்போல் விளையாட்டில் பெரிய‌ ஆர்வ‌ம் இல்லை

அமெரிக்காவில் அதிக‌ ம‌க்க‌ள் இந்த‌ விளையாட்டை அதிக‌ம் விரும்பி பார்க்கின‌ம்

அமெரிக்கா விளையாட்டில் 140 போட்டிக்கு மேல் விளையாடும் விளையாட்டு என்றால் அது இந்த‌ பேஸ்போல் தான்....................

ம‌ற்ற‌ விளையாட்டுக்க‌ள் 82 த‌ர‌ம் விளையாட‌னும் NBA , NHL , இப்ப‌டியான‌ விளையாட்டுக்க‌ள்................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.