Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மேயர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்க பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்

Published By: DIGITAL DESK 3

18 JUN, 2025 | 02:30 PM

image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் வடக்கிற்கான வியத்தை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாரம் யாழில் தங்கியிருக்கும் பிரித்தானியத் தூதுவர் அன்றூ பற்றிக், புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள யாழ். மாநகர சபை மேயர், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், தொழில் முனைவோர், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்புகளின் போது நல்லிணக்கம், கல்வி, மேம்பாடு மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/217825

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விகாரை விவகாரம்,  செம்மணி புதைகுழி, காணி விடுவிப்பு குறித்து வடக்கு ஆளுநரிடம் கேட்டறிந்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்  

Published By: DIGITAL DESK 3

18 JUN, 2025 | 02:43 PM

image

யாழ்ப்பாணத்தின் வலி. வடக்கு பிரதேசத்தில் எதிர்காலத்திலும் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்கிற்கு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (18) வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக பிரிட்டன் தூதுவர் இந்தச் சந்திப்பின்போது ஆளுநரிடம் குறிப்பிட்டதுடன், முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் வினவினார்.

வடக்கில் அமையப்பெறவுள்ள மூன்று முதலீட்டு வலயங்களினதும் உட்கட்டுமான அபிவிருத்திற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஆளுநர் தெரிவித்தார். வேலை வாய்ப்புக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அவை அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் இங்கு அதிகளவில் வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

இளையோரிடத்தில் புலம்பெயர்வுக்கான சிந்தனை மேலோங்கியிருக்கின்றது என்பதையும் ஏற்றுக்கொண்ட ஆளுநர், அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் இங்கே உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே முதலீட்டு வலயங்களை அமைக்கும் நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பிலும், விமான சேவை மற்றும் கப்பல் சேவைகள் தொடர்பாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்துகொண்டார்.

81e8cab9-75eb-4682-984a-2abc09806712.jpg

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கட்டுநாயக்காவுக்கும் பலாலிக்கும் இடையிலான விமானசேவை ஆரம்பிப்பது பெருமளவு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவக்கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட ஆளுநர் இதற்குரிய கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி, தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் மற்றும் செம்மணி புதைகுழி அகழ்வு என்பன தொடர்பாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் களநிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

கடந்த காலங்களில் பிரிட்டன் அரசாங்கம் ஐ.நா.வின் முகவர் அமைப்புக்கள் ஊடாக பல்வேறு நிதி உதவிகளை வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், தற்போதும் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள அகதிகளுக்கான வாழ்வாதாரத்துக்கு உதவிகள் தேவை என்ற கோரிக்கையையும் ஆளுநர் முன்வைத்தார்.

மேலும், பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டிருந்தாலும் கிராமிய வீதிகள், கிராமிய உட்கட்டுமானங்களுக்கான தேவைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான தேவைப்பாடுகள் இன்னமும் உள்ளன எனவும் ஆளுநர் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தினார்.

இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

be546f39-0bfa-4af7-8121-b55081cf9a29.jpg

https://www.virakesari.lk/article/217828

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

தையிட்டி விகாரை விவகாரம்,  செம்மணி புதைகுழி, காணி விடுவிப்பு குறித்து வடக்கு ஆளுநரிடம் கேட்டறிந்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்  

ஆளுனர் அரசின் சேவகன்.

அவரிடம் கேட்டால் அரசுக்கு சார்பாகத் தானே இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பனை சார்ந்த உற்பத்திகள் தொடர்பில் அறிந்து கொண்டார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் 

Published By: DIGITAL DESK 3

19 JUN, 2025 | 11:17 AM

image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 

இந்த விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள பனை சார்ந்த உற்பத்திகள் தொடர்பில் அறிந்து கொள்ள விநியோகஸ்தர்களை நேரில் சென்று பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் பார்வையிட்டுள்ளார்.

அங்கு பாரம்பரிய வளங்கள், தொழில் முயற்சியாண்மை மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகளுடன் நிலைபேண்தகு வாழ்வாதாரத்தை  கொண்டு செல்ல எவ்வாறு உள்ளூர் உற்பத்திகளை பாதுகாக்கவும் முடியும் என்பதை இந்த விஜயத்தின் போது அறிந்து கொண்டார்.

https://www.virakesari.lk/article/217876

Edited by ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

image

கள்ளு குடிக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்.

நான்... யாழ்ப்பாணத்தில் நின்ற போது, அந்த மண்ணில் பிறந்த எனக்கே...

கள்ளுக் குடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

வெள்ளைக்காரன் போய்... கள்ளு அடிப்பதை பார்க்க, பயங்கர எரிச்சலாக இருக்கிறது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

509426643_1132814612215245_5968557637128

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவரை யாழ்ப்பாணத்தில், "ஜெற் விங்" இல் சந்தித்து... பிரதானமாக எதிர்வரும் மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் சம்பந்தமாக நீண்ட உரையாடலில் ஈடுபட்ட சுமந்திரன், இலங்கை அரசு செய்த கொலைகளை தண்டிக்காமல் விடுமாறு கேட்டார். 😂 🤣

யாழ்ப்பாணம்.com

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை அரசு செய்த கொலைகளை தண்டிக்காமல் விடுமாறு கேட்டார். 😂 🤣

உண்மையாவா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

உண்மையாவா?

சிரித்துக் கொண்டு சொல்லும் பதிவுகளை... கேள்விக்கு உட்படுத்தக் கூடாது சார். 😂

அதை நம்பிக் கொண்டு போகின்றவர்கள், போகட்டும் என்று விடுங்க.

இருந்தாலும்.... இந்த "ஊத்தை, கழிசடை வேலைகளை" சுமந்திரன் செய்யக் கூடிய ஆள் தான். 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

image

கள்ளு குடிக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்.

உந்த வெள்ளைக்காரர் கள்ளடித்து கள்ளுக்கு விளம்பரம் செய்யிறார்.வன்மையாக கண்டிக்க வேண்டும். கள் என்பது மது.மது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். கெட்ட கெட்ட வருத்தங்கள் எல்லாம் வரும்.இதை சமூக சீர்கேடாக நான் பார்க்கின்றேன்.😂

வன்மையான கண்டனங்கள்.😎

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

உந்த வெள்ளைக்காரர் கள்ளடித்து கள்ளுக்கு விளம்பரம் செய்யிறார்.வன்மையாக கண்டிக்க வேண்டும். கள் என்பது மது.மது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். கெட்ட கெட்ட வருத்தங்கள் எல்லாம் வரும்.இதை சமூக சீர்கேடாக நான் பார்க்கின்றேன்.😂

வன்மையான கண்டனங்கள்.😎

அப்ப.... சாராயம், கசிப்பு, கஞ்சா எல்லாம்... விட்டமின் சேர்ந்த பானங்களா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, திருவள்ளுவரே கள்ளு குடிக்கச் சொல்லி இருக்கின்றார்.

நீங்கள்.. வந்தேறி தெலுங்கர்களின் கதையை கேட்டு, கெட்டுப் போகாதீங்க. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கள்ளு குடிக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்.

நான்... யாழ்ப்பாணத்தில் நின்ற போது, அந்த மண்ணில் பிறந்த எனக்கே...

கள்ளுக் குடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

வெள்ளைக்காரன் போய்... கள்ளு அடிப்பதை பார்க்க, பயங்கர எரிச்சலாக இருக்கிறது. 😂

15 minutes ago, குமாரசாமி said:

உந்த வெள்ளைக்காரர் கள்ளடித்து கள்ளுக்கு விளம்பரம் செய்யிறார்.வன்மையாக கண்டிக்க வேண்டும். கள் என்பது மது.மது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். கெட்ட கெட்ட வருத்தங்கள் எல்லாம் வரும்.இதை சமூக சீர்கேடாக நான் பார்க்கின்றேன்.😂

வன்மையான கண்டனங்கள்.😎

அது கள்ளு இல்லை அண்ணைமார் பதநீர்!

நேற்று தம்பியும் நானும் போயிருந்தோம்!!

18-06.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

அது கள்ளு இல்லை அண்ணைமார் பதநீர்!

நேற்று தம்பியும் நானும் போயிருந்தோம்!!

18-06.jpg

படத்தில்... சிவப்பு வாகனத்தில் இருப்பது நீங்களா ஏராளன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

படத்தில்... சிவப்பு வாகனத்தில் இருப்பது நீங்களா ஏராளன்.

ஓம் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஏராளன் said:

ஓம் அண்ணை.

மகிழ்ச்சி ஏராளன். 👍

உங்களது முகம் எனது மனதில் முன்பே பதிந்துள்ளதால் டக்கென்று கண்டு பிடிக்கக் கூடியதாக இருந்தது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அது கள்ளு இல்லை அண்ணைமார் பதநீர்!

நேற்று தம்பியும் நானும் போயிருந்தோம்!!

18-06.jpg

கள்ளுக் கொட்டிலில் ஏராளனுக்கு என்ன வேலை😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

கள்ளுக் கொட்டிலில் ஏராளனுக்கு என்ன வேலை😁

அது வந்து... இப்ப நான் என்ன சொல்றது?!

திரு சுகந்தன் அவர்கள், இந்தப் பகுதியை சுற்றுலா தலமாக்க முயற்சிக்கிறார். அத்தோடு கள்ளை போத்தலில் அடைத்து ஏற்றுமதி செய்கிறார். பனை மூலப்பொருட்களை வைத்து நிறைய உள்ளூர் உற்பத்திகள் விற்பனை, ஏற்றுமதி செய்கிறார்.

பாதுகாப்பான படகுச்சவாரி போன்றன பயிற்றப்பட்ட ஊழியர்களை வைத்து மேற்கொள்கிறார்.

8 hours ago, தமிழ் சிறி said:

கள்ளு குடிக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்.

நான்... யாழ்ப்பாணத்தில் நின்ற போது, அந்த மண்ணில் பிறந்த எனக்கே...

கள்ளுக் குடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

ஆசையாக இருந்தால் ஒரு செய்தி அனுப்பி இருக்கலாமே அண்ணை? ஊருக்கு வந்தால் ஒரு பனைக் கள்ளு(வெறிக்காது) வாங்கித்தந்திருப்பேனே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

ஆசையாக இருந்தால் ஒரு செய்தி அனுப்பி இருக்கலாமே அண்ணை? ஊருக்கு வந்தால் ஒரு பனைக் கள்ளு(வெறிக்காது) வாங்கித்தந்திருப்பேனே!

இரண்டு கிழமை இலங்கை பிரயாணத்தில்...

நான்கு நாட்கள் கொழும்பு, பத்து நாட்கள் யாழ்ப்பாணம் என்று திட்டமிட்டிருந்தோம்.

யாழ்ப்பாணத்தில் நின்ற 10 நாட்களும் பெரும்பாலானவை கோவிலுக்கு சென்றதில் கழிந்தது. மனைவி ஏற்கனவே எல்லாக் கோவில்களுக்கும் வருவதாக நேர்த்தி வைத்திருந்ததால் அதனை, தட்டிக் கழிக்க முடியாமல் இருந்தது.

மானிப்பாய் மருதடி விநாயகர், சண்டிலிப்பாய் சீரணி அம்மன் கோவில், அராலி அம்மன் கோவிலுக்கு செல்லும் போது உங்களை நினைத்தேன்.

@ஈழப்பிரியன் னும் அந்த நேரம் ஊரில் நின்றதாக அறிகின்றேன். ஆனாலும் நேரப் பற்றாக்குறை பல அலுவல்களை நிறைவேற்ற முடியாமல் செய்தமை கவலையான விடயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

@ஈழப்பிரியன் னும் அந்த நேரம் ஊரில் நின்றதாக அறிகின்றேன். ஆனாலும் நேரப் பற்றாக்குறை பல அலுவல்களை நிறைவேற்ற முடியாமல் செய்தமை கவலையான விடயம்.

ஈழப்பிரியன் அண்ணாவுக்கு சந்திக்க நேரமில்லை போல, அடுத்தமுறை சந்திப்போம் என செய்தி அனுப்பி உள்ளார்.

சிறி அண்ணை இன்னொரு முறை வருகையில் சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

ஈழப்பிரியன் அண்ணாவுக்கு சந்திக்க நேரமில்லை போல, அடுத்தமுறை சந்திப்போம் என செய்தி அனுப்பி உள்ளார்.

சிறி அண்ணை இன்னொரு முறை வருகையில் சந்திப்போம்.

நிச்சயமாக... அடுத்த முறை சந்திப்போம் ஏராளன். ❤️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, தமிழ் சிறி said:

509426643_1132814612215245_5968557637128

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவரை யாழ்ப்பாணத்தில், "ஜெற் விங்" இல் சந்தித்து... பிரதானமாக எதிர்வரும் மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் சம்பந்தமாக நீண்ட உரையாடலில் ஈடுபட்ட சுமந்திரன், இலங்கை அரசு செய்த கொலைகளை தண்டிக்காமல் விடுமாறு கேட்டார். 😂 🤣

யாழ்ப்பாணம்.com

மக்களால் ஒட்டு மொத்தமாக நிகாரிக்கப்பட்ட நபரான சுமந்திரன் அவர்கள் எந்த உரிமையில் பிரித்தானிய தூதுவரை சந்தித்தார்? அதிலும் சுமந்திரன் ஒரு பொய்யன். தமிழர்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுபவர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

மக்களால் ஒட்டு மொத்தமாக நிகாரிக்கப்பட்ட நபரான சுமந்திரன் அவர்கள் எந்த உரிமையில் பிரித்தானிய தூதுவரை சந்தித்தார்? அதிலும் சுமந்திரன் ஒரு பொய்யன். தமிழர்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுபவர்.

அது பிரிட்டிஸ்தூதுவருக்கே தெரியும் ...ஓசிச் சாப்பாடு என்றால் ஆர்தான் விடுவினம்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்கின் யாழ் விஜயமும் முக்கிய சந்திப்புக்களும்!

Published By: PRIYATHARSHAN

20 JUN, 2025 | 12:01 PM

image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் அங்கு பல்வேறு தரப்பினர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார்.

கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன், வடமாகாண ஆளுநர், சுயதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

508999017_1136703385161475_7662741706546

யாழுக்கான விஜயத்தின் முதல் நாளில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், யாழ். கோட்டையை பார்வையிட்டார்.

509313206_1136879355143878_3699331339966

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரை சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரின்போது இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானம் கொண்டுவரப்படவிருப்பதாகவும் அப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஆதரவு கோரி ஏனைய உறுப்பு நாடுகளுடன் இப்போதிருந்தே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

509001205_1137323588432788_1555337492335

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்,தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம், செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு, முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள், கட்டுமான அபிவிருத்திகள், சுற்றுலாப் பயணிகளின் வருகை , விமான சேவை, கப்பல் சேவை, காணி உரித்து நிர்ணயத்திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளார்.

506057075_1136902041808276_1126064527540

இதேவேளை, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அவர்களின் வேதனைகளையும் துயரங்களையும் கேட்டறிந்தார்.

502896620_1137373065094507_6159816673069

494351337_1137373021761178_8496344387502

யாழ்ப்பாணத்திலுள்ள VVS விநியோகஸ்தார்களை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அவர்களின் பனை உற்பத்திப் பொருட்களின் பல்வகைப்பட்ட தயாரிப்புக்களை பார்வையிட்டதுடன், அங்கு தயாரிக்கப்படும் பாரிம்பரிய உள்ளூர் கூழை சுவைத்து மகிழ்ந்தார். இந்த சந்திப்பு நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்குவதற்கும் உள்ளுர் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் உள்ள ஆற்றலை எடுத்துக்காட்டுகின்றது.

508231346_1136930455138768_2836933958122

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராசாவை சந்தித்து கலந்துரையாடிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், உயர்கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களின் அபிலாஷைகள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் இந்த சந்திப்பு, கல்வியை ஆதரிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளது.

509425957_1137323598432787_4153685480125

யாழ். மாநகர மேயர் விவேகானந்தராஜா மதிவதானியை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், பிராந்திய மேம்பாடு, சேவை வழங்கல் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்துள்ளார், இந்த ஆக்கபூர்வமான ஈடுபாடுகள், மாகாண மற்றும் நகராட்சி மட்டங்களில் உள்ளடக்கிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான உள்ளூர் முன்னுரிமைகள் மற்றும் முயற்சிகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கயுள்ளது.

502686318_1137415425090271_7126259702017

498204387_1137415428423604_5061498089511

யாழில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு சென்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகர், அங்குள்ள ஊழியர்களை சந்தித்து ஆங்கில மொழி கற்றல் மற்றும் டிஜிட்டல் கல்வியை ஆதரிப்பதில் அவர்களின் பணிகளை அறிந்துகொண்டார். உலகளாவிய சூழலில் செழித்து வளர இளைஞர்களுக்கு திறன்கள் மற்றும் நம்பிக்கையை வழங்குவதில் பிரிட்டிஷ் கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கிறது.

509280895_1137443891754091_2352467013550

509423506_1137443881754092_7049119522124

வட இலங்கையில் புதுமைகளை முன்னெடுத்துச் செல்லும் இளம் தொழில்நுட்ப தொழில்முனைவோரை Yarl IT Hub -இல் சந்தித்தார் பிரித்தாகிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்,  

இந்த மையம் ஒரு செழிப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும், உள்ளூர் திறமைகளை உலகளாவிய வாய்ப்புகளுடன் இணைக்கவும் உதவுகிறது. வளர்ச்சி, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்களை ஆதரிக்கிறது. தொழில்நுட்பம், தொழில்முனைவோரை உள்ளிடக்கிய வளர்ச்சியில் இளைஞர்களை வழிநடத்தும் முயற்சிகளை பிரித்தானிய மதிக்கிறதாக குறிப்பிட்டார்.

504005425_1137473878417759_7272183984308

நாகதீப விகாரை மற்றும் நாகபூஷணி அம்மன் கோவில் ஆகியவற்றைப் பார்வையிட உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் நைனாதீவுக்குச் சென்றிருந்தார். 

493143377_1137599555071858_2010376190296

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகார் அன்று பற்றிக், உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். இந்தக் கலந்துரையாடல் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் சமூக முன்னுரிமைகள் குறித்த மதிப்புமிக்க முன்னோக்குகளை வழங்கியது. பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் சிவில் சமூகம் வகிக்கும் முக்கிய பங்கை பிரித்தானியா அங்கீகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

506479713_1137662551732225_9136691640523

பொருளாதாரத்தில் மீனவர்களின் பங்கு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மீனவர் அமைப்புகளிடமிருந்து பல தகவல்களை கேட்டறிந்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்று பற்றிக், நிலையான கொள்கைகளை வடிவமைப்பதில் அவர்களின் நுண்ணறிவு முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

509419700_1137708151727665_5163022809604

510008201_1137708155060998_7638840013217

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஆர். சுரேந்திரகுமாரன் மற்றும் ஆராய்ச்சியாளர்களை சந்தித்த, உயர் ஸ்தானிகர் அன்று பற்றிக், இலங்கையில் முதன்மை மருத்துவத்தில் நீண்டகால நிலைமைகள் மேலாண்மைக்கான ஆதரவு குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார்.

509365304_1137752208389926_3398838235312

இந்திய துணைத்தூதுவர் சாய் முரளியை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்று பற்றிக்.

509360812_1137795791718901_8861391502851

யாழ்ப்பாணத்திலுள்ள பழைமை வாய்ந்த உணவகமான மலாயன் கபேக்கு சென்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அங்கு உள்ளூர் செய்திகளை அறியும் முகமாக 94 வருட கால பழைமை வாய்ந்த வீரகேசரி பத்திரிகையில் செய்திகளை ஆராய்ந்தார்.

495178716_1138138111684669_2989947646207

498156472_1138138048351342_1463723906443

யாழ். தீபகற்பத்தில் சர்வதேச நீர் மேலாண்மை நிறுவன திட்டத்தின் முதலாம் கட்ட நிறைவுப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டார். நீர் மேலாண்மை, உணவுப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நிலையான வளர்ச்சியை வலுப்படுத்தும், சமூகங்களை ஆதரிக்கும் மற்றும் இலங்கையில் நீண்டகால மீள்தன்மையை உருவாக்கும் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளுக்கு நிதியளிப்பதில் பிரித்தானிய பெருமை கொள்கிறது என உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/217980

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.