Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தப் பெண்கள் திருந்தவே மாட்டார்களா..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமண இணைய தளம் மூலம் பெண்களிடம் மோசடி: இன்னொரு கில்லாடி கைது

சென்னை: இந்தி விளம்பர நடிகரின் படத்தை பயன்படுத்தி மேட்ரிமோனியல் இணைய தளத்தில் பல பெண்களிடம் மோசடி செய்தவர் பிடிபட்டுள்ளார்.

திருமண இணையத் தளம் மூலம் இவர் சுமார் 13 பெண்களை ஏமாற்றியுள்ளார்.

லியாகத் அலி விவகாரமே இன்னும் மறக்கப்படாத நிலையில் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த இந்த கில்லாடி வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த வடிவேலன் என்பவர் மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், எனது தங்கையின் பெயர் கிருத்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 26). எம்.பி.ஏ. பட்டதாரியான அவருக்கு வரன் தேடினோம். ஒரு திருமண இணைய தளத்தில் கிருத்திகாவின் புகைப்படம் மற்றும் குடும்ப விவரங்களை வெளியிட்டோம்.

இந் நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த டாக்டர் ஆகாஷ், என்ற பெயரில் எங்கள் வீட்டிற்கு ஒருவர் போனில் பேசினார்.

டெல்லியில் டாக்டராக உள்ளதாகவும் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிப்பதாகவும், இணைய தளத்தில் மணமகளை தேடினேன். அதில் உங்களது தங்கையின் படத்தை பார்த்தேன், மிகவும் பிடித்துவிட்டது. எனது போட்டோவை அனுப்புகிறேன் பிடித்திருந்தால் சொல்லுங்கள் தாய் தந்தையை அழைத்து வந்து நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம். மற்ற விஷயங்களை பெற்றோர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.

மேலும், ரூ.1 கோடி செலவில் பிரமாண்ட மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறேன் என்றார்.

அவரது பேச்சு எங்களைக் கவர்ந்தது. சில நாட்களில் ஒரு போட்டாவை அனுப்பி வைத்தார். எனது தங்கை உள்பட அனைவருக்கும் அவரை பிடித்து விட்டது.

அவர் கொடுத் திருந்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டு பேசினோம். மருத்துவமனை கட்டும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. பிஸியாக உள்ளேன். விரைவில் வந்து நிச்சயம் செய்கிறேன் என்றார்.

இந் நிலையில் எங்களுக்குத் தெரியாமல் எனது தங்கையுடன் செல்போனில் பேச ஆரம்பித்துள்ளார். சில நேரங்களில் விடிய விடியக் கூட பேசியுள்ளனர்.

ஒரு முறை, என்னை அடிக்கடி தொடர்பு கொண்டால் வேலை பாதிக்கப்படும். பேசவேண்டும் என்றால் எனது நண்பர் டாக்டர் செந்தில்குமாருக்கு செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பு, செந்தில்குமார் சென்னை போரூரில் உள்ள மருத்துவமனையில் வேலைபார்கிறார். அவர் எனக்கு தகவல் சொல்வார். நான் உங்களிடம் பேசுகிறேன் என கூறியிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு எனது தங்கைக்கு போன் செய்து நான் சென்னை புறப்பட்டு வந்த போது கார் விபத்திற்குள்ளாகி விட்டது எனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. நடக்க முடியவில்லை ஆந்திராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன்.

உடனடியாக ரூ.1 லட்சம் பணம் தேவை. எனது நண்பர் செந்தில்குமாரிடமும் கேட்டேன். அவர் ரூ. 50,000 கொடுத்தார். உன்னிடம் ஏதாவது பணம் இருந்தால் கொடு, வீடு திரும்பியதும் தந்து விடுகிறேன் என கூறியுள்ளார்.

பதறிப் போன எனது தங்கையும் ரூ. 40,000 இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து செந்தில்குமார் வந்து பணத்தை பெற்றுக் கொள்வார் என்று கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் டாக்டர் செந்தில்குமார் பேசுவதாக என் தங்கையிடம் ஒரு நபர் பேசி உள்ளார். முக்கியமான ஆபரேசன் காரணமாக வர முடியவில்லை. எனது கார் டிரைவரை அனுப்புகிறேன். அவரிடம் பணத்தை கொடுத்தனுப்புங்கள் என அந்த நபர் கூறியுள்ளார்.

சில மணி நேரத்தில் ரமேஷ் என ஒரு நபர் வந்து எனது தங்கையிடம் இருந்து ரூ.20,000 வாங்கி சென்றுள்ளார். அதன் பின்னர் ஆகாஷ் என் தங்கையை தொடர்பு கொள்ளவில்லை.

குழம்பிப் போன எனது தங்கை எங்களிடம் விவரத்தைக் கூறவும், நாங்கள் ஆகாஷ் கொடுத்த செல்போனைத் தொடர்பு கொண்டோம். ஆனால் அது ஆப் செய்து வைத்திருந்தது. செந்தில்குமார் கொடுத்த எண்ணுக்கு முயன்றோம். அதுவும் போலியானது என்பது தெரிய வந்தது.

நாங்கள் ஏமாந்ததை உணர்ந்தோம். அந்த மோசடி நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

போலீஸார் விசாரணையில் இறங்கினர். இதில் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த இன்பராஜ் என்ற நபர்தான் கிருத்திகாவிடம் பணத்தை மோசடி செய்தவர் என்று தெரிய வந்தது.

இன்பராஜை தனிப்படை போலீசார் பூக்கடை பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இன்பராஜ் 6-ம் வகுப்பு வரையே படித்துள்ளார். மகேஸ்வரி என்ற மனைவியும் 1 மகளும் உள்ளனர். கொளத்தூர், பால விநாயகர் கோவில் பகுதியில் உள்ள வீட்டில் வசிக்கின்றனர்.

பல மொழி பேசும் திறமை உள்ளதால் அதை வைத்து கடந்த 1 வருடமாக 13 பெண்களிடம் லட்சக் கணக்கில் பண மோசடி செய்துள்ளார்.

இந்த நாடகத்தில் இடம் பெற்ற பிற கேரக்டர்களான டாக்டர் செந்தில்குமார், கார் டிரைவர் ரமேஷ் என அனைவருமே இன்பராஜ்தான். குரலை மாற்றி மாற்றிப் பேசிய வித்தை காட்டியுள்ளார்.

ஒவ்வொரு பெண்ணிடமும் ரூ.20,000 முதல் 50,000 வரை பணம் பறித்துள்ளார். இவர் டாக்டர் ஆகாஷ் என்ற பெயரில் அனுப்பிய புகைப்படம், இந்தி விளம்பரபடங்களில் நடிக்கும் டி.வி. நடிகர் சாம்ரிஷ் என்பதும் தெரிய வந்துள்ளது.

மணிகணக்கில் பெண்களிடம் பேசியதற்காக செல்போனுக்கு மட்டுமே மாதம் ரூ. 5,000க்கு மேல் கட்டியுள்ளார். ஏமாற்றப்பட்ட எந்த பெண்ணிடமும் நேரடியாக பேசுவதில்லை. பணம் பெற மட்டுமே மாற்று பெயரில் நேரில் சென்றுள்ளார்.

இவரது செல்போனில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பெண்களின் செல்போன் நம்பரை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதில் 3 பேர் மட்டுமே இன்பராஜ் தங்களிடம் மோசடி செய்துவிட்டதாக புகார் கூறி உள்ளனர்.

தற்ஸ்தமிழ்.கொம்

------------------------------

இப்படிப் பெண்கள் நடிகர்களின் அழகில் மயங்கி.. டாக்டர் இஸ்சினியர் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு மயங்கி... தொடர்ந்து தங்களை தாங்களே ஏமாற்றி அடுத்தவர்களிடம் ஏமாந்து அழியப் போகிறார்களா. பாருங்கள் பெண்களை ஏமாற்றனும் என்றால் என்னென்ன ரூபத்தில வரனும் என்று. இந்தப் பெண்கள் எப்பதான் திருந்தப் போகிறார்களோ..???! இப்படி எத்தனை நடந்தாலும் பெண்கள் சாமியார்களையும் டாக்டர் இஞ்சினியர் வெளிநாட்டு மாப்பிள்ளைகளையும் கண்டாலே கிறங்கிப் போயிடுறாங்களே ஏன்..???! :lol::unsure:

Edited by nedukkalapoovan

பிள்ளைகளை விட அப்படி மாப்பிளைகளைக் கண்டதும்.. அவசரத்திலே அமுக்கிபோட நினைக்கிற பெற்றோரை சொல்லணும் நெடுக்ஸ்..பெண்களும் தங்க வாழ்க்கையிலே இவ்வளவு அஜாக்கிரதையா இருக்ககூடாது..இப்படிப்பட ஆண்களை மிக கடுமையாக.. அரபிய முறைப்படி தண்டிக்கணும்.

Edited by vikadakavi

ஆமாம் தாத்தா நீங்க சொல்லுறது சரி இந்த ஆம்பிளை பசங்க இருக்கிறாங்க வெள்ளை தோலில மயங்கி வருத்த காரியை கூட கட்டுவாங்க ஆனா கலர் கொஞ்சம் குறைசலா இருந்தாலும் நல்ல உள்ளத்தை கைவிட்டுபோடுவாங்க இதை பற்றி என்ன நினைக்கிறீங்க தாத்தா :unsure: !!கூட்டி கழித்து பார்த்தா எல்லாருமே திருந்துறது கொஞ்சம் கஷ்டம் தான்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

அப்ப உங்களுக்கு ஒரு அமாவாசையை பேசட்டோ ஜம்பு???

நேக்கு வெட்கமா இருக்கு ரவி மாமா நானே சின்ன பிள்ளை என்னோட இப்படியா கதைக்கிறது :unsure: !!மாசத்தில் ஒரு நாள் தானே அமவாசை ரவி மாமா!! :lol:

அப்ப நான் வரட்டா!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் அழகையும், வாளிப்பையும் கண்டு வீணீர் வடிக்கும் ஆண்களின் அற்ப புத்திக்கு இதுக்கு மேலும் செய்யவேண்டும் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெண்கள் திருந்தவே மாட்டார்களா..??!

திருந்த விட மாட்டாமல் செய்வது யாராக இருக்கும் :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

***********

திருந்த விட மாட்டாமல் செய்வது யாராக இருக்கும் :wub:

ஏன் பெண்கள் திருந்தப்படாது என்று யாரேனும் அவங்களைக் கட்டிப் போட்டிருக்காங்களோ..! கேள்வியைப் பாரு கேள்வியை. அதுக்க ஒரு முழி புதுக்கல் வேற..! :D:)

நீக்கப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Edited by yarlpriya

  • 2 weeks later...

பல மொழி பேசும் திறமை உள்ளதால் அதை வைத்து கடந்த 1 வருடமாக 13 பெண்களிடம் லட்சக் கணக்கில் பண மோசடி செய்துள்ளார்.

இந்த நாடகத்தில் இடம் பெற்ற பிற கேரக்டர்களான டாக்டர் செந்தில்குமார், கார் டிரைவர் ரமேஷ் என அனைவருமே இன்பராஜ்தான். குரலை மாற்றி மாற்றிப் பேசிய வித்தை காட்டியுள்ளார்.

"அசத்தப்போவது யாரு" நிகழ்ச்சியில அசத்தல் மன்னராக தெரிவுசெய்யப்பட்ட ஆளா இருக்குமோ??? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செல்விகள், திருமதிகளுக்கெல்லாம் சபலப்புத்திகளும் , சஞ்சலப்புத்திகளும் கூடவே பிறந்தது . எனவே அவர்கள் திருந்துவதற்கு சந்தர்ப்பமே இல்லை :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செல்விகள், திருமதிகளுக்கெல்லாம் சபலப்புத்திகளும் , சஞ்சலப்புத்திகளும் கூடவே பிறந்தது . எனவே அவர்கள் திருந்துவதற்கு சந்தர்ப்பமே இல்லை :rolleyes:

கு.சா துணிஞ்சு சொல்லிட்டதா நினைக்காதீங்க. வரப் போற றியக்ஸனப் பாருங்க. கறுப்பி அக்கா பின்னிடப்போற பின்னி. :lol::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள் திருந்திறது இருக்கட்டும். ஆண்கள் எப்ப திருந்த போயினம்? ஏமாத்தி இருக்கிறது ஒரு ஆண்தானே. அவரை பற்றி ஒருவரும் கருத்து சொல்லலை. பெண்கள் எப்ப திருந்த போயினம் என்று கேக்கிறீங்க? இல்லை ஆண்கள் ஏமாத்திறது சாதாரணமா எப்பவும் நடக்குறது தானே?அதுதான் ஒருத்தரும் கருத்து சொல்லலை போல.

Edited by Jenany

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்ரநெற்றில ஆண்கள் வாறாங்க என்று தெரிஞ்சு முண்டி அடிச்சு கதையளக்கிறதை நிற்பாட்டினா ஆண்களுக்கு எங்க ஏமாற்ற வழி கிடைக்கப் போகுது..??! எங்க சுறா மாட்டும் என்று போய் கடைசியில திமிங்கலத்தின்ர வாய்க்குள்ள அகப்பட்டிட்டு.. ஐயோ.. திமிங்கலம் கவ்வுது திமிங்கலத்தை அடக்குங்கோ என்று புலம்ப வேண்டியது..! இதுவே வேலையாப் போச்சு பெண்களுக்கு. ஏமாந்தா எனி வெளில சொல்லாதேங்க வெட்கம். அடுத்ததைப் பார்த்து கோர்த்திட்டு திரிவதுதான் நல்லது. :D:wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.