Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் உலகை மெய்சிலிர்க்கச் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்டவீரர் வியென் முல்டர் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்துள்ளார்.

மிகவும் அரிய உலக சாதனையொன்றை நிலைநாட்டக்கூடிய வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பினை முல்டர் நிராகரித்துள்ளார்.

கிரிக்கெட் உலகம் போற்றும் ஜாம்பவான்களில் ஒருவரான மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் பிரயன் லாராவின் சாதனையை முறியடிக்க முல்டருக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.

தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராக

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதி கூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை பிரயன் லாரா நிலைநாட்டியுள்ளார்.

கிரிக்கெட் உலகை மெய்சிலிர்க்கச் செய்த நெகிழ்ச்சி சம்பவம் | Mulder Lara Keeping That Record

கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக பிரயன் லாரா ஆட்டமிழக்காது 400 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முல்டர் ஆட்டமிழக்காது 367 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டார்.

இந்தப் போட்டியில் முல்டர் தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்டர் சாதனை முயற்சியை தவிர்த்தார்

பிரயன் லாரா ஓர் ஜாம்பவான் எனவும் அவரது சாதனையை தாம் முறியடிப்பது பொருத்தமற்றது எனவும் லாராவின் சாதனை அப்படியே நீடிக்க வேண்டும் அதுவே முறை எனவும் முல்டர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகை மெய்சிலிர்க்கச் செய்த நெகிழ்ச்சி சம்பவம் | Mulder Lara Keeping That Record

அணியின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் தாம் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் இந்தப் போட்டியில் முல்டர் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.

தென் ஆபிரிக்க அணியின் சார்பில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்களை முல்டர் பெற்றுக்கொண்டுள்ளார்.

தனது நாட்டு வீரர் அல்லாத ஓர் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிக்கக் கூடாது அவரது பெயர் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டுமென முல்டர் சாதனை முயற்சியை கைவிட்டமை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

https://tamilwin.com/article/mulder-lara-keeping-that-record-1751937909

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட லாராவுக்கு செருப்பை சாணியில் முக்கி ரெண்டு அறை விட்டு இருக்கலாம்…

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இதை விட லாராவுக்கு செருப்பை சாணியில் முக்கி ரெண்டு அறை விட்டு இருக்கலாம்…

https://www.espncricinfo.com/series/england-tour-of-west-indies-2003-04-61746/west-indies-vs-england-4th-test-64080/full-scorecard

இதே இங்கிலாந்து டீம்தான் 2005 இல் பதினெட்டு வருடங்களின் பின் ஆஸ்திரேலியாவை ஆஷேஷில் வென்றது. இதுவே ஜிம்பாப்வே தவிர்ந்த வேறு நாட்டுடனான போட்டியென்றால் நிச்சயம் நானூறு அடிக்க எத்தனித்திருப்பார்!

இதேபோல் ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லரும் ஒருமுறை டான் பிரட்மனின் சாதனையை முறியடிக்காது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டார்!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Eppothum Thamizhan said:

லாராவின் சாதனயை நான் குறைத்து மதிக்கவில்லை.

ஆனால் விளையாட்டு “போட்டி” என்பதன் அடிப்படையே விட்டு கொடாமல் விளையாடுவதுதான்.

ஆகவே சாதனையை நான் வேண்டும் என்றே தகர்காமல் விட்டேன் என சொல்லுவது அதிகபிரசங்கிதனமானதும், லாராவை அவமதிப்பதுமாகும்.

பேட்டிங் அவரேஜ் பார்க்கும் போது அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஓட்டத்துக்கு முழு மதிப்பு, சிம்பாம்பேவுக்கு எதிரான ஓட்டத்துக்கு அரை மதிப்பு என இல்லைத்தானே?

அப்படி என்றால் முல்டர் ஏன் சிம்பாப்வேக்கு எதிராக களம் இறங்கினார்?

அதே போல் அடுத்த 20 சொச்ச ஓட்டத்துக்குள் இவர் அவுட்டும் ஆகி இருக்கலாம் - ஆகவே நான் விட்டு கொடுத்தேன் என்பது எந்த வகையில் பார்த்தாலும் சுத்த அதிகபிரசங்கிதனமே.

மார்க் டைலர் 1998 இல் பாகிஸ்தானில் வைத்து 334 இல் டிக்லேர் பண்ணியது இப்படி அல்ல.

அவர் இரெண்டாம் நாள் ஆட்டம் முடியும் போது பிரேட்மனை சமன் செய்து இருந்தார். அப்போ அவர் மனதில் டிக்ளேர் செய்யும் எண்ணமில்லை. கடைசி பந்தில் ஒரு ஓட்டம் எடுத்திருந்தால் கூட பிரேட்மனை முந்தி இருப்பார்.

ஆனால் அன்றிரவு 2 மணி வரை தூங்கவில்லை எனவும், ஆட்டத்தை வெல்ல, இன்னும் ஒரு அரை மணி நேரம் துடுப்பாட தான் விரும்பியதாயும், ஆனால் அப்படிதான் செய்தால் ( அரை மணியில் அப்போதைய உலக சாதனையான 375 ஐ எட்ட வாய்ப்பில்லை), பிரேட்மனை வெல்ல என தான் இப்படி விளையாடியதாக சொல்லப்படும், எனவே அணி வெல்ல வேண்டும் என்பதால், மறுநாள் காலையில் டிக்ளேர் செய்ததாயும் டெய்லர் கூறியுள்ளார்.

அத்தோடு பிரேட்மனை சமன் செய்தது தனக்கு பெருமையே எனவும் கூறினார்.

ஆகவே இரெண்டும் ஒன்றல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

இது மார்க் டெய்லர் வெளியே சொன்னது. அவர் 334 இற்கு மேல் அடிக்காமல் விட்டதற்கு காரணம் அவருக்கு ப்ராட்மன் மேலிருந்த அபிமானமே. இரண்டு நாள் முழுவது ஆடியவருக்கு கடைசி இரண்டுபந்தில் ஒரு ஓட்டம் எடுப்பதொன்றும் கஷ்டமான காரியமேயில்லை. அத்துடன் நல்ல கேப்டன் என்றால் அடுத்தநாளும் அரைமணிநேரம் எதிர்தரப்பு ஆரம்ப ஆட்டக்காரர்களை வெய்யிலில் நிக்கவைத்துத்தான் ஆட்டத்தை நிறுத்திக்கொள்வார்கள். பிரெஷாக வந்து ஆடவிடமாட்டார்கள்.

ஆனால் முல்டருக்கு எவ்வளவோ நேரம் இருந்தும் 400 அடிக்க முயற்சிக்காதது லாராவின் மீதிருந்த அபிமானமே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

இது மார்க் டெய்லர் வெளியே சொன்னது

அப்போ நீங்கள் எழுதியது டெயிலர் உங்கள் காதுக்குள் மட்டும் சொன்னதா 🤣.

மார்க் டெய்லர் என்ன நினைத்தார் எனபதை அவர் சொல்லித்தான் அறிய முடியும்.

பிரெட்மனோடு சமனாக இரெண்டாம் நாள் ஆட்டம் முடிய ஒரு ஒவர் இருக்கும் போதே வந்து விட்டார். டிக்லேர் செய்வதாயின் அவர் அப்போதே செய்திருக்கலாம். அன்று ஒரு ஓவர் விளையாடி அடுத்த நாள் காலை வரை காத்திருக்க வேழ்ண்டியதில்லை.

இரெண்டாம் நாள் ஆட்ட முடிவில், 3ம் நாள் அரை மணி நேரம் ஆடுவது, போதிய ஸ்கோர் எடுத்த பின் ஆனால் 375 ஐ அடிக்காமல் விலகுவது என்பதே அவர் எண்ணம்.

காரணம் 375 வரை ஆடினால் மேட்ச்சை வெல்ல முடியாமல் போகும். இடையில் அவர் அவுட் ஆகவும் கூடும்.

ஆனால் அப்படி செய்தால் பிரெட்மனை முந்த என தான் 30 நிமிடம் மேலதிகமாக ஆடியதாக கருதப்படும் என்பதால் அப்படி செய்யவில்லை.

அன்றிரவு அவுஸில் உள்ள சகோதரியிடம் கூட பேசி உள்ளார்.

அதன் பிந்தான் அந்த முடிவுக்கு வந்தார்.

ஆகவே பிரெட்மனோடு சமன் என்பது ஒரு பக்கவிளைவே. ஒரு போனல். டிக்லேர் பண்ண உண்மையான காரணம் மேட்ச்சை வெல்லும் வாய்ப்பு.

ஆனால் நீங்கள் சொன்னது போல் முல்டருக்கு போதிய நேரம் இருந்தது. இவரின் செய்கைக்கு முழு காரணம் அதிக பிரசங்கிதனமே.

3 hours ago, Eppothum Thamizhan said:

ஆனால் முல்டருக்கு எவ்வளவோ நேரம் இருந்தும் 400 அடிக்க முயற்சிக்காதது லாராவின் மீதிருந்த அபிமானமே.

அவர் அபிமானத்தால் செய்திருக்கலாம்.

ஆனால் இனி காலம் முழுவதும்,

லாராவின் 400 ஐ கதைக்கும் போது முல்டர் விட்டு கொடுத்ததைத்தான் அனைவரும் நினைவுகொள்வார்கள்.

இது உண்மையில் லாராவுக்கு அபகீர்த்தி, சிறுமைப்படுத்தும் செயல்.

இவர் அடுத்த பந்திலேயே அவுட் ஆகி இருக்கலாம்.

அப்படி இருக்க விட்டு கொடுத்தேன் என்பதே பிழை.

ஆகவே ஒன்றில் விரும்பியமட்டும் ஆடி இருக்க வேண்டும் அல்லது, மேட்ச்சை வெல்ல டிக்ளேர் பண்ணினேன் என்பதோடு நிறுத்தி இருக்க வேண்டும்.

தேவையில்லாமல் லாரவை இழுத்து அவமானப்படுத்தாமல்.

இதை நிச்சயம் லாரா ரசித்திருக்க மாட்டார்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இதை நிச்சயம் லாரா ரசித்திருக்க மாட்டார்.

முஸ்டர் பதட்டப்பட்டு பிழையான முடிவு எடுத்தார் என்கிறார் கெயில்…

talkSPORT
No image preview

'He panicked' - Chris Gayle gives ruthless response to Wi...

Cricket icon Chris Gayle insisted Wiian Mulder ‘panicked and blundered’ by not attempting to surpass Brian Lara’s Test record. South African skipper Mulder made the bold decision …
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் என்னநினைக்கிறன் எண்டால் சிம்பாவேக்கு எதிராக சாதனை செய்தால் குறைவாகநினைப்பார்கள் என்று தான் முல்டர் சாதனைக்கு முயற்சி செய்யவில்லை. இதுவே அவுஸ்ரேலியா போன்ற அணியுடன் கட்டாயம் முயன்றிருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பிரெட்மனோடு சமனாக இரெண்டாம் நாள் ஆட்டம் முடிய ஒரு ஒவர் இருக்கும் போதே வந்து விட்டார். டிக்லேர் செய்வதாயின் அவர் அப்போதே செய்திருக்கலாம். அன்று ஒரு ஓவர் விளையாடி அடுத்த நாள் காலை வரை காத்திருக்க வேழ்ண்டியதில்லை.

உங்களுக்கு டெஸ்ட் ஆட்டம் பற்றிய புரிதல் குறைவென்றே தோன்றுகிறது. அவர் உண்மையிலேயே டெஸ்டை வெல்லவேண்டும் என்று நினைத்திருந்தால் இரண்டாம்நாள் முடிவுக்கு அரைமணி நேரம் முதலே டிக்கிலயர் செய்து எதிரணியை ஆறு ஓவர்களாவது ஆடப்பண்ணியிருக்க வேண்டும். அவர் பிரட்மனின் சாதனையை சமன் செய்ய நினைத்தாரே ஒழிய முறியடிக்க விரும்பவில்லை என்றே தோன்றுகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

என்னுடைய புரிதல் இன்மை பற்றிய உங்கள் புரிதலுக்கு நன்றி🤣.

உங்கள் புரிதலை பார்க்க நீங்கள் டெஸ்ட் பிளேயர் போல உள்ளது, நான் அப்படி இல்லை, சாதாரண கிளப் பிளேயர்தான். ஆனால் டெஸ்ட் பார்ப்பதால் கேள்வி ஞானம் கொஞ்சம் உண்டு.

நான் இங்கே மூக்கு சாத்திரம் பார்த்து வாய்க்கு வந்த படி எழுதவில்லை.

டெய்லரே கூறியுள்ளார். 2ம் நாள் முடிவில், தான் 3ம் நாள் காலையில் மேலும் அரை மணிநேரம் விளையாடி விட்டு, டிக்லேர் பண்ணவே யோசித்தேன். விளையாட்டை வெல்ல அதுவே மிக சிறந்த முடிவாக இருந்திருக்கும் என.

ஆனால் அப்படி செய்தால் - அது பிரட்மனை முந்த என்றே பொருள் கொள்ளப்படும் என்பதால், 2ம் நாள் இரவு நன்றாக யோசித்து டிக்லேர் செய்யும் முடிவை எடுத்தேன் என.

ஆகவே 👇

4 hours ago, goshan_che said:

ஆகவே பிரெட்மனோடு சமன் என்பது ஒரு பக்கவிளைவே. ஒரு போனல். டிக்லேர் பண்ண உண்மையான காரணம் மேட்ச்சை வெல்லும் வாய்ப்பு.

இது பற்றி டெய்லர் கூறியது

https://www.cricket.com.au/news/3311645/on-this-day-taylor-equals-bradman-with-334

அவரின் கூற்றுப்படி:

“I think ideally I would have batted on for 20 minutes just to put their openers out in the field for 20 more minutes before we declared”.

"But I thought if I did that I would then end up on 340 not out or something like that and I think people would have assumed that I'd batted on just for my own glory.

"I didn't want to send that message either so the more I thought about it, I came to the decision that the best thing I can do is declare (and) end up on the same score as Sir Donald, which I'm more than delighted with.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

இரண்டாம்நாள் முடிவுக்கு அரைமணி நேரம் முதலே டிக்கிலயர் செய்து எதிரணியை ஆறு ஓவர்களாவது ஆடப்பண்ணியிருக்க வேண்டும்

இது மட்டும் அல்ல, இதே போல் இன்னொரு உத்திதான், மறுநாள் காலையில் ஒப்னர்களை ஒரு அரை மணி நேரம் பீல்டிங்கில் நிற்க வைத்து விட்டு, டிக்ளேர் செய்வதும்.

டெஸ்ட் நிபுணரனா உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை, எமது அணியின் ஸ்கோர் என்ன, என்ன ரேட்டில் அடித்துள்ளோம், மைதானத்தின், சூழலின் தட்பவெட்ப, நிலை களுக்கு அமைய வேறு, வேறு உத்திகள் கையாளப்படும்.

இங்கே டெயிலர் நான் சொன்ன உத்தியை கைக்கொள்ள விரும்பினார், ஆனால் அது பிழையாக பொருள் கொள்ளப்படும் என்பதால், அடுத்த நாள் காலையில் டிக்ளேர் பண்ணினார்.

பிரட்மனோடு சமன் ஆனதுமே டிக்லேர் பண்ணுவதுதான் அவர் நோக்கம் என்றால், 334 அடித்ததும் டிக்ளேர் பண்ணி இருப்பார். தொடர்ந்து நாள் முடியும் வரை விளையாடி இருக்க மாட்டார்.

2 hours ago, வாதவூரான் said:

நான் என்னநினைக்கிறன் எண்டால் சிம்பாவேக்கு எதிராக சாதனை செய்தால் குறைவாகநினைப்பார்கள் என்று தான் முல்டர் சாதனைக்கு முயற்சி செய்யவில்லை. இதுவே அவுஸ்ரேலியா போன்ற அணியுடன் கட்டாயம் முயன்றிருப்பார்

உங்களுக்கான பதிலை கிறிஸ் கெயில் தருகிறார் 🤣.

There may have been a school of thought that given the disparity between South Africa, the newly-crowned World Test Championship winners, and Zimbabwe, ranked 12th in the ICC's Test rankings, somewhat lessened Mulder's achievement.

But Gayle was at pains to point out the 'opponent doesn't matter'.

"It's the same cricket, Test cricket," Gayle said.

"Sometimes you can't even get one run against a team like Zimbabwe, if you want to put it that way.

Gayle blasted nearly 20,000 runs across all three formats for the West Indies

"It doesn't matter the opponent, if you get 100 against any team, that's a Test century. If you get a double or triple, 400, that's Test cricket. That's the ultimate game.

"Like I said, he panicked and he blundered, straight up."

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதுதான் காரணம் என்றால் அதை ஏன் முல்டர் சொல்லவில்லை?

சொன்னால் சிம்பாவ்வே ஒரு சோப்பிளாங்கி டீம் என சொல்வது போல் ஆகிவிடும்.

என்னை பொறுத்தவரை கெயில் சொன்னதுதான் சரி.

டெஸ்ட் கிரிகெட் என்றால் அது டெஸ்ட்கிரிகெட்தான்.

லாரா முதன் முதலில் 375 அடித்து உடைத்த சாதனை சேர் கரி சோர்பஸ் 365 அடித்த சாதனையை, அது அப்துல்காதர் விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு எதிராக சோபர்ஸ் எடுத்தது, ஆனால் லாரா அதை உடைத்தது ஒரு சதம் பெறுமதியில்லாத 1994 இங்கிலாந்து போலிங்க்குக்கு எதிராக.

அதற்காக லாரா 364 இல் hit wicket லா அவுட் ஆக முடியும்🤣.

விட்டு கொடாமல் விளையாடுவது என்பது விளையாட்டின் அடிப்படை.

அது இல்லாவிட்டால் அது விளையாட்டே இல்லை.

2 hours ago, வாதவூரான் said:

நான் என்னநினைக்கிறன் எண்டால் சிம்பாவேக்கு எதிராக சாதனை செய்தால் குறைவாகநினைப்பார்கள் என்று தான் முல்டர் சாதனைக்கு முயற்சி செய்யவில்லை. இதுவே அவுஸ்ரேலியா போன்ற அணியுடன் கட்டாயம் முயன்றிருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

பிரட்மனோடு சமன் ஆனதுமே டிக்லேர் பண்ணுவதுதான் அவர் நோக்கம் என்றால், 334 அடித்ததும் டிக்ளேர் பண்ணி இருப்பார். தொடர்ந்து நாள் முடியும் வரை விளையாடி இருக்க மாட்டார்.

அவர் 334 அடித்தபோது இன்னும் ஒரு ஓவர் மட்டுமே மீதமிருந்தது. அவர் அப்போதே டிக்லேர் பண்ணியிருந்தாலும் மற்றய அணி அடுத்தநாள் தான் ஆடியிருக்கமுடியும்.

20 hours ago, goshan_che said:

லாரா முதன் முதலில் 375 அடித்து உடைத்த சாதனை சேர் கரி சோர்பஸ் 365 அடித்த சாதனையை, அது அப்துல்காதர் விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு எதிராக சோபர்ஸ் எடுத்தது, ஆனால் லாரா அதை உடைத்தது ஒரு சதம் பெறுமதியில்லாத 1994 இங்கிலாந்து போலிங்க்குக்கு எதிராக.

அந்த அப்துல் காதர் நீங்கள் நினைப்பதுபோல லெக்ஸ்பின் ஜாம்பவானில்லை! அவர் ஒரு சாதாரண இடதுகை பந்துவீச்சாளரும் கேப்டனும் மட்டுமே. அந்த பாக்கிஸ்தான் டீம் 1994 இங்கிலாந்து டீமைவிட சொத்தை டீம்.

https://www.espncricinfo.com/series/england-tour-of-west-indies-1993-94-61748/west-indies-vs-england-5th-test-63641/full-scorecard

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அவர் 334 அடித்தபோது இன்னும் ஒரு ஓவர் மட்டுமே மீதமிருந்தது. அவர் அப்போதே டிக்லேர் பண்ணியிருந்தாலும் மற்றய அணி அடுத்தநாள் தான் ஆடியிருக்கமுடியும்.

ஓம்…ஆனால் மீதம் இருந்த ஆறு பந்தில் ஒரு ரன் எடுத்தால் கூட அவரின் பிரெட்மனோடு சமனாக நிற்கும் திட்டம் தோல்வி அடைந்திருக்கும் அல்லவா?

ஆகவே நீங்கள் சொல்வதுதான் உண்மை எனில், பிரெட்மனை சமன் செய்ததுமே அவர் டிக்ளேர் பண்ணி இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அந்த அப்துல் காதர் நீங்கள் நினைப்பதுபோல லெக்ஸ்பின் ஜாம்பவானில்லை! அவர் ஒரு சாதாரண இடதுகை பந்துவீச்சாளரும் கேப்டனும் மட்டுமே. அந்த பாக்கிஸ்தான் டீம் 1994 இங்கிலாந்து டீமைவிட சொத்தை டீம்.

இல்லை காதரின் முதல் டெஸ்ட் 1946 இல் கடைசி டெஸ்ட் 1958 இல் என்கிறது கிரிகின்போ.

சோபர்ஸ் அடித்ததும் 1958 இல்தான்.

இதற்கு முன்னர் ஆக்ஸ்போர்ட்டுக்கும், பின்னர் இந்திய டெஸ்ட் அணிக்கும், பின் பாகிஸ்தானின் கேபடனும் என, 1958 இல் அப்துல்காதிர் ஜாம்பவானாக ஆகியேவிட்டார்.

1958 இன் பின் அவர் டெஸ்ட் விளையாடவில்லை எனில், 1958 இல் அவர் ஜாம்பவானாக ஆகிவிட்டார் என்றுதான் அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

80 களின் பிற்பகுதியில் ஒரு பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளரின் பெயரும் அப்துல் காதிர், அவர் பந்து வீச வரும் போது பந்தை போட்டு பிடித்து வீச வருவார் அதனை போலவே பின்னாளில் முரள்யும் பந்தை வீசுவதற்கு முன் பந்தை போட்டு பிடித்து வீசுவார் சில மாற்றங்களுடன் (இந்த அப்துல் காதர் டெண்டுல்கருடன் வம்பிழுந்து வாங்கிக்கட்டி கொண்டவர் என கூறப்படுகிறது).

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

இவரை எனக்கு நியாபகம் இருக்கிறது.

முடியை பக்கவாட்டில் சீவி இருப்பார்.

அடிக்கடி தட்டி விட்டு கொள்வார்.

இடதுகை லெக்ஸ்பின் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

80 களின் பிற்பகுதியில் ஒரு பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளரின் பெயரும் அப்துல் காதிர்

நீங்கள் சொல்லும் அப்துல் காதிர் எம் சி ஜி யில் சுழட்டிய போது (அலன் போர்டர் அவுட் இப்போ ரிவியூவில் அவுட் இல்லை என்றாகி இருக்கும்).

எனது நினைவு முர்றிலும் பிழை 🤣.

https://youtu.be/CbOy9J8i1sk?si=94oc6hHCh1v0lJlV

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

இங்கே நானும் எபோத வும் 1950, 80 களில் விளையாடிய இரு அப்துல்காதர்களை குழப்பி கொண்டுள்ளோம்.

ஆனால் 1958 பாகிஸ்தான் அணி, 1994 இங்கிலாந்து அணியை விட சிறந்தது என்ற என் கருத்தில் மாற்றம் இல்லை.

1958 கால, காதர் தலைமையிலான பாகிஸ்தான் அணி, தெ ஆ தவிர ஏனைய அப்போதைய டெஸ்ட் அணிகள் சகலதையும் வென்றுளது.

அங்கஸ் பிரேசர் ஓப்ப்னிங் போலராக இருந்த 1994 அணி, அடிவாங்காத இடமே இல்லை🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.