Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

#சுகர்னு docter கிட்ட போறாங்க ..
அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.
#ஒரு_வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.
😂#மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார்.
🧔#அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்.
காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.
இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.
1.
தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல.
2.
மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல.
3.
ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை.
4.
வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.
TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.
வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.
பாடையில போகற வரைக்கும்
அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.
👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.
மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.
அதனால் மனதுக்கும், உடலுக்குமான,
முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

################### ###############

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!
அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.
1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.
2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.
3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.
4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.
5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.
6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.
7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.
அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.
8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.
9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.
10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.
11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.
12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.
13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.
கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.
எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.
உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.
உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.
வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.
இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.
பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?
இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.
இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.
கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?
மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!
இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!
இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!
இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!
மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!
உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!
ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......!

- இணையத்தில் படித்தது. -

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏன் "நலமோடு நாம் வாழ" பகுதியில் இணைக்கப் பட்டிருக்கிறது? யாரோ பொழுது போகாமல் முகட்டைப் பார்த்து யோசித்த பின் இணையத்தில் அலட்டும் பதிவுகளை ஆரோக்கிய ஆலோசனையாக எடுத்துக் கொள்ள முடியுமா?

அடுத்த தடவை வயிற்றோட்டம், வாந்தி வந்தால் அதை அப்படியே தடுக்காமல் "நஞ்சை மூளை வெளியேற்றட்டும்" என்று வீட்டிலேயே இருந்து பாருங்கள்😂. உடலின் நீர்ச்சத்தும், கனியுப்புக்களும் சேர்ந்து வெளியேறி, சிறு நீரகம் முதல் இதயம் வரை திருத்த இயலாத சேதம் அடையும். அவசர சிகிச்சைப் பிரிவில் தான் இருக்க வேண்டும், பின்னர் டயலிசிசோடு நாட்களைக் கழிக்க வேண்டியும் வரலாம்.

அடிப்படையான மருத்துவப் புரிதல் அற்ற இந்த முட்டாள் தனங்களைப் பின் பற்றுவது தனிப்பட்டவர்களின் உரிமை, ஆனால் மருத்துவ ஆலோசனை போலப் பரப்புவது சமூக விரோதச் செயல்.

இறுதியில் மூளைதான் இறுதி முடிவு எடுக்கிறது. வயிற்றுக்குள்ளே ஒரு இடதுசாரி அரசாங்கமே நடக்கிறது என்பதைத் தத்துரூபமாக விளக்கப்பட்டுள்ளது. 😂

இன்னொன்றையும் இக் கட்டுரையில் சேர்த்திருக்கலாம். சர்க்கரை நோய் கண்டவுடன் சனி பகவானுக்கு நேர்த்தி வைத்து பூசைகள் செய்ய வேண்டும். ஏனென்றால் ...

சுக்கிரன் சர்க்கரை நோயை முதலில் உடலில் ஆரம்பித்து வைக்கும். குரு அதைத் தீவிரப்படுத்தும். பிறகு அதை நிரந்தரமாக்கி விடுவது சனியின் வேலையாகும்.

ஆகவே இந்த கிரகங்கள் ஜாதகத்தில் 6,8,12-ம் பாவங்களோடு தொடர்பு கொண்டாலோ, இந்த பாவங்களில் சேர்க்கை பெற்றாலோ ஒருவருக்கு சர்க்கரை வியாதி கண்டிப்பாக வரும். மேலும் இந்த பாவங்கள் நீர் ராசியாக (ஜல ராசியாக) வந்தால் அதாவது கடகம், விருச்சிகம், மீனம் ஆக வந்து குரு, சுக்கிரன், சனி தொடர்பு கொண்டால் நோயின் தாக்கம் அதிகமாகி, அவர்கள் சிறுநீரை கட்டுப்படுத்தமுடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.

இதில் ராகு தொடர்பு கொண்டால் அதுவும் பன்னிரண்டாம் பாவத்தோடு சேர்ந்தால், உடலில் ஓர் உறுப்பை வெட்ட வேண்டிய நிலை ஏற்படும். அதேபோல் கேது தொடர்பு கொண்டால், அதுவும் 8-ம் பாவத்த்தில் சேர்க்கை பெற்றால், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு செயல் இழந்து அதை மாற்றக்கூடிய நிலைக்குக் கூட செல்ல நேரிடும். ஆகவே, ஒருவரது ஜாதகத்தில் சர்க்கரை நோயைக் கொடுக்கக் கூடிய கிரகங்கள் குரு, சுக்கிரன். இதை பரம்பரையுடன் சம்பந்தப்படுதுவது சனி ஆகும். அதை தீவிரமாக மாற்றி அவயத்தை வெட்டுவது ராகுவும் , உறுப்புகளை செயலிழக்கச் செய்வது கேதுவும் ஆகும்.

இப்படியான குப்பைகளை நம்பும் தமிழர்களும் உள்ளனர்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக மூளைக்கு என்ன நடக்கிறது என்பது (மற்ற உடல் பகுதியில் இருந்து) அறிவிக்கப்பட்ட பின்பே, மூளை எதை செய்ய வேண்டும் (குறிப்பிட்ட பகுதிக்கு) என்பதை அறிவுறுத்தும்.

உ.ம். ஆக இயங்கும் போது காலோ கையோ அடிபடப்போவது மூளைக்கு தெரியாது. அடிபட்ட உடன் மூளைக்கு செல்லும் சமிக்கியை, குறித்த அங்கத்தை அந்த இடத்தில் விலத்துமாறு அறிவிப்பது.

இப்படியானதே நாம் துள்ளுவது, பின்னோக்கி அங்கத்தை அசைப்பது, இழுப்பது போன்றவை.

இங்கே சொல்லப்பட்டு இருப்துக்கு ஒப்பானது மலம் வெளியேற்ற்ற வேண்டிய உணர்வு வருவது. அதை மூளை அதுவாக செய்வது இல்லை, குறிப்பிட்ட பகுதி (மலம் நிரம்பி விட்டது) அகன்று, இழுபட்டு உருவாகும் சமிக்ஞைகள் மூளைக்கு (ஏதோ (மலம்) நிரம்பி விட்டது) என்பதை அறிவுறுத்த, மூளை பின்பு குறிப்பிட்ட பகுதி தசைகளுக்கு (சுருங்க அல்லது இளக) அறிவிப்பது, அதாவது மலம் வெளியேற்ற வேண்டிய உணர்வு உருவாகுவது.

ஆம் , பொதுவாக மூளை எத்தனிக்கும் பாதுகாக்க.

ஆனால் வந்த வருத்தமோ, நோயோ ஏதோ, வெளி (மருத்துவ) உதவி இன்றி மூளை எதிர்ப்பதை, பாதுக்காக்க எத்தனிப்பதை மேவும் (பொதுவாக நடப்பது, உடனடியாக என்று இல்லை காலம் எடுத்து புற்றுநோயில் போல) என்றால் ஆக குறைந்தது உடம்பின் எதாவது ஒரு பகுதியை தற்கலிகமாகவேனும் பகுதியாக செயல் இழக்க வைக்கும், அத்துடன் உடம்பில் நோய் போன்றவற்றால் உருவாகும் ஒருபகுதி தாக்கம் மற்றவற்றையும் பாதிக்கும் ( இயந்திரங்கள் போல). இங்கே ஜஸ்டின் சொன்ன உதாரணம் போல

ஆனால், மூளை எத்தனிப்பது, எதீர்ப்பது போதுமானது என்றோ , வந்த வருத்தமோ, நோயோ அதை மீறாது என்பது மூளைக்கே தெரியாது.

எனவே மருத்துவத்தை இயலுமான அளவு விரைவாக நாட வேண்டும்.

சும்மா எழுதுவது, அரைகுறையாக விளங்கி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.