Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கராட்டே தற்காப்புக் கலை (Karate )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கராட்டே தற்காப்புக் கலை (Karate ) M. நேசகுமார்

உலகில் தற்போது நிலவி வரும் பல கலைகளுக்கு இந்தியாவே தாயகமாக விளங்கியுள்ளது என்று ஆராய்ச்சி மூலம் தெரிகிறது. ஆயினும்

திரு M நேசகுமார் : நேசகுமார் அவர்கள் கராட்டேயில் மிக உயர் தகைமைகளில் ஒன்றான கறுப்புப் பட்டியை 2003 ஆம் ஆண்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய கலைகளைப் போற்றிப் பாதுகாக்க எவரும் முன்வரவில்லை என்றாலும்கூட இத்தகைய கலைகளின் சிறப்பைக்கருதி எங்கோ ஒரு சிலர் குரு-சிஷ்ய பரம்பரையாய் பயின்றும் பயிற்றுவித்தும் வந்தபடியால் இன்றும் இத்தகைய கலைகள் உயிரோடு இருக்கின்றன.

முற்காலத்தில் இருந்தது போல் இக்கலை தற்போது சீரும் சிறப்புமாக முழுமையாக இல்லை என்றே கூறலாம். அத்தகைய அரைகுறைக் கலை நுணுக்கங்களை வைத்தே ஜப்பானியரும் சீனரும் இக்கலையைக் கற்றும் கற்பித்தும் வருகின்றனர். இருப்பினும் அவர்கள் கூட இத்தகைய வீரக்கலைகளின் பிறப்பிடம் இந்தியாதான் என்று பெருமையாகக் கூறி வருகின்றனர்.

நம்மவர் பெருமையும், புகழும் தரணியெல்லாம் பரவ வேண்டுமென்ற அவாவின் காரணமாக பழம்பெரும் கலைகளான மற்போர், சிலம்பம், வர்மம், கிட்டி, நரம்படி, கத்தி வீசுதல், வாட்போர், ஈட்டிச்சண்டை, களரி, குத்துச்சண்டை போன்ற போர்க்கலைகளை எல்லாம் நன்கு பயின்று, சீரமைத்து பலவகுப்புகளாக பிரித்து மாணவத் தகுதிகளில் வெறும் கை கால்களால் செய்யும் நுணுக்கங்களையும், ஆசிரியத் தகுதிகளில் நன்சாக்கு, கம்பு, கத்தி வீசுதல், வாட்போர், ஈட்டி போன்ற பலவிதமான ஆயுதக் கலை நுணுக்கங்களையும் கராட்டேயில் சேர்த்துள்ளனர். எனவே மக்கள் எல்லோரும் இக்கலையை கற்றுப் பயன் பெற்று இன்புற விரும்புகிறேன். இக்கலையால் உடல் வலுவையும் உள்ளத்திண்மையையும் பெறலாம்.

வீரக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்

மனிதன் தோன்றி நெடுங்காலத்திற்குப் பிறகு மனித இனத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தனர் பல வரலாற்று நிபுணர்கள். இந்தக்காலத்திலேயே மனிதன் உணவுக்காக இரை தேடுவதில் ஏற்பட்ட போட்டியில் மனிதனுக்கு மனிதன் சண்டையிட நேர்ந்தது. அத்தகைய சண்டைகளில் தற்செயலாகச் சில பலவீனமான இடங்களில் அடி படும் போது மனிதன் கீழே விழுவதையும் சில சமயங்களில் இறந்து விடுவதையும் கண்டு பிடித்தனர். என்றாலும் அம்மாதிரி மரணத்தையோ அல்லது வேறு எதிர் வினைகளையோ எதிரிகளிடத்தில் வேண்டும் போது ஏற்படுத்த இயலாது போய் விட்டது. அதற்குக் காரணம் அன்றைய மனிதனுக்கு உணவைத் தவிர வேறு எதிலும் நாட்டம் இல்லாமையே.

ஆனால் ஒரு சிலர் இத்தகைய நுணுக்கங்களில் சிறிது கவனம் செலுத்திப் பல சண்டைகளில் வெற்றி பெறும் போது தானாகவே தலைமைப் பீடத்திற்கு வந்துவிடுவது சகஜமாயிற்று. இவர்களில் அனைவரும் மிகுந்த புத்திசாலிகளாக இருந்தனர். உணவைத் தேடித்திரியும் அவசியம் இல்லாத போது பல கலைகளைக் கண்டு பிடித்தனர். இப்படித்தான் எல்லா விதமான வீரக்கலைகளும் பிறந்தன. இத்தகைய கலைகளைப் பயில வேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் இப்போது பல இளைஞைர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. உலகெங்கும் பலவித பெயர்களில் பல வடிவங்களில் இந்தக்கலைகள் புத்துணர்வு பெற்று வருகின்றன.

வீரக்கலைகள் பயில்வதால் கிடைக்கும் பயன்கள்

“உடல் நலமே உண்மைச் செல்வம்”

“உடல் வளர்ந்தோரே உயிர் வளர்ந்தோர்”

“சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்”

திரை கடல் ஓடி திரவியம் தேடினாலும் உடல் நலம் இருந்தாலன்றோ தேடிய செல்வத்தை அனுபவிக்க முடியும். எதையும் மறுக்கும் எத்தகைய சான்றோரும் உடல் நலத்தை மறுத்ததில்லை. உடல் நலத்தை மறுப்பார் எவரும் இல்லை என்றாலும் உடல் நலம் என்பது எது என்று அறியார் என்ன செய்வார்? இதோ அறிவீர், உயர் கலை இது, கற்று அறிவீர் நலம் அனைத்தையும்.

எதையும் தாங்கும் இதயம், கவலையற்ற வாழ்க்கை, மன உறுதி, உடல் வலிமை, நோயற்ற உடல், கூரிய சிந்தனை, தன்னம்பிக்கை, தற்பாதுகாப்பு, பலவீனருக்கு உதவும் துணிவு, ஆகியவற்றை அளிக்கிறது இந்தக் கராட்டே கலை.

இதைக் கற்க ஆர்வம் ஒன்றே தேவை. சாதி, மதம், இனம், ஏழ்மை, ஆண், பெண் என்ற தடையில்லை. ஐந்து முதல் ஐம்பது வயது வரையிலும் எவரும் கற்றுக்கொள்ளலாம்.

கராட்டே என்றால் என்ன?

கராட்டே என்றால் வெறும் கைப் பயிற்சி என்று பொருள்படும். கராட்டே என்ற சொல்லை KAH-RAH-TEH என உச்சரிக்க வேண்டும். இந்தச்சொல்லை கராட்டே என்று உச்சரிப்பது தவறு. கராட்டே என்பது வெறும் கை, கால்கள், முழங்கால், முழங்கை, மண்டை, தோள் போன்ற பல பாகங்கள் மூலமாக எதிரிகளைத்தாக்கி வெற்றி காணும் ஓர் உன்னதக் கலை. எதிரிகள் ஆயுத பாணிகளாய் இருப்பினும் இந்த கலையைக் கற்றவர்கள் வெறும் கை, கால்களால் வெற்றி கொள்ளலாம். மேலும் இந்தக் கலை மனோ சக்தியை முக்கியமாக கொண்டு செயல்படுகிறது.

கராட்டே என்பது நமது உடலின் பாகங்கள் 27 இன் மூலமாக எதிரியின் பலவீனமான இடங்கள் 62 ஐத் தாக்குவது. மனிதனுக்கு பலவீனமான இடங்கள் இருக்கின்றன. ஜப்பானியர்கள் கூட கராட்டே என்பதற்கு வெறும் கை பயிற்சியென கூறுவர். முதலில் தோன்றியது சோட்டோகான் கராட்டே தான் (ஜப்பானியர்களினுடையது).

தற்பாதுகாப்புக்காக தோற்றப்பட்ட கலை நாளடைவில் விளையாட்டு விதி முறைகளைப் புகுத்தி ஒரு விளையாட்டாக மாற்றப்பட்டது.

என்றாலும் ஒலிம்பிக் போட்டியில் இது சேர்க்கப்படவில்லை. ஜூடோ மாத்திரமே ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

கராட்டே என்ற பெயரிலுள்ள இதர பாணிகள் சில

சோட்டோ கான் கராட்டே

சோட்டோ காய் கராட்டே

சுகோ காய் கராட்டே

எக்ஸர் காய் கராட்டே

சுஜோ கான் கராட்டே

பூடோ கான் கராட்டே

குங்பூ கராட்டே

ஜூடோ என்பது மனிதனைப் பிடித்தல், பூட்டுதல், எறிதல் போன்ற முறைகளில் இயங்குவது ஆகும்.

கராட்டே பயில்வதற்கு தேவையான பயிற்சிகளுக்கு முன்பாக மனதை ஒரு நிலைப்படுத்தி உடலைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். தியானம் என்பது கராட்டேவுக்கு மிகவும் அவசியமானது.

உடல் ஆரோக்கியத்திற்கு காற்று, நீர், உடற்பயிற்சி ஆகியவை முக்கியமானவை ஆகும். சுத்தமான காற்றும் நீரும் கிடைக்கக் கூடிய இடமான நியூசிலாந்தின் கிறைச்சேச் நகரத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள். தியானத்துடன் கூடிய உடற்பயிற்சியை உள்ளடக்கிய கராட்டேயை பயில்வதன் மூலம் குறைவற்ற செல்வமான நோயற்ற வாழ்வு பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

http://www.canterburytamilsociety.org/tham...2006/karate.htm

ம்.. :D:lol:

பழைய ஞாபகங்களை தூண்டிவிட்டீர்கள் நுணாவிலான்.

நான் உயர்தரம் கற்று முடிந்தபின், சோட்டோ கான் கற்றுக் கொண்டேன். மிகவும் உன்னதமான காலம் அது. கிருஷ்ணமூர்த்தி ஆசிரியரிடம் கராட்டே, மல்யுத்தம், சிலம்பம், வாள், மழு, யோகம் என்பன கற்றுக் கொண்டேன். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய விடுதி (இராணுவ தாக்குதலால் ஏற்கெனவே உடைந்து சின்னாபின்னமாக இருந்தது) இருந்த மண்டபத்தில்தான் எங்களுக்கு பயிற்சி வகுப்புக்கள் நடக்கும். அந்த மண்டபம் இருந்த இடிபாடுகள் ஒரு "மோரல் கொம்பாற்" மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தும். :wub::)

சிலம்பம், வாள் வீச்சு என்பன மிகவும் உன்னதமான கலைகள். மனதை குவியப்படுத்துவன.

"சிலம்பம்" கலையை பாரிசில் கடந்த ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் தான் முதன் முதலில் நேரில் பார்த்தேன். :) விசுக்கு விசுக்கென்று மேடையில் அந்தக் கலைஞர் விசுக்குவதை பார்க்க தடி எப்ப அவரின் கையை விட்டு வெளியில் வந்து விழும் என்று தோன்றியது. ஆனால் அந்தக் கலைஞர் மிக நுணுக்கமாக அழகாக அற்புதமாக சிலம்பாடினார். கம்பை சுழட்டி சுழட்டி உடலை அதற்கேற்ப அசைத்துக்கொடுத்து... அப்பப்பா :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கு. சிலம்பம்,வாள்வீச்சு என்பன எமது பாரம்பரிய கலைகள் எம்மவரிடையே அருகி வருவது கவலைக்குரியது.

தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி nunavilan

முதலில் தோன்றியது சோட்டோகான் கராட்டே தான் (ஜப்பானியர்களினுடையது).

கராத்தே

தற்காப்பு கலையை இந்தியாவிலிருந்து

போதிதர்மா எனும் பெளத்த துறவியானவரால் உலகுக்கு கொண்டு வரப்பட்டது.

கராத்தே

ஆரம்பத்தில்

ஒக்கினாவாவில் ஒகினாவடே என அறிமுகமானது.

அது ஒக்கினாவாவை குறிப்பதால்

கராத்தேயின் தந்தை என அழைக்கப்படும்

funakyoh.gif

Master Funakoshi, father of modern karate-do

ஜிஜின் பூனோகோசி அவர்கள்

அனைவருக்கும் பொதுவான ஒரு கலையாக இருக்க வேண்டி

k_symbols.gif

கராத்தே = வெற்றுக் கை எனும் பெயரை வைத்தார்.

எழுதுங்கள்.............

முடியும் போது சிலதை பகிர்ந்து கொள்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

bruce lee's enter the drgon

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.