Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5 மணி நேரங்களுக்கு முன்னர்

கேலி, கிண்டல்களை தாண்டி இன்று தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் எனும் பெயரை பெற்றுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த என். ஜென்சி.

"பல்வேறு இன்னல்கள், தடைகளை தாண்டி இன்று பிஹெச்.டி முடித்து, லயோலா கல்லூரியில் ஆங்கில துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறேன்" என்கிறார் என். ஜென்சி.

சிறுவயதிலிருந்தே நன்றாக படிக்கக்கூடிய ஜென்சி, பி.ஏ., எம்.ஏ.வில் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

"சமூகம் என்னை அடக்குமுறை செய்தபோது என்னை காப்பாற்றியது கல்விதான்." என கூறுகிறார் ஜென்சி. ஏழ்மையான நிலையிலும் கல்வியை கைவிடாததற்கு இதுவே காரணம் என்கிறார் அவர்.

ஜென்சி லயோலா கல்லூரியில் பணியாற்றுவது தங்களுக்கு பெருமை அளிப்பதாக தெரிவிக்கிறார், லயோலா கல்லூரியின் ஆங்கில துறை தலைவரும் ஜென்சியின் முனைவர் பட்ட வழிகாட்டியுமான மேரி வித்யா பொற்செல்வி.

"என்னை முதலில் பேராசிரியராக பாருங்கள், பின்னர் எந்தவித கற்பிதங்களும் இல்லாமல் திருநங்கையாக பாருங்கள்." என்கிறார் பேராசிரியர் ஜென்சி.

தயாரிப்பு: நந்தினி வெள்ளைச்சாமி

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: டேனியல்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

BBC News தமிழ்
No image preview

ஜென்சி: தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் கல்வியா...

13 hours ago, ஏராளன் said:

இந்த லொயோலா கல்லூரி ஒரு கத்தோலிக்க கல்வி நிறுவனம் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். கத்தோலிக்க திருச்சபையில், யேசு சபை (Society of Jesus) என்ற ஒரு குருக்கள் சபை இருக்கிறது. இந்த யேசு சபையினரால் நிர்வகிக்கப் படும் பல உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்று தான் லொயொலா கல்லூரி.

இந்தச் சபையில் விண்ணப்பிக்கும் எல்லோரையும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அனேகமாக ஒரு உயர் கல்வித் தகுதி இருக்க வேண்டும். அத்தோடு, ஒரு துறை சார் நிபுணராகவும் இருக்க வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யேசு சபையில் சேரும் கத்தோலிக்க குருக்கள் முற்போக்காளர்களாக இருப்பர். முன்னாள் போப் பிரான்சிஸ் யேசு சபையைச் சேர்ந்தவர், அவரது முற்போக்கான கொள்கைகளுக்கு இது ஒரு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

மதங்கள் மக்களை நலவழிப்படுத்த உருவாக்கப்பட்டவை ஆனால் அவை காலத்திற்கேற்ப தம்மை புதிப்பதில்லை, அதற்கு காரணம் கடும் கோட்பாட்டாளர்களே!

சில இயற்கை விடயங்களை ஏற்றுகொள்ளும் மனநிலை அல்லது புரிதல் இல்லாதவர்கள் அது ஒரு சமூக பிரழ்வாக மாறிவிடும் எனும் நோக்கத்தில் சில விடயங்களை இந்த மதங்கள் எதிர்க்கின்றன, ஆரம்பத்தில் கத்தோலிக்க சபை கூட அவ்வாறுதான்.

சில மதங்கள் குறிப்பாக இந்து மதத்தில் அர்தநாரீஸ்வரர் என இவ்வாறான இயற்கையினை கடவுளாக பார்க்கிறார்கள்.

இங்கு மக்கள் தமது விருப்பங்களையும், நம்பிக்கைகளையும் மற்றவர்கள் மேல் திணிப்பதுதான் தவறாக மாறிவிடுகிறது.

எமது புரிதல் தவறானது என்பதனை புரிந்து கொள்ள மதங்கள் தேவை இல்லை, அதற்கான தைரியம் இருந்தாலே போதுமானது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vasee said:

உண்மை மதங்கள் அவசியமில்லை. சரி பிழை கண்டு பிடித்து அதற்கேற்ப செயல்பட வைக்கும் அறத்திசை காட்டி (moral compass) பலமாக இருந்தால் போதும் என்பது என் அபிப்பிராயம். இப்படியான அறத்திசைகாட்டியை, மத அமைப்புகளுக்குள்ளும் ஊக்குவிக்கும் முயற்சிகள் நடக்கின்றன என்பதன் ஒரு உதாரணமாகத் தான் யேசு சபைக் குருக்களைப் பற்றி எழுதினேன். சில சமயங்களில் மத அமைப்புகளின் உள்ளே இருந்து தான் விடயங்களை மாற்ற வேண்டும்.

உங்கள் அர்த்தநாரீஸ்வரர் பற்றிய கருத்தைக் கேட்டதும், சில ஆண்டுகள் முன்பு சத்குருவிடம் கேட்கப் பட்ட ஒரு கேள்வியும் அவரது பதிலும் நினைவுக்கு வருகின்றன. "ஏன் இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது?" என்ற கேள்விக்கு அவரது பதில் "உலகில் இந்தியாவில் மட்டும் தான் ஒரு சதுர மைல் பரப்பளவில் மிக அதிகமான பெண் தெய்வங்கள் வழிபடப் படுகின்றன" என்பதாக இருந்தது. அர்த்தநாரீஸ்வரரைக் கடவுள் வடிவமாகப் பார்க்கும் இந்தியாவில் இடைப்பாலினருக்கு இருக்கும் இடர்கள் இது போன்ற ஒரு நிலை தான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

மதங்கள் பெயர்கள்ர்தான் வித்தியாசம் ஆனால் அதன் உள்ளார்த்தங்கள் ஒன்றுதான்.

பாலின சுதந்திரம் என்பது ஒரு சமூக பிரச்சினை, பல அடிப்படை சமூக பிரச்சினைகளுக்கு மதங்கள்தான் காரணமாக இருக்கின்றன, அதே வேளை மதங்கள் நல்ல விடயங்களை கூறினாலும் தமது நம்பிக்கைகளுக்கும் விருப்பிற்கும் எதிராக இருந்தால் மதத்தினை வழிகாட்டியாக பயன்படுத்துவதில்லை.

இதற்கு அடிப்படை காரணமே சாதாரண மனிதர்கள் தம்மை தாமே கற்பனையான விம்பங்களில் பார்ப்பதுதான்.

சிந்திக்க தெரிந்த மனிதனுக்கு மதங்களும் தேவையில்லை, முட்டாள் சமூக கோட்பாடுகளூம் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/7/2025 at 23:47, Justin said:

உங்கள் அர்த்தநாரீஸ்வரர் பற்றிய கருத்தைக் கேட்டதும், சில ஆண்டுகள் முன்பு சத்குருவிடம் கேட்கப் பட்ட ஒரு கேள்வியும் அவரது பதிலும் நினைவுக்கு வருகின்றன. "ஏன் இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது?" என்ற கேள்விக்கு அவரது பதில் "உலகில் இந்தியாவில் மட்டும் தான் ஒரு சதுர மைல் பரப்பளவில் மிக அதிகமான பெண் தெய்வங்கள் வழிபடப் படுகின்றன" என்பதாக இருந்தது. அர்த்தநாரீஸ்வரரைக் கடவுள் வடிவமாகப் பார்க்கும் இந்தியாவில் இடைப்பாலினருக்கு இருக்கும் இடர்கள் இது போன்ற ஒரு நிலை தான்.

நான் கிறிஸ்தவ மத குருக்களிற்கு போட்டியாக அர்த்தநாரீஸ்வரர் கருத்தை கூறியதாக நீங்கள் சொல்லவில்லை எனவே கருதுகிறேன், அவ்வாறு நிங்கள் கருதினால் உங்கள் கருத்தில் கூறப்பட்ட படித்தவர்கள் முற்போக்கானவர்கள் எனும் கருத்து, அத்துடன் கத்தோலிக்க மத குருக்கள் மத சார்பான கற்கை நெறி மட்டுமல்லாமல் துறைசார் கல்வியும் கற்றவர்கள், இந்த துறைசார் கல்வி அறிவே முற்போக்கு சிந்தனைக்கு காரணம் என நீங்கள் கருதுகிறீர்கள் என நான் கருதுகிறேன், யாழ்ப்பாணத்தில் பெரும்பாலானவர்கள் துறைசார் கல்வி கற்றவர்கள் உள்ளார்கள் ஆனால் யாழ்ப்பாணத்தில்தான் மிக மோசமான பிற்போக்குவாதம் உள்ளது, படித்தவர்கள்தான் பெரும்பாலும் வரதட்சணை வாங்குபவர்களாக உள்ளார்கள் (நீங்கள் அப்படி செய்திருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்😌).

அவருக்கு கிடைத்த வேலை அவரது திறமைக்கு கிடைத்த வேலை, இவரரது கடந்த கால வாழ்க்கை மிகவும் அடக்குமுறைக்குள்ளான வாழ்கையாக இருந்துள்ளது, ஆனால் தற்போது அந்த நிலை இல்லை என்பது அவரரது கருத்தில் இருந்து தெளிவாக உணரமுடிகிறது, அதற்கு காரணம் கல்வி என அவர் கருதுகிறார்

அவரரது உண்மையான அடையாளம் அவரரது திறமை (கல்வி).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.