Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கெரி ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதை ஆதரித்து கெரி ஆனந்தசங்கரி இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு தொடர்புடைய கடிதங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

கெரி ஆனந்தசங்கரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தக் கடிதங்களைச் சமர்ப்பித்ததாகவும், தொடர்புடைய நபருக்கு விடுதலைப் புலிகளுடன் அவருக்கு நேரடித் தொடர்புகள் இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை பல சந்தர்ப்பங்களில் அவரது குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மனிதாபிமானக் கருத்தாய்வுகளையும், அவரது குடும்பம் பிரிவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாலும், செந்தூரன் செல்வகுமார் என்ற நபருக்கு நிரந்தர கனேடிய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கெரி ஆனந்தசங்கரி சம்பந்தப்பட்ட கடிதங்களில் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதால், கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதால், அவர் தனது அமைச்சர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவது சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாக கனடா பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இருப்பினும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இது தொடர்பில் குறிப்பிட்ட விபரங்களை வழங்குவது பொருத்தமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கெரி ஆனந்தசங்கரி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்து இதுபோன்ற கோரிக்கைக் கடிதங்களை ஒருபோதும் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை கனடாவில் இருக்கும் நிலையில், நபர் ஒருவரின் குடும்பம் பிரிவதைத் தடுக்கும் நோக்கில் வௌியிடப்பட்ட தனது கோரிக்கையாது அசாதாரணமானது அல்ல என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

பயங்கரவாத அமைப்புக்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டேன் என்றும், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக முடிவுகளை எடுக்க மாட்டேன் என்றும் கெரி ஆனந்தசங்கரி தொடர்புடைய அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக கனேடிய பிரதமர் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://adaderanatamil.lk/news/cmd6q258e019lqp4kloaq3nlw

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெரி ஆனந்த சங்கரி மீது நம்பிக்கை உண்டு – கனடிய பிரதமர்

July 17, 2025 11:31 am

கெரி ஆனந்த சங்கரி மீது நம்பிக்கை உண்டு – கனடிய பிரதமர்

பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆனந்தசங்கரி, தனது அமைச்சரவையில் சேருவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினராக கனடா உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான CBSA அடையாளம் காணப்பட்ட ஒருவருக்காக நிரந்தர குடியிருப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக கடிதம் எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கெரி ஆனந்த சங்கரி தொடர்பில் கனடிய அரசியல் பரப்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு முதல், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்காக ஆனந்தசங்கரி 2016 மற்றும் 2023-ல் கனடிய எல்லைப் பாதுகாப்பு சேவை முகவர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். 2023-இல் கெரி ஆனந்தசங்கரி நீதித் துறைக்கான பாராளுமன்ற செயலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த வாரம் கனடா நீதிமன்றம், அந்த நபரின் கடைசி முறையீட்டையும் நிராகரித்தது.

தேசிய பாதுகாப்பும், பொது பாதுகாப்பும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது.

2023-இல் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்குப் பிறகு, இத்தகைய கடிதங்களை எழுதுவதை நிறுத்தியுள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் வாக்காளர்களுக்காக ஆதரவு கடிதங்கள் எழுதுவது வழக்கமான செயலாகும் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரம் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதானல் வேறும் தகவல்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.

எனினும்,கனடாவில் இயங்கி வரும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அமைப்பு ஒன்றின் பிரதானி ஷெரில் சபேரியா, இதை ஒரு முக்கிய தவறான முடிவாகக் குறிப்பிடுகிறார்.

ஒரு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் என எல்லைப் பாதுகாப்புச் சேவை முகவர் நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு ஆதரவு வழங்குவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல எனவும். இது நாடு முழுக்க பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை சீர்குலைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் எதிர்க்கட்சிகளும், இந்த விவகாரத்தில் ஆனந்தசங்கரி பதவியில் தொடரக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

இது போல் கடிதம் எழுதியவர்கள், பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கவே கூடாது என எதிர்க்கட்சி செனட் தலைவர் லியோ ஹூசாகோஸ் சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

https://oruvan.com/canadian-prime-minister-has-confidence-in-kerry-ananda-shankar/

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

கெரி ஆனந்த சங்கரி மீது நம்பிக்கை உண்டு – கனடிய பிரதமர்

July 17, 2025 11:31 am

கெரி ஆனந்த சங்கரி மீது நம்பிக்கை உண்டு – கனடிய பிரதமர்

பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆனந்தசங்கரி, தனது அமைச்சரவையில் சேருவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினராக கனடா உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான CBSA அடையாளம் காணப்பட்ட ஒருவருக்காக நிரந்தர குடியிருப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக கடிதம் எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கெரி ஆனந்த சங்கரி தொடர்பில் கனடிய அரசியல் பரப்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு முதல், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்காக ஆனந்தசங்கரி 2016 மற்றும் 2023-ல் கனடிய எல்லைப் பாதுகாப்பு சேவை முகவர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். 2023-இல் கெரி ஆனந்தசங்கரி நீதித் துறைக்கான பாராளுமன்ற செயலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த வாரம் கனடா நீதிமன்றம், அந்த நபரின் கடைசி முறையீட்டையும் நிராகரித்தது.

தேசிய பாதுகாப்பும், பொது பாதுகாப்பும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது.

2023-இல் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்குப் பிறகு, இத்தகைய கடிதங்களை எழுதுவதை நிறுத்தியுள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் வாக்காளர்களுக்காக ஆதரவு கடிதங்கள் எழுதுவது வழக்கமான செயலாகும் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரம் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதானல் வேறும் தகவல்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.

எனினும்,கனடாவில் இயங்கி வரும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அமைப்பு ஒன்றின் பிரதானி ஷெரில் சபேரியா, இதை ஒரு முக்கிய தவறான முடிவாகக் குறிப்பிடுகிறார்.

ஒரு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் என எல்லைப் பாதுகாப்புச் சேவை முகவர் நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு ஆதரவு வழங்குவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல எனவும். இது நாடு முழுக்க பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை சீர்குலைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் எதிர்க்கட்சிகளும், இந்த விவகாரத்தில் ஆனந்தசங்கரி பதவியில் தொடரக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

இது போல் கடிதம் எழுதியவர்கள், பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கவே கூடாது என எதிர்க்கட்சி செனட் தலைவர் லியோ ஹூசாகோஸ் சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

https://oruvan.com/canadian-prime-minister-has-confidence-in-kerry-ananda-shankar/

ஹரி ஆனந்தசங்கரி ஒருவருக்கு உதவி செய்யப் போய், சிக்கலில் மாட்டிக் கொண்டது தூரதிஷ்டவசமானது. என்றாலும்… கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் நம்ப்பிக்கை ஆறுதலான விடயம். 🙂

இப்படியான உயர் பதவிகளில் இருக்கும் தமிழர்களை குறி வைத்து சிங்கள அரசே பின்னுக்கு இருந்து காய் நகர்த்திக் கொண்டிருக்கும் என்பது ஊரறிந்த இரகசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

Gary இதைவிடாது போராட வேண்டும்.

தனது வாக்காளர் ஒருவருக்கு பா ஊ இப்படியான கடிதங்கள் வழங்குவது மிக சாதராணவிடயம்.

அல்லாமல் இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. பாஉ வாக செயல்படும் போது அது சட்டமீறல் இல்லை எனில் இப்போதும் இல்லைத்தான்.

இது இலங்கையின் சதி.


3 hours ago, தமிழ் சிறி said:

கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் நம்ப்பிக்கை ஆறுதலான விடயம்

ஆங்கிலேய வழி வந்த நாடுகளில் the PM has full confidence என சொல்லிய பலர், அநேகமாக சில வாரங்களுக்குள் வீட்டுக்கு போவதே அதிகம்.

இவருக்கு இப்படி நிகழாது இருக்க வேண்டும்.

ஊரில் உள்ள தமிழ் எம்பிகள் கூட்டாக ஒரு ஆதரவு கடிதத்தை கனேடியன் ஹைகொமிசனரிடம் கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

Gary இதைவிடாது போராட வேண்டும்.

தனது வாக்காளர் ஒருவருக்கு பா ஊ இப்படியான கடிதங்கள் வழங்குவது மிக சாதராணவிடயம்.

அல்லாமல் இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. பாஉ வாக செயல்படும் போது அது சட்டமீறல் இல்லை எனில் இப்போதும் இல்லைத்தான்.

இது இலங்கையின் சதி.


ஆங்கிலேய வழி வந்த நாடுகளில் the PM has full confidence என சொல்லிய பலர், அநேகமாக சில வாரங்களுக்குள் வீட்டுக்கு போவதே அதிகம்.

இவருக்கு இப்படி நிகழாது இருக்க வேண்டும்.

ஊரில் உள்ள தமிழ் எம்பிகள் கூட்டாக ஒரு ஆதரவு கடிதத்தை கனேடியன் ஹைகொமிசனரிடம் கொடுக்கலாம்.

//தனது வாக்காளர் ஒருவருக்கு பா.உ. இப்படியான கடிதங்கள் வழங்குவது மிக சாதராணவிடயம்.

அல்லாமல் இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. பாஉ வாக செயல்படும் போது அது சட்டமீறல் இல்லை எனில் இப்போதும் இல்லைத்தான்.//

முன்னணி வக்கீலுக்கு உரிய தரமானதும், அசைக்க முடியாததுமான கருத்து. ✔️

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

முன்னணி வக்கீலுக்கு உரிய தரமானதும், அசைக்க முடியாததுமான கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-218.jpg?resize=750%2C375&ssl

இலங்கையரின் குடியேற்ற சர்ச்சை; பொது பாதுகாப்பு அமைச்சர் மீது நம்பிக்கையுள்ளதாக கனேடிய பிரதமர் தெரிவிப்பு!

கனடாவில் தற்சமயம் சர்ச்சைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree)க்கான ஆதரவினை அந் நாட்டுப் பிரதமர் மார்க் கார்னி வெளிப்படையாக கூறியுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, அமைச்சராக வருவதற்கு முன்பு, கனடாவிற்குள் நுழைவதற்கு கூட்டாட்சி அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை அவர் ஆதரித்தார் என்ற அறிக்கை வெளியானதும் சர்ச்சைகள் எழுந்தது.

இந் நிலையிலேயே பிரதமர் மார்க் கார்னி, கேரி ஆனந்தசங்கரி மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நீதி அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளராக ஆனந்தசங்கரி இருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த செந்தூரன் செல்வகுமாரனை நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்ற முடிவை இரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை ஆதரித்து கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார்.

கனேடிய குடிவரவு அதிகாரிகள் செல்வகுமாரன், தமிழ்ப் புலிகள் என்று அழைக்கப்படும் தீவிரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்று தீர்மானித்த பின்னர் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செவ்வாயன்று (15) குளோபல் நியூஸ் செய்தி வெளியிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கையில் நீண்ட காலமாக சுதந்திரப் போரை நடத்தினர்.

மேலும் 2006 முதல் கனடாவின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளனர்.

கனடா எல்லை சேவைகள் நிறுவனம் செல்வகுமாரனை அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்ததன் அடிப்படையில் குடியேறியவராக நிராகரித்திருந்தாலும், ஆனந்தசங்கரி அவர்களின் முடிவை மாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், டொராண்டோவிற்கு குடிபெயர்வதற்கான அந்த நபரின் முயற்சியை ஆதரித்து ஆனந்தசங்கரி கனடா எல்லை சேவைகள் நிறுவனத்துக்கு கடிதங்களை எழுதினார்.

அதில் மிகவும் அண்மைய கடிதம் நீதித்துறை நாடாளுமன்ற செயலாளராக கேரி ஆனந்தசங்கரி இருந்தபோது எழுதப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில், இது குறித்து புதன்கிழமை (16) எஃகுத் தொழிலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தனது திட்டங்களை வெளியிட்டதன் பின்னர் உரையாற்றிய கனடப் பிரதமர் கார்னி, “பொது பாதுகாப்பு அமைச்சர் அந்த சூழ்நிலையின் விவரங்கள் குறித்து வெளிப்படையாக இருந்தார், மேலும் அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது,” என்று கூறினார்.

கடந்த மே 13 அன்று கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக ஆனந்தசங்கரியை கார்னி நியமித்திருந்தார்.

வெள்ளை மாளிகை வர்த்தகப் போரைத் தவிர்க்க, போதைப்பொருள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தலுக்கு எதிராக கனடா தனது எல்லையை பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நம்ப வைக்கும் பொறுப்பு ஆனந்தசங்கரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த மாதம் உலகத் தமிழ் இயக்கம் தொடர்பான முடிவுகளில் இருந்து ஆனந்தசங்கரி தன்னை விலக்கிக் கொண்டபோது அவர் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1439541

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

கோசான்... நான், பகிடிக்கு சொல்ல வில்லை.

நீங்கள் வக்கீல் சம்பந்தமாக படித்திருக்கின்றீர்கள் எனது நீண்ட நாள் சந்தேகம்.

நீங்கள் சொல்லாட்டிலும்... குடுமி காட்டிக் கொடுத்து விடும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

கோவிந்தா! கோவிந்தா!😀

  • கருத்துக்கள உறவுகள்

கரி ஆனந்தசங்கரி அவர்கட்கு திரிசங்கு நிலைதான் போல. இவை எல்லாம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட விடயங்களே. ஆனால், கள நிலவரங்களை பார்த்தால் அவரை அசைக்கமுடியாது போல் உள்ளது. ஆட்டிப்பார்க்க மட்டுமே முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளருக்கு ஆதரவாக ஹரி ஆனந்தசங்கரி எழுதிய கடிதத்தினால் சர்ச்சை - பிரதமர் ஆதரவு

Published By: RAJEEBAN

17 JUL, 2025 | 01:19 PM

image

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளருக்கு ஒருவருக்கு புகலிடக்கோரிக்கை விடயத்தில் ஆதரவாக கடிதம் எழுதினார் என கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக  ஊடகமொன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அதேவேளை பிரதமர் மார்க் கார்னி ஹரி ஆனந்தசங்கரிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள்  உறுப்பினர் என கனடா அதிகாரிகள் கருதிய நபர் ஒருவருக்கு கனடா பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் என கோரும் கடிதத்தை ஹரி ஆனந்தசங்கரி எழுதினார் என குளோபல் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹரி ஆனந்தசங்கரி அமைச்சராவதற்கு முன்னர் கனடாவின் எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பிற்கு அனுப்பப்பட்ட இந்த கடிதத்தில் இலங்கையை சேர்ந்த செல்வக்குமரன் செந்தூரன் என்ற நபரின் பிரஜாவுரிமை விண்ணபத்தினை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் என  குளோபல் நியுஸ் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன்  செல்வக்குமாரன் செந்தூரனிற்கு "நீண்டகால ஈடுபாடு" இருந்ததாகக் கூறி 2005 முதல் நிரந்தர வதிவிடத்திற்கான அவரது விண்ணப்பத்தை  கனடாவின் எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு நிராகரித்து வந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் ஆனந்தசங்கரி செல்வகுமாரனை தனது கனேடிய மனைவி மற்றும் மகளுடன் மீண்டும் இணைக்க  மறுத்ததை "கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது" என்று ஆனந்தசங்கரி தெரிவித்தார் அரச-சுதேச உறவுகள் அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. அவர் மே 2025 இல் பொதுப் பாதுகாப்பு அமைச்சரானார்.என குளோபல் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது முந்தைய தலையீடு கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். கனடாவின் எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு முன்னாள்  ஆய்வாளர் பில் குர்ஸ்கி இதை "ஒரு மிகப்பெரிய தவறு" என்று கூறி அவர் இராஜினாமாசெய்ய வேண்டும் என்று கோரினார். பயங்கரவாத தொடர்புகள் தொடர்பான வழக்குகளில் எம்.பி.க்கள் தலையிடக்கூடாது என்று வழக்கறிஞர் குழுவான செக்யூர் கனடா தெரிவித்துள்ளது என குளோபல் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும் பிரதமர் மார்க் கார்னி அமைச்சரைப் பாதுகாத்து ஆனந்தசங்கரி "வெளிப்படையாக நடந்து கொண்டார்" என்றும் தனது நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார்

ஹரி ஆனந்தசங்கரி  ஸ்கார்பரோ-கில்ட்வுட்-ரூஜ் பார்க்கில் உள்ள தனது அலுவலகம் "ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான குடியேற்ற விவகாரங்களைக் கையாளுகிறது 2015 இல் நான் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 9000 க்கும் மேற்பட்டவை" என தெரிவித்துள்ளார்

நாட்டின் மிகப்பெரிய நகரத்தில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு கொண்ட சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவதன் இயல்பு இதுதான். ஒரு தொகுதி ஒரு கனேடிய குடிமகன் ஒரு கனேடிய குழந்தையுடன் கனடாவில் தனது குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்க விரும்புவது அசாதாரணமானது அல்ல" . "அமைச்சர் மறுஆய்வு வழக்குகள் உட்பட அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் தொகுதி மக்களுக்கு ஆதரவு கடிதங்களை ஒரு வழக்கமான விஷயமாக வழங்குகிறார்கள்."என ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்

திரு. செல்வகுமாரனின் சட்டக் குழுவில் உறுப்பினராக உள்ள டொராண்டோ குடிவரவு வழக்கறிஞர் லோர்ன் வால்ட்மேன் குடியேற்ற வழக்குகள் தொடர்பாக "ஏராளமான எம்.பி.க்கள்" தங்கள் தொகுதியினரின் சார்பாக கடிதங்கள் எழுதுகிறார்கள் என்றும். ஹரி ஆனந்தசங்கரி அவ்வாறு செய்வதில் "அசாதாரணமானது எதுவும் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார்.

"மாறாக அவர் செய்தது மிகவும் கடினமான சூழ்நிலையில் தன்னை உணர்ந்த ஒரு தொகுதியினருக்கு உதவ முயற்சிப்பதாகும்" என்று திரு. வால்ட்மேன் தெரிவித்துள்ளார்

ஒரு தமிழ் கனடியனாக எனது சமூகத்தில் பல தசாப்தங்களாக தீவிரமாக செயல்பட்டு வருவதால் கனடா மீதான எனது விசுவாசத்தை கேள்விக்குள்ளாக்கும் மறைமுகமான மற்றும் கிசுகிசுப்பு பிரச்சாரங்களை நான் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ளேன். அவை அவதூறானவை மற்றும் தவறானவை. நான் ஒரு பெருமைமிக்க கனடியன் எனது தமிழ் பாரம்பரியத்தைப் பற்றி பெருமைப்படுகிறேன். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் நான் கண்டிக்கிறேன்" என்று ஹரி ஆனந்தசங்கரி.  ஒரு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

"நான் பொது பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டபோது இந்தக் குற்றச்சாட்டுகளைச் சமாளிப்பதற்கான ஒரு வழி பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் உலக தமிழர் அமைப்பு சேர்க்கப்பட்டமை குறித்த விடயங்களில் இருந்து விலகியிருப்பதே  என தீர்மானித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சராக பதவியேற்ற பின்னர் குடியேற்றவிவகாரங்களில் தலையீட்டை செலுத்தும் விதத்தில் எந்த கடிதத்தையும் அனுப்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"ஜூலை 2023 இல் நான் அமைச்சராக நியமிக்கப்பட்டபோது எனது தொகுதி ஊழியர்களுக்கு இனி அத்தகைய கடிதங்களை வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு கேள்விக்குறியதாக காணப்படும் கடிதம் நான் அமைச்சரவையில் சேர்வதற்கு முன்னர் அனுப்பியது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/220216

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபுறம் செம்மணி புதைகுழி, மறுபுறம் புலம்பெயர்ந்தோரின் எழுச்சி, தன்னை விரட்டுகிறது என்பது சிங்களத்தின் கவலை, பயம். எத்தனை நாடுகளை சீரழித்து, அடிமைப்படுத்தி தம்மை வளப்படுத்திக்கொண்ட நாடுகள் இன்று மனிதாபிமானிகள். ஆனால் அடிமை, அடக்குமுறைக்கு எதிராக போராடியவர்கள் வழியில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, தாங்களும் செய்த கொடூரங்களை மறைக்க இப்படி கூச்சல் போடுவது வழமை. இலங்கை அரசாங்கம் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஐ .நா .அமர்வுகளில் போது பல நிறுவனங்களுக்கு மக்களின் பணத்தை வாரியிறைத்து அறிக்கைகள் தாயாரித்தது. அதற்கு யாரும் சாதாரணப்பட்டவர்கள் உடன்படுவது இல்லை. சமூக ஊடகங்கள், மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள், சட்ட விடயத்தை கையாண்டவர்கள், சட்டத்தரணிகள் போன்ற விடயம் தெரிந்தவர்களே. இலங்கை அரசுக்காக இவ்வாறான அறிக்கைகளை தயாரித்து அவர்களை காப்பாற்றி பாராட்டும் பெற வைத்திருக்கிறார்கள். அவர்களே இலங்கை அரசு செய்த அடூழியங்களை நிஞாயப்படுத்துகிறார்கள், கண்டும் காணாததுபோல் இருந்தார்கள், இதற்கு அவர்களுக்கு ஊதியமுமுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனை அக்கினிச்சூளையை தாண்டி வந்தது நம் இனம்!

On 17/7/2025 at 21:16, தமிழ் சிறி said:

நீங்கள் வக்கீல் சம்பந்தமாக படித்திருக்கின்றீர்கள் எனது நீண்ட நாள் சந்தேகம்.

கம்பன் வீட்டுக்கைத்தறியும் கவி பாடுமாம். ஆனால் இங்கு ஒரு இனவழிப்பை சந்தித்த இனத்தின் பிரதிநிதி, ஜானாதிபதி சட்டத்தரணி, அதை நிறுவுவதற்கு ஆதாரம் போதாதாம். அந்த இனத்தின் புதைகுழி என்று அடையாளம் கண்ட பின்னும் முன் கொண்டு சென்று நிஞாயம் தேட திறமையற்ற, நடக்கின்ற அனிஞாயங்களை தட்டிக்கேட்க, சுட்டிக்காட்ட திராணியற்ற, தனது சக உறுப்பினர்களை அதட்டவும் பயமுறுத்தவும் மட்டுமே பயன்படும் வக்கீல். எது நடக்கிறதோ இல்லையோ, அவர் எங்கு போனாலும் அணியும் கோட் சூட் ஆதாரம் அவர் ஒரு திறமையான சட்டத்தரணி என்று காட்டுவதற்கு. அரசியல்வாதியின் எடுபிடி, அரசியல்வாதி போல பேசுவதில்லையா? ஜனாதிபதியின் ஏவல், தன்னால் எதுவும் செய்ய முடியும் என பந்தா காட்ட முடியுமென்றால், ஓடி ஓடி வக்கீலை காக்க வக்காலத்து வாங்கும் கோசானுக்கு சட்டம் தெரிவதில் என்ன சிக்கல்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.