Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டையில் பதற்றம் : இரு குழுக்களிடையே மோதல்; பொலிஸார் துப்பாக்கிச் சூடு

Published By: VISHNU

20 JUL, 2025 | 09:21 PM

image

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் . பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வன்முறையை கட்டுப்படுத்தியுடன் , வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளனர். 

குறித்த வன்முறை சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதுடன் , மேலுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டு , சேதமாக்கப்பட்டுள்ளது 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

மூளாய் பகுதியில் இரு தனி நபர்களுக்கு இடையில் சனிக்கிழமை (19) தினம் ஏற்பட்ட தர்க்கம் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் வரையில் சென்று, தீர்த்து வைக்கப்பட்டது. 

அந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) இரு நபர்களின் பிரச்சனை மீண்டும் தலை தூக்கிய நிலையில், அது அப்பகுதியை சேர்ந்தவர்களின் பிரச்சனையாக உரு மாறி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். 

அதன் போது மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டதுடன், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது. 

சம்பவம் தொடர்பில் அறிந்து வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த வேளை பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 

அதனை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அப்பகுதியில் குழுமி இருந்தவர்களை துரத்தினர். 

அத்துடன் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

குறித்த சம்பத்தில் இடம்பெற்ற குழு மோதலைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்னர்.

குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

0__1_.png

0__2_.png

0__3_.png

0__4_.png

0__5_.png

20250720_191218.jpg

20250720_191243.jpg

20250720_191206.jpg

https://www.virakesari.lk/article/220495

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் முன்னேற வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

மேலும் முன்னேற வாழ்த்துகள்

அந்த இடத்தில் ஒரு ஆமி காம்ப் திறக்கவேண்டும்..🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

அந்த இடத்தில் ஒரு ஆமி காம்ப் திறக்கவேண்டும்..🤣

சரியாய் சொன்னேள், போங்கோன்னா ,,

தெற்கிலிதுவரை அறுபது துப்பாக்கி சூட்டு சம்பவங்களும்

பதினாலு புள்ளி மூணு ஐந்து குழு மோதல்களும் நடந்திடுச்சு .

ரவுண்டு டவுன் பண்ணி எழுபத்துனாலே நாலு பிராண்ட் புச்சு ஆர்மி காம்பு பூட்டுப்புடலாமா ..

எப்பிடி வசதி ..

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நந்தன் said:

மேலும் முன்னேற வாழ்த்துகள்

அடுத்தது கொலை தானே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூளாயில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு!

Published By: DIGITAL DESK 2

21 JUL, 2025 | 06:43 PM

image

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர், அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் பாதுகாப்பு தற்போது தீவிரமாக நடைமுறையில் வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல்களின்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட இரண்டு தனி நபர்களுக்கிடையிலான சிக்கல், ஞாயிற்றுக்கிழமை (20) இரு குழுக்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது.

இந்த மோதலின்போது, ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் மற்றொரு மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும், சிலர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது, பதற்ற நிலையை கட்டுப்படுத்தும் பொருட்டு, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில், நேற்றிலிருந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அங்கு பொலிஸ் கண்காணிப்பு தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20250721_123543.jpg20250721_123536.jpg

https://www.virakesari.lk/article/220572

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமா? - போராட்டத்தில் குதித்த மக்கள்!

22 JUL, 2025 | 03:36 PM

image

வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடியான செயற்பாடுகளுக்கும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி கோரி, இன்றைய தினம்  (22) மூளாய் பகுதி மக்கள் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில்,

மூளாயில் உள்ள மதுபான நிலையம் ஒன்றுக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவமே கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது. 

20250722_122949.jpg

மதுபான நிலையத்தில் வைத்து எமது பகுதியைச் சேர்ந்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது எமது பகுதியைச் சேர்ந்த இன்னொருவர் எழுந்து ஏன் அவரை தாக்குகின்றீர்கள் என கேட்டபோது அவரையும் தாக்கி படுகாயம் ஏற்படுத்தினர். இதனால் தாக்குதலுக்கு உள்ளானவரின் மகன்கள் இருவர் மதுபான நிலையத்துக்கு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டனர்.

பின்னர் காயமடைந்த எமது பகுதியைச் சேர்ந்த இருவரும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வந்தபோது பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றபோது பொலிஸார் முறைப்பாடு பதிவு செய்யவில்லை. ஆனால், தாக்குதல் நடாத்திய ஒருவரை கைது செய்து வைத்திருந்தனர். தாக்குதல் நடாத்திய மற்றவர்களையும் அழைத்து, எமது தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்யுமாறு நாங்கள் கோரினோம். ஆனால் பொலிஸ் அதனை செய்யவில்லை. எங்களை பொலிஸ் நிலையத்தில் இருந்து விரட்டியடித்தனர்.

20250722_112945.jpg

பின்னர் எமது பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலை முடிந்து வரும்போது மற்றைய குழுவினர் பிடித்துச் சென்று அவர் மீது கொடூர தாக்குதல் நடாத்தினர். பின்னர் நாங்கள் சம்பவம் அறிந்து சென்றபோது அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றவேளை ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளானதால் அவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தார்.

அவரை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு கோரியவேளை பொலிஸார் தகாத வார்த்தையால் எம்மை திட்டி, எம்மையும் இப்படித்தான் தாங்கள் தாக்கிவிட்டு உள்ளே தூக்கிப் போடுவோம் எனக் கூறினர். பின்னர் நாங்கள்தான் நோயாளர் காவு வண்டியை அழைத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். பொலிஸார் மயங்கிய நபரை வைத்தியசாலைக்கு கூட கொண்டு செல்ல முன்வரவில்லை.

இதற்கு பின்னர்தான் ஞாயிற்றுக்கிழமை கலவரம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு குழுவாக இணைந்து எமது ஊருக்குள் தாக்குதல் நடாத்துவதற்கு வரும்போதே எமது ஊர் மக்கள் இணைந்து அவர்களை விரட்டியடித்துவிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.

20250722_112434.jpg

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி வந்த பின்னர் பொலிஸ் காவலில் வைத்து ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். பொன்னாலை பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றில் மாணவர் ஒருவர் தனது உழைப்பில் தனது வீட்டில் குழாய் கிணறு அமைக்கும்போது அங்கு சென்ற பொலிஸார் அது தவறான விடயம் என கூறி இலஞ்சம் பெற்றுச் சென்றனர். 

பொன்னாலை பகுதியில் இருந்து சந்தேக நபர் ஒருவரை கிராம சேவகர், பிரதேச செயலர் ஆகியோர் பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் அவர் சில தினங்களுக்கு பின்னர் பொன்னாலையில் புதர் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே, இந்த பொறுப்பதிகாரி எமக்குத் தேவையில்லை. ஒரு திறமையான பொறுப்பதிகாரியை எமது பொலிஸ் நிலையத்திற்கு வழங்குங்கள். இந்த பொலிஸ் பொறுப்பதிகாரியால் எமது மக்களுக்கு சீரான சேவையை வழங்க முடியாது என்றனர்.

மக்களையும் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரையும், உதவி பொலிஸ் அத்தியட்சகரையும், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும், அழைத்த யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கடுமையாக எச்சரித்து, உடனடியாக சந்தேக நபர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/220637

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூளாய் கலவரம் தொடர்பில் மேலும் மூவர் கைது!

Published By: VISHNU

24 JUL, 2025 | 02:22 AM

image

மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மேலும் மூவர் புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டனர்.

புதன்கிழமை (23) மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வட்டுக்கோட்டை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை அழைத்து விரைந்து கைது நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

அந்தவகையில் மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த இருவரும், சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் என மூவர், நேற்றிரவு தொடக்கம் புதன்கிழமை (23) அதிகாலை வரையிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டனர்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். மேலும், மூளாய் பகுதியில் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலவரத்தை அடக்குவதற்கு பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/220772

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.