Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Chemmani_Kumanan.jpeg?resize=750%2C375&s

செம்மணி செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீள ஆரம்பமாகியுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.

அப் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மே மாதம் 17ஆம் திகதி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.பின்னர் ஜூன் மாதம் 2 ஆம் திகதி திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகி ஜூன் மாதம் 7ஆம் திகதியோடு முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்தன.

மொத்தமாக 9 நாட்கள் இடம்பெற்ற செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணியில் 19 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை 45 நாட்கள் மேற்கொள்வது எனவும், 15 நாட்களுக்கு ஒருமுறை சிறிய இடைநிறுத்தல்களுடன் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது எனவும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட முதல் 15 நாட்களுக்கான அகழ்வுப் பணிகள் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை என 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.

முதலாம் கட்ட அகழ்வு மற்றும் இரண்டாம் கட்டத்தின் முதல் 15 நாள்கள் இடம்பெற்ற அகழ்வு என மொத்தமாக 24 நாட்கள் இடம்பெற்ற செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இருந்து இதுவரை 65 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், பாடசாலை புத்தகப்பை, சிறுமிகளின் ஆடைகள், பாதணிகள், காற்சங்கிலிகள், சிறிய பிளாஸ்டிக் வளையல்கள், பிளாஸ்டிக் பூமாலை உட்பட பல்வேறு சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று காலை மீள ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1439979

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14bd21ae-e8ee-46e3-92d3-6ffd61d621da.jpg

செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 7 மனித எச்சங்கள் அடையாளம்!

இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றைய தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன.

அந்தவகையில் இன்றைய தினம் மேலும் 07 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

14bd21ae-e8ee-46e3-92d3-6ffd61d621da.jpg

096291fa-90ee-41ae-ba24-c89c44befc71.jpg

a1683add-67e3-479d-be52-a6e26847aa8c-1.j

a98adffb-8b7d-4b6b-9393-d98feddc7fea.jpg

https://athavannews.com/2025/1440043

  • கருத்துக்கள உறவுகள்

இனி பொலிசு பொறுப்பில்லையாம்...சி.ஐ.டிதான் பொறுப்பாம்..இனி சுடலையிலும் தகிடுதத்தம் ..தொடரும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

518387411_1164618489036455_2665191455288

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

dfe44125-0978-422e-a1c5-99164c315cf9.jpg

செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 8 மனித எச்சங்கள் அடையாளம்!

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள்  நேற்றைய  தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன.

அந்தவகையில் நேற்யை தினம் 7 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்  இன்றைய தினம் மேலும் 8 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 80 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

7f7713ff-e265-493d-ae39-6a478d99083c.jpg

9f57db20-b7a5-4a6b-8e43-c6d8a9b86cbb.jpg

25defa9f-a6bd-40cb-bdd3-80d0843ce9dc.jpg

89e3f419-7d7c-4b5d-9368-30281be9aa75.jpg

2725696a-e16f-4e18-b97b-28b61c64479f.jpg

14993886-325b-4fde-9074-28955d77246f.jpg

b4512eb6-95bb-453a-9b5c-5094e1c06b14.jpg

c9cff4a6-b685-47bf-be90-b9ba5e276eb0.jpg

dcd2e834-cb18-43ba-875b-3824940e4808.jpg

ed69ad2a-0b82-4174-bd53-e0161d286c44.jpg

ef278321-dad7-4948-acde-20c1fe34105b.jpg

efdabd7c-de18-432a-8c0b-1935636f1eae.jpg

f09a0b2c-7828-4856-b5b6-df2cae6586ed.jpg

https://athavannews.com/2025/1440171

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

518373086_1160200506143322_7634285515315

செம்மணி புதைகுழியில் இன்று.. குழந்தையின் பால் போச்சி, 08 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , குழந்தைகள் பால் அருந்தும் போத்தல், ஆடைகளை ஒத்த துணிகள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணம்.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

download-9.jpg?resize=750%2C375&ssl=1

செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 5 மனித எச்சங்கள் அடையாளம்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை  05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் 20 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும்  “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 18ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 27 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் போது, இன்றைய தினத்துடன் 67 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களிலும் 20 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

download-1-1.jpg?resize=600%2C337&ssl=1

download-2-2.jpg?resize=600%2C337&ssl=1

download-3-1.jpg?resize=600%2C337&ssl=1

download-4-1.jpg?resize=600%2C337&ssl=1

download-5-1.jpg?resize=600%2C337&ssl=1

download-6-1.jpg?resize=600%2C337&ssl=1

download-7-1.jpg?resize=600%2C337&ssl=1

download-8-1.jpg?resize=600%2C337&ssl=1

https://athavannews.com/2025/1440356

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

download-9.jpg?resize=750%2C375&ssl=1

செம்மணி மனித புதைகுழி: 9 மனித எலும்புக்கூடுகள்  மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 09 மனித என்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 3 மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றுடன் மொத்தமாக 94 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 19ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 28 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் ஆனந்தராசா வின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணி தொல்லியல் பேராசிரியார் ராஜ்சோம தேவா சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இன்று செம்மணி புதை குழியில் இருந்து மேலும் 09 மனித என்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 03 மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்றையதினம் வரையில் 85 மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் மொத்தமாக 94 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

https://athavannews.com/2025/1440526

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

semmani-2.jpg?resize=750%2C375&ssl=1

செம்மணி மனித புதைகுழி: இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று  5 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்  மேலும்  2 மனித எலும்புக் கூடுகள்  இன்று அடையாளங் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை மொத்தமாக 90  மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையாக 81 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

semmani-2-1.jpg?resize=600%2C325&ssl=1

https://athavannews.com/2025/1440675

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2025-07-28-at-17.41.31.jp

யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 23 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 08 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் (28) 31 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 01 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 96 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 104 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த 2 நாட்களில் 08 சான்று பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையான கால பகுதியில் 54 சான்று பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp-Image-2025-07-28-at-17.41.32.jp

WhatsApp-Image-2025-07-28-at-17.41.33.jp

WhatsApp-Image-2025-07-28-at-17.41.36.jp

WhatsApp-Image-2025-07-28-at-17.41.38.jp

WhatsApp-Image-2025-07-28-at-17.41.39.jp

WhatsApp-Image-2025-07-28-at-17.41.44.jp

WhatsApp-Image-2025-07-28-at-17.41.48.jp

https://athavannews.com/2025/1440973

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

524903625_1170979191733718_1683988324642

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2025-07-28-at-17.41.48.jp

யாழ்.செம்மணியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (29) புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 09 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 34 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 24 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 09 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 34 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 33 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 03 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 99 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1441104

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

semmaniii.jpg?resize=750%2C375&ssl=1

குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம்!

செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1441266

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG_6534-scaled.jpeg?resize=750%2C375&ss

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம்(02) மேலும் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 126 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக இதுவரையில் 117 மனித எலும்புக்கூட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 28 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் கடந்த 13 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 52 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1441565

Edited by தமிழ் சிறி

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு; இதுவரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

06 Sep, 2025 | 02:48 PM

image

சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45வது நாளாக இன்று சனிக்கிழமை (06) யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

bbcb2e48-ae20-4acf-bebe-b995e8583e27.jpg

154cfc32-a172-4222-b545-9238f99d0d3f.jpg

https://www.virakesari.lk/article/224371

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.