Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரைக் காக்க மாபெரும் மக்கள் போராட்டம் - வலுச்சேர்த்த தமிழ் தேசியப் பேரவை

பதிவேற்றுனர்: அன்பரசி

திகதி: 11 Aug, 2025

breaking

மன்னார் நகரத்தின் சுற்றுச் சூழலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காற்றாலைத் திட்டம் மற்றும் மன்னார் தீவையே முற்றாக அழிக்கக்கூடிய கனியமண் அகழ்வுத் திட்டம் ஆகியவற்றை உடனடியாகக் கைவிடக்கோரி, இன்று மன்னாரில் மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

போராட்டத்திற்கான அவசியம் என்ன?

மன்னார் பகுதியில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலைத் திட்டமானது, அப்பகுதியின் சூழலியல் சமநிலையை முற்றாகப் பாதிக்கும் வகையிலும், அங்குள்ள மக்களின் மீன்பிடி மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரங்களை அழிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அதேபோல, மன்னார் தீவில் முன்னெடுக்கப்படவுள்ள கனியமண் அகழ்வானது, ஒரு வளமான நிலப்பரப்பை முற்றிலுமாக அழித்து, எதிர்காலத்தில் மன்னார் தீவு என்ற ஒன்றே இல்லாத நிலையை உருவாக்கும் ஒரு பாரிய அழிவுத் திட்டம் என அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த அழிவுத் திட்டங்களுக்கு எதிராகவே மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கிப் போராடி வருவதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

வலுச்சேர்த்த தமிழ் தேசியப் பேரவை

மக்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கும் வகையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியப் பேரவையின் தலைவர்கள் நேரடியாகக் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இந்தப் போராட்டத்தில், தமிழ் தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மன்னார் மாவட்ட அமைப்பாளர் துரைராஜா ஜோன்சன் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, மக்களின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்தனர்.

தமது அரசியல் நோக்கங்களுக்கு அப்பால், மக்களின் வாழ்வுரிமையையும், மண்ணின் வளத்தையும் பாதுகாப்பதே தமது முதன்மையான கடமை எனத் தெரிவித்த அரசியல் தலைவர்கள், இந்த அழிவுத் திட்டங்களை அரசு கைவிடும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் சூளுரைத்தனர்.

FhXycBCtkD86TywpHYMy.jpg

OSpU3vKE4HSRN9F0qE6Y.jpg

8xtGkwwbhJZ5M62qtF6V.jpg

oaKhK194716OpdtsCPKB.jpg

G4nHNNNmMzA0hn0UhXBD.jpg

mpWYPLa66lmTFXd6SO9g.jpg




A4wRPEWGJxLESayPdp90.jpg

No image preview

மன்னாரைக் காக்க மாபெரும் மக்கள் போராட்டம் - வலுச்சேர்த்த...

மன்னார் நகரத்தின் சுற்றுச் சூழலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காற்றாலைத் திட்டம் மற்றும் மன்னார் தீவையே முற்றாக அழிக்கக்கூடிய கனியமண் அகழ்வுத் திட


  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள் - வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம்.

1 Aug, 2025 | 02:37 PM

image

மன்னாரில் முன்னெடுக்கவுள்ள காற்றாலைத் திட்டத்தை நிறுத்தக்கோரியும், இல்மனைற் அகழ்விற்கு எதிராகவும் மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

வவுனியா  வைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு அண்மையில் திங்கட்கிழமை (11) குறித்த போராட்டம் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காறர்கள்,

அபிவிருத்தியின் பெயரால் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டங்களை நிறுத்தவேண்டும்.இலங்கையின் மீன்பிடி தொழில் மற்றும், பறவைகளின் பாதுகாப்பு சரணாலயம், இயற்கை காற்றின் வலு முதலானவற்றிற்கு பெயர் பெற்ற இடமாக மன்னார் விளங்குகிறது. 

இந்தநிலையில் ஏகபோக இராட்சத பல்தேசிய கம்பெனிகளின் இலாப வேட்டையாலும், இலங்கை அரசாங்கங்களின் கையாலாகாத நிலையாலும் அழிவை எதிர் நோக்கி உள்ளது மன்னார் தீவு.

ஏற்கனவே உள்ள காற்றாலைகளால் மீன் கரைக்கு வருவது குறைந்துவிட்டது மீன் இனப்பெருக்கம் குன்றிவிட்டது. காற்றாலைகளின் அமைப்பால் தரையில் ஏற்படுத்தப்பட்ட மாறுதல்கள் வடிகாலமைப்பை மாற்றிவெள்ளப்பெருக்கு மற்றும் நிலத்தடி நீர் உவராதலை ஏற்படுத்தியுள்ளது.

காற்றாலைகளின் இரைச்சலால் மன்னாருக்கு வரும் வலசைப்பறவைகளின் வருகையை தடுக்கவும் பாதையை மாற்றவும் அவை காற்றாடிகளால் இறக்கும் நிலையையும் ஏற்படுத்திஉள்ளது.  இது மட்டுமின்றி மக்களின் வாழ்விலும் காற்றாலைகளின் ஒலி மாசு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அத்துடன் மன்னார் மண்ணின் கீழ் இருக்கும் இல்மனைட் தோரியம் போன்ற கனிமவளங்கள் இன்றைய நவீன விஞ்ஞான உபகரணங்கள் மற்றும் இராணுவ தேவைகளுக்காக உலக நாடுகளுக்கு தேவைப்படுகின்றது. அதில் முதலீடு செய்வது பெரும் லாபம் தரும் என்பதால் பல் தேசிய நிறுவனங்கள் முண்டியடக்கின்றன.

எனவே  மன்னாரில் நடைபெற இருக்கின்ற இவ் அகழ்வு மன்னார் தீவையே மனித வாழ்வுக்கு உகந்ததாக இல்லாமல் செய்துவிடும் அளவிற்கு ஆபத்தானது. 

இந்த காற்றாலை மற்றும் கனியஅகழ்வு நாட்டின் தேவைக்கானதன்றிபல் தேசிய கம்பெனிகளின் இலாபக் குவிப்புக்கானதே என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் என்றனர். 

வவுனியா சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டத்தில், அரசியல் தரப்பினர்,சமூக செயற்ப்பாட்டாளர்கள்,பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_20250811_103336.jpg


மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள் - வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.