Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

693690.jpg?resize=605%2C358&ssl=1

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி.

2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல எனவும், சமீபத்தில் அமுல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியாவின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள்  சுதந்திரமாக இந்தியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1446093

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மை தகவல்தானா என தேடல் செய்து பார்த்தேன். இந்த செய்தி தமிழ் தளங்களில் பரவலாக வந்துள்ளது. இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி இது.

இதுபற்றிய விரிவான விளக்கங்களை விசயம் தெரிந்தவர்கள் விபரியுங்கள் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல எனவும், சமீபத்தில் அமுல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு இந்தியனுக்கு உள்ள உரிமை

இவர்களுக்கு கிடைக்குமா?

பாடசாலைகள் பல்கலைக்கழகங்களில் பாரபட்சம் காட்டப்படுமா?

படித்தவர்கள் சாதாரண இந்தியர் போல வேலைக்கு சேர்ப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, நியாயம் said:

இது உண்மை தகவல்தானா என தேடல் செய்து பார்த்தேன். இந்த செய்தி தமிழ் தளங்களில் பரவலாக வந்துள்ளது. இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி இது.

இதுபற்றிய விரிவான விளக்கங்களை விசயம் தெரிந்தவர்கள் விபரியுங்கள் பார்க்கலாம்.

The Hindu
No image preview

Union government exempts Sri Lankan Tamil refugees who ca...

MHA exempts undocumented minorities from Afghanistan, Bangladesh, Pakistan and Sri Lankan Tamil refugees from penal action in India.

"..A senior government official said the exemption made through the Immigration and Foreigners (Exemption) Order was to enable the undocumented migrants from the six minority communities from three countries “who were compelled to seek shelter in India due to religious persecution or fear of religious persecution” to seek long-term visas (LTV). LTVs are a precursor to citizenship"

இலங்கைத் தமிழர் உட்பட்ட அயல் நாடுகளின் 6 சிறுபான்மையினருக்கு இந்த விதிவிலக்கு வழங்கப் பட்டிருப்பது உண்மையான தகவல் தான். இந்த விதி விலக்கு வழங்காது விடில், அகதிகளாக இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களை குடிவரவுச் சட்டத்தின் கீழ் கைது செய்து, 5 இலட்சம் ரூபா அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்க முடியும். இதைத் தவிர்த்து, வேறு விசாக்களை உரிய முறைப்படி பெற்றுக் கொள்ளும் படி செய்யவே இந்த விதி விலக்கு.

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் ; இந்திய மத்திய அரசு

Published By: Digital Desk 3

04 Sep, 2025 | 03:46 PM

image

போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், இந்தியாவில் தாங்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், 2015 ஜன.9ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள், சட்டப் பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இதன் மூலம், இலங்கைத் தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல.

https://www.virakesari.lk/article/224203

  • கருத்துக்கள உறவுகள்

திரியோடு தொடர்புடைய விடயங்கள் உரையாடப்படுவதால் இணைத்துள்ளேன்.

நன்றி - யூரூப்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:
The Hindu
No image preview

Union government exempts Sri Lankan Tamil refugees who ca...

MHA exempts undocumented minorities from Afghanistan, Bangladesh, Pakistan and Sri Lankan Tamil refugees from penal action in India.

"..A senior government official said the exemption made through the Immigration and Foreigners (Exemption) Order was to enable the undocumented migrants from the six minority communities from three countries “who were compelled to seek shelter in India due to religious persecution or fear of religious persecution” to seek long-term visas (LTV). LTVs are a precursor to citizenship"

இலங்கைத் தமிழர் உட்பட்ட அயல் நாடுகளின் 6 சிறுபான்மையினருக்கு இந்த விதிவிலக்கு வழங்கப் பட்டிருப்பது உண்மையான தகவல் தான். இந்த விதி விலக்கு வழங்காது விடில், அகதிகளாக இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களை குடிவரவுச் சட்டத்தின் கீழ் கைது செய்து, 5 இலட்சம் ரூபா அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்க முடியும். இதைத் தவிர்த்து, வேறு விசாக்களை உரிய முறைப்படி பெற்றுக் கொள்ளும் படி செய்யவே இந்த விதி விலக்கு.

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் வாழ்க்கை மிகவும் சிக்கலானதும், கடினமானதுமான ஒன்று.

இந்த செய்தியை பார்த்துவிட்டு அங்கு அகதி முகாமில் வாழும் ஒருவருடன் உரையாடினேன். அவர்கள் 1990 காலங்களில் இலங்கை இராணுவம் புலிகள் இடையிலான போர் மீண்டும் தொடங்கியதும் படகில் சென்றவர்கள்.

தம்முடன் அடிக்கடி வழக்கறிஞர்கள் வந்து உரையாடுவதாகவும், தமக்கு வதிவுடமை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள், மற்றும் வழக்கு சம்மந்தமான தகவல்கள் அவ்வப்போது பகிரப்படும் என கூறினார்.

எனக்கு விளங்கிய அளவில் வழக்கில் கிடைக்கக்கூடிய சாதகமான முடிவு அவர் தமக்கு இந்திய குடியுரிமைக்கு நிகரான வதிவுடமை கிடைக்கும் என கூறுகின்றார்.

அதேசமயம், இந்திய குடியுரிமை இலகுவாக பெறப்படக்கூடிய ஒன்று அல்ல என இவ்விடயம் பற்றி சிலருடன் உரையாடியபோது கூறினார்கள்.

இந்தியாவில் பிறந்த அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்களின் பிள்ளைகள் பாடு பெரும் திண்டாட்டமாகி உள்ளது. காரணம் இவர்கள் இந்தியாவில் பிறந்தாலும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயம் said:

இந்தியாவில் பிறந்த அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்களின் பிள்ளைகள் பாடு பெரும் திண்டாட்டமாகி உள்ளது. காரணம் இவர்கள் இந்தியாவில் பிறந்தாலும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

இது அதிசயமல்லவே?

ஒரு நாட்டில் பிறந்த குழந்தையை பிரஜையாக ஏற்றுக் கொள்வதா என்ற விடயத்தில், இரு வகையான சட்ட முறைமைகள் இருக்கின்றன.

ஒன்று: "jus soli (right of soil)" எனப்படும் பிறந்த மண்ணை அடிப்படையாகக் கொண்ட பிறப்புரிமை (birthright citizenship).

மற்றையது, பெற்றோரின் பிரஜாவுரிமையை அடிப்படையாகக் கொண்ட "jus sanguinis (right of blood)" என்ற முறை. இதில் இந்தியா பின்பற்றும் முறை அனேகமாக பெற்றோரின் பிரஜாவுரிமையைக் கொண்டு குழந்தையின் பிரஜாவுரிமையைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. எனவே, இந்தியாவில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு இந்தியர்களுக்கு நிகரான உரிமையை எதிர்பார்க்க முடியாது.

இன்னொரு கோணத்தில், இதை உங்கள் போன்றோர் எதிர்பார்ப்பது இன்னும் அதிசயம்! "அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டுமே" என்று முழங்கும் MAGA ட்ரம்ப் விசிறியாக இருக்கிறீர்கள். அதே ட்ரம்ப், அமெரிக்காவில் இருக்கும் jus soli முறைமையை இல்லாதொழிக்கும் முயற்சிகளில் மும்முரமாக இருக்கிறார். இதில், இங்கே பிறக்கும் குடியேறிகளின் குழந்தைகளே இரண்டாம் தரப் பிரஜைகளாக மாறும் ஆபத்து இருக்கிறது. இதையெல்லாம் கடந்து ட்ரம்ப் ஐயாவை மோகித்த படி, இந்தியா இலங்கைத் தமிழர்களை பிரஜைகளுக்கு சமமாக நடத்த வேண்டுமென்று எப்படிக் கேட்கிறீர்கள்😂?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

டிரம்ப் ஐயா மீது அபிமானம் உள்ளது உண்மை. ஆனால், அவரது கொள்கைகள், செயற்திட்டங்கள் அனைத்துடனும் உடன்பாடு உள்ளது என்பதற்கில்லை.

அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றல்ல. அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுடன் ஒப்பிட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2025 at 20:51, நியாயம் said:

டிரம்ப் ஐயா மீது அபிமானம் உள்ளது உண்மை. ஆனால், அவரது கொள்கைகள், செயற்திட்டங்கள் அனைத்துடனும் உடன்பாடு உள்ளது என்பதற்கில்லை.

அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றல்ல. அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுடன் ஒப்பிட முடியாது.

இந்தியாவில் இருக்கும் தமிழ் அகதிகளை விட மோசமான வன்முறைக்குப் பலியாடுகளான தென்னமெரிக்க மக்கள் இருக்கிறார்கள். இது அந்த நாடுகள் பற்றிய அறிவுள்ளோருக்கு புரியும், உங்களுக்கு "அறிவலட்சியமே தோள்பட்டை நட்சத்திரம்" என்ற நிலை! எனவே, இப்படித் தான் சொல்வீர்கள்!

வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சட்ட விரோதமாக உள்ளே வந்து அந்தக் காலங்களில் இருந்த லிபரல் ஆட்சியாளர்களின் தயவால் தஞ்சம் பெற்று, இன்று வலதுசாரிகளோடு நிற்கும் ஈழத்தமிழர்களை அமெரிக்க சட்ட விரோதக் குடிகளோடு ஒப்பிடலாமா😎?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

இந்தியாவில் இருக்கும் தமிழ் அகதிகளை விட மோசமான வன்முறைக்குப் பலியாடுகளான தென்னமெரிக்க மக்கள் இருக்கிறார்கள். இது அந்த நாடுகள் பற்றிய அறிவுள்ளோருக்கு புரியும், உங்களுக்கு "அறிவலட்சியமே தோள்பட்டை நட்சத்திரம்" என்ற நிலை! எனவே, இப்படித் தான் சொல்வீர்கள்!

வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சட்ட விரோதமாக உள்ளே வந்து அந்தக் காலங்களில் இருந்த லிபரல் ஆட்சியாளர்களின் தயவால் தஞ்சம் பெற்று, இன்று வலதுசாரிகளோடு நிற்கும் ஈழத்தமிழர்களை அமெரிக்க சட்ட விரோதக் குடிகளோடு ஒப்பிடலாமா😎?

டிரம்ப் ஐயா மீதுள்ள வெறுப்பில் தென் அமெரிக்கா வரை சென்றுவிட்டீர்கள். அதிலும் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழ்ர்களின் பூர்வீகத்தை கிண்டி நையாண்டி செய்வதில் உங்களுக்கு அலாதி பிரியம் போல் உள்ளது. நான் படித்து பட்டம் பெற்று குடியேறினேன். நீ அகதியாய் வந்து குடியேறினாய். உன்னைவிட நான் கொஞ்சம் உசத்தி. உன்னை விட நான் சொல்லும் வாக்குத்தான் செல்லுபடியாகும் எனும் மனப்பாங்கு உங்களுக்கு. இப்படி எங்கள் சமூகத்தில் பலர் உள்ளார்கள். இவர்கள் தாங்கள் செய்யும் டிமிக்கிகளை வெளிவிட மாட்டார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.