Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 1

22 Sep, 2025 | 09:59 AM

image

பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரிப்பதாக, அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

இது அரசாங்க கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு, அமைதி மற்றும் இரு - மாநில தீர்வுக்கான சாத்தியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க நாங்கள் செயல்படுகிறோம் என அவர் தமது எக்ஸ் தளத்தில் காணொளி அறிக்கையொன்றினூடாக பதிவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா, கனடா மற்றும் போர்த்துகல் ஆகியவை பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து பிரான்ஸூம் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக், காசாவில் பணையக் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் சில பழமைவாதிகளிடமிருந்து இஸ்ரேலிய அரசாங்கம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இதற்கு பதிலளித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அரசு "நடக்காது" என ஞாயிற்றுக்கிழமை(21) குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/225704

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதில் கனடா, அவுஸ்திரேலியா, போர்த்துகல் ஆகியன பிரித்தானியாவுடன் இணைவு!

Published By: Digital Desk 1

22 Sep, 2025 | 10:03 AM

image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், இஸ்ரேல் குடியேற்றங்களை விரிவுபடுத்தவும், காசா மீதான போரை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ள நிலையில், பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதில் கனடா, அவுஸ்திரேலியா மற்றும் போர்த்துகல் ஆகியன ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கனேடிய பிரதமர் மார்க் கார்னி பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக ஞாயிற்றுக்கிழமை ( செப்டெம்பர் 21) அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளார்.

மேலும் "பாலஸ்தீன அரசு மற்றும் இஸ்ரேல் அரசு இரண்டிற்கும் அமைதியான எதிர்காலத்திற்கான வாக்குறுதியைக் கட்டியெழுப்புவதில் தங்கள் கூட்டாண்மையை" வழங்கியுள்ளார்.

இஸ்ரேலிய அரசாங்கம் "பாலஸ்தீன அரசு உருவாகும் வாய்ப்பை எப்போதும் நிறுவுவதைத் தடுக்கும் முறையாக" செயல்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

"பாலஸ்தீன அதிகார சபையின் தலைமையிலான பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது, அமைதியான சகவாழ்வையும் ஹமாஸின் முடிவையும் விரும்புவோருக்கு அதிகாரம் அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது எந்த வகையிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தாது, அதற்கான எந்த வெகுமதியும் அல்ல," எனவும் கனேடிய பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீன அதிகாரசபை கனடாவிற்கு அதன் ஆட்சியை சீர்திருத்துவதில் "நேரடி உறுதிமொழிகளை" வழங்கியுள்ளது.

அதே நேரத்தில், அவுஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகவும் அறிவித்தது.

கனடா மற்றும் பிரித்தானியாவுடன் இணைந்து அவுஸ்திரேலியாவும் அங்கீகரிப்பது இரு நாடு தீர்வுக்கான சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாகும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானீஸ் ஒரு அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/225706

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலத்தீனத்துக்கு பெருகும் ஆதரவு; தனி நாடாக அங்கீகரிப்பதால் என்ன மாற்றம் வரும்?

பாலத்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். அதே போல ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளும் பாலத்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. பிரான்ஸ் உள்ளிட்ட வேறு சில நாடுகளும் பாலத்தீனத்தை அங்கீகரிக்க தயாராகி வருகின்றன. பிரிட்டனின் முடிவை விமர்சித்துள்ள இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம், இது ஹமாஸுக்கு அளிக்கும் வெகுமதியைத் தவிர வேறில்லை என கூறியுள்ளது.

#Palestine #Britain #Israel

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

நரி, ஓநாய் ஐரோப்பிய மேற்கு மற்றும் அதன் சார்ந்த கூட்டங்கள், இஸ்ரேல் இடம் அடிப்பதை நிறுத்துமாறு கேட்டபோது இஸ்ரேல் நிறுத்தி இருந்தால், பலஸ்தீனியரை சிறுக சிறுக அழிப்பது என்ற உள்ளே வைத்திருக்கும் திட்டத்தில் இருந்து இப்படி வாய்ச்சொல்லால் விலத்தியத்தை செய்து இருக்க மாட்டாது.

இரானி சரியாக இவர்கலின் பல்தெனிய அங்கீகரிப்பு அலங்கார கோலாகலத்தை முன்னறிவுப்பு வந்த போது சரியாக அடையாளம் கண்டு இருந்தது.

இரான் சொல்லியது அரசுக்கு உள்ள எல்லாவற்றையும் அழிக்க இஸ்ரேல் க்கு நேரடியாக களத்தில் நின்று அழித்துவிட்டு , சோடினையாக அங்கீகரிப்பது.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல விடயம். ஆனால் இஸ்ரேல் இதைக் கடுமையாக எதிர்க்கும்.இன அழிப்புக்கு எதிராகப் போராடும் தேசங்களுக்கு இது முன்மாதிரியாக அமையும்.பிரித்தானியா அங்கீகரித்தாலும் பிரித்தானிய ஊடகங்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயலாக இருப்பதாக அறிக்கையிட்டுள்ளன. அவர்கள் எப்போதும் அப்படித்தான்.அமெரிக்கா விரும்பாத விடயத்தை ஊக்குவிக்க மாட்டார்கள். இதனைத் தொடர்ந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களும் தாம்சார்ந்த நாடுகளிடம் எமது சமஸ்டி தொடர்பிலான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குலகு தங்களுக்குள் ஏதோ ஒரு நாடகம் அல்லது தொடர் நாடகம் நடத்துகின்றார்கள் போல் எனக்கு தென்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-306.jpg?resize=750%2C375&ssl

பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த பிரான்ஸ்!

பாலஸ்தீன அரசை பிரான்ஸ் முறையாக அங்கீகரித்துள்ளது.

இந்த நடவடிக்கையை எடுக்கும் நாடுகளின் வரிசையில் அண்மைய நாடாக அது மாறியுள்ளது.

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், “சமாதானத்திற்கான நேரம் வந்துவிட்டது” என்றும், “காசாவில் நடந்து வரும் போரை எதுவும் நியாயப்படுத்தாது” என்றும் கூறினார்.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (23) ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.

அதே போல் ஜோர்தான் மற்றும் கட்டார் போன்ற முக்கிய பிராந்திய நாடுகளின் தலைவர்களும் உரையாற்ற உள்ளனர்.

திங்களன்று, பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா நடத்திய ஒரு நாள் உச்சிமாநாட்டில் அமெரிக்கா கலந்து கொள்ளவில்லை.

இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் ஞாயிற்றுக்கிழமை (21) அங்கீகாரம் அறிவித்ததைத் தொடர்ந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், மொல்டா, அன்டோரா மற்றும் சான் மரினோ ஆகிய நாடுகளும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க உள்ளன.

காசாவில் விரிவடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் மேற்குக் கரையில் குடியேற்றக் கட்டுமானம் தொடர்பாக இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது.

2023 ஒக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆயுதக் குழு நடத்திய தாக்குதலுக்கு ஹமாஸுக்கு அங்கீகாரம் வெகுமதி அளிக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின்படி, இஸ்ரேலால் 65,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலியப் படைகள் தற்போது காசா நகரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தரைவழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

அங்கு ஒரு மில்லியன் மக்கள் வசித்து வந்தனர்.

https://athavannews.com/2025/1448191

  • கருத்துக்கள உறவுகள்

550473000_1218307620334208_3232882927508

கண் கெட்ட பின், சூரிய நமஸ்காரம். மேற்கு நாடுகளின் இரட்டை வேடம்.

பாலஸ்தீனம் அழியும் மட்டும்... பார்த்துக் கொண்டு இருந்து விட்டு, தற்போது கற்குவியலாக இருக்கும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்த பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ்.

################# #########################

ஏற்கனவே இருந்த ஒரு நாட்டை புது கதை சொல்லி ஏதோ தானமாக வழங்குவது போல படம் காட்டுகிறார்கள்.

இந்தத் திருத்தம்.. இஸ்ரேலுக்கு ஒரு தனி பிரதேசத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.

Mohamed Niyasdeen

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.