Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோயிலுக்கு மாணவியை பொட்டு கட்டிவிட்ட கொடுமை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலுக்கு மாணவியை பொட்டு கட்டிவிட்ட கொடுமை.

fpn05nr3.jpg

திருக்கோவிலூர் :பள்ளி சிறுமியை, கோயிலுக்கு பொட்டு கட்டி விட்ட கொடூர சம்பவம், திருக்கோவிலூர் அருகே அரங்கேறியது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த சு.கொல்லூர் காலனியில் மாரியம்மன் கோயில் உள்ளது. நேற்று காலை 6 மணிக்கு வாழைமரம் கட்டி மைக்செட் போட்டு விநோத நிகழ்ச்சி துவங்கியது. இதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் - அஞ்சலை தம்பதியரின் ஏழாவது மகள் 13 வயது சிறுமி, கிருஷ்ணவேணியை மாரியம்மன் கோயிலுக்கு பொட்டுக் கட்டி விடும் நிகழ்ச்சி அது. இவர் அரங் கண்டநல்லூர் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். மாடு மேய்க்க ஆள் இல்லை என்று கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டார்.

தேவதாசி முறை ஒழிக்கப் பட்டு, பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கிராமத்தில் பொட்டுக்கட்டும் நிகழ்ச்சி, கோலாகலமாக நடந்தது. ஊர் நாட்டாமை முன்னிலையில், கோயில் பூஜாரி, ராஜன் பூஜை செய்தார். சிறுமியை, மணப் பெண் போல் அலங்கரித்து மணமேடையில் அமர வைத்தனர். முறைப் பெண்ணான மீனா என்பவர், கிருஷ்ணவேணிக்கு தாலி கட்டினார். உறவினர்கள் பட்டம் கட்டி திருமண சடங்குகளை நிறைவேற்றினர். மார்க்சிஸ்ட் கட்சியினர், இது பற்றி வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று சம்பவத்தை நடத்திய முக்கியஸ்தர்களை, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணை மேற்கொண்டனர்.

தேவதாசியாக்கி, கோயிலில் பணிவிடையுடன், பாலியல் தொழில் செய்ய அங்கீகாரம் அளிக்கும் நிகழ்ச்சியாக இது ஒரு காலத்தில் நடத்தப் பட்டது. ஒழிக்கப்பட்டுவிட்ட பின்னரும் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிறுமியின

விளங்கவில்லையே... அது என்ன பொட்டு கட்டுதல்? பெண்ணுக்கு பெண் தாலி கட்டினாளா?

கறுப்பி அக்கா கொஞ்சம் விளங்கப்படுத்துங்கோ..

கொஞ்சம் ஆழமா செய்திகளை சேகரிக்க சென்றால் இதைவிட மோசமான செய்திகளை கண்டுபிடிக்கலாம்.

உதாரணமா

மனித மாமிசம் உண்ணும் கிராமவாசிகள்..

உடுப்பின்றி அலையும் சாமியார்..

புளியமரத்தில் தொங்கும் பிசாசு..

பேத்தியை கற்பழித்த தாத்தா..

பாட்டியை கற்பழித்த பேரன்..

இப்படி எல்லாம் அசாதாரணமான செய்திகள் எல்லாம் கிடைக்கும்..

பிள்ளை பாவம் நாடகத்துக்கு வெளிக்கிடுத்திவிட்ட ஒளவையார் பாத்திரம் மாதிரி முழுசிக்கொண்டு படத்துக்கு போஸ் குடுக்கிது. யாரோ விளக்கம் குறைஞ்சதுகள் அத செய்தி என்று தினமலருக்கு குடுக்க, அதை ஒரு பொக்கிசமாக கண்டுகொண்ட தினமலர் சிறுமியிண்ட தலையில www.dinamalar.com என்று தமது காப்புரிமையை பாதுகாத்து நெற்றியில் முத்திரை குற்றி செய்தி வெளியிட்டு இருக்கிது.

இப்படியான சம்பவத்தைவிட சிறுமி ஒருத்தியை இப்படி உலகம் பூராக செய்தியில் வெளிவிடும் ஊடகங்கள் தான் ஆபத்தானவை.

கனடா நாட்டில் என்றால் ஒரு சிறுமிக்கு ஒன்று நடந்தால் அந்த சிறுமியின் ஒரு விபரங்கள் ஒன்றையும் போலிசு வெளிவிடமாட்டார்கள். யாராவது செய்தி நிறுவனம் சிறுமியின் தகவலை சட்டவிரோதமாக வெளிவிட்டால் கம்பி எண்ண வேண்டியதுதான்.

ஆனால், இந்தியாவில் பாருங்கோ. இந்த ஊடகங்கள் சிறுமியின் புகைப்படத்தை காப்புரிமையுடன் வெளியிட்டு இருக்கிதுகள். இப்படிச் செய்தால் இந்தியா திருந்துவது எப்போது? தினமலர் நிருவாகிகள் தமது பிள்ளைகளிற்கு இப்படி ஏதாவது நடந்தால் புகைப்படத்துடன் சம்பவத்தை விபரிப்பார்களா?

ஏழைப்பெண், கிராமவாசிகள் என்றால் ஊடகங்கள் இப்படியா செய்வது? அந்த சிறுமி என்ன கண்காட்சிப்பொருளா?

இந்த இந்திய த**லை ஊடகங்கள் திருந்துவது எப்போது?

ஹாஹா.. இப்படியான ஊடகங்களை கொண்ட நாடுதான் விரைவில் உலகில் பெரிய ஒரு வல்லரசாக வரப்போகிதாம். கேக்க சிரிப்பா இருக்கு. நல்ல கற்பனை!

வல்லரசாக வரும் முதல், கனவுகாணும் முன்னர் இந்திய ஊடகங்கள் தமது *** ஐ சுத்தம் செய்வது நல்லது..

"பொட்டு கட்டுறதோ" அப்படி என்றா என்ன கறுப்பி அக்கா :lol: ???அட பாவிங்களா இளைய மகளுக்கு பொட்டு கட்டினா மற்றவைக்கு எல்லாம் திருமணம் நடக்கும் என்று யார் சொன்னது :D முடியல என்னால என்ன எல்லாம் லோகத்தில நடக்குது!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"சில பேரை சொல்லி திருத்தலாம் சில பேர் பட்டு திருந்துவார்கள் சில பேரை........அதை நான் சொல்ல வேண்டுமா" :lol:

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு கட்டுதல் ??. பொட்டுக்குள்ளாலே புகுந்து போதல்,பொட்டு வைத்தல் கேள்விப்பட்டிருக்கிறேன். :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தம்பி மாப்பு விசயம் தெரியாமல் கதைக்கிறியள்!!!!!!!!!!!!! ஒரு நாடு வல்லரசாகிறதுக்கு இப்படியான தகுதிகள்,சேட்டைகள் கட்டாயம் இருக்க வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட சிறுமி மீட்பு

புதன்கிழமை, நவம்பர் 7, 2007

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள கொல்லூர் கிராத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி அஞ்சலை என்ற மனைவியும், கிருஷ்ணவேணி என்ற மகளும் இருக்கிறார்கள். மகள் கிருஷ்ணவேணி பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

ராமகிருஷ்ணன்-அஞ்சலை தம்பதியினர் தங்கள் மகளை அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று பொட்டு கட்டி கோவிலுக்கு நேர்ந்து விட்டனர். சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு வந்தனர். நேர்ந்துவிடப்பட்ட அந்த சிறுமி வீட்டில் சேர்க்கப்பட மாட்டார்.

இந்தத் இந்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அந்த சிறுமியை மீட்டு தந்தை ராமகிருஷ்ணனை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை செய்தனர்.

மீட்கப்பட்ட சிறுமியும், அவரின் தாய் அஞ்சலையும் விழுப்புரத்தில் உள்ள தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

சிறுமி கிருஷ்ணவேணிக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2007/11...r-arrested.html

அந்தக்காலத்தில நடந்த கூத்துகள்தான் உதுகள்! பொட்டுக்கட்டிவிட்டால் பிறகென்ன ஐயர்மார்பாடு ஒரே கொண்டாட்டம்தான். அண்மையில வெளிவந்த "பெரியார்" படத்தில விவரமாச் சொல்லியிருக்கினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தம்பி மாப்பு விசயம் தெரியாமல் கதைக்கிறியள்!!!!!!!!!!!!! ஒரு நாடு வல்லரசாகிறதுக்கு இப்படியான தகுதிகள்,சேட்டைகள் கட்டாயம் இருக்க வேணும்.

தமிழ்நாட்டில இதெல்லாம் சாதாரணமப்பா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"பொட்டு கட்டுறதோ" அப்படி என்றா என்ன கறுப்பி அக்கா :D ???அட பாவிங்களா இளைய மகளுக்கு பொட்டு கட்டினா மற்றவைக்கு எல்லாம் திருமணம் நடக்கும் என்று யார் சொன்னது :huh: முடியல என்னால என்ன எல்லாம் லோகத்தில நடக்குது!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"சில பேரை சொல்லி திருத்தலாம் சில பேர் பட்டு திருந்துவார்கள் சில பேரை........அதை நான் சொல்ல வேண்டுமா" :blink:

யமுனா உங்களுக்கான விளக்கம் இதோ

சிறுமிக்கு நடந்த அருள்வாக்கு சித்ரவதை...

‘தீராத வறுமைக்கு பொட்டுக் கட்டு!’

மாண்டவன் மீண்டதைப் போல் சென்ற நூற்றாண்டிலேயே ஒழிந்தது என்று நினைத்த ‘பொட்டுக்கட்டி விட்டு தேவதாசிகளாக்கும் வழக்கம்’ திரும்பக் கிளம்பி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவி லூருக்கு அருகிலுள்ள சி.கொள்ளூர் கிராமத்தில் பதின்மூன்று வயது சிறுமிக்குப் பொட்டுக் கட்டி விட்டார்கள் என்ற செய்தி யால் தமிழ்நாடே பரபரத்துக் கிடக்கிறது. இதைப்பற்றி விசாரிக்க அந்த ஊருக்குச் சென்றோம்.

திருக்கோவிலூர் மெயின் ரோட்டில் அரகண்டநல்லூருக்கு இடதுபுறம் இரண்டு கிலோமீட்டரில் இருக்கிறது அந்த கிராமம்.

ஆதிதிராவிட மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த ஊரில், பள்ளிக்கூடம், போக்குவரத்து, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுக்குக் குறைவில்லை. ஆனாலும் கல்வியறிவு மிகவும் குறைவு.

சாலைக்குப் பக்கத்திலேயே இருக்கும் முத்து மாரியம்மன் கோயிலில்தான் பொட்டுக்கட்டும் சம்பவம் நடந்திருக்கிறது. சி.கொள்ளூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு மூன்று ஆண், நான்கு பெண் பிள்ளைகள். பெரிய பெண் திருமணமாகி மூன்று வருடம் ஆவதற்குள் விதவையாகி விட்டார். குடும்பத்திலும் கஷ்டம். ராம கிருஷ்ணன், அரகண்டநல்லூரில் உள்ள சிவில் சப்ளை குடோனில் மூட்டை தூக்கி சம்பாதிக்கும் சொற்ப வருமானம் குடும்பத்துக்குப் போதவில்லை. அருள்வாக்கு சொல்லும் தனது தம்பி மகனிடம்

குடும்பக் கஷ்டத்துக்குக் காரணம் கேட்க, ‘கடந்த இரண்டு தலைமுறைக்கு முன் உன் குடும்பத்தில் இருந்த பொட்டுக்கட்டும் வழக்கத்தை நீ மறந்ததால்தான் இவ்வளவு சங்கடங்கள். உன் மகள் ஒருத்தியை சாமிக்கு நேர்ந்துவிட வேண்டும்’ என்று தம்பி மகன் அருள்வாக்கு(!) சொல்லியிருக்கிறார்.

எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் கடைசி மகள் கிருஷ்ணவேணிதான் வயதுக்கு வராத பெண் என்பதால், அவருக்குப் பொட்டுக்கட்டிவிட ராமகிருஷ்ணன் தீர்மானித்திருக்கிறார்.

ஊர்கூடி தடபுடலாக நடந்த பொட்டுக்கட்டும் சடங்கு போலீஸின் காதுகளுக்குப் போக, அவர்கள் உடனே அந்தக் கிராமத்துக்கு விரைந்திருக்கிறார்கள். அதற்குள் பொட்டுக் கட்டும் நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் ஊர் தலைவர், பூசாரி என்று எல்லோரையும் மொத்தமாக அள்ளி கொண்டுபோய் ஸ்டேஷனில் உட்கார வைத்து விட்டார்கள். இந்த செய்தியைப் பத்திரிகையில் பார்த்த சமூக சீர்திருத்த குழு உறுப்பினர் ரவிக்குமார் எம்.எல்.ஏ., சமூக நலத்துறை அமைச்சருக்கும், செயலாளருக்கும் போனில் தகவல் சொல்ல... அமைச்சர், விழுப்புரம் கலெக்டரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். கலெக்டர் உடனே அந்த ஊருக்குப் போய் விசாரிக்க... அந்த ஏரியாவே அல்லோல கல்லோலப்பட்டு விட்டது.

நேரடியாக சென்று விசாரணையில் ஈடுபட்ட ரவிக்குமார் எம்.எல்.ஏ&விடம் பேசியபோது, ‘‘அறியாமையில் நடந்ததுதான் இது. அவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கக்கூடாது என்றும் அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டாம்என்றும் கேட்டுக் கொண்டுள்ளேன். அந்தப் பகுதியில் மூடநம்பிக்கை வலுவாக இருக்கிறது. அந்த மக்களுக்குப் பொருளாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். விதவை யாகிப்போன ராமகிருஷ்ணனின் மூத்த மகளுக்கு ஏதாவது வேலை போட்டுத்தரும்படி கலெக்டரிடம் கேட்டி ருக்கிறேன். கிருஷ்ணவேணியை உளுந்தூர்பேட்டை பள்ளியில் சேர்த்துப் படிக்கவைக்கப் போவதாக கலெக்டர் கூறியிருக்கிறார்.

டீச்சராக வேண்டும் என்பது அந்த சிறுமியின் விருப்பம். அவர் பிளஸ் டூ படித்ததும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்க்க நானே உதவி செய்வதாக சொல்லி இருக்கிறேன். திருக்கோவிலுர் வட்டத்தில் பெண் கல்வி மோசமாக உள்ளது. ஐம்பது சதவிகிதம் பேர்தான் படித்திருக்கிறார்கள். அதுவும் பெரும்பாலும் ஐந்தாம் வகுப்போடு நின்று விடுகிறார்கள். எனவே இந்தப் பகுதியில் பெண்கல்வியை அதிகரிக்க, அரசு சிறப்பு திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிகமாக ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக சமூக சீர்த்திருத்த குழு சார்பில் அரசிடம் அறிக்கை ஒன்றைக் கொடுக்க இருக்கிறேன்’’ என்றார்.

கிருஷ்ணவேணி இப்போது கலெக்டரின் மேற்பார்வை யில் விழுப்புரத்தில் உள்ள அபயம் என்ற சீர்திருத்த இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார். கலெக்டர் நம்மிடம்,

‘‘அந்தக் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு தரப்படும். குவாரி களில் குறைந்தபட்ச கூலி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சி.கொள்ளூரில் தற்போது நடந்திருக்கும் இந்த விஷயத்தை தேவதாசி முறையோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது. முழுக்க முழுக்க அறியாமையின் விளை வால் ஏற்பட்டதுதான் இந்த சம்பவமே தவிர, வேறல்ல. அவர்கள் தொடர்ந்து இதே மாதிரியான காரியங்களில் இறங்காமல் இருப்பதற்குத் தேவையான மனோதத்துவ ரீதியிலான அறிவுரைகளும் அவர்களுக்கு வழங்கப் படும்.’’என்றார்.

குடும்ப கஷ்டம் போவதற் காக பொட்டுக்கட்டப் போக, இப்போது அந்த ஊரின் கஷ்டமே தீரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது! செல்லியம்மனுக்குத் துணையாக...

ஆதிதிராவிட மக்கள் மத்தியில் இருக்கும் இந்த வழக்கத்தைப் பற்றி ‘செடல்’ என்ற நாவலை எழுதியுள்ள பிரபல எழுத்தாளர் இமையம், இதைப்பற்றி பெரிய ஆராய்ச்சியே செய்திருக்கிறார்.

‘‘வழக்கமாக செல்லியம்மனுக்குத்தான் இப்படி பொட்டுக்கட்டி விடுவார்கள். ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லாவிட்டாலோ, வறுமை அதிகமாக இருந்தாலோ இப்படி ஒரு சிறுமியை நேர்ந்து விட்டுவிடுவார்கள். அந்தப் பெண் வயதுக்கு வந்தபிறகு யாரையும் திருமணம் செய்து கொள்ளமுடியாது. அவருக்கென்று ஒருசில கிராமங்களை ஒதுக்கி விடுவார்கள்.

‘செல்லப்பிள்ளை’ என்று அந்தப் பொண்ணுக்கு பெயர். அவரை அழைத்துகொண்டு ஊர்ஊராக போய் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் படி வாங்குவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் அந்தப் பெண்ணுக்குத் தானியம் கொடுக்கவேண்டும். செல்லியம்மன் கோயில் திருவிழா சமயத்தில் அந்த பெண் பாட்டுப் பாடினால்தான் சாமி வெளியே வரமுடியும். கோயிலுக்கு காப்பு கட்டிவிட்டால் திருவிழா முடியும்வரை அந்தப் பெண் அந்தக் கோயில் வாசலிலேயே படுத்திருக்க வேண்டும். அவருக்கு ஒரு மஞ்சள் சேலையும், ஒரு ஆட்டுக் கிடாவும், பதினாறு மரக்கால் அரிசியும் கோயில் சார்பாக கொடுக்க வேண்டும்.

அந்த ஊர் ஆண்கள் யார் வேண்டுமானாலும் அந்தப் பெண்ணைப் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பழக்கத்துக்கு ஒரு புராணப் பின்னணி இருக்கிறது. தேவர்களும், அசுரர்களும் அமுதத்துக்காக பாற்கடலை கடைந்தபோது வெளியே வந்தவர்தான் செல்லியம்மன். அவரை வாலியும், சுக்ரீவனும் சேர்த்துத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட, அதற்கு சாம்மதிக்காத செல்லியம்மன் பூலோகத்துக்கு வந்துவிட்டார். கல்யாணம் இல்லாமல் கன்னியாகவே இருந்த செல்லியம்மனுக்கு ஒரு துணைவேண்டும் என்பதற்காக சிவனும் விஷ்ணுவும் பிரம்மனும் சேர்த்து ஒரு ஆதிதிராவிட பெண்ணை ஏற்பாடு செய்தார்களாம். செல்லியம்மனுக்குத் துணையாக வாழ்வதன் அடையாளம்தான் இந்தப் பொட்டுக்கட்டும் வழக்கம்’’ என்கிறார் இமையம்.

விகடன்.கொம்

என்னடா கொடுமையிது.

யமுனா உங்களுக்கான விளக்கம் இதோ

சிறுமிக்கு நடந்த அருள்வாக்கு சித்ரவதை...

‘தீராத வறுமைக்கு பொட்டுக் கட்டு!’

நன்றி கறுப்பி அக்கா விளக்கதிற்கு!!

செய்யிறது எல்லாம் அநியாயம் அதற்குள்ள புராண கதை வேற கொடுத்திருக்கிறாங்க என்னால முடியல!! :lol: இதற்கு எல்லாம் காரணம் ஆண்கள் தான் தங்கள் சந்தோசதிற்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள் :unsure: !!அது சரி இந்த பக்கம் நம்ம நெடுக்ஸ் தாத்தாவை காணவில்லை ஏன் தாத்தா??? :lol: ............

அப்ப நான் வரட்டா!!

நன்றி கறுப்பி அக்கா விளக்கதிற்கு!!

செய்யிறது எல்லாம் அநியாயம் அதற்குள்ள புராண கதை வேற கொடுத்திருக்கிறாங்க என்னால முடியல!! :lol: இதற்கு எல்லாம் காரணம் ஆண்கள் தான் தங்கள் சந்தோசதிற்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள் :lol: !!அது சரி இந்த பக்கம் நம்ம நெடுக்ஸ் தாத்தாவை காணவில்லை ஏன் தாத்தா??? :D ............

அப்ப நான் வரட்டா!!

அவர் இப்ப கடவுளோட ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறார் போல!

அவர் இப்ப கடவுளோட ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறார் போல!

நம்ம நெடுக்ஸ் தாத்தாவா முடியலை... :wub: !!எத்தனை வருசம் ஒப்பந்தம் நெடுக்ஸ் தாத்தா.....!! :(

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.