Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து

October 10, 2025

கறுப்பு ஜுலை கலவரங்கள் ஜே.வி.பியினாலேயே நடத்தப்பட்டதாக பொய்யாகப் பரப்புரை செய்யப்பட்ட போதிலும், அக்கலவரங்களால் நாம் வெகுவாகப் பாதிக்கப்பட்டோம் என்பதே உண்மையாகும். ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால் வடக்கு, கிழக்கு, தெற்கு என எவ்வித பேதமுமின்றி ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியிருக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா சுட்டிக்காட்டினார்.

நந்தன வீரரத்ன என்பவரால் எழுதப்பட்டு, மனோரஞ்சனால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ‘நாட்டை உலுக்கிய 83 கறுப்பு ஜுலையின் ஏழு நாட்கள்’ எனும் புலனாய்வு நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வொன்று ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (9) கொழும்பிலுள்ள மகாவலி மைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய டில்வின் சில்வா மேலும் கூறியதாவது:

கறுப்பு ஜுலை பற்றிய இந்த நூலானது மறைக்கப்பட்ட அல்லது திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றின் உண்மைகளை வெளிக்கொணர்வதற்குப் பங்களிப்புச்செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலை கலவரம் தொடர்பில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேபோன்று 1988, 1989 களில் இடம்பெற்ற கலவரங்களை ‘ஜே.வி.பி கலவரம்’ என்று அடையாளப்படுத்துகின்றார்கள். ஆனால் உண்மையில் நாம் அந்தக் கலவரங்களைத் தோற்றுவிக்கவில்லை. மாறாக அவற்றால் வெகுவாகப் பாதிக்கப்பட்டோர்.

அதேபோன்று 1983 கறுப்பு ஜுலை கலவரத்தினால் நான் வெகுவாகப் பாதிக்கப்பட்டேன். ஏனெனில் அக்காலப்பகுதியில் நான் எமது கட்சியின் களுத்துறை மாவட்டம், பேருவளை ஒருங்கிணைப்பாளராகவும், முழுநேர கட்சி செயற்பாட்டாளராகவும் இருந்தேன். இருப்பினும் கலவரத்தை அடுத்து எமது கட்சியும் தடை செய்யப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து எமது அரசியல் செயற்பாடுகள் முடங்கியதுடன் அவற்றை இரகசியமாக முன்னெடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு ஏகாதிபத்தியவாத அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்பவேண்டிய தேவையிருந்தது. அதற்காக தமிழர்கள் மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்து, சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தினார்.

அதுமாத்திமன்றி அரசியலமைப்பின் ஊடாக சகல அதிகாரங்களையும் கொண்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்தினார். அவ்வேளையில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டம் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் அதனை நீக்குவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு எமக்கும், மக்களுக்கும் எதிரான சகல ஒடுக்குமுறைகளும் திட்டமிட்டுப் பிரயோகிக்கப்பட்டன.

அதேவேளை ஜே.வி.பியினாலேயே கறுப்பு ஜுலை கலவரங்கள் நடத்தப்பட்டன என்ற கருத்துக்களும் தீவிரமாகப் பகிரப்பட்டன. எனவே தமிழ் மக்களின் மனங்களில் இக்கலவரங்களை நாம் (ஜே.வி.பி) தான் நடத்தினோம் என்ற எண்ணம் இருக்கின்றதா எனத் தெரியவில்லை. அதன் பின்னர் நாம் வடக்கில் உள்ள போராட்ட இயக்கங்களுடன் தொடர்புகளைப் பேணிவருவதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியினால் பரப்புரை செய்யப்பட்டது. இவ்விரு கருத்துக்களுக்கும் இடையிலேயே பாரிய முரண் காணப்படுகின்றது. இவ்வாறு ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் ஒரு தனிமனிதனின் அதிகார வெறியினால் வடக்கு, கிழக்கு, தெற்கு என எவ்வித பேதமுமின்றி ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியிருக்கின்றது என்றார்.

https://www.ilakku.org/the-entire-country-paid-a-heavy-price-for-j-r-jayewardene-tilvin-silva-comments-on-black-july/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு ஏகாதிபத்தியவாத அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்பவேண்டிய தேவையிருந்தது. அதற்காக தமிழர்கள் மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்து, சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தினார்.

இன்றுதான் உங்களுக்கு இந்த உண்மை புரிந்ததா? அல்லது புரியாததுபோல் இருந்தீர்களா? இணைந்திருந்த வடகிழக்கை நீதிமன்றம் மூலம் பிரித்தது உங்கள் கட்சிதானே. சமாதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கும்போது ஆர்ப்பாட்டங்கள் செய்ததும் உங்கள் கட்சிதானே. சரி, நடந்தது நடந்து கடந்து போயிற்று. இனியாவது நீதியோடு, இதய சுத்தியோடு நசுக்கப்பட்ட இனத்திற்கு தீர்வை வழங்குங்கள்.

உங்கள் கட்சியில் அதிதீவிர சிந்தனையுடையவர் நீங்கள். இனியாவது உண்மை வரலாற்றை ஏற்று, திரிபுபடுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதியை வழங்குங்கள். நீங்களும் தவறினால் இலங்கை கடனால் மூழ்கி மீள முடியாத நிலைக்கு செல்லும், அதற்கு நீங்களும் காரணமாவீர்கள். நீதியுடன் செயற்பட்டால்; சிங்கப்பூருக்கு ஒரு லீகுவானி போல, இலங்கையில் நீங்கள் போற்றப்படுவீர்கள். உங்களால் நாடு எழுச்சி பெறும்.

  • கருத்துக்கள உறவுகள்

டில்வின் ப்ரோ,

1983 இல் முன்னுக்கு நிண்டு தமிழர்களை அடித்ததில் ஜேவிபிக்கு என்ன பங்கு என்பதை மறந்து விட்டீர்களா ப்ரோ?

ஜே ஆர் அதன் சூத்திரதாரி…

ஆனால் அதில் ஜேவிபியின் பங்கும் கணிசமானது.

52 தொடக்கம் நடந்த திட்டமிட்ட இன வன்முறைகளின் உச்ச புள்ளியே 83.

அது கலவரம் அல்ல. கலவரம் என்றால் இரு பகுதிகள் மாறி மாறி அடித்து கொள்வது.

83 ஒரு இனம், இன்னொரு இனத்தை தாக்கிய இனவன்முறை (pogrom).

அதற்கு ஒட்டு மொத்த சிங்கள இனமுமே பாத்திரவாளிகள்.

47 minutes ago, goshan_che said:

ஆனால் அதில் ஜேவிபியின் பங்கும் கணிசமானது.

83 ஜூலைக் கலவரத்தில் ஜே.வி.பியின் பங்கு தொடர்பாக இன்று வரைக்கும் உறுதியான ஆதாரங்களை நான் காணவில்லை. ஜே.ஆர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினரின் வன்முறை கும்பல்களாலும், ரவுடிகளாலும், பொலிசாராலும், இராணுவத்தினராலுமே இவை நிகழ்த்தப்பட்டன என்றும், அந்த பழிகளை எல்லாம் ஜேவிபி மீது போட்டு அவர்களை தடை செய்தனர் என்றுமே அறிந்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அது கலவரம் அல்ல. கலவரம் என்றால் இரு பகுதிகள் மாறி மாறி அடித்து கொள்வது.

83 ஒரு இனம், இன்னொரு இனத்தை தாக்கிய இனவன்முறை (pogrom).

மீண்டும் மீண்டும் நாம் உரத்து சொல்லவேண்டிய கருத்து.

ஜூலை கலவரமல்ல... இனஅழிப்பு

38 minutes ago, நிழலி said:

83 ஜூலைக் கலவரத்தில் ஜே.வி.பியின் பங்கு தொடர்பாக இன்று வரைக்கும் உறுதியான ஆதாரங்களை நான் காணவில்லை. ஜே.ஆர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினரின் வன்முறை கும்பல்களாலும், ரவுடிகளாலும், பொலிசாராலும், இராணுவத்தினராலுமே இவை நிகழ்த்தப்பட்டன என்றும், அந்த பழிகளை எல்லாம் ஜேவிபி மீது போட்டு அவர்களை தடை செய்தனர் என்றுமே அறிந்துள்ளேன்.

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நிகழ்வில் முக்கிய சில JVP சூத்திரதாரிகள் இருந்ததாக சிங்கள பத்திரிகையாளர் (நந்தன வீரரத்தின) கருத்துகளை வாசித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

52 minutes ago, Sasi_varnam said:

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நிகழ்வில் முக்கிய சில JVP சூத்திரதாரிகள் இருந்ததாக சிங்கள பத்திரிகையாளர் (நந்தன வீரரத்தின) கருத்துகளை வாசித்துள்ளேன்.

ஜேவிபியில் கடை நிலை உறுப்பினர்களாக இருந்தவர்கள், தமிழர்களைத் தாக்கி, அதை வன்முறையால் பாதிக்கப் பட்டவர்கள் அவதானித்திருக்கலாம், இந்த அனுபவங்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், ஜே.ஆர் "ஜேவிபியின் சதி தான் கறுப்பு ஜூலை" என்று ஒரு முழுப் பொய்யைக் கூறி ஜேவிபியையும், ஏனைய இடதுசாரி அமைப்புகளையும் தடை செய்தார் என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. கீழே ஒரு மாதிரி லயனல் போபகேயின் 2024 கட்டுரையில் இருந்து காணலாம்.

Groundviews - Journalism for Citizens

Misconceptions About the 1983 Riots - Groundviews

Photo courtesy of The Island A recent statement attributed to Prasanna Ranatunga, the Urban Development and Housing Minister of Sri Lanka, blaming the JVP for the July 1983 riots and posted on the A5

ஆனால், ஜேவிபி தலைமையோ, உள்ளூர் அமைப்பாளர்களோ கறுப்பு ஜூலையைத் திட்டமிட்டார்கள், அல்லது ஆரம்பித்த பின்னர் நடத்தினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் நான் இது வரை காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Justin said:

இந்த காலப்பகுதியில் கண்டி / கம்பளை பகுதியில் வசித்த எங்களுக்கு தெரிந்தவகையில் இது ஆளும் ஐக்கிய தேசிய கட்சி (UNP)அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், கட்சிக்கென்றே வளர்க்கப்பட்ட ரௌடி கூட்டங்களால் தான் இது நடாத்தப்பட்டது. சிங்கள பொதுமக்கள் அடித்து நொறுக்கப்பட்ட தமிழர் உடைமைகளை உரிமையோடு அள்ளிச் சென்றார்கள். 😉

இந்த காலப்பகுதியில் JVP வெளியில் இயங்கியதாக ஞாபகம் இல்லை. ஆனால் அவர்கள் 1983 July / Aug மாதங்கள் அளவில் தடைசெய்யப்பட்டார்கள்.

கொசுறுத் தகவல் - 1977 , JVP பொது தேர்தலில் Bell சின்னத்தில் போட்டியிட்டது. ரோஹன விஜேவீர எங்கள் வீட்டுக்கு முன்னால் இருக்கும் விக்ரமபாஹு பள்ளி திடலில் உரையாற்றினார். நான் அவரை நேரில் பார்த்து இருக்கிறேன்.

Edited by Sasi_varnam

14 minutes ago, Sasi_varnam said:

சிங்கள பொதுமக்கள் அடித்து நொறுக்கப்பட்ட தமிழர் உடைமைகளை உரிமையோடு அள்ளிச் சென்றார்கள். 😉

அதே நேரம், பல நூற்றுகணக்கான தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து இனவழிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்த நல்ல மனசுள்ள சிங்கள மக்களும் இருந்தனர் அந்த காலப்பகுதியில். இவ்வாறு அடைக்கலம் கொடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட தமிழ் குடும்பங்களில் என் குடும்பமும் உண்டு.

அண்மையில் ஒரு காணொளி வெளியாகி இருந்தது. கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் தான் சிறுவயதில் இருக்கும் போது தன்னையும் தன் குடும்பத்தையும் இனவழிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்து, தம் சிறு வீட்டில் அடைக்கலம் கொடுத்த குடும்பத்தை பார்க்க சென்ற காணொளி. அடைக்கலம் கொடுத்த குடும்பத்தின் பெண் இன்று மிக வயதாகி இருந்தார். கனடாவில் சென்றவர் தன்னை அறிமுகம் செய்த போது அப் பெண்ணின் முகம் மலர்ந்த காட்சி ஒரு கவிதை.

14 minutes ago, Sasi_varnam said:

கொசுறுத் தகவல் - 1977 , JVP பொது தேர்தலில் Bell சின்னத்தில் போட்டியிட்டது. ரோஹன விஜேவீர எங்கள் வீட்டுக்கு முன்னால் இருக்கும் விக்ரமபாஹு பள்ளி திடலில் உரையாற்றினார். நான் அவரை நேரில் பார்த்து இருக்கிறேன்.

நானும் அந்த காலப்பகுதியில் குருணாகலில் நிகழ்ந்த கூட்டம் ஒன்றில் ரோகணவை நேரில் கண்டு உள்ளேன். அப்பாவும் அம்மாவும் அவர்களுக்கே வாக்களித்தும் இருந்தனர்,

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

னடாவில் சென்றவர் தன்னை அறிமுகம் செய்த போது அப் பெண்ணின் முகம் மலர்ந்த காட்சி ஒரு கவிதை.

நானும் பார்த்திருக்கிறேன். மனோ ரஞ்சன் (NLFT) இயக்க ஸ்தாபகர் / உறுப்பினர். சந்திரிக்கா ஆதரவு, இப்போது NPP ஆதரவு. சிங்கள மொழியில் நல்ல ஆளுமை.

12 minutes ago, Sasi_varnam said:

நானும் பார்த்திருக்கிறேன். மனோ ரஞ்சன் (NLFT) இயக்க ஸ்தாபகர் / உறுப்பினர். சந்திரிக்கா ஆதரவு, இப்போது NPP ஆதரவு. சிங்கள மொழியில் நல்ல ஆளுமை.

அடடா.. அது மனோரஞ்சனா?

காற்றுள்ள பக்கம் சாயும், நேரத்துக்கு ஒரு நிறம் மாறும் மனிதர். அப்படி சாய்ந்து சாய்ந்து தமிழர்களின் நலனை அடகுவைக்கும் அரசியல் புரோக்கர். நான் சரிநிகரில் எழுதிக்கொண்டு இருந்த காலத்தில் சில தடவைகள் இவரை சந்தித்து இருக்கின்றேன். சந்திரிக்காவுக்கு வால் பிடித்துக் கொண்டு, புலிகளை தூற்றிக் கொண்டு திரிந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேவிபி, என் சொந்த அனுபவத்தில் ஆளவந்தான் கமல்ஹாசன் போல "கடவுள் பாதி மிருகம் பாதி" கலவை என்று சொல்லலாம்😂!

முதன் முதல் ஜேவிபி அமைப்பின் தீவிர உறுப்பினர்களோடு பரிச்சயமானது சந்திரிக்கா ஆட்சிக்கு வந்த பின்னரான, பேராதனைப் பல்கலையில். அவர்களது நிலைப்பாடு "தமிழர்களுக்கு என்று விசேடமான பிரச்சினை இல்லை, இருப்பது வர்க்கப் பிரச்சினை (class struggle), அதைத் தீர்த்தால் தமிழர் பிரச்சினையும் தீர்ந்து விடும்" என்ற இடது சாரி (சோசலிச) வாதமாக இருந்தது. பின்னர், இந்திய எதிர்ப்பும், மேற்கு எதிர்ப்பும், சில ஜேவிபி தரப்புகளின் சிங்கள இனவாதமும் சேர்ந்து நான் கண்ட ஜேவிபி 90 களில் "தேசிய சோசலிசம் - National socialism" என்ற நிலைக்குப் போனார்கள் - இது தான் தமிழர்களுக்கு பாதகமான நிலைப்பாடு.

ஆனால், பேராதனையில் மாணவர் சங்க தலைமையில் இருந்த ஜேவிபி உறுப்பினர்களால் தமிழ் மாணவர்கள் பெரும்பாலும் பாதுகாக்கப் பட்டார்கள் என்பது என் அபிப்பிராயம். பொலிஸ் கெடுபிடி அதிகம். தமிழ் மாணவர்களைச் சும்மா பிடித்துக் கொண்டு போய் பேராதனைப் பொலிஸ் நிலையத்தில் வாங்கில் உக்கார்த்தி வைத்து விடுவார்கள். தகவல் கிடைத்ததும், உடனே பொலிஸ் நிலையம் போய் அவர்களோடு முரண்டு பிடித்து தமிழ் மாணவர்களைக் கூட்டி வருவது ஜேவிபி மாணவர் சங்கத் தலைவர், செயலாளராக இருப்பார்கள்.

தலதா மாளிகை தாக்கப் பட்டதற்கு அடுத்த சில நாட்கள். நான் ஹில்டா விடுதியில் இருந்தேன். நமக்குத் தான் வவுனியா கடப்பதற்குப் பாஸ் வேண்டுமே? எனவே வார இறுதியாகிய போதும் நான் விடுதியிலேயே இருந்தேன். எந்த அசுமாத்தமும் தாக்குதலுக்கு அடுத்த நாள் இருக்கவில்லை. ஆனால், அதற்கடுத்த நாள் பொலிஸ் வந்து அனைத்து தமிழ் முஸ்லிம் மாணவர்களின் அறைகளைச் சோதித்து விட்டுச் சென்றார்கள். மரியாதையாக நடந்து கொண்டார்கள். அன்று மாலை தான் நமக்குத் தெரியாமல் நடந்த சில விடயங்கள் தெரியவந்தன. சிஹல உறுமய அமைப்பின் மாணவர்கள் குழு, ஹில்டாவில் இருக்கும் தமிழ் மாணவர்களைத் தாக்குவது என்று முடிவெடுத்து தயார் செய்த போது, விடயமறிந்த ஜேவிபி மாணவர்கள் உறூமய மாணவர்களுக்கு வன்முறை அச்சுறுத்தல் விடுத்துத் தடுத்திருக்கிறார்கள். அதே வேளை, உறுமய தரப்போடு ஒரு உடன்பாட்டிற்கு வந்து கண்டி பொலிஸ் வந்து தமிழ் மாணவர்களின் அறைகளைச் சோதனையிடலாம் என்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அப்ப இவங்கள் நல்லவங்களா?...வெயிற் போர் இற்😂....

தலதா மாளிகை தாக்கப் பட்ட அதே நாளில், கண்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இருக்கும் கட்டுக்கல பிள்ளையார் கோயில் ஒரு கும்பலால் தாக்கப் பட்டு பாரிய சேதத்திற்குள்ளானது. இந்தத் தாக்குதல் குழுவில், ஹில்டாவில் தமிழ் மாணவர்களைக் காப்பாற்றிய அதே ஜேவிபி மாணவர்கள் சிலரும் இருந்திருக்கிறார்கள்.

எனவே தான், ஜேவிபியை இன்னும் என்னால் ஒரு பானைக்குள் போட முடியாமல் இருக்கிறது! ஆனால், தமிழர்களின் தாயகக் கனவிற்கு வன்முறை சாராத நீதிமன்ற வழிமுறை மூலம் முதல் சவப்பெட்டி ஆணியை அடித்தது ஜேவிபி என்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

டில்வின் ப்ரோ,

1983 இல் முன்னுக்கு நிண்டு தமிழர்களை அடித்ததில் ஜேவிபிக்கு என்ன பங்கு என்பதை மறந்து விட்டீர்களா ப்ரோ?

ஜே ஆர் அதன் சூத்திரதாரி…

ஆனால் அதில் ஜேவிபியின் பங்கும் கணிசமானது.

52 தொடக்கம் நடந்த திட்டமிட்ட இன வன்முறைகளின் உச்ச புள்ளியே 83.

அது கலவரம் அல்ல. கலவரம் என்றால் இரு பகுதிகள் மாறி மாறி அடித்து கொள்வது.

83 ஒரு இனம், இன்னொரு இனத்தை தாக்கிய இனவன்முறை (pogrom).

அதற்கு ஒட்டு மொத்த சிங்கள இனமுமே பாத்திரவாளிகள்.

3 hours ago, Sasi_varnam said:

மீண்டும் மீண்டும் நாம் உரத்து சொல்லவேண்டிய கருத்து.

ஜூலை கலவரமல்ல... இனஅழிப்பு

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நிகழ்வில் முக்கிய சில JVP சூத்திரதாரிகள் இருந்ததாக சிங்கள பத்திரிகையாளர் (நந்தன வீரரத்தின) கருத்துகளை வாசித்துள்ளேன்.

2 hours ago, Justin said:

ஜேவிபியில் கடை நிலை உறுப்பினர்களாக இருந்தவர்கள், தமிழர்களைத் தாக்கி, அதை வன்முறையால் பாதிக்கப் பட்டவர்கள் அவதானித்திருக்கலாம், இந்த அனுபவங்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், ஜே.ஆர் "ஜேவிபியின் சதி தான் கறுப்பு ஜூலை" என்று ஒரு முழுப் பொய்யைக் கூறி ஜேவிபியையும், ஏனைய இடதுசாரி அமைப்புகளையும் தடை செய்தார் என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. கீழே ஒரு மாதிரி லயனல் போபகேயின் 2024 கட்டுரையில் இருந்து காணலாம்.

Groundviews - Journalism for Citizens

Misconceptions About the 1983 Riots - Groundviews

Photo courtesy of The Island A recent statement attributed to Prasanna Ranatunga, the Urban Development and Housing Minister of Sri Lanka, blaming the JVP for the July 1983 riots and posted on the A5

ஆனால், ஜேவிபி தலைமையோ, உள்ளூர் அமைப்பாளர்களோ கறுப்பு ஜூலையைத் திட்டமிட்டார்கள், அல்லது ஆரம்பித்த பின்னர் நடத்தினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் நான் இது வரை காணவில்லை.

வெண்ணை எடுத்தவன் தப்பி விட்டான்…

விரல் சூப்பியவன் மாட்டி கொண்டான் என்ற நிலைதான்…

திட்டமிட்ட சூத்திரதாரி ஜே ஆர்…ஆனால் அமைப்பாக திரண்டு mob mentality யோடு அலைந்தவர்களில் பல ஜேவிபியினரும் அடக்கம். நான் கண்கண்ட சாட்சிகளிடம் பேசியுள்ளேன்.

வேலை முடிந்ததும் ஜே ஆர் மொத்த பழியையும் தூக்கி ஜேவிபி மீது போட்டார்.

வெண்ணை எடுத்தவன் தப்பி விட்டான் என்பதால் மட்டும் விரல்சூப்பியவன் குற்றவாளி இல்லை என்றாகாது.

இன்றுவரை ஜேவிபி இதில் தனக்குள்ள பங்கை ஏற்கவோ, சுயவிமர்சனம் செய்யவோ இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அதே நேரம், பல நூற்றுகணக்கான தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து இனவழிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்த நல்ல மனசுள்ள சிங்கள மக்களும் இருந்தனர் அந்த காலப்பகுதியில். இவ்வாறு அடைக்கலம் கொடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட தமிழ் குடும்பங்களில் என் குடும்பமும் உண்டு.

அண்மையில் ஒரு காணொளி வெளியாகி இருந்தது. கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் தான் சிறுவயதில் இருக்கும் போது தன்னையும் தன் குடும்பத்தையும் இனவழிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்து, தம் சிறு வீட்டில் அடைக்கலம் கொடுத்த குடும்பத்தை பார்க்க சென்ற காணொளி. அடைக்கலம் கொடுத்த குடும்பத்தின் பெண் இன்று மிக வயதாகி இருந்தார். கனடாவில் சென்றவர் தன்னை அறிமுகம் செய்த போது அப் பெண்ணின் முகம் மலர்ந்த காட்சி ஒரு கவிதை.

நானும் அந்த காலப்பகுதியில் குருணாகலில் நிகழ்ந்த கூட்டம் ஒன்றில் ரோகணவை நேரில் கண்டு உள்ளேன். அப்பாவும் அம்மாவும் அவர்களுக்கே வாக்களித்தும் இருந்தனர்,

சங்ககார குடும்பம் கூட இப்படி செய்தனர். கொழும்பு நெல்சன் பிளேஸின் பல தமிழ் குடும்பங்கள் இன்று உயிர்வாழ டாக்டர் ஜெயதில வீடுதான் காரணம்.

ஆனால் இவர்கள் விதிவிலக்குகள்.

1948-2009 முதல் இப்படியான விதிவிலக்குகளை தவிர்த்து விட்டு பார்த்தால் - ஒட்டுமொத்த சிங்கள இனத்தின் கூட்டு மனோநிலையும்…..

எந்த எல்லைக்கும், எந்த மோசமான அடக்குமுறையையும் பாவித்து தமிழர்களை அடக்கி விட வேண்டும் என்பதாகவே இருந்தது.

2009 -2021 வரை கூட அது மாறவில்லை. ….

அடக்க வேண்டும் என்ற வெறி…அடக்கி விட்டோம் என்ற இறுமாப்பாக மாறி இருந்தது.

2021 ற்கு பின் கூட்டு மனோநிலை மாறிவிட்டதா? தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Justin said:

ஜேவிபி, என் சொந்த அனுபவத்தில் ஆளவந்தான் கமல்ஹாசன் போல "கடவுள் பாதி மிருகம் பாதி" கலவை என்று சொல்லலாம்😂!

முதன் முதல் ஜேவிபி அமைப்பின் தீவிர உறுப்பினர்களோடு பரிச்சயமானது சந்திரிக்கா ஆட்சிக்கு வந்த பின்னரான, பேராதனைப் பல்கலையில். அவர்களது நிலைப்பாடு "தமிழர்களுக்கு என்று விசேடமான பிரச்சினை இல்லை, இருப்பது வர்க்கப் பிரச்சினை (class struggle), அதைத் தீர்த்தால் தமிழர் பிரச்சினையும் தீர்ந்து விடும்" என்ற இடது சாரி (சோசலிச) வாதமாக இருந்தது. பின்னர், இந்திய எதிர்ப்பும், மேற்கு எதிர்ப்பும், சில ஜேவிபி தரப்புகளின் சிங்கள இனவாதமும் சேர்ந்து நான் கண்ட ஜேவிபி 90 களில் "தேசிய சோசலிசம் - National socialism" என்ற நிலைக்குப் போனார்கள் - இது தான் தமிழர்களுக்கு பாதகமான நிலைப்பாடு.

ஆனால், பேராதனையில் மாணவர் சங்க தலைமையில் இருந்த ஜேவிபி உறுப்பினர்களால் தமிழ் மாணவர்கள் பெரும்பாலும் பாதுகாக்கப் பட்டார்கள் என்பது என் அபிப்பிராயம். பொலிஸ் கெடுபிடி அதிகம். தமிழ் மாணவர்களைச் சும்மா பிடித்துக் கொண்டு போய் பேராதனைப் பொலிஸ் நிலையத்தில் வாங்கில் உக்கார்த்தி வைத்து விடுவார்கள். தகவல் கிடைத்ததும், உடனே பொலிஸ் நிலையம் போய் அவர்களோடு முரண்டு பிடித்து தமிழ் மாணவர்களைக் கூட்டி வருவது ஜேவிபி மாணவர் சங்கத் தலைவர், செயலாளராக இருப்பார்கள்.

தலதா மாளிகை தாக்கப் பட்டதற்கு அடுத்த சில நாட்கள். நான் ஹில்டா விடுதியில் இருந்தேன். நமக்குத் தான் வவுனியா கடப்பதற்குப் பாஸ் வேண்டுமே? எனவே வார இறுதியாகிய போதும் நான் விடுதியிலேயே இருந்தேன். எந்த அசுமாத்தமும் தாக்குதலுக்கு அடுத்த நாள் இருக்கவில்லை. ஆனால், அதற்கடுத்த நாள் பொலிஸ் வந்து அனைத்து தமிழ் முஸ்லிம் மாணவர்களின் அறைகளைச் சோதித்து விட்டுச் சென்றார்கள். மரியாதையாக நடந்து கொண்டார்கள். அன்று மாலை தான் நமக்குத் தெரியாமல் நடந்த சில விடயங்கள் தெரியவந்தன. சிஹல உறுமய அமைப்பின் மாணவர்கள் குழு, ஹில்டாவில் இருக்கும் தமிழ் மாணவர்களைத் தாக்குவது என்று முடிவெடுத்து தயார் செய்த போது, விடயமறிந்த ஜேவிபி மாணவர்கள் உறூமய மாணவர்களுக்கு வன்முறை அச்சுறுத்தல் விடுத்துத் தடுத்திருக்கிறார்கள். அதே வேளை, உறுமய தரப்போடு ஒரு உடன்பாட்டிற்கு வந்து கண்டி பொலிஸ் வந்து தமிழ் மாணவர்களின் அறைகளைச் சோதனையிடலாம் என்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அப்ப இவங்கள் நல்லவங்களா?...வெயிற் போர் இற்😂....

தலதா மாளிகை தாக்கப் பட்ட அதே நாளில், கண்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இருக்கும் கட்டுக்கல பிள்ளையார் கோயில் ஒரு கும்பலால் தாக்கப் பட்டு பாரிய சேதத்திற்குள்ளானது. இந்தத் தாக்குதல் குழுவில், ஹில்டாவில் தமிழ் மாணவர்களைக் காப்பாற்றிய அதே ஜேவிபி மாணவர்கள் சிலரும் இருந்திருக்கிறார்கள்.

எனவே தான், ஜேவிபியை இன்னும் என்னால் ஒரு பானைக்குள் போட முடியாமல் இருக்கிறது! ஆனால், தமிழர்களின் தாயகக் கனவிற்கு வன்முறை சாராத நீதிமன்ற வழிமுறை மூலம் முதல் சவப்பெட்டி ஆணியை அடித்தது ஜேவிபி என்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை!

ஜேவிபியும் ஏனைய சிங்கள கட்சிகள் போலத்தான்.

ஒரே வித்தியாசம் - நீங்கள் அவர்களோடு வர்க்க போரில் துணை நின்றால் உங்களை பாதுகாப்பார்கள்.

அதே நேரம் குழுவாக சேர்ந்து தமிழரை தாக்குவதில் ஒரு கை போடாவும் பின் நிற்க மாட்டார்கள்.

கொள்கை ரீதியில் தமிழரை ஒடுக்குவதில் ஏனைய கட்சிகள் “ஒரே இலங்கையர்” எனும் ஈரச்சாக்கை கையில் எடுத்தால்…

ஜேவிபி…நாம் எல்லோரும் உழைக்கும் வர்க்கம் என்ற ஈரச்சாக்கை கையில் எடுப்பார்கள்.

ஆனால் வடக்கு-கிழக்கை பிரிக்க வழக்கு போட்டு வெல்வார்கள்.

இத்தனை வருட இழப்பின் பின் தமிழருக்கு கிடைத்த ஒரே சிறிய நன்மை வடக்கு-கிழக்கு தற்காலிக இணைப்பு. எந்த இனவாத கட்சியும் அதை நீக்க துணியவில்லை. அதிகாரத்தில் இல்லாத போதும் கோர்ட்டுக்கு போய் ஜேவிபி நீக்கியது.

அதே போல் முள்ளிவாய்க்கால்…

நடப்பது மிக பெரும் அழிவு என தெரிந்தும்…மாட்டி கொண்ட தமிழர் பலர் உழைக்கும் வர்க்கம் என அறிந்தும்…:

போரை, மேற்கின் வேண்டுதலுக்கு பணியாமல், விரைந்து முடிக்க மகிந்தவுக்கு அழுத்தம் கொடுத்தார் அனுர.

யூ என் பி, சுக, ஹெல உறுமய முகத்துக்கு நேரே இனவாதிகள் - சையனைடு. ஜேவிபி ஆசனிக்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

எனவே தான், ஜேவிபியை இன்னும் என்னால் ஒரு பானைக்குள் போட முடியாமல் இருக்கிறது!

இது போன்று தமிழர்களை கையாள முடிவது தான் ஜேவிபியின் இன்றைய உச்ச நிலைக்கு காரணம்.

சிங்களவருக்கு ஒரு முகமும் தமிழர்களுக்கு ஒரு முகமும் காட்டி வசியம் செய்து கொண்டே தமிழர்களுக்கு ஏதாவது சிறிய நிம்மதி கிடைத்தால் கூட தமது சுய சிங்கள இனவாதத்தை முழுமையாக தமிழர்கள் மீது மட்டும் கக்க நசிக்க தயங்கியதே இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.