Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் - பாலத்தீனம், காஸா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹமாஸ் விடுவித்த 7 பணயக்கைதிகளுடன் இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்ற காட்சி

13 அக்டோபர் 2025, 09:28 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஹமாஸ் இரண்டு தொகுதிகளாக 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், பின்னர் இஸ்ரேல் படைகளால் தாயகம் அழைத்துச் செல்லப்பட்டார்கள். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் தங்களது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இருதரப்பிலும் நீண்ட நாட்களாக பிரிந்திருந்த உறவுகளை மீண்டும் சந்திக்கும் ஆவலில் குடும்பத்தினர் உணர்ச்சிமயமாக காட்சியளித்தனர்.

இஸ்ரேல் - பாலத்தீனம், காஸா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலிய பணயக்கைதி எய்ட்டன் ஹார்னை வரவேற்கும் ஆவலில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்

இஸ்ரேல் - பாலத்தீனம், காஸா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, முதல் 7 பேரில் ஒருவராக இஸ்ரேலிய பணயக்கைதி ஆலன் ஒஹெல்லை ஹமாஸ் விடுவித்த செய்தி அறிந்ததும் மகிழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்

பாலத்தீன சிறைக்கைதிகள் விடுதலை

ஒப்பந்தப்படி, ஹமாஸ் 48 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும். அவர்களில் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் 20 பேர் 2 தொகுதிகளாக விடுவிக்கப்பட்டனர்.

அதற்கு ஈடாக, இஸ்ரேல் 250 பாலத்தீன கைதிகளையும், தடுப்புக்காவலில் உள்ள 1,700 பாலத்தீனியர்களையும் விடுவிக்கும்.

இஸ்ரேல் சிறையில் இருந்து வெளியே வந்த பல வேன்கள் பாலத்தீன கைதிகளை ஏற்றிச் சென்றதாக நம்பப்படுகிறது. அவர்களை வரவேற்க ரமல்லா நகரில் குடும்பத்தினரும், உறவினர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.

இஸ்ரேல் - பாலத்தீனம், காஸா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேல் சிறையில் இருந்து வந்த வேன்கள். விடுவிக்கப்பட்ட பாலத்தீன கைதிகள் அந்த வேன்களில் ஏற்றிச் செல்லப்படுவதாக நம்பப்படுகிறது.

இஸ்ரேல் - பாலத்தீனம்

படக்குறிப்பு, இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்படும் பாலத்தீன கைதிகளை வரவேற்க காத்திருக்கும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள்.

ஹோஸ்டேஜ் சதுக்கத்தில் கூடிய மக்கள்

முன்னதாக, இஸ்ரேலிய பணயக்கைதிகளின் வருகைக்காக அவர்களது உறவினர்கள் டெல் அவிவ் நகரில் உள்ள ஹோஸ்டேஜ் சதுக்கத்தில் அதிகாலை 5 மணியளவிலேயே திரளாக கூடிவிட்டனர். அங்குள்ள பெரிய திரைகளில் பணயக்கைதிகள் விடுதலை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

அந்த சதுக்கத்தில் காத்திருந்த மக்களின் புகைப்படத்தை ஒரு சமூக வலைதளப் பயனர் பகிர்ந்துள்ளார். 'சதுக்கம் பணயக்கைதிகளின் வருகைக்காக காத்திருக்கிறது' என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.

இஸ்ரேல் - பாலத்தீனம், காஸா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பணயக்கைதிகளின் விடுதலைக்காக காத்திருக்கும் இஸ்ரேலியர்கள்

போர் நிறுத்தம் தொடரும் - டிரம்ப்

இஸ்ரேலுக்கு புறப்படும் முன்பாக, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தம் தொடரும் என்றும், காஸாவிற்கான அமைதி வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

இஸ்ரேல் - பாலத்தீனம், காஸா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டிரம்பை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்கிறார்

"யூதர்கள், இஸ்லாமியர்கள் அல்லது அரேபியர்கள் என அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே எங்கள் குறிக்கோள். இஸ்ரேலுக்குப் பிறகு, நான் எகிப்துக்குச் செல்வேன். அங்குள்ள மிகவும் சக்திவாய்ந்த, பெரிய, பணக்கார நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்," என்று டிரம்ப் கூறினார்.

இஸ்ரேலுக்கு வந்த பிறகு, டிரம்ப் திங்கட்கிழமை எகிப்துக்குச் செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் காஸா பிரச்னை குறித்து ஆலோசிக்க உள்ளார்.

பிரிட்டன் பிரதமர் ஸ்டாமரும் எகிப்துக்கு வந்துள்ளார். இந்த கூட்டத்தில் அவரும் பங்கேற்க உள்ளார்.

எகிப்தில் முக்கிய பேச்சுவார்த்தைகள்

பாலத்தீன விடுதலை அமைப்பின் (PLO) தலைவர் ஹுசைன் அல்-ஷேக் ஞாயிற்றுக்கிழமை காலை முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரை சந்தித்து, காஸாவின் எதிர்காலம் குறித்து விவாதித்தார்.

பாலத்தீன விடுதலை அமைப்பு (PLO), காஸா பிரச்னையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் டோனி பிளேருடன் சேர்ந்து, மற்ற நாடுகளுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஆனால், காஸா விவகாரங்களை மேற்பார்வையிடும் குழுவில் டோனி பிளேர் இருப்பாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று டிரம்ப் கூறினார்.

இஸ்ரேல் பயணத்துக்கு புறப்படும் முன் ஊடகங்களிடம் பேசிய டிரம்ப், 'போர்களுக்கு தீர்வு காணவும், அமைதியை நிலைநாட்டவும் தான் நான் பணியாற்றுகிறேன்' என்று கூறினார்.

'இது நான் தீர்த்து வைத்த எட்டாவது போர். நான் இதை நோபல் அமைதி பரிசுக்காக அல்ல, மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக செய்கிறேன்' என்றும் அவர் கூறினார்.

டிரம்புக்கும் பிற தலைவர்களுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகள் எகிப்தில் நடைபெற உள்ளன.

இந்த மாநாடு 'காஸா அமைதி உச்சிமாநாடு' என்று அழைக்கப்படுகிறது.

காஸா போருக்கு முடிவு காண்வதை நோக்கமாகக் கொண்ட இந்த உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மன் அதிபர் பிரிட்ரிக் மெர்ஸ், இத்தாலிய பிரதமர் மெலோனி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இஸ்ரேல் - பாலத்தீனம், காஸா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸாவில் உணவு விநியோக லாரிகளுக்கு அருகில் மக்கள் கூடி, அவற்றை எடுத்துச் செல்லும் காட்சி.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டெரெஸ், தானும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார்.

பாலத்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

காஸாவிற்கு பிரிட்டன் ரூ.216 கோடி நிதி உதவி அறிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgvdn91lzdo

  • கருத்துக்கள உறவுகள்

download-14.jpg?resize=300%2C168&ssl=1

ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகளும் விடுவிப்பு!

ஹமாஸ் அமைப்பினரால் 13 இஸ்ரேலிய பணயக்கைதிகளை உள்ளடக்கிய இரண்டாவது குழு மத்திய காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஏழு இஸ்ரேலிய பணயக்கைதிகளை கொண்ட முதலாவது குழுவை முன்னதாக ஹமாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ள நிலையில் தற்போது அடுத்த குழுவையும் ஒப்படைத்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல் தடுத்துவைத்துள்ள 1,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக மொத்தமாக 20 உயிருடன் உள்ள பணயக்கைதிகள் பரிமாறிக்கொள்ளப்படுவார்கள் என்று ஹமாஸ் தெரிவித்திருந்த நிலையில் இன்று இரண்டு குழுக்களாக 20 பணயக்கைதிகளை ஹமாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.

இதேவேளை பணயக்கைதிகளின் குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சி வெளியிட்டுவருகின்றனர்.

எதிர்வரும் நாட்களில் காசாவில் பணயக் கைதிகள் விடுதலை, பாலஸ்தீன கைதிகள் விடுதலை மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிண்ணனியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிராந்திய அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று எகிப்துக்கு செல்வதற்கு முன்னதாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார்.

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோர் ஷர்ம் எல்-ஷேக்கில் இன்று நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டுக்கு தலைமை தாங்கவுள்ளனர்.

இந்த மாநாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

“காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் புதிய சகாப்தத்தை உருவாக்குதல்” ஆகியன இந்த மாநாட்டின் நோக்கமாக கருதப்படுகின்றன.

https://athavannews.com/2025/1450242

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்! - இஸ்ரேல் இராணுவம் தகவல் 

13 Oct, 2025 | 04:35 PM

image

காசா போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டிருந்த அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இஸ்ரேல் - காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் இன்று (13) கைச்சாத்திடப்படவுள்ளது. 

இந்நிலையில், போர் நிறுத்தத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, ஹமாஸினால் இரண்டு ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்ட 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் இன்று விடுவிக்கப்பட்டுவிட்ட செய்தி, அவர்களது குடும்பத்தினரையும் இஸ்ரேல் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியர்களுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசா போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்று முன்னதாக 7 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. 

அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு சென்றார். அடுத்து, எகிப்து நாட்டுக்குச் சென்று அங்கு, போர்நிறுத்த இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நிகழ்வில் கலந்துகொள்வார்.

அத்துடன் எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதிக்கான உச்சி மாநாட்டிலும் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளார். இதற்கிடையில் இஸ்ரேலிய பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்ட அறிவிப்பு இஸ்ரேலிய மக்களை பெரும் ஆரவாரப்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/227627

  • கருத்துக்கள உறவுகள்

559498445_830712219308863_48860603159287

இரண்டு வருடங்கள் போராடியும் மீட்க முடியாமல் போன இஸ்ரேலிய பணயக்கைதிகளை, ஹமாஸிடமிருந்து மீட்டுக் கொடுத்து அமைதியை ஏற்படுத்தி கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்பின் சாதனையை பாராட்டி இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு தங்கத்திலான புறா ஒன்றை வழங்கிய காட்சியே இது!

நோபல் கிடைக்காவிட்டாலும் தங்கப்புறாவை பெற்று ரம்ப் மனமகிழ்ந்தார்.

Almashoora Latest News 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வருடங:களாக சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகள்

மெலிந்து நலிந்து காணப்படுவார்கள் என எண்ணினேன்.

கமாஸ் பரவாயில்லையே.

நன்றாக கவனித்துள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Watch the Emotional Moments Israeli Hostages Reunite with Families

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

559498445_830712219308863_48860603159287

இரண்டு வருடங்கள் போராடியும் மீட்க முடியாமல் போன இஸ்ரேலிய பணயக்கைதிகளை, ஹமாஸிடமிருந்து மீட்டுக் கொடுத்து அமைதியை ஏற்படுத்தி கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்பின் சாதனையை பாராட்டி இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு தங்கத்திலான புறா ஒன்றை வழங்கிய காட்சியே இது!

நோபல் கிடைக்காவிட்டாலும் தங்கப்புறாவை பெற்று ரம்ப் மனமகிழ்ந்தார்.

Almashoora Latest News 

ஊழலை சிறப்பாக செய்ய தெரிந்த மனிதன்

முன்பு ஆப்பிள் நிறுவனமும் 24 காரட் தங்கத்தை கொடுத்து இருந்தது.

ஒரு 100 பில்லியன்கள் கொடுத்தால் 2 என்றாலும் சுருட்டிட கூடிய அறிவு

கருணாநிதியின் உடன் பிறவா சகோதரர்

75a8a74983aeb5f5ac24e1daddca5d5468-7-apple.rhorizontal.w700.jpg

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

ஊழலை சிறப்பாக செய்ய தெரிந்த மனிதன்

முன்பு ஆப்பிள் நிறுவனமும் 24 காரட் தங்கத்தை கொடுத்து இருந்தது.

ஒரு 100 பில்லியன்கள் கொடுத்தால் 2 என்றாலும் சுருட்டிட கூடிய அறிவு

கருணாநிதியின் உடன் பிறவா சகோதரர்

75a8a74983aeb5f5ac24e1daddca5d5468-7-apple.rhorizontal.w700.jpg

அந்தக் கடைசி வரிதான்… ஹைலைட். 😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

559498445_830712219308863_48860603159287

இரண்டு வருடங்கள் போராடியும் மீட்க முடியாமல் போன இஸ்ரேலிய பணயக்கைதிகளை, ஹமாஸிடமிருந்து மீட்டுக் கொடுத்து அமைதியை ஏற்படுத்தி கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்பின் சாதனையை பாராட்டி இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு தங்கத்திலான புறா ஒன்றை வழங்கிய காட்சியே இது!

RS362947-Gaza-City-destruction-an-2e16d0

சொந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் பூமியை சுடுகாடாக்கி விட்டு....

தாம் சமாதான புறாக்கள் என கோஷமிடும் உலகில் வாழ்கின்றோம்.

இது சரியென தலையாட்ட அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்திலும் ஒரு கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

RS362947-Gaza-City-destruction-an-2e16d0

சொந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் பூமியை சுடுகாடாக்கி விட்டு....

தாம் சமாதான புறாக்கள் என கோஷமிடும் உலகில் வாழ்கின்றோம்.

இது சரியென தலையாட்ட அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்திலும் ஒரு கூட்டம்.

என்ன செய்வது…. பொய்மையில் வாழும் உலகம்.

வல்லவன் வகுத்ததே…. வாய்க்கால் என்ற மாதிரி,

அறம், நீதி, வாய்மை… எதுவும் இக்காலத்தில் எடுபடாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.