Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

571315221_122197693334293440_65666361895

இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க.

கடந்த காலங்களில் மருத்துவத்துறையில் இன்று இருப்பதுப்போல நவீன கருவிகள் அன்று இல்லை. எனவே நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டறிவது ஒரு சவாலான காரியமாக இருந்து வந்தது. பின்னர் எக்ஸ் ரே, ஈசிஜி, எம்ஆர்ஐ போன்ற தொழில்நுட்ப கருவிகள் வந்த பின்னர் மருத்துவர்களுக்கு நோயாளிகளின் பிரச்சனையை கண்டறிவது மிகவும் எளிதாவிட்டது. அதிலும் எம்ஆர்ஐயின் வருகைக்கு பின்னர் நோய்களை துல்லியமாக கணித்து அதற்கு தகுந்த மருத்துவ நடைமுறைகளை எடுக்க மருத்துவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது நம்முடைய அணிகலங்களை கழற்றுமாறு அங்குள்ளவர்கள் அறிவுறுத்துவார்கள். இது பலருக்கும் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இதற்கு பின்னால் ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு காரணம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன காரணம் என்பதை இங்கு பார்ப்போம்.

எம்ஆர்ஐ கருவியானது உடலின் உள்ளுருப்புகள் மற்றும் திசுக்களின் கட்டமைப்பை எக்ஸ் ரேயின் உதவியில்லாமல் பதிவு செய்வதற்கான ஒரு செயல் முறையாகும். இந்த செயல் முறையில் எம்ஆர்ஐ ஸ்கேன் உயர்தர காந்தங்களை பயன்படுத்தி மிக அதிக சக்திவாய்ந்த காந்தப்புலங்களை இந்த கருவி ஏற்படுத்துமாறு வடிவமைக்கப்படுள்ளது. இந்த காந்தப்புலங்கள் மனித உடல் உள்ளுறுப்பகளின் உயர்த்தர முப்பரிமாண படத்தை உருவாக்க பயன்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் இந்த முப்பரிமாண படங்கள் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் காயங்கள் அல்லது தேவையற்ற வளர்ச்சி இருக்கிறதா என்பதை தீர்மானிக்க மருத்துவர்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது.

இந்த எம்ஆர்ஐ கருவி எப்படி வேலை செய்கிறது என்றால், ஒரு உளுந்த வடையை நிற்க வைத்தது போல் ஒரு உள்ள அமைப்பில் நடுவே படுக்கை ஒன்று நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படுக்கையில் படுத்திருக்கும் நபர் மெதுவாக உள்ளே நகர்த்தப்படுவார். எம்ஆர்ஐ உள்ளே உள்ள சக்திவாய்ந்த காந்த புல சக்தி ஸ்கேன் செய்யப்படும் ஒவ்வொரு திசுக்களின் புரோட்டானையும் வரிசைப்படுத்துகிறது. அதே நேரத்தில் ரேடியோ அதிர்வலைகள் இந்த புரோட்டங்களில் மின்சார சமிஞ்க்கைகளை உருவாக்கி அவற்றின் வரிசையை சிதறடித்துவிடுகிறது. இப்போது எம்ஆர்ஐயின் காந்த புலங்கலையும், ரேடியோ அதிர்வலையையும் நிறுத்திவிடுவார்கள்.

இதனால் உறுப்பின் புரோட்டான்கள் காந்தத்தன்மையை இழந்து தங்களது பழைய அமைவிடத்திற்கு திரும்பும். அவ்வாறு திரும்பும்போது புரோட்டான்கள் தங்களை சிதறடித்த ரேடியோ அதிர்வலைகளை வெளியில் அனுப்பும். இதை எம்ஆர்ஐ கருவியில் பொருத்தபட்டிருக்கும் ஒரு சென்சார் கிரகித்து அதனை கணினிக்கு அனுப்பும்.

கணினியானது சென்சார் அனுப்பிய ரேடியோ அலைகளை ஒருகிணைத்து அதனை முப்பரிமாண படங்களை தயாரித்து திரையில் காண்பிக்கும்.

எம்ஆர்ஐ கருவியின் முக்கிய பாகமாக இருப்பது அதன் சக்தி வாய்ந்த காந்தங்களாகும்.

இவை ஸ்கேன் செயல் முறையின் முக்கிய அங்கமாக இருக்கிறது. இந்த காந்தங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால் சுமார் 15அடி தூரத்தில் உள்ள உலோகத்தையும் ஈர்க்கவல்லது. காந்தங்கள் இந்த அதீத சக்திகொண்டதால் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இப்போது புரிந்திருக்கும் ஏன் எம்ஆர்ஐ அறைக்குள் ஆபரணங்களை கழற்ற சொல்கிறார்கள் என்று. சிலர் எச்சரித்தும் அதை மதிக்காமல் இந்த ஆபரணங்களை அணிந்திருந்தால் என்னவாகும் என்றால் எல்லா ஆபரணங்களையெல்லாம் அந்த காந்தங்கள் வேகமாக இழுத்துக்கொள்ளும்.

எந்த அளவிற்கு இழுத்துக்கொள்ளும் என்றால் ஒரு வழிப்பறி கொள்ளையன் நகையை திருடுவதற்கு வேகமாக கழுத்திலிருந்து பிடுங்கிக்கொள்ளும் வேகமும் அதன் வேகமும் சமமாக இருக்கும். இதனால் காயம் ஏற்படும் சமயத்தில் மரணம் சம்பவிக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே அடுத்த முறை எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது சென்மெட் பார்க்காமல் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கழற்றி வைத்துவிட்டு உள்ளே செல்லவும்.

சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அண்மையில் மறதி காரணமாக தலையை ஸ்கான் செய்தார்கள்.

எல்லா விளக்கங்களும் சொல்லி கையில் ஒரு கருவியும் தந்து ஏதாவது அவசரம் என்றால் அழுத்தச் சொன்னார்கள்.

சரி என்று உள்ளே தள்ளிவிட்டதும் ஒரு நிமிடத்தால் எனக்கு ஏதோ மூச்சுவிட முடியாத மாதிரி அந்தரமாக இருந்தது.

மொத்தமாக 15 நிமிடம் ஆகும் என்று முன்னரே சொல்லியிருந்படியால் இது வேலைக்கு ஆகாது என்று தந்த கருவியை அழுத்தினேன்.

உடனேயே வெளியே இழுத்து என்னாச்சு என்று 2-3 பேர் ஓடிவந்தார்கள்.

மூச்சு விடமுடியாமல் அந்தரமாக உள்ளது என்றேன்.

சரி உனக்கு முடியாவிட்டால் இன்னும் ஒருநாளுக்கு வா என்றார்கள்.

இது முன்னரே செய்த அனுபவம் இருந்தபடியால் எங்கே தவறு செய்துவிட்டேன் என்பதை உடனேயே புரிந்து கொண்டேன்.

வேண்டாம் திரும்ப அனுப்பு நான் தயார் என்றேன்.

சந்தேகத்தில் உண்மையாவா என்று திரும்ப திரும்ப கேட்டார்கள்.

இந்த தடவை வாசலில் போகும்போதே கண்களை இறுக மூடிவிட்டேன்.முடியும்வரை கண்ணைத் திறக்கவே இல்லை.

எதுவித பிரச்சனையும் இல்லாமல் முடிந்ததும் ஆச்சரியத்துடன் வரவேற்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அண்ணை, எனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் செய்தபோது லைற்றா தூங்கிவிட்டேன்!(அதனுடைய ரீங்காரத்தையும் தாண்டி) இடுப்பையும் கால்களையும் ஸ்கான் செய்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த தடவை வாசலில் போகும்போதே கண்களை இறுக மூடிவிட்டேன்.முடியும்வரை கண்ணைத் திறக்கவே இல்லை.

நானும் 6அல்லது 7தடவைகள் உள்ளே போய் வந்திருக்கிறேன்.ஆடாமல் அசையாமல் இருக்கும் போது சவப்பெட்டிக்குள் இருந்த பீலிங் வந்து போகும்.மிசின் உள்ளுக்க இழுக்க ஆரம்பித்ததும் கண்ணை இறுக மூடிக்கொள்வேன்.கெட்ட கெட்ட நினைவுகள்,கவலைகள் வந்து போகும்.🤣

சில நேரம் சந்திரமண்டலத்துக்கு போற மாதிரியும் இருக்கும். 😂

5 hours ago, ஏராளன் said:

அண்ணை, எனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் செய்தபோது லைற்றா தூங்கிவிட்டேன்!(அதனுடைய ரீங்காரத்தையும் தாண்டி) இடுப்பையும் கால்களையும் ஸ்கான் செய்தார்கள்.

அதுக்குள்ள போயும் நித்திரை வந்திருக்கு எண்டால் நீங்கள் லேசுப்பட்ட ஆளில்லை. மகான்.😀

உங்கடை வீட்டுக்கு பக்கத்தாலை ரயில் அடிக்கடி போய் வருமா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

அண்ணை, எனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் செய்தபோது லைற்றா தூங்கிவிட்டேன்!(அதனுடைய ரீங்காரத்தையும் தாண்டி) இடுப்பையும் கால்களையும் ஸ்கான் செய்தார்கள்.

நான் அன்று ஸ்கான் செய்ய மறுத்திருந்தால் அடுத்த தடவை சாடையான நித்திரை வரப் பண்ணி உள்ளே அனுப்பியிருப்பார்கள்.

உங்களுக்கும் அதே தான் நடந்திருக்கும்.

அது டொம் டொம் டொம் என்று பெரிய சத்தமாக கேட்கும்.

இந்த சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காக கேட்காமல் காதை மூடியிருப்பார்கள்.

அதையும் மீறி தூங்க முடியாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.