Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரைக்கு முதல் முறையாக கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!

Nov 16, 2025 - 12:01 PM

கடற்கரைக்கு முதல் முறையாக கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் (16) மதியம் ஒரு தொகுதி டொல்பின் மீன்கள் (Dolphins) கூட்டமாக வந்து சேர்ந்தன. 

இந்தச் சம்பவத்தை அறிந்த அப்பகுதி மீனவர்கள், பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் அங்கு சென்று பார்வையிட்டதோடு, சிறுவர்களுடன் டொல்பின்கள் விளையாடியதை அவதானிக்க முடிந்தது. 

மன்னார் மாவட்டத்தில் கரையோரப் பகுதிக்கு இந்த டொல்பின் மீன் இனம் கூட்டமாக வருகை தந்தமை இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீண்ட நேரம் இலுப்பைக்கடவை கடற்கரையோரங்களில் கூட்டமாகச் சுற்றித் திரிந்த குறித்த டொல்பின் மீன்கள் தமது இருப்பிடம் நோக்கிச் செல்ல சில மீனவர்கள் உதவி செய்தனர். 

இந்த நிலையில் குறித்த டொல்பின் மீன்கள் மீண்டும் கூட்டமாக தமது இருப்பிடத்தை நோக்கிச் சென்றன. 

இந்த அரிய காட்சியை மீனவர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளில் காணொளியாகப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர் லெம்பட்-

https://adaderanatamil.lk/news/cmi1c8otj01njo29nek042g41

  • கருத்துக்கள உறவுகள்

டொல்பின்களுக்கு இலுப்பைப்பழம் ரொம்ப பிடிக்கும் போலிருக்கு, அசப்பில் அதுவும் கடலில் வாழும் வௌவ்வால் இனம் போலிருக்கு ........! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராமநாதபுரம் கடற்கரையோர பகுதிகளில் உலாவரும் மன்னாரில் தென்பட்ட டொல்பின்கள்

18 Nov, 2025 | 12:28 PM

image

மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு சென்ற நிலையில்  செவ்வாய்க்கிழமை (18) காலை முதல்  குறித்த டொல்பின் கூட்டம் கூட்டமாக  கரையோர பகுதிகளுக்கு வருகை தந்துள்ளன. 

இந்த அற்புதமான காட்சி அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பொதுவாக அரிதாகவே நிகழும் இத்தகைய நிகழ்வு, இன்று பல டொல்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்துவது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

இத்தகைய ஒரு நிகழ்வு, அதாவது இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான டொல்பின்கள் ஒரே நேரத்தில் கடலோர பகுதிக்கு வந்து துள்ளி குதிப்பது, இதுவே முதல்முறை என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர். 

WhatsApp_Image_2025-11-18_at_8.17.53_AM_

WhatsApp_Image_2025-11-18_at_8.17.51_AM.

https://www.virakesari.lk/article/230668

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஏராளன் said:

இராமநாதபுரம் கடற்கரையோர பகுதிகளில் உலாவரும் மன்னாரில் தென்பட்ட டொல்பின்கள்

அதுகளுக்கு என்ன... விசா எடுக்காமல், நாடு நாடாக சுத்தி திரியுதுகள். 🐋 🐬 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அதுகளுக்கு என்ன... விசா எடுக்காமல், நாடு நாடாக சுத்தி திரியுதுகள். 🐋 🐬 🙂

அண்ணை, விசா எடுக்காட்டியும் சனத்திற்கு இலவசமாக விளையாட்டு காட்டும் டொல்பின்களுக்கு நன்றி தான் சொல்லவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

அண்ணை, விசா எடுக்காட்டியும் சனத்திற்கு இலவசமாக விளையாட்டு காட்டும் டொல்பின்களுக்கு நன்றி தான் சொல்லவேணும்.

மனிதர்களுடன் நெருக்கமாக உள்ள பிராணிகளில்... டொல்பின், நாய், பூனை போன்றவை முக்கியமானவை என நினைக்கின்றேன். யானை போன்ற மற்றைய விலங்குகள் மனிதர்களுடன் நெருக்கமாக பழகினாலும் சில நேரங்களில் ஆக்ரோசமாக மாறி விடும்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொண்டி கடலோர பகுதிகளில் துள்ளி குதித்து விளையாடிய டால்பின்கள்

DOLPHINS

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடலோரப் பகுதிகளில் இன்று காலை டால்பின்கள் கூட்டம் கூட்டமாக துள்ளி குதித்து விளையாடின.

டால்பின்கள் கூட்டமாக கடலின் மேல் பகுதிக்கு வந்து குதித்து விளையாடுவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வு அல்ல. எனவே பல டால்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்தியதை தொண்டி கடலோரப் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர். இந்த அழகான காட்சிகளை அப்பகுதியினர் பலர் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர்.

கரைக்கு மிகவும் அருகில் டால்பின் கூட்டங்கள் வருவதற்கான காரணம் குறித்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் கு.சிவக்குமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், கடல் பசு, திமிங்கலம், டால்பின், உள்ளிட்ட சில கடல் வாழ் உயிரினங்கள் அடிக்கடி வசிப்பிடத்தை மாற்றி வேறு இடத்திற்கு குடியேறும் வழக்கத்தை கொண்டவை என்றார்.

“இவ்வகையான கடல் வாழ் உயிரினங்கள் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரள கடற்கரை வழியாக தமிழக கடற்பகுதிக்கு பின்னர் மீண்டும் அவை மகாராஷ்டிரா செல்லும். பருவமழை காலங்களில் மழை நீர் கடலில் சேர்வதன் காரணமாக கடல் நீரில் உப்பு தன்மை குறைவதால் கடல் புற்கள் நல்ல வளர்ச்சி அடையும். பொதுவாக கடல் மீன்கள் கடல் புற்களுக்கு மத்தியில் வாழ்விடத்தை அமைத்து கொள்ளும். அப்படி அமைக்கும் போது கடல் மீன்களை உண்ணும் கடல் பசு, கடல் ஆமை, திமிங்கலம், டால்பின் போன்றவை கடல் புற்களை நோக்கி கரை பகுதிக்கு வர நேரிடுகிறது” என்றார்.

https://www.bbc.com/tamil/live/c7v8pjqg0n7t?post=asset%3Aaaefd337-afc4-43de-904d-cbf95e77caac#asset:aaefd337-afc4-43de-904d-cbf95e77caac

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மனிதர்களுடன் நெருக்கமாக உள்ள பிராணிகளில்... டொல்பின், நாய், பூனை போன்றவை முக்கியமானவை என நினைக்கின்றேன். யானை போன்ற மற்றைய விலங்குகள் மனிதர்களுடன் நெருக்கமாக பழகினாலும் சில நேரங்களில் ஆக்ரோசமாக மாறி விடும்.

இல்லை. டொல்பின் ச‌மீபத்தில் ஒரு பெண்ணை விளையட்டின்போது கொன்று விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, colomban said:

இல்லை. டொல்பின் ச‌மீபத்தில் ஒரு பெண்ணை விளையட்டின்போது கொன்று விட்டது.

டொல்பின்னால்... பெண் கொல்லப் பட்டதை, இப்போதான் முதன் முதலாக கேள்விப் படுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

டொல்பின்னால்... பெண் கொல்லப் பட்டதை, இப்போதான் முதன் முதலாக கேள்விப் படுகின்றேன்.

அது ஒரு விபத்து போலவே இருக்கு ......... அந்த டொல்பின் அழுதுகொண்டு அவரை சுற்றி தூற்றி தேடுகிறது. என்ன நடந்திருக்கும் என்று சரியாக தெரியவில்லை.

நாய்கள் கடித்து ஆயிர கணக்கானவர்கள் இருந்து இருக்கிறார்கள்தானே ?

4 hours ago, colomban said:

இல்லை. டொல்பின் ச‌மீபத்தில் ஒரு பெண்ணை விளையட்டின்போது கொன்று விட்டது.

4 hours ago, தமிழ் சிறி said:

டொல்பின்னால்... பெண் கொல்லப் பட்டதை, இப்போதான் முதன் முதலாக கேள்விப் படுகின்றேன்.

தவறான தகவல்.

பெண் பயிற்சிவிற்பாளரைக் ( Dawn Brancheau) கொன்றது டொல்பின் அல்ல. Orca வகையை சார்ந்த திமிங்கிலம்.

அமெரிக்காவில் Orlando , Florida வில் Sea works Orlando எனும் animal theme park இல் 2010 இல் நிகழ்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

அது ஒரு விபத்து போலவே இருக்கு ......... அந்த டொல்பின் அழுதுகொண்டு அவரை சுற்றி தூற்றி தேடுகிறது. என்ன நடந்திருக்கும் என்று சரியாக தெரியவில்லை.

27 minutes ago, நிழலி said:

தவறான தகவல்.

பெண் பயிற்சிவிற்பாளரைக் ( Dawn Brancheau) கொன்றது டொல்பின் அல்ல. Orca வகையை சார்ந்த திமிங்கிலம்.

அமெரிக்காவில் Orlando , Florida வில் Sea works Orlando எனும் animal theme park இல் 2010 இல் நிகழ்ந்தது.

நானும் எத்தனையோ டொல்பின் சம்பந்தப் பட்ட காணொளிகளை பார்த்துள்ளேன். எந்த ஒரு இடத்திலும் டொல்பின்கள் மனிதருடன் ஆக்ரோசமாக நடந்ததில்லை. மாறாக நன்றாக பழகிய நண்பன் மாதிரியே சுற்றிச் சுற்றி வரும். அவசியம் என்றால்… மனிதனுக்கு உதவியும் செய்யும்.

சரியான தகவலுக்கு நன்றி. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2025 at 21:17, நிழலி said:

தவறான தகவல்.

பெண் பயிற்சிவிற்பாளரைக் ( Dawn Brancheau) கொன்றது டொல்பின் அல்ல. Orca வகையை சார்ந்த திமிங்கிலம்.

அமெரிக்காவில் Orlando , Florida வில் Sea works Orlando எனும் animal theme park இல் 2010 இல் நிகழ்ந்தது.

நீங்கள் சொன்வது பல வருடங்களுக்கு முன் நடந்தது. நான் சொல்வ்து சமிபத்தில் 2 அல்லது 3 மாதமளவில் நடந்தது வீடியோவும் வந்து இருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.