Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் : போக்குவரத்து பாதிப்பு

27 Nov, 2025 | 10:41 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு )

முல்லைத்தீவு நகரில், இன்று வியாழக்கிழமை (27) காலை புளியமரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதாகவும் அனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முலைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் வீதிப்போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,  மின் கம்பங்களின் இணைப்புக்கள் மிகவும் தாழ்நிலையில் காணப்படுவதனால் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு வாகனங்களை குறித்த பகுதியில் செலுத்திச் செல்ல வேண்டாமென  மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

WhatsApp_Image_2025-11-27_at_09.56.57.jp

WhatsApp_Image_2025-11-27_at_09.56.46.jp

https://www.virakesari.lk/article/231582

Edited by ஏராளன்

  • ஏராளன் changed the title to வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கால்வாயில் கார் வீழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

Nov 27, 2025 - 12:43 PM

கால்வாயில் கார் வீழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைவாகுப்பற்று, பொலிவேரியன் குடியிருப்புப் பகுதியில் இன்று (27) முற்பகல் இடம்பெற்றுள்ளது. 


விபத்து குறித்து தகவலறிந்ததும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர், சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ செயற்படையணி மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். இதன்போது கால்வாயில் மூழ்கிய கார் மீட்கப்பட்டது. 

காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் சிறுமி ஆகிய மூவரும் மீட்கப்பட்டு உடனடியாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இச்சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-அம்பாறை நிருபர் ஷிஹான்-

https://adaderanatamil.lk/news/cmih3k34u021yo29nsvvqsl5l

'பேராறு' குளத்தின் வான் கதவு திறப்பு; மன்னார் மாந்தை மேற்கு பிரதேச மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

Published By: Digital Desk 3

27 Nov, 2025 | 02:09 PM

imagehttps://www.virakesari.lk/article/231605

வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால் 'பேராறு' குளத்தின் வான் கதவு ஒன்று நேற்று புதன்கிழமை (26) திறக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த குளத்தின் நீரானது மன்னார் மாவட்டத்தின் பறங்கி ஆறு ஊடாக பெருக்கெடுக்க வாய்ப்புள்ளது என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மேலும் பேராறு குளத்தின் வான்  கதவுகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எதிர் பார்க்கப்படுகின்றது.

எனவே பறங்கி ஆற்றின் தாழ் நில பிரதேசங்களில் வாழும் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச மக்கள்  மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மேய்ச்சல் தரைக்காக கால் நடைகளை கொண்டு சென்ற பண்ணையாளர்கள் தங்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தங்களின் பாதுகாப்புக் கருதி திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தொடர்பில் இருக்குமாறும்   மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

IMG_5387.jpeg

482065487_948461357457607_76634922119010

https://www.virakesari.lk/article/231629

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் வெள்ளத்தில் சிக்கிய 16 விவசாயிகள் பாதுகாப்பாக மீட்பு!

27 Nov, 2025 | 03:56 PM

image

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மற்றும் கொக்கிளாய் கிராமங்களைச் சேர்ந்த 16 விவசாயிகள், கல்நாட்டிவெளி வயல் பகுதிக்கு நேற்று புதன்கிழமை இரவு (26) காவல் பணிக்குச் சென்றிருந்தனர்.

ஆனால் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அவர்கள் வீடு திரும்ப முடியாத நிலையில் சிக்கிக்கொண்டனர்.

இந்நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை (27) பிற்பகல் 2.30 மணியளவில் கிராம மீனவர்கள் மற்றும் கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் சேர்ந்துகொண்டு ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து, அந்த 16 விவசாயிகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

மீட்புக்குப் பின்னர், அவர்கள் அனைவரும் பாதுகாப்பான நிலையில் உள்ளனரென முல்லைத்தீவு மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

WhatsApp_Image_2025-11-27_at_15.40.38.jp

WhatsApp_Image_2025-11-27_at_15.41.03.jp

WhatsApp_Image_2025-11-27_at_15.41.15.jp

https://www.virakesari.lk/article/231660

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர்!  

27 Nov, 2025 | 07:05 PM

image

வவுனியாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாக பலர் இடம்பெயரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.

பெரும்பாலான குளங்களில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக நீர் வான்பாய்ந்து வருவதோடு திருநாவற்குளம், தாண்டிக்குளம் உட்பட்ட பல்வேறு தாழ்நில பிரதேசங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. 

இதன் காரணமாக மக்கள் இடம்பெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி என்பன வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதன் காரணமாக போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

1000682818.jpg

பாவற்குளம் மற்றும் பேராறு நீர்த்தேக்கம் ஆகியவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு, அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் இடம்பெயரும் பட்சத்தில் அவர்களை தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் பிரதேச செயலக மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க கொழும்பிலிருந்து உடனடியாக வவுனியாவுக்கு வருகைதந்துள்ளதோடு நாளைய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட கூட்டமொன்றையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இடம்பெயரும் மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரால் அரசாங்க அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாக போக்குவரத்து நடைமுறைகள் தடைப்பட்டுள்ளதோடு மக்களின் அன்றாட வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்குண்ணாமடு மற்றும் நொச்சுமோட்டை ஆகிய பகுதிகளில் ஏ9 வீதியின் ஊடாக வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் சிறிய ரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை சமணங்குளம் குளத்தில் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அதனை மண்மூடைகளை நிரப்பி பாதுகாப்பு   செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

1000682478.jpg

1000682361.jpg


வவுனியாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர்!   | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பலகாமம் பிரதேச வயல் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து தடை

Published By: Digital Desk 3

27 Nov, 2025 | 04:05 PM

image

சீரற்ற கால நிலையால் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியின் முள்ளியடி பகுதி உட்பட பிரதான வீதியிலும் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதால் தரை வழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை (27) கடும்மழை காரணமாக குறித்த பகுதியின் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் தம்பலகாமம் கோயிலடி பகுதி நெற் செய்கை விவசாய நிலங்களும் மூழ்கியுள்ளன.

 200க்கும் மேற்பட்ட நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன். பாலம்போட்டாறு பத்தினிபுரம் முள்ளிப்பொத்தானை உள்ளிட்ட பகுதிகளின் தாழ் நிலப் பகுதிகளும் நீரால் மூழ்கியதுடன் வீடுகளுக்குல்லும் நீர் புகுந்ததால் பல்வேறு அசௌகரியங்களை பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்குகின்றனர். தாயிப் நகர்

தம்பலகாமம் கோயிலடி வைத்தியசாலை வரையான வீதியின் ஒரு பகுதி தரை வழிப் போக்குவரத்தும் வெள்ள நீரால் குறித்த வீதி ஊடறுத்துப் பாய்வதால் தடைப்பட்டுள்ளதுடன் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. 

இது போன்று குளக்டோட்டன் பாடசாலையின் முன்னால் உள்ள பாலம்போட்டாறு வரையான வீதியின் ஒரு பகுதியின் தரை வழிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பாதிப்புக்குள்ளான பகுதிகளை தம்பலகாமம் பிரதேச செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டு நீரை வழிந்தோடச் செய்யவும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தினார்.

IMG-20251127-WA0064.jpg

IMG-20251127-WA0063.jpg

IMG-20251127-WA0062.jpg

IMG-20251127-WA0061.jpg

IMG-20251127-WA0059.jpg

IMG-20251127-WA0058.jpg

IMG-20251127-WA0056.jpg

IMG-20251127-WA0055.jpg

https://www.virakesari.lk/article/231665

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையும் அதனை சுற்றியுள்ள கடலும் கடும் ஆபத்தில்! ‘சிவப்பு’ எச்சரிக்கை !

27 Nov, 2025 | 05:38 PM

image

இலங்கையின் தென் கிழக்கில் உருவாகி வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக, இலங்கையும் அதனைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கும் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தென்கிழக்கு கடற்பகுதியில் நிலவும் தாழமுக்கம், வலுப்பெற்று, மட்டக்களப்புக்கு தென்கிழக்கில் சுமார் 120 கிலோற்றர் தூரத்தில் மையங்கொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணிநேரங்களுக்குள் சூறாவளியாக (Cyclonic Storm) உருவெடுத்து, வட- வடமேற்கு திசையில் நகர அதிக வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வானிலை அமைப்பின் தாக்கத்தினால், நாடெங்கும் நிலவும் கனமழை மற்றும் பலத்த காற்று அடுத்த சில நாட்களும் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 200 மில்லிமீற்றருகு்கு மேற்பட்ட மிக கனமழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேற்கு மாகாணங்கள் மற்றும் மட்டக்களப்பு, பதுளை மாவட்டங்களில் 150 மில்லிமீற்றருக்கும் மேல் மழை எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின், ஏனைய பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் மேல் மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

அதேவேளை, நாடளாவிய ரீதியில் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்திலும், சில பகுதிகளில் 80 கிலோமீற்றர் வரை காற்றடிக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில், பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் 60–70 கிலோமீற்றர் மற்றும் இடையிடையே 80 கிலோமீற்றர் வரை காற்றடிக்கும். கடற்பரப்பில் 3.0 – 4.0 மீற்றர் உயரமுள்ள பெரும் அலைகள்  எழும்பக்கூடும். புத்தளம் முதல் காங்கேசன்துறை வரை — கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை வழியாக காற்று அதிகரிக்கக்கூடும்.

இதனால், கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கடற்படை மற்றும் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விழிப்புடன் இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் கடுமையான வானிலை குறித்து நவம்பர் 30, 2025 வரை பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அவசரநிலைகளில் அருகிலுள்ள பாதுகாப்பு நிலையங்களை தொடர்புகொண்டு உதவி பெறுமாரும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


இலங்கையும் அதனை சுற்றியுள்ள கடலும் கடும் ஆபத்தில்! ‘சிவப்பு’ எச்சரிக்கை ! | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் அடைமழை; கிட்டங்கியில் வெள்ளப்பெருக்கு

Published By: Digital Desk 3

27 Nov, 2025 | 04:37 PM

image

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் கிட்டங்கி தாம்போதி வீதியினை கடப்பவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய பொறுமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கமை நாவிதன்வெளி பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச சபை இலங்கை இராணுவம் கடற்படை கல்முனை பொலிஸார் சவளக்கடை பொலிஸார் தன்னார்வ ஆர்வலர்கள் இணைந்து இப்பொறிமுறையினை உருவாக்கியுள்ளதுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுப்போக்குவரத்துகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய உழவு இயந்திரம் இயந்திர படகுகள் ஊடாக இரு கரையிலும் உள்ள பொதுமக்கள் அத்திய அவசிய தேவைகளுக்காக ஏற்றி இறக்கப்பட்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.

இடையே  வீதி மூடப்பட்டு பொலிஸார் இராணுவம் பாதுகாப்பு கடமையில் இன்றும் ஈடுபட்டுள்ளதை காண முடிகின்றது.மேலும் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன்,வீதிகள் பலவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது. அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில்  அட்டாளைச்சேனை, தைக்கா நகர் , அக்கரைப்பற்று, நிந்தவூர்,காரைதீவு, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில்  மூழ்கிக் காணப்படுகின்றன.

மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலப் பிரதேசங்கள், வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

kiddanki__9_.jpeg

kiddanki__21_.jpeg

kiddanki__25_.jpeg

kiddanki__1_.jpeg

kiddanki__2_.jpeg

https://www.virakesari.lk/article/231674

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்டத்தில் 221 குடும்பங்கள் பாதிப்பு!

27 Nov, 2025 | 05:56 PM

image

(எம்.நியூட்டன்)

யாழ்.மாவட்டத்தில் 221 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்.மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 711 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஒரு வீடு முழுமையாகவும் 15 வீடுகள் பகுதிகளலும்பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 275 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 02 குடும்பங்களைச் சேர்ந்த 09 பேர் போக்காட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய், சங்கானை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம், வேலணை, சாவகச்சேரி, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் இதன் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் பொன்னாலை - பருத்தித்துறையின் ஏ.பி.019 வீதியின் 50km தொடக்கம் 55km வரையான பகுதி சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அப்பாதையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://www.virakesari.lk/article/231691

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு

Published By: Vishnu

28 Nov, 2025 | 02:30 AM

image

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் நிலவர அறிக்கை ; வேலணை, ஊர்காவற்றுறை ,காரைநகர் ,யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் ,சங்கானை ,கோப்பாய், சாவகச்சேரி ,பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 231 குடும்பங்களை சேர்ந்த 746 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களில் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் யா/போக்கட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 அங்கத்தவர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை கோப்பாய் பிரதேச செயலகத்திலே 1 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதெனவும் அதேவேளை அரியாலை உவர் நீர் தடுப்பணையில் 30 கதவுகளும் தொண்டைமானாறு உவர்நீர் தடுப்பணையின் 10 கதவுகளும் அராலி உவர் நீர் தடுப்பணையில் முழுமையாக 10 கதவுகளும் திறக்கபட்டுள்ளதுடன் தேவைக்கேற்ற வகையில் கதவுகள் திறப்பதற்குரிய தயார்நிலையில் நீர்பாசன திணைக்களம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நெடுந்தீவு பிரதேசத்தில் மாவலித்துறை வீதி பொதுப்போக்குவரத்து மேற்க்கொள்ள முடியாதவாறு முழுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும் நேற்றைய தினம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் விடுவிக்கப்பட்ட 0.75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டிலிருந்து அவசர வெள்ள தணிப்பு நடவடிக்கைகளுக்காக பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கு இணங்க அந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்க்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/231730

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணத்தில் கனமழை: 21 பெரிய குளங்கள் வான்பாயும் நிலையில் – நீர்ப்பாசனத் திணைக்களம்

Published By: Vishnu

28 Nov, 2025 | 02:36 AM

image

வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 54 மிகப் பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களில், வியாழக்கிழமை (27.11.2025) மாலை 6.00 மணி நிலவரப்படி 21 குளங்கள் வான்பாயும் நிலையில் உள்ளதாக வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-11-27_at_19.37.20_ad

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குளங்களின் நீர்மட்ட விவரங்கள் பின்வருமாறு:

வான் பாயும் நிலையிலுள்ள குளங்கள்: 21 

75%- 100% கொள்ளளவில் உள்ளவை: 07 

50% - 74% கொள்ளளவில் உள்ளவை: 07 

25% - 49% கொள்ளளவில் உள்ளவை: 12 

25% இலும் குறைந்த கொள்ளளவில் உள்ளவை: 05 

இதேவேளை, மாகாணத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களான இரணைமடு குளம் 37.13% கொள்ளளவையும், வவுனிக்குளம் 42% கொள்ளளவையும், முத்துஐயன்கட்டுக்குளம் 48% கொள்ளளவையும் கொண்டுள்ளன. 

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும், வவுனியா பகுதியில் இன்று காலை 7.00 மணி முதல் அதிகபடியான மழைவீழ்ச்சியாக 163 மி.மீ பதிவாகியுள்ளது. வவுனியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 172 மி.மீ மழைவீழ்ச்சியும், சேமமடுவில் 58 மி.மீ மழைவீழ்ச்சியும், முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் 101 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. 

இந்த அதிகளவான மழைவீழ்ச்சி காரணமாக, வவுனியா மாவட்டத்திலுள்ள பம்பைமடு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்தது. இதன் உயர் வெள்ள மட்டமானது (அதிகூடிய வான் பாயும் அளவு) 16 அங்குலமாக காணப்பட்ட போதும், தற்போதைய அதிக மழையால் 25 அங்குலமாக வான் பாய்ந்தது. இதனால் குளம் உடைப்பெடுக்கும் அபாயத்தைக் குறைப்பதற்காகவும், குளத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வான் வழிவாய்க்காலுக்கான தடுப்பணையின் ஒரு பகுதி வெட்டப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா மாவட்டத்தின் அலியாமருதமடு குளம் 10 அங்குல அளவிலும், கல்மடு குளம் 1 அடியும் வான் பாய்வதுடன், முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நீர்ப்பாசனத் திட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திணைக்களத்தின் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என நீர்ப்பாசனப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/231732

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் மொத்தமாக 3844 குடும்பங்களை சேர்ந்த 11350 பேர் பாதிப்பு!

28 Nov, 2025 | 12:35 PM

image

சீரற்ற வானிலை  மற்றும் டித்வா புயல் காரணமாக  திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 3844 குடும்பங்களை சேர்ந்த 11350 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய  கடந்த செவ்வாய்க்கிழமை (25) முதல் வெள்ளிக்கிழமை (28) காலை 8.00 மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில்  95 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 3515 குடும்பங்களை சேர்ந்த 9683 நபர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.04 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 204 குடும்பங்களை சேர்ந்த 589 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 85  குடும்பங்களை சேர்ந்த 299 நபர்களும், தம்பலகாமம் 188 குடும்பங்களை சேர்ந்த 563 நபர்களும், மொறவெவ 34 குடும்பங்களை சேர்ந்த 99 நபர்களும், சேருவில 105 குடும்பங்களை சேர்ந்த 401 நபர்களும்,  வெருகல் 16 குடும்பங்களை சேர்ந்த 48 நபர்களும், மூதூர் 750 குடும்பங்களை சேர்ந்த 2485 நபர்களும், கிண்ணியா 1600 குடும்பங்களை சேர்ந்த 3800 நபர்களும், கோமரங்கடவல 05 குடும்பங்களை சேர்ந்த 22 நபர்களும், பதவிஸ்ரீபுர 40 குடும்பங்களை சேர்ந்த 123நபர்களும், குச்சவெளி 870 குடும்பங்களை சேர்ந்த 2880 நபர்களும், கந்தளாய் 151 குடும்பங்களை சேர்ந்த 630 நபர்களும்  பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் தம்பலகாமம் பிரதேச செயல பிரிவில் தி/ஆதிகோனேஸ்வரா இடைத்தங்கல் முகாமில் 22  குடும்பங்களை சேர்ந்த 64 நபர்களும், இரு முகாம்களில் கிண்ணியா பாரதிபுரம் வைஷ்னவி மகாவித்தியாலயத்தில் 150 குடும்பங்களை சேர்ந்த 420 நபர்களும், கிண்ணியா அல் றவ்லா மகாவித்தியாலயத்தில் 30 குடும்பங்களை சேர்ந்த 95 நபர்களும் மொத்தமாக 180 குடும்பங்களை சேர்ந்த 515 நபர்களும், குச்சவெளி கமாஸ் நகர் பாலர் பாடசாலையில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 நபர்களும் பாதுகாப்பாக குறித்த இடைத் தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/231783

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் புங்குடுதீவுக்கு கொண்டு செல்ல கடற்படையினரின் உதவி

28 Nov, 2025 | 12:44 PM

image

யாழ்ப்பாணப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக புங்குடுதீவில் சிக்கிக்கொண்ட ஒரு பெண், அடைபட்ட அணுகல் சாலைகள் காரணமாக சிகிச்சை பெற முடியாமல், மாரடைப்பால் பாதிக்கப்பட்டார், இன்று  வெள்ளிக்கிழமை (28) காலை கடற்படையினரால் புங்குடுதீவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டார்.

அதன்படி, சம்பவம் தொடர்பாக வேலனி பிரதேச செயலகத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, கடற்படையினர் உடனடியாக பதிலளித்து, நோய்வாய்ப்பட்ட பெண்ணை அழைத்து வர மருத்துவக் குழுவுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஒன்றை அனுப்பினர்.

அங்கு, வெள்ளம் காரணமாக சிகிச்சைக்கு செல்ல முடியாமல், மாரடைப்பு காரணமாக மிகவும் உடல்நிலை பாதிப்பின்மையால் இருந்த குறித்த பெண், அடிப்படை முதலுதவி அளித்த பிறகு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் புங்குடுதீவு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

3.jpeg

4__3_.jpg

5.jpg

https://www.virakesari.lk/article/231784

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரற்ற வானிலை ; கிளிநொச்சியில் வெள்ள அபாயம்

28 Nov, 2025 | 01:37 PM

image

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகமான காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடு குளம் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 

இதனால் இன்று வெள்ளிக்கிழமை (28) காலை முதல், இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலர்பிரிவு அமைந்த பகுதிகளில், வெள்ள பாதிப்புகளை தணிக்க இராணுவத்தின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அதேவேளை, கனகாம்பிகை குளம் மற்றும் கல்மடு குளம் நீர் வெள்ளம் ஏற்படும் நிலையில் உள்ளன.

அனர்த்த நிலமையை கருத்தில் கொண்டு, குளத்தின் நீர்மட்டம் அதிகமான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிகுந்த அவதானத்துடன் செயல்படவும் மற்றும் தமது பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

590523894_3006370542880226_4953959429343

591626566_831632292814073_44771322948767

589581188_1522266989050980_3866040125120

591139006_741526048975935_12949434524545

https://www.virakesari.lk/article/231803

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரற்ற காலநிலையால் யாழில் ஏற்பட்ட பெரும் பாதிப்பு - வெளியான நிலவரம்

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 231 குடும்பங்களைச் சேர்ந்த 746 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன்போது ஒரு வீடு முழுமையாகவும் 17வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 9 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் பொன்னாலை - காரைநகர் வீதியில் கடல் நீர் வீதிக்கு வந்துள்ளதுடன், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதனால் கீரிமலை கடல் பகுதி கொந்தளிப்புடனும் காணப்படுகின்றது.

25-69296931ba4c0.webp

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வல்வெட்டித்துறை பகுதியில் காற்றுடன் தொடர்ச்சியான மழை பெய்த வண்ணம் காணப்படுகின்றது

தவிசாளரின் வாகனம் சேதம்

மேலும், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தனின் வாகனம் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் வாகனம் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.

இன்றையதினம் சேந்தாங்குளம் பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தை பார்வையிடுவதற்காக தவிசாளர் அங்கு சென்ற வாகனத்திற்கு மேல் முறிந்து விழுந்துள்ளது.

வெள்ள வாய்க்கால் அடைப்பு

பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட. திக்கம் நாச்சிமார் கோவிலடி வீதியின் வெள்ள வாய்க்கால் மழைகாரணமாக அடித்துச் செல்லப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் வாழைத்தண்டுகள் உட்பட்ட கழிவுகளால் வெள்ளம் வழிந்தோடும் மதகுகள் அடைபட்டிருந்தது.

இந்நிலையில் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது குறித்த மதகு மற்றும் வடிகால் என்பன பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் ரமேஸ்கரன் தலைமையில் களப்பணி உத்தியோகத்தர்கள் அடக்கலான குழுவினர் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் வெள்ளம் வழிந்தோடும் பிரதான வடிகாலாக குறித்த நாச்சிமார் கோவிலடி வெள்ளவாய்க்கால் காணப்படுகிறது.

செய்தி - தீபன், கஜிந்தன்

GalleryGallery

https://tamilwin.com/article/746-people-affected-in-jaffna-inclement-weather-1764320991

  • கருத்துக்கள உறவுகள்

நினைத்துப் பார்க்க முடியாத அளவு கவலையாய் இருக்கிறது . .......!

நீங்களும் சிரமம் பாராமல் தகவல்களைத் தந்து கொண்டு இருக்கிறீர்கள் .........நன்றி . ......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

நினைத்துப் பார்க்க முடியாத அளவு கவலையாய் இருக்கிறது . .......!

நீங்களும் சிரமம் பாராமல் தகவல்களைத் தந்து கொண்டு இருக்கிறீர்கள் .........நன்றி . ......!

அண்ணை, இன்று தொடக்கம் எமது பகுதியிலும் தொடர்மழை, காற்று வேகமாக வீசி மரங்களை வீழ்த்துகிறது. நாளை வரை இந்த நிலை தொடரலாம்.

தற்போது கையடக்க தொலைபேசி சேவை இயங்கவில்லை! மின்தடை இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரற்ற வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள்!

28 Nov, 2025 | 02:52 PM

image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் திட்வா புயல் காரணமாக முள்ளிப்பொத்தானை தம்பலகாமம் பிரதேச வயல் நிலப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை (28) தம்பலகாமம் ஊத்த வாய்க்கால் உடைப்பெடுத்துள்ளதால் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியால் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்கிறது.

குறித்த ஊத்தை வாய்க்கால் உடைப்பெடுத்ததால் அதனை சூழவுள்ள வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது. 

முள்ளிப்பொத்தானை,ஜாமியா நகர்,ஈச்சநகர்,பத்தினிபுரம், புதுக்குடியிருப்பு,கோயிலடி உள்ளிட்ட தாழ் நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளது. 

தம்பலகாமம்,கோயிலடி பகுதியில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களை சேர்ந்த 90 பேர்கள் தி/ஆதிகோனேஸ்வரா மகாவித்தியாலயத்தில் உள்ள இடைத் தங்கல் முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகள் தம்பலகாமம் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 11பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கிய வகையில் 124 கிராம சேவகர் பிரிவில் இருந்து 5433 குடும்பங்களை சேர்ந்த 16063 நபர்கள் இன்று காலை 11.00  பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

IMG-20251128-WA0028.jpg

IMG-20251128-WA0030.jpg

IMG-20251128-WA0032.jpg

https://www.virakesari.lk/article/231816

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மாவட்ட குளங்களில் வெள்ளப்பெருக்கு

28 Nov, 2025 | 04:28 PM

image

தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றன.

அத்தோடு கிளிநொச்சி மேற்கு பகுதியில் உள்ள குடமுருட்டி குளம் மாத்திரம் இன்று வெள்ளிக்கிழமை (28) மாலை வரையான தகவலின் படி வான் பாய்கின்றன.

இதன் காரணமாக  தாழ் நிலப்பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பல இடங்களில் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ளனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தமையால் மக்கள் தொடர்ந்தும் இடமபெயர்ந்து வருகின்றனர்.

IMG_20251128_113258.jpg

IMG_20251128_112927.jpg

IMG_20251128_113303.jpg

IMG_20251128_103059.jpg


கிளிநொச்சி மாவட்ட குளங்களில் வெள்ளப்பெருக்கு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து தகவல்களை தந்து கொன்டிருக்கும் ஏராளன் மற்றும் பிழம்பு ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் 166.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

29 Nov, 2025 | 08:45 PM

image

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த பலத்த மழை சனிக்கிழமை (29)  ஓயந்துள்ளது. எனினும் தொடர்ந்து வெள்ள நிலமை காணப்படுகின்றன. 

எது எவ்வாறாயிருப்பினும், மட்டக்களப்பு முகத்துவாரம், மற்றும் பெரியகல்வாறு ஆற்றுவாய் எனபன வற்றினூமாக மிக வேகமாக வெள்ளநீர் கடலை நோக்கிப் பாய்ந்து வருகின்றது.

இன்றிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றது. அதபோல் பெரிய நீர்ப்பாசனக் குளங்களாகவுள்ள வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம 19 அடி 7 அங்குலம், உறுகாமம் 16 அடி 3 அங்குலம், உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 29 அடி 6 அங்குலம்,  நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 29 அடியாக உயர்ந்துள்ளதாகவும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறு இருக்க இவ்வருடம ஆரம்பத்திலிருந்து சனிக்கிழமை (29) காலை 8.30 மணிவரையில் 166.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் இம்முறை செய்கை பண்ணப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பல ஆயிரக்கணக்கான நெல்வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,994 குடும்பங்களைச் சேர்ந்த 30,443 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  மாவட்ட அனர்த்த முன்னாயத்த பிரிவு தெரிவித்துள்ளது.

1001112093.jpg

pho__5_.png

https://www.virakesari.lk/article/231968

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரற்ற வானிலை காரணமாக யாழ்ப்பாணத்தின் முழுமையான பாதிப்பு!

29 Nov, 2025 | 08:46 PM

image

நிலவுகின்ற அசாதாரண வானிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6288 குடும்பங்களை சேர்ந்த 19 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பாதிப்புகள் குறிப்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 432 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு வீடுகள் பகுதிகளில் சேதமடைந்துள்ளன. நான்கு பாதுகாப்பான இடங்களில் 60 குடும்பங்களை சேர்ந்த 186 தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 1664 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 521 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மூன்று பாதுகாப்பு மையங்களில் 27 குடும்பங்களை சேர்ந்த 92 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்க்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 229 குடும்பங்களைச் சேர்ந்த 760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 222 குடும்பங்களைச் சேர்ந்த 699 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. ஒரு பாதுகாப்பு மையத்தில் 47 குடும்பங்களை சேர்ந்த 166 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

வேலனைப் பிரதேச செயலர் பிரிவில் 328 குடும்பங்களை சேர்ந்த 1035 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. மூன்று பாதுகாப்பு மையங்களில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 420 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 335 குடும்பங்களை சேர்ந்த 1085 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. ஆறு பாதுகாப்பு மையங்களில் 66 குடும்பங்களை சேர்ந்த 393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 251 குடும்பங்களைச் சேர்ந்த 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் முழுமையாகவும் 14 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. பாதுகாப்பு மையம் ஒன்றில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகர் பிரதேச செயலப்பிரிவில் அறுபது குடும்பங்களை சேர்ந்த 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. பாதுகாப்பு மையம் ஒன்றில் ஆறு குடும்பங்களை சேர்ந்த 18 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 508 குடும்பங்களைச் சேர்ந்த 1621 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 57 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 57 குடும்பங்களை சேர்ந்த 185 பேர் பாதிக்கப்பட்ட உள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடு ஒன்றும் அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் 601 குடும்பங்களை சேர்ந்த 2042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 1183 குடும்பங்களை சேர்ந்த 3526 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒரு வீடு முழுமையாகவும் ஒன்பது வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. ஐந்து அடிப்படைக் கட்டமைப்புகள் முழுமையாகவும் இரண்டு அடிக்கடி கட்டமைப்புகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு மையங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 58 குடும்பங்களை சேர்ந்த 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.  ஒன்பது வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளதுடன் ஒரு அடிப்படைக் கட்டமைப்பும் சேதமடைந்துள்ளது. ஒரு பாதுகாப்பு மையத்தில் எட்டு குடும்பங்களை சேர்ந்த 29 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் ஏழு குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 353 குடும்பங்களை சேர்ந்த 1104 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு மையங்களில் 95 குடும்பங்களை சேர்ந்த 255 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/231969

  • கருத்துக்கள உறவுகள்

இரவா, பகலா செய்திகளை வந்து பார்த்துட்டு தான் போறனான்.உங்கள் செய்தி இணைப்புக்களுக்கு மிக்க நன்றி ஏராளன்.நீங்களும் பத்திரமாக இருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன; கால்நடை வளர்ப்போர் வாழ்வாதாரம் பாதிப்பு

Published By: Digital Desk 1

30 Nov, 2025 | 08:45 AM

image

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மாவட்டத்தின் பல பகுதிகளிலில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

நானாட்டான், மடு, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆடு, மாடு உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

குறிப்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அவர்களினால் இயன்றளவிற்கு வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட கால் நடைகளை காப்பாற்றி படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றி உள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதோடு பிரதான பாதைகள்; மூழ்கியுள்ளன.

இதனால் மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி, மன்னார் - மதவாச்சி பிரதான வீதிகளின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளது. மேலும் மடு, மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி ஆகிய பகுதிகளிலுள்ள வீதிகளும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.

இதனால் மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் தொடர்புகள் இல்லாத நிலையில் மரங்களிலும், கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளவர்களை ஹெலிகப்டர் மூலம் மீட்கும் பணிகள் இன்றையதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MANNAR__1_.jpeg

MANNAR__2_.jpeg

MANNAR__4_.jpeg

MANNAR__5_.jpeg

MANNAR__14_.jpeg

https://www.virakesari.lk/article/232000

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு

Published By: Digital Desk 3

30 Nov, 2025 | 10:00 AM

image

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தின் பொக்கனியில் பதிவாகியுள்ளது. அதன்படி, அந்தப் பகுதியில் 274 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. 

குறிப்பிடத்தக்களவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள பிற மாவட்டங்கள் பின்வருமாறு:

மன்னார் - பொற்கேணி  - 210 மி.மீ.

மன்னார்  - மடு - 193 மி.மீ.

கேகாலை - துனுமல்லே பகுதி - 181 மி.மீ.

கம்பஹா - கிரிந்திவலை,  - 121 மி.மீ.

நுவரெலியா - கிலேண்டில்ட் பகுதி  - 104 மி.மீ.

https://www.virakesari.lk/article/232007

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி கிழக்கு பகுதியில் இறந்த நிலையில் கால்நடைகள்

30 Nov, 2025 | 11:22 AM

image

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்  சீரற்ற காலநிலையால் யாழ். வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்துள்ளன. 

இறந்து கிடக்கும் கால்நடைகளை அகற்றும் பணிகளை உடனடியாக பருத்தித்துறை பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றனர்.

கால்நடைகள் உயிரிழந்தமைக்கான காரணம் என்ன என தெரியவரவில்லை.

1001248679.jpg

https://www.virakesari.lk/article/232019

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.