Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஓபரேஷன் சாகர் பந்துவின் கீழ், நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான பேரிடர் மீட்பு (HADR) ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூறாவளி பேரனர்த்தத்திற்கு உதவுமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. 

இந்நிலையில், இலங்கையில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் ஹெலிகாப்டர்களை அனுப்ப உள்ளது.

நிவாரண நடவடிக்கைகள் 

மேலும், இது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இட்டுள்ள பதிவில், 

"டிட்வா சூறாவளியால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு | India Dispatches Relief Pm Modi Cyclone Ditwah

பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான மீட்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன்.

நமது நெருங்கிய கடல்சார் அண்டை நாடுகளுடன் ஒற்றுமையுடன், இந்தியா ஒபரேஷன் சாகர் பந்துவின் கீழ் நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான HADR ஆதரவை அவசரமாக அனுப்பியுள்ளது.

மோசமான நிலைமை உருவாகும்போது மேலும் உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் தொலைநோக்கு பார்வை மஹாசாகர் ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டு, இந்தியா அதன் தேவைப்படும் நேரத்தில் இலங்கையுடன் தொடர்ந்து உறுதியாக நிற்கிறது” என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/india-dispatches-relief-pm-modi-cyclone-ditwah-1764326128

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க தயாராக இருக்கிறோம் - இந்திய பிரதமர் நரேந்திர மோடி

28 Nov, 2025 | 04:12 PM

image

டிட்வா சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக தமது அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களின் பாதுகாப்பிற்கும், ஆறுதலுக்கும், விரைவான மீட்சிக்கும் நான் பிரார்த்திக்கிறேன்.

இந்தியாவின் 'சாகர் பந்து' நடவடிக்கையின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிலைமைக்கு ஏற்ப மேலும் பல உதவிகள் மற்றும் ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்த நேரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவும் உறுதியாகவும் நிற்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/231831

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 தொன் உணவு நன்கொடை!

Published By: Digital Desk 1

28 Nov, 2025 | 03:46 PM

image

கொழும்பு துறைமுகத்தில் தற்போது நங்கூரமிடப்பட்டுள்ள இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த், நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, தனது கையிருப்பில் இருந்து 4.5 தொன் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

அத்துடன், கப்பல் கூடாரங்கள், மின்சார மின்விளக்குகள் மற்றும் மின்னூக்கி கேபிள் கம்பிகள் உள்ளிட்ட இரண்டு தொன் பிற நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்கள் லொரிகளில் ஏற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/231825

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் நங்கூரமிட்டுள்ள விக்ராந்த் மற்றும் உதயகிரி ஆகிய கப்பல்களிலிருந்து இலங்கைக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்தது இந்தியா!

28 Nov, 2025 | 05:01 PM

image

இலங்கையில் தற்போதைய கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உருவான கடுமையான பாதிப்பு நிலைமையை முன்னிட்டு, இந்திய அரசு அவசர நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படை கப்பல்களான ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant) மற்றும் ஐ.என்.எஸ் உதயகிரி (INS Udaygiri) ஆகியன இலங்கை கடற்படையின் 75 ஆவது நிறைவு ஆண்டை கொண்டாட கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்களை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெய்ஷங்கர் தனது பதிவில், “இலங்கையில் நிலவும் அனர்த்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்தியா உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்க ஆரம்பித்துள்ளது. இரண்டு இந்திய கடற்படை கப்பல்கள் நிவாரணப் பொருட்களுடன் கொழும்பில் தரையிறங்கியுள்ளன,” என குறிப்பிட்டுள்ளார்.

நிவாரணப் பொருட்களில் உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், அவசர மீட்பு உபகரணங்கள், குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகள் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரிய நட்புறவை மீண்டும் வலுப்படுத்தும் விதமாக இந்தியாவின் இந்த அவசர உதவி முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் தமது அன்புக்குரியவர்களை இழந்திருக்கும் குடும்பங்களுக்கு அனுதாபத்தை வெளிப்படுத்தியிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 'சாகர் பந்து' திட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் மற்றும் அவசியமான மனிதாபிமான உதவிகள், அனர்த்த நிவாரணங்களை உடனடியாக அனுப்பிவைத்திருப்பதாக அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாக பலர் உயிரிழந்திருப்பதுடன், பெருமளவான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டோருக்கான அனுதாபத்தையும், இக்கடினமான சூழ்நிலையில் இந்தியாவின் உடன்நிற்பையும் வெளிப்படுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவரது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

'டித்வா சூறாவளி காரணமாக தமது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரித்துக்கொள்கிறேன். அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் துரித மீட்சிக்காகப் பிரார்த்திக்கிறேன்' என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை 'எமது மிகநெருங்கிய அயல்நாட்டுடனான உடன்நிற்பை வெளிப்படுத்தும் வகையில் 'சாகர் பந்து' திட்டத்தின்கீழ் நிவாரணப்பொருட்கள் மற்றும் அவசியமான மனிதாபிமான உதவிகள், அனர்த்த நிவாரணங்களை இந்தியா உடனடியாக அனுப்பிவைத்துள்ளது. இந்நிலைவரம் தீவிரமடையும் பட்சத்தில் அவசியமான மேலதிக உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 'அயலகத்துக்கு முதலிடம் மற்றும் 'விஷன் மகாசாகர்' ஆகிய கொள்கைகளின் பிரகாரம் மிக அவசியமான இத்தருணத்தில் இலங்கையுடன் இந்தியா உடன்நிற்கும் எனவும் பிரதமர் மோடி அப்பதிவில் உறுதியளித்துள்ளார். 

4.jpeg

3.jpeg

2.jpeg

1.jpeg


கொழும்பில் நங்கூரமிட்டுள்ள விக்ராந்த் மற்றும் உதயகிரி ஆகிய கப்பல்களிலிருந்து இலங்கைக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்தது இந்தியா! | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானம் நாட்டிற்கு

Nov 29, 2025 - 06:11 AM

நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானம் நாட்டிற்கு

இந்தியா - இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய விமானம் ஒன்று இன்று (29) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. 

இந்த நன்கொடையில் சுகாதாரப் பொருட் தொகுதிகள் அடங்குகின்றன. 

இதனை இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளது. 

இந்திய நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மற்றொரு விமானம் இன்று (29) முற்பகலில் இலங்கையை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள டிட்வா புயலில் தமது அன்புக்குரிய உறவுகளை இழந்த இலங்கை மக்களுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் வௌியிட்டுள்ளார். 

அது தொடர்பில் அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, 

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் துரித மீட்சிக்காக நான் பிரார்த்திக்கின்றேன். 

கடல்மார்க்கமாக மிகவும் நெருங்கிய அயலுறவுடன் எமது கூட்டொருமைப்பாட்டினை காண்பிக்கும் முகமாக சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் முக்கிய HADR உதவி மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா உடனடி அவசர உதவியாக அனுப்பி வைத்துள்ளது. 

எவ்வாறான சூழலிலும் தேவையான மேலதிக ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க நாம் தயாராக உள்ளோம். 

இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் மஹாசாகர் தொலைநோக்கு ஆகியவற்றின் வழிகாட்டலுடன், உதவிகள் தேவைப்படும் எந்நேரத்திலும் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து துணைநிற்கும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

 https://www.youtube.com/watch?v=V_Sdf2mv8Z8

https://adaderanatamil.lk/news/cmijkg5l3024vo29n4dixe240

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் 2ஆவது விமானமும் கொழும்பை வந்தடைந்தது!

29 Nov, 2025 | 03:11 PM

image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் இரண்டாவது விமானமும் சனிக்கிழமை (29) கொழும்பை வந்தடைந்துள்ளது. 

https://www.virakesari.lk/article/231935

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொத்மலை அனர்த்தத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண், காயமடைந்த இருவர், வெளிநாட்டவர்கள் உட்பட 24 பேர் இந்திய விமானப்படையின் ஒத்துழைப்புடன் மீட்பு

30 Nov, 2025 | 04:45 PM

image

கொத்மலை பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கியிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், காயமடைந்த இருவர் உட்பட வெளிநாட்டவர்கள் அடங்கலாக  24 பேரை இந்திய விமானப் படையினரின் உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்டு பாதுகாப்பாக கொழும்புக்கு கொண்டுசென்றுள்ளனர். 

இன்று (30)  இந்திய அரசினால் மீட்புப் பணிகளுக்காக வழங்கப்பட்ட இந்திய விமானப்படையின்   MI 17 (Indian Ac) ஹெலிக்கொப்டர் மூலம்  இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Capture.JPG

w.JPG

78.JPG

8f4ed3e8-14a2-47c7-93a1-2167f701def9.jpg

https://www.virakesari.lk/article/232059

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிவாரணப்பொருட்களுடன் இலங்கை வந்தடைந்த  இன்னுமொரு இந்திய  விமானம்

Published By: Digital Desk 3

01 Dec, 2025 | 09:53 AM

image

விங் கமாண்டர் சஞ்சய் குமார் தலைமையிலான இந்திய விமானப்படையின் C-130J விமானம் நேற்று (30) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதில் இரண்டு BHISHM க்யூப்கள் மற்றும்  ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவும் வந்தடைந்தது. 

BHISHM க்யூப்கள் என்பது பேரிடர் பாதிப்பு பகுதிகள் மற்றும் தொலைதூர இடங்களுக்கு விரைவாக கொண்டு செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட, தன்னிறைவு பெற்ற தொகுதி மருத்துவ பிரிவுகள் ஆகும். ஒவ்வொரு க்யூபும் அவசர மருத்துவ சேவைகள், காயச்சிகிச்சை, அடிப்படை அறுவை சிகிச்சை, உயிர்  காப்பு  வசதிகள் போன்றவற்றை வழங்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இவை உடனடி மனிதாபிமான மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவக்கூடியவை. 

வருகை தந்துள்ள இந்திய விமானப்படை  மருத்துவக் குழு, BHISHM க்யூப்களின் செயல்பாடு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து இலங்கை மருத்துவ நிபுணர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளது.  இதன்மூலம், இந்த அனர்த்ததினால்  பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு  உதவி வழங்கும்  கூடியதாக இருக்கும். 

பயிற்சி மற்றும் மீட்பு பணிகள் முடிந்த பின்னர், இந்த இரண்டு BHISHM க்யூப்களும் அதிகாரப்பூர்வமாக இலங்கைக்கு வழங்கப்பட உள்ளன.  இதன் மூலம்  இந்த நாட்டின் பேரிடர் தயார்நிலை மற்றும் அவசர மருத்துவ செயல்திறனை மேம்படுத்த முடியும்.

https://www.virakesari.lk/article/232115

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எப்பொழுதும் ஒரு சந்தேகம் உள்ளது. இந்தியாவின் மாநிலம் தமிழ்நாடா அல்லது இலங்கையா?? ஆடு நனைந்தால் ஓநாய் ஏன் துள்ளி வருகுவது??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிவாரண பொருட்களோட இந்திய விமானங்கள் ஏதாவது பலாலி பக்கம் பறந்த சிலமன் ஏதாவது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் திருகோணமலையை வந்தடைந்தது இந்திய கடற்படை கப்பல்

Published By: Digital Desk 3

01 Dec, 2025 | 03:09 PM

image

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல் 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை (01) காலை 10 மணிக்கு திருகோணமலை அஸ்ரப் இறங்கு துறையை வந்தடைந்தது.

இந்த நிவாரணப் பொருட்கள் கிழக்கு மாகாணத்தில் தற்போதைய அனர்த்த நிலைகளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு வழங்கப்படவுள்ளது.

இக்கப்பலை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்ரா, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் சாய் முரளி,கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்தணசேகர,கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரவீந்திர திசேரா,மாவட்ட அரசாங்க அதிபர்,மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் இறங்கு துறையில் வைத்து வரவேற்றனர்.

இதனை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை கப்டன் முகுந்,இலங்கையின் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவிடம் நிவாரண பொருட்களை இறங்கு துறையில் வைத்து ஒப்படைத்தார்.

"சமுத்திரத்தில் தோழமை" (சாஹர் பந்து) என்ற உதவித்திட்டத்தின் கீழ் உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள், குடிநீர், படுக்கை விரிப்புக்கள், சுகாதார சுத்திகரிப்பு பொருட்கள், உடைகள், துவாய்கள், பெண்களுக்கான சுகாதார துவாய்கள் கொண்ட இவ் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

20251201_102815.jpg

20251201_114937.jpg

20251201_114958.jpg

https://www.virakesari.lk/article/232145

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

நிவாரண பொருட்களோட இந்திய விமானங்கள் ஏதாவது பலாலி பக்கம் பறந்த சிலமன் ஏதாவது?

இல்லை. என்று. தான். நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தன். உதவினாலும். குறை. சொல்லுவன் உதவாவிட்டாலும். குறை. சொல்லுவன். மேலும். அண்மையில். ஒரு. விளம்பரம். பார்த்தேன். கந்தர்மடத்தில். ஒரு. பரப்பு. காணி. ஒரு. கோடி. ரூபாக்கள். இப்படி. காணி. வேண்டுவோர். விற்ப்பவர்களுக்கு. உதவி. தேவையா. ?

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த. மாக. சங்களும். லட்சக்கணக்கான. பிக்குமாரும். என்ன. ? செய்து கொண்டிருக்கிறார்கள். ? களத்தில். இறங்கி. உதவ்வில்லை. இந்தியாவையும். குறை சொல்லவில்லை. எல்லா. விடயங்களிலும். இப்படியிருந்தால். நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

இல்லை. என்று. தான். நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தன். உதவினாலும். குறை. சொல்லுவன் உதவாவிட்டாலும். குறை. சொல்லுவன். மேலும். அண்மையில். ஒரு. விளம்பரம். பார்த்தேன். கந்தர்மடத்தில். ஒரு. பரப்பு. காணி. ஒரு. கோடி. ரூபாக்கள். இப்படி. காணி. வேண்டுவோர். விற்ப்பவர்களுக்கு. உதவி. தேவையா. ?

ஔவையார் நன்னெறிகளையும் திருவள்ளுவர் குறள்களையும் மனப்பாடம் செய்து பரீட்சையில் வெற்றி பெறுபவன் ஈழத்தமிழன்.அவை இரண்டும் உலகில் அங்கீகரிக்கப்பட்டவை.

ஆனால் பொய்யான மகாவம்சத்தை படித்து பட்டதாரிகளாக வேண்டிய அவசியம் ஈழத்தமிழனுக்கு இல்லை.எனவே இலங்கை தமிழனுக்கு சகல தகுதியும் இருக்கு. அது போல் அவன் மண்ணுக்கும் பெறுமதி இருக்கு.

மற்றும் படி குறை சொல்லும் பழக்கம் இந்த உலகில் யாருக்குத்தான் இல்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, விசுகு said:

எனக்கு எப்பொழுதும் ஒரு சந்தேகம் உள்ளது. இந்தியாவின் மாநிலம் தமிழ்நாடா அல்லது இலங்கையா?? ஆடு நனைந்தால் ஓநாய் ஏன் துள்ளி வருகுவது??

சீனன் வருவதற்கு முன் முதல் கதிரையை பிடிக்க முயற்சி செய்கின்றார்கள் போலும்... ஆனாலும் தமிழனை விட சிங்களத்திற்கு நன்கு தெரியும் கிந்தியன் யாரென.....

காரியம் முடிய கடந்து விடுவான்.அவன் எப்படியோ இவனும் அப்படியே...

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சீனன் வருவதற்கு முன் முதல் கதிரையை பிடிக்க முயற்சி செய்கின்றார்கள் போலும்... ஆனாலும் தமிழனை விட சிங்களத்திற்கு நன்கு தெரியும் கிந்தியன் யாரென.....

காரியம் முடிய கடந்து விடுவான்.அவன் எப்படியோ இவனும் அப்படியே...

இந்தியா. என்ற. நாடு. இல்லை. என்று கற்பனை செய்வோம். சீனா. இலங்கைக்கு. உதவுவான. ?இல்லையா. ? இதேபோல். சீனா. என்ற. நாடு. இல்லை. என்று. வைப்போம். இந்தியா. இலங்கைக்கு. உதவுமா. ? இல்லையா. ? சீனாவும். இந்தியாவும். ஒற்றுமையாகத். தான். இருக்கிறார்கள். நாங்கள். தான். தேவையற்ற. சிந்தனைகளும்் கற்பனைகளும். செய்கிறோம்.

8 hours ago, குமாரசாமி said:

மற்றும் படி குறை சொல்லும் பழக்கம் இந்த உலகில் யாருக்குத்தான் இல்லை?

சரி. தான.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, Kandiah57 said:

இந்தியா. என்ற. நாடு. இல்லை. என்று கற்பனை செய்வோம். சீனா. இலங்கைக்கு. உதவுவான. ?இல்லையா. ? இதேபோல். சீனா. என்ற. நாடு. இல்லை. என்று. வைப்போம். இந்தியா. இலங்கைக்கு. உதவுமா. ? இல்லையா. ? சீனாவும். இந்தியாவும். ஒற்றுமையாகத். தான். இருக்கிறார்கள். நாங்கள். தான். தேவையற்ற. சிந்தனைகளும்் கற்பனைகளும். செய்கிறோம்.

இந்த உலகில் பிரச்சனைகளே இல்லை என்றால்.....?

நீங்கள் சீனா ரெஸ்ரோரண்டில் வேலை செய்ய வேண்டிய அவசியமும் வந்திருக்காது.நானும் கண்டவன் கிண்டவனுக்கு உழைச்சு குடுக்கவேண்டிய நிலையும் வந்திருக்காது.😁

உலக மேலாதிக்க அரசியல் என்பது ஒரு சீட்டாட்டம் போன்றது.முதலில் அமெரிக்கா ரஷ்யா. இன்று மேற்குலகு பாலூட்டி வளர்த்த கிளி சீனாவும் அந்த சீட்டாட்டத்தில் சேர்ந்து விட்டது. இங்கே மனித உயிர்களுக்கு மதிப்பில்லை. எமது வீட்டில் எப்படி தினசரி கோழி இறைச்சி பன்றி இறைச்சியோ அது போல்தான் அவர்களுக்கு மனித உயிர்களும்....

வெற்றி நிச்சயமில்லை ஆயினும் வீரம் முக்கியம் கந்தையர். அதுதான் இன்றைய உலக அரசியல்.😎

நிற்க...

ஐ போனில் எப்படி அடிக்கடி குற்று போடாமல் தமிழில் எழுதுவது பற்றி சொல்லித்தர உவ்விடம் நான் வரவா? வந்தால் 100 செலவாகும் ...ஓகேயா? 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் இந்தியா

Dec 4, 2025 - 01:49 PM

நாட்டிற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் இந்தியா

டித்வா புயல் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, சாகர்பந்து நடவடிக்கை மூலம் இந்தியா தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருகின்றது. 

அதற்கமைய, மேலும் நிவாரண உதவிகளுடன் C17 விமானம் நேற்று (3) இரவு இலங்கையை வந்தடைந்தது. 

குறித்த விமானத்தின் ஊடாக பெய்லி பாலம் ஒன்றும் 500 நீர் சுத்திகரிப்பு சாதனங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

டித்வா புயலினால் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு இடையிலான வீதி இணைப்புகளை மீளமைக்க இந்த பாலம் உதவும் என குறிப்பிடப்படுகின்றது.

 https://adaderanatamil.lk/news/cmir60u1g02dgo29nk6cz6p89

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அனர்த்த நிவாரணங்களை ஏற்றிய 8வது விமானமும் நாட்டுக்கு

Dec 4, 2025 - 04:38 PM

இந்திய அனர்த்த நிவாரணங்களை ஏற்றிய 8வது விமானமும் நாட்டுக்கு

இந்திய அனர்த்த நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது விமானமும் இன்று (04) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 

அவ்விமானத்தில் 53 மெட்ரிக் தொன் எடையுள்ள, 110 அடி நீளமான, இரண்டு வழித்தடங்களைக் கொண்ட இரும்பு பெய்லி பாலம் (Bailey bridge) ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இது இந்திய அரசினால் நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள 10 பாலங்களில் 2வது பாலமாகும். 

இப்பாலம் உட்பட இந்திய விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட பொருட்கள் தொகையை இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு அதிகாரிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 

இப்பாலம் இந்திய இராணுவ பொறியியலாளர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு அதிகாரிகளால் இணைந்து நுவரெலியா பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. 

இதற்கு மேலதிகமாக படகுகள், சீனி மற்றும் மின்பிறப்பாக்கிகள் தொகையொன்றும் இந்திய உதவிகளில் அடங்குகின்றன. 

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலாய அதிகாரிகள் குழுவொன்று மற்றும் இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவு மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமூகமளித்திருந்தனர்.

https://adaderanatamil.lk/news/cmirc18lw02dso29nrp1xqzoa

  • கருத்துக்கள உறவுகள்

Av70.gif

மோடி சார்.... விகாரை கட்டுவதற்கு, ஒரு கப்பல்

செங்கலும் தந்து உதவும் படி வேண்டுகின்றோம்.

இப்படிக்கு,

ஆமத்துறு. 😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நாடு திரும்பினர்!

Published By: Digital Desk 3

05 Dec, 2025 | 03:43 PM

image

வெள்ளப் பேரிடரின் போது அவசர மீட்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய தேசிய பேரிடர் மீட்புக் (NDRF) குழுவினர் தங்களது ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நிறைவுசெய்த நிலையில், இன்று இலங்கையை விட்டு புறப்பட்டனர்.

டித்வா புயலால் இலங்கையின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனிதாபிமான நடவடிக்கையாக இந்தியா அரசு ‘சாகர் பந்து’ நடவடிக்கையின் கீழ் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF)யை தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக அனுப்பியது.

டித்வா சூறாவளிக்குப் பின்னர் முதல் 24 மணிநேரத்திற்குள் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புப் பணியாளர்கள் குழுவை அனுப்பிய முதல் நாடு இந்தியா. தங்களது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர்கள், இன்று வெள்ளிக்கிழமை (05) கொழும்பில் இருந்து புறப்பட்டனர்.

இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில், இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் பல மாவட்டங்களில் விரிவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. 80 சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் K9 நாய்கள் அடங்கிய குழு, நவம்பர் 29ஆம் திகதி இலங்கையை வந்தடைந்து உடனடியாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பதுளை, நீர்கொழும்பு கொச்சிக்கடை, புத்தளம், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய வெள்ளம் மற்றும் மண்சரிவு தாக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறிப்பாக, நீரில் மூழ்கிய குடியிருப்புகளுக்குள் சென்று மக்களை மீட்டமை, வீடுகளில் சிக்கியிருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியமை, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டமை, நிவாரண பொருட்களை விநியோகித்தமை, அவசர மருத்துவ உதவி வழங்கியமை போன்ற பல முக்கிய பணிகளை  இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் முன்னெடுத்தன.

இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு சுமார் 150 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியது. உயிரிழந்தவர்களை மீட்டதோடு, சிக்கியிருந்த மிருகங்களையும் மீட்டது. நீர்மட்ட உயர்வு, அணுகுமுறை சேதம் மற்றும் ஆபத்தான நிலப்பரப்பு இருந்தபோதிலும், உதவி வேண்டிய ஒவ்வொரு அழைப்பிற்கும் பதிலளித்து செயற்பட்டது.

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பு உதவிகளை வழங்கினர். இது அவர்களின் மனிதாபிமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

மண்சரிவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்தில்,  இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் 8–10 அடி ஆழம் வரை மண், பாறை, சேறு ஆகியவற்றை தாண்டி, மோசமான வானிலை மற்றும் இடிந்து விழும் அபாயம் உள்ள சரிவுகளின் நடுவே நீண்ட தூரம் நடந்து சென்றும் மீட்பு பணிகளை முன்னெடுத்தன.

இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு, நீர்கொழும்பு கொச்சிக்கடை மற்றும் வென்னப்புவ உள்ளிட்ட பகுதிகளில் 1,600க்கும் மேற்பட்ட உணவுப் பொதிகளை விநியோகித்தன. தொடர்பாடல் முறை பெருமளவில் செயலிழந்திருந்ததால், இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர உதவியாக அமைந்தது.

கம்பஹா மாவட்டத்தில் கழிவு நீரில் கலந்த 14 கிணறுகளை சுத்தம் செய்து, பாதிக்கப்பட்ட கிராமங்களில் தூய்மையான குடிநீரையும்  இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு வழங்க உதவினர்.

இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு, வெள்ள மீட்பு, இடிந்து விழுந்த கட்டடங்கள், மண்சரிவு, சூறாவளி, இரசாயன அவசரநிலைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பேரிடர் நடவடிக்கைகளில் சிறந்த நிபுணத்துவம் பெற்றது.

நவீன உபகரணங்களும் பயிற்சி பெற்ற K9 நாய்களையும் கொண்ட இந்த அமைப்பு, இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல நாடுகளில் பேரிடர் உதவியில் ஈடுபட்டுள்ளது. பூட்டான், மியான்மார், நேபாளம், துருக்கி, ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்கு முன்னர் உதவி செய்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் இலங்கையில்  இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு மேற்கொண்ட பணிகள், இந்தியா – இலங்கை உறவின் ஆழமான மனிதாபிமான பிணைப்பையும் நீடித்த கூட்டுறவையும் வெளிப்படுத்துகின்றன.

https://www.virakesari.lk/article/232526

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“சாகர் பந்து” நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு உதவி : 9வது இந்திய நிவாரண விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது!

Published By: Digital Desk 1

07 Dec, 2025 | 12:10 PM

image

இந்தியாவால் பெயரிடப்பட்ட "சாகர் பந்து" நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு அனர்த்த நிவாரண உதவிகளை ஏற்றிச் செல்லும் 9வது இந்திய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் 110 அடி நீளம், 65 மெட்ரிக் தொன் எடையும் கொண்ட பெய்லி பாலம், ஒரு ஜேசிபி பேக்ஹோ வாகனத்துடன் இந்திய இராணுவ பொறியியலாளர் படையின் 13 பொறியாளர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சரக்கு விமானமான சி-17, நேற்று (6) பிற்பகல் 3.15 மணிக்கு இந்தியாவின் ஆக்ராவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

இலங்கை இராணுவ பொறியியலாளர் படையின் அதிகாரிகள் குழுவும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் குழுவும் இதனை வரவேற்றனர்.

IMG-20251206-WA0193.jpg

IMG-20251206-WA0181.jpg

IMG-20251206-WA0187.jpg

https://www.virakesari.lk/article/232659

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது!

09 Dec, 2025 | 03:59 PM

image

இந்திய அரசாங்கத்தின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (9) பிற்பகல் வந்தடைந்துள்ளது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு பொருட்கள் மற்றும் அனர்த்த நிவாரண பொருட்கள் இந்த விமானத்தில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானத்தில் உள்ள பொருட்களின் மொத்த நிறை  600 கிலோ எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்திய அரசாங்கத்தினால் அனர்த்த நிவாரண சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. 

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசாங்கத்தினால் மேலும் பல அனர்த்த நிவாரண சேவைகள் இலங்கைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

IMG-20251209-WA0284.jpg

IMG-20251209-WA0274.jpg

https://www.virakesari.lk/article/232883

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றுமொரு ஹெலிகொப்டர் கட்டுநாயக்கவை வந்தடைந்தது!

09 Dec, 2025 | 03:05 PM

image

இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றுமொரு ஹெலிகொப்டர் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (09) பிற்பகல் வந்தடைந்துள்ளது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண சேவை வழங்குவதற்காக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு  ஹெலிகொப்டர்கள் அத்தியாவசிய தேவை காரணமாக மீண்டும் இந்தியா நோக்கி இன்று பயணமாகியது. 

இதனையடுத்து, இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றுமொரு ஹெலிகொப்டர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அனர்த்த நிவாரண சேவைக்காக இந்த ஹெலிகொப்டரில் 14 இந்திய வீரர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசாங்கத்தினால் மேலும் பல அனர்த்த நிவாரண சேவைகள் இலங்கைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

IMG-20251209-WA0103.jpg

https://www.virakesari.lk/article/232875

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.