Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.

தாமே செய்தியை உருவாக்கிய காலம் கைத்தொலைபேசி பொதுமக்களிடம் சரளமாக பாவனைக்கு வந்த காலத்திலிருந்தே தொடங்கியது.

அதற்கு முன் பொய் செய்திகள் பரப்பட்டதில்லை.

75 ஆண்டுகளும் பொய் செய்தி பரப்பப்பட்ட காலங்கள் அல்ல.

பிரச்சனைகளை இனங்கண்டு அதை உரிய முறையில் தீர்ப்பதை விடுத்து செய்தி மிகைப்படுத்துதல் வெற்று உசுப்பேற்றுதல், வெற்று கோசங்கள், கற்பனைகள் மூலம் கட்டி எழுப்பப்பட்டதே தமிழ் தேசிய கோமாளிக் கருத்தியல்.

கடந்த 15 வருடங்களில் சமூக ஊடக வருகையால் பொய் செய்திகள் விஸ்வரூபம் எடுத்துள்ளதே யொழிய அத்தனையும் காலாகாலமாக அந்த காலத்திற்கேற்ற முறையில் தமிழ் தேசியம் பேசியவர்களிடம் இருந்தவையே.

அதனாலேயே அதனால் ஒரு அங்குலம் கூட முன்னே நகர முடியமல் நின்ற இடத்தில் அப்படியே நின்று குறளி வித்தை காட்டுகின்றனர். வெட்டி வீரம் பேசுவதும் பின்னர் புலம்புவதும் தமிழ் தேசிய அரசியலில் மாறாத சுற்றுவட்டம். இந்த வட்டத்தை சுற்றிச் சுற்றியே தமிழ் தேசியம் பேசும் தாயக/ புலம் பெயர் கோமாளிகள் பொழுது போக்குகின்றனர்.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

முன்னாள் இங்கிலாந்து பிரதமர் இலங்கை வந்தபோது, அவர் யழ்ப்பாணம் சென்று மக்களை சந்திக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தபோது, இலங்கை அரசாங்கம் அதற்கு பல தடைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் அவர் அங்கு வந்தபோது தமிழ் மக்கள், செல்வராசா கஜேந்திரன், அனந்தி அவர்களோடு பல மத குருமார் சந்திக்க காத்திருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை சந்திக்க முடியாமல் அவர்களை தடுத்து தள்ளி விழுத்தினர், அப்போது அனந்தி ஒரு பெண்ணாக இருந்தும் சில ஆவணங்கள் ஓடிச்சென்று டேவிட் கமரூனின் வாகனத்தின் யன்னல் வழியாக கொடுத்தார் . அந்நேரம் அங்கெ தமிழ்பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர் வேறு யாருமிருக்கவில்லை. சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்கள் யாழ்நூலகத்திலிருந்து பின்கதவு வழியாக சென்றனர். பின்னர் டேவிட் கமரூன், இடம் பெயர்ந்த மக்களின் குடிசைகளுக்கு சென்று அவர்களின் துயரம் நிறைந்த, வெள்ளம் நின்ற இடங்களில் அவர்களின் தற்காலிக குடிசைகளுக்கு சென்று பார்வையிட்டார், அதன் பின் வேறொரு சம்பவத்தில் சம்பந்தனும் சுமந்திரனும் மக்களை சந்திக்க சென்றபோது மாப்பிளை அழைக்கவா பட்டு வேட்டியோடு வந்தீர்கள் என்று மக்கள் கேள்வி கேட்டு அவர்களோடு உரையாட மறுத்து வெளியேற்றியிருந்தனர். நீங்கள் இணைந்திருந்த படம் கமரூன் மக்களோடு உரையாடியதாக இருந்திருக்கலாம். அந்த போராட்டங்களின் பின்னே மக்களை சென்று பார்வையிட்டார் அங்கு சுமந்திரனோ அல்லது வேறு யாருமோ அவர்களை அழைத்து சென்று உரையாடலை ஏற்படுத்தியிருக்கவில்லை.

நாங்கள் உங்களிடம் ஆதாரம் கேட்கவில்லை, அப்படி கேட்டு நான் உங்களுக்காக கருத்து எழுதுவதுமில்லை. சில சமயங்களில் உங்களுக்கு பதில் எழுதாமல் பொதுவாக பதிந்து விட்டு கடந்து செல்வதுண்டு. அதைத்தான் பெட்டிக்கடை மூடுதல் என்று உங்கள் பாஷையில் எழுதுகிறீர்களென நினைக்கிறன். உங்கள் கருத்து அலட்டல், அதை நான் கடந்து செல்வேன் என்பவருக்கு, பதில் எழுதுவதை தவிர்த்தே அப்படி எழுதுவதுண்டு. இனியும் அப்படியே செய்வேன். நீங்கள் உங்கள் பாஷையில் எதை வேண்டுமானாலும் கூறி மகிழ்ந்து கொள்ளுங்கள். அதைப்பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. தமிழரின் ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதையே எழுதுகிறேன், நீங்கள் தான் எனது கருத்துக்களை கடந்து செல்பவர் என பலதடவை அறிக்கையிட்டிருக்கிறீர்கள், பின் அவற்றிற்கு பதில் கருத்தெழுதி விதண்டாவாதம் செய்வீர்கள், வாசகர்களுக்கு என்னை யாரென அறிமுகப்படுத்தப்போகிறீர்கள் என்கிறீர்கள், என்னை வாசகர்களுக்கு தெரியாது ஏனெனில் நான் களத்திற்கு புதியவர் எனவே நீங்கள்தான் என்னை அவர்களுக்கு அறியப்படுத்தவேண்டும் அப்படி நீங்கள் உங்களுக்குள் எண்ணிக்கொள்கிறீர்கள். எனது கருத்தை கடந்து போகும் நீங்கள் எனது கருத்துக்கு ஏன் பதில் எழுதுகிறீர்கள்? ஏன் என்னை வாசகர்களுக்கு அறியதரவேண்டுமென துடிக்கிறீர்கள்? இங்கு எத்தனையோ கருத்து பதிகின்றேன், ஆனால் சுமந்திரனை பற்றி எழுதினால் மட்டும் நின்று வாசிப்பீர்கள் பதில் தருவீர்கள், பின் அலட்டல் என்பீர்கள். அந்த அலட்டலிலும் நீங்கள் பதில் எழுத ஏதோ உண்மை இருக்கிறது, அதை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை அதுதான் உண்மை. எனக்காக நீங்கள் ஆதாரம் தேடவும் வேண்டாம், நான் உங்களிடம் கேட்கவுமில்லை.

நீங்கள் குறிப்பிடும் "பின் கதவால் வெளியேறிய" சம்பவம் முகநூல் ஊடகங்களிலும், தமிழ் வின் எனும் ரொய்லெற் ஊடகத்திலும் வந்த விபரிப்புகள். உண்மையில் நூலகத்தின் உள்ளே விக்கியர், சுமந்திரன் உட்பட்டவர்களுடன் கமெரூனுடன் சந்திப்பு நடந்தது. அனந்திக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பிருக்கவில்லை. எனவே வெளியே நின்று ("ஒரு பெண்ணாக இருந்த போதும்"😂- உங்கள் வரிகளில்) ஓடிப் போய் மகஜர் கொடுத்தார். நான் இணைத்த படத்தில் யார் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் கடந்து போய் விட்டு முகனூல் அலட்டல்களை உண்மைச் செய்திகள் போல இன்னும் தூக்கித் திரிகிறீர்கள்!

உங்களுடைய இந்த உண்மை காண விரும்பாத கண்மூடித் தனத்தைத் தான் சுட்டிக் காட்ட விளைகிறேன். உங்களுக்குப் பச்சை போட்டவருக்கும் இதே "கண் மூடிப் பாசம்" சுமந்திரன், சாணக்கியன் மேல் இருக்கிறது. இதை உங்கள் பாரதக் கருத்துகளை வாசிப்போர் அறிய வைப்பதே என் நோக்கம்! உங்களுக்கெல்லாம் ஆதாரம் தேடி நிரூபித்து கண் திறக்க வைக்கும் "நாய் வால் நிமிர்த்தும்" வேலைக்கு என்னிடம் நேரமில்லை😎!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, island said:

பிரச்சனைகளை இனங்கண்டு அதை உரிய முறையில் தீர்ப்பதை விடுத்து செய்தி மிகைப்படுத்துதல் வெற்று உசுப்பேற்றுதல், வெற்று கோசங்கள், கற்பனைகள் மூலம் கட்டி எழுப்பப்பட்டதே தமிழ் தேசிய கோமாளிக் கருத்தியல்.

இதெல்லாம் காலா காலமாக நான் யாழ்களத்தில் எழுதிய கருத்துக்கள் அது யாருக்காக எங்கு எந்த திரியில் எழுதப்பட்டது என்பதுதான் பேசு பொருள்.அமீர்,சேனாதிபதி கொம்பனிகளுக்கு அப்படியான கருத்துக்கள் தகும்.

13 hours ago, island said:

கடந்த 15 வருடங்களில் சமூக ஊடக வருகையால் பொய் செய்திகள் விஸ்வரூபம் எடுத்துள்ளதே யொழிய அத்தனையும் காலாகாலமாக அந்த காலத்திற்கேற்ற முறையில் தமிழ் தேசியம் பேசியவர்களிடம் இருந்தவையே.

அன்றைய பின்கதவு அரசியலை சுமந்திரன் இன்றும் கைப்பிடியாக/விடாப்பிடியாக கடைப்பிடிக்கின்றார்.

13 hours ago, island said:

அதனாலேயே அதனால் ஒரு அங்குலம் கூட முன்னே நகர முடியமல் நின்ற இடத்தில் அப்படியே நின்று குறளி வித்தை காட்டுகின்றனர். வெட்டி வீரம் பேசுவதும் பின்னர் புலம்புவதும் தமிழ் தேசிய அரசியலில் மாறாத சுற்றுவட்டம். இந்த வட்டத்தை சுற்றிச் சுற்றியே தமிழ் தேசியம் பேசும் தாயக/ புலம் பெயர் கோமாளிகள் பொழுது போக்குகின்றனர்.

வீரம் பேசி விவேகமாக தமிழீழ அரசு அமைத்து காட்டியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

இது சாத்தியம் என உலகிற்கு உலகிற்கு காட்டியவர்கள்.

அவர்களை அழித்தவர்கள்,காட்டிக்கொடுத்தவர்கள் இன்றும் நலமுடனேயே உலாவுகின்றனர். அந்த அவர்கள் 2009க்கு பின்னர் இன்றுவரை தமிழர்களுக்காக சாதித்தது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இதெல்லாம் காலா காலமாக நான் யாழ்களத்தில் எழுதிய கருத்துக்கள் அது யாருக்காக எங்கு எந்த திரியில் எழுதப்பட்டது என்பதுதான் பேசு பொருள்.அமீர்,சேனாதிபதி கொம்பனிகளுக்கு அப்படியான கருத்துக்கள் தகும்.

அன்றைய பின்கதவு அரசியலை சுமந்திரன் இன்றும் கைப்பிடியாக/விடாப்பிடியாக கடைப்பிடிக்கின்றார்.

வீரம் பேசி விவேகமாக தமிழீழ அரசு அமைத்து காட்டியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

இது சாத்தியம் என உலகிற்கு உலகிற்கு காட்டியவர்கள்.

அவர்களை அழித்தவர்கள்,காட்டிக்கொடுத்தவர்கள் இன்றும் நலமுடனேயே உலாவுகின்றனர். அந்த அவர்கள் 2009க்கு பின்னர் இன்றுவரை தமிழர்களுக்காக சாதித்தது என்ன?

தமிழ் தேசியத்தின் இன்னோரு குணாம்சம் என்னவென்றால், தான் செய்த செயல்களால் விளைந்த விளைவுகளுக்கு நேர்மையுடன் பொறுப்பேற்று அதை திருத்திக் கொள்ளாமல் எப்போது பார்ததாலும் தனது தவறுகளுக்கு அடுத்தவர் மீது பழி போட்டு தப்பிக்கும் மன நிலை. இந்த தப்பிக்கும் மன நிலை உங்கள் கருத்திலும் தெளிவாக தெரிகிறது.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி சண்டையின் பின் வடகிழக்கு தமிழர்களுக்கு கிடைத்த சாபகேடுகளில் முதன்மையானது போரில் எந்த பக்கமும் சம்பந்தமில்லாமல் ஒளித்து கிடந்தவர்கள் கைகளில் தமிழர் களுக்கு தீர்வு பெற்றுத்தரும் அதிகார இயந்திரத்துக்கு பின்கதவால் உள்ளே கொண்டு வந்து தமிழர்களை நம்ப வைத்து மேலும் மேலும் சாணக்கிய சுமத்திர ரை தவிர வேறு ஒருத்தராலும் தமிழர் களுக்கு ஒரு மாங்காய் கூட பறிக்க முடியாது என்று நம்ப வைப்பது .

இந்த கோதாவில் இங்கு களத்தில் ஒருத்தர் இருவரை தவிர மற்றைய தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் முக மூடியுடன் வந்து கருத்து மழை பொழிவதும் நீலி கண்ணீர் விடுவதும் சந்தடி சாக்கில் புலிகள் மீது விமர்சனம் செய்கிறோம் என்று அவதூறு பரப்புவதும் இங்கு நடைபெறுகிறது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

நீங்கள் குறிப்பிட்டபடியே மாங்காய் பறிக்க இயலாமல் தான் போயிற்று சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும்.

ஆனால், இது வரை மாங்காய் பறிக்கும் திசை நோக்கி ஓர் அங்குலமாவது நகர்ந்த இன்னொரு தமிழ் அரசியல்வாதியைச் சுட்டிக் காட்டுங்கள். தீர்வை விடுங்கள் "இனப்படுகொலை நடந்ததை நிறுவ இயலாது" என்று சுமந்திரன் சொன்னதை "சிங்கள ஆதரவுச் சதி" என்று பேசிய சட்ட தமிழ் நிபுணர்களும், முன்னாள் நீதிவான்களும், தேர்தல் கால காளான்ககளாக முளைக்கும் ஜனாதிபதி சட்டத்தரணிகளும் ஏத்தனை வழக்குகளை இனப்படுகொலை என்று நிறுவும் நோக்கில் போட்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? சர்வ தேசத்தை விடுங்கள், உள்ளூர் நீதிமன்றிலாவது எத்தனை வழக்குகளைப் போட முயன்றிருக்கிறார்கள் என்றாவது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் எடுத்து விடுங்கள், தெரியா விட்டால் குறைந்தது உப்புச் சப்பில்லாத அலட்டல்களையாவது எழுதாமல் விடுங்கள்!

(முகமூடி போடாமல் நிஜப் படம் போட்டு நீங்கள் யாழில் எழுதுவதாக இன்று தான் நான் அறிகிறேன்😇!)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

மாங்காய் பறிக்க முடியாததை விட மோசமானது, முட்டள்தனமானது என்ன வென்றால், ஒரு சில மாங்காய்களையாவது எட்டிப் பறிப்பதற்கான சந்தர்பங்கள் கிடைத்த போதும், எமக்கு மாங்காய் வேண்டாம் எட்டாத உயரத்தில் இருக்கும் தேங்காய்தான் வேணும் என்று அடம் பிடித்து கடைசியில் மாங்காயும் இல்லாமல் தேங்காயும் போன லூசுத்தனம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

இப்படி ஒரேயடியாய் கட்சி மாறகூடாது சுமத்தினால் சானக்கியால் மாங்காயும் தேங்காயும் புடுங்க முடியாது என்று ஆரம்பம் முதலே சொல்வது இன்றுதான் உங்களுக்கு விளங்கி இருக்குது .😄

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பெருமாள் said:

இப்படி ஒரேயடியாய் கட்சி மாறகூடாது சுமத்தினால் சானக்கியால் மாங்காயும் தேங்காயும் புடுங்க முடியாது என்று ஆரம்பம் முதலே சொல்வது இன்றுதான் உங்களுக்கு விளங்கி இருக்குது .😄

👇

5 hours ago, Justin said:

இது வரை மாங்காய் பறிக்கும் திசை நோக்கி ஓர் அங்குலமாவது நகர்ந்த இன்னொரு தமிழ் அரசியல்வாதியைச் சுட்டிக் காட்டுங்கள். தீர்வை விடுங்கள் "இனப்படுகொலை நடந்ததை நிறுவ இயலாது" என்று சுமந்திரன் சொன்னதை "சிங்கள ஆதரவுச் சதி" என்று பேசிய சட்ட தமிழ் நிபுணர்களும், முன்னாள் நீதிவான்களும், தேர்தல் கால காளான்ககளாக முளைக்கும் ஜனாதிபதி சட்டத்தரணிகளும் ஏத்தனை வழக்குகளை இனப்படுகொலை என்று நிறுவும் நோக்கில் போட்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? சர்வ தேசத்தை விடுங்கள், உள்ளூர் நீதிமன்றிலாவது எத்தனை வழக்குகளைப் போட முயன்றிருக்கிறார்கள் என்றாவது உங்களுக்குத் தெரியுமா?

இதற்கு பதில் இருக்காதென ஊகிக்கிறேன்? வைத்துக் கொண்டு வஞ்சகம் செய்யும் ஆள் அல்ல நீங்கள், எனவே போய் ஓரமாக அமருங்கள்👏!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இப்படி ஒரேயடியாய் கட்சி மாறகூடாது சுமத்தினால் சானக்கியால் மாங்காயும் தேங்காயும் புடுங்க முடியாது என்று ஆரம்பம் முதலே சொல்வது இன்றுதான் உங்களுக்கு விளங்கி இருக்குது .😄

தீர்க்க தரிசன தலைமை என்று தம்மை சொல்லிக்கொண்ட தலைவராலேயே தமிழ்மக்களின் வளங்களை முழுக்க உபயோகித்து பாரியளவு மக்களை பலி கொடுத்து இரண்டு தலை முறை பிள்ளைகளையும் பலியிட்டும் தொடங்கிய இடத்தில் இருந்து பல மடங்கு பின்னோக்கி Reverse gear ல் கொண்டு விட்டு விட்டு சென்ற பிறகு சாதாரண அரசியல்வாதி சுமந்திரன் எம்மாத்திரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, island said:

தமிழ் தேசியத்தின் இன்னோரு குணாம்சம் என்னவென்றால், தான் செய்த செயல்களால் விளைந்த விளைவுகளுக்கு நேர்மையுடன் பொறுப்பேற்று அதை திருத்திக் கொள்ளாமல் எப்போது பார்ததாலும் தனது தவறுகளுக்கு அடுத்தவர் மீது பழி போட்டு தப்பிக்கும் மன நிலை. இந்த தப்பிக்கும் மன நிலை உங்கள் கருத்திலும் தெளிவாக தெரிகிறது.

விடுதலைப்புலிகள் காலங்களை தவிர்த்து.....நீண்ட இடை வெளிகள் 1948 தொடக்கம் இன்று வரைக்கும் இருந்துள்ளது. இன்றும் இருக்கின்றது.

உங்கள் கொள்கையாளர்கள் அந்த இடைவெளிகளில் சாதித்ததை தேடினேன். எதுவுமே கிடைக்கவில்லை. no-vadivelu.gif

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

தீர்க்க தரிசன தலைமை என்று தம்மை சொல்லிக்கொண்ட தலைவராலேயே தமிழ்மக்களின் வளங்களை முழுக்க உபயோகித்து பாரியளவு மக்களை பலி கொடுத்து இரண்டு தலை முறை பிள்ளைகளையும் பலியிட்டும் தொடங்கிய இடத்தில் இருந்து பல மடங்கு பின்னோக்கி Reverse gear ல் கொண்டு விட்டு விட்டு சென்ற பிறகு சாதாரண அரசியல்வாதி சுமந்திரன் எம்மாத்திரம்.

இதற்குள் இந்த திரிக்குள் தலைவரை தேவையில்லாமல் ஏன் இழுக்கிரியல் அவர் பேச்சுக்கு முன் செயல் இருக்கணும் என்று அதை செய்தும் காட்டியவர் .

பின்கதவால் வந்த உங்கள் சுமத்து தான் மந்திரத்தால் மாங்காய் பறிப்பேன் தேங்காய் பறிப்பேன் ஒரு நாளில் உழுது நெல் சோறு பொங்கி சாப்பிடுவன் என்று நேரத்துக்கு ஒவ்வொரு கதை அறிக்கை விட்டுக்கொண்டு திரிகிறார்.

அந்த அண்டம் காக்கை ஒத்தை பனை கள்ளை குடித்து விட்டு கண்டபடி கரையுது எண்டால் உங்களுக்கு எங்கு போச்சு அறிவு ?

சுமத்தை விட எவ்வளவே துடிப்பான இளையோர் அங்கு இருக்கினம் எங்கை வளர விடுகிரியல் போதைக்கு அடிமையாக்கி நான்கு தலைமுறையை நாசம் பண்ணி வைத்து இருக்கிறியள் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.