Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஜப்பானின் Asunaro Aoki Construction Co Ltd நிதி நன்கொடை

19 Dec, 2025 | 12:24 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஜப்பானில் உள்ள Asunaro Aoki Construction Co Ltd ஒரு மில்லியன் ஜப்பானிய யென் நிதி நன்கொடையை வழங்கியுள்ளது.

குறித்த காசோலையை Asunaro Aoki Construction Co Ltdஇன் பொது முகாமையாளர் Seiji Sakuraike அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபோன்சுவிடம் கையளித்தார்.

Asunaro Aoki Construction Co Ltdஇன் பணிப்பாளர்/நிறைவேற்று அதிகாரி Shinsuke Murakami மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுஜீவ லெவங்கமவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/233815

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் நிதி நன்கொடை

Published By: Digital Desk 2

19 Dec, 2025 | 02:32 PM

image

“Rebuilding Sri Lanka” நிதியத்துக்கு இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் 100 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடை வழங்கியுள்ளது. 

குறித்த நிறுவனம் தொழில் அமைச்சில் நேற்று (18) மாலை இந்த நன்கொடையினை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சமீபத்தில் டித்வா சூறாவளி காரணமாக வரலாறு காணாதளவுக்கு வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்றன.

இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், நாடு முழுவதும், குறிப்பாக கொழும்பு மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் நாட்டின் பல பிரதேசங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் சேதமடைந்திருந்தன.

இவ்வாறான நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் நூறு மில்லியன் ரூபாய் (ரூ.100,000,000/-) நன்கொடையாக வழங்கியுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் சுஜித் ஜெயந்த் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோவிடம் நிதி நன்கொடையை வழங்கினர்.

இந்நிகழ்வில் தொழில் துறைப் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/233833

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம்' நிதியத்துக்கு இதுவரை 4286 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது - ஹர்ஷன சூரியப்பெரும

19 Dec, 2025 | 06:07 PM

image

(எம்.மனோசித்ரா)

'இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம்' நிதியத்துக்கு இதுரையில் 4286 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து மாத்திரம் சுமார் 6 மில்லியன் டொலர் கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இதற்கு முன்னர் 3400 மில்லியன் ரூபாவுக்கு அதிக நிதி கிடைக்கப் பெற்றிருந்தது. தற்போது அந்த தொகை 4286 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. இதன் பெறுமதி 13.8 மில்லியன் டொலராகும். இதில் வெளிநாடுகளிலிருந்து மாத்திரம் சுமார் 6 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த தொகை பொருள் மற்றும் சேவை ஒத்துழைப்புகளுக்கு அப்பால் கிடைக்கப் பெற்றதாகும்.

இதுவரையில் 4 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய உதவிகள் பொருட்களாகவும், சேவையாகவும் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் 43 நாடுகளிடமிருந்து உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, பிரித்தானியா, ஜேர்மன், பூட்டான், இத்தாலி, கனடா, ஐக்கிய அரபு இராச்சியம், நியூசிலாந்து, மாலைத்தீவு, சவுதி, பிரான்ஸ், கொரியா உள்ளிட்ட நாடுகள் நிதி உதவிகளை வழங்கியுள்ளன. இதேவேளை ஸ்ரீலங்கள் எயாலைன்ஸ் கடன் மறுசீரமைப்பிற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/233842

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு பிரதேச அபிவிருத்தி வங்கியினால் 25 மில்லியன் ரூபா நன்கொடை

20 Dec, 2025 | 02:25 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின்  ‘Rebuilding Sri Lanka’  நிதியத்திற்கு நாளாந்தம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட உதவிகளாக நன்கொடைகள் கிடைத்து வருகின்றன.

அதன்படி, பிரதேச அபிவிருத்தி வங்கி, 25 மில்லியன்  ரூபா நன்கொடையை வழங்கியது.

இதற்கான காசோலையை பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லசந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வெள்ளிக்கிழமை (19) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்தார்.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி அசந்த தென்னகோனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

https://www.virakesari.lk/article/233938

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இரண்டு நிதி நன்கொடைகள்!

20 Dec, 2025 | 03:37 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகின்றன.

அதன்படி, Containers Transport Owners Association இனால் 15 இலட்சம் ரூபா மற்றும் Association of SriLankan Airlines Licensed Aircraft Engineers  இனால்  13.5 இலட்சம் ரூபா நன்கொடையும் வழங்கப்பட்டன.

இதற்கான காசோலைகள் வெள்ளிக்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் Containers Transport Owners Association பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் டபிள்யூ.எம்.எஸ்.கே. மஞ்சுள, திலீப் நிஹால் என்ஸ்லம் பெரேரா மற்றும் ஜயந்த கருணாதிபதி ஆகியோருடன்,  Association of SriLankan Airlines Licensed Aircraft Engineers  பிரதிநிதித்துவப்படுத்தி தேஷான் ராஜபக்ஷ, சமுதிக பெரேரா மற்றும் தேவ்ஷான் ரொட்ரிகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-12-20_at_3.14.35_PM.

WhatsApp_Image_2025-12-20_at_3.14.35_PM_

https://www.virakesari.lk/article/233945

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Tiesh by Lakmini Kandy (Pvt) Ltd இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை

20 Dec, 2025 | 02:25 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின்  ‘Rebuilding Sri Lanka’  நிதியத்திற்கு Tiesh by Lakmini Kandy (Pvt) Ltd இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை Tiesh by Lakmini Kandy (Pvt) Ltd  நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே. எம். எல். பொன்சேகா, வெள்ளிக்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.

ஆர்.பி. கிறிஸ்டினாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

https://www.virakesari.lk/article/233980

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Commercial Bank இனால் 110 மில்லியன் ரூபா நன்கொடை

Published By: Vishnu

23 Dec, 2025 | 07:45 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பரோபகாரர்களிடமிருந்து நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகிறது.

அதன்படி,Commercial Bank இனால் 110 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

Commercial Bank இன் தலைவர் Sharhan Muhseen , இந்த நிதி நன்கொடைக்கான காசோலையை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் திங்கட்கிழமை (22) ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார்.

Commercial Bank சார்பாக, அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் S.C.U. Manathunga, பிரதான செயல்திட்ட அதிகாரி S.Prabagar, மேலதிக பொது முகாமையாளர் Ashani Senevirathane ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/234246

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு மேலும் 14.1 மில்லியன் ரூபா நன்கொடை 

Published By: Vishnu

23 Dec, 2025 | 07:53 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ITOCHU Corporation, S & D Chemicals (Pvt) Ltd, Irrigation Engineering Diplomates Association, Sciences & information Technology City Campus இனால் சுமார் 14.1 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டது.

அதில், ITOCHU Corporation இன் பொது முகாமையாளர் Mikinga Hotta 02 மில்லியன் ரூபாவும், S & D Chemicals (Pvt) Ltd இன் G.G.A. Dayantha  De Silva 10 மில்லியன் ரூபாவும், Irrigation Engineering Diplomates Association இன் W.J. Priyantha 1.1 மில்லியன் ரூபாவும், Sciences & information Technology City Campus இன் பிரதான நிறைவேற்று அதிகாரி  Cader  Rahmathulla ஒரு மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டதுடன் அதற்கான காசோலைகள், நேற்று (22) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன.

WhatsApp_Image_2025-12-23_at_19.30.32.jp

WhatsApp_Image_2025-12-23_at_19.30.333.j

WhatsApp_Image_2025-12-23_at_19.30.33.jp

https://www.virakesari.lk/article/234247

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு NDB Finance Limited 50 மில்லியன் ரூபா  நன்கொடை 

Published By: Vishnu

23 Dec, 2025 | 07:56 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீளக் கட்டியெழுப்ப உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’, நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகிறது.

அதன்படி, NDB நிதி நிறுவனம் திங்கட்கிழமை (22) 50 மில்லியன் ரூபா நிதி நன்கொடையை வழங்கியது.

NDB நிதி நிறுவனத்தின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி K.V. Vinoj, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் நன்கொடைக்கான காசோலையை கையளித்தார்.

NDB நிதி நிறுவனத்தின் Sanjaya Perera, C.L.B. Dasanayaka ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/234248

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘Rebuilding Sri Lanka’ நிதிக்கு Prime Land நிறுவனம்  200 மில்லியன் ரூபா நன்கொடை 

Published By: Vishnu

23 Dec, 2025 | 07:59 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Prime Land நிறுவனம் 200 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியது.

Prime Land குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராஹ்மனகே மற்றும் இணைத் தலைவர் சந்தமினி பெரேரா ஆகியோர் இந்த நிதி நன்கொடைக்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் திங்கட்கிழமை (22) கையளித்தனர்.

Prime Land குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரந்தெனிய மற்றும் பணிப்பாளர் அநுர பத்திரகே ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/234249

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Cargills (Ceylon) PLC  100 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கியது

Published By: Vishnu

23 Dec, 2025 | 08:01 PM

image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Cargills (Ceylon) PLC நிறுவனத்தினால்100 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டது.

Cargills (Ceylon) PLC நிறுவனத்தின் குழும முகாமைத்துவப் பணிப்பாளர் இம்தியாஸ் அப்துல் வாஹித் (Imitiaz Abdul Wahid- Group Managing Director) திங்கட்கிழமை (22) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் அதற்கான காசோலையை கையளித்தார்.

Cargills (Ceylon) PLC நிறுவனத்தின் திலந்த ஜயவர்தன மற்றும் சந்தன கெலேகம ஆகியோரும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/234250

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Damro 50 மில்லியன் ரூபா நன்கொடை 

Published By: Vishnu

23 Dec, 2025 | 08:19 PM

image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக சமூகம், அமைப்புகள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து நாளாந்தம் நிதி நன்கொடைகள் கிடைத்து வருகிறது.

அதன்படி, Damro நிறுவனத்தினால் திங்கட்கிழமை (22) 50 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

அதற்கான காசோலையை Damro நிறுவனத்தின் பணிப்பாளர் பிரசன்ன கொடிப்பிலி மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் நாலக குணதிலக்க ஆகியோர் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர்.

https://www.virakesari.lk/article/234251

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.