Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

05 Dec, 2025 | 05:28 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து  அரசியல் செய்து  பாராளுமன்றம் வந்தவர் இன்று வரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அனர்த்தத்தால் யாழ்ப்பாணத்துக்கு பாதிப்பில்லை என்று குறிப்பிட்டு அந்த மக்களையே தூற்றித் திரிகிறார். இதன் விளைவை அவர் வெகுவிரைவில் உணர்வார். பாதிக்கப்பட்ட மக்களிடம் செல்லாமல் புலம்பெயர் தேசத்தின் உறவுகளின் பணத்தில் கொழும்பில் தனி வீட்டில் சுகபோகமாக வாழ்ந்துக் கொண்டு  இவர் ஏனையவர்களின் மீது குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைக்கிறார். இது எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலாகவும் இருக்கலாம் என  தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இளங்குமரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின்  பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு,  வர்த்தகம் மற்றும் உணவு  பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு ஆகிய  அமைச்சுகளுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் ஏற்பட்ட பேரிடரால்  உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனர்த்தத்தால் வடக்கு மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்துள்ளன. அனர்த்த நிலைமைகளின் போது முப்படை வீரர்கள் இன, மத பேதமின்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களைக்கூட காப்பாற்றியுள்ளனர். பாதுகாப்பு தரப்பினருக்கு கௌரவமளிக்கிறோம்.

உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கோ  அல்லது  இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையோ பார்க்க  யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தராது,  அந்த மக்களை கைவிட்டு கொழும்பில் புலம்பெயர் தேசத்தின் பணத்தில் அதிசொகுசு  மாடி வீட்டில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ஒருவர்  வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.  அவர் புலம்பெயர் தேச உறவுகளுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும்.

சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து  அரசியல் செய்து  பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை. அப்படிப்பட்டவர் தான் தற்போது  யாழ்ப்பாணத்தில் எந்த பாதிப்பும் இல்லையென்று கூறுகின்றார். யாழ்ப்பாண மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இப்போது அந்த மக்களைத்  தூற்றியும், கேவலப்படுத்தியும் திரிகின்றார். இது எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளோ, அவர்களின் நிகழ்ச்சி நிரல்களோ தெரியாது. இதன் பக்கவிளைவுகளை அவர் வெகுவிரைவில் உணருவார்.

எமது அமைச்சரையும் வாழ்த்த வேண்டும். அவர் மலையகத்தில் சேவை செய்ய வேண்டும். அங்கு அமைச்சர் இன்னும் உத்வேகத்தில் செயற்படுவார். சிலர் அரசியல் நோக்கத்திற்காக எமது அமைச்சரின் உடை தொடர்பில் கேலி செய்கின்றனர். ஆனால் அவர் ஒரு ஆடை கூட எடுக்காமலேயே   யாழ்ப்பாணத்திற்கு விரைந்து  வந்திருந்தார். புலம்பெயர்ந்தவர்கள் கூட  உதவினர்.

மக்களுக்கான  பணத்தை மக்களிடமே வழங்கி வருகின்றோம். ஆனால் சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அந்த  பாராளுமன்ற உறுப்பினராக   இருந்தால் தனது தனிப்பட்ட கணக்கிற்கே பணத்தை பெற்றிருப்பார். ஆனால் நாங்கள் அவ்வாறு செயற்படவில்லை என்றார்.

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிழம்பு said:

என்ன. செய்ய. முடியும். பாரளமன்ற அனுமதி இன்றி. தனிய. பேசத் தான். முடிம். தம்பி. அதை அவர் செயகிறார்்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்கு அரசின் பணம் தேவையில்லை 36 கோடி ரூபாவையும் மலையகத்திற்கு கொடுங்கள்

Archuna-Ramanathan-2.jpg

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.அந்தப் பணம் யாழ்ப்பாணத்திற்கு தேவையில்லை.அதனை தோட்டப்புற மக்களுக்கு கொடுங்கள் என யாழ் மாவட்ட எம்.பி. யான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

அத்துடன் மற்றவர்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்யும் இராணுவ வீரர்களை இந்த அரசாங்கம் சிப்பாய்கள் என அழைப்பதாக கடும் விசனமும் வெளியிட்ட அவர்,இராணுவ வீரர்கள் என கௌரவமாக அழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்

பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

வடக்கு மாகாணத்திற்கு 36 கோடி ரூபா அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமன் மற்றும் சமநிலை என்ற விடயம் தெரியாமலே அரசாங்கம் போய்க்கொண்டிருப்பது மிகவும் கவலையாக இருக்கின்றது. இதில் அனைவருக்கும் 25,000 ரூபா கொடுக்கப்படுகின்றது. முழந்தால் அளவுக்கு தண்ணீர் வந்தவனுக்கும் அதே தொகைதான் வீடு முழுமையான மூடப்பட்டவருக்கும் அதே தொகைதான். 2ஆம் திகதி இடைத்தங்கல் முகாமொன்றை அமைத்துள்ளனர். 30ஆம் திகதி மழை நின்ற பின்னர் 2ஆம் திகதி இடைத்தங்கல் முகாமை அமைத்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் படு மோசமான நிலைமையாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.அதனை தேசிய மக்கள் சக்தியினருக்கே கொடுக்கின்றீர்கள் .அந்தப்பணம் யாழ்ப்பாணத்திற்கு தேவையில்லை. அதனை தோட்டப்புற மக்களுக்கு விநியோகியுங்கள். நீங்கள் செய்யும் வேலைகள் வெட்கமானது. எனக்கு கொடுக்கும் கெப் வாகனத்திற்கான பணத்தை மக்களுக்கு கொடுங்கள். எனக்கு அந்த வாகனம் அவசியமில்லை.

வரவு செலவுத்திட்டம் முடிந்த பின்னர் வேண்டுமென்றால் வடக்கிற்கு வாருங்கள். வேண்டுமென்றால் வடக்கிற்கும் கிழக்கிற்கும் புலம்பெயர்ந்தோரிடமிருந்து பணத்தை பெற்றுத்தருகின்றேன். தேவைப்பட்டால் தெற்கிற்கும் பகிர்கின்றேன். நான் ஆம் என்று கூறினால் பணம் வரும்

வெள்ளத்தில் சிக்கிய என்னை இராணுவ வீரர்களே காப்பாற்றினார்கள்.மற்றவர்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்யும் இராணுவ வீரர்களை இந்த அரசாங்கம் சிப்பாய்கள் என அழைக்கின்றது . இது எவ்வளவு கீழ்த்தரமான வேலை அவர்களை இராணுவ வீரர்கள் என கௌரவமாக அழைக்க வேண்டும் என்றார்.

https://akkinikkunchu.com/?p=351378

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.அதனை தேசிய மக்கள் சக்தியினருக்கே கொடுக்கின்றீர்கள் .அந்தப்பணம் யாழ்ப்பாணத்திற்கு தேவையில்லை. அதனை தோட்டப்புற மக்களுக்கு விநியோகியுங்கள். நீங்கள் செய்யும் வேலைகள் வெட்கமானது.

large.IMG_9287.jpeg.bee490d13a79d10c9415

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_9287.jpeg.bee490d13a79d10c9415

அடுத்த தேர்தலை மலையத்தில் நின்று வெல்லப் போகிறேன்.

இப்படிக்கு அர்ச்சுனா.

  • கருத்துக்கள உறவுகள்

எந்ந நோயால் பாதிக்கப்பட்டவனுக்கும் தெரியும் தனக்கு நோய் உள்ளது என்று.ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவனுக்கு மட்டும் அது தெரியாது.இது ஒரு பெரிய கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.அந்தப் பணம் யாழ்ப்பாணத்திற்கு தேவையில்லை.அதனை தோட்டப்புற மக்களுக்கு கொடுங்கள் என யாழ் மாவட்ட எம்.பி. யான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

அத்துடன் மற்றவர்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்யும் இராணுவ வீரர்களை இந்த அரசாங்கம் சிப்பாய்கள் என அழைப்பதாக கடும் விசனமும் வெளியிட்ட அவர்,இராணுவ வீரர்கள் என கௌரவமாக அழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்

இவர்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒருமுறை வடக்குக்கு ஒதுக்கப்பட்ட பணம் பயன்படுத்தப்படாமல் திரும்பி சென்றது இதுகளை எல்லாம் எலெக்சனில் வென்று மாற்றி காட்டோணும் எண்டு பேசியதாக நினைவு இப்போ இவரே வடக்குக்கு பணம் வேண்டாம் எங்கிறார்.

கடந்த தேர்தலில் வடக்கில் அதிக ஆசனங்களை வென்றது தேசிய மக்கள் சக்தி அவர்களிடம் பணத்தை கொடுக்காமல் யாரிடம் கொடுப்பார்கள்?

ஓரிருவாரங்கள் முன்னர்தான் தேசிய தலைவருக்கும் மாவீரர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன் என்று பாராளு மன்றத்தில் குதியோ குதியெண்டு குதிச்சார் இப்போ அதே வாயால தலைவரையும் போராளீகளையும் மக்களையும் கொன்று குவித்தவர்களை ராணுவவீரர்கள் என்று அவர்களை மரியாதையாக அழைக்கோணும் எண்டுறார்.

ஒரு தொகுதியில் மாத்திரம் வென்ற இவர் முழு வடக்குக்கும் பணம் தேவையில்லை என்று சொல்ல யாரிடமிருந்து அதிகாரத்தை பெற்றார்?

அத்துடன் அநுர ஒருதடவை யாழ்வந்து நகரசபை கூட்டத்தில் கலந்து கொண்டபோது தையிட்டியில் விகாரை அமைத்தது சரி அதை வரவேற்கிறோம் அகற்ற தேவையில்லைஎன்று அர்ச்சுனா கூறியது காணொலி பதிவாக வந்தது.

இந்த மூன்று விஷயங்களுமே கடந்தகால ஆட்சியாளர்கள் செய்ய நினைத்த ஒன்று, அர்ச்ச்சுனாவை உள்ளே போட்டபோது நாமல் ஓடி வந்தார் இப்போலாம் அரசல் புரசலாக அர்ச்சுனா நாமலின் பினாமி என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி உலாவருகிறது , அறிஞ்சு தெரிஞ்சவனுகதான் அப்படி உலவவிடுறாங்களோ யார் அறிவாரோ?

இப்போலாம் வடக்கின் பிரதிநிதிகள் என்று பாராளுமன்றத்தில் குதிப்பவர்கள் வடக்கு மக்களுக்காக பேசுகிறார்கள் என்றா நினைக்கிறோம்? உண்மையில் அங்கே நடப்பது இளங்குமரனுக்கும் அர்ச்சுனாவுக்கும் இடையில் உள்ள தனிப்பட்ட வன்மம்.

ஒரு இயற்கைகோரத்தின் பின்னர் தமது பாகுதிகளை சீரமைக்க வேறுபாடுகளை மறந்து சிங்களவர்கள் முஸ்லீம்கள் எதிர்கட்சிகள் என அனைவருமே ஒன்றிணைந்து நிக்கிறார்கள், நமது வெண்ணெய்வெட்டி வீரர்கள் மூண்டுநாலுபேர் இருந்துகொண்டு இந்த நேரத்திலும் தங்கட பிரச்சனைகளை பேசுறதுக்கு பாராளுமன்றத்தை பாவிக்கும் நகைச்சுவை செய்துகொண்டிருக்கிறார்கள்.

காலங்களும் காட்சிகளும் ஆட்சிகளும் மாறிக்கொண்டேயிருக்கு ஆனால் அந்தகாலத்திலிருந்து இந்தக்காலம்வரை தமிழர் பிரதிநிதிகள் என்று தெரிவு செய்யப்பட்டு சிங்கள சபைக்கு செல்லும் தமிழர்கள் அன்றிலிருந்து இன்றுவரை அதே குணங்களுடன் தான் அலைகிறார்கள். நாட்கள்தான் மாறிவிட்டது ஆட்கள் மாறவில்லை.

இந்த லட்சணத்தில் எங்களுக்கு எதுவும் செய்யவில்லையென்று அமிர்தலிங்கம், சிவ சிதம்பரம் மாவை சம்பந்தனை திட்டி என்ன பிரயோசனம், அவர்களை திட்டிய அதே இளம் தலைமுறையும் அவர்களைவிட கேவலமாகதானே நடக்கிறது.

இந்த கோமாளி கூட்டத்தின் செயற்பாடுகளால் எதிர்காலத்தில் யாழ்மண்ணில் சிங்களவனே நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.