கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 01 / In English & Tamil
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மதிய வேளைகளில் வழமைபோல் சுறுசுறுப்பாக இருந்தது. மருத்துவப் பீட மாணவர்கள், குறிப்பாக மூத்த இளங்கலை மாணவர்கள், உடற்கூறியல் குறிப்புகளாலும் தூக்கமில்லாத இரவுகளாலும் சூழப்பட்டு, அந்த சுமைகளுடன் வேகமாக நடந்துகொண்டு இருந்தார்கள். அதேவேளை, குறிப்பாக இளைய கலைப்பீட இளங்கலை மாணவர்கள் புத்தகங்களை கைகளில் ஏந்தி, இலக்கியம், அரசியல் மற்றும் வாழ்க்கைக்கு இடையே அலைந்து திரிந்த எண்ணங்களுடன் மெதுவாக நடந்துகொண்டு இருந்தார்கள்.
உயரமான, அமைதியான, எதையும் கேள்விகேட்டு அதன் உண்மைத் தன்மையை அறிவதில் எப்பொழுதும் ஆர்வம் கொண்டவனாக, ஆனால் அதே நேரத்தில் சராசரி மாணவனாக, இறுதியாண்டு மருத்துவ மாணவன், சாமுவேல் [Samuel] இருந்தான். அவன் ஒரு தீவீர கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் என்பதால், சிறுவயதில் ஒழுங்காக தன் பெற்றோருடன் தேவாலயத்திற்குச் சென்று, ஒவ்வொரு டிசம்பரிலும் கரோல்களையும் [carols] பாடியுள்ளான். ஆனாலும் - அவன் சாதாரண வகுப்பிற்குப் பிறகு, சமயம் மற்றும் புராண நம்பிக்கையை, அப்படியே நம்பாமல், எதையும் ஆராந்து, கேள்விகேட்டு அதில் இருந்து உண்மைகளை பிரித்து எடுக்கக் கற்றுக்கொண்டான். அவன் மனிதநேயம், நெறிமுறைகள் மற்றும் உண்மை ஆகியவற்றில் ஆழமாக நம்பிக்கை கொண்டிருந்தான், அதனால், தலைமுறைகளாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட, அல்லது புராணங்களாக எழுதப்பட்ட, அல்லது பழக்கங்களாக ஒட்டிக்கொண்ட அல்லது சமய நூல்களில் சொல்லப்பட்ட எதையும், அறிவுரீதியாக ஆராயாமல் ஏற்பதை தவிர்க்கத் தொடங்கினான்.
அதேவேளை, இரண்டாம் ஆண்டு கலை மாணவியான சாரா [Sarah] முற்றிலும் வித்தியாசமானவர். அவள், தனது நம்பிக்கைகளை ஒரு சால்வை போல சுமந்து சென்றாள் - மரபுரிமையாக தலைமுறையாக தொடர்வதால், எந்த கேள்வியும் கேட்காமல், ஒருவர் உயிர்வாழ சுவாசிப்பதைப் பின்பற்றுவது போல, இயற்கையாகவே, பகுப்பாய்வு இல்லாமல், அவள் மதத்தைப் பின்பற்றினாள். அவள் பெற்றோர் நம்பியதால் அவள் நம்பினாள். எல்லோரும் கொண்டாடியதால் அவள் கொண்டாடினாள். அவளுக்கு, நம்பிக்கை ஒரு விவாதம் அல்ல; அது சொந்தமானது.
ரோமன், ஐரோப்பிய மற்றும் திருச்சபை பற்றிய ஒரு வரலாற்று மாணவியான சாரா, கலாச்சார ஆய்வுகள் பற்றிய புத்தகத்தைத், யாழ்ப்பாண பல்கலைக்கழக முதன்மை நூலகத்தில் அன்று தேடிக்கொண்டிருந்தாள். அந்தவேளை, சாமுவேல், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் பற்றிய உண்மைத் தன்மையை - தொல்பொருள் ஆய்வுகள், கல்வெட்டுகள், பண்டைய பயணிகளின் குறிப்புகள், பண்டைய இலக்கிய குறிப்புகள் மற்றும் விஞ்ஞான ரீதியான உண்மைகள் - மூலம், ஒரு பொழுதுபோக்காக அலச அங்கு வந்தான். அவன் கொஞ்சம் வேகமாக வந்ததாலும், அவன் உயரமாக, அகன்ற மார்பு, திடமான தோள்கள் (தடந்தோள்), நீண்ட கைகள் மற்றும் உறுதியான உடல் கொண்டவனாக கம்பீரமான நடையுடன் வந்ததால், சாராவை திரும்பி அவனைப் பார்க்க வைத்தது.
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை
வீங்கு இறைப் பணைத்தோள் மடந்தை
மான் பிணையன்ன மகிழ் மட நோக்கே?
தேமல் படர்ந்த, அழகான, உயர்ந்த, நிமிர்ந்த இள முலைகளையும், பெருத்த சந்து பொருந்திய மூங்கில் போலும் தோளையுடைய இளம் பெண்ணின் பெண் மானைப் போன்ற மருண்ட மகிழ்ச்சியுடைய பார்வையினால்? .... சாமுவேல் கொஞ்சம் தடுமாறினாலும், அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டு, ஹாய், நான் சாமுவேல் இறுதியாண்டு மருத்துவபீட மாணவன் என்று, தன்னை அறிமுகப் படுத்தினான். அவளும் தான் இரண்டாம் ஆண்டு கலை மாணவி என்று, அவன் கண்ணை பார்த்தபடி கூறினாள்.
'கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல'
அதனாலோ என்னவோ, கொஞ்ச நேரம் அவர்கள் பேசாமல், பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து இருந்தார்கள். என்றாலும் சில நிமிடங்களுக்கு பின்,
அவர்களின் உரையாடல்கள் பணிவுடன் தொடங்கி, பின்னர் மெதுவாக ஆழமடைந்தன.
சாமுவேல் சாராவிடம் இதற்கு முன்பு அவள் அறியாத, அவளிடம் இதுவரை யாராலும் அல்லது அவளே தன்னிடம் கேட்கப்படாத கேள்விகளைக் கேட்டான். சாரா ஆதாரங்களுடன் அல்ல, ஆனால் உணர்ச்சியுடன் பதிலளித்தாள். ஆனாலும் இருவரும் அதை அச்சுறுத்தப்படுவதாக உணரவில்லை. அவர்களுக்கு இடையே மென்மையான எதோ ஒன்று வளர்ந்தது - வேறுபாட்டை மதிக்கும் ஒரு பாசம் - ஒரு அன்பு.
என்றாலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காதல் அவர்களின் தயக்கத்தை வென்றது.
அவர்கள் பெரிதாக, ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக, தங்கள் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, திருமணம் செய்து கொண்டனர்.
Brief of 'When the Candle Met the Question' / Part: 01
Jaffna University had its own rhythm in the late afternoons.
The medical faculty students walked fast, burdened with anatomy notes and sleepless nights. Across the road, the arts faculty moved slower—books under arms, thoughts drifting between literature, politics, and life itself.
Samuel belonged to the first group.
A final-year medical student, tall, quiet, known among his batch not for loud brilliance but for relentless questioning. He was born into a Christian family, attended church from childhood, sang carols every December, and yet—somewhere along the way—he had learned to separate faith from habit. He believed deeply in humanity, ethics, and truth, but he no longer accepted anything simply because it had been repeated for generations.
Sarah was different.
A second-year arts student, she carried her beliefs like a shawl—warm, unquestioned, inherited. She followed religion the way one follows breathing: naturally, without analysis. She believed because her parents believed. She celebrated because everyone celebrated. To her, faith was not a debate; it was belonging.
They met at the university library.
She was searching for a book on cultural studies. He was reading history—Roman, European, ecclesiastical.
Their conversations began politely, then slowly deepened. Samuel asked questions Sarah had never been asked before. Sarah answered with emotion, not evidence. Yet neither felt threatened. Something gentle grew between them—an affection that respected difference.
Two years later, love overcame hesitation. They married quietly, without drama.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 02 தொடரும் / Will follow
துளி/DROP: 1949 [கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 01] / In English & Tamil
https://www.facebook.com/groups/978753388866632/posts/32947476411567581/?
By
kandiah Thillaivinayagalingam ·