Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images.jpg?resize=275%2C183&ssl=1

அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம்: ரஷ்யா – அமெரிக்கா கடும் போட்டி.

அமெரிக்கப் படைகளால் தீவிரமாகத் துரத்தப்படும் ‘மரினேரா’ எனப்படும் எண்ணெய் கப்பலுக்குப் பாதுகாப்பாக ரஷ்யா தனது நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பிற கடற்படை கப்பல்களை அனுப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஆரம்பத்தில் ‘Bella 1’ என்று அழைக்கப்பட்ட இக்கப்பல், வெனிசுலா மீது அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி எண்ணெய் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த மாதம் கரீபியன் கடலில் அமெரிக்க கடலோரக் காவல்படை இதனை மறிக்க முயன்றபோது, கப்பல் பணியாளர்கள் அதில் ஏற அனுமதி மறுத்து அட்லாண்டிக் கடலை நோக்கித் தப்பினர்.

தப்பியோடும் வழியில் கப்பல் பணியாளர்கள் அதன் மேல்பகுதியில் ரஷ்யக் கொடியைப் பெயிண்ட் செய்ததுடன், கப்பலின் பெயரை ‘மரினேரா’ என மாற்றினர்.

தற்போது இது உத்தியோகபூர்வமாக ரஷ்யாவின் சோச்சி துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கப்பல் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் ஐஸ்லாந்துக்கு இடையிலான வடக்கு அட்லாண்டிக் பகுதியில் கடும் குளிரிலும் மோசமான வானிலையிலும் பயணித்து வருகிறது.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடந்த சனிக்கிழமை அமெரிக்க விசேட படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் தனது கடல்சார் முற்றுகையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா இக்கப்பலை மூழ்கடிப்பதை விட, அதைக் கைப்பற்றவே விரும்புகிறது.

இதற்காக பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு சுமார் 10 போக்குவரத்து விமானங்கள் மற்றும் சிறப்பு உலங்கு வானூர்திகள் வந்து சேர்ந்துள்ளன. கப்பலின் பெயர் மாறினாலும், அதன் தனித்துவமான அடையாள எண் மாறாததால், சர்வதேச சட்டப்படி அதைக் கைப்பற்ற தமக்கு அதிகாரம் இருப்பதாக அமெரிக்கா வாதிடுகிறது.

சர்வதேச கடற்பரப்பில் ரஷ்யக் கொடியுடன் பயணிக்கும் கப்பலுக்கு அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் தேவையற்ற நெருக்கடியைக் கொடுப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு சாடியுள்ளது

“கடல் வழிப் பயணச் சுதந்திரம்” பற்றிப் பேசும் நாடுகள், அதனைத் தாமும் கடைப்பிடிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம், யுக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்து வரும் ராஜதந்திர முயற்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஒருபுறம் சமாதானப் பேச்சுக்கள் நடக்கையில், மறுபுறம் நடுக்கடலில் இரு நாட்டுப் படைகளும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது.

https://athavannews.com/2026/1458682

  • கருத்துக்கள உறவுகள்

இக்கப்பலை ஐரோப்பிய கடற்பரப்பில் வைத்து அமெரிக்க கடற்படை கைப்பற்றியிருக்கிறது. இதனை அமெரிக்கா அறிவித்திருப்பதுடன், ரஸ்ஸியாவும் இதனை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது.

இக்கப்பலைப் பாதுகாக்க நீர்மூழ்கிகளையும் கப்பல்களையும் ரஸ்ஸியா அனுப்பியிருந்த நிலையில், தனது நாட்டு நீதிமன்ற தீர்ப்பொன்றிற்கு அமைய இக்கப்பலை அமெரிக்கா கைப்பற்றியிருக்கிறது.

வெனிசுவெலாவிலிருந்து சட்டத்திற்குப் புறம்பான முறையில் எண்ணையினை ஏற்றிச் சென்று வந்ததாகவே இக்கப்பல்க் கம்பெனி மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

The back of a man wearing a "US Coast Guard" top with what appears to be the tanker in the distance at sea

A graphic with two pictures of a helicopter near a ship

US says it has seized tanker in Atlantic linked to Venezuelan oil - live updates - BBC News

File: The vessel tanker Bella 1 at Singapore Strait, after US officials say the Coast Guard pursued an oil tanker in international waters near Venezuela, in this picture taken from social media on March 18, 2025.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

இக்கப்பலைப் பாதுகாக்க நீர்மூழ்கிகளையும் கப்பல்களையும் ரஸ்ஸியா அனுப்பியிருந்த நிலையில்,

பழைய ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம்…..😂

கோவியத் கால அணுகுண்டு மட்டும் இல்லாவிட்டால் புட்டினின் ரஸ்யாவை நாயும் மதியாது என நேற்று எழுதினேன்…அது இன்று நிருபணமாகிறது.

பிரித்தானிய விமானப்படை, மற்றும் பிரித்தானிய தளங்கள் இந்த ஆப்பரேசனில் பங்கெடுத்ததாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

இது நடந்து முடிந்த சூடு ஆறமுன்னம், நேட்டோ எம்மை கைவிட்டாலும் நாம் நேட்டோவை கைவிடமாட்டோம் என உளறியுள்ளார் தம்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

பழைய ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம்…..😂

கோவியத் கால அணுகுண்டு மட்டும் இல்லாவிட்டால் புட்டினின் ரஸ்யாவை நாயும் மதியாது என நேற்று எழுதினேன்…அது இன்று நிருபணமாகிறது.

பிரித்தானிய விமானப்படை, மற்றும் பிரித்தானிய தளங்கள் இந்த ஆப்பரேசனில் பங்கெடுத்ததாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

இது நடந்து முடிந்த சூடு ஆறமுன்னம், நேட்டோ எம்மை கைவிட்டாலும் நாம் நேட்டோவை கைவிடமாட்டோம் என உளறியுள்ளார் தம்பர்.

அமெரிக்காவிற்கு மேற்கு நாடுகளின் ஆதரவு கட்டாயம் தேவை.

வெனிசுலா அமெரிக்க நடவடிக்கையில் கூட மேற்கு நாடுகள் அடக்கியே வாசிக்கின்றன, இரண்டு தரப்பிற்கும் மறுதரப்பின் உதவி தேவை.

இது ஒரு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த நடவடிக்கை இட்டு செல்லும் (சர்வதேச கடல் சட்டத்தினை மீறும்), சர்வதே கடலில் இவ்வாறான சோமாலிய கடத்தல்காரர்கள் ரேஞ்சிற்கு அமெரிக்கா இறங்கி வந்திருப்பது பெரும் அதிர்ச்சியாகவுள்ளது.

எதிர்காலம் ஒரு இக்கட்டான காலகட்டத்திற்குள் செல்கிறது.

Edited by vasee

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டேங்கர் கப்பலை கைப்பற்ற அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்தும் உதவியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிப்பு!

டேங்கர் கப்பலை கைப்பற்ற அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்தும் உதவியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிப்பு!

சர்வதேசத் தடைகளை மீறிச் செயல்பட்ட (Marinera) மரைனேரா மற்றும் (M/T Sophia) எம்/டி சோபியா ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்கக் கடலோரக் காவல்படை வெற்றிகரமாகக் கைப்பற்றியது.

இந்தப் பாரிய நடவடிக்கையில், பிரித்தானியப் படைகள் கண்காணிப்பு மற்றும் ஆதரவுப் பணிகளை மேற்கொண்டு அமெரிக்காவிற்குத் துணையாக நின்றன.

பிடிபட்ட குறித்த கப்பல்கள் ரஷ்யா, ஈரான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தியதாகவும், பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

கப்பல்களைக் கைப்பற்றுவதற்கு முன்பாக அவை தங்கள் அடையாளங்களை மாற்றிக்கொண்டு தப்பிக்க முயன்ற போதிலும், வட அட்லாண்டிக் பகுதியில் வைத்து அவை மறிக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் நிழல் கப்பற்படைக்கு (Shadow Fleet) எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இதற்கு ரஷ்யா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மற்றும் பிரித்தானியத் தலைவர்கள் இந்த வெற்றியைக் கடல்சார் பாதுகாப்பிற்கான ஒரு கூட்டு முயற்சியாகக் கொண்டாடுகின்றனர்.
https://athavannews.com/2026/1458958

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

அமெரிக்காவிற்கு மேற்கு நாடுகளின் ஆதரவு கட்டாயம் தேவை.

வெனிசுலா அமெரிக்க நடவடிக்கையில் கூட மேற்கு நாடுகள் அடக்கியே வாசிக்கின்றன, இரண்டு தரப்பிற்கும் மறுதரப்பின் உதவி தேவை.

இது ஒரு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த நடவடிக்கை இட்டு செல்லும் (சர்வதேச கடல் சட்டத்தினை மீறும்), சர்வதே கடலில் இவ்வாறான சோமாலிய கடத்தல்காரர்கள் ரேஞ்சிற்கு அமெரிக்கா இறங்கி வந்திருப்பது பெரும் அதிர்ச்சியாகவுள்ளது.

எதிர்காலம் ஒரு இக்கட்டான காலகட்டத்திற்குள் செல்கிறது.

மடுரோ கைதுக்கு முதல் வெனிசுவேலா அருகில் வைத்து இப்படி இரு கப்பலை மூழ்கடித்தது அமேரிக்கா.

புலிகளின் கப்பலை கூட இந்தியா இலங்கை இப்படித்தான் மூழ்கடித்தன.

முன்னரும் அமெரிக்கா சட்ட மீறலை செய்துள்ளது.

ஆனால் நீங்கள் சொல்வது சரிதான்…முன்னர் போல அல்லாமல் இப்போ ஒரு படி மேலே போய் அமெரிக்கா அடாவடி செய்கிறது.

இதுவும் மேற்கு இதுவரை தன் நலனுக்கு ஏற்ப கட்டியமைத்த rules based order ஐ உடைக்கும் வேலைதான்.

3 minutes ago, goshan_che said:

இதுவும் மேற்கு இதுவரை தன் நலனுக்கு ஏற்ப கட்டியமைத்த rules based order ஐ உடைக்கும் வேலைதான்.

நான் முன்வைக்கும் டிரம்ப்-புட்டின் சதிகோட்பாட்டினை பொருத்தி பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ய கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கா!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.