Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு கோடித் தமிழர்களுடனும் உறவைப் பேணத் தவறியது ஏன்?; கஜேந்திரகுமார் எம். பி. கேள்வி

GAJA-1.jpg

ஏழு கோடி மக்கள் தமிழ் நாட்டில் இருந்தும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் எமது மக்கள் அனாதைகளாக இருந்தார்கள்.ஏன் கடந்த காலத்தில் மக்கள் ஆணை பெற்ற தமிழ் தலைவர்கள் அதை செய்யவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பினார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு செவ்வாய்க் கிழமை நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றபோது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்,

அண்மையில் தமிழகத்திற்கு நாம் விஜயம் செய்து எமது நிலைப்பாட்டை தமிழகத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம்.எங்கள் முயற்சி தொடர்பான விளக்கக் குறைவு காரணமாக கணிசமானோர் விமர்சிக்கின்றனர்.

தமிழ் நாட்டுக்கு செல்வது தொடர்பாக எங்கள் அமைப்புக்குள் நீண்டகாலமாக பேசி வந்தோம்.

தமிழ் நாட்டை ஆண்ட தலைவர்களை சந்திக்க முடியாமல் ஏனைய கட்சிகளின் தலைவர்களை சந்திப்பது பொருத்தமற்றது என்பதால் அதனை தவிர்த்திருந்தோம்.

தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்ததால் தமிழகத்திற்கு சென்று காங்கிரஸை தவிர அனைத்து கட்சித் தலைவர்களுடன் நாம் சந்தித்தோம். காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்திற்கு வெளியில் இருந்ததால் அவர்களை சந்திக்க முடியவில்லை.

இந்தச் சந்திப்புக்களின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கிய கடிதத்தை எழுதியிருந்தார்.

ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட அணி தமிழ் தேசிய நிலைப்பாட்டை தமிழகத்திற்கு சென்று வலியுறுத்திய போது தமிழ் நாட்டு அரசாங்கம் பிரதமர் மோடிக்கு பலமான கடிதம் எழுதுமாக இருந்தால்,தமிழ் தேசிய அணியின் பலமாக பத்துப் பேரும் ஒன்றாக இணைந்து செயற்பட்டால் எவ்வளவு விடயங்களை செய்ய முடியும்.

கடந்த காலங்களில் மக்கள் அங்கீகாரம் பெற்ற எமது தலைவர்கள் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை.

தமிழகத்துடனான உறவைப் அவர்கள் பேணவில்லை. ஏழு கோடி மக்கள் தமிழ் நாட்டில் இருந்தும் எமது மக்கள் அனாதைகளாக இருந்தார்கள்.

ஏன் கடந்த காலத்தில் மக்கள் ஆணை பெற்ற தலைவர்கள் அதை செய்யவில்லை. தமிழ் தேசிய நீக்கம் அவர்களின் நோக்கம் என்றதால் அவர்களுக்கு தமிழ் நாடு தேவையில்லாமல் இருந்தது – என்றார்.

https://akkinikkunchu.com/?p=356208

  • கருத்துக்கள உறவுகள்

2020 இல் இரண்டு பா.உக்கள் (ஒன்று வாக்குகள் மூலம், ஒன்று "பின் கதவு" 😎எனப்படும் தேசியப் பட்டியல் மூலம்) கொண்டிருந்த கஜேந்திரகுமாரும் தான் ஏழு கோடி தமிழக தமிழர்களின் தலைவர்களைச் சந்திக்கவில்லை. இப்போது ஒற்றை ஆசனமாகக் குறைந்த பின்னர் தான் புதிய ஞானங்கள் பிறந்திருக்கிறதா?

கீழே 👇 இருக்கும் செய்தி யாழில் பகிரப் பட்ட போது, எழுந்த எதிர்ப்போடு எப்படி இந்த கஜேந்திரகுமாரின் ஆதங்கத்தை இணைத்துப் பார்ப்பது?

Gold FM News
No image preview

Sri Lankan MPs attend World Tamil Diaspora Day celebratio...

Sri Lankan MPs attend World Tamil Diaspora Day celebrations in Chennai. Most visited website in Sri Lanka.

8 hours ago, கிருபன் said:

இந்தச் சந்திப்புக்களின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கிய கடிதத்தை எழுதியிருந்தார்.

ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட அணி தமிழ் தேசிய நிலைப்பாட்டை தமிழகத்திற்கு சென்று வலியுறுத்திய போது தமிழ் நாட்டு அரசாங்கம் பிரதமர் மோடிக்கு பலமான கடிதம் எழுதுமாக இருந்தால்,தமிழ் தேசிய அணியின் பலமாக பத்துப் பேரும் ஒன்றாக இணைந்து செயற்பட்டால் எவ்வளவு விடயங்களை செய்ய முடியும்.

மக்களை எந்தவிதத்திலாவது ஏமாற்றி கவர வேண்டும் எனும் நோக்கத்தின் அடையாளம் தான் இது.

ஸ்ராலின் மோடிக்கு கடிதம் எழுதுவது, தமிழக முதலைமைச்சர்கள் தம் பிரதமருக்கு கடிதம் எழுதுவது என்பது எல்லாம் அடிக்கடி நிகழும் எந்த பயனும் அற்ற, எந்த பயனும் ஏற்படக் கூடாது எனும் நோக்கில் மக்களை ஏமாற்றச் செய்யும் விடயம் எனும் மிக அற்பமான உண்மையை இவர் அறியாதவராக இருக்க மாட்டார். ஆனால், அதனையே ஒரு சாதனையாக உருப்பெருக்கம் செய்து தம் வங்குரோத்து அரசியலை நிரப்ப பார்க்கின்றார்.

இவர்கள் இப்படியே படம் காட்டிக் கொண்டு இருந்தால், முழு வடக்கும் தேசியக் கட்சிகளிடம் சரணடைவதைத் தவிர வேறு எதுவும் நிகழ்ந்து விடாது.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் காட்டிய வழியிலேயே திருட்டு திராவிட கட்சிகள் , திராவிடம் ஒரு ஒழிக்கபட வேண்டிய தீயசக்தி என்று சீமான் சொன்னதையே மேற்குலகில் வாழ்கின்ற தமிழர்கள் ஒரு பகுதியினர் பின்பற்றி வருகின்றனர். இதன் காரணமாக பயந்து போன இலங்கை தமிழ் தலைவர்கள் தமிழ்நாட்டில் மக்கள் ஆணையை பெற்ற கட்சிகளுடன் தொடர்புகள் வைப்பதை தவிர்த்து வந்தார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.