Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் போராட்ட வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரிப்பு

27 Jan, 2026 | 12:47 PM

image

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாற்றிலேயே மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 28ஆம் திகதி, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ஈரானிய ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக சரிந்துள்ளதாக சர்வதேச நிதி சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கடும் நாணய வீழ்ச்சி, ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டங்களை கட்டுப்படுத்த முயன்ற பொலிஸார் பல இடங்களில் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில பகுதிகளில் இந்த மோதல்கள் வன்முறையாக மாறியுள்ளன.

நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து, ஈரான் மத்திய வங்கியின் ஆளுநர் முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகள், அதிகரித்த பணவீக்கம் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெற்ரோல் விலை மாற்றம் ஆகியவையே தற்போதைய நெருக்கடிக்கு பிரதான காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களால் ஈரானில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் பல பகுதிகளில் இணைய சேவையையும் துண்டித்துள்ளது.

இதனிடையே, ஈரானில் ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளதாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இதுவரை 6,126 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

நிலைமை சீரடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், ஈரானின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலம் குறித்து உலக நாடுகள் கவலையுடன் கவனம் செலுத்தி வருகின்றன.

https://www.virakesari.lk/article/237133

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது என்பதை மறைத்து. மேற்கு ஊதுகுழல்கள் சொல்லுவதை ஒப்புவிப்பது (வீரகேசரி) செய்தி அல்ல.

எல்லா மேட்ற்கு நானும் ஆதரவு அளிக்க, us, uk, பிரான்ஸ், இஸ்ரேல் இரானுக்குள் உளார்களுக்கு நாசகார சம்பங்களை செய்வதத்திற்கு பயிற்சியும் அளித்து, பணமும் கொடுத்து வைத்து இருந்தது.

ஜூன் தாக்குதல் வெற்றி அடையவில்லை என்பதால்.

2ம் கடா திட்டமான ஆர்ப்பாட்டத்தை தூண்டி, அந்த போர்வையில், அரச கட்டடங்கள், வசதிகள் போன்றவை தீயிட்டு கொளுத்தப்பட்டதை,

மேட்ற்கு இரசித்து கொண்டு, உண்மையான ஆர்ப்பாட்டம் நடப்பதாக பிரச்சாரம் செய்தது.

முதலில் இரான் என்ன நடக்கிறது என்பதை அரிவதத்திற்கு, அவனிப்பதத்திற்கு நேரம் எடுத்தது, அத்தத்துடன் இரும்பு கரஅதிகாரத்தை பாவிக்கவில்லை.

இணையவழி வெளிதொடர்பாடல் நாசம்செஐயப்பாடும் இடங்களுக்கு வருவதை அவதானித்து, வெளிஇணையதொடர்பை துண்டித்தது,

ஆனாலும், நாசம் செய்வது மேலும் கூடியது.

அதன் பின்பு ஈரான் விளித்து கொண்டது ஸ்டார் லிங் தொடர்பாடல் பற்றி,

அதுவே நாசம் செய்பவர்களுக்கு ஆப்பாகியது. starlink தொடர்பாடலை உளவறிந்து, எந்த இடத்தில், புள்ளியில் இருந்து தொடர்பு இருக்கிறது என்பதை நேரம் விட்டு, படம்போட்டு, நாசம் செய்பவர்களை குறிப்பாக பிடித்தது. (இரான் அறிவித்தும் உள்ளது 732 நாசக்காரர்கள் என்று , டிரம்ப் இதை மழுப்பலாக, பட்டும் படாமலும் சொல்லி இருந்தார் அவர்களை தூக்கில் இடக்கூடாது என்று. இரான் நீதி / சட்ட த்துறை மறுத்து விட்டது)

(இதில் ஈரானுக்கு ருசியா உதையும் இருந்ததாக செய்திகள் உள்ளன)

அதன் பின்பே இரும்புகர அதிகாரத்தை பாவித்து.

நிசயாமாக அப்பாவிகள் இறந்து இருப்பார்கள். ஆனால் பெரும்பான்மை நாசகர்களின் தூண்டுதுதலுக்கு எ டுபட்டவர்கள்.

மறுவலமாக அரச சேவைகள், கட்டிடங்கள் போன்றவற்றை எரித்தால், எந்த மேட்ற்கு அரசு பார்த்து கொண்டு இருக்கும்

ஈரானின் மேட்ற்கு, இஸ்ரேல் ஆட்சி கவிழ்ப்பு கனவு சுக்குநூறாகிவிட்டது.

அதன் பின்பே இப்பொது பெரும் கடல் சார்ந்த படையை கொண்டு மிரட்டல் தொடங்கப்பட்டு உள்ளது.

4 hours ago, Kadancha said:

முதலில் இரான் என்ன நடக்கிறது என்பதை அரிவதத்திற்கு, அவனிப்பதத்திற்கு நேரம் எடுத்தது, அத்தத்துடன் இரும்பு கரஅதிகாரத்தை பாவிக்கவில்லை.

ஒரு செய்தியை இப்படியெல்லாம் புரட்டலாமா 🤣

6 ஆயிரம் பேர் உயிரிழந்தது தவிர கைது செய்யப்பட்ட பல்லாயிரம் மக்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உட்பட ஒரு லட்சம் பேரை மேற்கு நாடுகள் பயிற்சியளித்து உள்ளே அனுப்பியிருக்குமா ? இந்த ஒரு லட்சம் பேர் நாட்டிற்குள் ஊடுருவியதைக் கூட ஈரானால் அறிய முடியவில்லை என்கிறீர்கள். 😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

ரு செய்தியை இப்படியெல்லாம் புரட்டலாமா 🤣

6 ஆயிரம் பேர் உயிரிழந்தது தவிர கைது செய்யப்பட்ட பல்லாயிரம் மக்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உட்பட ஒரு லட்சம் பேரை மேற்கு நாடுகள் பயிற்சியளித்து உள்ளே அனுப்பியிருக்குமா ? இந்த ஒரு லட்சம் பேர் நாட்டிற்குள் ஊடுருவியதைக் கூட ஈரானால் அறிய முடியவில்லை என்கிறீர்கள்.

புரட்டுவதத்திற்கு ஒன்றும் இதில் இல்லை, எல்லாமே வெளிப்படையாக நடந்தது.

எங்கே சொன்னேன் இலட்ச கணக்கில் பயிற்சி அளித்து மேற்கு, us, இஸ்ரேலிய உளவு முகவர்கள் அனுப்பப்பட்டதாக?

(ஊடுருவியது 1000 கணக்கில் இருக்கும் என்பது எனது ஊகம். ஏனெனில் இரானின் நிலப்பரப்பு, பிடிக்கப்பட்ட தொகையயையும் கொண்டு).

இதை முதலில் அறிவித்தது, இரானின் தாராள / மென் போக்கான அதிபர்.

ஏன் வெளியில் இருந்து முன்னாள் cia தலைவர் (போம்பேயோ) ஈரானில் களத்தில் இருக்கும் us, இஸ்ரயேலியா உளவு முகவர்கள் என்று கிரிஷ்துமஸ் , புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

(டிரம்ப் இன் எச்சரிக்கை, மிரட்டல்கள் இதன் பின்பே ஆரம்பித்தது.)

அனல். நன்றாக ஒவ்வொரு நாளும் பார்த்து இருந்தீர்கல் என்றால், இது தன்னிச்சையான ஆர்ப்பாட்டம் அல்ல, ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டம் என்பது வெறும் கண்களுகே தெரிந்து இருக்கும்

அனால் மேற்கு செய்திகள் ஒருபக்கம், அவசர்களின் இலக்கான ஆட்சி மாற்றத்துக்கு வசதியான செய்திகள்.

அத்துடன் எல்லை பகுதிகளிலேயே தலைநகரை விட தீவிரமாக இருந்தது. ஏனெனில் அதன் அயல் பகுதிகளில் உள்ள நாடுகளில் cia, mossaad நிலைகள் இருக்கிறது (இது தெரிந்த விடயம்)

(இப்பொது இருக்கும் கைதுகள் இயற்கை, எந்த அரசாங்கம் என்றாலும் ஆழம் காணாமல் விடாது. )

அரசாங்கம் மீது வெறுப்பு உள்ளோர் இருந்தனர். அவர்களுக்கு உந்துதல் கொடுத்தது சரி.

அனால் அரச வசதிகளை , கட்டிடங்களை ஒழுங்குபடுத்தப்பட பாணியில் எரிப்பதை, இரான் அரசாங்கம் பார்த்து கொண்டு இருக்க வேணும் என்பதே மேற்கின், us, இஸ்ரேல் இன் எதிர்பார்ப்பு. ஏனெனில், அவர்களின் ஆட்சி மாற்றத்துக்கு தேவையானது.

குறிப்பாக எதை புரட்டி இருக்கிறேன் என்பதை சொல்லவும்.

(தயவு செய்து இரானை பற்றி அறியவும். மேற்கின் (பூச்சாண்டி) செய்திகளை மட்டும் பார்த்தல் இரான் பேயாக தான் தெரியும்) .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.