Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்

Feb 6, 2026 - 04:10 PM

நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், ஆசிரியர் ஒருவர் மாணவியை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவி, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 05 ஆம் திகதி குறித்த பாடசாலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அன்று மாலை மாணவி நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். எனினும், இன்று (06) மாணவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

தொடர்ச்சியான தலைவலி, தலைச்சுற்று, குமட்டல் மற்றும் உடல் வலி அதிகரித்துள்ள நிலையில், அவரை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்துத் தெரிவிக்கையில்:

"குறித்த ஆசிரியர் வழமையாகவே மாணவிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், அடிப்பதுமே வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த 05 ஆம் திகதி எனது பெற்றோரை இழுத்து மிக மோசமான வார்த்தைகளால் திட்டியவர், எனது கன்னம் மற்றும் செவிப்பகுதிகளில் கடுமையாகத் தாக்கினார். இறுதியில் எனது தலையைப் பிடித்து மேசையில் மோதியதுடன், முழங்கையால் முதுகுப் பகுதியிலும் பலமாகத் தாக்கினார். வலியின் உச்சக்கட்டத்தால் எனக்குத் தானாகவே சிறுநீர் கசிவு ஏற்பட்டது. பாடசாலை முடியும் வரை அதே நிலையிலேயே நான் இருந்தேன்." என குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர்கள் மற்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த ஆசிரியர் முன்னரும் பல மாணவர்களை இவ்வாறே மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு மாணவனை தும்புத்தடியால் தாக்கிய சம்பவமும் பதிவாகியுள்ளது.

மாணவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய, நானுஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த ஆசிரியரை விசாரணைக்கு உட்படுத்தவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

-நுவரெலியா நிருபர் செ.திவாகரன்-

https://adaderanatamil.lk/news/cmlar78ol000a356ngjyrq2g4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் ; பொலிஸ் விசாரணை ஆரம்பம்

Published By: Digital Desk 3

06 Feb, 2026 | 03:27 PM

image

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா பகுதியில் பாடசாலை ஒன்றில், தரம் 08 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவி நேற்று வியாழக்கிழமை (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். எனினும், மாணவிக்கு ஏற்பட்ட காயங்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மேலதிக சிகிச்சைக்காக இன்று வெள்ளிக்கிழமை (06) வெள்ளிக்கிழமை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.

தாக்குதலின் விளைவாக மாணவிக்கு அடிகாயங்கள், உட்காயங்கள் ஏற்பட்டதுடன், கடும் வலியினால் தானாக சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவி இன்று பாடசாலைக்கு செல்லவில்லை என்றும், தொடர்ந்து தலைவலி, தலைச்சுற்று, குமட்டல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் அதிகரித்து வருவதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்ததாவது,

குறித்த ஆசிரியர் வழக்கமாக பாடசாலையில் மாணவ, மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி வருவதாக கூறினார். சம்பவ தினத்தன்று, பெற்றோரை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கன்னம் மற்றும் செவி பகுதிகளில் கடுமையாக தாக்கியதாகவும், பின்னர் தலையை பிடித்து மேசையில் மோதச் செய்து, முதுகுப் பகுதியில் முழங்கையால் தாக்கியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வலி தாங்க முடியாமல் சிறுநீர் கசிவு ஏற்பட்டதாகவும், பாடசாலை முடியும் வரை அதே சீருடை மற்றும் பாதணியுடன் வீடு திரும்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது, சம்பவ விவரங்களை தெரிவித்ததுடன், ஏற்பட்ட காயங்களையும் காட்டியுள்ளார். இதனையடுத்து, மாணவியை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர்.

பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த ஆசிரியர் நானுஓயா பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த ஆசிரியர் இதற்கு முன்னரும் பல மாணவர்களை பாடசாலையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளதாகவும், ஏற்கனவே ஒரு மாணவனை தும்புத்தடியால் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், பாடசாலை பெற்றோர் வட்டாரங்கள் மற்றும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/237986

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

குறித்த ஆசிரியர் இதற்கு முன்னரும் பல மாணவர்களை பாடசாலையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளதாகவும், ஏற்கனவே ஒரு மாணவனை தும்புத்தடியால் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், பாடசாலை பெற்றோர் வட்டாரங்கள் மற்றும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகின்றனர். பெற்றோரை பிள்ளைகள் முன் திட்டுவது ஒரு பொறுப்புள்ள ஆசிரியரின் கடமையா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகின்றனர். பெற்றோரை பிள்ளைகள் முன் திட்டுவது ஒரு பொறுப்புள்ள ஆசிரியரின் கடமையா?

அரசியல் கட்சிகளுக்கு பின்னால் திரிந்து, அவர்களின் சிபாரிசில்… ஆசிரியர் வேலை, தாதியர் வேலை, மற்றும் அரச வேலைகளை பெறுபவர்களிடம்… அந்தப் பதவிக்கு உரிய நற்பண்பும், கண்ணியமும், பொறுப்புணர்வும் அறவே இருக்காது. தமது காவாலித்தனத்தை காட்டவே செய்வார்கள்.

இப்படி.. டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் போன்றவர்களின் சிபாரிசில் வந்தவர்களால் வடமாகாணத்தில் பல சம்பவங்கள் நடந்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது - நானுஓயாவில் சம்பவம்

07 Feb, 2026 | 01:30 PM

image

நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி வியாழக்கிழமை (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின் நானுஓயா பொலிஸாரால் குறித்த ஆசிரியரை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த ஆசிரியரை இன்று சனிக்கிழமை (07) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆசிரியர் தாக்கியதில் மாணவிக்கு அடிகாயங்கள் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டு தானாகவே சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

தரம் 08 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளார்.

எனினும் வெள்ளிக்கிழமை குறித்த மாணவி பாடசாலைக்கு செல்ல வில்லை எனவும் தொடர்ந்து தலை வலி ,தலைச்சுற்று குமட்டல் போன்றவை அதிகமாக உள்ளதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக பெற்றோர் தெரிவித்தனர்.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது, நடந்தவற்றை கூறி தனது அடிகாயங்களையும் உட்காயங்களையும் காட்டியுள்ளார். தொடர்ந்து மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும் பொலிஸ் நிலையத்தில் மாணவி மூலம் முறைப்பாட்டை பதிவு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

https://www.virakesari.lk/article/238074

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் ஆசிரியர் என்று எழுதி உள்ளார்கள். மாணவியை தாக்கிய அந்த ஆசிரியர் ஆணா அல்லது பெண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்

சூரியன் எப்.எம் வானொலி முகப் புத்தக பக்கத்தில் பிள்ளையின் காயப்பட்ட பக்கங்களளை மறைக்காமல் போட்டிருக்கிறார்கள்.ரத்தக் காயங்கள், தையல் வேறு போட்டு இருக்கிறார்கள்.குறிப்பிட பட்ட ஆசிரியர் என்று சொல்லப்படுபவர் அதற்கு எந்த வித தகுதியும் அற்றவர் என்று நான் நினைக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.