Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, island said:

அது ஆசிய/ ஆசிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வாழும் மக்களிடையே தான் அது வீரியத்துடன் இருக்கிறது

இந்த ஆசியா ஆபிரிக்க கண்டங்களில் உள்ள சாதி வெறி பழமைவாத வெறி, மத வெறி அங்கே இருந்து குடியேறியவர்கள் பலரிடமும் தீவிரமாக உள்ளது

ஈரானில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1230 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் ஈரானிய அரசே சொல்கின்றது ஆனால் தமிழ்நாட்டில் இருந்து ஈரான் வெற்றி பாடல் என்று நோன்பு நாளில் வேட்டை ஆட வந்தாயா இந்த அடி போதுமா என்று பாட்டு போடுகின்றார்கள் மதவெறி வெட்டி வீரம் காரணமாக

  • Replies 105
  • Views 5.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இதில பகிடி என்னவென்றால் ஈரானிய மக்கள் கமெனி கொல்லப்பட்டதை கொலுவிருத்துறாங்கள் (celebrate)..ஆனால் எங்கட நாட்டு முஸ்லீம்கள் அத நினைச்சு வருந்துறாங்கள் .. போதாக்குறைக்கு புலிகளையும் இழுக்கிறாங்கள்... மதம

  • ரசோதரன்
    ரசோதரன்

    ஈரானின் சுப்ரீம் லீடரும், இன்னும் பல முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டு விட்டதாகவே இங்கு அமெரிக்காவில் செய்திகளில் வர ஆரம்பித்திருக்கின்றது. ஈரானில் பாடசாலைப் பிள்ளைகளும், பொதுமக்களுமாக நூற்றுக்கு மேற்பட்

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    வெற்றி வெற்றி .... இஸ்லாமிய உச்ச பயங்கரவாதி கமேனி .... கொல்லப்பட்டான் ... 🤣🤣🤣 ஒரே மகிழ்ச்சியாக உள்ளது ... உலகை பயங்கரவாதத்திடமிருந்து காத்த அமெரிக்க இஸ்ரேலிய வான்படையினருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 இந்த

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானுக்கு எதிரான போர் அடுத்த கட்டத்தை நோக்கி

Mar 6, 2026 - 06:55 AM

ஈரானுக்கு எதிரான போர் அடுத்த கட்டத்தை நோக்கி

ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளைக் குறிவைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தமது நாடு தற்போது போரின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

உடனடியாக ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸாரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும், இல்லையெனில் அவர்கள் நிச்சயம் மரணத்தை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

அத்துடன் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் நான் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன், உங்கள் ஆயுதங்களைக் கீழே போடுங்கள்.

நீங்கள் அவ்வாறு செய்தால், நீங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவீர்கள். ஆனால், நீங்கள் அதைச் செய்யாவிட்டால், நீங்கள் நிச்சயமாக மரணத்தை சந்திக்க நேரிடும். அது நடப்பதை நான் பார்க்க விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு எதிரான போர் அடுத்த கட்டத்தை நோக்கி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஆயுதங்களைக் கீழே போடுங்கள்; இல்லையேல் மரணம் உறுதி": ஈரானியப் படைகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

Published By: Digital Desk 3

06 Mar, 2026 | 09:35 AM

image

ஈரானியப் புரட்சிகர காவல்படை, இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமானதும் இறுதியானதுமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரானியப் படையினர் உடனடியாகத் தமது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகையிலிருந்து விசேட உரையொன்றை நிகழ்த்திய ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானியப் படைகளுக்கு இரண்டு தெரிவுகளை வழங்கியுள்ளார்:

"ஈரானியப் புரட்சிகர காவல்படை மற்றும் பொலிஸார் உடனடியாகத் தமது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எமது பக்கம் நின்றால், உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்."

"நீங்கள் தொடர்ந்து போராடினால் கொல்லப்படுவது உறுதி. உங்களது மரணம் நிச்சயமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. நான் அதனைப் பார்க்க விரும்பவில்லை. எனவே, உங்கள் நாட்டை மீண்டும் மீட்டெடுக்க இதுவே சரியான தருணம்."

இதேவேளை, உலகம் முழுவதும் உள்ள ஈரானிய இராஜதந்திரிகள் தமது பதவிகளைத் துறந்துவிட்டு, அரசியல் தஞ்சம் கோருமாறு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

"சிறந்த எதிர்காலம் மற்றும் பாரிய ஆற்றல் கொண்ட ஒரு புதிய ஈரானை உருவாக்குவதற்கு எமக்கு உதவுங்கள். ஈரானிய இராஜதந்திரிகள் எமது பக்கத்தில் இணைந்து இந்த மாற்றத்திற்கு வலு சேர்க்க வேண்டும்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் முக்கிய இராணுவ நிலைகள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் இந்த அறிவிப்பு ஈரானியப் படைகளுக்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். ஈரானியத் தலைநகர் தெஹ்ரானை நோக்கி அமெரிக்க ஆதரவுப் படைகள் முன்னேறி வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த "சரணடைதல் அல்லது மரணம்" என்ற எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"ஆயுதங்களைக் கீழே போடுங்கள்; இல்லையேல் மரணம் உறுதி": ஈரானியப் படைகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“கடைசி வீரர் உள்ளவரை போராடுவதை தவிர வேறு வழியில்லை” - ஈரான் வெளியுறவு துணை அமைச்சர்

hindutamil-prod%2F2026-03-06%2Fmdd8iodz%

புதுடெல்லி: ஈரான் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. எங்களிடம் இருக்கும் கடைசி குண்டு தீரும் வரை, கடைசி வீரர் உள்ள வரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சயீத் கத்தீப்சாதே தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து வான் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சயீத் கத்தீப்சாதே, “ஈரானும் இந்தியாவும் ஒரே நாகரிக வேர்களைக் கொண்டவை. நாம் இந்தோ-பாரசீக கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கலாச்சார-நாகரிக பாரம்பரியத்துடன் இணங்கும் வகையில், ஈரான்-இந்தியா உறவுகளுக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம்.

தற்போது ஈரானின் முக்கிய முன்னுரிமை தாக்குதல் நடத்தும் எதிரிகளுக்கு எதிராக தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்துவது. அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்களை தாக்கி, ஆக்கிரமிப்பு நடத்தி வருகின்றன. அவர்கள் ஈரானுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், எனது நாட்டின் குடிமக்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் குண்டுகளை வீசி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஈரான் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. எங்களிடம் கடைசி குண்டு இருக்கும் வரைவும், கடைசி வீரர் இருக்கும் வரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. இது எங்களின் வீரம் மற்றும் தேசிய உணர்வுக்கான போராட்டமாகும். ஈரானுக்கு எதிராக நடக்கும் இந்த கொடூரங்களை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போர் குறித்து இந்திய தரப்புடன் பேசினீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சயீத் கத்தீப்சாதே, “ஆம். இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேசினேன். மற்றவர்களுடனும் சிறிய உரையாடலை மேற்கொண்டேன். இந்த விவகாரத்தில் முக்கியமானது என்னவென்றால், அனைவரும் சர்வதேச சட்டத்தை மதிக்கும் அதே வேளையில், சர்வதேச சட்டத்தின் குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் தேர்வு செய்து பயன்படுத்துவது என்பது கூடாது.

துரதிர்ஷ்டவசமாக, சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகள் தாக்கப்பட்டுள்ளன. இந்த கொடூரங்களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். அமெரிக்கர்கள் மற்றொரு நாட்டின் தலைவரை கொலை செய்துள்ளனர். இது ஒரு புதிய வழக்கமாக மாறினால், உலகில் எந்த நாடும் மற்ற நாடுகளுடன் இயல்பான தூதரக உறவுகளை பேண முடியாது.” என தெரிவித்தார்.

அமெரிக்க தாக்குதலில் ஈரான் போர் கப்பல் மூழ்கிய சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சயீத் கத்தீப்சாதே, “இது மிகவும் துயரமான, வருத்தமான சம்பவம். அந்த கப்பல் எங்கள் இந்திய நண்பர்களின் அழைப்பின் பேரில் ஒரு சர்வதேச பயிற்சியில் கலந்து கொள்ள வந்தது. அது ஒரு விழாக்கால நிகழ்வாக இருந்தது. கப்பலில் ஆயுதங்களும் இல்லை, சரக்குகளும் இல்லை. இந்த சம்பவம் மிகவும் வருத்தமானது. அந்த பயிற்சியில் கலந்து கொண்ட பல இளம் ஈரான் கடற்படையினர் உயிரிழந்தனர். இதை செய்தவர்களுக்கு நாங்கள் நிச்சயம் தண்டனை அளிப்போம்.” என கூறினார்.

மேலும் அவர், “எங்கள் நாடு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. ஈரான் அச்சுறுத்தலாக இருந்தது என்ற முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் இது நடக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக ஏன் தாக்குதலை தொடங்கினார்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி. இந்த கேள்வியை அமெரிக்க நிர்வாகத்திடம் கேட்டால், அவர்கள் எந்த மக்களிடம் பேசுகிறார்கள் என்பதற்கேற்ப வேறு வேறு பதில்களை வழங்குவார்கள். இது அதிகார அரசியல். அதோடு, ‘அகண்ட இஸ்ரேல்’ என்ற மாயக் கற்பனை காரணமாகவே இது தொடங்கப்பட்டது.

எங்களுக்கு இது எதிர்ப்புக்கான போராட்டமாகும். வரலாற்றுக்காகவும், இந்த பிராந்தியத்துக்காகவும், உலகுக்காகவும், சர்வதேச சட்டத்தின் கொள்கைகளுக்காகவும், நெறிமுறைகளுக்காகவும் நடக்கும் போராட்டம் இது. நாங்கள் தொடர்ந்து எதிர்த்துப் போராடுவோம். இது வரலாற்றில் பதிவாகும். கட்டுப்பாடற்ற, பொறுப்பற்ற செயல்கள் ஈரானுக்கு எதிராக நடைபெறுவதால் ஈரான் மக்கள் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நிறுத்தப்படும் தருணத்தில் இந்தப் பிராந்தியத்தில் புதிய மாற்றம் உருவாகும் என்று நான் நம்புகிறேன்.

அமெரிக்கா ஈரான் என்ற நாட்டின் இருப்பை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. ‘அகண்ட இஸ்ரேலை உருவாக்குவோம்’ என்று இஸ்ரேலியர்கள் பல பத்தாண்டுகளாக வாக்குறுதியாக அளித்து வருகின்றனர். எனவே பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் இருப்பை முடிவுக்கு கொண்டுவருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.” என தெரிவித்துள்ளார்.

“கடைசி வீரர் உள்ளவரை போராடுவதை தவிர வேறு வழியில்லை” - ஈரான் வெளியுறவு துணை அமைச்சர்

  • கருத்துக்கள உறவுகள்+

குர்துக்கள் படையெடுப்பை தொடங்கிவிட்டனர்.

முஸ்லீம் பயங்கரவாதம் தணிக்கப்படும்... 🥹

வாழ்த்துக்கள் .....

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ இருவரின் சண்டைக்குள் எங்களை இழுத்துவிடாமல் இருப்பது நல்லது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.