Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

Mar 4, 2026 - 11:40 AM

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த சுமார் 35 பேர், தற்போது இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் பின்னர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், கப்பல் விபத்துக்குள்ளான பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை விமானப்படை கண்காணிப்பு விமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

இதனிடையே, இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், குறித்த கப்பல் இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகவில்லை என்று தெரிவித்தார்.

குறித்த கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதாக கடற்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாகவே மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் 180 பேர்: மீட்கப்பட்டோர் கராப்பிட்டியவிற்கு

Mar 4, 2026 - 12:17 PM

விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் 180 பேர்: மீட்கப்பட்டோர் கராப்பிட்டியவிற்கு

காலி கடற்பரப்பிலிருந்து 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Dena' கப்பலில் 180 பேர் இருந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அமைச்சர், அவர்களில் 30 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டு, தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் 180 பேர்: மீட்கப்பட்டோர் கராப்பிட்டியவிற்கு

இது விபத்துக்குள்ளாகவில்லை. அமெரிக்க நீர் மூழ்கி கப்பலில் இருந்து torpedo தாக்குதலின் மூலம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்ட இரான் கப்பல்' - அமெரிக்கா கூறியது என்ன?

இரான் கப்பல், இலங்கை

பட மூலாதாரம்,Mashregh News / File Photo

படக்குறிப்பு,கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • தினுக் ஹேவாவிதரனா

  • பிபிசி சிங்கள மொழி சேவை

  • 4 மார்ச் 2026, 11:43 GMT

    புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானின் கடற்படை கப்பல் ஒன்று இலங்கையின் காலே துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் மூழ்கியது.

இரானிய கப்பல் மூழ்கியதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை என, இலங்கை பாதுகாப்பு இணை அமைச்சர் அருணா ஜெயசேகரா பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் தற்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "சர்வதேச கடலில் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்ட இரானிய போர்க்கப்பல் ஒன்றை இந்திய பெருங்கடலில் அமெரிக்கா மூழ்கடித்ததாக" தெரிவித்தார்.

"அக்கப்பல் நீர்மூழ்கிக் குண்டால் மூழ்கடிக்கப்பட்டது" என அவர் தெரிவித்தார்.

ஆனாலும், தாக்குதலுக்கு உள்ளான இரானிய கப்பலின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

அதே சமயம், இலங்கையில் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலால் கப்பல் மூழ்கியதாக வெளியான செய்திகளை நிராகரிப்பதாகவும், மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை என்றும் இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் புதிகா சம்பத் முன்னர் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் பாதுகாப்பு துறை செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா பிபிசி சிங்கள மொழி சேவையிடம் இதனை உறுதி செய்தார்.

காயமடைந்த 32 பேர் காலே தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கப்பலில் இருந்த 140-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என, சம்பத் துய்யகொந்தா பிபிசியிடம் தெரிவித்தார்.

நீர்மூழ்கி தாக்குதல் என்பதை மறுத்த இலங்கை கடற்படை

இரான் கப்பல் மூழ்கியதற்கு நீர்மூழ்கி தாக்குதல் தான் காரணம் என்கிற செய்தியை தாங்கள் முற்றிலும் மறுப்பதாக இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் புத்திகா சம்பத் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர் சந்திப்பின்போது வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி, இரானிய கப்பல் நீர்முழ்கி தாக்குதலுக்கு உள்ளானதாக கடற்படை தெரிவித்துள்ளதா என்கிற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "கடற்படை தரப்பிலிருந்து இந்தக் கூற்றை முழுவதுமாக நிராகரிக்கிறோம்." என்றார்.

''விபத்து நேர்ந்த விதம் தொடர்பில் பின்னரான காலத்தில் நடத்தப்படும் விசாரணைகளின் ஊடாகவே உறுதிப்படுத்த முடியும். விசேட நிபுணத்துவத்துடனான விசாரணை குழு, தொழில்நுட்ப விசாரணைகள் குழுவின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அதற்காக அதிகாரம் உள்ள நிறுவனங்கள் தொடர்புப்பட வேண்டும். வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட தகவலை நிராகரிக்கின்றோம்." என்று கூறினார்.

இரானிய கப்பலின் நிலை பற்றி பிபிசி சிங்களா விசாரித்தபோது, கடற்படை சென்ற சமயத்தில் கப்பல் முழுவதும் மூழ்கியதாக அவர் தெரிவித்தார்.

"அபயக் குரல்கள் எங்களுக்கு கிடைத்தபோது சம்பவம் நடந்த இடத்திற்கு கடற்படை கப்பல் சென்றடைந்தன, ஆனால் அங்கு எண்ணெய் படலங்கள், சில உயிர்காக்கும் படகுகளை மட்டுமே கண்டோம். அங்கு எந்த இரானிய கப்பலும் இல்லை. அது மூழ்கியிருந்தது." என்றும் தெரிவித்தார்.

கப்பல் மூழ்கியதற்கான காரணத்தை தற்போது வரை இலங்கை ராணுவத்தால் உறுதிசெய்ய முடியவில்லை.

தொடர்ந்து பேசிய அவர், "விபத்துக்குள்ளான கப்பலில் காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.32 பேரை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளோம். தொடர்ந்தும் தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன." என்றார்.

கப்பல் மூழ்கி வரும் இடத்திலிருந்து சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "'இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த கடலை அண்மித்த பகுதியிலிருந்து உயிரிழந்த சில மனித உடல்களை நாங்கள் மீட்டுள்ளோம். இந்த சடலங்கள் கப்பலில் கடமையாற்றிய ஊழியர்களுடையதாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கின்றோம். எனினும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஊடாகவே இந்த சடலங்கள் இந்த கப்பலில் பணியாற்றியவர்களுடையதா என்பது உறுதிப்படுத்தப்படும்.'' என அவர் குறிப்பிடுகின்றார்.

கப்பல் மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை - பாதுகாப்பு இணை அமைச்சர்

இரானிய கப்பல் விபத்தில் சிக்கியதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை என, பாதுகாப்பு இணை அமைச்சர் அருணா ஜெயசேகரா பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

"கடற்படை இதனை விசாரித்து வருகிறது. காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அதே நேரத்தில், உறுதியான காரணத்தை எங்களால் கண்டறிய முடியவில்லை," என்று அவர் கூறினார்.

கப்பலின் நிலை பற்றி தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காயமடைந்தவர்களின் நிலை என்ன?

இரான் கப்பல், இலங்கை

கப்பலில் இருந்தவர்களில் காயமடைந்த 32 பேர் காலே தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் எஸ்.டி.யு.எம் ரங்கா பிபிசியிடம் தெரிவித்தார்.

"32 நோயாளிகள் உள்ளனர். பலருக்கு வெட்டுக் காயங்களும், தீக்காயங்களும் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவரின் நிலை மோசமான நிலையில் உள்ளது. 7 பேருக்கு மிதமான அளவிலும் மற்றவர்களுக்கு சிறிய அளவிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயம் ஏற்பட்டதற்கான காரணத்தை உறுதியாக கூற முடியவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்

அந்தக் கப்பல் குழுவினரை மீட்க இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை கூட்டாக இணைந்து செயல்பட்டதாகவும் சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.

இலங்கையின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அந்தக் கப்பல் ஆபத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கப்பலில் உள்ள குழுவினரை மீட்க இலங்கை கடற்படை கப்பல் ஒன்று அனுப்பப்பட்டதாக, கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திகா சம்பத் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த பகுதியில் கண்காணிப்பு மேற்கொள்ள இலங்கை விமானப் படையின் விமானம் இன்று (மார்ச் 4) அனுப்பப்பட்டதாக, விமானப் படை செய்தித் தொடர்பாளர் நலின் வெவாகும்புரா தெரிவித்தார்.

காலை 5 மணிக்கு கிடைத்த தகவல்

இரான் கப்பல், இலங்கை

இரானிய கடற்படைக்குச் சொந்தமான ஐஆர்ஐஎஸ் டேனா "விபத்துக்கு உள்ளானதாக" இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் நாடாளுமன்றத்தில் கூறினார்.

இன்று காலை 05:08 மணிக்கு கப்பல் மூழ்குவதாக கடற்படைக்கும் கடலோரக் காவல் படைக்கும் தகவல் கிடைத்தது என்றும் அவர் தெரிவித்தார்.

காலை 6 மணிக்கு இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை தலையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"6 மணிக்கு முதல் கடற்படை கப்பல் சென்றது, 7 மணிக்கு இரண்டாவது கப்பல் சென்றது. இந்த மீட்புப் பணியில் விமானப்படையும் கடற்படையும் ஈடுபட்டது," என்றார் விஜிதா ஹெராத்.

கப்பலில் 180 பேர் வரை இருந்ததாகவும் 30 பேர் தீவிர ஆபத்தில் இருந்ததாகவும் தகவல் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரான் கப்பல், இலங்கை

ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல்

ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல் இரானிய கடற்படையின் 86 பிரிவைச் சேர்ந்தது. மிகவும் பேசப்பட்ட இந்தக் கப்பல் 2022-2023 ஆண்டுகளில் இரானிய கடற்படையின் பலத்தைக் காட்டுவதற்காக உலகம் முழுவதும் 65,000 கிமீ கடல் பயணத்தை மேற்கொண்டது.

இந்தக் கப்பல் முழுவதும் இரானால் உருவாக்கப்பட்டது. இரானின் பண்டர் அப்பாஸில் உள்ள ஷாஹித் டார்விஷ் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. 1,500 டன் எடை கொண்ட இந்தக் கப்பல் 95 மீட்டர் நீளம் கொண்டது.

இந்தக் கப்பலில் நூர் அல்லது காதர் என்று அழைக்கப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், 76 மிமீ ஃபஜர்-27 கடற்படை துப்பாக்கி, 30மிமீ ஆயுத அமைப்பு, ஆயுதங்கள் மற்றும் தளத்திலிருந்து வான் நோக்கிச் செலுத்தும் ஏவுகணைகள் ஆகியவை உள்ளன.

உலகளாவிய வர்த்தகத்தை காப்பதிலும் கடற்கொள்ளையை எதிர்கொள்வதிலும் மற்றும் நீண்ட தூர கடற்சார் திட்டங்களை நடத்துவதிலும் இரானின் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது என இரான் கடற்படை தெரிவிக்கிறது.

இந்தியா வந்திருந்த கப்பல்

இந்தக் கப்பல் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி இந்தியாவில் விசாகப்பட்டினம் வந்திருந்தது.

இந்திய கடற்படையின் எக்ஸ் தளப் பதிவின் படி, இந்த கப்பல் கடற்படை பயிற்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

'இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்ட இரான் கப்பல்' - அமெரிக்கா கூறியது என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தெற்கு கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பல் மீது தாக்குதல் ? -  101 பேர் மாயம், 78 பேர் காயம்

Published By: Digital Desk 3

04 Mar, 2026 | 05:40 PM

image

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் வைத்து, ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பல் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில், குறைந்தது 101 பேர் மாயமாகியுள்ளதுடன், 78 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 180 பேருடன் பயணித்த இந்த 'மௌஜ்' (Moudge) ரக போர்க்கப்பல், இன்று விடியற்காலை காலி துறைமுகத்திலிருந்து சுமார் 25 மைல் தொலைவில் வைத்து அபாய சமிக்ஞையை விடுத்துள்ளது. வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பலொன்றிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை அல்லது தாக்குதல் காரணமாக கப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியிருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானியக் கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட அவசர உதவி அழைப்பை (Distress Call) தொடர்ந்து, இலங்கை கடற்படை உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளிநாட்டு செய்திச்சேவையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கப்பல் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் உரையாற்றும் போது, மூழ்கிக் கொண்டிருந்த போர்க்கப்பலில் இருந்து குறைந்தது 30 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனினும், சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை. இலங்கை தனது கடற்பரப்பு பாதுகாப்பு மற்றும் சர்வதேச கடல் சட்டங்களுக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாக்குதலுக்குள்ளான போர்க்கப்பல், ஈரானின் தெற்கு கடற்படைக்குச் சொந்தமான ‘மௌட்ஜ்-கிளாஸ்’ (Moudge-class) ரகத்தைச் சேர்ந்த ‘IRIS Dena’ என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இக்கப்பல் தெற்கு கடலோர நகரமான காலிக்கு அருகில் இருந்து அவசர உதவி சமிக்ஞையை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலின் பின்னணி குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், அண்மைக் காலங்களில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்ற நிலை அதிகரித்துள்ளன.

இந்த வாரத்தின் தொடக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கப் படைகள் 10 ஈரானியக் கப்பல்களை மூழ்கடித்ததாக தெரிவித்திருந்தார். ஆனால், அவை எந்த கடற்பரப்பில் இடம்பெற்றன என்பது குறித்து அவர் விவரம் வழங்கவில்லை.

இந்நிலையில், இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் கவலைக்குரியதாகக் கருதப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கை செய்திகள்

இதேவேளை, “இலங்கை கடற்படையாகிய நாம் தாக்குதல் தொடர்பான செய்திகளை முழுமையாக நிராகரிக்கிறோம். இச்சம்பவம் தற்போதைக்கு விபத்தாகவே கருதப்படுகிறது,” என இலங்கை கடற்படையின் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தெற்கு கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பல் மீது தாக்குதல் ? -  101 பேர் மாயம், 78 பேர் காயம்

  • கருத்துக்கள உறவுகள்

விபத்தல்ல. நீர்மூழ்கியில் இருந்து டோர்பிடோவால் தாக்கியுள்ளனர்.

அண்மையில் விசாகபட்டினத்தில் நடந்த கடல் படை கண்காட்சியில் பங்கெடுத்து விட்டு, நாடும் திரும்பும் போது தாக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

விபத்தல்ல. நீர்மூழ்கியில் இருந்து டோர்பிடோவால் தாக்கியுள்ளனர்.

அண்மையில் விசாகபட்டினத்தில் நடந்த கடல் படை கண்காட்சியில் பங்கெடுத்து விட்டு, நாடும் திரும்பும் போது தாக்கப்பட்டுள்ளது.

அண்ணை, அப்ப இலங்கைக் கடற்படை மறுத்தான் விட்டது ஏன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் கப்பல் விபத்தில் பெரும் சோகம்: 80 பேரின் சடலங்கள் மீட்பு

Mar 4, 2026 - 09:28 PM

ஈரான் கப்பல் விபத்தில் பெரும் சோகம்: 80 பேரின் சடலங்கள் மீட்பு

இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து மீண்டும் ஈரான் நோக்கிப் புறப்பட்ட 'ஐரிஸ் டேனா' கப்பலில் 180 பேர் கொண்ட பணியாளர்கள் குழுவொன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் பின்னர் அக்கப்பலில் இருந்த சுமார் 100 பேர் காணாமல் போயுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, இன்று (04) பிற்பகல் நடைபெற்ற மத்திய கிழக்கு நெருக்கடி தொடர்பான ‘அத தெரண’ விசேட நேரடி ஒளிபரப்பில் கலந்துகொண்ட வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, காணாமல் போனவர்களில் 80 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஈரான் கப்பல் விபத்தில் பெரும் சோகம்: 80 பேரின் சடலங்கள் மீட்பு

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

அண்ணை, அப்ப இலங்கைக் கடற்படை மறுத்தான் விட்டது ஏன்?

அதுகள் பாவங்கள்😂

நீர்மூழ்கி கப்பல் கொழும்பு ஹாபருக்கு வந்து போனாலும் அவைக்கு தெரிய வருமோ தெரியாது😂

தவிர எல்லாருக்கும் நண்பனான எமக்கு இதென்னடா சோதனை - பேசாம விபத்து என முடிப்பம் என நினைத்திருக்க கூடும்.

ஆனால் அமெரிக்கா உரிமை கோரியதோடு வீடியோவும் வெளியிட்டுள்ளது.

2ம் உலக போரின் பின் நீர்மூழ்கியால் மூழ்கடிக்க பட்ட முதல் கப்பல் இதுவாம்.

இதேபோல் ஹொர்ர்ம்ஸ் நீரிணையை மூடுவோம் என மிரட்டி, அதை நடைமுறை படுத்த ஈரான் நம்பி இருந்த போர் கப்பலும், ஈரானின் பெரிய கப்பல் தளமான பந்தா அப்பாசின் வாயிலில் ஜெகஜோதியாய் ஏரிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இதேபோல் ஹொர்ர்ம்ஸ் நீரிணையை மூடுவோம் என மிரட்டி, அதை நடைமுறை படுத்த ஈரான் நம்பி இருந்த போர் கப்பலும், ஈரானின் பெரிய கப்பல் தளமான பந்தா அப்பாசின் வாயிலில் ஜெகஜோதியாய் ஏரிகிறது.

அண்ணை, போர்க் கப்பலா / பெயருக்குக் கப்பலா / காகிதக் கப்பலா?!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஈரான் கப்பல்... காத்தான்குடி இணைய போராளிகளை,

ஈரான் போருக்கு அழைத்துப் போக வந்ததாக சொல்கிறார்கள். 😂

அதனை கேள்விப்பட்ட அமெரிக்கா... இதனை தாட்டுப் போட்டுதாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

அண்ணை, போர்க் கப்பலா / பெயருக்குக் கப்பலா / காகிதக் கப்பலா?!

ஈரானின் பலம் டிரோன்ஸ்…அடுத்து மிசைள்ஸ்.

கடுமையாக போரிட கூடிய தரைப்படையும் உண்டு.

ஆனால் மிக பெரிய பலவீனம் விமானப்படை, கப்பல் படை.

விமானப்படை, விமான எதிர்ப்பு ஏவுகணை கிட்டதட்ட முடக்கப்பட்டு விட்டன.

பி 52 விமானங்களை நேற்றிரவு தெஹ்ரானில் அமெரிக்கா பாவித்தது.

இவை உருமறைய, விமான எதிர்க்கும் திறன் அற்ற பறக்கும் குண்டு வீசும் தொழில்சாலைகள். இவற்றை அமெரிக்கா துணிந்து இறக்கினால் - ஈரானின் வான்பரப்பு ஒட்டு மொத்தமாக இஸ்ரேல்-அமெரிக்கா கையில் என்பதை ஊகிக்கலாம்.

வான் பாதுகாப்பு இல்லை எனில் கப்பல்கள் மிக இலகுவான இலக்குகள் - அடித்து நொருக்கி விடலாம்.

மிசைல்கள் ஏவும் போதே தளங்கள் அடையாளம் காணப்பட்டு அடித்து துவம்சம் செய்யப்படுகிறன. எனவேதான் 3 நாட்களில் ஏவப்படும் மிசைல் எண்ணிக்கை சடுதியாக குறைந்துள்ளது. இன்னும் சில நீண்ட இலக்கு மிசைல்கள் இருக்கலாம். ஆனால் வான் பாதுகாப்பு இல்லாமல் அவை நீண்ட காலம் தாக்கு பிடிக்க முடியாது.

டிரோன்கள் மட்டுமே ஈரானின் ஒரே பலம் இப்போது.

தரைபடைகள் சண்டையில் ஈடுபடும் நிலை வரும் என நான் நினைக்கவில்லை.

குர்தீஷ் படைகள் முன்னேற தயார் என கேள்விபடுகிறேன். அப்போது அவர்களுக்கு இஸ்ரேல், அமெரிக்கா முழு வான் உதவி வழங்க கூடும். அதன் போதும் இரானிய தரைபடை பலத்த அழிவை சந்திக்கும்.

இதே டிரோன்களை உக்ரேன் சமாளிக்கிறது எனவே அவர்கள் உதவுவதாக சொல்லி உள்ளார்கள். தேவைபடாது என நினைக்கிறேன்.

கமேனி கொலைக்கு நேட்டோவின் துருக்கி வருத்தம் கூறியது. ஆனால் இன்று துருக்கி மீது ஏவப்பட்ட ஏவுகணையை நேட்டோ தடுத்துள்ளது. இது துருக்கியை கடுப்பாக்கி உள்ளது.

விநாச காலே விபரீத புத்தி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

கமேனி கொலைக்கு நேட்டோவின் துருக்கி வருத்தம் கூறியது. ஆனால் இன்று துருக்கி மீது ஏவப்பட்ட ஏவுகணையை நேட்டோ தடுத்துள்ளது. இது துருக்கியை கடுப்பாக்கி உள்ளது.

விநாச காலே விபரீத புத்தி.

இஸ்ரேலுடைய வேலையாகவும் இருக்கலாம் என முகப்புத்தகத்தில் ஒருவர் எழுதி இருந்தார்! ஒதுங்கி இருப்பவர்களையும் ஈரானுக்கெதிராக களமிறக்க அவர்களுடைய தளங்களை ஏவுகணை மூலமாக தாக்குவது. (சவுதி, பிரிட்டன் மற்றும் சில அயல் நாடுகள்)

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவால் மூழ்கடிக்கப் பட்ட ஈரானிய கப்பல்,

இந்தியாவில் பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பிய ஈரானிய வீரர்களின் கப்பலாம் அது.

ஆக... இந்தியா, ஈரானுக்கு பயிற்சி வழங்கி வருவது அம்பலமாகி உள்ளது.

இதற்குள்... ஈரானை போர் வேண்டாம் என்று கண்டிக்கின்றது இந்தியா.

"டபிள் கேம்" விளையாடும் சகுனி இந்தியா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த ஈரான் கப்பல்... காத்தான்குடி இணைய போராளிகளை,

ஈரான் போருக்கு அழைத்துப் போக வந்ததாக சொல்கிறார்கள்

காத்தான்குடி ஈச்சம்பழ இணையமைச்சரும் அதில் பயணம்செய்ய தீர்மானித்து பின் பின்வாங்கியிருந்தாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

645392295_26836432189292488_424668121069

ஏற்கனவே பெற்றோல் இல்லாம பிதுங்கி கிடக்குறம். இதுல இது வேறயா

எனக்கென்னமோ கோர்த்து விட்டு கும்மியடிக்க போறாங்க போல இருக்கு எதுக்கும் ஒரு பங்கர வெட்டுவம்

ட்ரம் அங்கிள் இங்கால திருப்பிடாதீங்க தெய்வமே🙄🙄

Jeyrajan Rajan

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஏராளன் said:

இஸ்ரேலுடைய வேலையாகவும் இருக்கலாம் என முகப்புத்தகத்தில் ஒருவர் எழுதி இருந்தார்! ஒதுங்கி இருப்பவர்களையும் ஈரானுக்கெதிராக களமிறக்க அவர்களுடைய தளங்களை ஏவுகணை மூலமாக தாக்குவது. (சவுதி, பிரிட்டன் மற்றும் சில அயல் நாடுகள்)

இருக்கலாம். ஆனால் இது அவ்வளவு இலகுவானதல்ல.

மேலதிக விபரங்கள் சில.

  1. ஈரான் நிலகீழ் மிசைல் ஏவுதளங்களை சற்று நேர்ந்த்துக்கு முன் பாவிக்க ஆரம்பித்துள்ளதாம். இது நில மேல் தளங்கள் அதிக பாதிப்பை சந்தித்தை உறுதி செய்கிறன.

  2. இவை தாக்குதலில் ஈடுபடுவதை இவற்றின் இருப்பிடங்களை காட்டி கொடுக்குமாம்.

  3. ஆனால் நிலக் கீழ் தளங்கள் 500 மீட்டருக்கும் கீழாக உள்ளனவாம். இவை அமரிக்காவின் 90 மீட்டர் மட்டுமே செல்லும் பங்கர் பஸ்டர் குண்டுகளால் தாக்கபட இயலாதனவாம். அதேபோல் கெமிக்கல் தாக்குதலில் இருந்தும் தற்காக்க வல்லனவாம்.

  4. ஆனால் விசேட படை இறங்கி தாக்குவது, வாயில்களை அடைக்கும் விதமாக தாக்குவது, மின், தண்ணீர் சப்ளையை தாக்குவது என இவற்றை தாக்க/ முடக்க வழி இருக்கும் என நினைக்கிறேன்.

  5. இஸ்ரேல் காரன் இப்பவே என்ன செய்வது என ஸ்கெட்ச் போட்டு வைத்திருப்பான்.

17 minutes ago, தமிழ் சிறி said:

அமெரிக்காவால் மூழ்கடிக்கப் பட்ட ஈரானிய கப்பல்,

இந்தியாவில் பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பிய ஈரானிய வீரர்களின் கப்பலாம் அது.

ஆக... இந்தியா, ஈரானுக்கு பயிற்சி வழங்கி வருவது அம்பலமாகி உள்ளது.

இதற்குள்... ஈரானை போர் வேண்டாம் என்று கண்டிக்கின்றது இந்தியா.

"டபிள் கேம்" விளையாடும் சகுனி இந்தியா.

அண்ணை கூல் டவுண் 😂

இது போர் ஒத்திகை அல்ல, பல நாடுகள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு.

அமெரிக்காவின் போர் கப்பல் ஒன்றும் வருவதாக இருந்து கடைசி நேரத்தில் பின் வாங்கியதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நந்தி said:

காத்தான்குடி ஈச்சம்பழ இணையமைச்சரும் அதில் பயணம்செய்ய தீர்மானித்து பின் பின்வாங்கியிருந்தாராம்.

ஈரான் போருக்குப் போக, இப்படி... எல்லாரும் ஒளித்து திரிந்தால்...

இனி இவர்களுக்கு... முஸ்லீம் நாடுகளிடம் இருந்து பண உதவி வராது போலுள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இஸ்ரேலுடைய வேலையாகவும் இருக்கலாம் என முகப்புத்தகத்தில் ஒருவர் எழுதி இருந்தார்! ஒதுங்கி இருப்பவர்களையும் ஈரானுக்கெதிராக களமிறக்க அவர்களுடைய தளங்களை ஏவுகணை மூலமாக தாக்குவது. (சவுதி, பிரிட்டன் மற்றும் சில அயல் நாடுகள்)

வந்து கொண்டிருக்கும் செய்தி:

சைப்பிரஸ்சில் உள்ள பிரித்தானிய தளத்தை தாக்கிய டிரோன் ஈரானில் இருந்து ஏவப்படவில்லை என்பதை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

பிகு

தம்பி நீங்கள் மொசாட்டோ😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமுத்திரத்தில் மூழ்கடிக்கப்பட்ட... ஈரானிய போர்க்கப்பல் தாக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டன.

காணொளி: 👉 https://www.facebook.com/reel/1465130008652693 👈

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் நீர்க்குண்டு மூலம் ஈரானிய கப்பலை இலங்கை அருகில் மூழ்கடித்தது கிந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிகையாக எடுக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நியாயம் said:

அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் நீர்க்குண்டு மூலம் ஈரானிய கப்பலை இலங்கை அருகில் மூழ்கடித்தது கிந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிகையாக எடுக்கலாமா?

இல்லை.

இந்தியாவில் இருந்து புறப்பட்டு, அதன் கடல் எல்லையை தாண்டி, சர்வதேச கடற்பரப்பில், யுத்த முனை நோக்கி நகரும் போது தாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா, இலங்கை எவருக்கும் கொடுக்க பட்ட எச்சரிக்கை அல்ல.

அப்படி கொடுக்கவும் தேவையில்லை.

ஏன் எண்டால் மோடி ஜி, பீபீயின் பொக்கெட்டுக்குள்😂

ஆனால் ஒரு விடயம்,

ரஸ்யா, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான், என ஈரானின் நண்பர்கள் என சொல்லி கொண்ட பலரும் ஈரானை திரும்பி கூட பார்க்கவில்லை.

இத்தனைக்கும் ரஸ்யாவுக்கு டிரோன் கொடுத்து, அண்மைய முறுகலில் பாகிஸ்தானுக்கு குரல் கொடுத்து ஈரான் ரொம்ப நம்பிக்கையாய் நடந்து கொண்டது.

அதே போல் இலங்கையின் இன்வழிப்பு போரில் வெல்ல, தேயிலைக்கு எண்ணை டீல் மூலம் போரின் எரிபொருள் வழங்குனராக ஈரான் இருந்தது. இலங்கையும் பெரிதாக அலட்டிகொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் கப்பல்… இலங்கை கடற்பரப்பில் தாக்கப் பட்டமைக்கு,

வைத்தியர் அர்ச்சுனா…. கண்டன அறிக்கை விடவில்லையா. 😂

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலுக்கு உள்ளாகிய ஈரான் போர்க் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 35 ஈரான் வீரர்களும், காத்தான்குடியில் உள்ள அவர்களின் நெருங்கிய உறவினர்களின் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளனர். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.