Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

பாஜக, அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை ; தமிழக வெற்றி கழகம் விளக்கம்

இந்த விளக்கத்தை உடனே ஏன் கொடுக்கவில்லை; யார்காதில் பூச் சுத்துகிறார்கள். விஜையின் எதிர்பார்ப்புக்கு எடப்பாடி இறங்கிவர மாட்டார். 70 தொகுதிகள் துணை முதல்வர் பதவி எல்லாம் பேராசை.அதிமுக ஆகக்குறைந்தது 160 தொகுகளுக்கு குறையாமல்போட்டியிட வேண்டும்.மிகுதி 64 தொகுதிகளில் பாமாவுக்கு 10 தொகுதிகளுக்கு குறையாமல் கொடுத்தேயாக வேண்டும்.தென்மாவட்ட வாக்குகளுக்காக தினகரக்கும்8-10 கொடுக்க வேண்டும்.வாசனின் தமாகாங்கிரசுக்கு 6 சிறிய கட்சிகளுக்க தலா1 படி 3-4 வரும் மகுதி 34 இல் தான் பாஜக விஜய் எல்லாம். விஜையைக்காட்டி வாசனைச்சமாளிக்கலாம் குறைக்கலாம். ஆனால் பாமகவின் தொகுதி ஒதுக்கீட்டில்கைவைக்க முடியாது. அந்தக் கூட்டணியில்அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி பாமகதான். ஆகவே எடப்பாடியார் விஜை வருவதை விரும்ப மாட்டார். (விஜைக்காக காத்திருந்து அவர்களின் டீல் சரிவராமல்தான் எடப்பாடியார் ஒருவருடத்துக்கு முன்பே பாஜகவுடன் கூட்டணி வைத்தார்.விஜைக்காக இறங்கிவரமாட்டார். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை பாஜகதான் உள் ஒதுக்குpடாக விஜைக்கு கொடுக்க வேண்டும். அது விஜைக்கு திருப்தியாக இருக்காது. ஆகலவ தனித்து களம்காண வேண்டியதுதான். சிலவேளைகளில் தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்து கம்னியூஸ்ட்டுகள் வேல் முருகன் பாமக ஐயா அணி சேர்ந்து மக்கள்நலக்கூட்டணி2:0 வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நீங்களும் முன்னைய நிலையில் தற்போது இல்லை🤣. நான் எப்போதும் ஒரே நிலையில் தான் (பந்தய விடயத்தில்)🙃

எனக்கு தமிழ் நாட்டு அரசியலில் எப்போதும் ஒரே நிலைதான் அண்ணை.

அங்கே, அவர்களின் உள்ளூர் அரசியலுக்குள் எம்மை இழுத்து - தமிழ் நாட்டில் எமக்கு எதிரிகளை யார் உருவாக்கினாலும் அவர்களை நான் எதிர்பேன்.

அந்த வகையில் எனக்கு தமிழ் நாட்டு அரசியலில் சீமான் மட்டுமே எதிரி.

அந்த நிலைப்பாட்டில் இருந்து நான் எப்போதும் மாறவில்லை.

@வாத்தியார்ண்ணா சீமான் 15% எடுப்பார் என பந்தயம் கட்டி உள்ளார்.

மிச்சம் ஒருத்தருக்கும் சீமானை நம்பி பந்தயம் கட்ட கூட பயம்.

ஆனால் தமிழ் நாட்டில் மாற்றம் வருது எண்டு ஆரூடம் சொல்லுவினம்😂

1 hour ago, புலவர் said:

இந்த விளக்கத்தை உடனே ஏன் கொடுக்கவில்லை; யார்காதில் பூச் சுத்துகிறார்கள். விஜையின் எதிர்பார்ப்புக்கு எடப்பாடி இறங்கிவர மாட்டார். 70 தொகுதிகள் துணை முதல்வர் பதவி எல்லாம் பேராசை.அதிமுக ஆகக்குறைந்தது 160 தொகுகளுக்கு குறையாமல்போட்டியிட வேண்டும்.மிகுதி 64 தொகுதிகளில் பாமாவுக்கு 10 தொகுதிகளுக்கு குறையாமல் கொடுத்தேயாக வேண்டும்.தென்மாவட்ட வாக்குகளுக்காக தினகரக்கும்8-10 கொடுக்க வேண்டும்.வாசனின் தமாகாங்கிரசுக்கு 6 சிறிய கட்சிகளுக்க தலா1 படி 3-4 வரும் மகுதி 34 இல் தான் பாஜக விஜய் எல்லாம். விஜையைக்காட்டி வாசனைச்சமாளிக்கலாம் குறைக்கலாம். ஆனால் பாமகவின் தொகுதி ஒதுக்கீட்டில்கைவைக்க முடியாது. அந்தக் கூட்டணியில்அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி பாமகதான். ஆகவே எடப்பாடியார் விஜை வருவதை விரும்ப மாட்டார். (விஜைக்காக காத்திருந்து அவர்களின் டீல் சரிவராமல்தான் எடப்பாடியார் ஒருவருடத்துக்கு முன்பே பாஜகவுடன் கூட்டணி வைத்தார்.விஜைக்காக இறங்கிவரமாட்டார். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை பாஜகதான் உள் ஒதுக்குpடாக விஜைக்கு கொடுக்க வேண்டும். அது விஜைக்கு திருப்தியாக இருக்காது. ஆகலவ தனித்து களம்காண வேண்டியதுதான். சிலவேளைகளில் தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்து கம்னியூஸ்ட்டுகள் வேல் முருகன் பாமக ஐயா அணி சேர்ந்து மக்கள்நலக்கூட்டணி2:0 வரலாம்.

அப்ப நீங்கள் இன்னும் 5 ஆண்டு காலம் திமுக அரசை அனுபவிக்க ஆயத்தமா😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அப்ப நீங்கள் இன்னும் 5 ஆண்டு காலம் திமுக அரசை அனுபவிக்க ஆயத்தமா

திமுகவை தோற்கடிப்பதற்கு அதிமுக பலமடைய வேண்டும். விஜை வரும்பேதே கூட்டணிக்கு தயாரக இருப்பதாகச் சொன்னார். ஆனால் அளவுக்கு மீறி ஆசைப்பட்டதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியவில்லை.தற்போதைய நிலையில் 25 தொகுதிகள் அவருக்குப் போதுமானது. எடுத்த எடுப்பிலேயே முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா? அவர் தனித்து நின்றால் திமுகவின் வெற்றி எளிதாக இருக்கும். சீமான் எப்போதும் தனித்தே நிற்பார். விஜையின் வருகையால் சீமானின் வக்கு வங்கிக்கு எந்தப்பாதிப்பும் இல்லை. சீமான் எதிராளிகளின் எதிர்பார்ப்புகளுக்கு மேலாக அவர் தன்னுடைய வாக்கு சத வீதத்தை உயர்த்துவார். விஜை தனித்து நின்றால் அவருக்கு இது கடைசித் தேர்தலில் சீமானின் தனித்து நின்று இப்போதிருக்கும் வாக்கு சதவீதத்தை தக்க வைத்தாலே எதரிர்காலத்தில் தவிர்க்க முடியாத அரசியல்சக்தியாகி விடுவார்.

4 hours ago, புலவர் said:

விஜையின் வருகையால் சீமானின் வக்கு வங்கிக்கு எந்தப்பாதிப்பும் இல்லை. சீமான் எதிராளிகளின் எதிர்பார்ப்புகளுக்கு மேலாக அவர் தன்னுடைய வாக்கு சத வீதத்தை உயர்த்துவார்.

என் கணிப்பின் படி, 9 வீதத்துக்கும் குறைவாகவே சீமான் இந்த முறை பெறுவார்.

விஜையால் அதிகம் பாதிக்கப்படப் போவது சீமான். அதிக லாபமடையப் போவது ஸ்டாலின்.

எனக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருக்கும் பட்சத்தில், சீமானா விஜையா என இருவருக்கும் இடையில் மட்டும் போட்டி இருப்பின், கண்டிப்பாக சீமானுக்குத்தான் நான் வாக்களிப்பேன். தனிப்பட்ட ரீதியில் விஜைய் எனும் வெற்று நடிக விம்பத்தை மட்டுமே கொண்டுள்ள, எந்தவொரு தலைமைத்துவ மற்றும் ஆளுமை அற்ற தகர டப்பாவுக்கு வாக்களிக்க மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

திமுகவை தோற்கடிப்பதற்கு அதிமுக பலமடைய வேண்டும். விஜை வரும்பேதே கூட்டணிக்கு தயாரக இருப்பதாகச் சொன்னார். ஆனால் அளவுக்கு மீறி ஆசைப்பட்டதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியவில்லை.தற்போதைய நிலையில் 25 தொகுதிகள் அவருக்குப் போதுமானது. எடுத்த எடுப்பிலேயே முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா? அவர் தனித்து நின்றால் திமுகவின் வெற்றி எளிதாக இருக்கும். சீமான் எப்போதும் தனித்தே நிற்பார். விஜையின் வருகையால் சீமானின் வக்கு வங்கிக்கு எந்தப்பாதிப்பும் இல்லை. சீமான் எதிராளிகளின் எதிர்பார்ப்புகளுக்கு மேலாக அவர் தன்னுடைய வாக்கு சத வீதத்தை உயர்த்துவார். விஜை தனித்து நின்றால் அவருக்கு இது கடைசித் தேர்தலில் சீமானின் தனித்து நின்று இப்போதிருக்கும் வாக்கு சதவீதத்தை தக்க வைத்தாலே எதரிர்காலத்தில் தவிர்க்க முடியாத அரசியல்சக்தியாகி விடுவார்.

இவ்வளவு உறுதியாக இருக்கும் நீங்கள் ஏன் சீமான் 15% க்கு மேல் எடுப்பார் என பந்தயம் கட்ட தயங்குகிறீர்கள்?


விஜை அதிமுக வோடு போகாமல் விட பெரிய காரணம் பாஜக உள்ளே வந்தது.

தமிழ்நாட்டில் சீட் இழுபறியில் கூட்டணி சேராமல் விடுவது அரிதிலும் அரிது (ஒரு முறை வைகோ செய்தார்).

விஜை கொள்கை குன்று என்பதெல்லாம் இல்லை - தாமரையை தொட்டால் குலநாசம் என அவருக்கு தெரிகிறது என நினைக்கிறேன். நிதீஸ்குமாரை டம்மி பீசாக்கி ராஜசபாவுக்கு அனுப்பி உள்ளனர்.

தேர்தலுக்கு பின் எடப்பாடியை பாஜக வச்சு செய்யும் போது விஜை எடுத்த முடிவின் காரணம் புலப்படும்.

1 hour ago, நிழலி said:

சீமானா விஜையா என இருவருக்கும் இடையில் மட்டும் போட்டி இருப்பின்,

நான் ஆதரிப்பது நோட்டாவையே😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

விஜை கொள்கை குன்று என்பதெல்லாம் இல்லை - தாமரையை தொட்டால் குலநாசம் என அவருக்கு தெரிகிறது என நினைக்கிறேன். நிதீஸ்குமாரை டம்மி பீசாக்கி ராஜசபாவுக்கு அனுப்பி உள்ளனர்.

தாமரையைத் தொட்டால் குலநாசம் என்றால் தாமரையுடன் எதற்குப் பேச்சுவார்ததை நடத்தினார்?மாவட்டச்செயலாளர்களிடம் கூட்ணிக்குப் போலாமா? என்று கருத்துக்கேட்டது யாரோடு கூட்டணிக்குப் போவதற்காகாக? திமுகவுடனா? பேரம்படியவில்லை என்றதும் விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்று தனித்து விடப';பட்டிருக்கிறார். அவர்தனித்து நிற்கவில்லை.

7 hours ago, goshan_che said:

விஜை அதிமுக வோடு போகாமல் விட பெரிய காரணம் பாஜக உள்ளே வந்தது.

பாஜகவுடன் அதிமுக கூட்டணிவைக்க முதலே விஜை அதிமுகவுடன் பேச்சுவார்ததை நடத்தினார்.தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்றார். அவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க எடப்பாடி ஒன்றும் தெரியாத பாப்பாவா? ஒருத்தர் கட்சியைத் தொடங்குவாராம். பத்திரிகையாளரைச் சந்திக்க மாட்டாராம். 2 வருடத்தில் 4 கூட்டம் போடுவாராம். 7 மணிக்கூட்டத்திற்கு 7 மணிக்குத்தான் சென்னையில் இருந்து வெளிக்கிடுவாராம்.மக்கள் அவருக்காக சாப்பாடு தண்ணி இல்லாமல் காத்துக்கிடந்து சாகவேணுமாம்.மாஸ் காட்டிறம் என்று சொல்லி மக்களைச் சாகடிப்பாராம்.போராட்டம் எதுவும் செய்ய மாட்டராம்.மக்கனள பனையூருக்கு வந்து சந்திக்கச் சொல்லுவாராம்.முதல் தேர்தலிலேயே முதல்வர்பதவியைத் தூக்கிக் கொடுக்க வேணுமாம்.தமிழ்நாட்டு மக்களை இவர் என்ன மாதிரி நினைத்துக்கொண்டு இருக்கிறார்?

இன்னும்ஒருத்தன் அகன்த்து னைத்து மக்கள் போராட்டத்திலும் கலந்து கொள்வானாம்>மழை வெயில் பாராமல் தொண்டைத்தண்ணிவத்த மணிக்கணக்காகப் பேசுவானாம். எந்த ஊடகவியலாளர் எந்த விடயம் பற்றிக் கேள்விகேட்டாலும் பதில்சொல்லுவானாம்.மக்கள் போராட்டத்தில் சிறை செல்லுவானாம்.மக்களோடு மக்களாக இருந்து உணவுண்ணுவானாம். அனால் அரசியலில் வெற்றி பெறக்கூடாதாம் இது என்ன மாதிரியான சிந்தனை?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நான் ஆதரிப்பது நோட்டாவையே😂

விஜை கட்சி துவங்கிய நேரம் விழுந்து விழுந்து ஆதரிச்சவராச்சே! இப்ப எதுக்கு நோட்டா?நிங்க தைரியசாலிஆச்சே விஜைக்குத்தான் கபாடுவேன் என்று துணிந்து சொல்ல வேண்டியதுதானே.

7 hours ago, goshan_che said:

இவ்வளவு உறுதியாக இருக்கும் நீங்கள் ஏன் சீமான் 15% க்கு மேல் எடுப்பார் என பந்தயம் கட்ட தயங்குகிறீர்கள்?

விஜை தனித்து 15 வீதம் எடுப்பார் என்று பந்தயம் கட்டுங்கள் நானும் பந்தயம் கட்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புலவர் said:

தாமரையைத் தொட்டால் குலநாசம் என்றால் தாமரையுடன் எதற்குப் பேச்சுவார்ததை நடத்தினார்?மாவட்டச்செயலாளர்களிடம் கூட்ணிக்குப் போலாமா? என்று கருத்துக்கேட்டது யாரோடு கூட்டணிக்குப் போவதற்காகாக? திமுகவுடனா? பேரம்படியவில்லை என்றதும் விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்று தனித்து விடப';பட்டிருக்கிறார். அவர்தனித்து நிற்கவில்லை.

நீங்கள் இதை படித்தது எங்கே?

நீங்கள் வழமையா திமுக சொம்பு என திட்டும் ஊடகங்களில்தானே?

அவை ஏன் இப்படி ஒரு புரளியை கிளப்பி இருக்க கூடாது?

8 minutes ago, புலவர் said:

இன்னும்ஒருத்தன் அகன்த்து னைத்து மக்கள் போராட்டத்திலும் கலந்து கொள்வானாம்>மழை வெயில் பாராமல் தொண்டைத்தண்ணிவத்த மணிக்கணக்காகப் பேசுவானாம். எந்த ஊடகவியலாளர் எந்த விடயம் பற்றிக் கேள்விகேட்டாலும் பதில்சொல்லுவானாம்.மக்கள் போராட்டத்தில் சிறை செல்லுவானாம்.மக்களோடு மக்களாக இருந்து உணவுண்ணுவானாம். அனால் அரசியலில் வெற்றி பெறக்கூடாதாம் இது என்ன மாதிரியான சிந்தனை?

அது அப்படித்தான்😂

ஏன்னு தெரில…ஆனா அடிக்கணும் மட்டும் தெரிது😂

(கேள்விக்கான விளக்கம் உங்களுகே பலதடவை பத்தி பத்கியாக எழுதியாயிற்று).

2 minutes ago, புலவர் said:

விஜை கட்சி துவங்கிய நேரம் விழுந்து விழுந்து ஆதரிச்சவராச்சே! இப்ப எதுக்கு நோட்டா?நிங்க தைரியசாலிஆச்சே விஜைக்குத்தான் கபாடுவேன் என்று துணிந்து சொல்ல வேண்டியதுதானே.

விழுந்து விழுந்து ஆதரிக்கவில்லை.

திமுக, அதிமுக, பிஜேபி நயினார் அணி, பிஜேபி சீமான் அணி இவற்றிற்கு மாற்று என்பதால் ஆதரித்தேன்.

ஆனால் கரூரில் தலைதெறிக்க ஓடியதோடு அதை விட்டு விட்டேன்.

ஏன் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்கிறீர்கள்.

இதே கேள்விக்கு இதே விளக்கத்தை போன கிழமையும் கொடுத்தேனே😂

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புலவர் said:

விஜை தனித்து 15 வீதம் எடுப்பார் என்று பந்தயம் கட்டுங்கள் நானும் பந்தயம் கட்டுகிறேன்.

நான் விஜை 9-11% எடுப்பார் என நினைக்கும் போது, நான் ஏன் அவர் 15% எடுப்பார் என பந்தயம் கட்ட வேண்டும்😂.

  • கருத்துக்கள உறவுகள்

https://tamil.oneindia.com/news/chennai/aadhav-arjuna-says-offer-of-90-seats-and-cm-post-for-2-5-years-rejected-claims-political-pressure-f-782195.html

”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/aadhav-arjuna-says-offer-of-90-seats-and-cm-post-for-2-5-years-rejected-claims-political-pressure-f-782195.html

ஒருவாரத்துக்குமேலாக செய்திகள் வந்த நிலையில் கொள்கை எதிரீயடன் கூட்டணி இல்லை என்று ஏன் ஒரு மறுப்பு அறிக்கையை விடவில்லை?பாஜக எவ்வளவு பேரம் பேசினாலும் கடைசியில் எடப்பாடிதான் முடிவெடுப்பார். இது சட்ட மன்றத் தேர்தல்.பாஜக அளவுக்கு மீறி அழுத்தம் கொடுத்தால் போங்கடா வெளியே என்று சொல்லி விடுவார். இந்தத் தேர்தலில் எடப்பாடிதான் கூட்டணித்தலைவர் வெற்றியோ தோல்வியோ அவர் எடுக்கிறதுதான் முடிவு.

6 minutes ago, goshan_che said:

நான் விஜை 9-11% எடுப்பார் என நினைக்கும் போது, நான் ஏன் அவர் 15% எடுப்பார் என பந்தயம் கட்ட வேண்டும்😂.

விஜை தனித்து நின்றால் விஜை வெல்லலாம். ஆனால் நாதகவின் வாக்கு வீதம் விஜையால்பாதிக்கப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

ஆனால் நாதகவின் வாக்கு வீதம் விஜையால்பாதிக்கப்படாது.

அப்போ நீங்கள் நாதக அதே இடத்தில் வளராமல் நிக்கும் எண்டுறியள்?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அப்போ நீங்கள் நாதக அதே இடத்தில் வளராமல் நிக்கும் எண்டுறியள்?

தொடர்ந்து வளர்ந்து கொண்டுதான் வருகிறது. மாறாக கூட்டணிவைத்த கட்சிகள் தேய்ந்து கொண்டு வருகின்றன.காலம் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

தொடர்ந்து வளர்ந்து கொண்டுதான் வருகிறது. மாறாக கூட்டணிவைத்த கட்சிகள் தேய்ந்து கொண்டு வருகின்றன.காலம் பதில் சொல்லும்.

2026 வளருமா, வளராதா? (வளர்வது எல்லாமும் நல்லது அல்ல புற்றுநோய் கட்டியும் வளரும்).

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

hindutamil-prod%2F2026-03-18%2Fn5xrmbnu%

இடம்: கோத்தகிரி சாலை

படம்: எம்.சத்தியமூர்த்தி

தமிழினி

Updated on: 18 Mar 2026, 4:00 pm

1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் கணிசமான அளவு பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய (18 மார்ச்) நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ரூ. 42.65 கோடி ஆகும். தமிழகம் முழுவதும் ரூ. 2.37 கோடி ரொக்கமும், ரூ.0.18 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ. 2.88 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.16.42 கோடி மதிப்பிலான விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் ரூ.20.80 கோடி மதிப்பிலான இலவசங்கள் / பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சின்னத்திற்கு சிக்கல் | EVM - ல் மாற்றப்பட்ட விவசாயி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

சீமான் சின்னத்திற்கு சிக்கல் | EVM - ல் மாற்றப்பட்ட விவசாயி

எங்கே ஐயா லிங்?

  • கருத்துக்கள உறவுகள்

திமுக - சிபிஎம் கூட்டணி இழுபறிக்கு காரணமான 'ஓர் இடம்' - அடுத்து என்ன?

தமிழ்நாடு, திமுக, சிபிஎம், சிபிஐ

பட மூலாதாரம்,X/MK Stalin

கட்டுரை தகவல்

சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்களை தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளைவிட ஓர் இடம் குறைவாக அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

"அதே ஆறு இடங்களைப் பெறுவதற்கு நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் கதவுகள் திறக்கப்படவில்லை. ஓர் இடத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு முதலமைச்சரே கூறியதால் ஏற்றுக் கொண்டோம்," என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.

ஆனால், "ஆறு தொகுதிக்குக் குறைவாக கொடுத்தால் ஏற்க மாட்டோம்," என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுகளால் தி.மு.க கூட்டணிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளதா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் தி.மு.க தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஆறு இடங்களை தி.மு.க தலைமை ஒதுக்கியிருந்தது. 'இந்தமுறை அதே எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்க வேண்டும்,' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக, இரு தரப்பிலும் நான்குகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் ஐந்து இடங்களை மட்டுமே தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது.

புதன்கிழமையன்று தி.மு.க - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு, திமுக, சிபிஎம், சிபிஐ

பட மூலாதாரம்,Veerapandiyan

படக்குறிப்பு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.

'போராடினோம்... கிடைக்கவில்லை'

"ஓர் இடம் குறைவதைப் பெரிதாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏழை எளிய மக்களுக்கான போராட்டங்களில் உறுதியாக இருந்தால் போதும். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அல்ல" என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.

கூட்டணியில் நிறைய கட்சிகள் இணைந்திருப்பதால் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறு முதலமைச்சர் கூறியதாக பிபிசி தமிழிடம் குறிப்பிட்ட அவர், "அவரே கூறும்போது அதற்கு மதிப்பளிக்க வேண்டும்." என்கிறார்.

தொகுதிப் பங்கீட்டில் விவாதிக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, "6 + 1 என்ற கணக்கில் தொகுதிகளை ஒதுக்குமாறு கூறினோம். அதற்காக நான்குகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் கதவுகள் திறக்கப்படவில்லை." எனக் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு, திமுக, சிபிஎம், சிபிஐ

பட மூலாதாரம்,X/MK Stalin

"தொகுதிகளைக் குறைப்பதற்கு தி.மு.க நிர்பந்தம் கொடுத்ததா?" என்ற கேள்விக்குப் பதில் அளித்த மு.வீரபாண்டியன், "ஒருபோதும் திமுக நிர்பந்திக்கவில்லை. இதைப் பரிசீலிக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தான் பேசினார்கள்." என்கிறார்.

"கட்டளையிடும் தொனியில் தி.மு.க நிர்வாகிகள் பேசவில்லை" எனக் கூறும் அவர், "சுயமரியாதை பாதிக்கப்பட்டிருந்தால் கடந்து சென்றிருப்போம்." எனவும் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு, திமுக, சிபிஎம், சிபிஐ

பட மூலாதாரம்,X/MK Stalin

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதே அளவு இடங்களை ஒதுக்கும் முடிவில் தி.மு.க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நான்குமுறை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க நடத்தியுள்ளது.

செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "சுமூகமான முறையில் தொகுதி உடன்பாடு எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்." எனக் கூறினார்.

"கடந்த முறையைவிட அதிக எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் எனக் கூறியுள்ளோம். அதிக கட்சிகள் இருக்கும்போது சிலவற்றைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்துள்ளோம்" எனவும் பெ.சண்முகம் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு, திமுக, சிபிஎம், சிபிஐ

பட மூலாதாரம்,X/MK Stalin

'5 தொகுதிகளை ஏற்க மாட்டோம்' - கனகராஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான கனகராஜிடம் பிபிசி தமிழ் பேசியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து, "ஒவ்வொரு கட்சியும் அவர்களின் கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து செயல்படுகின்றனர். அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை," என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசும்போது, "தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அவர்கள் ஓர் எண்ணைக் கூறுகின்றனர். நாங்கள் ஓர் எண்ணைக் கூறியுள்ளோம். கூடுதல் தொகுதி குறித்து எந்த விவரங்களையும் அவர்கள் கூறவில்லை." எனக் கூறுகிறார்.

கூட்டணியில் ஐந்து தொகுதிகளைக் கொடுப்பதாக தி.மு.க கூறுவதாகக் குறிப்பிடும் கனகராஜ், "அதை நாங்கள் ஏற்கவில்லை. எங்கள் தரப்பில் எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்ற முடிவை கூறிவிட்டோம். தி.மு.க தான் தெரிவிக்க வேண்டும்." என்கிறார்.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்துக் கேட்டபோது, "தி.மு.க தரப்பில் இருந்து அழைத்தால் பேசுவோம். எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம்." என்கிறார் அவர்.

இதே கருத்தை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "ஒவ்வொரு கட்சியும் அவரவர் பலத்துக்கேற்ப தொகுதிகளைக் கேட்டுப் பெறுகின்றன. எங்கள் கோரிக்கை குறித்து முதலமைச்சரிடம் பேசிவிட்டு சொல்வதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்." எனக் கூறினார்.

பிரசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?

தமிழ்நாடு, திமுக, சிபிஎம், சிபிஐ

பட மூலாதாரம்,Shyam

படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்

"இதுபோன்ற முரண்பாடுகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?" என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"தி.மு.கவிடம் முன்வைத்த தொகுதிகள் கிடைக்காவிட்டால் கூட்டணி கட்சிகளிடையே சற்று வருத்தம் இருக்கும். ஆனால், வாக்குப்பதிவு நெருக்கத்தில் அவை மறைந்துவிடும்" எனக் கூறுகிறார்.

"கூட்டணிக் கட்சிகளுக்கு வேறு வழியும் இல்லை. தி.மு.க ஒதுக்கியுள்ள தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் கூட்டணிக் கட்சிகளுக்கான சவாலாக இருக்கும்." என அவர் குறிப்பிட்டார்.

திமுக கூறுவது என்ன?

"தி.மு.க போட்டியிடக் கூடிய தொகுதிகளை குறைத்துக் கொண்டு கூட்டணிக் கட்சிகளிடம் பேசி வருகிறது" என்கிறார் தி.மு.க செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்.

"தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்றால் குறைந்தது 170 இடங்களில் போட்டியிட வேண்டும்" எனக் கூறும் டி.கே.எஸ்.இளங்கோவன், "புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பது பலம் என்பதால் அவர்களைக் கணக்கில் வைத்துக் கொண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன," எனக் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy0d0kqq8r5o

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

லிங் என மொட்டையாக கேட்டது என் தவறுதான்.

அரசியல் கருடன், அரசியல் குருடன் என தம்மை தாமே அழைத்து கொள்ளும் அநாமேதய யூடியூபர் அல்லாமல் …

நமபகமான லிங் ஏதும் உள்ளதா ஐயா😂

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை: நாதக வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026

hindutamil-prod%2F2026-03-19%2Fmn2mzv9c%

சென்னை: அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை இருக்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையை சீமான் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்:

தலைநகரை மாற்றுவோம்; தமிழகத்தை மாற்றுவோம்:

சென்னை மட்டுமே தலைநகரா இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. இவை அனைத்தையும் தேடி மக்கள் சிற்றூர்களில் இருந்து நகரத்தை நோக்கி வருவதால் சென்னை பிதுங்கி வழிகிறது. உயிரைச் சுமந்து செல்கிற அவசர ஊர்தி கூடச் சரியான நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் சென்னையின் நிலை மேலும் சிக்கலாம். அதனால், நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு தலைநகரை பரவலாக்கும்.

தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள்:

தமிழகத்தின் மையத்தில் உள்ள திருச்சி முதன்மை நிர்வாக மையமாகச் செயல்படும். சென்னை தொழில்நுட்ப தலைநகராகச் செயல்படும். கோவை தொழில் மற்றும் வணிகத் தலைநகராகவும், மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும் செயல்படும்.

பெண்களுக்குத் தனித்தொகுதி:

உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளில் அப்படி வழங்கப்படவில்லை. பெண்களுக்கு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தனித்தொகுதிகள் போராடி பெறப்படும்.

மாநிலத்தில் தன்னாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி:

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவம் என்பது பெயரளவே உள்ளது. இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் 7-வது பட்டியலில் உள்ள சட்டமியற்றுகின்ற முறையில் ஒன்றிய அரசு 97 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் மாநில அரசு 66 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது.

இவை தவிர, ஒன்றிய அரசும் மாநில அசுகளும் சேர்ந்து 47 துறைகளில் சட்டம் இயற்றலாம் என்றிருக்கிறது. ஆக ஒன்றிய அரசிடம் 144 துறைகளில் சட்டம் இயற்றுகிற அதிகாரம் உள்ளது. இது ஒன்றியத்தில் ஒற்றையாட்சி முறையையும், தன்னதிகார குவிப்பையும் உறுதி செய்கிறது.

எனவே, நாம் தமிழர் ஆட்சியில் ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தோடு அனைத்து வகையான துறைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்கிற வகையில் இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர பாடுபடுவோம்.

தமிழர்களுக்கு முன்னுரிமை:

தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடப்பங்கீட்டு முறையைப் அம்பேத்கர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். நாம் தமிழர் அரசானது தமிழ்நாட்டில் தமிழ்க் குடிகளுக்கு இடப்பங்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிற மொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ அதே முன்னுரிமை பிறமொழி வழி தேசிய இன மக்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும்.

தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை:

தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை:

தன்னலம் சார்ந்த கொடுமையான ஆட்சி முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது ஆட்சிமுறை தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறையாக இருக்கும்.

மணல் கொள்ளைத் தடுப்பு:

அங்குலம் ஆற்றுமணல் உருவாக நூறு ஆண்டுகள் ஆகும். ஆனால், ஒரு நாளைக்கே முப்படி ஆழத்துக்கு மேலாக ஆற்று மணலை சுரண்டி மணல் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மணற்கொள்ளையால் ஆற்றுப்படுகையில் உள்ள தென்னை, பனை மரங்கள் கூட பட்டுப்போய் நிற்கின்றன. எனவே, நாம் தமிழர் அரசு மணற்கொள்ளையைத் தனிப்படைகளை அமைத்து முழுமையாக தடுக்கும்.

பனை தமிழ் தேசிய மரமாக அறிவிக்கப்படும். இருக்கும் பனை மரங்களைப் பாதுகாப்பது, புதிய பனை மரங்களை வளர்த்தெடுப்பது என்ற திட்டம் உருவாக்கப்படும். ஊர்தோறும் இரக்கும் நீர் நிலைகளைச் சுற்றி பனைமரங்களை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுப்போம்.

வேளாண் பெருங்குடி மக்களே விலையை உறுதிப்படுத்தலாம்:

குண்டூசி முதல் ஏவுகணை வரை எல்லாவற்றையும் உருவாக்குபவர்களே விலையை முடிவு செய்ய இயலுகிறது. ஆனால், வேளாண் பெருங்குடி மக்கள் மட்டும் விளைவிக்கின்ற பொருட்களுக்கு விலையை முடிவு செய்ய இயலவில்லை. அந்த நிலையை மாற்றி உழவர்களே உணவுப் பொருட்களுக்கான விலையைத் தீர்மானிக்கிற உரிமையை நாம் தமிழர் அரசு அளிக்கும்.

ஆடு, மாடு வளர்த்தல் அரசுப் பணி:

ஆடு மாடுகளை வளர்த்தல் அவமானமில்லை, வருமானம், வெகுமானம் அரசுப் பணி. ஆடு, மாடு வளர்த்தல், அது சார்ந்த பண்ணை வேலைகள், இயற்கை உரங்கள் உருவாக்கும் நடுவம் அனைத்திலும் வேலை பார்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவார்கள். அரசு ஊழியர்களுக்கான அனைத்துச் சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும் என்று நாதக வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை: நாதக வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.