Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்

Mar 8, 2026 - 05:26 PM

ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகச் சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிபிஸ்டர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு செயலாகும் என்பதே சுவிஸ் அமைச்சரவையின் கருத்தாகும் என்று அவர் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் வன்முறைத் தடையை மீறுவதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகப் போரை நிறுத்துமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்தினார்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதன் மூலம், ஈரானைப் போலவே அவர்களும் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளனர் என்று பிபிஸ்டர் தெளிவுபடுத்தினார்.

ஜேர்மனி மற்றும் ஸ்பெயினின் நிலைப்பாடு இந்தக் கருத்துக்கள் ஜேர்மனியின் உப ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான லார்ஸ் கிளிங்பெயிலின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன.

இந்தப் போர் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டபூர்வமானது என்பதில் எனக்குப் பலத்த சந்தேகங்கள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

விதிகள் இல்லாத, வலிமையானவர்களின் சட்டம் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு உலகிற்குள் நாம் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக கிளிங்பெயில் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் மீதான குண்டுவீச்சுகளைப் பொறுப்பற்றது மற்றும் சட்டவிரோதமானது என ஸ்பெயின் நாடும் கண்டித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்பும் நெதன்யாகுவும் ஈரான் மீதுள்ள காழ்ப்புணர்வு, பொறாமை, பயம் காரணமாகவே இந்தப்போரை வலிந்து தொடுத்தனர். அதற்கு பொய்யான காரணங்களை இட்டுக்கட்டினர். ஜனநாயகத்தை கட்டியெழுப்பவும் அணுஆயுத உற்பத்தியை தடுக்கவும் இந்தப்போர் என தம்மைத்தாமே ஏமாற்றினர். இவர்களிடம் ஜனநாயகம் உண்டா? எல்லா நாடுகளிலும் ஜனநாயகப்படிதான் ஆட்சி நடக்கிறதா? ஏன் அந்த நாடுகளை கண்டுகொள்ளவில்லை இவர்கள்? அவர்களின் ஜனநாயக விரோத செயல்களுக்கு உதவி வழங்கினர்? அடுத்து, அங்கு அணு உற்பத்தி செய்கிறார்கள் என்றால்; நிரூபித்திருக்க வேண்டும் அல்லது அவர்களின் அணு ஆலைகளை அழித்திருக்கவேண்டும். அதைவிட்டு சிறுவர் பாடசாலைகளிலும் அந்த நாட்டின் பொருளாதார மையத்திலும் ஏன் தாக்குதல் நடத்தினார்கள்? அணு ஆலை அங்கே இல்லை. ஆகவே இவர்களால் தாக்கியழிக்கப்பட்டவை அணுஆலைகளா? ஈராக்கிலும், சதாம் குசேயினை அழிப்பதற்கு இந்தகாரணங்களையே சொன்னார்கள். அதன் பின் தாங்கள் சுமத்திய குற்றச்சாட்டை நிரூபிக்க இன்றுவரை அவர்களால் முடியவில்லை. இவர்களின் அடாவடியை ஐ. நா. கண்ணை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கு, இதற்கு எந்த அதிகாரமுமில்லை வலுச் சண்டியர்களை அடக்க. வந்துவிடுவார்கள் நசுக்கப்படுபவர்களை தாங்களும் சேர்ந்து நசுக்க. போர் முடிந்தபின் ஈரானுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டோடு ஐ .நா. கூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு செயலாகும் என்பதே சுவிஸ் அமைச்சரவையின் கருத்தாகும் என்று அவர் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சட்டம் எதையும் அமெரிக்கா பின்பற்றாது என்று அமெரிக்கா முதலே சொல்லிவிட்டதே?

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அமெரிக்காவும், இஸ்ரேலும் செய்வது மனிதகுலத்திற்கு மிகவும் அவசியமான களையெடுக்கும் நடவடிக்கையே.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் உந்தப்பெற்று, இஸ்லாமியர் அல்லாதவரை அழிக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டுவரும் ஈரானின் அணுக்குண்டு எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதனைச் செய்வதற்கு இஸாலாமிய அடிப்படைவாத காட்டாட்சி அழிக்கப்படுவதுதான் வழியென்றால், அதனைச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை.

ஈரான் அணுவாயுத உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமே அணுவாயுத நிலைகளை அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல் எல்லைகளுக்கு அப்பால், நிலக்கீழ் சுரங்கங்களில் அது கட்டிக் காத்து வருவதே. கையில் கிடைக்கும் எவ்வாயுதத்தைக் கொண்டும் மதவெறியில் உந்தப்பட்டு "அல்லாகு அக்குபர்" என்று கோஷமிட்டபடி தன்னையும் அழித்து ஏனையவரையும் அழிக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளிடம் அணுவாயுதம் கிடைத்தால் என்னாகும் என்பதை ஈரானின் அபிமானிகள் சிந்திப்பது நல்லது.

இஸ்ரேல் எனும் நாட்டினை உலக வரைபடத்தில் இருந்து அழிப்போம், அமெரிக்காவிற்கு மரணத்தைக் கொடுப்போம் என்று கங்கணம் கட்டிச் செயற்படும், இஸ்ரேலைச் சுற்றியிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம், பயிற்சி, பணம் என்று வாரியிறைக்கும், நீண்டதூர ஏவுகணைகளை உற்பத்திசெய்து தனது பயங்கரவாத கொடுக்குகளை உலகம் முழுக்கப் பரப்ப எத்தனிக்கும் மூர்க்கர்களின் ஆட்சி முற்றாக நிர்மூலமாக்கப்பட வேண்டும், இது காலத்தினதும், மனித இருப்பினதும் அவசியமாகும்.

சொந்த நாட்டு மக்களையே அடிமைகளாக, அச்சுருத்தி வைத்துக்கொண்டு, மிருகத்தனமாக கொடுங்கோலாட்சி செய்யும் ஈரானிய மத அடிப்படைவாதிகள் சின்னாபின்னமாக்கப்பட வேண்டும்.

வேடிக்கை என்னவென்றால் ஈரானின் கொடுங்கோலாட்சி அகற்றப்படவேண்டும் என்று ஈரானியர்கள் கேட்கிறார்கள், கொடுங்கோலன் கமெய்னி கொல்லப்பட்டபோது வீதிகளில் ஆர்ப்பரித்து மகிழ்வதோடு அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் நன்றி கூறுகிறார்கள். ஆனால், ஈரானிற்கு எந்தவிதச் சம்பந்தமும் இல்லாத சிலர் ஐயோ, இது தகுமா? ஐ நா விடம் அனுமதி கிடைத்ததா? ஈரானிடம் அணுவாயுதம் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? என்று கூவுகிறார்கள் 😆.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.