Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை

இராக் போர் சென்ற திசையும், ‘மறக்காத’ பாடமும்!

hindutamil-prod%2F2026-03-11%2Fgvn26ou9%

பாரதி ஆனந்த்

Updated on: 11 Mar 2026, 8:48 pm

4 min read

“பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் கடமைப்பட்டதுபோல் அனுபவிக்கின்றனர்!” - இந்த மேற்கோளை சுட்டிக் காட்டி தற்போதைய ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை விளக்க முற்படுகிறார், மத்திய கிழக்கு அரசியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிபுணரான ஃபரா என்.ஜான். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இவர் மூத்த விரிவுரையாளராக இருக்கிறார். அவரது பார்வையிலிருந்து...

“பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் அனுபவிக்கின்றனர்.” - இதுதான் போரின் சாராம்சம். வரலாற்றில் அன்றும் இன்றும் போர்கள் நடக்கும்போது பலமான ராஜ்ஜியங்கள் / அரசாங்கங்கள் எதிரியை தோற்கடிக்க இயலாமல் இருந்ததில்லை. ஆனால் அழிவும், அரசு நிர்வாகமும் வெவ்வேறாக இருக்கின்றன. அதைக் குழுப்பிக் கொண்டுதான் பெரும் சாம்ராஜ்ஜியங்கள் சோர்ந்து போகின்றன.

அமெரிக்க ராணுவத்தால் ஈரான் அரசை அப்புறப்படுத்த முடியும். ஆனால், அதனால் உருவாக்கப்படும் அதிகார வெற்றிடத்தை எது நிரப்பும், எப்போது நிரப்பப்படும் என்பதே கேள்வி.

2003-ல் இராக்கில் அமெரிக்க ராணுவம் தான் நினைத்ததை எல்லாம் செய்தது. சதாம் ஹுசைன் கைது செய்யப்பட்டு, வழக்கு நடத்தப்பட்டு தூக்கிலடப்பட்டார். அங்கிருந்த ஆட்சி தூக்கியெறியப்பட்டது. எல்லாமே வெறும் 21 நாட்களில் முடிந்தது. ஆனால், இராக் - அமெரிக்கா போர் முடிந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இராக்கில் இன்றும் சர்வாதிகார அரசுதான் இருக்கிறது. அந்த அரசு இப்போது ஈரானுடன் தொடர்பில் இருப்பதாகவே உள்ளது. ஈரானிய ஆதரவு ஆயுதக் குழுக்கள், இராக் மண்ணில் வெளிப்படையாகவே இயங்குகின்றன.

hindutamil-prod%2F2026-03-11%2F89beuo6d%

சதாம் ஹுசைன்  

புதிய இராக்கை தன் இஷ்டத்துக்கு உருவாக்க, கிட்டத்தட்ட 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள், 4,400+ அமெரிக்க ராணுவ வீரர்களை அமெரிக்கா இழந்தது. ஆனால், இராக் இன்றும் ஈரானின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள்தான் இருக்கிறது” என்று ‘தி கான்வர்சேஷன்’ தளத்தில் கருத்துப் பகிர்ந்திருக்கிறார் ஃபரா.

இந்தப் பின்னணியில் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் எதை நோக்கிச் செல்லக்கூடும், சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வரும் குரல் என்னவாக இருக்கிறது, சர்வதேச நிபுணர்களின் பார்வை என்ன, உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன? - இந்தக் கேள்விகளுக்கான விரைவுப் பார்வை இது.

மத்திய கிழக்கு பதற்றம் தொடங்கி இன்று (மார்ச் 11) பன்னிரெண்டாவது நாள். இந்த 12 நாட்களிலேயே அமெரிக்க பங்குச் சந்தைகள் வரலாறு காணாத சரிவு, ஐரோப்பியா முதல் ஆசிய நாடுகள் வரை எரிபொருள் தட்டுப்பாடு என்று அதிர்வலைகள் கடுமையாக எதிரொலிக்கின்றன.

இந்தச் சூழலில் ஈரான் ராணுவத்தின் மூத்த கமாண்டர்களுள் ஒருவர் அண்மையில் அரசு தொலைக்காட்சியில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், “அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து வெறும் 48 மணி நேரத்தில் ஈரானை நொறுக்கிவிடலாம் என ஒரு குறுகிய காலப் போரை நடத்தும் திட்டத்தோடு இறங்கினர். இன்று ட்ரம்ப்பும், நெதன்யாகுவும் திணறிப் போயுள்ளனர். அவர்கள் திட்டமிட்ட குறுகிய போர் இப்போது நீண்ட கால போராக மாறியுள்ளது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

ஈரான் போரை இனியும் சமாளிக்க அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஆயுதங்கள், வீரர்கள், இதைத் தாக்குப் பிடிக்கக் கூடிய முன் கணிப்புகளைக் கொண்ட போர் உத்தி திட்டங்கள் வேண்டும். ஆனால், அவை அவர்களிடம் இல்லை.

உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் தங்கள் போர்க் கப்பல்களை இங்கு கொண்டு வந்தாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். ட்ரம்ப் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். அவரது படை வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். ஏற்கெனவே வெனிசுலா மிஷனில் ஈடுபட்டிருந்தவர்கள், ‘2 நாட்கள் தானே சொன்னீர்கள், விடுப்பில் அனுப்புங்கள்’ என்று நிர்பந்திக்கின்றனர்.

இதற்கிடையில், இப்போதே சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நீள்வதற்கு மற்ற உலக நாடுகள் அனுமதிக்காது. அதுவே போருக்காக அலையும் ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டையாக உருவாகும்.

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 80 டாலரை தொடும் என்று நினைத்தனர். ஆனால் அது 160 டாலர் வரை செல்லக்கூடும். இனியும் ட்ரம்ப்பால் அவரது போர் வெறியை நீட்டிக்க முடியாது” என்று கூறியுள்ளார் ஈரான் ராணுவ மூத்த கமாண்டர்.

அவருடைய இந்தக் கருத்துகள், ஈரானிடம் அமெரிக்கா, இஸ்ரேல் வீழ்ந்துவிட்டது என்பதுபோல இருக்கிறது அல்லவா? ஏற்கெனவே, இன்னும் 6 மாதங்கள் வரை இந்தப் போரை நீட்டிக்க தங்களிடம் பலம் இருப்பதாக ஈரான் கூறியிருந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது.

ஆனால், ஈரானில் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு, அந்நாட்டை ஸ்தம்பிக்கச் செய்துள்ளதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிவித்து வருகின்றன.

“ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும்” என்று ட்ரம்ப் எச்சரித்தது போலவே ஈரானின் எண்ணெய்க் கிணறுகள் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அவை பற்றி எரிகின்றன. இதன் காரணமாக தெஹ்ரானிலும், தெஹ்ரானைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வானில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன.

hindutamil-prod%2F2026-03-11%2Fqamabuam%

ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது குண்டுகள் வீச்சு

இது ஒருபுறம் இருக்க, இந்தப் போரை முன்னெடுத்ததால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புக்கு டேமேஜ் கன்ட்ரோல் நடவடிக்கைகளையும் ட்ரம்ப் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். ரஷ்ய எண்ணெய்யை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு தற்காலிக அனுமதி உள்ளிட்ட பல்வேறு கரிசனங்களை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்கிடையில், ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்யாவும், வட கொரியாவும் வாழ்த்து தெரிவித்துள்ளது. போரில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது ஆகியனவையும் போரின் போக்கில் கவனிக்கத்தக்கது.

ஈரானுடன் எப்போதுமே நட்பில் இருந்துவரும் சீனாவும், வெளிப்படையாக சொல்லிக் கொள்ளாமல் களத்தில் பல உதவிகளை செய்து கொடுத்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தச் சிக்கல்களுக்கு இடையே அமெரிக்கா, இஸ்ரேலுடன் நல்லுறவில் இருக்கும் இந்தியா தங்களுக்காக மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று ஈரான் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஈரான் போரின் பக்கவாட்டு சேதாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் வளைகுடா ஒதுழைப்பு நாடுகளோ புதின் உதவியை நாடுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

ட்ரம்ப்பும், நெதன்யாகுவும் ஆரம்பித்த இந்தப் போர் இப்போது உலகமும் முழுவதையும் இழுத்துவிடும் சூழலுக்கு வந்து நிற்கிறது.

காசா போர், லெபனான், ஏமன் மீதான தாக்குதல் என அடுத்தடுத்து போரில் சிக்கியுள்ள இஸ்ரேல், இப்போது ஈரான் ஏவுகணைகளை சமாளிப்பதிலும், ஈரானை தாக்குவதிலும் மொத்த நேரத்தையும், உழைப்பையும், வளத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், “ஈரானிய மக்கள் அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கு உதவுவதே இஸ்ரேலின் நோக்கம். இறுதியில் இது அவர்களிடமே இருக்கிறது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாம் அவர்களின் சக்தியை பலவீனப்படுத்தி வருகிறோம் என்பதில் சந்தேகமில்லை” என்று நெதன்யாகு கூறியிருக்கிறார்.

இந்தப் பேச்சில் ஒருவித அயர்ச்சி தெரிவதாக சர்வதேச நிபுணர்கள் கணிக்கின்றனர்.

எங்கே சறுக்கியது அமெரிக்கா?

ஈரான் உச்ச தலைவரை கொன்றுவிட்டால், அங்கே இன்னொரு புதிய விஷயத்துக்கான இடம் உருவாகும் என்று அமெரிக்கா தவறாக கணித்துவிட்டது என்று கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

அமெரிக்காவின் அந்தக் கணிப்பு தவறானது. இருக்கும் தலைமையை வீழ்த்தினால் அமெரிக்க விரும்பிய மாற்று களம் உருவாவதைவிட, ஈரானில் ஏற்கெனவே எந்தக் குழு / அமைப்பு / கட்சி வலுவாக இருக்கிறதோ, எதனிடம் ஆயுதக் குவியல் உள்ளதோ அதுவே அதிகாரத்துக்கு வரும். அப்படியாக இராக்கில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஈரான் நிரப்பிக் கொண்டது. இப்போது ஈரானில் ஏற்பட்டுள்ளதை யார் நிரப்புவார்கள் என்பதே கேள்வி.

இப்போதைக்கு அங்கு, பலம் பொருந்திய இஸ்லாமிய புரட்சிகர படைகள் அமைப்பு ரீதியாக வலுவாக, ஆயுத பலம் கொண்டதாக இருப்பதோடு, ஈரான் பொருளாதாஅரத்தின் 30 முதல் 40 சதவீதத்தின் மீது தனது அதிகாரித்தையும் கொண்டுள்ளது. அதனால்தான் புதிய உச்ச தலைவர் நியமனமும் சாத்தியமானது.

ஒருவேளை உச்ச தலைவரே அப்புறப்படுத்தப்பட்டாலும் ஐஆர்ஜிசி அதிகாரத்தில் இருக்கும். இப்போது உச்ச தலைவராகியுள்ள மோஜ்தபா காமேனியும் இந்தப் படையுடன் நெருங்கிய நட்புறவு கொண்டவரே. எனவே, அயதுல்லா காமேனி உருவாக்கிய இந்தப் படையின் பேராதரவோடு மோஜ்தபா பதவிக்கு வந்துள்ளார். இன்றைய சூழலில் ஈரானில் ஏதும் ஆட்சி மாற்றம் நடக்கவில்லை. ஒருவகையில் மணி மகுடம் தலைமாறியுள்ளது.

பதில் கிடைக்குமா?

இராக் போரின்போது அங்கு ஆட்சியில் இருந்த பாத் கட்சியின் அரசை கலைப்பதாகவும், இராக் ராணுவத்தை கலைப்பதாகவும் அமெரிக்கா அறிவித்தது. ஆனால் ராணுவத்தில் இருந்த 4 லட்சம் வீரர்கள் ஆயுதங்களோடு சென்றது மட்டுமே மிச்சம். அதற்கு அமெரிக்கா கொடுத்த விலை அதிகம்.

hindutamil-prod%2F2026-03-11%2F10k7vzvu%

டொனால்டு ட்ரம்ப்

இப்போது ஈரானில் அணு ஆயுதங்களை அழிப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்றால் 2025 செப்டம்பரில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் இன்னமும் ஈரானில் குவியல் குவியாக ஆயுதங்கள் எங்கிருந்து வருகின்றன?

அமெரிக்காவுக்கு இது நடக்க வேண்டும், அது மாற வேண்டும் என்ற விருப்பம்தான் இருக்கிறதே தவிர, திட்டம் என்று எதுவும் இல்லை.

ஒருவேளை பிராந்திய அமைதிக்காக ஈரான் மீது தாக்குதல் என்று அமெரிக்கா சப்பைக் கட்டு கட்டினால், ஒவ்வொரு முறையும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படும் போதும், அது பரவலான பிராந்திய பாதிப்பை ஏற்படுத்துவது ஏன்?

அழிவைத் தாண்டி வேறேதும் திட்டமில்லாத அமெரிக்கா இவற்றுக்கு எல்லாம் பதில் சொல்லுமா?

அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

ஈரான் உச்ச தலைவரை கொன்றுவிட்டால், அங்கே இன்னொரு புதிய விஷயத்துக்கான இடம் உருவாகும் என்று அமெரிக்கா தவறாக கணித்துவிட்டது என்று கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இன்றோ நாளையோ உயிர் போகும் தருவாயில் இருந்த ஒரு மத/அரசியல் தலைவரை ஒழித்து கட்டியதுதான் மிச்சம்.அதற்கான செலவோ பில்லியன் கணக்கில்.....

ஆப்கானிஸ்தானை அழித்து மீண்டும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளிடம் நாட்டை திருப்பி கொடுத்த ஞாபகம் தான் வருகின்றது.😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இன்றோ நாளையோ உயிர் போகும் தருவாயில் இருந்த ஒரு மத/அரசியல் தலைவரை ஒழித்து கட்டியதுதான் மிச்சம்.அதற்கான செலவோ பில்லியன் கணக்கில்.....

ஆப்கானிஸ்தானை அழித்து மீண்டும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளிடம் நாட்டை திருப்பி கொடுத்த ஞாபகம் தான் வருகின்றது.😁

ஆப்கானில் மொக்கன் அமெரிக்கன், மோடையன் யூகே, மகா மோடையன் ஜேர்மனி போன்ற கூட்டுக்களோட போனதால விசயம் பிழச்சு போட்டு…

இந்த முறை இஸ்ரேலோடு போயிருக்கான்….அவன் போனால் வழிச்சு துடைக்காம வாறேல்ல எண்டு சில சனம் பேக்கதை கதைக்குதண்ணை….

உங்கட 50+ வருட உலக அரசியல் அனுபவத்தின் படி இந்த கருத்தை பற்றி என்ன நினைக்கிறியள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக் போர் தொடங்கும் போது கிளிங்டன் அமெரிக்க திறைசேரியில் பெருமளவு பணம் சேர்த்து வைத்ததாக சொல்கிறார்கள்.

அடுத்து வந்த புஸ் எல்லோரும் தடுக்க பொய்யான குற்றச்சாட்டை சதாம் மீது வைத்து போரைத் தொடங்கி அடுத்தடுத்து வீழ்ச்சியை சந்தித்து அமெரிக்காவை பல ரில்லியன் கடனில் விட்டுட்டுப் போனார்.

இப்போது ரம் தொடங்கியிருக்கும் போர் எப்படி போகுமோ தெரியவில்லை.

பலரின் கருத்துப்படி ரம்பின் குடும்பம் பணக்காரர்களின் பட்டியலில் மிக உயரத்துக்கு போய்க் கொண்டிருக்கிறது.

தனிப்புகழை விரும்பும் ரம் அமெரிக்க பணக்கார பட்டியலில் முன்னணியில் வருவதை விரும்புவார்.

தற்போது அமெரிக்க கடன் 39 ரில்லியனை தொடப் போகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.