"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 138
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 138 / பின் இணைப்பு - "இலங்கை நாளிதழ் ஆசிரியர்களால் புத்தர் துரோகம் செய்யப்பட்டாரா?"
'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' என்ற மேஜர் ஃபோர்ப்ஸ் எழுதிய நூலின் பக்கம் 176 இன் படி, ஆதாமின் சிகரத்தில் / ஸ்ரீ பாதத்தில் உள்ள புத்தரின் இடது பாதத்தின் அளவு ஐந்து அடி ஏழு அங்குல நீளமும் இரண்டு அடி ஏழு அங்குல அகலமும் கொண்டது ஆகும் [five feet seven inches in length and two feet seven inches in breadth]. புத்தர் ஒரு மனிதர், அவரது பாதங்கள் இவ்வளவு பெரியதாக இருக்க முடியாது. இது புத்தரின் இடது பாதத்தின் அளவை ஆதாமின் சிகரத்தில் உள்ள பள்ளமான பகுதியின் முழு அளவையும் கருத்தில் எடுத்தது போல் தெரிகிறது?
'நயன்ஜோத் லஹிரி எழுதிய 'Ashoka in Ancient India by Nayanjot Lahiri' என்ற நூலின் 44 முதல் 45 பக்கங்கள் வரை பார்க்கவும். அதில்: பின்னர் புத்தர் நடந்து சென்ற ஒரு கல் இருந்தது [பாடலிபுத்திரத்தில் உள்ள ஒரு கல்லில் புத்தரின் கால்தடத்தை சுவான்சாங் இங்கு பதிவு செய்கிறார்.], அதில் அவரது இரண்டு கால்களின் அடையாளமும் இருந்தது. இது ஒரு புனித அம்சம் என்பதால், மன்னன் அதை ஒரு அடைப்புக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தார். நவீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சீனப் பயணி சுவான்சாங்கின் (யுவான் சுவாங் / Xuanzang) இந்த விவரங்களைப் பற்றிய விளக்கத்தை ஒப்புதலுடன் படித்தனர். தொல்பொருளியல் துறையின் முக்கியத்துவமான துல்லியமான அளவீட்டுத் திறன்களை சுவான்சாங் அங்கு காட்டினார். அதாவது அவர் அந்த புனித பாதச் சுவடுகளின் பரிமாணங்களைக் "18 அங்குல நீளம் மற்றும் 6 அங்குல அகலம்" என்று பதிவிடுகிறார். இது கூட ஒரு மனிதனுக்கு ஒப்பீட்டளவில் பெரியது. வழக்கமான அளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம் போல் தெரிகிறது.
ஆனால் மேஜர் ஃபோர்ப்ஸின் 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' என்ற நூலில் கொடுக்கப்பட்டுள்ளபடி, அதில் ஒருவர் அதன் மீது தூங்கலாம். உண்மையில் அது தூங்கும் நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்? சமண மதமும் புத்த மதமும் தென்னிந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ் நாடுகளுக்கு, பொது சகாப்தம் தொடங்குவதற்கு முன்பே வந்தன. கிமு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சமண மதம் தமிழ் நாடுகளுக்கு வந்தது, சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு புத்த மதம் தமிழ் நாடுகளுக்கு வந்தது. மன்னர்களும் மற்றும் அங்கு வாழும் பணக்காரர்களும் சமண துறவிகளுக்கு உறங்குவதற்காக பாறை மேற்பரப்புகளை தயார் செய்து வந்தனர். மகாவம்சம், 10-97 மற்றும் தீபவம்சம், 7-35 இல் சமணர்கள் நிகந்தர்கள் அல்லது நிகண்டர்கள் - பற்றற்றவர்கள் [Niganthas] என்று குறிப்பிடப்படுகிறார்கள். "Jain" (சைனர்) தமிழில் சமணர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். பௌத்த இதிகாசமான மணிமேகலையின் நாயகியான மணிமேகலை, இந்த சமண மலைக்கு [Sammana Malai] வருகை தந்தார் என்று குறிக்கப்பட்டுள்ளது. சமண மலை என்றால் இந்த மலை சமணர்களுக்குச் சொந்தமானது என்பதாகும். இலங்கையில் பௌத்தம் வருவதற்கு முன்பு, யாரோ ஒருவர் சமணர்களுக்கு, மலையின் உச்சியில் ஒரு படுக்கையை அமைத்தார் போலும்? அதனால்தான் சமணக் குட்டை [Sammana kutta] என்று பெயர் வந்தது என்று எண்ணுகிறேன்.
உதாரணமாக, 'பூலாவுடையார் சமணர் படுகை' என்று அழைக்கப்படும் சமணர் படுகை ஒன்று திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியிலுள்ளது. இப்படுகையில் சமண முனிவர்கள் படுப்பதற்கேற்ப கல்லில் படுக்கை செய்யப்பட்டுளது. மேலும் இதில் தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. அதில்
'வெண் காசிபன் கொடுபித கல் கஞ்சனம்' என்று தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுளது. இதன் எழுத்துக்களைக் கொண்டு இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என நிறுவியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
புத்தரின் பாதங்களை வணங்குவதற்காக மணிமேகலை கூட சமண மலைக்கு வந்தார் என்று காவியம் கூறுகிறது. சமணர்கள் அவமானம் உட்பட, எல்லாவற்றையும் துறந்தவர்கள். எதையும் அணிய மாட்டார்கள். குளிக்க மாட்டார்கள், பல் துலக்க மாட்டார்கள். வேறு எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் அவர்கள் செய்வதில்லை. அவர்கள் வாழும் இடங்களிலிருந்து விலகி வாழ்ந்தனர். தமிழ்நாட்டில் இதுபோன்ற கல் படுக்கைகள் பல உள்ளன. சமணர்கள் தமிழ் இலக்கியத்திற்கு நிறைய பங்களித்தனர். இருப்பினும், கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஒரு அற்பமான விவாதத்தில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திருஞானசம்பந்தமூர்த்தி துறவி ஒரு இளம் பிராமணர். அவர் சுத்தமாகவும் நன்றாகவும் உடையணிந்தவராகவும் இருந்திருக்க வேண்டும்; சைவ மதத்தின் சிறப்புகள் மற்றும் சமண மதத்தின் தீமைகள் குறித்து அவர் சமணர்களுடன் விவாதித்தார்.
அங்கு மன்னனே நடுவராக இருந்திருக்க வேண்டும். நிர்வாணமாக துர்நாற்றம் வீசும் வயதான சமண துறவிகளுக்கு எதிராக, அவர்களின் விவாதத்தின் தகுதி அல்லது தீமையைப் பொருட்படுத்தாமல், நல்ல மனநிலையில் இருந்த இளம் திருஞானசம்பந்தமூர்த்திக்கு ஆதரவாக மன்னன் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். விவாதத்தில் தோல்வியடைந்ததால், சமணர்கள், சுமார் எட்டாயிரம் பேர் உயிருடன் கழுவேற்றப் பட்டனர் என்பது வரலாறாகும்.
Part: 138 / APPENDIX – "Is BUDDHA BETRAYED by Lanka chronicles authors?"
As per the page 176 of the Reference 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' , the size of the Buddha’s left foot on Adam’s Peak / Sri Pada is five feet seven inches in length and two feet seven inches in breadth. The Buddha was a human, and his footsteps cannot be this big. From the pages 44 to 45 of the Reference 'Ashoka in Ancient India by Nayanjot Lahiri' says: Quote “Then there was a stone on which the Buddha had apparently walked, marked by the impression of both his feet, a sacred feature which the king had surrounded within an enclosure. Modern archaeologists read the Chinese traveller’s description of these details with approval, Xuanzang having shown the sorts of precise measuring skills that are staple of the discipline of archaeology: he mentions the dimensions of the sacred foot prints (18 inches long and 6 inches broad” Unquote. Even this is a comparatively big for a human being. Reference 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' gives the size of the Buddha’s left foot as on the Adam’s Peak. Even the size mentioned in the Reference 'Ashoka in Ancient India by Nayanjot Lahiri' is somewhat excessive; almost double the usual size, but the size of the Buddha’s foot print as given on the Reference 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' is ridiculously excessive; one can sleep on it. In fact it must have been prepared for the sleeping purpose. Jainism and Buddhism came to southern India, especially to Tamil countries, before the dawn of the Common Era. Jainism came to Tamil countries about three hundred year B.C., and Buddhism came to Tamil countries about one hundred years after. Kings and rich people used to prepare rock surfaces for Jain monks. Jains are referred as Niganthas in the Mahavamsa, 10-97, and the Dipavamsa, 7-35. Jains are referred to as Samannar in Tamil. Mannimeghalai, the heroine of the Tamil Epic Mannimeghalai which is a Buddhist epic, visited this Sammana Malai. Sammana Malai means the hill belongs to Sammanars; to Jains. Someone prepared a bed on top of the hill to Sammannars, to Jains, prior to the advent of Buddhism in Lanka. That is why the name Sammana kutta. Even Mannimeghalai came to Sammana Malai to worship Buddha’s feet. Jains forsook everything, even shame, and do not wear anything. Do not bathe, do not brush teeth etc. They do not do anything which may harm any other living being. They used to live away from the living quarters. There are many such stone beds in Tamil Nadu. Samannar contributed a lot to Tamil literature. They were, however, massacred in the seventh century A.D. on a frivolous debate. Thirugnanasampanthamoorthy Saint was a young Brahmin. He must have been clean and well dressed; He debated Jains on the merits of Saivism and the demerits of Jainism. The king must have been the sole arbitrator. The king must have given the verdict in favour of the well poised pleasing young Thirugnanasampanthamoorthy against the naked foul smelling old jain monks irrespective of the merit or demerit of their debate. Jains were impaled alive because they failed in the debate, about eight thousand in numbers. This is very sad and shameful on the part of Saiva Saint Thirugnanasampanthamoorthy.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 139 தொடரும் / Will follow
துளி/DROP: 2104 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 138
https://www.facebook.com/groups/978753388866632/posts/34406209025694305/?
By
kandiah Thillaivinayagalingam ·